Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதஉரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது - பாகிஸ்தான் நாளேடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

y-down.jpg

சிறிலங்கா அமைதியை அடைந்தது எப்படியாக இருந்தாலும், அதன் மனிதஉரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. போர்க்குற்றங்களைப் புரிந்தவர்கள் அனைத்துலகச் சட்டங்களின் படி பொறுப்புக்கூறுதல் அவசியம் என்று பாகிஸ்தானின் பிரபல நாளேடான DAWN கருத்து வெளியிட்டுள்ளது.

“மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள்“ என்ற தலைப்பில இன்று வெளியாகியுள்ள DAWN நாளேட்டின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

சிறிலங்காவில் ஒப்புமையான அமைதி ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கான இழப்புகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

சிறிலங்கா முன்னெடுத்த போர் ஒட்டுமொத்த அனைத்துலக சட்டங்களின் மீதும் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று, ஐ.நா மேற்கொண்ட பூர்வாங்க விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

போர் நடந்து கொண்டிருந்த 2009ம் ஆண்டின் முதல் அரையாண்டில், சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான முறையில் குண்டுகளையும், எறிகணைகளையும் வீசியது போர் முடிவுக்கு வந்த பின்னர், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் காணொளிப் பதிவுகள் மூலம் வெளியே தெரியவந்தது.

இலட்சக்கணக்கான மக்கள் தீவின் வடக்கிலுள்ள மிகச்சிறிய பகுதி ஒன்றுக்குள் சிக்கியிருந்த போது கொல்லப்பட்டனர்.

இறுதி ஐந்து மாதங்களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளும் கூட மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளனர்.

அவர்கள் போர் வலயத்தில் இருந்த பொதுமக்களை வெளியே செல்லவிடாமல் தடுத்ததுடன் அவர்களை மனித கவசங்களாகவும் பாவித்தனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், உயிர்பிழைத்த 280,000 மக்கள் பிரமாண்டமான அகதி முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டனர்.

உலகின் மிகப்பெரிய தடுப்பாக - எந்த நீதி விசாரணையுமின்றி போராளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட 11,000 பேர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிக்குப்புறம்பான கொலைகள், சித்திரவதைகள், குழுவாக பாலியல் வல்லுறவு போன்றன போரின் பிந்திய மாதங்களில் தொடர்ந்ததாக தமிழர்கள் சொல்கிறார்கள்.

அதேவேளை, சிறிலங்கா சொந்தமான ஒரு விசாரணையை நடத்தியது. அது போராளிகளை மையப்படுத்தி மட்டுமே குற்றம்சாட்டியுள்ளது என்றும் இராணுவத்தின் பங்கு பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் அனைத்துலகச் சட்டங்களின் படி பொறுப்புக்கூறுதல் அவசியமானது.

போர்க்காலங்களில் உரிமைகளை மீறும் வகையில் குற்றங்களை புரிந்த குற்றவாளிகள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும்.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் நாட்டைப் பாதுகாக்க ஆயுதப் போராட்டங்களை நசுக்குவது தவிர்க்க முடியாதது என்று கருதுகின்றன.

அமைதியை அடைந்தது எப்படியாக இருந்தாலும், அது விமர்சன முக்கியத்துவம் வாய்ந்தது.

எந்த விடயத்திலும், மனிதஉரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் சகித்துக் கொள்ளப்படமாட்டாது.

http://www.eeladhesa...ndex.php?option

இன்று ஜெனிவாவிலும் டெல்லியிலும் தமது ஏமாற்று அரசியலை கட்டவிழ்த்துள்ளது சிங்களம். அவர்களை தமக்கு சாதகமாக வாக்களிக்க வைக்கவும், அவர்கள் ஊடாக ஆதரவு நாடுகளை திரட்டவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளது சிங்களம்.

பாகிஸ்தான் சீனாவுக்கு அடுத்ததாக சிங்களத்திற்கு ஆதரவு தரும் ஒரு நாடு. அப்படியிருந்தும் அந்த நாட்டில் இவ்வாறு ஒரு முக்கிய பத்திரிகை எழுதியுள்ளது.

இவ்வாறான ஒன்றை உலகின் மிகப்பெரும் சனநாயக நாட்டில் எதிர்பார்க்க முடியாது <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று ஜெனிவாவிலும் டெல்லியிலும் தமது ஏமாற்று அரசியலை கட்டவிழ்த்துள்ளது சிங்களம். அவர்களை தமக்கு சாதகமாக வாக்களிக்க வைக்கவும், அவர்கள் ஊடாக ஆதரவு நாடுகளை திரட்டவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளது சிங்களம்.

பாகிஸ்தான் சீனாவுக்கு அடுத்ததாக சிங்களத்திற்கு ஆதரவு தரும் ஒரு நாடு. அப்படியிருந்தும் அந்த நாட்டில் இவ்வாறு ஒரு முக்கிய பத்திரிகை எழுதியுள்ளது.

இவ்வாறான ஒன்றை உலகின் மிகப்பெரும் சனநாயக நாட்டில் எதிர்பார்க்க முடியாது <_<

பாகிஸ்தான் இந்திய இரானிய குடும்ப அரசிற்கு அழுத்தம் கொடுக்க செய்திருக்கலாம்.

இன்னும் ஊத்தி பெருக்கி இரானிய குடும்ப காங்கிரஸ் எப்படி எங்களில் ஐந்து இலட்சம் பேரை கொன்றார்கள் என்று எல்லா பாகிச்தாநிகளுக்கும் தெரிவிக்கவேண்டும். 

அண்ணா, சின்ன திருத்தம்.  மோதிலால் நேரு, ஜவர்களால் நேரு, இந்திரா நேரு காந்தி,  ராஜீவ் நேரு காந்தி,  சோனியா நேரு காந்தி, இப்போது ராகுல் நேரு காந்தி....... உலகத்திலேயே பெரிய முடியாட்சி இந்தியா.

மகிந்த ராசபக்சாவை எவ்வளவு பண்பின் சிகரமாக பாராளுமன்றத்தில் ஆபாசப் படம் பார்க்கும் தேசமான கன்னட நாட்டின் மந்திரி விபரித்திருந்தாலும் குற்றம் குற்றமே என்கிறது டோன். இலங்கையில் நடந்த பொது விசையங்களை ஒழுங்காக நிரைப்படுத்தியிருக்கிறது. நடுநிலைச் சர்வதேச பத்திரிகைகள் இவ்வளவுக்கு மட்டும் தான் இதுவரையில் போயிருக்கின்றன. மேலும் பாகிஸ்த்தான் தமிழரின் நண்பனுமல்ல. சர்வதேச அரசிலைப் பிரசுரிக்கும் பத்திரிகையாகையால் கிருஸ்ணா இலங்கையில் வலிந்து நுளைய கூறியிருக்கும் பொய்களை கவனித்திருக்கிறார்கள். போரின் போது இலங்கையின் விமானங்களைப் பாகிஸ்தானியர்கள் பறந்தவர்கள் என்றமுறையில் ஓரளவு உண்மையை நேரில் கண்ட சாட்சிகளும் கூட. எனவே கிருஸ்ணாவின் சுத்துமாத்தை நம்பி ஏமாற வேண்டிய இந்திய பத்திரிகைகளின் தாழ்வு நிலையில் டோன் இல்லை. மறைமுகத்தில் ராசபக்சா தொப்பி பிரட்டக்கூடிய மகிந்த சித்தாந்தப் புத்தன் என்பதையும் சாடைமாடையாகச் சொல்லிக்காட்டுகிறது டோன். ஆகவே இலங்கை சீனா- பாகிஸ்த்தானை விட்டு இந்தியாவிடம் போனால் பாதுகாப்புச் சபையில் போர்க்குற்ற விசாரணைக்கு சீனா பச்சைகொடி காட்ட வேண்டும் என்பதைத்தான் சீனாவிடம் கேட்கிறது டோன்.

டோன் பலமுறை இலங்கை பற்றிக் குறைவாக எழுதியுள்ளது. மேலைநாட்டுச் சர்வதேச பத்திரிகைகள் அப்படி எழுதினால் அவற்றை புலிகளின் எடுபிடிகளாக வருணித்து அவறைப்பற்றி சம்பந்தபட்ட நாட்டு வெளிவிவகார அலுவலகத்திடம் முறையிடும் பீரிஸ், டோன் எழுதும் போது எப்பவும் வாயையும் பின்புறத்தையும் பொத்திக்கொண்டு கப் சிப் என்று இருந்துவிடுவார். விமல் வீரவன்சாவுக்கும், மேவின் சில்வாவுக்கும் பாகிஸ்த்தானில் டோன் என்ற பத்திரிகை இருப்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னமும் அறிவு வளரவில்லை. அதனால் டோன் தான் கேள்விப்பட்டவற்றை விரும்பும் போது இப்படி இடை இடை எழுதி வருகிறது. என்வே தமிழர்கள் டோன்னுக்கு நன்றி தெரிவித்து தம் பக்கம் வைத்திருந்தால் வருங்காலத்திலும் காட்டு மிராண்டி இந்திய-சிங்களங்களை எதிர்த்து அறிக்கை விட டோன் தயங்காது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய இராணுவமே இதன் பின்னணி என்று பாகிஸ்த்தானுக்கும் நன்றாகத்தெரியும. ஒரு வேளை தங்களுக்கும் இந்தியாவிற்கும் இடையில்போர் மூண்டால் இந்தியா தன் மனித உரிமை மீறல் களையும் போர் விதிகளையும் மீறித்தாக்கலாம் என்ற அச்சமும் உள்வோக்கம் இருக்கலாம். ஆனால் இவர்களும் கப்பல் கப்பல்களாக ஆயுதம் வழங்கியவர்கள் தான். அடிப்படை தன்மைகளைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது இது ஒரு தற்காப்புச் செய்தியும் அது தமிழர்களுக்குச் சாதகமான இருப்பதும் தான் உண்மை. யுத்தத்தில் பங்குபற்றியவர்களில் இவர்களுக்கும் பங்கு உண்டு. அவர்களுடைய செய்தி எங்களுக்குச் சாதகமாக இருக்கின்றது என்பதற்காக அவர்கள் எங்களுக்குச் சார்பாக இருக்கின்றார்கள் என்ற நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.