Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரவன்சவும் சம்பிக்கவுமே துரோகிகள்: விக்கிரமபாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரவன்சவும் சம்பிக்கவுமே துரோகிகள்: விக்கிரமபாகு _ Vikramabahu_Karunaratne_j300_1_3.jpg

இனவாதத்தை தூண்டிவிட்டு இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை குழப்பியடிக்கும் விமல் வீரவன்ச, சம்பிக்க போன்றவர்களே உண்மையான தேசத்துரோகிகளாவர். அவ்வாறானவர்களை அரசாங்கம் அமைச்சுப் பதவிகளிலிருந்து தூக்கியெறிய வேண்டும் என்று நவசமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி செயற்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதும், குறித்த அமைச்சர்கள் மாத்திரம் அதனை எதிர்ப்பதன் நோக்கம் என்னவெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் அமைந்துள்ள நவசமாஜ கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமைப்பேரவையில் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றத் தேவையில்லை. நாங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துறைகளின்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளோம். சில நடவடிக்கைகளை எடுத்தும் உள்ளோம் என அரசாங்கம் கூறுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை மக்கள் எதிர்க்கவில்லை. மாறாக சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் இன்று சில பேரினவாதிகளுமே எதிர்க்கின்றனர். அன்று தொட்டு இன்றுவரை இது தொடர்கின்றது. அன்று எல்.எச்.பெட்டா நந்த மற்றும் எப்.ஆர்.ஜயசூரிய போன்றவர்கள் செய்த இனவாத செயற்பாடுகளையே இன்று இவர்களும் செய்கிறார்கள்.

அன்று முதல் இன்றுவரை ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இந்த இனப்பிரச்சினையினைத் தீர்த்து வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதன் விளைவாகவே இன்று இப்படியான பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது ஜனாதிபதி இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை விடயம் தொடர்பாக பேசியிருந்தார். அத்தோடு இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்தத் தயார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் இந்நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பிக்க மற்றும் விமல் போன்றவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தவுள்ளனர். இதன் நோக்கம்தான் என்ன என்று புரியவில்லை.

அரசாங்கம் முன்னெடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளை குழப்பியடித்து மக்களை திசைதிருப்ப முற்படும் இவ்வாறானவர்களே உண்மையான தேசத்துரோகிகள். எனவே, இவ்வாறானவர்களை அரசாங்கம் உடனடியாக அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும்.

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளின்படி அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். சரியோ பிழையோ சனல் 4 வீடியோ தொடர்பாக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் போன்ற முக்கிய புரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சிணை தொடர்பான திட்டங்கள் எதனையும் முன்வைக்கவிடாமல் குழப்பியடிக்கும் இனவாதிகளை கருத்தில்கொள்ளாது, நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ___

veeveeakeவீரகேசரி இணையம்.sari

அன்றைய போர்க்கால சூழலில் நாம் எமக்குள் துரோகிகளை கண்டோம்.

இன்று சிங்களம் சர்வதேசத்துடன் போராடுகின்றது, அவர்களுக்குள்ளும் துரோகிகள் உருவாகிவருகின்றார்கள்.

அன்றைய போர்க்கால சூழலில் நாம் எமக்குள் துரோகிகளை கண்டோம்.

இன்று சிங்களம் சர்வதேசத்துடன் போராடுகின்றது, அவர்களுக்குள்ளும் துரோகிகள் உருவாகிவருகின்றார்கள்.

சிங்கள பயங்கரவாதிகளின் அரசியல் விவாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்ததில்லை.

கடந்த 15 வருடங்களாக இவற்றை இடைக்கிடை பார்பதுண்டு. அதில் காரசாரமான விவாதங்களில் சரளமாக பாவிக்கப்படும் வார்த்தைகள் சில "சிங்களத் துரோகம்", "பௌத்த துரோகம்", "அரச விரோதி".

தமிழின அழிப்பு நடவடிக்கைகளை சிங்களக் காட்டுமிராண்டிகள் நியாயப்படுத்த இந்த விவாதங்களில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பெரிதும் உதவுகிறது.

தற்போது ஒரு கிழமையில் 8 நீண்டநேர விவாத நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

சிங்கள பயங்கரவாதிகளின் அரசியல் விவாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்ததில்லை.

கடந்த 15 வருடங்களாக இவற்றை இடைக்கிடை பார்பதுண்டு. அதில் காரசாரமான விவாதங்களில் சரளமாக பாவிக்கப்படும் வார்த்தைகள் சில "சிங்களத் துரோகம்", "பௌத்த துரோகம்", "அரச விரோதி".

தமிழின அழிப்பு நடவடிக்கைகளை சிங்களக் காட்டுமிராண்டிகள் நியாயப்படுத்த இந்த விவாதங்களில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பெரிதும் உதவுகிறது.

தற்போது ஒரு கிழமையில் 8 நீண்டநேர விவாத நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

சரியும் பொருளாதாரம், மேருலக அழுத்தம், சுருட்டும் சீனா ... மேலும் பல பிரிவினைகளையும் சிங்களவர்கள் மத்தியில் உருவாக்கும். அது இராணுவத்தை பலமான சக்தியாக மாற்றும். அது பல எதிர்வு கூற முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.