Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லடை ( சொலவடை )

Featured Replies

  • தொடங்கியவர்

ஆபத்துக்கு உதவாத நண்பனும் , சமயத்துக்கு உதவாத பணமும் ஒன்றுதான் .

விளக்கம்:

ஒரு விடையத்தில் ஒன்று முக்கியத்துவம் இல்லாமல் போனால் குறிக்கச் சொல்லலாம் .

ஆயிரம் கொடுத்து யானை வாங்கினாலும் அது பல்லு மினுக்குதா ?

விளக்கம்:

ஒரு விடையத்தில் ஒருவர் தனது சுயத்தை இளக்கும் பொழுது சொல்லலாம் .

Edited by கோமகன்

  • Replies 231
  • Views 43k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடித்தால் நான் பிணக்காடாய் வெட்டுவேன் என்று முடவன் சொன்னானாம் .

விளக்கம் :

வெறும் வாய் சவாடல்களையும் வெத்து வேட்டுக்களையும் விட்டுக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து சொல்வது .

கத்தரிக்காய் முத்தினால் சந்தைக்கு வரத்தான் வேணும் .

விளக்கம் :

ரகசியம் ஒருபோதும் நெடுங்காலத்திற்கு இருக்காது அது ஏதோ ஒர் நேரத்தில் அது ஒருவகையில் வெளிப்புடும் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

ஆளை ஏய்க்குமாம் நரி அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு .

விளக்கம் :

ஒருவருடைய திறமையை மற்றவர் மதிக்கவேண்டும் . மதிக்காதவர்களை சொல்லப் பயன்படும் .

ஆத்திலை போனாலும் போவனே ஒழிய தெப்பக்காறனுக்கு காசு குடுக்கமாட்டன் எண்டானாம் .

விளக்கம் :

இலகுவாக காசு கொடுத்து செய்யவேண்டிய வேலையை இலவசமாக செய்ய எதிர்பார்ப்பவர்களை சொல்லச் சொல்லப்டும் .

  • தொடங்கியவர்

யானை அழிப்பது தெரியேலையாம் ஆடு அழிக்கிறது தெரியுதாம் .

விளக்கம் :

பெரிய பிரச்சனைகளை விட்டு விட்டு சிறிய அற்ப பிரைச்சனைகளை பூதாகரப் படுத்துவதைச் சொல்லலாம் .

யானை ஒரு குட்டி போடுறதும் பண்டி பல குட்டி போடுறதும் சரியாகுமோ ?

விளக்கம் :

ஒரு வேலையை பலனின்றி பல வழிகளில் செய்வதைவிட ஒரே வழியில் நிதானத்துடன் செய்வதே சிறந்தது .

  • தொடங்கியவர்

யானைக்கு கோபம் வந்தால் வீட்டைப் பிளக்குமாம் , பூனைக்கு கோபம் வந்தால் புல்லுப் பாயை விறாண்டுமாம் .

விளக்கம் :

ஆத்திரத்தின் விளைவு வலியவருக்கும் மெலியவருக்கும் ஒன்றானது .

யானைக்குட்டி கொழுக்கவில்லையே எண்டு உட்கார்ந்து அழுதிதாம் சிங்கக்குட்டி .

விளக்கம் :

போலிக்கு ஒருவரின் வீழ்ச்சியை பார்த்து கவலைப்படுகிறவரைக் குறிக்கும் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

யானை கலக்கின குட்டையில கொக்கு மீன் பிடிக்கப் போச்சுதாம் .

விளக்கம் :

திறமையானவர்களின் வெற்றியில் திமையற்றவர்கள் பலன் அடைவதைக் குறிக்கும் .

யானை தம்பட்டம் அடிக்க ஓனாய் ஒத்து ஊதீச்சுதாம் .

விளக்கம் :

தமது திறமை மேல் சந்தேகம் கொள்ளம் ஒரு சிலர் திறமையானவர்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பதைக் குறிக்கும் .

  • தொடங்கியவர்

இறைக்கிறவன் இளிச்சவாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடுமாம் .

விளக்கம் :

இரக்க குணமும் இளகியமனமும் உள்ளவர்களிடம் பலர் பலன்களை எதிர்பார்பதைக் குறிக்கும் .

உள்ளங்கை பால்சோறைவிட்டுப் புறங்கையை நக்கினது போலையாம் .

விளக்கம் :

எது முக்கியமோ அதைச் செய்யாமல் விட்டு முக்கியமில்லாததைச் செய்வதைக் குறிக்கும் .

  • தொடங்கியவர்

யானையும் யானையும் தேய்க்க கொசுவுக்குப் பிடிச்சிதாம் சனி .

விளக்கம் :

வலிமையானவர்கள் மோதிக்கொள்ளும் பொழுது இடையில் இருக்கும்மெலியவர்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கும் .

உழுகிற காலத்திலை ஊர் சுத்திப்போட்டு அறுக்குற நேரத்திலை அரிவாளோடை போனானாம் .

விளக்கம் :

செய்யவேண்டிய நேரத்தில் வேலைகளைச் செய்யாது பின்பு ஒப்புக்காக நடிப்பதைக் குறிக்கும்.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இடுப்பில ரெண்டு காசு இருந்தால் சுருக்கெண்டு ரெண்டு கதை வருமாம் .

விளக்கம் :

பணம் தருகின்ற ஆணவத்தால் தாறுமாறாக கதைப்பவர்களைக் குறிக்கும் .

எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவாம் மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவாம் .

விளக்கம் :

ஏழைக்கு ஏழையே துணையிருப்பான் என்பதைக் குறிக்கும் .

  • தொடங்கியவர்

இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவனும் செவ்வாயாய்ச் சிரைப்பானாம் .

விளக்கம் :

ஒருவர் ஒழுக்கம் கடமை தவறாது இருந்தால் தவறுகள் ஏற்பட வழி இல்லை .

உயிரோடை இருக்கேக்கை ஒரு முத்தத்துக்கு வக்கில்லை செத்தாப்பிறகு கட்டிக்கட்டி முத்தம் கொடுத்தாளாம் .

விளக்கம் :

ஒருவரின் அருமை தெரியாது தூற்றி விட்டு இல்லாதபோது ஒப்புக்குப் புகழ்பாடுபவர்களைக் குறிக்கும் .

  • தொடங்கியவர்

எட்டின மட்டும் வெட்டுமாம் கத்தி எட்டா மட்டும் வெட்டுமாம் பணம் .

விளக்கம் :

எந்தப் பிரச்சனையையும் காசு தீர்த்து வைக்கவல்லது என்பதைக் குறிக்கும் .

ஊர் பண்டம் உமியாம் தன்ரை பண்டம் தங்கமாம் .

விளக்கம் :

இலவசமாக கிடைக்கின்ற பொருளை ஊதாரித்தனமாக செலவளித்தலைக் குறிக்கும் .

  • தொடங்கியவர்

இரும்பு பிடிச்ச கையும் சிரங்கு பிடிச்ச கையும் சும்மா இருக்காதாம் .

விளக்கம் :

ஒரு சில பழக்கங்களை மனதில் கொண்டவர்கள் வாழ்நாள் முழுக்க அதை மறக்கமாட்டார்கள் .

உடையார் புக்கைக்கு அழுகிறாராம் லிங்கம் பஞ்சாமிர்தம் கேக்கிதாம் .

விளக்கம் :

முக்கியமான தேவைகள் இருக்கும்பொழுது முக்கியமில்லாத தேவைகளை முன்னிலைப் படுத்துவதைக் குறிக்கும் .

பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாளாம்....(அனுபவசாலிக்கு புதியவர்கள் அறிவுரை சொல்வதைக் குறிக்கும்)

வேலீலை போற மட்டத்தேளைப் பிடிச்சு சீலைக்குள்ளை விட்டிட்டு சீலைக்கை போகுது சீலைக்கை போகுது எண்டாளாம்...தேவையல்லாத விடயங்களுக்குள் தலையை நுழைத்து விட்டு அல்லாடுபவர்களைக் குறிக்கும்

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

பத்துப் பிள்ளை பெத்தவளுக்கு ஒரு பிள்ளை பெத்தவள் முக்கிக் காட்டினாளாம்....(அனுபவசாலிக்கு புதியவர்கள் அறிவுரை சொல்வதைக் குறிக்கும்)

முக்கி முக்கி குத்தினவளுக்கு மூண்டாம் எட்டிஎட்டி பாத்தவளுக்கு எட்டாம்.

வேலீலை போற மட்டத்தேளைப் பிடிச்சு சீலைக்குள்ளை விட்டிட்டு சீலைக்கை போகுது சீலைக்கை போகுது எண்டாளாம்...தேவையல்லாத விடயங்களுக்குள் தலையை நுழைத்து விட்டு அல்லாடுபவர்களைக் குறிக்கும்

கிட்ட முட்ட இதே பாணியில் குமாரசாமியர் ஒரு சொலவடையை ஆரம்பத்தில் சுட்டிருந்தார் . உண்மையில் சில நகைச்சுவையானதும் , நச்சென்று ஏற்றும் வகையானதே . உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் மணிவாசகன் .

  • தொடங்கியவர்

இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .

விளக்கம் :

ஒரு விடையத்தில் பலவீனமானவர் எச்சரிக்கையாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .

உழுகிற மாடு எங்கை போனாலும் ஏரும் கலப்பையும் முன்னுக்கு வருமாம் .

விளக்கம் :

முயற்சியும் திறமையும் ஆர்வமும் உடையவர்கள் எந்த இடத்திலும் எங்கு போனாலும் முன்னேறுவார்கள் .

Edited by கோமகன்

குட்டக் குட்ட குனியிறவனும் மடையன் குட்டிறவனும் மடையன்..

  • கருத்துக்கள உறவுகள்

இலை அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் முள்ளு அசைஞ்சாலும் இலைக்கு கேடாம் .

விளக்கம் :

ஒரு விடையத்தில் இருபக்கமும் பாதிப்பு வராமல் புத்திசாலித்தனமாக நடக்கவேண்டும் என்பதைச் சொல்லக் குறிக்கும் .

இதற்கான விளக்கம் தவறுபோல் உள்ளது.

இரு பக்ககமும் பாதிப்பு வராதே.

பலவீனமானவன் தான் பார்த்து நடக்கணும் என்று தான் வரணும் கோ...

(முள்ளில் விழுந்த சேலை போல......?)

  • தொடங்கியவர்

இதற்கான விளக்கம் தவறுபோல் உள்ளது.

இரு பக்ககமும் பாதிப்பு வராதே.

பலவீனமானவன் தான் பார்த்து நடக்கணும் என்று தான் வரணும் கோ...

(முள்ளில் விழுந்த சேலை போல......?)

தவறுக்கு வருந்துகின்றேன் . சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள் விசுகர் .

  • தொடங்கியவர்

சாப்பிடாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகேலாது .

விளக்கம் :

அவசியத்தைப் பொறுக்கலாம் அத்தியாவசியத்தைப் பொறுக்க முடியாது .

எண்ணைக் குடம் உடைந்தாலும் ஐயோ ! தண்ணீர் குடம் உடைத்தாலும் ஐயோ !

விளக்கம் :

ஒரு பிரச்னையின் அடி ஆழம் தெரியாது பிரச்சனைகளைப் பெரிதுபடுத்துவதைக் குறிக்கும் .

  • தொடங்கியவர்

எரியிற வீட்டை நூக்க கிணறு வெட்ட நாள் பாத்தது போலையாம் .

விளக்கம் :

அத்தியாவசியமான வேலையை செய்வதற்கு தேவையில்லாமல் இழுத்தடிப்பதைக் குறிக்கும் .

எவ்வளவு தான் திண்டாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்குமாம் .

விளக்கம் :

எவ்வளவுதான் நல்லது செய்தாலும் திருப்திப்படாதவர்களைக் குறிக்கும் .

  • தொடங்கியவர்

ஒண்ட வந்த எலி எழும்பி நிண்டுதாம் அண்டியிருந்த பூனை அவதியாப் பறந்திதாம் .

விளக்கம்:

இரக்கம் காட்டி உதவி செய்ய வெளிக்கிட்டால் , உதவி செய்தவரையே தூக்கிச் சாப்பிடுபவர்களைக் குறிக்கும் .

கஞ்சி வாக்க ஆள் இல்லாட்டிலும் கச்சை கட்ட ஆள் இருக்கு .

விளக்கம் :

உருப்படியாக உதவி எதுவும் செய்யாமல் , உதவி செய்பவர்களிடையே கலகத்தை உருவாக்குபவர்களைச் சொல்லக் குறிக்கும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வயிலிலை உழுது பருத்தி போடப்போறன் எண்டானாம் அப்பன் அதக்குள்ளை பெடி அந்த நூலிலை தனக்கு வேட்டி நெய்து தா எண்டானாம் .

விளக்கம் :

ஒரு முயற்சியின் பலனை அடைய முன்பு அந்தப் பலனைப் பற்றி கற்பனைகளில் மிதப்பதைக் குறிக்கும் .

ஒரு குருவி தீனி தேடுமாம் ஒன்பது குருவி வாய் திறக்குமாம் .

விளக்கம் :

ஒருவரின் வருமானத்தில் பலர் பயனடைவதைக் குறிக்கும் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

சனிபிடிச்ச நாரை கெளுத்தி மீனைப் பிடிச்சு விழுங்கீச்சுதாம் .

விளக்கம் :

பிரச்சனைகளில் இருப்பவர் மேலும் பிரச்சனைகளில் தானாக விழுவதைக் குறிக்கும்

கொதி தண்ணியில விழுந்த பூனை பச்சைத் தண்ணியைக்கண்டாலும் பயப்பிடுமாம் .

விளக்கம்:

ஒருபிரச்சனையில் பிழையான அனுபவத்தை எடுத்தவர் எல்லா பிரச்சனைகளுக்குமே அதே பார்வையைப் பார்ப்பார்

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

செத்துப்போன மாடு உயிரோடு இருந்திது எண்டால் , ஓட்டைச் செம்பாலை ஒம்பது செம்பு பால் கறப்பன் எண்டானாம் .

விளக்கம் :

பிரையோசனம் இல்லாத வீண் வெட்டிப் பேச்சுகள் கதைப்பவர்களைக் குறிக்கும்.

சோத்திலை கிடக்கிற கல்லைப் பொறுக்காதவன் , சொக்கநாதர் கோயில் அத்திவாரக்கல்லை பேர்ப்பன் எண்டானாம் .

விளக்கம் :

முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்துகொண்டு பெரும் எடுப்பில் கதைப்பவர்களைக் குறிக்கும் .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்கு சிம்மாசனம் போட்டிச்சிதாம் .

விளக்கம்:

கஸ்ரமான நிலையில் இருந்துகொண்டு வெறும் பட்டிற்காக தகுதிக்கு மீறி மற்றவர்களுக்கு உதவிசெய்ய முயலுவதைக் குறிக்கும்

தடவிப் பிடிக்க மயிர் இல்லையாம் அவள்பேர் கூந்தல் அழகியாம் .

விளக்கம்:

திறமைகள் இல்லது புலுடா விட்டப் பெயர் எடுப்பதைக் குறிக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.