Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் மகிந்தரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவின் தொலைபேசி உரையாடல் ஒன்று ஓட்டுக்கேட்க்க ப்பட்டதாக தற்போது புதிய சர்ச்சை ஒன்று ஆரம்பமாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் புலிகளின் அரசியல் தலைவர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர்…

அரச படைகளிடம் சரணடைய விரும்பியது யாவரும் அறிந்ததே. இதற்கு அனுசரணை வழங்கிய ஊடகவியலாளர் மெரி கொல்வின் அவர்களும் சமீபத்தில் சிரியாவில் கொல்லப்பட்டார்.

புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைய விரும்பிய செய்தியை மெரி கொல்வின் அவர்கள் நம்பியார் ஊடாக கோத்தபாயவுக்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும் மே 17ம் திகதி கோத்தபாய ராஜபக்ஷ வன்னித் தலைமையகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு சரணடையும் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு அவர் பயன்படுத்திய தனது கையடக்க தொலைபேசி என்று சொல்லப்படுகின்றது. சாதாரண G.S.M கையடக்கத் தொலைபேசியானது பாதுகாப்பற்ற ஒரு அலைவரிசயாகும்.

இதனை தகுந்த கருவிகள் இருந்தால் ஊடறுத்து ஒட்டுக்கேட்க முடியும். இதற்கு தேவையானது குறிப்பிட்ட நபரின் கையடக்க தொலைபேசியின் இலக்கம் மட்டும் தான். இதனை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது மட்டுமல்லாது பதிவு செய்தும் வைத்துள்ளாதாக கூறப்படுவதே இலங்கை அரசை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக கையடக்க தொலைபேசி உரையாடல்களை 2 வழி முறைமூலம் ஓட்டுக்கேட்க்க முடியும்.முதலாவது வழிமுறை நாம் மேல் குறிப்பிட்டது போல தகுந்த கருவியைக் கொண்டு ஊடறுத்துக் கேட்ப்பது.

2வது வழிமுறை, வழங்குனர் ஊடாக ஒடுக்கேட்ப்பது. அதாவது இலங்கையில் கோத்தபாய டயலக் அல்லது மொபிரெல்லை பாவித்தால் அவர்கள் நிலையத்தில் இருந்து கோத்தபாயவின் உரையாடலை ஒட்டுக்கேட்க்க முடியும்.

போர் உச்சக்கட்டத்தை எட்டியவேளை, கோத்தபாய மற்றும் சில முக்கிய இராணுவத் தளபதிகளின் மோபைல் போன்கள் இவ்வாறு ஒட்டுக்கேட்க்கப்பட்டதா என்ற சந்தேகங்கள் தற்போது வலுப்பெற்றுள்ளது.

காரணம் அந் நிலையங்களில் வேலைசெய்வோர் தமது தலைமைக்குத் தெரியாமல், முக்கிய புள்ளிகளின் உரையாடலைப் பதிவுசெய்தால், பின் நாட்களில் அதனை பாரிய விலைக்கு விற்க முடியும்.

அதாவது சில இராணுவத்தினர் பொழுது போக்காக எடுத்த போர்குற்ற வீடியோக்களை தற்போது விற்று காசு சம்பாதிப்பது போல இதனையும் ஒருவர் பதிவுசெய்து அமெரிக்காவுக்கு பெருந்தொகைப் பணத்துக்கு விற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இல்லையேல் இப்படிச் செய்யலாம் என்ற ஆலோசனையை, அமெரிக்கா யாராவது ஒரு நபருக்கு கொடுத்திருக்கலாம் எனவும் தற்போது சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்கா தன்னிடம் இதுபோன்ற ஒரு உரையாடலின் பிரதி இருக்கிறது என்பதனை இதுவரை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ஆனால் சரத் பொன்சேகாவின் விடையத்தில் அமெரிக்கா சற்று எல்லை மீறி தனது சக்தியை பாவித்து வருவதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கோத்தபாய மற்றும் மகிந்தருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இச் செய்தி பரவலாகப் பேசப்படுகிறது.

கோத்தபாய புலிகளின் தலைவர்களைச் சுடச் சென்னார் என்பதற்கு அமெரிக்காவிடம் ஆடியோ ஆதாரம் இருக்கிறது என்னும் செய்தி, இவர்களால் பேசப்பட்டு, செல்லவேண்டிய இடத்துக்குச் இச்செய்தி சென்றுள்ளது.

இதன் காரணமாகவே சரத் பொன்சேகாவை தான் மன்னிப்பு வழங்கி விட்டு விடுவதாக ரொபேட் ஓ பிளேக்கிடம் மகிந்தர் இரகசியமாகக் கூறியுள்ளார்.இருந்தாலும் உடனடியாக விடுவிக்க முடியாது என்றும், ஏதாவது நல்ல தினங்களில் இல்லையேல் பண்டிகை நாட்களில் அவரை விடுதலை செய்வதாக மகிந்தர் கூறியுள்ளார்.

அதாவது அமெரிக்காவிடம் இவ்வாறாக சாட்சியங்கள் இருந்தும் அதனை அது, நல்ல வழியில் பயன்படுத்தவில்லை. மாறாக தன் நலனுக்காவும், அது ஐக்கிய தேசிய கட்சியுடன் கொண்டுள்ள உறவுக்காகவுமே இக் காரியங்களில் ஈடுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக புலனாகிறது.

மொத்தத்தில் தன்னிடம் உள்ள சில சாட்சிகளை வைத்து இலங்கையை மிரட்டவே அது முனைப்புக் காட்டி வருகிறது. இதேவேளை இதனை தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் நல்லதல்லவா ? http://www.eelamwebsite.com/?p=21071

Edited by puthiyavan28

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்கேட்டதை வைத்து வெளிப்படையாக மிரட்டச் சொல்கிறாரா இந்தச் செய்தியாளர்? :rolleyes: ஒட்டுக்கேட்பதே தவறு என்று பிரச்சினை வராது?? :wub:

கோத்தா அமேரிக்கா நிரந்தர வசிவிட வாதி என்ற வகையில்,

செய்மதி தொலைபேசிகள் ஊடாக கதைத்தால் அமேரிக்கா அதை இலகுவாக கேட்கலாம்.

சிங்கள தொலைபேசி நிறுவனம் ஊடாக கதைத்தால், உள்ளுக்குள் ஒருவரை பிடித்து அதன் மூலம் கேட்டு இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.