Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டிக்குளம் கல்லாறு கடல் நீரேரியில் 10 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன!(படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sundikulam1-100x100.jpg

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இறால் இருப்பு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாணசபையின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் பத்து இலட்சம் இறால் குஞ்சுகள் சுண்டிக்குளம் கல்லாறு கடல் நீரேரியில் விடப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து வரும் கிழமைகளில் தட்டுவன்கொட்டி ஆனையிறவு நாகேந்திரபுரம் கடல் நீரேரிகளிலும் இறால் குஞ்சுகள் விடப்படவுள்ளன.

ஒட்டுமொத்தமாக 250 இலட்சம் இறால் குஞசுகள் மேற்படி கடல் நீரேரிகளில் விடப்படவுள்ளன. இதற்காக வட மாகாண சபை 13.65 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றது.

இன்று இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தேசிய நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் சந்திரரட்ண, அந்நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி.அசோகா, வடமாகாண மீன்பிடித்திணைகள பணிப்பாளர் மயூரன், கிளிநொச்சி மாவட்ட அரச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் கேதீஸ்வரன், மாவட்ட மீன்பிடித்திணைக்கள உதவிப்பணிப்பாளர் கனேசமூர்த்தி, கூட்டுறவு உதவி ஆணையாளர் தவராசா மற்றும் கட

ற்றொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இறால் குஞ்சுகளை கடல் நீரேரியில் விட்டனர்.

sundikulam11.jpg

sundikulam2.jpg

http://www.saritham.com/?p=48389

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர் தாயகத்தின் வளங்கள் மீது சிங்களம் தொடுத்திருக்கும்.. நாசகார யுத்தத்தின் புதிய வடிவமாகும்.

ஏலவே.. Shrimp aquaculture.. இந்த இறால் வளர்ப்பு புத்தளம் பகுதியில் பாரிய சூழல் மாசாதல்.. நீர் வள மாசாதலுக்கு இட்டுச் சென்றுள்ள நிலையில்.. நீர் நிலைகள் மலடாகும் நிலை தோன்றி இருக்கும் தறுவாயில்.. தமிழர் தாயகத்தில் வளப் பயன்பாடு.. முகாமைத்துவம் இன்றியும்.. கட்டுப்பாடு இன்றியும்.. சிங்கள இராணுவ அதிகார மையத்தின் கீழ் துஸ்பிரயோகம் செய்யப்படுவது தொடரும் நிலையில் தமிழர் தாயக வளங்கள் மாசாக்கப்பட்டு சீரழிக்கப்பட இந்த இறால் பண்ணைகள் சிங்களத்திற்கு உதவும் அதேவேளை சிங்கள மற்றும் தமிழ் கூலிக் குழுக்களின் சுயநல பொருண்மிய இலாபமே இதில் முதன்மையாகி நிற்கிறது...!

இந்த கண்டல் இறால் பண்ணைகளின் பாதிப்புத் தொடர்பில் ஐநா ஆய்வறிக்கை வழங்கியுள்ள எச்சரிக்கை இங்கு..

சிந்திக்குமா.. எமது வளம் மலடாவது குறித்து.. புத்திசீவிகள் கூட்டம்..?????!

shrimp.jpg

UNITED NATIONS RESEARCH INSTITUTE FOR SOCIAL DEVELOPMENT.

A number of recent media reports have given vivid accounts of the current

and potential environmental impacts of shrimp farming in Asia and South

America. These include mangrove destruction, destruction of fish stock,

pollution and other forms of land and water degradation. The social impacts

on local communities which live in the tropical coastal regions where shrimp

aquaculture is a growing source of income have, however, received only

scant attention. Shrimp aquaculture affects livelihoods by disrupting

traditional systems of production, distribution and social relations. This

paper highlights such social dimensions of shrimp aquaculture. It is based on

the data available in the case studies covered in the current literature on the

subject. The broader conceptual framework utilized to analyse policy issues

is derived from the Institute’s research programme on Environment,

Sustainable Development and Social Change.

Following this scientists’ report, the Supreme Court issued

an order prohibiting the further conversion of agricultural land or salt pans

into prawn farms in the three Indian states of Tamil Nadu, Andhra Pradesh

and Pondicherry (Multinational Monitor, 1995; Khor, 1995).

http://www.unrisd.or.../$file/dp74.pdf

Edited by nedukkalapoovan

நெடுக்கு...

புத்தளம் பகுதியில் மேற்கொள்ளப்படும் நன்னீர் இறால் பண்ணைக்கும் கடலுடன் தொடர்புள்ள உவர் நீர் ஏரிப்பகுதிகளான சுண்டிக்குளம், கல்லாறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இறால் ஊக்குவிப்பு செயலுக்கும் வேறுபாடு இல்லையா? இந்த பிரதேசங்கள், ஆனையிறவு போன்ற இடங்களும் முன்பிருந்தே இறாலுக்கு பெயர் போன இடங்கள்தானே? பண்ணை வைப்பதுக்கும், கடலில் இறால் பெருக்கம் ஏற்பட வழி சமைப்பதும் ஒன்றா? இந்த பகுதிகளில் இறால் அதிகம் உருவானால் மீனவர்களுக்கு நன்மை வராதா?..என் அடிப்படைக் கேள்வி, கடலில் இறால் பெருகினால் நன்னீர் இறால் பண்ணைகளால் ஏற்படும் சூழல் அழிவு போன்றே ஏற்படுமா?

இது பற்றிய அறிவு எனக்கு அதிகம் இல்லை என்பதால் கேட்கின்றேன்.

இயற்கையாக கண்டல் சார்ந்த இடங்களில் இறால்கள் பெருகுவதும்.. அவை பின்னர் தங்களின் niche நோக்கி நகர்ந்து கொள்வதும்... நடக்கின்ற நிகழ்வுகள் தான். அதன் அடிப்படையில் இறால்களை அவை பெருகும்.. அதிகம் வாழும் இடங்களை எம் மீனவர்கள் கண்டறிந்து முன்னைய காலங்களில் இறால் பிடித்தார்கள். அது இயற்கையின் பரம்பலுக்கு உட்பட்ட விடயம். அதனால் சூழல் தாக்கம் என்பது கவலைப்படும் படிக்கு உருவாக மாட்டாது.

ஆனால்.. இப்போ உதாரணத்திற்கு 10,000 பேரை ஒரு 1000 பேர் படிக்கும் பாடசாலைக்குள் உள்வாங்க கொண்டு வந்தால் என்ன ஆகுமோ அதுபோன்றே.. ஒரு இயற்கைச் சூழலுக்குள் 1 மில்லியன் இறால் குஞ்சுகளை திணிப்பது என்பதும். அதுமட்டுமன்றி.. இந்த இறால் குஞ்சுகள்.. வியாபார நோக்கிற்காக.. வளர்க்கப்படும் இறால்கள். இவை அந்தச் சூழலில் இயற்கையாக வாழும் இறால்களை விட போட்டி அதிகம் காண்பிக்கக் கூடியனவாகவும் இருக்கலாம். இதனால் இயற்கையாக அங்கு வாழக்கூடிய இறால் இனங்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாத.. உணவு பெற முடியாத நிலை தோன்றுவதோடு.. அவை வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு விடும். அதுமட்டுமன்றி.. இந்த இறால் இனங்களின் புகுத்தல்.. உணவுச் சங்கிலியில் அல்லது வலையில் மாற்றத்தை உண்டு பண்ணி.. அந்தச் சங்கிலியில் அல்லது வலையில் இருக்கும் இதர மீனினங்கள் மற்றும்.. மீனினங்களுக்கு உணவாக இருக்கும் உயிரினங்களின் பெருக்கத்தை தடை செய்யலாம். அதனால் மீனினங்களும் அங்கு குறைவடைய வாய்ப்புண்டு.

மேலும்.. அந்தப் பகுதியில் இருக்கும்.. மீன்கள் பிற கடல் உயிரினங்கள் இயற்கையாக குஞ்சு பொரிக்க உள்ள இயற்கைச் சூழல் தகர்க்கப்படுவது.. கடல் சார்ந்தும்.. மீன்களின் பிற இனங்களின் குடித்தொகையில் பாதிப்பை உண்டு பண்ணலாம். கடற் தாவரங்களின்.. கண்டல் தாவரங்களின் அழிப்பும்.. அங்குள்ள கடல் சார்ந்த இயற்கைச் சூழலை மாற்றி அமைத்து.. அந்தப் பகுதியில் மீன் பிடிக்கே ஆபத்தை உண்டு பண்ணலாம்.

அந்த வகையில் இங்கு சரியான... conservation மற்றும் sustainability இன்றிய வளப்பயன்பாடு என்பது எமது இயற்கை வளங்களின்.. அவை சார்ந்த குடிசார் இருப்புக்களின் தன்மையில் பாரிய மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பாக அமைவதோடு.. அவை எமது மீனவர்களை துரத்தி அடித்து.. இந்த இறால் பண்ணைகள் சார்ந்து அவற்றைப் பராமரிக்க மற்றும் விளைச்சல்களைப் பெற என்று.. சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படவும் வாய்ப்பை அளிக்கும். மேலும் இப்பகுதிகளில்.. சிங்களப் படைகளின் நிரந்தர இருப்புக்கான வருவாய்களையும்.. இந்த இறால் பண்ணைகளில் இருந்து ஈட்டப்படும் பொருண்மிய இலாபம் கவனித்துக் கொள்ளும்..!

தென்னிலங்கையில்.. இப்படியான இறால் வளர்ப்புக்கள் செய்யப்பட நீர்கொழும்புப் பகுதியில் வாய்ப்பிருந்தும்.. அந்தச் சூழல் தொகுதியை பாவிக்கவில்லை. காரணம்.. அரிய வகை மீனனங்களின்.. நண்டினங்களின் பெருக்கம் கருதி. அந்தப் பகுதியில்.. aquaculture பற்றி ஒரு ஆய்வில் ஈடுபட்ட அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். ஆனால்.. இப்போ அதை மாற்றி இருக்கிறார்களோ தெரியாது.

இந்த இறால் வளர்ப்பு என்பது பெருத்த சிங்கள.. முதலாளிகளின் ஏற்றுமதிக்கும் கொள்ளை இலாபத்திற்கும் என்று அமைகிறதே அன்றி அந்தப் பகுதி.. ஏழை மீனவர்களுக்கு இதனால் எந்தப் பயனும் எட்டப் போவதில்லை. அந்த வகையில்.. சிங்கள இராணுவத்தின் ஒத்துழைப்போடு.. எந்த வகை இயற்கை வள முகாமைத்துவ.. மற்றும் பாதுகாப்பு.. பற்றிய சிந்தனைகளும்.. கவனங்களும்.. இன்றி.. இவ்வாறு புகுத்தப்பட்ட இறால் இனங்களைக் கொண்டு.. இறால் வளர்ப்புச் செய்யப்படுகின்றமை.. எமது மீனவர்களின் எதிர்கால கடல் வளங்களின் இருப்பையே பாதிக்கச் செய்யும் வாய்ப்பையே அதிகரிக்கச் செய்கிறது. மாறாக அவர்களிற்கு மீட்சியினை இது ஏற்படுத்தப் போவதில்லை..!

இதனை மேற்படி.. ஐநா ஆய்வறிக்கையை படிப்பதன் மூலமும் உறுதி செய்து கொள்ளலாம்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.