Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Featured Replies

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜனவரி 15, 2012

அன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உனக்கு என்ன ஆச்சு!, சித்திரை ஒண்ணுதானே தமிழ் புதுவருடம், , என்று என் மீது அக்கறையோடு கேட்க நினைப்பவர்கள் தயவு செய்து இனி வரும் பத்திகளை படிக்க வேண்டுகிறேன்.

நமது நாட்காட்டிகள் சூரியனை அடிப்படையாக வைத்தே அமைக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன.

tropicofcapricorn.jpg

ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப் பட்ட பகுதியில் விழுகிறது.நமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாய் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்கள் வரையறுக்கப் பட்டிருக்கின்றன.பூமி சூரியனைச் சுற்றும் நீள் வட்டப் பாதையில் ஒரு புள்ளியில் இருந்து கிளம்பி மீண்டும் அதே புள்ளிக்கு வருவதையே ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம்.

solstice.gif?w=400&h=300&h=300

இதெல்லாம் நிரூபிக்கப் பட்டு, நடைமுறையில் இருக்கும் அடிப்படை அறிவியல், இப்போது கொஞ்சம் தமிழர்களின் பக்கம் வருவோம்.

தமிழ் ஆண்டுகள் மொத்தம் அறுபது. இவை சுழற்சியில் வரும். ஆண்டுப் பிறப்பு சித்திரை மாதம் ஒன்றாம் தேதியில் துவங்குவதாக காலம் காலமாய் நம்பி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் தனித் தனி பெயர் உண்டு.எல்லாம் சமஸ்கிருதப் பெயர்கள். ஒன்று கூட தமிழ் பெயர் கிடையாது.இவை எல்லாம் அரச குமாரர்களின் பெயர்களாம். யாரிந்த அரச குமாரர்கள்?, அவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?….அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதையிது!

அபிதான சிந்தாமணி என்கிற நூலில்தான் இந்த அறுபது அரச குமாரர்களின் கதை சொல்லப் பட்டிருக்கிறது. கலியுக வரதனான கண்ணனும், நாரதரும் கலவி செய்ய பிறந்தவர்கள்தான் இந்த அரச குமாரர்கள். நாரதர் ஆணாயிற்றே என சந்தேகம் வந்தால் அதற்கும் அந்த நூலில் விளக்கம் இருக்கிறது. கண்ணன் அறிவுரைப் படி யமுனையில் குளித்த நாரதர் பெண்ணாகிறார்.இருவரும் கூடி மகிழ்ந்து ஆண்டுக்கொன்றாய் அறுபது பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்களிலே தமிழ் வருடங்கள் அறுபதாயிற்று.

இதுதானா தமிழனின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் எல்லாம்?. இதையா காலம் காலமாய் போற்றிக் காத்திட வேண்டுமென நினைக்கிறீர்கள்?.

இப்போது கொஞ்சம் அறிவார்த்தமாய் அலசுவோம்.தமிழர்களின் வானியல் அறிவு மிகவும் பழமையானது,உயர்வானது, இன்றைய கால அளவுகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. இன்னும் சொல்வதாயின் தற்போதைய கால அளவைகளை விடவும் மிகத் துல்லியமானது. ஒரு நாளை ஆறு பொழுதுகளாக, அறுபது நாழிகைகளாய் பிரித்து கூறியிருக்கின்றனர்.அதே போல ஒரு ஆண்டினை ஆறு பருவ காலமாய் பிரித்திருக்கின்றனர். இது மற்ற சமூக இனங்களில் காண முடியாதது. இவை எல்லாம் இன்றைக்கும் பொருந்தி வருவதில்தான் தமிழனின் மேதமை தனித்து மிளிர்கிறது.

இத்தனை தெளிவுடையவர்களுக்கு ஆண்டின் முதல் நாளினை நிர்ணயிக்கத் தெரிந்திருக்காதா? மிக நிச்சயமாக தெரிந்தேதான் தை மாதத்தின் முதல் நாளினை ஆண்டின் முதல் நாளாக அமைத்திருந்தனர். பக்தி மார்க்கம் மற்றும் வேத மரபின் ஆதிக்கத்தினால் பழந்தமிழரின் அறிவார்த்தமான செயல்கள் அடிபட்டுப் போய்விட்டன.

தமிழர்கள் ஒரு ஆண்டினை ஆறு காலமாய் பிரித்திருந்தனர் என்று பார்த்தோம். அவை இளவேனிற் காலம் (தை,மாசி மாத காலம்),முதுவேனில் காலம்(பங்குனி,சித்திரை மாத காலம்), கார் காலம்(வைகாசி,ஆனி மாத காலம்),கூதிர் காலம்(ஆடி,ஆவணி மாத காலம்),முன்பனிக் காலம்(புரட்டாசி,ஐப்பசி மாதக் காலம்),பின்பனிக் காலம்(கார்த்திகை,மார்கழி மாத காலம்) ஆகும். இந்த ஒவ்வொரு பருவ காலமும் இரண்டு மாதஙக்ளை உள்ளடக்கியது.

இந்த மாதங்களை தமிழர்கள் எப்படி வகுத்தனர் என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இப்போதைய புவியியல் அறிஞர்கள் கற்பனையான ரேகைகளைக் கணக்கில் கொள்வதைப் போல அன்றே தமிழர்கள் பூமியை முப்பது டிகிரியாக பன்னிரெண்டு பாகங்களாய் பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு இராசியின் பெயரைச் சூட்டினர். இந்த பன்னிரெண்டு ராசிக்கு என இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் தரப் பட்டிருந்தன.இதையொட்டியே சோதிட அறிவியல் அமைகிறது. சூரியன் இந்த ராசிகளில் நுழையும் காலத்தை அந்த மாதங்களின் ஆரம்ப தினமாக வரையறுத்தனர்.

இந்த இடத்தில் மாதங்களின் பெயர்கள் எப்படி வந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த முப்பது டிகிரியில் சூரியன் பயணிக்கும் போது வரும் முழு நிலவு தினத்தன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ,அதன் பெயரே அந்த மாதங்களின் பெயர்களாய் குறிக்கப் பெற்றன. இம் மாதிரியான அறிவியல் ரீதியான தகவல்கள் எல்லாம் மதத்தின் பெயரால், புராணங்களின் பெயரால் நம்மிடம் இருந்து மறைக்கப் பட்டன. இவை தற்செயலாக நிகழ்ந்ததா இல்லை திட்டமிட்டு செய்யப் பட்டதா என்பது முடிவில்லாத விவாதத்தையே உண்டாக்கும்.

இனி தை ஒன்று ஏன் தமிழ் புத்தாண்டாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அலசுவோம்.

தமிழர்கள் பருவ காலத்தை ஆறு பிரிவாகக் கூறியிருப்பதை மேலே பார்த்தோம். அதில் இளவேனிற் காலமே முதல்வாவதாக வருகிறது. இந்த காலத்தின் முதல் மாதமாக தை மாதம் இருக்கிறது. முதல் பருவ காலத்தின் முதல் மாதம் என்ற வகையில் தை மாதம் தமிழ் புத்தாண்டின் துவக்கமாக இருக்க வேண்டும். இதை யாரும் மறுத்திட முடியாது.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். போக்கி என்பதன் மருவலே போகி ஆனது. பழையனவற்றை கழிக்கும் ஒரு நாளாக இதை தமிழர்கள் காலம் காலமாய் கொண்டாடுகிறார்கள். பழையனவற்றை மார்கழியின் கடைசி நாளில் கழித்தால், தை முதலாம் தேதியன்று புதிதாக எதையோ துவங்குவதாகத்தானே ஆகும்.

சமூக மற்றும் வரலாற்றியல் ரீதியாக இந்த நாளில் வீட்டை புதுப்பித்து வர்ணம் பூசி, தோரணம் கட்டி, சர்க்கரைப் பொங்கலிடுதல் என அடிப்படையில் ஒரு கொண்டாட்ட தினமாகவே இருந்து வருகிறது. வேறெந்த மாத துவக்கத்தின் முதல் நாளுக்கும் இத்தகைய கொண்டாட்டஙக்ள் இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.

நவீன அறிவியலின் படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதிதான் பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. சூரியனை நெருங்கி வரும் இந்த நாளில் தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலிடுவதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இது தற்செயலாக நிகழ்கிறதா இல்லை நமது முன்னோர்கள் தீர ஆராய்ந்து இந்த நாளை ஆண்டின் துவக்கமாக அமைத்திருக்கலாம்.

மார்கழி மாதத்தின் கடைசி வாரங்களை சோதிட இயலில் கர்பக் காலம் என்று கூறுவர்.கிராமப் புறங்களில் இதை தெப்பக் காலம் என்று இப்போதும் கூறுவதுண்டு. இந்த கால கட்டத்தில்தான் அடுத்த ஓராண்டுக்கு மழை பெய்யுமா?, எப்போது பெய்யும்?, எவ்வளவு பெய்யும்? என்றெல்லாம் கணிப்பார்கள்.இது வேறெந்த மாதத்திலும் இல்லை. தை துவங்கி மார்கழி வரையிலான ஓராண்டிற்கு இந்த கணிப்பு முறை பயன்படுகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற் சொலவடை இன்றும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. வழி பிறத்தல் எனப்து ஒரு புதிய ஆண்டின் துவக்கத்தையே குறிக்கிறது.

இவை தவிர இன்னும் சில ஆதாரங்களிருக்கின்றன, இந்த தைத் திருநாளின் சிறப்பினை பல்வேறு பழந்தமிழ் நூல்களிலும் காணக் கிடைக்கின்றன.

தமிழன் இயற்கையோடு இனைந்த வாழ்க்கையை வாழ்ந்தவன், இந்த ஆறு பருவ காலங்கள் ஒவ்வொன்றாய் அவன் வாழ்க்கையை ஆள்வதையே ஆண்டு என்று குறிப்பிடுகிறான். ஆறு பருவம் அவனை ஆண்டால் அதை ஒரு சுற்றாக, பூரணமாக கணக்கிட்டான்.இப்படித்தான் தமிழனின் ஆணடுகள் ஆண்டாண்டு காலமாக இருந்து வந்தது. இதை மீட்டெடுத்து சிறப்புச் செய்வதே நாம் நம் மூதாதையர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாய் இருக்கும்.

நண்பர்களே!, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்,புராணங்கள் கூறும் ஆபாசக் கதையின் ஊடாக ஒரு இனத்தின் ஆண்டுகள் அமைந்திருக்குமா?, அல்லது தேர்ந்த வானியல் அறிவுடன் பருவ காலத்தை முன் வைத்து ஆண்டுகள் அமைக்கப் பட்டிருக்குமா?.

என்னுடைய நோக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தின் உணர்வுகளை அவமதிப்பதில்லை. காலம் காலமாய் மறைக்கப் பட்டிருக்கும் ஒரு இனத்தின் ஆதார உரிமைகளை மீட்டெடுத்து சிறப்பிக்க நினைக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.

மீண்டும் ஒரு முறை…..

அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையானதொரு ஆக்கம்!

தமிழனின் அறிவியல் சம்பந்தமான அழிவானது, அகத்திய முனிவரின் வருகையுடன் ஆரம்பமாகி, ராஜ ராஜா சோழனின் அமைச்சரவையில் பார்ப்பனர்கள், அமைச்சர்களாக வரத்தொடங்கியது முதல், இன்று வரையும் தொடர்கின்றது!

தொடர்ந்து உங்கள், ஆய்வுக் கட்டுரைகளைத் தொடருங்கள்!>

  • கருத்துக்கள உறவுகள்

நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை உருவாக்கனும் என்ற கருத்து ஏற்றக் கூடியதல்ல. காடழிப்பு.. என்பது தீவிரமான பக்க விளைவுகளை சூழலில்.. பூமியில் ஏற்படுத்தவல்லது என்ற கருத்தை நாசார் உணரவில்லை.. அல்லது உணரச் செய்யப்படவில்லை.. ; தமிழ் நாட்டின் சுதந்திரம்.. இந்திய விடுதலையை காந்தி பெற்றுக் கொடுத்ததால் கிடைத்து விட்டதாக நாசர் காட்ட விளைவது.. போன்ற முரண்பாடுகளுக்கு மத்தியிலும்...)

======================================

அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாகும்..?!

pongal-celebration.gif

தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது. இதற்கு ஒளவையார் காலத்துப் பாடல்களே சான்று. "வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்.. நெல்லுயரக் கோன் உயர்வான்" என்று..அன்றே ஒளவை உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தை அது மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கை எடுத்துச் சொல்லிவிட்டார்.

நெல்லை மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர். காரணம் பெரும்பாலும் அவர்களை மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால். இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாதி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு.. ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர்.

நெற்பயிர் என்பது சூரிய ஒளியைக் கொண்டு அதன் இலைகளில் உள்ள பச்சையயுருமணிகள் எனும் கலப் புன்னங்கத்ததில் நடக்கும் ஒளித்தொகுப்பு எனும் செயற்பாட்டின் மூலம் சூரிய ஒளிச்சக்தியை இரசாயன சக்தியாக (குளுக்கோஸ் அப்புறம் மாப்பொருள்)மாற்றுகிறது. நெல்மணியை அரசியாக்கி அந்த மாப்பொருளையே நாம் உணவாக்கிக் கொள்கின்றோம். அந்த மாப்பொருளே எமது உடலியக்கத்துக்கு அவசியமான சக்தியின் பிரதான முதலாக உள்ளது.

இதனடிப்படையில் தான் தைத் திங்களில்,பயிர் விளைநிலங்களில் நல்ல விளைச்சலைப் பெற்ற மகிழ்ச்சியில் மக்கள் உழவர் திருநாளை புதுத்தானியங்கள் கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி.. பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.

அவர்கள் இதைப் புதிய ஆண்டின் தொடக்கமாகக் கருதி கொண்டாடுவதில்லை. பொங்கல் பண்டிகை முழுக்க முழுக்க உழவர்களின் திருநாள்.

தமிழர்கள் மட்டுமன்றி உழவுத் தொழில் செய்யும் பிற தென்னிந்திய மாநில மக்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமன்றி இந்திய உபகண்டத்தோடு பூமியின் மத்திய கோட்டை அண்மித்த நாட்டு மக்களும் இவ்வகையான உழவர் பண்டிகையைக் கொண்டாடும் குறிப்புக்களும் உண்டு.

"While Pongal is predominantly a Tamil festival, similar festivals are also celebrated in several other Indian States under different names. In Andhra Pradesh, Kerala, and Karnataka, the harvest festival Sankranthi is celebrated. In northern India, it is called Makara Sankranti. In Maharashtra and Gujarat, it is celebrated on the date of the annual kite flying day, Uttarayan. It also coincides with the bonfire and harvest festival in Punjab and Haryana, known as Lohri. Similar harvest festivals in the same time frame are also celebrated by farmers in in Burma, Cambodia, and Korea."

http://en.wikipedia.org/wiki/Pongal

பண்டைய காலத்தில் தமிழர்களின் பிரதான தொழிலாக உழவுத் தொழில் இருந்த காரணத்தால்.. இப்பண்டிகை தமிழர்களின் பண்டிகையாக இனங்காணப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழர்கள் மட்டுமே உழவர் திருநாள் அல்லது அறுவடைப் பெருநாளைக் கொண்டாடுகிறார் என்பது தவறான ஒரு எண்ணக்கரு.

உழவுத் தொழிலின் சிறப்பினைச் செப்பி.. அந்த தொழில்மூலம் பெறப்பட்ட நல்ல விளைச்சல் கண்டு மகிழ்ந்து அவ்விளைச்சலுக்கு உதவிய சூரியனுக்கு (இயற்கைக்கு) பொங்கலிட்டு நன்றி செலுத்தி ஊர் கூடி உணவுண்டு களித்தலே பொங்கலின் சிறப்பு ஆகும். அதுவே தமிழர் பாரம்பரியமும் ஆகும்.

மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று உழவுத் தொழிலுக்கு உதவிய கால்நடைகளுக்குக் கூட பொங்கலிட்டு நன்றி செய்யும் நிகழ்வைச் செய்து தமிழர்கள் தாங்கள் பிற உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர்களாக, அவற்றின் நலனில் அக்கறை உள்ளவர்களாக.. அவற்றுக்கு நன்றி செய்யும் பரோபகாரிகளாக இருந்ததையும், இருப்பதையும் வெளிக்காட்டியே வந்துள்ளனர்.

இவ்வளவு தனித்தன்மைகளைக் கொண்ட தைப்பொங்கல் பண்டிகையை.. இன்று தமிழர்களின் புத்தாண்டாக பிரகடனம் செய்வதால் விளையப் போகும் நன்மைகள் என்ன என்று பார்த்தால்.. வெறும் குழப்பங்களே என்பதுதான் முடிவாக இருக்க முடியும்.

ஏலவே ஆங்கிலேய முறைப்படி ஜனவரி 1 இல் புத்தாண்டு உதயமாகிறது. உலக மக்கள் அனைவருக்காகவும் அது உதயமாகிறது. அதற்குள் 14 நாள் கழித்து தமிழருக்கு என்று ஒரு புத்தாண்டைப் பிறப்பிப்பதனால் எந்த நிர்வாகப் பயனும் கிடைக்கப் போவதில்லை. உலகம் முழுவதும் அரச, தனியார் நிர்வாகங்கள் என்பது ஆங்கிலேய கால-அட்டவணைப்படியே நிகழ்கிறது. அப்படி இருக்க ஏன் இந்த மாற்றம்..??! இது உண்மையில் அவசியம் தானா..??!

உண்மையில் இது சில அரசியல் நோக்கங்களுக்காக முன்மொழியப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. பொங்கல் திருநாளின் தனித்துவத்தை இந்தப் புத்தாண்டுப் பிரகடனம் இன்னும் ஒரு நூறாண்டு காலத்துள் தலை கீழாக்கி.. சென்னை மெரினா கடற்கரையில் மதுபானம் அருந்தும் புத்தாண்டாகக் கொண்டாடக் கூடிய நிலையை தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதனால் தமிழர்களின் பாரம்பரிய தைப் பொங்கல் தனது தனித்துவத்தை இழந்து அதன் அடையாளம் தொலைந்து அருகும் நிலையே தோன்றும்.

இன்று கூட நகரமயமாக்கலின் விளைவால் பொங்கல் திருநாளின் பெறுமதி புதிய சினிமாப் படங்களை தயாரித்து வெளியிடுதல் என்ற நிலைக்குள் மட்டுப்பட்ட அளவிலேயே நகர மக்களிடம் இருக்கிறது. பல நகர வாழ் மக்கள் பொங்கலின் தனித்துவச் சிறப்பை அறியாதவர்களாகவே பொங்கலைக் கொண்டாடியும் வருகின்றனர்.

கிராமிய மக்கள் குறிப்பாக உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்களே இன்றும் உணர்வு பூர்வமா பொங்கலின் தனிச் சிறப்பறிந்து அதைக் கொண்டாடி வருகின்றனர். இப்படியான ஒரு நிலையில்.. பொங்கலோடு புத்தாண்டு என்பதையும் புகுத்தி பொங்கலின் தனிச் சிறப்பை சீரழிக்கப் போகின்றனரே தவிர தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கப் போகின்றார்கள் என்பது சுத்த பித்தலாட்டமாகவே தென்படுகிறது.

ஏலவே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு (ஏறு தழுவதல்)என்னும் காளை அடக்குதல் போட்டியை சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்காலத்துக்கு ஏற்ப அதன் பாரம்பரியத் தன்மை இழக்கப்படாது மாற்றி அமைக்க முற்படாமையால் அது இந்திய உச்ச நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தைக் குறைக் கூறிப் பயனில்லை. ஆண்டுகள் தோறும் ஜல்லிக்கட்டால் மனித மரணங்களும் காயங்களும்.. மிருக வதைகளும் தொடர்ந்ததை கவனிக்காதிருந்த தமிழக அரசுகளே இவற்றுக்குப் பொறுப்பாகும்.

இதே போன்ற போட்டிகள் ஸ்பெயின், மெக்சிக்கோ போன்ற இடங்களில் நடைபெறும் போது அவர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கி தமது பாரம்பரிய அடையாளத்தை நிலைநிறுத்துவதை இனம் கண்டும் தமிழக அரசுகள் பேசாமடைந்தைகளாக காலத்தை வீணடித்ததாலேயே இன்று தமிழரின் வீரப் பாரம்பரியம் நீதிமன்றத் தடைக்கு இலக்காகியுள்ளது. ஆனால் இந்த உண்மையைக் கூட புரியாது தமிழகத்தில் ஒரு தரப்பினர் பார்பர்னம்.. அது இதென்று பழைய பல்லவிகளைப் பாடிக் கொண்டிருக்கின்றனரே தவிர தடையை நீக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகளை உத்தரவாதங்களை செய்ய முற்படவோ அவை குறித்துச் சிந்திக்கவோ இல்லை.

வெறும் அரசியல் நோக்கோடு செய்யும் சில நகர்வுகள் நீண்ட காலப் போக்கில் தமிழரின் பாரம்பரிய இன அடையாளத்தையே இந்திய உபகண்டத்தில் இருந்து அகற்றிவிடுமோ என்ற அச்சம் இன்று எழுந்திருக்கிறது.

இந்த நிலையிலேயே இவ்வாண்டுக்கான தைப்பொங்கலை வரவேற்க வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது. ஈழத்திலோ போர் மேகம் தைப்பொங்கலை குருதிப் பொங்கலாக்கிக் கொண்டிருக்க தமிழகத்திலோ அது வேடிக்கைப் பொங்கலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிச் சீரழிகிறது.. தமிழரின் பாரம்பரியம். இதுதான் தமிழரின் தலைவிதியோ என்னோ..!

இக்கட்டுரை 2008 ஜனவரியில் எழுதப்பட்டது.

http://kundumani.blo...og-post_13.html

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.