Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு

Featured Replies

¿øÄ ¸ðΨÃ, ¦¾¡¼Õí¸û ........Maruthankerny

என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.:

ஏன் என்னாச்சு தம்பி ஏதாவது பிரச்சினையா....???

  • Replies 186
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலைப்பதிவுகள் பற்றி தெரிந்திருப்பீர்கள். நந்தன் என்பவருடைய வலைப்பதிவில் தமிழக இளைய சமுதாயப்பார்வையில் தமிழீழம் என்ற தலைப்பில் அவர் சில கருத்துக்களை எழுதியுள்ளார். சில விடயங்களை தெளிவாய்ச் சுட்டிக்காட்டினாலும் ஆயுதப்போராட்டம் குறித்தும், அதன் தேவை குறித்தும் மாறுபாடான கருத்துக்களை கொண்டிருக்கின்றார். (இறுதியில் இவை தனது அறியாமையின் கேள்விகள் என்பதனையும் ஏற்றுக்கொள்கிறார்) இந்த அவரது பதிவு தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைய சமுதாயப் பிரஜை தமிழீழம் பற்றி கொண்டிருக்கும் எண்ணங்களை எடுத்து சொல்கிறது. இந்தப் பதிவுக்கு வந்த எதிர்வினைகளையும் இணைக்கின்றேன்..

தமிழக இளைய சமுதாயத்தின் பார்வையில் தமிழீழம்.

"எழுந்திருடா ராஜீவ்காந்திய சுட்டுடாங்களாம்" என என் அம்மா எழுப்பிய ஒரு வெயிற்கால விடியல் தான் எனக்கு இலங்கை தமிழ் பிரச்சனை பற்றிய

முதல் ஞாபகம்.

என்னைப்போல பலர், குறிப்பாய் 1980களிலோ அதற்கு பிறகோ பிறந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், எங்களின் அறியாமை தெரியவரும். இஸ்ரேல் பாலஸ்தீனம் பற்றி அறிந்த அளவுகூட இலங்கை பிரச்சனை குறித்து அறிந்திருக்க மாட்டோம். ஏன்?

1. என்னதான் காரணம் சொன்னாலும் ராஜீவின் கோர கொலை புலிகளின் மிகப்பெரிய அரசியல் தவறு. அந்த கொடூரமும், அது தமிழ் மன்னில்

நடந்ததும் எங்கள் மனதில் அகல முடியாத ஒரு பதிவு.

2. இதையே காரணம் காட்டி, IPKF மூலம் கையை சுட்டுக்கொண்ட இந்திய அரசு இந்த பிரச்சனையை கைக்கழுவியது. இலங்கை செய்திகள்

இருட்டடிப்பு செய்ய பட்டன, அல்லது திரித்து கூறப்பட்டன.

15 வருட மூளைச்சலவை - பயன் இப்போது பார்கிறோம்.

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான், ஆனால் இதன் நீண்ட கால விளைவுகள் மிகவும் கலவரப்படுத்துபவை. இதோ இன்னுமொரு பேச்சு வார்த்தை, JVP எதிர்ப்பு என முடிவில்லாமல் தொடரும் இந்த பிரச்சனை இப்போதைய

தலைவர்களின் கையால் தீர்க்கபடும் என்பதற்கு ஒரு நல்ல நம்பிக்கையில்லை. இந்தியாவோ (அ) உலக நாடுகளின் உதவியோ இல்லாமல் இப்பிரச்சனை தீர்வது மிகவும் கடினம்.

அப்படியிருக்க, முடிவெடுக்க வேண்டிய அடுத்த தலைமுறை Decission Makers அறியாமல் இருப்பது நல்லதா? நாங்கள் பாதிக்க படாதவர்கள்,

உங்களுக்கு உதவ நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளம் மட்டும் போதாது அதுவும் அந்த அடையாளமே இப்போது அழிக்கபட்டு வரும்

இவ்வேளையில். உங்களின் வலி உணர்ந்தால் மட்டுமே எங்களின் சிந்தனை மாறும். எப்படி ?

உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை

தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)

என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் 'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்

அனைவரும் யுத்ததை வெறுக்கிறார்கள். அயுதம் தாங்கி நீங்கள் என்ன தான் உரக்க உண்மை பேசினாலும் ஆயுதத்தின் சத்தம் அதை கேட்கவிடாது. அதற்காக அடிப்பதை வாங்குங்கள் என கூற வில்லை. ஆரம்பிக்காதீர். குறைந்தபட்ச, எதிர் தாக்குதல் மட்டும் போதுமே. அவற்றையும் உலகம்

அறியவிடுங்கள். இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.

யுத்தம் மக்களை புலம் பெயர்த்து விடுகிறது. எல்லாரும் போனபின் யாருக்காக சண்டை? மனிதர்கள் இல்லாத ஈடுகாட்டிற்கு தமிழீழம் என பெயர் வைத்து என்ன லாபம்? ஆய்த போராட்டதை விடுத்து மக்களின் போராட்டமாக இது மாற வேண்டியதை உணரவில்லையா நீங்கள்?

You should now have a two pronged approach. Short term one - to protect yourself incase of military oppression, Long term one to mould international opinion. இரண்டவதால் மட்டுமே தீர்வு ஏற்படும். முதலாவது ஒரு Stop gap மட்டுமே.

இவை என்னுடைய, மற்றும் என் நன்பர்களின் எண்ணங்கள்...Given the fact they are from a varying background, I am convinced that this would be the

general opinion in a large sample size also.

கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு படம் வந்தது...சென்னையில் மிகவும் 'happening' தியேட்டரில் இரண்டுமுறை அதை பார்த்தபோது ஒரு

ஆச்சரியமான விஷயத்தை கவனித்தேன். படம் முடிந்தபின்னும் அந்த பாதிப்பில் நிறைய இளைஞர்கள் சிலையாய் சமைந்திருந்தனர். குறிப்பாய் சில பெண்கள் அழுவதை கூட என் நன்பன் எனக்கு காட்டினான். நம்புங்கள், கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.

நாளை நல்லதாய் இருக்கட்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை

தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)

என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் 'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்//

இது மிகச்சரியான ஆலோசனை என்பதுடனும், அவசியம் செய்யப்படவேண்டியது என்பதுடனும் நான் உடன்படுகிறேன்.

இன்றைய இலங்கை அரசின் வல்லாதிக்க நிலைப்பாட்டையும், இராணுவ நடவடிக்கைகளையும் நீங்கள் படிக்கும் நிலையில் ஆயுதப்போராட்டம் கைவிடப்படக்கூடியதாகவோ, முக்கியமற்றதாகவோ தெரிகிறதா? அப்படி ஆயுதப்போராட்டத்தை கைவிட யாராவது இந்தியத்தரப்பில் இருந்து வலியுறுத்தினால் அதன் நோக்கம் என்ன எனபதை உங்களால் புரிந்துகொள்ளமுடியும் என்று நம்புகிறேன்.

//கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.//

உண்மை.

பதிவுக்கு நன்றி!

-தங்கமணி

//இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.//

எங்கு அடைக்கப்பட்டுள்ளதென்று சொல்ல முடியுமா? நடந்து முடிந்த ஜெனீவாப் பேச்சில்கூட தங்கள் பகுதிக்கு வந்து உண்மையை அறிந்து செல்லுமாறு புலிகள் உலகத்தைக் கேட்டிருக்கின்றனர். வராமலேயே வெளியிலிருந்து எழுதித்தள்ளுவதையிட்டு பலமுறை தமது விசனத்தைத் தெரியப்படுத்தியுள்ளனர்.

//'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். //

இதற்கு மேல் எதை எதிர்பார்க்கிறீர்களென்று தெரியவில்லை.

என்னைப் போன்ற சாதாரணமானவர்கள் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதிகாரபூர்வமாக ஓர் அமைப்பு கருத்து வெளியிடுவதிலுள்ள சிக்கல்கள் தெரியுந்தானே?

மேலும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே பலமுறை வலைப்பதிவுகளில் கேட்கப்பட்ட கேள்விதான் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

"துன்பியல் சம்பவம்" என்றாவது ஒரு தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு துன்பம் விளைவித்தவர்களிடமிருந்து என்ன கருத்து வந்துள்ளது?

புலிகள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று எழுதும் எவனுமே, இந்தியா ஈழத்தில் நடத்திய கொடுமைக்கு என்ன செய்தது என்று கேட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது. அல்லது தாங்கள் அதுமட்டில் என்ன கருத்தை வெளிப்படுத்தினோமென்றாவது சிந்திப்பது நல்லது.

ஓர் ஈழத்தவனாக மீண்டும் சொல்கிறேன்:

இந்தியா மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்காதவரை, ஈழத்தமிழர் தரப்பிலிருந்து எந்த வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கப்படக் கூடாதென்பது எனதும் என் போன்றவர்களதும் அவா.(இங்கே புலியெதிர்பொன்றே நோக்கமாகக் கொண்டதால் ராஜீவுக்காகக் (நீலிக்)கண்ணீர் வடிக்கவும் ஈழத்தவர் சிலர் இருக்கிறார்கள்) புலிகளின் "துன்பியல் சம்பவம்" என்ற கதைகூட சொல்லப்பட்டிருக்கக் கூடாதென்று கருத்துடையவன் நான். அப்படிச் சொன்னதற்கூடாக, புலிகள் இந்தியாவுக்குப் பணிந்து போனதாக விசனப்பட்டவன் நான்.

இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் விளங்குமென்று தெரியவில்லை. ஆனாலும் சொல்ல வேண்டிய இடங்களில் சொல்லிவிடுவது நல்லது.

(இதற்கு மேல் "தனியொரு அவில்தாரின் அரிப்பு" என்று பழம்பஞ்சாங்கம் பாடிக்கொண்டு வரும் கோமாளிகளுக்குப் பதிலளிக்க எண்ணமில்லை.)

*********************************

ஓரளவு புரிந்துணர்வுடனோ, நடுநிலைமையாகவோ எழுதப்பட்டதாகத் தோன்றும் உங்கள் பதிவுமேல் எனது இந்தப் பின்னூட்டம் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் இது உங்களுக்கானது மட்டுமன்று.

பெயருடனேயே எழுதுகிறேன்.

-வசந்தன்.-

//சரியான ஆலொசனை; கேட்பார்களா?//

அந்த ஆலோசனைகள், <<<உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை

தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)

என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்.<<<

என்பதைக் குறிக்கிறதென்றால் சரிதான்.

ஏன் ஆயுதம் கைவிடப்பட முடியாது? ஆயுதம் இல்லாமல் ஏதாவது தீர்வு கிட்டுமா? இறுதித் தீர்வொன்று வந்தாலும் ஆயுதத்தைக் கைவிடுவது சாத்தியமா? என்பவற்றுக்கு இப்பதிவில் ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா பாருங்கள்.

மக்கள் போராட்டமென்பதற்கு என்ன விளக்கத்தைக் கொடுக்கிறீர்கள்?

இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு பிரகடனம் செய்கிறார்கள், ஒன்றல்ல இரண்டல்ல பலதடவைகள். வடக்கு - கிழக்கின் எல்லா பாகங்களிலும் இந்த தமிழ்த்தேசியப் பிரகடனம் நடக்கிறது. பொங்குதமிழ் என்ற பேரில் யுத்தம் நடந்தபோதே இலட்சம் பேர் திரண்டு போராடினார்கள்.

இராணுவ முகாம்களை அகற்று என்பதுட்பட பல கோரிக்கைகள். இவைகளெதுவும் மக்கள் கோரிக்கைகளாக உலகுக்கோ உங்களுக்கோ தெரியவில்லை.

ஏன் கனடாவில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட பொங்குதமிழோ, பெல்ஜியத்தில் பல்லாயிரம் பேர் திரண்டு மேற்கொண்ட தேசியப் பிரகடனமோ கண்ணுக்குத் தெரியவில்லை. (ஆனால் இருபது பேர் நடத்தும் பேரணி மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது.)

***நீங்கள் எதற்காக இந்த எடுத்துக்காட்டைச் சொன்னீர்களோ தெரியாது, கன்னத்தில் முத்தமிட்டாலைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பவனெல்லாம் ஈழத்தமிழரின் பிரச்சினையைப் புரிகிறானென்று கருத முடியாது. அதுவொரு உணர்ச்சிபூர்வமான சினிமா. இதே கதையை வேறெங்காவது நடப்பதாக மணிரத்தினம் எடுத்திருந்தாற்கூட இதே உணர்ச்சியோடு எல்லோரும் அழுதிருப்போம். அல்லது சரியான மொழிபெயர்ப்போடு எந்த மூலையில் போட்டாலும் அம்மக்கள் அழத்தான் போகிறார்கள். இங்கே 'ஈழத்தவர்க்கு இப்படியெல்லாம் நடக்கிறதே' என்று வருத்தப்படுபவர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக, ஒரு படத்தில் கிடைக்கும் அனுதாபத்தை, ஈழப்பிரச்சினையின் அரசியல் அபிலாசை வரை முடிச்சுப் போடுவதுதான் வேதனைக்குரியது. இதைவிட அப்படத்தின் மூலமான பல அனுதாபங்கள், ஈழத்தவரால் சினிமா பார்க்க முடியவில்லை, அவர்களுக்கு மின்சாரமில்லை, பிற இடங்களைப்போல் மகிழ்ச்சியான வாழ்க்கையில்லை என்ற அளவிலானவைதான்.

என்பார்வையில், ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும், பொய்யையும் புரட்டுக்களையும் வைத்தும் எழுதுபவர்களெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டாலைப் பார்த்து அழாதவர்களென்றா நினைக்கிறீர்கள்?

***அறியவும் தெரியவும் நிறையப் பேர் ஆவலாயுள்ளார்களென்று நான் உணர்கிறேன். அதையிட்டு மகிழ்ச்சியுமடைகிறேன். ஆனால் அதற்கு நீங்கள் பாவித்த எடுத்துக்காட்டு சிக்கலானது.

மேலும் இவ்வெடுத்துக்காட்டுக்கூடாக, துன்பங்களையும், பட்ட கொடுமைகளையும் தான் வெளிப்படுத்துங்கள் என்ற ஆலோசனை சொல்வதாக யாரும் நினைத்துவிடலாம்.

அதைவிடுத்து ஆதாரச் சிக்கலை வெளிப்படுத்த வேண்டும்.

ஏன் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது?, அதற்கு முன் என்ன நடந்தது? ஆயுதம் தூக்க முன்னும் சரி, பின்னும்சரி, ஏற்பட்ட தீர்வுகளுக்கு என்ன நடந்தது?

என்பன குறித்து ஏற்கனவே சில புத்தகங்கள் வந்துள்ளன. இவற்றைவிடச் சிறப்பாக யாரும் வலைப்பதிவில் எழுதிவிட முடியாது. அதற்கான தரவுகளோ தகவல்களோ திரட்ட முடியாது.

இப்புத்தகங்களில் சிலவற்றைப்பற்றி பத்ரி, மதி கந்தசாமி வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதாக நினைவு.

இவ் இனச்சிக்கல் இப்போதுதான் தொடங்கப்பட்டதா?

ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து உருவேற்றப்பட்டுக்கொண்டு வரும் தமிழருக்கெதிரான சிங்களக் கருத்தியலை எதிர்கொண்டு யாராவது பேச்சு மூலம் தீர்வு ஏற்படுத்த முடியுமா?

என்ற கேள்விகளில் தற்போதைய நிலையில் எது தீர்வு என்பதற்கான விடையுள்ளது.

யாத்திரீகன், வசந்தன், யாள்ப்பாணத்தவன் நன்றி.

சில விளக்கங்கள்

1. அந்த திரைப்பட உதாரணம் மக்களின் (இளைஞர்களின்) மனதில் இன்னமும் ஈரமும் நெகிழ்தலும் இருக்கு என்பதற்காக. அதுவும் ஒரு ஈழத்தை பற்றிய படம் என்பதால் அதை எழுதினேன். உங்களின் போராட்டத்தை எவ்வகையிலும் கொச்சை படுத்த அல்ல,

2. சில புத்தகங்களை தேடி படித்தேன். சில புத்தகங்களை படிக்க ஆவல் (Saturday Review Sivanayagam) ஆனால் அவை இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் இருந்து வரவைக்க செலவு பிடிக்கிறது. இதுவே ஒரு நல்ல உதாரணம்...நாடி வருபவர்கள் இத்தனை செலவு செய்ய சொன்னால் நமக்கேன் என சென்று விடுவர். அவர்கள் தங்களுக்கு 'கூறப்பட்டவை'விட்டு உங்களிடம் வருவதே மிக பெரியது. அந்த சந்தர்பத்தை இப்படி அறுவடை செய்யாமல் இருப்பது சரியா? உங்களின் உண்மையை உணர நீங்கள் தான் Large scale/easily reachable வழிகளை செய்து தரவேண்டும்.

சில கேள்விகள்

1. 'இதற்கு மேல் என்ன International opinion' என்றே இதுவரை பார்த்த பதிவுகள் சொல்கின்றன. Hard work always pays, if it hasnt paid you havent worked hard enough

2. திறந்து வைத்திருந்தால் ஏன் அவை இன்னும் எழுதப்படவில்லை? சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்று?

3. டில்லியின் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்காக அவையில் மன்னிப்பு கேட்டது எங்கள் அரசு. தவறு என உணர்ந்தபின் அவன் கேட்கட்டும் நான் கேட்கிறேன் என்பது என்ன ஞாயம்? அதுவும் தேவை உங்களுக்கு என்றபோது.

4. ஆயுத போராட்டம் தேவையில்லை என கூற இந்தியர்களை தவிர உரிமை உள்ளவர்கள் யார்? எங்களின் வரலாற்றை அறிந்தவர் தானே நீங்க்ள்?

By: நந்தன்

//ஆயுத போராட்டம் தேவையில்லை என கூற இந்தியர்களை தவிர உரிமை உள்ளவர்கள் யார்? எங்களின் வரலாற்றை அறிந்தவர் தானே நீங்க்ள்?

//

'உரிமை' என்பதற்குப் பதிலாக 'அருகதை' என்ற சொல்லைப் பாவித்திருக்க வேண்டுமோ?

மிகக்கொடூரமான நகைச்சுவை இதுதான்.

அப்போ தொடக்க காலத்தில் இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்தது, ஆயுதப்பயிற்சிகள் கொடுத்தது, சண்டைக்கு உதவி செய்ததெல்லாம் இந்தியா இல்லையோ? அல்லது அதெல்லாம் அகிம்சை வழியென்று நினைத்துக்கொண்டுதானா அவ்வளவும் செய்தது? எட. இந்தியா உதவி செய்திருக்காட்டி உவங்கள் நாலைஞ்சு துவக்கை வைச்சுச் சுட்டுப்போட்டு ஏலாம கடசியில அகிம்சைக்கு வந்திருப்பாங்கள் எண்டு சும்மா ஒரு வாதத்துக்காவது சொல்லியிருக்கலாம். இப்போது ஆயுதப்போராட்டமின்றி தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கலாமென்று சொல்வதற்கு இந்தியாவைவிட்டால் யாருக்கு உரிமையிருக்கிறதென்று சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை. இதையெல்லாம் நகைச்சுவையாக நினைத்துச் சிரிக்க முடியவில்லை.

ஏனென்றால் பலரும் அச்சொல்லைப் பாவித்திருக்கிறார்கள்.

ஆனால் இக்கேள்விக்குள்ளால் என்ன சொல்ல வருகிறீர்களென்று தெரியவில்லை.

ஏன் உங்களளவுக்குக்கூட எதுவும் செய்யாமல் சிறுதுரும்பைக் கூடப் பொறுக்கிப்போடாமலேயே சும்மா இருந்து காலாட்டக் கிடைத்ததுதான் சிறிலங்காவுக்கான வெள்ளையனின் சுதந்திரம்.

ஆக தமிழரும் காலாட்டிக்கொண்டிருந்தால் எல்லாம் கிடைக்குமென்று சிங்களவன் சொல்லாவிட்டாலும் நீங்கள் சொல்வீர்கள் போலுள்ளது.

முதலில் இந்திய சுதந்திரப்போராட்டத்தையும் ஈழப்போராட்டத்தையும் எப்படி ஒப்பிடுகிறீர்களென்று தெரியவில்லை. மிகமிகச் சிறுபான்மையெதிரிக்கு எதிரான மிகமிகப்பெரும்பான்மை சுதேசிகளின் போராட்டம் தான் இந்தியப்போராட்டம். அதைவிட எங்கோ தூரதேசத்திலிருந்து வந்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்த பிற அரசுக்கெதிரான போராட்டம். ஆக்கிரமிப்பென்பது வெளிப்படை.

இவற்றில் எதை ஈழப்போராட்டத்தோடு ஒப்பிட முடியும்?

இந்தியாவுக்கான சுதந்திரம் முழுக்க முழுக்க அகிம்சையாற் கிடைத்தது என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட மோசமான நகைச்சுவை, அதை ஈழப்போராட்டத்துக்குப் பரிந்துரைப்பது.

வெள்ளையனுக்கும் இந்தியாவுக்குமான பகை என்ன? எவ்வளவு காலம்?

ஆனால் ஈழத்தமிழனுக்கும் சிங்களவனுக்குமான பிரச்சினை எவ்வளவு காலமென்று தெரியுமா?

ஈராயிரமாண்டு காலப் பிரச்சினை. அந்த ஈராயிரமாண்டுகாலம் தமிழருக்கெதிரான துவேசத்தை ஊட்டிஊட்டி வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள இனத்துக்கும் அதன் பேரினவாதச் சித்தாந்தத்துக்குமெதிரான போராட்டம் தான் ஈழப்போராட்டம். (இது பற்றி இன்னும் விளக்க, தமது வரலாற்று நூலாக இன்றுவரை சிங்களவராற் சொல்லப்படும் மகாவம்சக்கதை கொண்டு எழுத வேண்டும். முடிந்தால் இச்சுட்டியில் ஏதாவது கிடைக்கிறதா பாருங்கள்.) இவற்றில் எந்த ஓர் இளையிலும் நெருங்க முடியாத இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் ஓர் உபாயமான அகிம்சையை ஈழத்துக்குப் பரிந்துரைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்?

சரி. ஈழத்தில் அகிம்சையே பயன்படுத்தப்படவில்லையா?

ஆயுதம் ஏந்த முதல் என்ன நடந்தது?

வெள்ளையன் நாட்டைவிட்டுப்போக முன்பேயே போராட்டம் தொடங்கிவிட்டது. அன்றிலிருந்து ஆயுதமேந்தும் வரை, (ஆயுதமேந்திய பின்னும்கூட) அகிம்சைதான் போராட்ட வழி. இடையிலே எத்தனை இனப்படுகொலைகள்? எத்தனை ஆயிரம் பேரைக் காவு கொடுத்தோம்?

இடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் சிறிது நாட்களிலேயே கிழித்தெறியப்பட்டன. யார் கேட்டது?

இன்று 'சட்ட முராணானது, தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் ஒப்பந்தத்தை முறிக்கவோ கிழித்தெறியவோ எந்தச் சிங்களவனுக்கும் துணிவில்லையென்றால் என்ன காரணம்?

ஏன் இந்தியாவுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதிருந்து அகிம்சையிற் போராடிய இரு உயிர்களை இழந்தோமே?

என்ன தீர்வு?

அவர்கள் கேட்டதில் எந்தக் கோரிக்கையாவது நியாயத்துக்குப் புறம்பானதாயிருந்ததா? இதையெல்லாம் பார்த்த ஒருவனிடம் நீங்கள் "இந்தியாவின் அகிம்சையை"ப் போதிக்கலாமா?

இப்போது உங்கள் கேள்வியையே திருப்பிக் கேட்கிறேன்.

அகிம்சை பற்றி ஈழத்தமிழனுக்குப் போதிக்க இந்தியாவுக்கு என்ன அருகதை இருக்கிறது?

விடை தெரிந்தாற் சொல்லுங்கள்.

(கேள்வி கடுமையானதென்றாலும் உங்களின் அறிவுரைக்கு இப்படிக் கேட்பது சரியே)

*******

புத்தகங்கள் பற்றிய உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டேன். இது தொடர்பில் தனிப்பட்டு நான் செய்ய ஏதுமில்லை. இப்புத்தகங்களுக்குச் சட்ட ரீதியாக இந்தியாவில் என்ன சிக்கலென்று தெரியவில்லை. இல்லாத பட்சத்தில் புத்தகவெளியீட்டாளர்கள் இதுபற்றிக் கவனத்திலெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இப்புத்தகங்கள் இப்புத்தகங்கள் மட்டில் சிக்கல்கள் இருக்க நியாயமில்லையே?

********

////தவறு என உணர்ந்தபின் அவன் கேட்கட்டும் நான் கேட்கிறேன் என்பது என்ன ஞாயம்? அதுவும் தேவை உங்களுக்கு என்றபோது.////

தவறு என்று நீங்களல்லவா சொன்னீர்கள்? இப்போது என் தலையில் தூக்கிப் போடுகிறீர்களே?

"அதுவும் தேவை உங்களுக்கு என்ற போது" என்ற இடத்தில்தான் இந்திய மேலாதிக்கம் வெளிப்படுகிறது. ஆக, தவறென்று இந்தியா உணர்ந்தாலும் வருத்தமோ மன்னிப்போ கேட்கப்போவதில்லை. யாருக்குத் தேவையிருக்கிறதோ அவர் எசமானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படித்தானே? இதில் நியாயம், நேர்மை எல்லாம் எங்கே வந்தது?

-வசந்தன்.-

//திறந்து வைத்திருந்தால் ஏன் அவை இன்னும் எழுதப்படவில்லை? //

-வசந்தன்.-

ஏன் போகவில்லை. போவதை யார் தடுக்கிறார்கள்?

இந்தியப் பத்திரிகைகள் கூட வன்னி சென்று வந்து கட்டுரைகள் எழுதியுள்ளனவே. பிபிசி, சி.என்.என், றொய்டர் என்ற பன்னாட்டுச் செய்தித் தாபனங்களும் போய்வந்து எழுதியுள்ளனவே? நீங்கள் வாசிக்கவில்லை போலுள்ளது. புலிகளின் வங்கி பற்றி, காவல்துறை பற்றி, நிர்வாக சேவை பற்றி, திரைப்படத்துறை பற்றி, சட்டப்பிரிவு - நீதிமன்றங்கள் பற்றி என பலவாறாகப் புகழ்ந்தும் நிறையக் கட்டுரைகள் வந்துள்ளன. தமிழீழக் காவல்துறை, திரைப்படத்துறையைப் பற்றி பி.பி.சி சிறப்பு நிழ்ச்சியே செய்தது. அதைவிட சுனாமி மீட்புப் பணிகள் பற்றி நிறைய பன்னாட்டு ஊடகங்கள் புகழ்ந்து எழுதியுள்ளனவே. அதுவும் நேரடியாக பாதிக்கப்பட்ட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து.

புலிகள் தங்கள் பகுதிக்கு வரச்சொல்லிப் பலகாலமாகவே பகிரங்க அழைப்பு விட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள்?

யுத்த நேரத்தில் 1999 இல் ஐரோப்பியப் பெண் பத்திரிகையாளரொருவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர முயற்சித்து அரச தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டது. பின் அப்பெண்மணி களவாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சில நாட்களில் மீண்டும் தெற்கு நோக்கிச் செல்கிறார். அப்போது இராணுவத்தினர் அப்பெண் மீது பதுங்கித்தாக்குத்லொன்றை மேற்கொண்டார்கள். கொல்லும் நோக்கோடு தாக்குதல் மேற்கொண்டாலும் அப்பெண்மணி காயத்தோடு தப்பிக் கொள்கிறார். பின் அனுராதபுரம் வைத்தியசாலையில் தனக்கு நடந்தவையுட்பட பல தகவல்களை அப்பெண்மணி வெளயிட்டார்.

புலிகளின் பகுதிக்குச் செல்பவர்களைத் தடுப்பதும், அவர்களை இல்லாத பொல்லாதவற்றைச் சொல்லி வெருட்டுவதும் அரசதரப்பாற் செய்யப்படும் வேலைகள்.

வசந்தன் என்னுடையவை முழு அறியமையால் வரும் கேள்விகள், அறிந்துக்கொள்ளும் ஆவலுடன் கேட்க படுபவை. சிறு குழந்தைகளின் கேள்விகள் போன்றதே. அதை மதித்து பதிலளித்தமைக்கு நன்றி. மற்றபடி உங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

1. Saturday review Sivanayagamத்தின் புத்தகம் இங்கே எங்கு கிடைகிறது?

2. இவற்றை தவிர மேலும் தகவல் அறிய என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? Honest opinions please, சில பதிவுகள் பிரச்சார பீரங்கியாய் உள்ளன. சார்புதன்மை கூடாது என கூறவில்லை தனி மனித வழிபாடுகளாய் இருந்தால், எனக்கு கொஞ்சம் நம்பிக்கையின்மை வந்துவிடும்

3. "மன்னிப்பு கேட்க கூச்ச படாதீர்கள், அதுவும் தேவை இருக்கும் போது கொஞ்சம் கூட" இதில் எந்த Big Brother approach'ம் இல்லை. என் வாழ்வில் நான் உணர்ந்து தெளிந்த பாடம். உங்கள் பதிலை படித்தப்பின் தான் இப்படியும் ஒரு அர்த்தம் இருப்பது தெரிந்தது.

4. ஈழத்தின் ஆரம்ப கால அஹிம்சை போரட்டங்களை பற்றி சிறிது படித்துள்ளேன், ஆனாலும் அவை ஆயுதப்போரட்டங்களால் over-shadow செய்யப்பட்டுவிட்டனவே.

5. "அருகதை", சரியான சமயத்தில் வார்த்தை கிடைக்கவில்லை :lol:

6. இந்திய சுதந்திர போராட்டமும், உங்களுடையதும் ஒப்பிடவில்லை, அஹிம்சை உன்மையாகவே நல்ல ஆயுதம். ஆரம்பகாலங்களில் எப்படியோ இப்போழுது உங்களுக்கென ஒரு following, உலக அளவில் ஒரு முகவரி/பரிச்சயம்/அங்கிகாரம் (வார்ததை கிடைக்கவில்லை) வந்த பிறகு கூட ஏன் அயுத போரட்டம்?

7. போகிறார்களா? சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்றே அப்படி ஒரு மீடியா அட்டேன்ஷன் என் இல்லை? அதைக்கொண்டு வர என்ன முயற்சிகள் செய்யபடுகின்றன?

9. எல்லாரும் போற்றி எழுதுகிறார்கள், சீரான அரசு அங்கு இயங்குகிறது என்றால் இன்னும் ஏன் புலம் பெயர்ப்பு? மக்கள் திரும்புகிறார்களா? வெளியில் கிடைக்கும் வசதிகளும் வாய்புகளும் கிடைக்காது தான்...ஆனாலும் பரவாயில்லை என பொகிறார்களா? ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்.

8. என்னுடைய இந்த பதிவின் மூலம் நீங்கள் கண்டிப்பாய் எங்கள் அறியாமையை அறிந்திருப்பீர். உன்மையை சொல்லவேண்டும் என்றால் நான் தான் என் நன்பர்கள் வட்டத்தில் இதைப்பற்றி ஒரு அளவு அறிந்தவன்...நானே இப்படி எனில்...நீங்கள் செய்யவேண்டியது எவ்வளவு என தெரிந்திருக்கும். அதுவே இப்பதிவின் நோக்கம்.

9. உங்களுக்கு நாங்கள் எப்படி உதவமுடியும்? *****ஆயுத போராட்டத்தை தவிர****

10. கடைசியாய் ஒரு கேள்வி - புலம் பெயர்ந்த இரண்டாவது, மூன்றாவாது தலைமுறையினரின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன? Are they alienated from your cause?

வந்தமைக்கு நன்றி

By: நந்தன்

http://mkannadi.blogspot.com/2006/02/blog-post.html

  • தொடங்கியவர்

காவடி,

நல்ல விஷயத்துக்கு முயற்சி செய்கிறீர்கள்.... பாராட்டுகள்... உங்கள் முயற்சியைக் குலைக்க இங்கே ஒரு தற்கொலைப் படையே இயங்குகிறது.... அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களை ஏன் தற்கொலைப்படை என்று கூறுகிறீர்கள் லக்கிலுக். நீங்கள் எப்படி இந்தியதேசியத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ அதே போல அவர்கள் தமிழ்த்தேசியத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் கருத்துக்கள் அவ்வாறு அமைகின்றன. நீங்களும் அதே தளத்தில் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் நம்பும் சில விடயங்களை அவர்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றனர்.

அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாதிராஜா எழுதியது------------------------------------------------------------------

பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாதுஇ இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான்.

தமிழ் நாடு எமக்கு செய்த உதவிகளை நாம் ஒரு போதும் மறக்க தயாரில்லை.

ஆனாலும்....... 1991 இலண்டாவது ஈழபோரில் ஈழமே எரிந்துகொண்டிருக்கையில் உலகநாடுகளேல்லாம் ஈழ தமிழருக்கு தஞ்சம் கொடுக்கையில். முதல்வர் ஜெயலலிதா காங்கிரசிற்கு விசுவாசம் காட்ட 600 ஈழ அகதிகளை திருகோணமலையில் வைத்து இராணுவத்தமிடம் ஒப்படைத்ததை நீங்கள் மற்நிருக்கலாம். பல உறவுகளை இpந்த எங்களால் முடியில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxx

********

இந்தியா ஏன் இந்த சோத்துப் பார்சல் போட்ட பம்மாத்துச் செய்ததென்று கூடத்தெரியாமல் இங்க வந்து தேவையில்லாமல் புலம்புகிறார் சுகுமார் மாமா. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அந்த நேரத்தில் 500,000 க்குக் கூடிய மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்தியா போட்டது ஒரு சில சோத்துப் பார்சல்கள். ஓரு சோத்துப் பார்சலிலும் சாம்பாரிலும் ஒன்பது பேர் கையை நனைத்து விட்டு "தூங்கப்போவது" இந்தியாவில் வழக்கமாக இருக்கலாம், இலங்கையில் அப்படி நிலைமை இருந்ததில்லை. இன்றும் இலங்கையை விட இந்தியாவில் தான் பலபேர் வெறும் வயிற்றுடன் "தூங்கப்" போகிறார்கள்.

இந்தியா பார்சல் போட்டது 500,000 இலங்கைத் தமிழர்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதற்காக அல்ல, இந்தியா விரும்பினால், இலங்கை அரசு இந்தியாவின் விருப்பத்துக்கிணங்கி, ஒத்து நடக்காது விட்டால் இலங்கைக்குச் சொந்தமான இலங்கையின் வான் பிரதேசத்துக்குள், இலங்கையின் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழையவும் இந்தியா தயங்காது என்பதை இலங்கை அரசுக்குக் காட்டுவதற்காகவே தவிர, இலங்கைத் தமிழரின் பசிக்குச் சோறு கொடுப்பதற்காக அல்ல. இலங்கையின் வரலாற்றில் பட்டினியாலோ அல்லது வரட்சியாலோ இலங்கை மக்கள், சிங்களவர்களோ, தமிழர்களோ யாரும் இறந்ததில்லை. எங்களுடைய நாடு வளமானது.

சுகுமார் போன்ற பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களை கொஞ்சம் கூட விவரம் தெரியாமல் ஏளனம் செய்பவர்களையும் தொடர்ந்து பதிவுகளைச் செய்ய யாழ்களம் ஏன் அனுமதிக்கிறதென்பது அந்த "ஈழபதீஸ்வரனுக்குத்" தான் வெளிச்சம்

இது இந்திய துணைக்கண்ட வல்லாதிக்கமாம். வல்லரசு என்றால் இப்படித்தான் இருக்குமாம். :P :P

****

ஆருரண்ணா 55000 அகதிங்கள அனுப்பிட்டு ஒங்க நாடுபற்றி நல்லாத்தான் எழுதுறீங்க.. ஒங்க நாட்டை கீழ்தரத்துக்கு கொண்டுவர என்ன செய்யேலுமோ அத்தனையும் சொஞ்சுண்டு யாருக்கண்ணா கதை விடுறீங்க.. :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஆருரண்ணா 55000 அகதிங்கள அனுப்பிட்டு ஒங்க நாடுபற்றி நல்லாத்தான் எழுதுறீங்க.. ஒங்க நாட்டை கீழ்தரத்துக்கு கொண்டுவர என்ன செய்யேலுமோ அத்தனையும் சொஞ்சுண்டு யாருக்கண்ணா கதை விடுறீங்க.. :roll:

சரி

அவர்கள் வேண்டாம் எண்டால் திருப்பி அனுப்புங்கோவன்.

ஏனென்றால் ஜனநாயக முகமூடி போட்டுக் கொண்டு நடிக்க இயலாட்டில்!!!

எவ்வளவு காலத்துக்கு ஏமாத்தேலும்!!

ஜனநாயக முகமூடியா ஈழத்தமிழன் முகமூடியா.? :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக முகமூடியா ஈழத்தமிழன் முகமூடியா.? :roll: :roll: :roll:

எந்த முகமூடி போட்டாலும் கனாலம் தாக்குப்பிடிக்காது தானே!! எத்தனை காலத்துக்கு ஏமாத்தேலும்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.