Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

El Clasico ஒரு வரலாறு

Featured Replies

el-clasico-title.jpg

“El Clásico” என்பது Spain நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நடந்து வரும் இரு கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி என்பதை விட போர் என்றே சொல்லலாம்.

El Clasico ஆனது Real Madrid மற்றும் FC Barcelona அணிகளிற்கிடையில் நடக்கும் ஆட்டத்தை குறிக்கும். Coca Cola குளிர்பாணத்தில் உலக புகழ் போல் El Clasico உதைபந்தாட்டத்தில் உலகறிந்த ஒரு ஆட்டம்.

109 ஆண்டுகளில் 240ற்க்கு மேற்பட்டஆட்டங்களை தாண்டிய இந்த வரலாற்றை வரிசைப்படி பார்ப்போம்.

1902 - 1906

இந்த இரு கழகங்களிற்கிடையிலான முதலாவது போட்டி 13. Mai 1902 அன்று நடைபெற்றது. Real Madrid கழகம் உருவாகி ஒரு சில மாதங்களே ஆகி இருந்தது. FC Barcelona கழகம் கடந்த 3 ஆண்டுகளிற்க்கு முன்னமே உருவாகியிருந்தது. உலகையே கவர்ந்திழுக்கபபோகும் ஆட்டங்களில் இவ்விரு கழகங்களிற்க்கும் முக்கய பங்கு உண்டு என்பதை அப்பொழுது யாருமே அறிந்திருக்கவில்லை.

FC Barcelona Copa de la Coronación கிண்ணத்தின் (அந்த நாட்டின் மன்னரின் பெயரால் நடாத்தப்பட்டது. இப்பொழுது இது Copa Del Rey என்று அழைக்கப்படுகின்றது.) அரையிறுதியாட்டத்தில் Real Madridதுடன் மோதுகின்றது.

FC Barcelona அப்பொழுதே வெளிநாட்டு வீரர்களுடன் கழமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தில் FC Barcelona 3-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு கழகங்களிற்க்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு நான்கு வருடங்களின் பின்னர் நிகழ்ந்தது. 1906ஆம் ஆண்டு ஒரு சிநேகிதஆட்டத்தில் (இப்பொழுதெல்லாம் இப்படியான விசப்பரிட்சையில் இந்த கழகங்கள் இறங்குவதில்லை. காரணம் அது சிநேகிதமான ஆட்டமாக இருக்காது.) சந்தித்துக்கொண்டன. இதில் FC Barcelona 5-2 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

hipodromo-castellana-1930-urbancidades.jpg

முதலாவது El Clasico நடைபெற்ற Hipódromo மைதானம் (Madrid)

1910 - 1920

இந்தக் காலப்பகுதியில் இவ்விரு கழகங்களும் 15 தடவை மோதிக்கொண்டன. நான்கு போட்டிகள் மட்டும் இதில் கிண்ணத்திற்கான ஆட்டமாக இருந்தது. ஏனையவை சிநேகித ஆட்டமாக இருந்தன.

நான்கு கிண்ணத்திற்கான ஆட்டமும் (copa del rey) 1915/1916 காலப்பகுதியில் நடைபெற்றன. முதலாவது ஆட்டத்தில் FC Barcelona 2-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் 4-1 என்ற அடிப்படையில் Real Madrid வெற்றி பெற்றது. இந்தக் காலப்பகுதியில் தண்டை உதை மூலம் வெற்றியை தீர்மானிப்பது அறிமுகமாகவில்லை. எனவே இவ்விரு கழகங்களும் மறுபடியும் ஒரு போட்டியில் சந்தித்தன. அதுவும் 6-6 என்ற அடிப்படையில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.

இந்த ஆட்டத்தில் Santiago Bernabéu என்ற வீரர் நான்கு கோல்களை அடித்தார். இன்று Real Madridஇன் மைதானம் இவரின் பெயரிலயே உள்ளது.

எனவே இரு கழகங்களும் நான்காவது முறையாக மோத வேண்டி வந்தது. 15.04.1916 இரு கழகங்களும் மீண்டும் மோதின. Real Madridற்க்கு 4-2 என்று நிற்கும் பொழுது FC Barcelona கழகம் ஆட்டத்திலிருந்து வெளியேறியது. நடுவரின் ஒரு தலைபட்சமான முடிவுகளால் அவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்கள்.

எனவே Real Madrid அணி வெற்றி பெற்றதாக அறிக்கப்பட்டு Real Madridஅணி இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது. இறுதியாட்டம் நடைபெற்ற இடமோ Barcelonaவில்! இங்கே Real Madrid அணி Athletic Bilbao என்ற அணியிடம் தோல்வியை தழுவிக்கொண்டது.

1920 - 1928

இந்தக் காலப்பகுதியிலும் இரு கழகங்களும் Copa Del Rey கிண்ணத்தில் சந்தித்தன. இரு ஆட்டங்களிலும் FC Barcelona அணி வெற்றி பெற்றது. இடையியே இரு கழகங்களும் சிநேகித ஆட்டத்தில் மோதிக்கொண்டன.

1927/1928 காலப்பகுதியில் நாட்டின் சம்பியன் சிப் முறை “Torneo de Campeones” அறிமுகப்படுத்தப்பட்டது (தற்பொழுது உள்ள Primera Division இன் முன்னோடி). ஆனால் இதில் Copa del Rey வென்ற கழகங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அந்த வரிசையில் Athletic Bilbao, Arenas Guetxo, Real Unión Irún und Real Sociedad SS கழகங்கள் பங்குபெற்றின. இவற்றுடன் Real Madridம் FC Barcelonaவும் இணைந்து கொண்டன.

Real Madrid மற்றும் FC Barcelona அணிகள் இரு தடவைகள் மோதின. இரு தடவையும் சமநிலையில் ஆட்டம் முடிந்தது.

1928/1929 காலப்பகுதியில் தற்பொழு நடைமுறையில் Primera Division உள்ள உருவாக்கம் பெற்றது.

1928 - 1936

17.02.1929 அன்று இரு கழகங்களும் முதல் முறையாக சம்பியன் சிப்பிற்கான ஆட்டத்தில் மோதிக்கொண்டன. இதில் Real Madrid அணி 2-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

இரண்டாவது சந்திப்பில் FC Barcelona 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் சம்பியன் சிப் பட்டத்தையும் வென்றது. Real Madridஅணி இரண்டாவது இடத்திற்க்கு தள்ளப்பட்டது.

அடுத்த இரண்டு ஆண்டுகளும் Bilbao என்ற அணி சம்பின் பட்டத்தை வென்றது.

நான்காவது ஆண்டில் தான் Real Madrid முதல் 1931/1932முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளிலும் Real Madrid சம்பியன் பட்டத்தை வென்றது.

03.02.1935 ஆம் ஆண்டு Real Madrid அணி FC Barcelonaவை 8-2 அன்ற அடிப்படையில் வெற்றி கண்டு இது வரையும் நடந்த El Clasicoவில் அதிக கோல் எண்ணிக்கையில் வென்ற சாதனையை வைத்திருக்கின்றது.

இந்த அவமானத்தை FC Barcelona தாங்கிக்கொள்ளுமா என்ன? அடுத்த ஆட்டம் 21.04.1935 ஆம் ஆண்டு நடைபெற்றது. FC Barcelona அணி 5-0 என்ற அடிப்படையில் வெற்றி கண்டு வாங்கியதை மறுபடியும் திருப்பிக்கொடுத்தது.

Primera Divisionஇன் ஆரம்ப காலங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த கழகம் Real Madridதோ அல்லது FC Barcelonaவோ அல்ல. Athletico Bilbao என்ற அணியே இந்தக் காலகட்டத்தில் முதன்மை வகித்தது.

1936 - 1939

1936ஆம் ஆண்டு Spainஇல் உள்ள நாட்டு போர் வெடித்தது. பல கழகங்கள் மற்றும் மைதானங்கள் தரைமட்டமாக்கப்பட்டன (அரசியலுக்கும் விளையாட்டுக்கும் சம்மந்தம் இல்லை என்டுறவங்க இதை கவனியுங்கப்பா).

FC Barcelonaவின் நிர்வாகி Franco என்ற சர்வதிகாரியால் கைது செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யபடுகின்றார்.

16.09.1938 FC Barcelonaவின் மைதானம் குண்டு வைத்து தகர்கப்படுகின்றது.

Bundesarchiv_Bild_183-H25224_Guernica_Ruinen.jpg

குண்டு வைத்து தகர்கப்பட்ட FC Barcelonaவின் மைதானம்

Real Madirdற்கும் கிட்டத்தட்ட இதே நிலையே. பல வீரர்கள் நாட்டை விட்டு ஓடினர்.

இந்த உள்நாட்டு போரை இரு கழகங்களும் ஒரு மாதிரி சமாளித்து புத்துயிர் பெற்று வந்தன.

1939 - 1953

போரிற்க்கு பின்னர் FC Barcelonaவே வேகமாக மீண்டெழுந்தது. 1945, 1948, 1949, 1952,1953 ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை வென்றது.

Real Madrid அணியோ எந்த பட்டமும் வெல்ல முடியாமல் திண்டாடியது. ஆனால் FC Barcelonaவுடனான ஆட்டங்களில் Real Madrid தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்தார்கள். போருக்கு பின்னர் நடந்த முதலாவது El Clasicoவில் அணி 2-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

சொல்யியடிப்பது இப்படி தான் போல்?

1943 ஆம் ஆண்டு Spain நாட்டு கிண்ணத்திற்கான போட்டியில் அரையிறுதியாட்டத்தில் இரு கழகங்களும் மோதிக்கொண்டன. FC Barcelonaஅணி 3-0 என்று வெற்றி பெற்றது. இந்த வெற்றிப்பெருமிதத்துடன் FC Barcelonaஅணி இரண்டாவது ஆட்டத்தில் இறங்கியது.

ஆனால் Real Madrid அணி 11-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இன்று வரை இதற்கான காரணம் தெரியவில்லை. FC Barcelonaவின் வீரர்கள் தங்களை மைதான பாதுகாப்பில் இருந்தவர்கள் தமது ஆடைமாற்றும் அறைக்குள் வந்து அச்சுறுத்தியாத சொல்லிக்கொண்டார்கள். மற்றும் FC Barcelonaவின் பந்துகாப்பாளர் ஆட்டத்தின் பாதிக்கு மேல் தனது கோலில் இருந்து தள்ளியே நின்றார். காரணம் Real Madridஇன் ரசிகர்களின் கல் வீச்சு.

இங்கே தான் இந்த இரு கழகங்களிற்க்குமான விரோதம் தொடங்கியதாக பலர் கருதுகின்றார்கள்.

1945/1946 பகுதியில் FC Barcelona 5-0 என்று வென்றது. அடுத்த ஆண்டு Real Madrid 6-1 என்று வென்றது.

1939-1953 காலப்பகுதியில் 36 தடவை இரு கழகங்களும் சந்தித்துக்கொண்டன.

குபாலாவும் (Kubala) 5 கிண்ண Barcelonaவும்

1950 ஆண்டு László Kubala என்ற Ungarn நாட்டு விளையாட்டு வீரரை FC Barcelona வாங்கியது.

1950/1951 ஆண்டு காலப்பகுதி FC Barcelonaவிற்க்கு முக்கயத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு 5 கிண்ணங்களை வென்று சாதனை புரிந்தது. Spain சம்பியன், பட்டம் Spain கிண்ணம்,Copa Latina, Copa Eva Duarte மற்றும் Copa Martini & Rossi என்பனவை வென்று சாதனை புரிந்தது. இந்த சாதனை 2008/2009 காலப்பகுதியில் ஆறு கிண்ணங்கள் வென்று முறியடிக்கப்பட்டது.

358px-Kubala_a_la_Monistrolenca_wikipedia.jpg

László Kubala

1953 - 1964

இந்தக் கொடுமை எல்லாம் பார்த்துக்கொண்டு Real Madrid சும்மா இருக்குமா என்ன. தங்கள் பங்கிற்க்கு பல வீரர்களை வாங்கிக்குவித்தது (இப்பொழுதும் இதையே தான் செய்கிறார்கள்).

இதன் விளைவு 21 ஆண்டுகளிற்க்கு பின் Real Madrid சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தக் காலகட்டத்தில் Real Madrid அதிக ஆட்டங்களை FC Barcelonaவுடன் வென்று தள்ளியது.

1964 - 1990

இந்தக் காலப்பகுதியில் Real Madrid அணி பல சம்பியன் பட்டங்களை வென்று குவித்தது. ஆனால் El Clasico என்று வரும் பொழுது FC Barcelonaவின் கையே ஓங்கி இருந்தது. இதனால் யார் சிறந்த அணி என்பது நிர்ணயிப்பது கடினமாக இருந்தது. சம்பியன் பட்டத்தை வெல்கின்ற அணி El Clasicoவில் தோல்வி கண்டால் அந்த சம்பியன் பட்டம் அர்த்தமற்றதாக கருதப்பட்டது. இப்பொழுதும் இந்த நிலை தான்.

1990 - 2000

இந்த காலத்தில் இரு கழகங்களுமே உலகப்புகழ் பெற்ற வீரர்களை அணியில் வைத்திருந்தன. இதில் இரு கழகங்களிற்கும் இடையில் சற்று வேறுபாடு இருந்தது.

FC Barcelona அணி தனது இளம் வீரர்களை சிறந்த வீரர்களாக வளர்த்தெடுத்து வந்தது. சிறு வயது முதலே 4-4-2 என்ற System படி அவர்களிற்க்கு விளையாட கற்றுக்கொடுத்தது. இன்று வரைக்கும் இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த மாற்றமும் இல்லை. FC Barcelonaவின் புகழிற்க்கு இந்த கொள்கையே காரணம் என்று பலராலும் கருதப்படுகிறது.

இதற்க்கு வித்திட்டுச் சென்றவர் Netherland நாட்டின் உலக புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர் johan cruyff.

ஆனால் Real Madrid அணியோ அப்படியல்ல. அவர்கள் சிறந்த வீரர்களை விலை கொடுதது வாங்கினார்கள். கொஞ்ச நஞ்ச காசல்ல. ஆனால் அவர்கள் அதனால் பல பட்டங்களையும் வென்றார்கள்.

இதை பார்த்து விட்டு மயங்கி விழுந்து விடாதீர்கள். உலகில் அதிவிலையுயர்ந்த வீரர்கள் மாறிய கழகங்கள்.

01. Christiano Ronaldo, 94 Millionen Euro, from Manchester United to Real Madrid

02. Zlatan Ibrahimović, insg. 75 Millionen Euro, from Inter Mailand to FC Barcelona

03. Zinédine Zidane, 74 Millionen Euro, from Juventus Turin to Real Madrid

04. Kaká, 65 Millionen Euro, from AC Mailand to Real Madrid

05. Fernando Torres, 60 Millionen Euro, from FC Liverpool to FC Chelsea

05. Luis Figo, 60 Millionen Euro, from FC Barcelona to Real Madrid

07. Hernán Crespo, 56 Millionen Euro, from FC Parma to Lazio Rom

08. Gianluigi Buffon, 54 Millionen Euro, from FC Parma to Juventus Turin

09. Gaizka Mendieta, 48 Millionen Euro, from FC Valencia to Lazio Rom

10. Andriy Shevchenko, 46 Millionen Euro, from AC Mailand to FC Chelsea

இதில் FC Barcelonaவின் வீரர் Luis Figo Real Madridற்க்கு மாறியது முக்கியத்துவம் பெறுகின்றது.

2000 - 2012

இந்த காலம் Pep Guardiola வின் காலம். Pep Guardiola FC Barcelonவின் பயிற்சியாளராக வர முன்னர் அவ்வணியின் விளையாட்டு வீரராக இருந்தவர்.

பின்னர் இவர் பயிற்சியாளராக உருவெடுத்த காலத்திலிருந்து இன்று வரை FC Barcelonaவின் கை உலக உதைபந்தாட்டத்தில் ஓங்கி நிற்கின்றது.

ஆனால் இதற்க்கு இவரின் திறமை மட்டும் என்று சொல்ல முடியாது. பல வருடங்களாக FC Barcelona தமது இளைய வீரர்களில் செலுத்தி வந்த கவனமே முக்கிய காரணம். Barcelonaவின் பாசறையில் இருந்த வந்தவர்கள் தான் தொடர்ந்து 3 தடவைகள் உலக உதைபந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்ட Lionel Messi.

மற்றும் அவருடன் விளையாடும் Xavi, Iniesta, Puyol, என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் FC Barcelonaவினால் சிறு வயது முதலே செதுக்கப்பட்டவர்கள். இவர்களை விலைகொடுத்து வாங்க இதுவரை எந்த கழகமும் முன்வரவில்லை. காரணம் இவர்களிற்க்கு FC Barcelona கேட்கும் விலை!

இறுதியாக நடந்த 9 El Clasico வில FC Barcelona8 தடவைகள் வென்றுள்ளது.

இது எதிர்காலத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த El Clasicoவிற்க்கு அப்பால் ஒரு சில விடயங்களை பார்ப்போம்.

FC Barcelona தன்னை ஒரு Spain நாட்டு கழகம் என்று ஒரு பொழுதும் அடையாளப்படுத்தியதில்லை. அவர்கள் தங்களை Catalania "நாட்டு" தேசிய அணியாகே பார்க்கிறார்கள். இதற்குள் போனால் அரசியல் விவகாரங்கள் கிண்ட வேண்டி வரும் என்பதால் அதை விடுவோம். தம்மை ஒரு தேசிய அணியாக பார்பதால் FC Barcelona இதுவரை எந்த ஒரு வியாபார ரீதியான விளம்பரத்தையும் அவர்களின் சீருடையில் பதியவில்லை. Unicef, Qatar Foundation போன்ற சமூச சேவையில் உள்ளவர்களை மட்டுமே போட்டுள்ளார்கள். இதுவும் சில வருடங்கள் முன்பே தொடங்கப்பட்டது.

ஆனால் Real Madrid அணி தம்மை Spanians ஆகவே பார்கிறார்கள். சற்று கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் Spain நாட்டு அணி சில வருடங்களிற்கு முன் வரைக்கும் எந்த ஒரு சம்பியன் கிண்ணத்தையும் வென்றதில்லை. Spain தேசிய அணியில் இரு கழக வீரர்கள் விளையாடினாலும் அவர்களிற்குள் போட்டி இருந்து கொண்டே இருந்தது. ஒரு அணியாக உருவெடுக்க முடியவில்லை.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டு Spain சம்பியன் ஆன போது சில Spain வீரர்களை வெற்றிக்கொண்டாட்டத்தில் கவனித்தீர்கள் என்றால் அவர்கள Spain நாட்டு கொடியை கையில் ஏந்திருக்கவில்லை. மாறாக Catalaniaவின் கொடியாக பார்க்கப்படுகின்ற சிவப்பு-மஞ்சள் நிறத்திலான கொடியையே ஏந்தியிருந்தார்கள்.

இந்த நிலைக்கு கொண்டு வந்து ஒரு அணியாக விளையாட வைத்தவர் Luis Aragonés என்று சிலர் கருதுகின்றனர் இவரின் காலத்தில் தான் Spain நாடு முதல் முறை 1964ற்க்கு பின் சம்பியன் ஆனது.

எது எப்படியோ எதிர்வரும் காலங்களில் இந்த இரு கழகங்களும் உலக உதைபந்தாட்டத்தில் எட்டிப்பிடிக்க முடியாத இடத்திற்க்கு சென்று விடும். அதே போல் Spain நாடும் தற்பொழுது மிக திறமையான ஆட்டத்தை ஆடுகின்றது.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி , கருத்து கந்தசாமி.......

இதை வாசிச்சு நிறைய தெரிஞ்சு கிட்டன்....நான் real madrid விளையாடுறது என்ரா கூட அவர்களின் விளையாட்டை ரசித்து பார்ப்பேன்...........நேற்றும் நல்ல ஒரு ஆட்டம் Bacelonaவோடை...........

  • தொடங்கியவர்

நான் FC Barcelona ரசிகன் :D . எனக்கு Zinedine Zidane விளையாடும் போது இருந்த Real Madrid தான் பிடிக்கும்.

இப்ப வும் Jose Mourinho, Ronaldo வந்த பிறகு கண்ணிலயே காட்டேலாது. அது மட்டும் இல்ல. உவர் Ronaldo எங்கட Bipasha Basuவோட எதோ கிசுகிசு வச்சிருந்தவர். அதெப்படி நாங்க இருக்கும் போது இவர் இப்படி எங்கடயளை வச்சிருக்கலாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.