Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் குற்றம் சுமத்தப்படும் எவரையும் ஹேக்கிற்கு கொண்டு செல்ல முடியும் - சரத் என் சில்வா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sarath%20N%20Cilva%20CJ_CI.jpg

ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும் போர் குற்றம் சுமத்தப்படும் எவரையும் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்பதால், இலங்கையின் தலைவர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே முன்னாள் நீதியரசர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்; கூற்றை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை தற்போது வேண்டுமானாலும் ரோம் உடன்பாட்டின் பங்காளியாகலாம். சாதாரணமாக சர்வதேச உடன்பாடு ஒன்றுக்கு இணக்கம் தெரிவிக்கும் அதிகாரம் அரச தலைவருக்கே உள்ளது. இதன் போது, உள்நாட்டு சட்டம் அல்ல, சர்வதேச சட்டமே பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அப்போது, நாடாளுமன்றத்தில் பெருபான்மை பலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கே இருந்தது. எனினும் ஜனாதிபதி பொதுஜன ஐக்கிய முன்னணியை சேர்ந்தவராக இருந்தார். அப்போது பாரிய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அமைச்சு பதவிகளை பகிர்ந்து கொள்வதில் தான் இந்த பிரச்சினைகள் இருந்தன. இதனால் ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை.

ரோம் உடன்பாட்டின் 15வது ஷரத்தில், குற்றவியல் வழக்கை நடத்துபவருக்கு பிராசிகியூட்டார் அதிகாரம் உள்ளது. அவர் விசாரணை நடத்தி ஆரம்ப விசாரணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க முடியும். உதாரணமாக ரோம் உடன்பாட்டின் படியான வழக்கு விசாரணை ஒன்றை எடுத்துக்கொண்டால், சூடான் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. எனினும் சூடான் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் லைப்பீரிய தலைவர் ஒருவருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படுகிறது.

யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசோவிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது. இந்த தரப்பினர் எவரும் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. இதுவே விசாரணைகள் நடத்தப்படுவதற்கான ஆபத்து இருப்பதை உணர்த்துகின்றன எனவும் சரத் என் சில்வா கூறியுள்ளார்.

ரோம் இணக்கப்பாடுகளில் கையெழுத்திடாது தொடர்பில் ஏதேனும் கௌரவம் வழங்கப்பட வேண்டுமாயின் அந்த பெருமை சந்திரிக்காவுக்குரியது - எஸ்.எல்.குணசேகர

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இராணுவத்தினர் மற்றும் இலங்கையின் தலைவர்களை கொண்டு செல்ல முடியாத படி ரோம் இணக்கப்பாடுகளில் கையெழுத்திடாது தொடர்பில் ஏதேனும் கௌரவம் வழங்கப்பட வேண்டுமாயின் அந்த பெருமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிற்கு வழங்கப்பட வேண்டுமே அன்றி, ரணில் விக்ரமசிங்கவுக்கு அல்ல என சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் வகையில், ரோம் உடன்பாடுகள் உருவாக்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், நடைபெற்ற நியுரேம்பார்க் வழக்குகளின் பின்னர், இந்த உடன்பாடுகள் உருவாக்கப்பட்டது.

ரோம் உடன்படிக்கையில் ரணில் விக்ரமசிங்க, கையெழுத்திட கூடாது என்பதற்காக அதில் கையெழுத்திடவில்லை. மாறாக இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி பிரதமர் அவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகளில் கையெழுத்திட முடியாது.

நாட்டின் தலைவரான ஜனாதிபதியே அதில் கையெழுத்திட வேண்டும். ரணில் பிரதமராக இருந்த போது, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதியாக இருந்தார். இருவருக்கு ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் காரணமாக, ரோம் உடன்பாடுகளில் கையெழுத்திட அல்லது மறுக்க எவரும் இல்லாத நிலையில், அந்த உடன்படிக்கை தொடர்பான விடயம் அத்தோடு முடிந்து போனது எனவும் குணசேகர கூறியுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழரசு

மகிந்தாவுடன் முரண்பட்டு நிற்கும் முன்னாள் நீதியரசர் பல பயனுள்ள தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார். புலம்பெயர் அமைப்புக்கள் இதைப்பற்றி ஆராயலாம் :D

ரோம் உடன்பாட்டின் 15வது ஷரத்தில், குற்றவியல் வழக்கை நடத்துபவருக்கு பிராசிகியூட்டார் அதிகாரம் உள்ளது. அவர் விசாரணை நடத்தி ஆரம்ப விசாரணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க முடியும். உதாரணமாக ரோம் உடன்பாட்டின் படியான வழக்கு விசாரணை ஒன்றை எடுத்துக்கொண்டால், சூடான் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. எனினும் சூடான் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் லைப்பீரிய தலைவர் ஒருவருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படுகிறது.

யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மிலோசோவிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தியது. இந்த தரப்பினர் எவரும் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. இதுவே விசாரணைகள் நடத்தப்படுவதற்கான ஆபத்து இருப்பதை உணர்த்துகின்றன எனவும் சரத் என் சில்வா கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.