Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவுக்கு எதிரான ஐநா தீர்மானம்

Featured Replies

சிரியாவுக்கு எதிரான ஐநா தீர்மானம்: ரஷ்யா?

மேற்குலகின் ஆதரவுடன் சிரியாவுக்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் உள்நாட்டு யுத்தமொன்றுக்கு வழிவகுக்ககூடும் என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸ்ஸத் ஆட்சிப் பொறுப்பை துணைப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்ற அந்த தீர்மானம், அங்கு வெளிநாட்டு தலையீடு இருப்பதற்கான வாய்ப்பையே காட்டுகின்றது என ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் கென்னடி கட்டிலோவ் தெரிவித்தார்.

சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துள்ள அரபு லீக், அந்நாட்டுக்கு எதிராக மேலும் தடை நடவடிக்கைகளை அறிவிப்பது பற்றி எச்சரித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

சிரியாவின் நெருங்கிய கூட்டாளி நாடுகளில் ஒன்றான ரஷ்யா, இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வீட்டோ மறுப்பாணை அதிகாரத்தை பிரயோகிக்காது வாக்களிப்பின் போது ஒதுங்கி நிற்கும் என்றும் மேற்குலகம் எதிர்பார்க்கிறது.

இதற்கிடையே, டமஸ்கஸ்ஸை அண்டிய பகுதிகளில் எதிரணி கிளர்ச்சியாளர்களின் எதிர்ப்பை முறியடித்துவிட்டதாக சிரிய நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தாம் தந்திரோபாயமாக பின்வாங்கியிருப்பதாக எதிரணி ஆயுததாரிகள் கூறுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2012/01/120131_siriarussia.shtml

  • தொடங்கியவர்

ரஸ்யாவின் வீட்டோ பாதுகாப்பு சபையில் விழப்போகிறது

February 3, 2012

veto-sri.jpg

நேற்று இரவு தொடங்கி இன்று வெள்ளி அதிகாலையும் ஐ.நாவின் பாதுகாப்பு சபை சிரியாவுக்கு எதிரான பிரேரணை குறித்து பலத்த விவாதங்களை நடாத்தியபடி உள்ளது.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி ஐ.நா பாதுகாப்பு சபை அரபுலீக் வழங்கிய ஆலோசனைகளை முழுமையாக ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளது. கலவரங்களை அடக்கும் வல்லமையை சிரிய அதிபர் பஸார் அல் ஆஸாட் இழந்துள்ளார். ஆகவே அவர் தனது அதிகாரங்கள் அனைத்தையும் உப அதிபரிடம் வழங்கி பதவியை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பது அரபுலீக் வைத்துள்ள இறுதி ஆலோசனையாகும். இதை ரஸ்யா விரும்பவில்லை, ஆஸாட்டிற்கு அது ஆதரவாக உள்ளது.

எனவே சிரியாவிற்கு எதராக பாதுகாப்பு சபையில் வரவுள்ள தீர்மானத்தை எதிர்த்து ரஸ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்று மேலை நாடுகளின் இராஜதந்திரிகள் சற்று முன்னர் முன்னெதிர்வு கூறியுள்ளார்கள். நாட்டை நிர்வகிக்க முடியாத இறுதிக்கட்டத்திற்கு ஆஸாட் வந்துள்ளதாக அமெரிக்க உளவுப்பிரிவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தெருவுக்கு தெரு ஆயுதம் ஏந்திய குழுக்களின் அட்டகாசம் பரவிவிட்டது. அந்த நாட்டின் சிவில் சமுதாயத்தை பழையபடி இயங்கு நிலைக்கு கொண்டுவருவது தற்போதைக்கு சாத்தியப்படும் என்று கூற முடியாதளவுக்கு நிலமைகள் கை மீறிப் போய்விட்டன.

இலங்கை இனப் பிரச்சனை விவகாரத்தில் மகிந்த ராஜபக்ஷவின் நிலையும் இதுபோல இக்கட்டான இடத்திலேயே தற்போது இருப்பது கவனிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=95729

சிங்களப் பயங்கரவாதிகளுக்கு துணை நின்ற ரஷ்யாவின் வீட்டோ செல்லா காசாகி விட்டது.

  • தொடங்கியவர்

ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சீனாவும், உருசியாவும் வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரித்தன.

Russia and China veto resolution on Syria at UN

An Arab and Western-backed resolution condemning the violent crackdown in Syria has been vetoed at the UN Security Council by Russia and China.

The two permanent council members rejected the draft resolution, which came hours after activists accused Syrian security forces of killing at least 55 people at Homs.

The US ambassador said the vetoes were "shameful", Britain was "appalled".

China and Russia defended their move, saying the draft was "unbalanced".

http://www.bbc.co.uk.../world-16890107

Edited by akootha

  • தொடங்கியவர்

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சிரியாவுக்குப் பயணம் செய்துள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கே லவ்றோவ் (Sergei Lavrov), சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்துடன் (Bashar al-Assad) பேச்சு நடத்துவதற்காக சிரியா சென்றார்.

தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்த அவருக்கு, அசாத்தின் ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்பளித்தார்கள்.

சிரியா குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றை ரஷ்யாவும், சீனாவும் வெட்டு வாக்கைப் பயன்படுத்தி நிராகரித்த பின்னர், அவரது பயணம் இடம்பெறுகிறது.

இதேவேளை, சிரியாவின் ஹொம்ஸ் நகரின் மீது இன்று மீண்டும் சிரியப் படைகள் கடுமையான ஆட்டிலறி தாக்குதலை நடத்துவதாக அங்குள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்.

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இடம்பெற்ற வன்முறைகளில் 95 பேர் உயிரிழந்தார்களென அறிவிக்கப்படுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11019

  • தொடங்கியவர்

சிரியாவில் இருந்த பிரான்ஸ் இத்தாலி தூதரகங்கள் மூடப்பட்டன

அமெரிக்கா, தமது சிரியாவில் உள்ள தனது தூதரகங்களை மூடுவதாக நேற்று அறிவித்த பின்னர் இன்று அதைவிட வேகமான அதிரடியாக இத்தாலி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் தமது சிரிய நாட்டு தூதரகங்களை மூடுவதாக அறிவித்துள்ளன. உலகத்தின் பாரிய வல்லரசுகளுடன் உறவை முறித்துக் கொண்டு இரண்டு கம்யூனிச நாடுகளை நம்பி வண்டியோட்ட வேண்டிய அவல நிலைக்கு சிரியா தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை 17 நாடுகள் தமது சிரிய தூதரகங்களை மூடி அங்கு நடைபெறும் மானிட படுகொலைகளுக்கான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பிரிட்டனும் தமது தூதராலய அதிகாரியை உடனடியாக பிரிட்டன் அழைத்து பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. பகரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ், துனீசியா என்பன தூதுவர்களை திருப்பி அழைத்த முக்கிய நாடுகளாகும். அதேபோல தமது நாடுகளில் உள்ள சிரிய தூதராலயங்களையும் உடனடியாக மூடிவிட்டு வெளியேறும்படி கேட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மிகவும் நொந்து நூலாகியிருப்பது ரஸ்யாதான். கடந்த 1969ம் ஆண்டில் இருந்து சிரியாவுடனான உறவுகளை ரஸ்யா பெரியளவில் பேணி வருகிறது. மத்திய கிழக்கில் சிரியாவில் மட்டும்தான் ரஸ்யாவின் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சர்வாதிகாரி அஸாட் பதவி விலகினால் ரஸ்யாவின் இறுதி ஒரு தளமும் பறிபோய்விடும். ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் சார்ஜி லேரேவ் தற்போது டமாஸ்கஸ்சில் நிற்கிறார். அதேபோல அரபு லீக் கண்காணிப்பாளரும் நிற்கிறார்கள் ஆனால் பொது மக்கள் மீதான ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றவண்ணமுள்ளன. ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் பேசி முடிப்பதற்கான காலம் கடந்துவிட்டது, ஆஸாட் றெஜீம் கூண்டோடு பதவி விலக வேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் அங்கிருப்பதாக தெரியவில்லை. சற்று முன்னர் பத்திரிகையாளரிடையே பேசிய ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி லாரோவ் கூறும்போது சிரிய தலைவர் தமது படைகளின் தாக்குதல்களை நிறுத்த உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அடிப்படை சட்டங்களை மாற்றும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் அவர் உடன்பட்டுள்ளதாகவும் விரைவில் இது நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=96165

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவின் அதிபர் நாட்டைவிட்டுத் தப்பியோடுவாரா? அல்லது

மெற்குலகின் தாக்குதல்களுக்கு முகம் கொடுப்பாரா?

கடாபியின் நிலையா அல்லது முபாரக்கின் நிலையா?

அசாத் குழம்பிய நிலையில் இருக்கின்றாரா?

பல கேள்விகளுக்கு சில வாரங்களில் விடை கிடைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.