Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு பயணித்திருக்கும் கட்டார் மன்னருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேண்டுகோள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

QatarMannarTGTEnews150.jpg

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் கட்டார் மன்னர் ஷய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி அவர்கள், இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

லிபியாவில் இடம்பெற்ற பாரிய கொலைகள் தொடர்பில் கட்டார் மன்னர் ஷய்க் ஹமாத் பின் கலிபா அல் தானி அவர்கள், நடவடிக்கை எடுத்தது போன்று, இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய படுகொலைகள் பற்றியும் கவனம் எடுக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் முன்னைய தலைவர் கேணல் கடாபி யின் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் சிறி லங்கா அரசுத் தலைவர். அவரையே நீங்கள் தற்பொழுது சந்திக்கின்றீர்கள் என குறிப்பிட்டுள்ள நா.த.அரசாங்கம,;லிபிய மக்களுக்கு எதிரான கொலைகளைத் தடுப்பதற்கு தாங்கள் எடுத்த முயற்சிகளைத் தடுக்க முயன்றவர்களில் ஒருவரதக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இருந்தவர் என்பதனையும் நா.த.அரசாங்கம் கட்டார் மன்னருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

தங்களது முயற்சியினால் லிபியாவில் ஆயிரக் கணக்கான மக்கள் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட்டது போல் சிறிலங்கா தொடர்பிலும் அதேநிலைப்பாட்டுடன் தலைமைத்துவப் பணியினை மேற்கொள்ளல் வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐ. நா. மனித உரிமைப் பேரவையினுடாக லிபியாவில் அனைத் துலக விசாரணைக்கான ஆணைக்குழு ஒன்றினை நிறுவுவதில் வெற்றி கிடைத்ததற்கு தங்கள் தலைமையில் மேற் கொள்ளப் பட்ட முன்னெடுப்புக்களே வழி வகுத்தன. அதே வகையில், 2012ஆம் ஆண்டு பெப்ரவரியில் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரிலும் சிறி லங்கா பற்றிய இத்தகைய அனைத்துலக விசாரணைக்கான ஆணைக்குழு ஒன்றினை நிறுவும் முயற்சிக்கு நீங்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் நா.த.அரசாங்கம் கேட்டுக் கொண்டு;ள்ளது.

நீங்கள் சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தின் போது தமிழ் மக்களின் இன்னல்களையும் துயரங்களையும் கேட்ப தற்கு வாய்ப்பிருக்காது. ஏனெனில், எமது மக்களின் குரல்கள் அடக்கி ஒடுக்கப் பட்டுள்ளன. மாறாக, தமிழ் மக்களைப் பாரிய அளவில் கொன்று குவித்த அதே அரச படைகளே தங்களுக்கு அணி வகுப்பு மரியாதைகளை வழங்குவார்கள் எனவும் நா.த. அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

கட்டார் மன்னரின் விஜய பின்னணி என்னவென்று விளங்க சில காலம் செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பாம்பு பண்னை(சீனாகாரனுக்கு) ரெடியாகிட்டு இருக்கு.. இவன் ஒட்டக பண்னை அமைக்க கிளம்பிட்டான் போல தெரியுது.. இலங்கை கிளைமெட் அதற்கெல்லாம் ஒத்து வராது என்று எடுத்து சொல்லுங்கப்பா... <_< <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.