Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனால் வரும். 303

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் மறதுவிட வேண்டும் . சினத்தால் தீமையான விளைவுகளே ஏற்படும் .

எனது கருத்து:

ஆரிலையும் கோபம் வந்தால் எடுத்தேன் கவுட்டேன் எண்டு தாம்தூம் எண்டு குதிக்காமல் அதை மறக்கவேறை வழியளை நினைச்சியள் எண்டால் அதாலை வாற சேதாரங்கள் குறையும் எண்டு சொல்லாறார் ஐய்யன் . சரி....... அப்பிடியண்டால் ரௌத்திரம் பழகு எண்டு ஏன் எங்கடை பெரிசுகள் சொல்லீச்சிதுகள்??

If any rouse thy wrath, the trespass straight forget;

For wrath an endless train of evils will beget.

Qu’on oublie de s’emporter contre qui que ce soit,

parce que tous les maux viennent de la colère.

Edited by கோமகன்

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற. 304

முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்கின்ற சினத்தை காட்டிலும் வேறு பகை இல்லை!

எனது கருத்து:

சிலபேரை பாத்தியள் எண்டால் சுடுதண்ணி குடிச்ச நாயள் மாதிரி இருப்பினம் . அவையின்ரை முகத்தில சிரிப்பு சந்தோசம் எண்டால் கிலோ என்னவிலை எண்டு கேக்கவேணும் . இவையள் தரவளியாலை ஆருக்கு என்ன பிரையோசனம் ?? எவை சிரிச்சு சந்தோசமாய் இருக்கினமோ அவையிட்டை வருத்தம் துன்பம் அண்டாது கண்டியளோ .

Wrath robs the face of smiles, the heart of joy,

What other foe to man works such annoy?

Y a-t-il un ennemi autre que la colère qui tue le sourire et l’épanouissements du cœur ?

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அதே.. அதே.. :D

  • தொடங்கியவர்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க; காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம். 305

ஒருவன் துன்பம் நேராமல் தன்னைக் காத்து கொள்ள நினைப்பான் கோபம் வராமல் அதனை அடக்கி அள வேண்டும். அங்கனம் கோபத்தை அடக்காவிட்டால் அக்கோபம் அவனையே அழித்து விடும் .

எனது கருத்து:

ஒருத்தனக்கு எதுவும் வரலாம் கோபம் வரக்கூடாது , அப்பிடி வந்தால் அந்தகோபமே அவனை அழிச்சுப்போடும் எண்டு ஐயன் சொல்லுறார் . எனக்கு இதிலை உடன்படேலாமல் கிடக்கு . ஒரு கதைக்கு ஒருத்தன்ரை மனிசியை அவனுக்கு முன்னாலை நாலைஞ்சு கிரகங்கள் கற்பழிக்கிது . அப்ப என்ன சிரிச்சுக்கொண்டு அமைதியாயே நிக்கிறது ???

If thou would'st guard thyself, guard against wrath alway;'Gainst wrath who guards not, him his wrath shall slay.

Si vous voulez vous préserver des maux, préservez-vous de la colère, sinon la colère vous tuera vous-mêmes.

Edited by கோமகன்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க; காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம். 305

சேர்ந்தாரைக் கொல்லி சினம்.

சேர்ந்தாரைக் கொல்லி என்பது நெருப்பு. அது தன்னையும் அழித்து தான் சோந்திருந்த இடத்தையும் அழித்துவிடும். சினமும் அப்படித்தான்.

  • தொடங்கியவர்

செம்பகன் , இசைக்கலைஞன் மற்றும் , கள உறவுகளுக்கு , தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பின்வரும் இணைப்பில் வையுங்கள் . அப்பொழுது இந்தக்கருவூலம் யாழில் ஒரு குறிப்பிடத்தக்க ஆவணமாக இருக்கும் என நினைக்கின்றேன் . உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96396&st=120

  • தொடங்கியவர்

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும். 306

கோபமாகிய கொடிய நெருப்பு சினமுற்றோரையே அழிப்பதோடு, அவர் வீடுபேறு அடையத்தக்க வழிகளையும் அடைத்துவிடும்.

எனது கருத்து:

ஐயன் இதிலை விளப்பமாய் தான் பிரிச்சு மேஞ்சுருக்கிறார். கோபம் நெருப்பு போலையும் அந்த நெருப்பு அவனைமட்டும் எரிக்காது , அவன்ரை சுத்துப்பட்டி எண்டு உண்மைபோலைதான் கிடக்கு . ஏனெண்டால் கண்ணகி தன்ரை குடும்ப பிரச்சனைக்கு கோபப்பட்டதாலை மதுரையே எரிஞ்சுதுண்டால் கோபம் வில்லங்கமானது .

Wrath, the fire that slayeth whose draweth near,

Will burn the helpful 'raft' of kindred dear.

Le feu tue ceux qui l’approchent; la colère vous détruit ainsi que votre entourage.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

நிலத்துஅறைந்தான் கைபிழையா துஅற்று. 307

தன் வலிமையைக் காட்டுவதற்காகச் சினத்தை ஒரு கருவியாகக் கொண்டவன் கெடுவது , நிலத்தைக் கையால் அறைந்தவன் துன்பம் அடைவது போல் ஆகும் .

எனது கருத்து:

நிலத்திலை ஆரும் வெறுங்கையாலை அடிப்பாங்களோ ?? ( மோடையங்களாத்தான் இருப்பாங்கள்) கை புளிக்கும் . அதை மாதிரித்தான் கோபமும் . அடிக்கடி கோபம் வாறவனுக்கு இதே நிலமைதான் .

The hand that smites the earth unfailing feels the sting;So perish they who nurse their wrath as noble thing.

Celui qui frappe violemment la terre de sa main, ne peut retirer celle-ci indemne de douleur; de même, celui qui cultive la colère comme une qualité est assuré de sa destruction.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று. 308

பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன்பால் கோபப்படாமல் இருப்பது நல்லது.

எனது கருத்து:

இந்தியா இவ்வளவு நாளும் எங்கடை ஒரு சந்ததியையே கரைச்சு குடிச்சிது . வருங்காலத்திலை தன்ரை பிழையளை உணர்ந்து மனம் வருந்தி எங்களோடை உறவுகொண்டாட வந்தால் எங்கடை சனம் இதை ஏத்துக்கொள்ளுமா ?????

Though men should work thee woe, like touch of tongues of fire.'Tis well if thou canst save thy soul from burning ire.

Quelqu’un vous fait-il du mal, comme la violente flamme d’un grand feu qui brûle? Pouvoir ne pas s’emporter contre lui est bon.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின். 309

ஒருவன் கோபத்தைத் தன் மனத்தில் கொள்ளாதிருந்தால், நினைத்த நன்மைகளையெல்லாம் அவன் விரைந்து பெறுவான் .

எனது கருத்து:

இந்தக்காலத்திலை கோபிச்சு கதைச்சால் தான் அலுவல் நடக்கிது . ஒரு இரவில ஒருத்தன் கோபிச்சு கதைச்சதாலைதான் சரியோ பிழையோ பாக்கிஸ்த்தான் இந்தியாவிட்டை இருந்து பிறிஞ்சிது . எல்லாத்துக்கும் அமைதிகாத்தால் எப்பிடி ஒருத்தனால இந்தக்காலத்தில சீவிக்கேலும் ??

If man his soul preserve from wrathful fires,

He gains with that whate'er his soul desires.

Le pénitent dont le cœur s’abstient de la colère,

obtient de suite tout ce qu’il désire.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்

துறந்தார் துறந்தார் துணை. 310

கோபத்திற்கு இலக்கானவர்கள் உயிர் வாழ்ந்தும் இறந்தவரேயாவர். கோபத்தைக் கொன்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஒப்பாவர் .

எனது கருத்து:

எடுத்ததுக்கெல்லாம் சுடுதண்ணிகுடிச்ச நாயள் மாதிரி கோபப்படுறவை செத்த பிரேதத்துக்குச் சமன் , கோபம் இல்லாதவை துறவியளுக்கு சமன் எண்டால் , இந்த துர்வாசர் முனிவர் எல்லாம் எந்த றாங்கில போடிறது ??

Men of surpassing wrath are like the men who've passed away;Who wrath renounce, equals of all-renouncing sages they.

Celui qui est prompt à se mettre en colère ressemble à un cadavre; celui qui a repudié la colère, est égal à celui qui a vaincu la mort.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் துறவறவியல் இன்னா செய்யாமை , Not doing Evil , Ne pas faire de mal )[/size]

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள். 311

சிறப்பத் தருகின்ற பெருஞ்செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத்துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

எனது கருத்து :

நீங்கள் சொல்லுறது சரிதான் ஆனால் இப்ப உள்ள நிலமையில இப்பிடிபட்ட ஆக்களை தேடிப் பிடிக்கிறது கஸ்ரம் . செல்வந்தனாய் வருகினமோ இல்லையோ தனக்கு சகுனப்பிழையெண்டாலும் பறவாயில்லை மற்றவனுக்கு மூக்கு உடைஞ்சால் சரி எண்ட நிமையள்தான் இப்ப இருக்கிற சனத்திட்டை .

Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure.

Certes, on peut acquérir la richesse qui procure les honneurs en faisant du mal au prochain. Ne jamais faire de mal au prochain est la qualité des hommes sans tâche.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள். 312

பகையினால் தீங்கு இழைப்பவனுக்கும் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தல் , நல்லோர்களின் பண்பாகும் .

எனது கருத்து :

இதைத்தானே நாங்களும் சிங்களத்துக்கு செய்தம் ஆனால் உலகம் எங்களுக்கு என்ன அலாத்தியே எடுத்தது??

Though malice work its worst, planning no ill return, to endure, And work no ill, is fixed decree of men in spirit pure.

Ne pas faire de mal en retour, à ceux qui en ont fait par haine,

est la qualité des hommes sans péché.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும். 313

காரணம் இல்லாமல் தீங்கு இழைப்பவர்களுக்கும் பதிலுக்கு தீங்கு செய்யாதிருத்தல் நலம் இல்லையேல் என்றுமே துயரம் தான் கிட்டும் .

எனது கருத்து :

நாங்கள் ஒரு பிழையும் விடாமல் ஆரும் எங்களுக்கு பிழை விட்டால் நாங்களும் ஏட்டிக்கு போட்டியா கேம் கேக்ககூடாது . அதாலை வாற சேதாரங்கள் கூடவாய் இருக்கும் . ஆனாலும் அப்பிடி இருக்கிறவைக்கு இந்த சனங்கள் லூசுப் பயல் எண்டு தானே சொல்லுது ??

Though unprovoked thy soul malicious foes should sting,

Retaliation wrought inevitable woes will bring.

Répondre par le mal aux ennemis qui vous ont voué la haine bien que vous ne leur ayez fait aucun mal, amène inévitablement la douleur.

Edited by கோமகன்

கோ அண்ணா உங்க புதிய திருக்குறள் விளக்கம் சுப்பர் தொடரட்டும் உங்கள் பணி

  • தொடங்கியவர்

கோ அண்ணா உங்க புதிய திருக்குறள் விளக்கம் சுப்பர் தொடரட்டும் உங்கள் பணி .

மிக்க நன்றி யாழ் அன்பு இதையும் தயவுசெய்து கவனியுங்கள் கள உறவுகளுக்கு , தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பின்வரும் இணைப்பில் வையுங்கள் . அப்பொழுது இந்தக்கருவூலம் யாழில் ஒரு குறிப்பிடத்தக்க ஆவணமாக இருக்கும் என நினைக்கின்றேன் . உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் .

http://www.yarl.com/...ic=96396&st=120

  • தொடங்கியவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். 314

தமக்கு தீங்கு செய்தவரைத் தண்டித்தல் என்பது அத்துன்பம் செய்தவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய்து அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலேயாகும்.

எனது கருத்து :

ஒருத்தன் எங்களுக்கு ஆப்படிச்சுப் போட்டான் எண்டால் , நாங்களும் யாரிக்கு யாரியா நிக்காமல் , அவனுக்கு கேந்தி வாறமாதிரி ஒரு நல்ல விசையத்தை செய்துபோட்டு அதையும் மறந்து போடவேணும் எண்டு சொன்னாலும் ; இந்தக்காலத்தில இப்பிடி நடந்தால் கேணைப்பயல் எண்டு சொல்லுறாங்கள் ஐயா .

To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by.

Confondre ceux qui vous ont fait du mal, en leur faisant du bien, c’est les punir.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை. 315

மற்றோர் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தை தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கக் காக்க முற்படாவிட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ?

எனது கருத்து :

சிலபேரைப்பாத்தியள் எண்டால் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமெண்டு அலப்பரை பண்ணுவினம் . மற்றவனுக்கு உயிர் போற பிரச்சனையள் வரேக்கை முதல் காய்வெட்டிறாக்கள் இவையளாய்த்தான் இருப்பினம் . இவையள் தரவளி இருந்தும் ஒண்டுதான் இல்லாட்டிலும் ஒண்டுதான் . உதாரணத்துக்கு இந்தியா தமிழருக்குசெய்தமாதிரி .

From wisdom's vaunted lore what doth the learner gain, If as his own he guard not others' souls from pain?

Quelle est l’utilité de l’intelligence, si on ne considère pas le malheur d’autrui comme le sien et si on le répare pas?

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல். 316

துன்பம் தருபவை இவை என ஒருவன் தான் உணர்ந்த செயல்களை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனது கருத்து :

இந்த குறளில சொன்ன விசயத்தை ஐயன் அந்தக்காலத்துக்கு ஏத்தமாதிரி சொல்லியிருக்கிறார் எண்டு நினைக்கிறன் . இப்ப சனம் இப்பிடியில்லை . சகுனப்பிழையெண்டாலும் மற்றவன்ரை மூக்கு உடைஞ்சால் சரி எண்டு நினைக்கிற கோஸ்ரியள்தான் கூட இருக்கினம் .

What his own soul has felt as bitter pain, From making others feel should man abstain.

Ne pas faire à autrui ce que l’on sait être le mal est digne des accètes.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை. 317

எங்கும் எப்பொழுதும் , துயரத்தை தரும் காரியத்தை சிறிதளவும் மனம் அறிந்தும் செய்தலாகாது அதுவே சிறந்த அறமாகும் .

எனது கருத்து :

ஒரு மனுசன் எண்டால் மற்றவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவேணும் . ஆனால் இண்டையான் நிலமையிலை மற்றவனுக்கு இடைஞ்சல் குடுக்கறவனைத்தானே சனம் பெரிய ஆக்களாய் பாக்கினம் .

To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise.

Ne faire en aucun temps, à qui que ce soit et si peu que ce spit,

volontairement le mal est une vertu capitale.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்உயிர்க்கு இன்னா செயல். 318

பிறர் செய்யும் தீங்குகள் தன் உயிருக்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன் , பிற உயிர்களுக்குத் தான் துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ ?

எனது கருத்து :

நல்ல கேள்வி கேட்டிருக்கிறியள் ஐயா . இப்ப சனம் என்னவெண்டால் " யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகமே " எண்ட பொலிசி தான் . இல்லாட்டில் அமெரிக்கன் உழுது தள்ளின யப்பான் காறன் எங்கடை சனத்தை இன அழிப்புச் செய்யிறதுக்கு கொடுக்கு கட்டுவனோ ??

Whose soul has felt the bitter smart of wrong, how can

He wrongs inflict on ever-living soul of man?

Pourquoi donc faire aux autres ce que, par expérience,

l’on sait susceptible de faire du mal à sa propre vie?

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். 319

ஒருநாளின் முற்பகலில் ஒருவருக்கு தீங்கு செய்தால் , செய்தவருக்குத் தீங்குகள் அன்று பிற்பகலுக்குள் தாமாகவே வந்து சேரும்.

எனது கருத்து :

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எண்டு பெரிசுகள் சொன்னதுதான் .... ஆனால் , தமிழனுக்கு தொடர்ந்து தீமையே செய்த சிங்களமும் அதின்ரை கூட்டாளியளுக்கும் பிற்பகல் போனாலும் எப்பிடி ஐயா பேராய்புகழாய் இருக்கினம் ?????

If, ere the noontide, you to others evil do, Before the eventide will evil visit you.

Si vous faites du mal aux autres le matin, le malheur vous atteindra de lui-même le soir.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்

நோய்செய்யார் நோய்இன்மை வேண்டு பவர். 320

பிற உயிர்களுக்குத் துன்பம் செய்பவரயே துன்பம் வந்தடையும், ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர் , எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் கூடாது .

எனது கருத்து :

அடாது செய்வான் படாது படுவான் எண்டு பெரிசுகள் சொல்லுவினம் . ஒருத்தன்ரை சீவியம் கிளீனாய் பிரைச்சனையள் இல்லாமல் இருக்கவேணும் எண்டால் மற்றவனை நோண்டிக் கொண்டிருக்கக் கூடாது . ஆனால் இப்ப தனக்கு பிரச்னையள் வந்தாலும் , மற்றவனை எப்பிடிக் கவுக்கலாம் எண்டு தான் சனங்கள் நடக்கிதுகள் .

O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill.

Le mal retombe sur celui qui le fait. Si vous désires vous garder du mal,

ne le faites pas vous-même.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை. ( Not killing , Ne pas tuer) . [/size]

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும். 321

அறச்செயல் எதுவென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே . அவ்வாறு கொல்லுதல் பிறதீவினைகளை எல்லாம் தானே கொண்டுவரும்.

எனது கருத்து:

நியாயமான சீவியம் எண்டால் மற்றவனைப் போடுத்தள்ளாமல் இருக்கிறதுதான் . அப்பிடி போட்டுத்தள்ள வெளிக்கிட்டால் பாருங்கோ சொந்தச் செலவிலை சூனியம் செய்யவேண்டிவரும் . உதாரணத்திக்கு ( ஏன் வெளியாலை போவான் ) நம்மடை மகிந்து .

What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill.

Qu’est ce que l’acte vertueux? C’est ne pas tuer; tuer engendre tous les péchés.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322

கிடைத்ததைப் பகுத்துக்கொடுத்து தானும் உண்டு , பல உயிர்களையும் காப்பாற்றுதல் , அற நூலோர் தொகுத்துக்கூறிய அறங்கள் எல்லாவற்றிற்கும் தலையாய அறமாகும் .

எனது கருத்து:

மனுசனாப் பிறந்தால் கடைசி ஒருத்தனுக்காவது பிரையோசனமாய் இருக்கவேணும் கண்டியளோ . சிலபேற்றை வீட்டை போனியள் எண்டால் முழங்கையிலை பிடிச்சு இழுப்பினம் சாப்பிட . ஆனால் குசினீக்கை அடுப்பு எரியாது . தாங்களும் ஆனவாயில சாப்பிடாமல் , அப்பப்ப வெந்ததும் வேகாததையும் சாப்பிட்டுக் கொண்டிருப்பினம் . இவையள் தரவளியாலை ஆருக்கு என்ன பிரையோசனம் ?? தனக்கு கிடைக்கிறதை மற்றவனுக்கும் குடுத்து தானும் அனுபவிச்சு போய் சேருறதுதான் உண்மையான சீவியம் பாருங்கோ.

Let those that need partake your meal; guard every-thing that lives; This the chief and sum of lore that hoarded wisdom gives.

Partager la nourriture entre tous les êtres, se nourrir soi-même, conserver aussi tout ce qui a vie, c’est la principale des vertus indiquées par tous les moralistes.

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.