Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?

Featured Replies

நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.

அவ்வாறு உங்களிற்கு தெரியாது மற்றவர்களின் மீது குற்றம்சாட்டி அவர்களின் மனதை புண்படுத்தாது அவற்றினை தெளிவாக அறிந்து குற்றம் சாட்டுங்கள். அல்லது பொதுப்படையாகவன்றி பெயர்களை கூறி குற்றம் சாட்டுங்கள். அவர்கள் வந்து தெரியவைப்பார்கள் தாம் எங்கிருந்து வருகிறோம் என்று. அனைவரையும் உங்களைப்போல் நினைக்கவேண்டாம்.

  • Replies 165
  • Views 14.1k
  • Created
  • Last Reply

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை (எங்களை :wink: ) எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

சொன்னாக் கேழுங்கோ.! 8) 8) 8)

நண்பர்கள் போல் கூட இருக்கும் துரோகிகளை கண்டுபிடிப்பதுதான் பெரிய துன்பமான வேலையாக இருக்கிறது. அவர்களை மற்றவர்களிற்கும் சுட்டிக்காட்டுவதன் மூலம் அவர்களையும் எச்சரிக்கைப்படுத்தலாம் அவ்வளவே. 8)

விடுதலை வரி கட்டினீங்களா?

இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை

அங்கே என்ன வேலை? -

கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில

இங்கே என்ன செய்யிற நோக்கம்?

தெரிஞ்ச வேலை உது தானோ?

எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!

நாட்டுக்கு உங்களால என்ன பயன்?

ம்.... கேளாத கேள்விகள்...

கேட்டால் என்ன செய்வேன்?

யூட் அவர்களே உங்களின் கவியில் உண்மை தெரிகிறது. கடந்த வருடம் புரட்டாதிமாதம் நான் இலங்கை சென்றேன். அங்கே ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச்சாவடிகளில் புலம் பெயர்ந்த தமிழருக்கு நடைபெறும் மரியாதைகளையும் கெளரவிப்புக்களையும் நேரே கண்டேன். மிக்க சந்தோசம் :P :P :P :twisted: :twisted: . எங்கும் பணம் எதிலும் பணம் அது இல்லையென்றால் அங்கு நடைப்பிணம் தான் நாய் கூட திரும்பி பாராது.

நேர்மையாக ஐரோப்பாவில அரசாங்கத்துக்கு 80% மான உண்மையான உழைப்பை வரியாகவும், பில்லுகளாகவும் குடுப்பினம். அதோட வாடகையும் சேத்து குடுப்பினம் . இங்க வெள்ளைக்காறனின் அரசாங்கத்துக்கு குடுக்கிறது கௌரவம் இல்லையா.?

ஆனால் ஊரில காவல் காக்கிறதுக்கு ஏற்படும் செலவாய் கொஞ்சம் கேட்டால் ஒப்பாரி வைப்பினம். எல்லாத்தையும் ஓசிலயே வாங்கின சனம் பாருங்கோ. எங்களுக்கு யார் வீட்டுப்பிள்ளையாவது உழைச்சுபோட்டால் சப்புக்கொட்டி சாப்பிடுவம், எங்களிட்ட காசும், போராட பிள்ளைகளையும் கேக்ககூடாது பிறகு நாங்கள் பொல்லாதவை ஆகீடுவமில்லை.

அப்பிடி ஐரோப்பால வரி செலுத்தாமல் வாழுறம் எண்டு சிலர் சொல்லுறவை அவை கள்ளமட்டை போடுறவையாலதான் இருக்கும் இல்லாட்டா வங்கி மோசடி இல்லாட்டா எங்கட சனத்தை ஏமாத்துறவை.

இல்லாட்டால் வெள்ளைக்காறன் உழைச்சு அரசாங்கத்துக்கு குடுத்தவரியை அரசாங்கத்திட்ட வாங்கி சாப்பிடுறவை, அவைக்கு ஊருக்கு போக எப்பிடி காசு வந்தது எண்டு கேட்டால் அடக்கி வாசிப்பினம்.

நேர்மையாக ஐரோப்பாவில அரசாங்கத்துக்கு 80% மான உண்மையான உழைப்பை வரியாகவும், பில்லுகளாகவும் குடுப்பினம். அதோட வாடகையும் சேத்து குடுப்பினம் . இங்க வெள்ளைக்காறனின் அரசாங்கத்துக்கு குடுக்கிறது கௌரவம் இல்லையா.?

ஆனால் ஊரில காவல் காக்கிறதுக்கு ஏற்படும் செலவாய் கொஞ்சம் கேட்டால் ஒப்பாரி வைப்பினம். எல்லாத்தையும் ஓசிலயே வாங்கின சனம் பாருங்கோ. எங்களுக்கு யார் வீட்டுப்பிள்ளையாவது உழைச்சுபோட்டால் சப்புக்கொட்டி சாப்பிடுவம், எங்களிட்ட காசும், போராட பிள்ளைகளையும் கேக்ககூடாது பிறகு நாங்கள் பொல்லாதவை ஆகீடுவமில்லை.

.

தம்பி அகிலம் கொஞ்சம் பொறுமோனை. தனக்கடங்கிதான் தானம் என்பர். இங்கு உழைப்பவன் தனக்கே பணத்துக்கு கஸ்டப்படும் போது எப்படியப்பா தானம் செய்வது. உங்களிடம் மேலதிகமாக இருந்தால் கொடுங்கள் என்னிடம் இருந்ததால் நானும் ஏதோ சிறிதாய் கொடுக்கிறேன். அட பாவம் இல்லாதவன் என்ன செய்வான்.

காசில்லாமல்த்தான் ஊருக்கு போறீங்களாக்கும். ஏனுங்கோ இப்பல்லாம் ஓசில பிளேன் ஓடுறது எங்களுக்கு தெரியாதுங்கோ.! எந்த பிளேன் எண்டு எங்களுக்கும் சொல்லுங்கோ. பஞ்சம் பாடுறதுக்கும் அளவு வேணுமுங்கோ.!

உங்களுக்கு நாடு வேணும் எண்டால் போங்கோ. இல்லாட்டா இருக்கிற நாட்டிலயே இருங்கோ,

நாடு வேணும் எண்டால் அங்கு பாடுபடுபதற்கான வரியை செலுத்துங்கள். நீங்களும் செய்ய மாட்டியள் செய்வதுக்கு செலவும் குடுக்காமல் ஓசில வேணுமா நாடு.?

அங்கிருக்கும் ஒவ்வொருவரும் செலுத்துவதுதான். முடிந்தால் செலுத்துங்கோ இல்லாட்டால் போகாமல் இருப்பது நண்று.

ஓகோ அப்படி போகுதா கதை. சரி சரி இப்ப புரியுதுங்கோ. முன்னர் மாற்றியங்கங்களும் இப்படித்தான் கப்பம் கேட்டார்கள். ஆஹா இப்ப அது வரி என்னும் பேரிலை நடக்குதோ? சரி சரி

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் மதிலில் இருந்து வம்புக் கதை கதைத்து அங்கு நாயடி பேயடி வாங்கி, புலம்பெயர்ந்தவர்களுக்கு அங்கு போய் என்ன குப்பை கொட்டுகின்றதோ!!

படிப்பிற்கு பள்ளிக்கூடம் கூட எட்டிப்பார்க்கவில்லை. ரோட்டு ரோட்ட கீழ்தரமான கதைகளையும், பெண்டுகளை கேலி பண்ணியும் திரிந்து போட்டுகள்ளப் பாஸ்போட்டில் புலம்பெயர்ந்து வருவது என்றால் சும்மாவோ!! :evil: :evil:

அதுவும் ஊருக்குள்ள போய், முந்தி கீழ்தரமான கதைகளகளால் செருப்படி கொடுத்த கல்யாணியையும், ரேவதியையும் வெளிநாட்டு மாப்பிளை என்று கையிலும், கழுத்திலும் செயின் போட்டு, கண்ணடித்து அவையை இளிக்க வைக்கலாம் என்று பார்த்தால்.....................................

உவங்கள் திரும்பிப் போக வேண்டுமென்கின்றாங்கள். விடுவமோ!! நாம் இப்ப தானே ஏஜன்சிக்கு கொடுத்த காசை கட்டி முடித்து நிமிர்ந்து நிக்கின்றோம். அதுவும் இங்கே வெள்ளைத் தோலுகள் எங்க ஊர் பெடிச்சிகள் மாதிரி கோபப்படாதுகள். அதுகளை விட்டுவிட்டு எம்மை ஊருக்கு போ எண்டால் என்ன செய்கின்றது!!! :oops:

சமாதானம் வந்தால் படிச்சவங்கள் மட்டும் தானே வெளிநாடு போகலாம். பிறகு நாங்கள் சுப்பரின் கள்ளுக்கடையில் தண்ணியடிக்க காசு கிடைக்காமல் அல்லாட வேண்டும். எனவே என் குடும்ப நல்லா இருக்க வேண்டும் எண்டால் என்னும் 10 வருடத்துக்கு சண்டை வரவேணும். :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே என் குடும்ப நல்லா இருக்க வேண்டும் எண்டால் என்னும் 10 வருடத்துக்கு சண்டை வரவேணும்.

வெளிநாட்டிலிருக்கின்ற தமிழர்கள் புலிகள் இன்னும் பொறுமை காக்க கூடாது சண்டை தொடங்க வேண்டும் என்று கோஷம் போடும் போது தூயவன் நீங்கள் சொன்னது போலவே நினைக்க தோன்றுகிறது. தாயகத்தில் இருக்கின்ற மக்களை விட புலம் பெயர்ந்து உள்ள மக்கள் தான் அதிகம் சண்டை வேண்டும் என்கிறார்கள். ம்..

ஆஹா .... தூயவன் உங்களை நினைக்க பெருமையாய் இருக்கு. ஏனென்றால் உண்மையை சொல்கிறத்துக்கு யாருக்கு மனம் வரும். ஆனால் நீங்கள் உங்கள் அனுபவங்களை மறைக்காமல் உண்மையாய் சொல்கிறீர்கள். எண்டாலும் செருப்பால அடிவாங்கிய பின்னும் அவளை பார்த்து பல்லு இழிப்பது உங்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டவில்லையா ? :lol::):lol: ஏன இந்த சின்ன வயசுலும் கள்ளடிக்கும் பழக்கமா நம்பவே முடியவில்லை. நம்ம ஊரில முன்னர் முஸ்லீம் நாடுகள்ள வேலை செய்யுறயை லீவுக்கு வரும் போது மொத்த சங்கிலியும் போட்டு வெள்ளையும் சுள்ளையுமாய் திரியிறமாதிரி இப்ப நீங்களும் திரியிறீர்களா? :P :P

எண்டாலும் அகதிகாசில இப்படி எல்லாம் நடப்பது கொஞ்சம் ஓவர் தான்.

வெளிநாட்டிலிருக்கின்ற தமிழர்கள் புலிகள் இன்னும் பொறுமை காக்க கூடாது சண்டை தொடங்க வேண்டும் என்று கோஷம் போடும் போது தூயவன் நீங்கள் சொன்னது போலவே நினைக்க தோன்றுகிறது. தாயகத்தில் இருக்கின்ற மக்களை விட புலம் பெயர்ந்து உள்ள மக்கள் தான் அதிகம் சண்டை வேண்டும் என்கிறார்கள். ம்..

ஆஹா.....உங்களுக்கும் இருக்கும் வெளிநாடுகளில் விசா இல்லையா விசா இல்லாதவர்கள் தான் இப்படி எல்லாம் நினைக்கிறார்கள். யாரோ மடிந்த மக்களின் இரத்தத்தில் குளிர் காயுறது பற்றி இங்கு கதைத்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவோன் வெளி நாட்டில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் போர் தொடங்க வெண்டும் என்று கோசம் போடவில்லை. அதே நேரம் அனைவரும் தேசிய வாதிகளும் அல்ல. சுய நலத்துக்காய் யாரும் சண்டையை அழைக்கவில்லை. ஆனால சண்டை கட்டாயமாக ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையிருந்தால்... சமாதான காலத்திலும் மக்கள் அழிக்கப்படும் சூழல் தொடர்ந்தால் வெளி நாட்டு தமிழர் மட்டுமல்ல..செவ்வாயில் தமிழர் இருந்தாலும் சண்டையை அரம்பிக்கும் படி தான் கேட்பார்கள்.

சரியாய் சொன்னீகள் நிதர்சன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊமையவர்களே! எது அகதி காசு என்று புரியவில்லை. நீங்கள் உங்களை நீங்களே அகதி என்று கீழ்தரமாக எண்ணி கொண்டிருக்கிறீர்கள். தமிழரின் இவ்வாறான சிந்தனைகளால் தான் தமிழன் இப்படியே இருக்கிறான். அகதி காசு என்பது உங்களுக்கு நீங்கள் இருக்கும் நாட்டு அரசாங்கங்களால் இனாமாகவா வழங்கப்படுகின்றது? ஒவ்வொரு தமிழரின் வியர்வைக்கும் கடும் உழைப்புக்கும் கிடைக்கின்ற சம்பளமே அவை. ஏதோ வேற்று நாடு வந்தோம்..அகதி அந்தஸ்து கேட்டோம் கிடைத்து விட்டது. அகதி அந்தஸ்தை தந்தவர்கள் எம்மை குடிவரவாளர்கள் (imigration) என்கிறார்கள் நாங்கள் நம்மை அகதி (refugee) என்கின்றோம் இது தான் எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தரப்பு கருத்துக்களில் இருந்து தான் இங்கே பதில் எழுதுகின்றனர். என்னை பொறுத்த வரை தாயகத்தில் அமைதி வருகிறதா இல்லை என் படிப்பு முடிய நிச்சயம் அங்கு மீள செல்லுவேன். ஆனால் தூயவனை பொறுத்த வரை அவருக்கு வெள்ளை த் தோல் தான் பிடிக்கும் என்றால் அவர் தாராலமாக இங்கே இருக்கலாம். யாரும் யாரையும் இங்கே கட்டாயப்படுத்த வில்லை. விரும்பினால் நீங்கள் போகலாம் விரும்பாவிட்டால் இருக்கலாம். அதற்காக நீங்கள் செய்தவற்றை கொண்டு மற்றவர்களை எடை போடுவது தவறு. சிலருக்கு நாடு திரும்ப விரும்பபம் இருந்தாலும் சூழ்நிலை அனுமதிக்காது. எல்லாவற்றையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஓகோ அப்படி போகுதா கதை. சரி சரி இப்ப புரியுதுங்கோ. முன்னர் மாற்றியங்கங்களும் இப்படித்தான் கப்பம் கேட்டார்கள். ஆஹா இப்ப அது வரி என்னும் பேரிலை நடக்குதோ? சரி சரி

சோத்துப்பாசலுக்காக வீடுவீடாக தண்டி குளிர்காஞ்சு பவுசு காட்டினதுகளுக்கும். ஒரு தனியரசை அமைக்க பாடுபடுகிறவர்களுக்கும் வித்தியாசம் தெரியாம பினாத்துறது தெரியுது.

அது சரி,.. இனையத்தில பேரைப் பதிஞ்சா ஒரு கொம்பியூட்டரும் இருந்தா என்ன வெண்டாலும் எழுதலாம்தானே. காசா பணமா எழுதுங்கோ.

ஊமையவர்களே! நீங்கள் உங்களை நீங்களே அகதி என்று கீழ்தரமாக எண்ணி கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்வது போல் இதுக்கு பேர் தாள்வு மனப்பாண்மையே தான். தங்களால் எதுவுமே செய்யமுடியாது எண்றும் மற்றவர்களாலும் அதைச்சாதிக்க முடியாது எண்றும். எதிர்மறையான கருத்துக்களை எப்போதுமே ஜதார்த்தம் என்கின்ற பேரில் பரப்புபவர்கள். எல்லா ஜதார்த்தங்களும் எல்லாவிடத்திலும் பலிப்பதில்லை

முதல்தரம் ஆ.க.வெ பின் பலபேர் சொன்னார்கள் ஆனையிறவுகூட பலமான முகாம் தாக்கி அழிக்கிறது நடவாத காரியம் எண்று. அதை முயலாமல் முடியாது எண்று போசாமலே இருந்திருக்கலாம் ஜதார்த்தம் என்கின்ற பெயரால்.

ஆனால் அப்படி இருக்காதவர்கள் ஜதார்த்தவாதிகள் பட்டியலில் வரமாட்டார்கள்தான். அவர்கள் சாதனையாளர்கள். சிலர் தங்களின் இயலாமையை மறைக்க போடும் வேடம்தான் "ஜதார்ர்தவாதி" என்கின்ற பெயர்.

அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான். அல்லது ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கலாம்.

ஊமையவர்களே! நீங்கள் உங்களை நீங்களே அகதி என்று கீழ்தரமாக எண்ணி கொண்டிருக்கிறீர்கள்.

நிதர்சன் நான் அகதியாக வெளிநாடுவரவில்லை. நான் ஸ்பொன்சரில வந்தேன். இலங்கையில் இருந்து வரும்போதே ஜேர்மனிக்குரிய வதிவிட அனுமதியுடன் தான் வந்தேன். நான் ஒன்றும் திருட்டுதனமாக எல்லைகளுக்கூடாகவோ அல்லது திருட்டுதனமாக விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்களை கிழித்துவிட்டோ அகதி அந்தஸ்து கோரவில்லை. அதனால் என்னை அப்படி அகதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

அப்ப இன்னும் ஒரு அகதியின் ஊண்று கோலில நாட்டுக்குள் வந்தவரா நீர்.? அப்ப எதுக்கு ஓய் அகதிகள் பிரதிநிதிபோல வாய் வீச்சு.

அகதியாய் ஜேர்மனிக்கு வந்த ஒருவர். தன் வியர்வையை புளிஞ்சு உங்களை கூப்பிட்டு விட்டால், அகதிகளின் பிரதிநிதி ரேஞ்சிலை அவர்கள் ஊருக்கு போகமாட்டினம் எண்டு அளப்பிங்களா.?

ஸ்பொன்சரில வந்தவர்கள் நீர் சொன்னமாதிரி சொகுசு வாழ்க்கைக்கு வந்திருக்கலாம் தான். :wink: அவர்கள் ஊருக்கு வரமாட்டார்கள். 8)

அகிலன் நீர் கனவு கண்டாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட முடியாது. அதனால் இங்கு வெளிநாடுகளில் வாழுகிறவர்கள் இலங்கையில் நான் முன்னர் சொன்னது போல உறவுகளை பார்க்கவும், விடுமுறையிலும் சென்று வருவார்களே தவிர அங்கு யாரும் நிரந்தரமாக தங்கமாட்டர்கள். ஏனெனில் அவர்கள் வெளிநாட்டு சுக போகங்களிலும் வாழ்க்கை முறையிலும் பழகிவிட்டனர். இன்னும் சிலர் பெருந்தொகை முதலிட்டு சொந்த தொழில்கள் செய்கிறார்கள் இவர்கள் அங்கு போகவா இங்கு இப்படி முதலிட்டார்கள். ஏதோ நீங்கள் ஒட்டுமொத்த தமிழரிடம் வாக்கெடுப்பு எடுத்த மாதியல்லோ பேசுகிறீர். அங்கு ஊரில் வீட்டு அடுப்படியில் நாய் குறட்டையடிச்சு படுக்குது. இங்கு நீங்கள் உழைக்க வந்தால் உழைச்சு சுருட்ட கூடியதை சுருட்டுவதை விட்டு ஏதோ தேசபக்தர்கள் மாதிரி வேடம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். பிறகேன் அகதி வேடம் போடுகிறீர்கள். இலங்கையோ ஒரு சாபக்கேடான தேசம் பசி, பட்டிணி, நோய்கள், யுத்தம் பத்தாக்குறைக்கு சுனாமி. எங்கு பார்த்தாலும் லஞ்சம். மற்றவனை பிடிச்சுதின்னிற குணம். எரிச்சல், பொறாமை பதவிஆசை, அதுக்குள் ஒரு பகட்டான வாழ்க்கை. இவர் அந்த சாதி, அவர் இந்த சாதி, இவர் வைத்தியர், அவர் சட்டதரணி, இவர் கோடீஸ்வரன், அவர் பிச்சைக்காரன்,என பலதரப்பட்டதரங்கள். பத்துச்சதத்துக்கு பிரயோசம் இல்லை அத்தோடு சரியான கல்வி அறிவும் இல்லை ஆனால் கோடிக்கணக்கில் சீதனம் வேண்டும். ஒரு கேள்வி கேட்கிறேன் இப்படி கோடிகணக்கில் ஏன் சீதனம் வாங்கி திருமணம் செய்யவேண்டும். ஏன் அந்த ஆண்பிள்ளை என்ன கையாலாகாதவரா? என்ன ஊனமுள்ளவரா அவரோடு இணைந்து வாழ வரும் பெண்ணை இவர் காப்பாற்றமாட்டாரா? முதலில் கட்டாக பனம் வேண்டும் அதன் பின் தான் அன்பு பாசம். அதன் பின்பு அவளை புரிந்துகொள்ளுதல் அவளுக்காகவே வாழ்கிறேன் என ஏதோ பெரிய நடிப்பு எல்லாம் நடிப்பார்கள். அதுக்கை வேறை அங்கு உணவகங்கள் சுத்தமும் இல்லை சுகாதாரமும் இல்லை. அடி முட்டள்கள் மாதிரி மூட நம்பிக்கை. ஆயிரத்தெட்டு கோயில்கள் அங்கு திருவிழா என்னும் பேரிலே களியாட்டுக்கள் தொடங்கினால் மனிதன் நிம்மதியாக நித்திரைகூட கொள்ளமுடியாது. ஏதோ எல்லாம் கடவுள் கடவுள் என்று நிற்பாங்கள். ஒரு கேள்வி ஒரு வருடம் வேலைக்கு போகாமல் நில்லுங்கள் அந்த கடவுள்கள் உங்களுக்கு சாப்படு போடுதோ என்று பார்ப்போம். விளங்குதல்லே சாப்படு தண்ணி இல்லமல் நாறிப்போய்விடுவீர்கள். இப்படிபட்ட பைத்தியகார நாட்டில் எவன் திரும்ப போய் குடியேறுவான்.

அப்ப நீங்கள் என்னை பார்த்து எரிச்சல் மிகுதியில் ஒரு கேள்வி கேட்கலாம் பின்னர் ஏன் காணும் நீர் அந்த பாழ்பட்ட நாட்டுக்கு வருடம் 3-4 தடவை ஓடி ஓடி போகிறீர் என்று.போனால் தானே மலிவில் விடுமுறையை கழிக்கலாம். என்ன செய்ய ஏன்னை பெற்றவர்கள் கூடபிறந்த சகோதரர்கள் இன்னும் அங்கு தான் இருப்பதனால் தான் அங்கு செல்லவேண்டியவனாய் இருக்கிறேன்.

:lol::):lol::(:lol: இதை வாசித்தவுடன் தேசபக்தர்களாகிய உங்களுக்கு காதுக்கலையும் கண்ணுக்காலையும் அப்படி புகையுமே. அப்படி புகைந்தால் கொஞ்சம் ஜன்னலை திறந்துபோட்டு நில்லுங்கள் குளிர்காலமாகையால் சடுதியாக அடங்கிவிடுவீர்கள் :P :P :P :P :P :P

அது சரி ஊமை என் கனவிலையும் உமக்கு ஒண்டும் விளங்கப் போவதில்லை. அது மட்டும் தெளிவா விளங்குது. !

இங்கு கேட்கப்பட்டதே தமிழீழத்தைப்பற்றி நீர் இலங்கையை பற்றி புலம்புறீர். ஈழம் என்பது சுதந்திர தமிழீழம். அமையும் எண்டு நம்புறவை,(அமைந்ததின் பிறகு) போகமாட்டம் எண்டு நம்பீனம் எண்டு அளக்காதையும். 8)

முதலில பொது அறிவை சிலதை வாசித்தாவது பெருக்க முயல்வது நல்லது. :P

உம்மட புசத்தலை கேட்டு உம்மட வீட்டுகாறர், கவலைபடலாம் நான் உமக்காக கவலைப்பட நீரொருவர்தான் ஈழகுடிமகன் இல்லை. 8) 8) 8)

இங்கு கேட்கப்பட்டதே தமிழீழத்தைப்பற்றி நீர் இலங்கையை பற்றி புலம்புறீர். ஈழம் என்பது சுதந்திர தமிழீழம். அமையும் எண்டு நம்புறவை போகமாட்டம் எண்டு நம்பீனம் எண்டு அளக்காதையும். 8)

முதலில பொது அறிவை சிலதை வாசித்தாவது பெருக்க முயல்வது நல்லது. :P

அதுசரி தமிழீழம் என்கிறீர் அப்படி ஒரு இடம் உலக வரை படத்தில் இருக்கிறதா ? இல்லாததை கண்ணா நான் எப்படி படிக்க முடியும் இலங்கை என்று தானே வரைபடத்தில் இருக்கிறது

மோனை அகிலம் இப்ப இலங்கை தான் தமிழீழம் தனியாக பிரியட்டும் அப்புறம் அதைப்பற்றி பேசுவோம்

உம்மட புசத்தலை கேட்டு உம்மட வீட்டுகாறர், கவலைபடலாம் நான் கவலைப்பட உமக்காக நீரொருவர்தான் ஈழகுடிமகன் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊமை தான் முன்பு தன்னைப்பற்றி இங்கு எழுதியவற்றை கீழே தந்திருக்கிறேன். இவர் முன்பு கூறியிருந்தார் தான் ஓர் வறிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் பதினைந்து வயதில் யேர்மனிக்கு வந்ததாகவும். தற்போது கூறுகிறார் தான் ஸ்பொன்சரில் யேர்மனிக்கு வந்ததாக. எனக்கு வறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்ததை நம்ப முடியவில்லை. அப்படி இவர் ஸ்பொன்சரில் வந்திருந்தால் இவரை இவருடைய பெற்றோர் அல்லது சகோதரர்கள் மாத்திரமே ஸ்பொன்சர் செய்திருக்க முடியும். அப்படியாயின் இவர் வறிய குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது. அல்லாதுவிடின் இவர் திருமணம் மூலம் வந்திருக்கலாம். ஆனால் அது பதினைந்து வயதில் சாத்தியப்பட்டிருக்காது. இவர் தான் மாத்திரம் தான் யேர்மனியில் இருப்பதாகவும் கூறியிருக்கிறர். அப்படியாயின் யார் இவரை ஸ்பொன்சர் செய்திருப்பார்கள். அத்துடன் இவர் தனக்கு வதிவிட உரிமை பற்றி கவலையில்லை என்றும் கூறியிருக்கிறார். ஏனென்றால் இவருக்கு யேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது என்று. இவருக்கு வதிவிட உரிமை இல்லாததால் தான் இவர் அதைப்பற்றி கவலைப்பட்டு இங்கு எழுதியிருப்பார். பின்னர் இவர் எப்படி யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்திருப்பார்.

இவர் கூறியதை கீழுள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம்....

நிதர்சன் நான் அகதியாக வெளிநாடுவரவில்லை. நான் ஸ்பொன்சரில வந்தேன். இலங்கையில் இருந்து வரும்போதே ஜேர்மனிக்குரிய வதிவிட அனுமதியுடன் தான் வந்தேன். நான் ஒன்றும் திருட்டுதனமாக எல்லைகளுக்கூடாகவோ அல்லது திருட்டுதனமாக விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்களை கிழித்துவிட்டோ அகதி அந்தஸ்து கோரவில்லை. அதனால் என்னை அப்படி அகதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டாம்.

இவோன் எமது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். நான் ஒருவன் தான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் எனது 15 வது வயதில் இங்கு வந்தேன் இங்கு வந்து 8 ம் வகுப்பில் இருந்து எனது கல்வியை இங்கு தொடர்ந்தேன் 3 வருடங்கள் தொடர்ந்து படித்தேன். மாலையில் உணவகத்தில் வேலை காலையில் பாடசாலை இப்படி எனது வாழ்க்கையை 3 வருடங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓட்டிப்பார்த்தேன் முடியவில்லை. எமது குடும்ப நிலைக்கு பெருந்தொகை பணம் தேவைப்பட்ட படியால் பாடசாலைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். இன்று நான் எனக்கு இருந்த பொறுப்புக்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டேன். ஆனாலும் இன்றும் எனது குடும்பத்தவர்களை நான் தான் பார்த்துவருகிறேன்.

எனக்கு வதிவிட அனுமதி பற்றி கவலை இல்லை ஏனெனில் எனக்கு ஜேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது.

நான் 11 வருடங்கள் இங்கு வாழ்ந்து பழகிவிட்டேன். இங்கு பெறும் ஊதியம் போல் இலங்கையில் ஒரு போதுமே பெற முடியாது. இதனால் எனக்கு அங்கு சென்று வாழ விருப்பமில்லை. ஏனெனில் எமது ஏழ்மை நிலையை போக்கணும் என்றால் நான் இங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அங்கு சென்று வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&&start=15

ஊமை தான் முன்பு தன்னைப்பற்றி இங்கு எழுதியவற்றை கீழே தந்திருக்கிறேன். இவர் முன்பு கூறியிருந்தார் தான் ஓர் வறிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் பதினைந்து வயதில் யேர்மனிக்கு வந்ததாகவும். தற்போது கூறுகிறார் தான் ஸ்பொன்சரில் யேர்மனிக்கு வந்ததாக. எனக்கு வறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்ததை நம்ப முடியவில்லை. பின்னர் இவர் எப்படி யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்திருப்பார்.

இவர் கூறியதை கீழுள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம்....

நம்புவது நம்பாதது உங்க இஷ்டம் திருவாளர்

நான் வசிப்பது கனடாவில் அல்ல ஜேர்மனியில் திருவாளர். ஜேர்மனியில் சகோதரர்களை இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் செய்யலாம் ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க முடியாது. ஆனாலும் நான் ஸ்பொன்சரியே வந்தேன்

ஹா...ஹா...ஹா... அப்ப எப்படி அண்ணா வருடம் 3-4 தடவைகள் இலங்கை சென்று மீண்டும் ஜேர்மனி வரமுடிகிறது.

இப்ப உங்களை பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சரியான கெட்டிக்காரன் என்ன ஒரு புலநாய்வு.

அதுசரி தமிழீழம் என்கிறீர் அப்படி ஒரு இடம் உலக வரை படத்தில் இருக்கிறதா ? இல்லாததை கண்ணா நான் எப்படி படிக்க முடியும் இலங்கை என்று தானே வரைபடத்தில் இருக்கிறது

மோனை அகிலம் இப்ப இலங்கை தான் தமிழீழம் தனியாக பிரியட்டும் அப்புறம் அதைப்பற்றி பேசுவோம்

கேள்வி என்ன தெரியுமா .? ஊமை.

சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும்

நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா?

இதுதான் தமிழர்களுக்கு தீர்வு என்பது தனிநாட்டைவிட எதாவது வரும் இல்லை சிங்களவன் தருவான் எண்ற நம்பிக்கை தமிழர், சிங்களவன், இல்லை உலகத்தவர் எவருக்கும் இல்லாதது

அது எனக்கும் இல்லை. அதையும் தாண்டி ஒரு தீர்வா அது தனிநாடுதான். அதுக்கு பேர் ஈழம். இதுதான் சாத்தியம் இதுவே புரியாமல் இருக்கும் உமக்கு ஈழத்தவர் ஊருக்கு போகப்போவதா தெரியுது.?

நான் வசிப்பது கனடாவில் அல்ல ஜேர்மனியில் திருவாளர். ஜேர்மனியில் சகோதரர்களை இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் செய்யலாம் ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க முடியாது. ஆனாலும் நான் ஸ்பொன்சரியே வந்தேன்

ஹா...ஹா...ஹா... அப்ப எப்படி அண்ணா வருடம் 3-4 தடவைகள் இலங்கை சென்று மீண்டும் ஜேர்மனி வரமுடிகிறது.

இப்ப உங்களை பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சரியான கெட்டிக்காரன் என்ன ஒரு புலநாய்வு.

சரியையா உங்களை அகதியாக வந்த உங்கள் சகோதரம் கூப்பிட்டு விட்டார். அதாவது ஜேர்மன் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துவிட்டார் இன்னும் ஒரு அகதியை படிப்பீக்க போவதாய். இப்படி வந்து விட்டு 15 வயதில் களவாக வேலை செய்தீர்.

இதை நாங்கள் நம்பீட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.