Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!

Featured Replies

கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு!

'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது.

அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்பளிப்புச் செய்தது. ஆனைவிழுந்தான் ஊர் மக்களுக்கு 6 தையல் பொறிகள் அன்பளிப்புச் செய்தது.

ஒரு மண்வெட்டி மற்றும் கத்திக்குச் செலவாகும் தொகை 15 டொலர்கள் மட்டுமே. எனவே இந்த உதவியை செய்ய எல்லோரும் முன்வர வேண்டும்' என தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் கேட்டுக் கொண்டார்.

இந்த விழாவை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் முதல் முறையாக அனைத்துலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா மங்கள விளக்கேற்றல், தமிழ்மறை ஓதல், தழிழ்த்தாய் வாழ்த்து, கனடாப் பண், அமைதி வணக்கம் ஆகியவற்றோடு தொடங்கியது. மங்கள விளக்கை திருவாளர்கள் வின் மகாலிங்கம் (கனடா தமிழர் இணையம்) வி. சொர்ணலிங்கம் (இயக்குநர், தமிழ்த் தொலைக்காட்சி) திரு ஈழவேந்தன் (நா.க.த.அ) திரு இராசேந்திரம், திரு இரா.சிவலிங்கம் (துணைப் பிரதமர், நா.க.த.அ) திரு இரா. குணநாதன் (தலைவர், தமிழர் புனர்வாழ்வுக் கழகம்) ஏற்றி வைத்தனர்.

தமிழ்மறை ஓதல், தழிழ்த்தாய் வாழ்த்து, கனடாப் பண் ஆகியவற்றை செல்வன் கிசோன் சிறிகணேசன் பாடினார். மாணவனான இவர் கனடாவில் பிறந்தவர். நடன ஆசிரியை நிரோதினி பரராசசிங்கத்தின் மாணவியர் வரவேற்பு நடனம் ஆடினார்கள். தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் இணைச் செயலாளர் மு. தியாகலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவுக்கு திரு லோகன் கணபதி (மார்க்கம் நகரமன்ற உறுப்பினர்) அவரது துணைவியார் மருத்துவர் இராஜேஸ்வரி கணபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முறையே வி.எஸ். துரைராசா (தலைவர் மறுவாழ்வுக் கழகம்) பவானி தர்மகுலசிங்கம், இணைச்செயலாளர் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் மாலை அணிவித்து மதிப்பளித்தனர்.

திரு லோகன் கணபதி அவர்களது பெருமுயற்சி காரணமாகவே மார்க்கம் நகரமன்றம் தைத் திங்களை மரபுத் திங்களாக அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

திரு வீர சுப்பிரமணியம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) திரு சிவா வேலுப்பிள்ளை (தலைவர் அனைத்துலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்) திரு வி.எஸ். துரைராசா (தலைவர் மறுவாழ்வுக் கழகம்) ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு என்ற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலின் வெளியீடு மூலம் கிடைக்கப் பெற்ற 370 டொலர்கள் மறுவாழ்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. விழாவில் மொத்தம் 1,500 டொலர்கள் சேர்க்கப்பட்டது. இந்தப் பணம் வன்னி கமக்காரர்களுக்கு மண்வெட்டி, கத்தி போன்ற பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப்படும்.

திரு கோபால் குடும்பம் பொங்கல் பானை வைத்துப் பொங்கியது. பொங்கலோடு வடை, மோதகம், கடலை, வாழைப்பழம் கோப்பி வழங்கப்பட்டன.

மதங்கசூளாமணி நடனப்பள்ளி மாணவியரின் கோலாட்டம், சக்தி நடனப்பள்ளி மாணவியரின் உழவர் நடனம், இந்தோ - கனடா நடனப்பள்ளி மாணவியரின் தில்லான நடனம் இடம்பெற்றது. இவர்களது ஆடலும் பாடலும் கண்ணுக்கு விருந்தாக இருந்தன.

குடவோலை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 11 தூய தமிழ்ப் பெயர்களுக்கு 1,500 வெள்ளிகள் பங்கிட்டு வழங்கப்பட்டன. சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கனிமொழி, எல்லாளன், தமிழ், அகரன், தமிழினி, கரிகாலன், திருமகள், முகிலன், இனியவன், சேயோன் ஆகிய பெயர்களே பரிசு பெற்ற பெயர்களாகும். பெயர்களின் தேர்வில் பொருள், இனிமை, முழுமை போன்றவை கருத்தில் எடுக்கப்பட்டன. மொத்தம் 68 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன.

நன்றியுரையை தமிழ்ப் படைப்பாளிகள் கழக இணைச் செயலாளர் பவானி தர்மகுலசிங்கம் வழங்கினார்.

விழா சிறப்பாக அமைய உதவிய நடன ஆசிரியர்கள், முருகன் கோயில் அறங்காவல் அவை, நல்லமாதிரி விளம்பரம் செய்த ஈழநாடு, உலகத்தமிழர், யாழ் உதயன், கனடா உதயன், தமிழ் மிறர், செய்தி இணையதளம், பொங்குதமிழ் இணையதளம், சிரிஆர் வானொலி, அனைத்துலக வானொலி, தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் வண் தொலைக்காட்சி, சிற்றுண்டி அன்பளிப்புச் செய்த பாபு உணவகம், Fast Print அச்சகம், அழைப்பை ஏற்று வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சரியாக 9.00 மணிக்கு விழா இனிது நிறைவெய்தியது.

ஆசிரியர் திரு சண்முகம் குகதாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=d9a3bf0a-ce70-443f-84bb-80e3825a846d

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. :D:rolleyes:

  • தொடங்கியவர்

MG1576-M.jpg

MG1626-M.jpg

MG1654-M.jpg

MG1700-M.jpg

  • தொடங்கியவர்

MG1736-M.jpg

MG1630-M.jpg

  • தொடங்கியவர்

மறுவாழ்வு அமைப்பின் உதவியுடன் வன்னி விவசாயிகளுக்கு 50 ஆயிரம் பெறுமதியான மண்வெட்டிகள்

கனடா மறுவாழ்வு அமைப்பு தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு விவசாய உபகரணங்களை பா.உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் வழங்கி வருகின்றது.

கடந்த உழவர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் த.தே.கூட்டமைப்பு மாவட்ட பணிமனையான அறிவகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கனடா மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி கிராமங்களான விநாயகபுரம், கிருஸ்ணபுரம், பொன்னகர், பாரதிபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் மாயவனூரை சேர்ந்த விவசாயிகளும் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய ஐம்பத்தினான்கு மண்வெட்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளின் பா.உறுப்பினருடன் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்களான பாலாசிங்க சேதுபதி, சி.சுப்பையா, வே.செல்லத்துரை மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் போன்றோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய தமிழரசுக்கட்சி மாவட்ட செயலாளர் பசுபதிப்பிள்ளை கருத்துரைக்கையில், எத்தனை பெரிய இழப்புக்கள் வந்தாலும் தமிழர்களாகிய நாம் எமது நீடிய பண்பான பொங்கல் தினத்தை கடைப்பிடிப்பது எமது தனிப்பெரும் சிறப்பு. எத்தனைதான் நவீனங்கள் பெருகினாலும் என்றும் இந்த உலகம் உழவர்கள் பின்னேதான் சுற்றிக்கொண்டிருக்கின்றது. விவசாயிகளின் உழைப்பாலும் வியர்வையாலும் இச்சமூகம் சுறுசுறுப்படைகின்றது. அவர்களின் ஆனந்தம்தான் இச்சமூகத்தின் புன்னகையாக மலர்கிறது.

இந்த மண்ணின் அற்புதமான சொத்துக்கள்தான் இந்த விவசாயப் பெருமக்கள். ஆனால் அந்த அற்புதமான வளங்களில் ஆக்கிரமிப்பு போர்தந்த காயங்கள் இழப்புக்கள் ஆறாதவை. ஆயினும் மீண்டும் துளிர்க்கும் அந்த மனோவுறுதி இன்று எம் வயல்நிலங்களை பசுமையாக்கி வருகின்றது. அத்தகையவர்களுக்குத் தோள்கொடுப்பது ஒரு இனத்துக்கே தோள் கொடுப்பது போன்றது என்றார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=96d5ca93-7c0c-4531-aa28-f6446f65a3ff

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. :D:rolleyes:

சிரிப்பையும் விழிப்பையும் பார்த்தால் நீங்களும் அங்கு சமூகமளித்தது போல் இருக்கின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்

பரிசுகளையும்,சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்..:)

இனிமேல் வடக்கு கிழக்கு மக்களுக்கு யாரும் உதவி செய்ய முடியாது என ஆளுனர்கள் உத்தரவு வழங்கிஉள்ளனரே?.........

  • தொடங்கியவர்

சிரிப்பையும் விழிப்பையும் பார்த்தால் நீங்களும் அங்கு சமூகமளித்தது போல் இருக்கின்றது :D

படத்திலும் இருக்கலாம் :D :D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படத்திலும் இருக்கலாம் :D :D

அப்படி படத்தில் இசை இருந்தால் அவர் நாலாவதாக நிற்கும் நீல சப்பாத்து போட்டவராக இருக்கலாம் எண்டு என்ட புலனாய்வு மூளை சொல்லுது :unsure:. காரணம் இசை குள்ளமானவர் என விசுகு அண்ணாவின் கனடா திரியில் வாசிச்ச ஞாபகம் அதோட இதே முகத்தை ஹாட்லி நிகழ்ச்சி ஒண்டிலையும் பார்த்த ஞாபகம். இசை ஹாட்லியின் மைந்தனாச்சே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.