Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அமெரிக்காவின் தீர்மானம் அநீதியானது! - மகிந்த சமரசிங்க'

Featured Replies

'அமெரிக்காவின் தீர்மானம் அநீதியானது! பரிந்துரைகளை அமுல்படுத்த அவகாசம் தேவை!! - மகிந்த சமரசிங்க'

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்கா, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளது.

'சிறிலங்கா அரசாங்கமானது அனைத்து விடயங்களையும் நேர்மையுடனும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலுமே செய்து வருகின்றது. அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையையும் பேணி வருகின்றோம். உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை' என சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது:

' உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டதும் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பகிரங்கமாக்கினோம். அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தோம்.

அத்துடன் சுதந்திர தினத்தன்று நிகழ்த்திய உரையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தவிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அறிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரு மாதங்கள்தான் சென்றுள்ளது. அதற்குள் நாம் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவது தொடர்பான நடைமுறைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் இப்போது தயாரித்து வருகின்றது. இவ்வாறு நல்லெண்ணத்துடன் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் சர்வதேச மட்டத்தில் எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவையாகவுள்ள நிலையில் எமக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவது அநீதியானதாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது எமது பொறுப்பு என்றே நாம் கூறுகின்றோம். அதனை நாம் செய்து முடிப்போம். இதற்கு சர்வதேசத் தலையீடுகள் அவசியமற்றவை என்பது தான் எமது நிலைப்பாடாகும்' என சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என நேற்று முன்தினம் கொழும்பில் வைத்து தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் குற்றம் சுமத்தியிருந்தார்.

'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உள்ளுர் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும், அதனை ஏற்படுத்துவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்' ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவிததிருந்தார்.

அத்துடன், போருக்கு பின்னர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்காவுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரும் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதவுரிமைகள் தொடர்பான இரண்டாம் நிலைச் செயலாளர் மரியா ஒட்டேரோ நேற்று முன்தினம் வெளிப்படுத்தியிருந்தார்.

இத்தகையதொரு நிலையிலேயே சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவையாகவுள்ள நிலையில், எமக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவது அநீதியானதாகும் எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=13dc16b2-5c07-4425-a8a2-c46df523ea4d

  • தொடங்கியவர்

நல்லிணக்க ஆணைக்குழு அபிப்பிராயங்கள் தொடர்பாக விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தெரிவித்த அபிப்பிராயங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு இராணுவத் தளபதியினால் இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்படவுள்ளதாக அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36038-2012-02-15-10-20-44.html

  • தொடங்கியவர்

Sunila Abeyasekera: No clarity on what is on offer for the Tamil minority

Sunila Abeyasekera, the well-known human rights activist discusses with Newsclick the situation in Sri Lanka after the defeat of the Tamil Tigers. She discusses that for a lasting peace in Sri Lanka, the rights of the minorities -- human rights, linguistic rights, cultural rights -- need to be guaranteed and protected. This is far from the case right now with atrocities, disappearances and other violations still continuing.

  • தொடங்கியவர்

நல்லிணக்க ஆணைக்குழு அபிப்பிராயங்கள் தொடர்பாக விசாரிக்க இராணுவ நீதிமன்றம்

Sri Lanka agrees to probe war crimes ahead of UN meet

Sri Lanka’s army said Wednesday it agreed for the first time to probe war crime charges against its troops and investigate allegations of prisoner executions made in a British TV documentary.

Army chief Jagath Jayasuriya appointed a court of inquiry to investigate charges that troops were responsible for killing civilians and prisoners in the final stages of their war against Tamil rebels in 2009, an army statement said.

The dramatic U-turn from the security establishment came two days after the US warned that the Indian Ocean island would face censure at next month’s UN Human Rights Council meeting in Geneva.

http://tribune.com.p...ead-of-un-meet/

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தமிழனுக்கு எதிராகச் செய்தது நியாயமானதா? இலங்கைப்பிரஜைகள் ஆன தமிழரின் உரிமை உடமை மறுக்கும் நீங்களா அநீதி பற்றி பேசுகின்றீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.