Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடில்லியில் ஒடேரோ

Featured Replies

புதுடில்லியில் ஒடேரோ ஜெனீவா அமர்வின் போது வாஷிங்கடனின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் சாத்தியம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் மரியா ஒடேரோ தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு சென்றுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி முதல் இலங்கையில் தங்கியிருந்த ஒடேரோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தி மதிப்பீடுகளை மேற்கொண்டதன் பின்னரே அடுத்த கட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக்குடனேயே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த மரியா ஒடேரோ, இதன்போது ஆட்கடத்தல், சமாதானம், பதிலளிக்கும் கடப்பாடு, நல்லிணக்க நடவடிக்கைகள், கல்வி மற்றும் இளைஞர் நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தார்.

எனினும், இவர்கள் இருவரும் தங்களது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றும், ஆதலால் ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் கூட்டாக அறிவித்திருந்தனர்.

எனினும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா செல்வாக்கு செலுத்தக்கூடிய கருவியாக இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவான முன்னெடுப்புகளை மேற்கொண்டால் அதன் மூலம் இலங்கை தனக்குச் சாதகமான நிலைமைகளை அங்கு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலைமையிலேயே அமெரிக்க சிரேஷ்ட இராஜதந்திரியான மரியா ஒட்டேரோ இலங்கை வந்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்டமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இது மரியா ஒடேரோவின் தெற்காசிய விஜயம் என்று கூறினாலும் அவர் புதுடில்லியில் இலங்கை நிலைவரம் பற்றி கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு இந்தியாவில் தங்கியிருக்கும் மரியா ஒட்டேரோ அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்திக்கிறார். இதன்போது இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்கா சார்பான தமது மதிப்பீடுகளையும் அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா எடுக்கப்போகும் நிலைப்பாடு, அதற்கான அடிப்படைக் காரணங்கள் போன்ற விடயங்கள் பற்றியும் அவர் இந்தியாவுக்கு எடுத்துரைத்து விளக்கமளிப்பார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

http://www.thinakkural.com/news/all-news/india/10162-2012-02-14-23-52-19.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவின் கால் தடங்கள் தன்னிச்சையாக இலங்கையில் பதிவதை இந்திh விரும்பாது. அமெரிக்காவும் அந்தியாவின் அனுசரணை இல்லாமல் இரங்கையில் காலடி வைக்காது. இலங்கைக்கு எதிரான சதி முயற்சி எப்போதும் இந்தியா - அமெரிக்கா கூட்டு முயற்சியாகவே இருக்கும். மற்றைய மேற்குலகங்கள் அமெரிக்காவிற்கு பின்னே தான் அணதிரளும். இதில் தமிழரின் அனுசரணை அமெரிக்காவுடனே தான் இருக்கவேண்டும். எல்லாமே இலங்கையைச்சீனாவில் இருந்து அப்புறப்படுத்துவதே. தமிழருக்கான தீர்வு என்பது எத்தனையாவது வரியில் இவர்கள் எழுதி வைத்துள்ளார்கள் என்பது தான் பார்க்கவேண்டும்.

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் கால் தடங்கள் தன்னிச்சையாக இலங்கையில் பதிவதை இந்திh விரும்பாது. அமெரிக்காவும் அந்தியாவின் அனுசரணை இல்லாமல் இரங்கையில் காலடி வைக்காது. இலங்கைக்கு எதிரான சதி முயற்சி எப்போதும் இந்தியா - அமெரிக்கா கூட்டு முயற்சியாகவே இருக்கும். மற்றைய மேற்குலகங்கள் அமெரிக்காவிற்கு பின்னே தான் அணதிரளும். இதில் தமிழரின் அனுசரணை அமெரிக்காவுடனே தான் இருக்கவேண்டும். எல்லாமே இலங்கையைச்சீனாவில் இருந்து அப்புறப்படுத்துவதே. தமிழருக்கான தீர்வு என்பது எத்தனையாவது வரியில் இவர்கள் எழுதி வைத்துள்ளார்கள் என்பது தான் பார்க்கவேண்டும்.

சீனாவை அப்புறப்படுத்தும்பொழுது அதை சிங்கள இனவாதம் எப்படிக்கையாளும் என்பதில் எவ்வளவு தூரம் மேற்குலகம் எமது பக்கம் வரும் என்பது தங்கியுள்ளது.

இன்று இரணில் 'இந்த அரசு ஆட்சிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்காது' எனக்கூறியுள்ளார். அது மக்கள் ஆர்ப்பாட்டத்தால் (பொருளாதாரம்) இல்லை மாலைதீவு போன்ற ஒன்றா என புரியவில்லை. மகிந்தா பக்கம் இராணுவமும் நிற்பதால் மாலைதீவு போன்ற ஆட்சிமாற்றம் நடக்காது என நம்பலாம். விலை உயர்வு போராட்டம் மட்டுமே மகிந்தவுக்கு சவாலாக இருக்கும். சீனா சிங்களத்திற்கு எதுவரை பொருளாதார உதவிகளை செய்யும் என்பதிலும் மகிந்தாவின் பலம் உள்ளது.

  • தொடங்கியவர்

மாற்று ஆயுதக் குழுக்கள் மீது நடவடிக்கை இல்லை : சிங்களம்

February 16, 2012

dau.jpg

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியிருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.

இலங்கைக்கு பயனம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜதந்திரிகளான மரியா ஒட்ரேரோ மற்றும் ரொபேர்ட் ஓ பிளேக் ஆகியோர் அரச உயர்மட்டத்தினருடனான சந்திப்பின்போது இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்; அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன்மூலம் அறிக்கை சிபாரிசுகளின் அமுலாக்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற சாரப்பட அமெரிக்கா வலியுறுத்தலை விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த வலியுறுத்தலை அரச தரப்பு உடனடியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லையெனப் பெயர் குறிப்பிட விரும்பாத அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று குறிப்பிட்டார்.

சட்டவிரோத ஆயுதக்குழுக்களுக்கு எதிராக சட்டச் செயற்பாடுகளை இப்போதைய சூழ்நிலையில் உடனடியாக மேற்கொள்ள இயலாதென்றும், அந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் அரசின் முக்கிய பொறுப்புகளை வகிப்பதால் அது குறித்து பின்னர் பரிசீலிக்க முடியுமெனவும் அரசு அமெரிக்காவிடம் தெரிவித்துவிட்டதென்றும் அந்த அமைச்சர் குறிப்பிட்டார்.

http://www.alaikal.com/news/?p=97140

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.