Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் பேசும் குழு அரச அங்கீகாரம் கொண்டதா?

Featured Replies

கூட்டமைப்புடன் பேசும் குழு அரச அங்கீகாரம் கொண்டதா?

ஆக்கம்: சத்திரியன்

அரச தரப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுகள் குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் பேச்சுகளின் அடிப்படை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்ப வைத்துள்ளது அரசாங்கம்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான பேச்சுக்குழு உண்மையில், அரசின் சார்பில் பேசும் அதிகாரம் கொண்டதா என்பதே அந்தக் கேள்வி.

இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டிதான். இந்தப் பேட்டியின் போது, அதிகாரப்பகிர்வு குறித்து அரசுக்குள் நிலவும் எதிர்ப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிமல் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் என்று தெளிவாகக் கூறியிருந்தார். அதாவது அவரது கருத்தின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படுவது அரசின் சார்பிலான பேச்சுகள் அல்ல. எனவே, “அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 16 கட்சிகளும் இந்தப் பேச்சுகளையோ, அதிகாரப் பகிர்வையோ ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாக் கட்சிகளினதும் உடன்பாட்டைப் பெறுவதற்காக தெரிவுக்குழு உருவாக்கப்படும். அதில் எட்டப்படும் இணக்கப்பாடுதான் இறுதியானது.” இதுதான் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியது.

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு குழுவை நியமிக்கிறார். அந்தக் குழு சுமார் 20 தடவைகள் பேசி முடித்த பின்னர் தான், அதற்குத் தலைமை தாங்கும் அமைச்சர் சொல்கிறார், “இது அரசின் சார்பில் பேசும் குழு அல்ல என்று. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேசும் குழு” என்று. இது அரசியல் தீர்வும், அதிகாரப் பகிர்வும் எந்தளவுக்கு புரட்டுகள் நிறைந்த சூழலுக்குள் சிக்கியுள்ள விடயங்களாகியுள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால், பேச்சு நடத்துவதற்கு அமைச்சர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு பேச்சுகளை நடத்திவரும் நிலையில் இது அரசின் சார்பில் பேசும் குழு அல்ல என்று கடைசி நேரத்தில் கூறியுள்ளது போன்ற குத்துக்கரணம் வேறேதும் இருக்க முடியாது. இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பில் பேசும் குழுவே என்றாலும் கூட, அந்தக் கட்சியில் அங்கம் வகிக்காத லிபரல் கட்சியின் தலைவரான பேராசியர் ராஜீவ விஜேசிங்க அதில் எப்படி இடம் பிடித்தார்?

அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுகளை எந்தளவுக்கு அர்த்தமற்றதாக்க முடியுமோ அந்தளவுக்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அரசாங்கத்தின் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கருத்துகளும் தெளிவாகவே புரிய வைக்கின்றன. அரசாங்கம் வகுத்த திட்டங்களுக்கமைய அதன் வசதிக்கேற்ப பேச்சுக்கள் அமையாமல் போனதால், எப்படியாவது இந்தப் பேச்சுக்களை வலிமையற்றதாக்கி விட முடிவு செய்துள்ளது போலும். இதனால் தான் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாகவும், ஒன்றுக்கொன்று முரணாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன.

அரசாங்கம் இப்படி குத்துக்கரணம் அடிப்பது இது முதலாவது தடவையல்ல. 2010 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, தன்னிடம் ஒரு அரசியல்தீர்வு உள்ளதாகவும், அதனை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் உறுதிபடக் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இப்போது தன்னிடம் எதுவும் இல்லை, தெரிவுக்குழு முன்வைக்கும் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக் கொள்வேன் என்கிறார். அதுபோலத் தான், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் எனவும் அரசாங்கம் கூறியது. ஆனால், இப்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எல்லாக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தெரிவுக்குழுவை அமைப்பது பற்றிப் பேசத் தொடங்கியுள்ளது.

இதைவிட, “வரிடக்கு வரி நடைமுறைப்படுத்துவதற்கு ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றும் பைபிள் இல்லை, அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

இப்படியே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைச் சொல்கின்றன. ஜனாதிபதி ஒன்றைச் சொல்கிறார். அமைச்சர்கள் இன்னொன்றைச் சொல்கிறார்கள். இவற்றில் யார் சொல்வது உண்மை? இந்தக் குழப்பத்துக்கு யாரிடம் விடை தேடுவதென்பது புதுக்குழப்பம் அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எந்தத் தெளிவோ அல்லது உறுதியான நிலைப்பாடோ இல்லை. எந்தவொரு அரசியல்தீர்வையும் அதிகாரப்பகிர்வையும் நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் ஜனாதிபதியிடம் இருக்கின்றபோதும் அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை. தன்னிடம் அதிகாரம் இல்லாதது போன்று காண்பித்து நழுவிக் கொள்ளப் பார்க்கிறார் ஜனாதிபதி.

மனமிருந்தால் தான் மார்க்கமுண்டு, ஆனால், அரசாங்கத்திடம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற விருப்பம் இல்லை. அதனால்தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறது. பேச்சுகள் குறித்த குழப்ப நிலையை உருவாக்க முனைகிறது. அமைச்சர்கள் எல்லாம் இப்போது உச்சக் கட்ட கோமாளித்தனமான கருத்துகளையே கூறி வருகின்றனர். ஒருவர் ஒன்றைச் சொல்கிறார். இன்னொருவர் இன்னொன்றைச் சொல்கிறார். ஒரு கருத்தைச் சொன்னவரே அதற்கு முரணாகப் பேசுகிறார். இவையெல்லாம் குழப்பத்தின் உச்சநிலை.

இதைவிட, தெற்கில் உள்ள சிங்களத் தேசியவாத சக்திகள் மீண்டும் உசுப்பி விடப்பட்டுள்ளனர். ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றவர்களும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர போன்றோரும் அதிகாரப் பகிர்வுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இவர்களின் இந்த எதிர்ப்பு சுயமாக வருகிறதா அல்லது அரசின் துண்டுதலின் பேரில் வருகிறதா? என்பது தெரியவில்லை. ஏனென்றால், எப்போதுமே தமிழருக்கு நியாயங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கான வாதிகள் தான் ஆட்சியாளர்களால் பயன் படுத்தப்பட்டுள்ளனர். பேச்சுகளின் போதாகட்டும், போர்நிறுத்தங்களின் போதாகட்டும் அவற்றைக் குழப்புவதற்கு இத்தகையவர்கள் தான் முக்கிய காரணிகளாக இருந்துள்ளனர். இவர்கள் இப்போதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். செல்வாக்கும் செலுத்துகின்றனர் எனவே, பேச்சுகளின் போக்கை, திசை திருப்பும் கருவிகளாக இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனரா? என்ற கேள்விக்கு வலுவான காரணங்கள் உள்ளன.

போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோது அரசியல்தீர்வில் அரசாங்கம் கொண்டிருந்த நாட்டம், பேச்சுகளைத் தொடங்கியபோது இருக்கவில்லை. பேச்சுகளைத் தொடங்கிய போதிருந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் இப்போது இல்லை. அரசியல் தீர்வின் மீதான அரசாங்கத்தின் பற்றுறுதி குறைந்து செல்கின்றது. இதனால் தான் அரசின் சார்பில் தொடங்கப்பட்ட பேச்சுகள் இப்போது நாட்டின் பிரதான கட்சியின் சார்பிலானதாக குறுகிப்போயுள்ளது. இதேபோக்கு நீடித்தால், பேச்சுகளின் மூலமாக நிலையான, நியாயமான, அரசியல் தீர்வு ஒன்றுக்கான வாய்ப்பு இல்லவே இல்லை என்ற முடிவை நோக்கித் தள்ளுவதாகவே அமையும். அத்தகையதொரு நிலைப்பாடு சர்வதேச அளவில் உருவாகுவது ஒருபோதும் தமிழருக்குப் பாதகமானதாக அமையாது.

மூலம்: வீரகேசரி - தை 8, 2012 பிரசுரித்த நாள்: Jan 09, 2012 16:16:35 GMT

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு குழுவை நியமிக்கிறார். அந்தக் குழு சுமார் 20 தடவைகள் பேசி முடித்த பின்னர் தான், அதற்குத் தலைமை தாங்கும் அமைச்சர் சொல்கிறார், “இது அரசின் சார்பில் பேசும் குழு அல்ல என்று. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேசும் குழு” என்று. இது அரசியல் தீர்வும், அதிகாரப் பகிர்வும் எந்தளவுக்கு புரட்டுகள் நிறைந்த சூழலுக்குள் சிக்கியுள்ள விடயங்களாகியுள்ளன என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

முடிந்தளவுக்கு சிங்களவன் ஒன்றுமே கொடுக்காமல் விடுவர்க்குத்தான் முயற்சிக்கின்றான் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நடவடிக்கைகளினால் வெளிநாடுகள் கொடுக்கும் அழுத்தத்தினால் சிறிலங்கா எதையாவது கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது

இந்த சந்தர்ப்பத்தில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் எமது போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும் இதுவே எமது தீர்வுக்கு வழிகோலும்

Edited by தமிழரசு

கூட்டமைப்பினர் உடன் பேச்சுவார்த்தைகளை நிறுத்தி, நிமல் சிறிபாலாவின் கருத்துக்கள் பற்றி அரசிடம் எழுத்து மூலமான விளக்கத்தைக் கோருவதுடன் மேலைநாட்டு அரசுகளுக்கும் சிங்களப் பயங்கரவாதிகளின் ஏமாற்று வித்தையை அறிவிக்க வேண்டும்.

Edited by ஆராவமுதன்

விசாரணைகள் முடிய தனக்குத் தேவையான விடையங்களை விசாரிக்க அதிகாரம் இருக்க இல்லை என்றது நல்லிணக்க ஆணைக் குழு. நிமல் சிறிபால டி சில்வா கொஞசம் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி பேச்சுவாத்தகளை நடத்துவதால் இதிலிருந்து ஒரு பலனும் வாராதென்பதல்ல உண்மை. எவ்வாறாயினும் ஒரு இணக்கமும் வரப்போவதில்லை என்பதை மூடிமறைக்க இனி பேச்சு வார்த்தையில் ஒரு "டியூன் சேஞ்ச்" வேண்டும். கூட்டமைப்பை தான, தண்ட, சாம, பேத முறைகளால் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் உள்வாங்க இப்படி ஒரு புதுக் கதையை அவிழ்த்து விடுகிறார்கள். முடிவில் கூட்டமைப்புத்தான் தெரிந்துகொண்டே பிழையானவர்களுன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த்தாக குற்றம் சாட்டலாம் என்று நினைக்கிறார்கள். பேச்சு வார்த்தைக் குழுவிற்கு அதிகாரம் இருக்கோ இல்லயோ இந்தியாவும், பிரதானமாக அமெரிக்காவும்தான் இவ்வளவு காலமும் இந்த பேச்சு வார்த்தைகளைத் தொடரச் சொன்னவர்கள். கூட்டமைப்பு இவர்களுடன் தனது பேச்சுககள் முடிந்த பின் உலக நாடுகளை முன் வந்து செயலாற்றும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.