Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நல்லிணக்கம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுமாயின், வெளித்தரப்பினரின் அழுத்தங்கள் குறையலாம்!

Featured Replies

இலங்கையில் நல்லிணக்கம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுமாயின், வெளித்தரப்பினரின் அழுத்தங்கள் குறையலாம்! - The Economist

இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தையும், ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச துரிதப்படுத்தும் பட்சத்தில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் வெளித்தரப்பினர் தமது அழுத்தங்களைக் குறைக்கலாம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்டு வெளிவரும் The Economist எனும் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ள நிலையில், இவ்வூடகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் இவ்வூடகத்தில் வெளிவந்துள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம்.

இக்கூட்டத் தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுன்கிறது. பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே இத்தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுன்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் வெளிவந்த காணொளிகளை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்க மறுக்கின்றார்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் இராணுவ நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளது.

ஆனால் சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானமானது, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன் ஊடாக ஏனைய பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறு கேட்பதற்கான ஒரு நகர்வாக கருதப்படுகின்றது.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கான அனுமதி வழங்கப்படுதல், கருத்துச் சுதந்திரம், குடியியல் நிர்வாகத்தில்படைத்தரப்பின் தலையீடுகளை குறைத்தல், துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முடக்குதல் தற்றும் படைத்தரப்பினரால் தனித்து மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை வழங்குதல் போன்ற பரிந்துரைகளே சிறிலங்கா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் ஏனைய பரிந்துரைகளாகும்.

சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை கியூபா, பாகிஸ்தான், ரஸ்யா, அல்ஜீரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தையும், ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச துரிதப்படுத்தும் பட்சத்தில், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் வெளித்தரப்பினர் தமது அழுத்தங்களைக் குறைக்கலாம்' என The Economist சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=29cf701d-585b-4686-a7e8-0db85c0552b6

  • தொடங்கியவர்

முடிந்தால் இதை உங்கள் முகநூலில் தரவேற்றம் செய்யுங்கள்

Unslayable ghosts

BURY the past. Those killed nearly three years ago in the last, savage days of Sri Lanka’s civil war will never return. Foreign and local critics who harp on about horrors are doing down a fragile country. “Any sensible person will realise the advantage our people got. Today there is no more killing, fighting. It is peaceful, people are free.”

So argues Gotabaya Rajapaksa, Sri Lanka’s defiant and powerful defence secretary (and brother to the president, Mahinda Rajapaksa). But for the first time since the end of the war in 2009, the Sri Lankan government may be forced to answer for its actions to the United Nations’ human-rights council. This week, a Sri Lankan delegation arrived in Geneva, for a council session starting on February 27th. America (with European support) is expected to propose a resolution, calling for the government to report on both how it is fostering better ties with Tamils and its inquiries into possible war crimes.

http://www.economist.com/node/21548283

Edited by akootha

இந்த நடவடிக்கையைத்த்தானே செய்யாமல் தாங்கள் மட்டுமே என்ற நிலையில் சிங்களம் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.