Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்காக வாழ்ந்த இளைஞனுக்கு 420€ உதவுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக வாழ்ந்த இளைஞனுக்கு 420€ உதவுங்கள்

16.07.1993 அன்று தனது 19வது வயதில் இலங்கை இராணுவத்தினரால் நல்லரட்ணம் சிங்கராசா அவர்கள் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திக் பேரில் கைது செய்யப்பட்ட நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு தற்போது 38வயது. கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனைகளோடும் காயங்களோடும் வாழ்கிற நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு இலங்கை நீதிமன்றம் 50வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்டுள்ளார்.

மகன் மீது விதிக்கப்பட்ட கடும் தண்டனையைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிங்கராசாவின் தந்தையார் நல்லரட்ணம் மாரடைப்பால் மரணமடைந்தார். சிங்கராசாவின் சகோதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 1997இல் வீரச்சாவடைந்துவிட்டதோடு தாயார் நிரந்தர நோயாளியாகிவிட்டார். சிங்கராசாவின் சகோதரியின் கணவர் இலங்கை இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதோடு இவர்களது குடும்பம் வறுமைக்கோட்டின் கீழ் சென்றுவிட்டது.

உழைக்கக்கூடிய வயதில் இருக்கும் சிங்கராசாவும் கொடும் சிறைவாசத்தை அனுபவிக்க வீட்டுப் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாத சகோதரியால் தனது பிள்ளைகளின் கல்வியைக் கூட வழங்க முடியாத நிலமையில் படித்துக் கொண்டிருந்த மகன் கூலிவேலைக்குச் சென்று குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார்.

தற்போது நுரையீரல் பாதிப்புற்ற நோயாளியான சிங்கராசாவின் தாயாரின் உடல்நிலமை மோசமடைந்துள்ள நிலைமையில் தனது தாயாரின் கடைசி காலங்களைக் கவனித்து உதவ முடியாத கையறு நிலமையில் உள்ள சிங்கராசா தனது தாயாருக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் உதவி வேண்டி நிற்கிற அதேவேளை தனது விடுதலைக்காக மனித நேயர்களையும் மனிதவுரிமை அமைப்புகளையும் உதவுமாறு வேண்டுகிறார்.

இவரது குடும்பத்திற்கான வாழ்வாதர உதவியினை புலம்பெயர் உறவுகளிடம் வேண்டியிருந்தோம். இதுவரையில் 184500,00ரூபா இவரது குடும்பத்திற்கு உறவுகளால் உதவப்பட்டுள்ளது. இவரது மருமகன் ஒரு சுயதொழிலை ஆரம்பிக்க இரண்டரை லட்சரூபா வரையில் தேவைப்படுகிறது. மீதமாகத் தேவைப்படுகிற 65500,00ரூபா(420,00€) உதவியினை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். எங்களுக்காக தனது வாழ்வைத் தந்த சிங்கராசாவின் குடும்பத்திற்கு உங்கள் உதவிகளை வழங்கி அக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு வேண்டுகிறோம்.

உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

தொடர்புபட்ட செய்தி இணைப்பு :-

http://tamilnews24.com/nesakkaram/ta/?p=1339

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.