Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் அரசின் பேச்சுவார்த்தைகள் தொடருமா?

Featured Replies

கூட்டமைப்புடன் அரசின் பேச்சுவார்த்தைகள் தொடருமா?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுமா என்பது குறித்து கேள்விக் குறிகள் எழுந்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இலங்கையில் இருக்கும் வேளையில், இம்மாதம் 17 ஆம் தேதி(செவ்வாய்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.

திட்டமிட்டபடி தமது தரப்பினர் கூட்டத்துக்கு வந்த போதிலும், அரசு தரப்பிலிருந்து யாரும் வரவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அரசால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பினர் தமது உறுப்பினரை நியமிக்க முன்வராத நிலையில், அரச தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறமாட்டாது என்று சில கருத்துக்கள் முன்பே வெளிவந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இருந்தாலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என மற்றொரு அரசு தரப்பிலிருந்து கருத்து வந்ததாலேயே தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

111201170809_sampanthar_tna_304x171_bbc_nocredit.jpg

தமக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே, தடைபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின என்றும், அவருடன் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு மாறாக கூட்டமைப்பினர் எதையும் செய்யாத நிலையில், அரசாங்கம் வித்தியாசமாக நடக்க வேண்டியத் தேவை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதன்கிழமையன்றும் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை.

தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலமாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது எனவும் சம்பந்தர் தமிழோசையிடம் கூறினார்.

கூட்டமைப்பினர் ஏன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு உறுப்பினரை நியமிக்கவில்லை என்பதை இலங்கை அரசுக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளின் மூலமே ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை தமது தரப்பு விரும்புவதாகவும், அதே சமயம் அது முறையாக நடைபெற வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் சம்பந்தர் கூறுகிறார்.

http://www.bbc.co.uk...s_stalled.shtml

Edited by akootha

  • தொடங்கியவர்

கூட்டமைப்புடன் அரசின் பேச்சுவார்த்தைகள் தொடருமா?

கூட்டமைப்பினர் ஏன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு உறுப்பினரை நியமிக்கவில்லை என்பதை இலங்கை அரசுக்கும், இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

tnlogo.gif

Sivajilingam_statement_1.jpg

Sivajilingam_statement_2.jpg

Sivajilingam_statement_3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது காலம் காலமாக நடைபெறும் இனவாதச் சிங்கள அரசுகளின்

தொடர் நிகழ்வுகள். கூட்டமைப்பு பேச்சுவார்த்தையிலிருந்த

வெளியேற வேண்டும்.

சர்வதேச அனுசரணையுடன் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள்

இடம்பெறாவிடின் ஏமாற்றம் அடைவது கூட்டமைப்பு அல்ல.

ஒட்டுமொத்தத் தமிழ் மக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு அடித்தே திருந்ததவங்கள் பேசியா திருந்த போறாங்கள் திருத்தம் தீர்க்கப்போகின்றாங்கள் !.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.