Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட TNA நுழைவாயிலில் நின்று பேசுவதற்கு நேரம் தாருங்கள் என கேட்க முடியுமா?யாழில் சுமந்திரன் கேள்வி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சுமந்திரன் கேள்வி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Sumanthiran10_CI.jpg

தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு செல்வதில்லையென்று எடுத்துள்ள தீர்மானம் மற்றும் அதையடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றி கட்சியினருக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. அதன் ஒர் அங்கமான யாழ் மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை இன்றைய தினம் நல்லூரிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தினில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து உரையாடினர். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கொழும்பிலிருந்து சென்ற சுமந்திரன் சிறப்புரை ஆற்றியிருந்தார். மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு தமது உரையினில் சுமந்திரன் தெரிவிக்கையில்

2009ம் ஆண்டின் பின்னர் ஜ.நா மனிதவுரிமைகள் அமையம் தற்போது 12ஆவது தடவை அமர்வினைக் கூட்டியிருக்கின்றது. இதற்கு முன்னரும் 11தடவை கூட்டப்பட்டிருக்கின்றது. அப்போது கூட்டமைப்பிடம் யாரும் கேட்காத கேள்வி இப்போது ஏன் கேட்கப்படுகின்றது? இதை புரிந்தும் புரியாதது போல சிலர் கேட்கத் தூண்டுகிறார்கள்.

47நாடுகளையும், பல அரசாங்கங்களையும் உள்ளடக்கியதாக மனிதவுரிமைகள் சபை உள்ளது. இதில் ஒரு நாட்டில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான நாம் அங்கு சென்று எப்படி பங்கு கொள்ள முடியும்?

ஜெனிவா அமர்வுகளில் பதிவு செய்யப்பட்ட மனிதவுரிமை அமைப்புக்கள் சிலவற்றுக்கு அனுமதியிருக்கின்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றக் கிடைத்தாலும், 3நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும், அதேபோன்று பேசுகிறவர் தான் சார்ந்த கட்சியின் பெயரைக் கூறி பேசமுடியாது.

அவ்வாறு பேசினால் அங்குள்ள ஒழுங்கு விதிகளை மீறியதாக அந்த மனிதவுரிமைகள் அமைப்பின் பதிவு இரத்துச் செய்யப்படும். அரசு மட்டுமே பேச முடியும். இது எழுதப் பட்டிருக்கின்ற சட்டம். ஆனால் பக்க நிகழ்வு என்ற ஒன்றில் அமர்வில் கலந்து கொண்ட தூதுவர்கள், இராஜதந்திரிகளை அழைத்துப் பேசமுடியும்.

அதுவும் நுழைவாயிலில் நின்று சாப்பாடு வைத்திருக்கின்றோம் என கூறி சிலரை அழைத்து சில விடயங்களை அவர்களுக்குச் சொல்லமுடியும், அதுவும் அந்த மனிதவுரிமைகள் அமைப்பின் சார்பிலேயே சொல்ல முடியும். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல அரசுகளினால் அரசியல் இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு சென்ற ஜப்பசி மாதம் அமெரிக்க இராஜங்கத்திணைக்களம் எம்மை அழைத்துப் பேசியிருக்கின்றது. வேறு யாரையும் அவ்வாறு அழைக்கவில்லை, அமெரிக்காவினுடையதும், இந்தியாவினுடையதும் அறிக்கைகளில் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் பேசுங்கள் என கூறுகிறார்கள்.

அந்தளவுக்கு உலகளவில் எமக்கு அங்கீகாரம் இருக்கின்றது. அவ்வாறான தமிழ்தேசிய கூட்டமைப்பு, அப்படியான அமைப்பின் தலைவர் ஒரு நுழைவாயிலில் நின்று எதோவொரு மனிதவுரிமை அமைப்பின் பெயரில் நான்பேச விளைகிறேன் எனக்கு நேரம் தாருங்கள் எனக்கேட்டு பேசுவது முறையா.?

அப்படியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நுழைவாயிலில் நின்று கொண்டு சாப்பாட்டுப்பொதி கொடுத்து அங்கு வருபவர்களை அறைகளுக்கு அழைத்துச் செல்வது முறையா? அப்படி செய்வது பிழை என்று நான் சொல்லவில்லை, அப்படியானதொரு நிலை எதிர்வரும் ஜ}ன் மாதத்திலோ, செப்ரெம்பர் மாதத்திலோ வரலாம்.

ஆனால் இன்றுள்ள நிலையிலே எங்களை நாம் இருக்கிற ஸ்தானத்திலிருந்து நாங்களே கிழே இறக்கும் நிர்ப்பந்தம் எமக்குக் கிடையாது. இந்த சபையில், கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் பிரேரணை எப்படி உருவானது? உலகின் வல்லரசு தானாக முன்வந்து ஒரு பிரகடனத்தை எப்படிக் கொண்டு வந்திருந்தது?

நாலு மாதங்களுக்கு முன்னர்தானே நாம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் அழைப்பை ஏற்று அங்கு சென்று வந்திருந்தோம். எனவே மக்களுக்கு எல்லாம் புரிந்திருக்கும் என நான் நினைத்திருந்தேன். நாலையும் நாலையும் கூட்டிப்பார்க்க கூட தெரியாதா?

அந்தச் சந்திப்பின் பின்னர் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தினர் சொன்னார்கள். இலங்கை தொடர்பான எமது கொள்கையை மீள வகுத்துக் கொள்ளவிருக்கின்றோம். நீங்கள் சொன்னதை கருத்திலெடுத்து இலங்கை தொடர்பான எமது புதிய கொள்கையை வகுப்போம் அது உங்கள் மக்களுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கும் என சொன்னார்கள்.

கனடா சென்றிருந்தபோது அதில் ஒருநாள் வாசிங்டன் சென்றிருந்தேன். இராஜங்கத் திணைக்களத்துடன் ஒன்றரை மணிநேரம் பேசினேன், ஜ.நா நிறைவேற்றப் படக்கூடிய தீர்மானங்கள் மூன்று வகைப்படும். ஒன்று செயற்பாடுடைய தீர்மானம். சென்ற ஆண்டின் செப்ரெம்பர் மாதம் கனடா கொண்டு வந்த தீர்மானம் கலந்துரையாடல் தீர்மானம்.

இரண்டாவது. இந்த இரண்டையும் தள்ளிப்போட்டோம். இந்த இரண்டிற்கும் இடைப்பட்டது. ஒன்றை பிரகடனப்படுத்தும் தீர்மானம், அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படா விட்டால் அடுத்த கூட்டத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறானதொரு தீர்;மானமே இன்று அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம்.

ஜனவரி மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தில் பேசியிருந்தேன். அதை மட்டுமே நான் கூறமுடியும், அதன் பின்னர் எழுந்ததே அமெரிக்காவின் இந்தப் பிரகடனத் தீர்மானம். 2009ம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஒரு விசேட தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது 12அதிக படி வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

அதனால்தான் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டு வர மூன்று வருடங்களாகியது. உலக அரசியல் நிலமைகளை சீர்தூக்கி பார்த்து என்ன விதமாக இது செய்யப்படக்கூடும் என சிந்தித்தோம். மேற்குலக நாடு கொண்டுவந்தால் அது தோற்கடிக்கப்படும், அமெரிக்கா கொண்டு வருவதாக இருந்தாலும், அடுத்த வாரம் யார் இந்த தீர்மானத்தை கொண்டுவரப்போகிறார்கள் என்பது வெளியே கொண்டுவரப்படும்.

ஜெனீவாவில் எமது பிரசன்னம் உதவியாக இருக்குமா? பிரச்சினையாக இருக்குமா என்றும் ஆலோசித்தோம், உலகத்தின் வல்லரசு ஒரு தீர்மானத்தை கொண்டு வரும்போது உலகத்தின் சிறிய அமைப்பு அதன் உந்துதலால் தான் இது கொண்டுவரப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளுமா?

ஜ}ன், செப்ரெம்பர் மாதத்தில் நிலை வேறாக இருக்கமுடியும், ஆனால் இன்றிருக்கின்ற நிலைமையில் எமக்கு கேடாக அமையும், என்ற தீர்மானத்தை சந்தேகத்திற்கிடமற்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம், அதுவே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மக்களுடைய எதிர்பார்ப்பு வித்தியாசமாய் இருந்திருக்கிறது.

இந்த தடவை அவ்வாறான எதிர்பார்ப்பு வந்திருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றுத் துரோகத்தை செய்து விட்டது என்பதை நம்பிக் கொண்டிருக்காமல், அவர்களிடம் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உண்மையை சொல்லவேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தனதுரையில், நாம் சிலவேளை பார்கிற விடயங்கள் பிழையாக இருந்தால் வரலாற்றில் தவறான மனிதர்களாக மாற்றப்படுவோம், சரியாக நடந்தால் வரலாற்றில் நல்ல தீர்மானத்தை எடுத்தவர்களாக கருதப்படுவோம்.

பல பிரச்சினைகளை சந்திக்கின்றபோது நாம் பட்டை தீட்டப்படுகின்றோம். இன்று ஜெனீவாவிலுள்ள பிரச்சினைதான் இன்று எமக்கு ஒரு வெளிச்சத்தை காண்பிப்பதாகவுள்ளது. ஆனால் இன்று ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் கூட இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நிறைவேற்றுங்கள் என்பதாக இருக்கின்றது.

ஆனால் அது பொருத்தமற்றது, அது எமக்கு எதையுமே தராது என்பதை வெளிப்படையாவே நிராகரித்திருக்கின்றோம், எனவே அதை ஆமோதிப்பதாக அதை நிறைவேற்றுக்கள் என்பதாக அங்கு சென்று வலுச்சேர்க்க முடியுமா என்ற கேள்வி எமக்கிருக்கின்றது.

நாம் ஒரு பகிரங்கமான சர்வதேச விசாரணையினை நாம் வலியுறுத்தி வருகின்றோம். இன்று மக்களை வழி நடத்தவேண்டிய கடப்பாட்டில் இன்றிருக்கின்றோம், அதனையே சம்மந்தன் செய்திருக்கின்றார். நாம் எடுத்த முடிவில்தான் எமது வரலாற்று இருப்பும், மறைவும் இருக்கின்றது என்றார்.

http://www.globaltam...IN/article.aspx

சுமந்திரனின் கேள்விகளும் கருத்துக்களும் நியாயமானவையாக படுகின்றது.

சிங்களத்திற்கு கடைசி சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது போலவும் அடுத்த மனித உரிமை தொடருக்கு தாம் செல்லக்கூடும் என்றமாதிரியும் கூறியுள்ளார்.

ஆனால், மக்கள் கூட்டமைப்பின் மீது ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்களை தொடர்ந்தும் முன்வைப்பதே வரலாற்று தவறுகளை தவிர்க்க உதவும்.

கூத்தமைப்பினர் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை நேரடியாக சந்திக்காமல் அறிக்கைகள், கடிதங்கள் எழுதுவதன் மூலம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கடுமையான முயற்சிகளை முறியடிக்க முடியாது.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது எக்காலத்துக்கும் பொதுவான ஒரு பழமொழி.

ஜெனீவா சென்று ஒன்றும் செய்ய முடியாது என்பவர்கள் - அரசியல், அரசியல் நகர்வுகள் தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாநாடுகளில் பங்குபெற்றுவதும், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதும் தான் படுகொலைகளை, இன அழிப்பை தினமும் ஏதோ ஒரு வடிவத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் பிரதிநிதிகள் செய்யும் வேலையல்ல. அழைப்புக் கிடைத்தால் தான் செல்லமுடியும் என்று சொல்வது சோம்பேறிகளின் குணம்.

ஜெனிவா செல்வது ஐ. நா. சபை நிகழ்வுகளில் கலந்து பேசவல்ல. அங்கு சென்றிருந்தால் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், சிங்கள பயங்கரவாத அரசின் நீண்டகால இழுத்தடிப்புக்களையும் எடுத்துக் கூறியிருக்கலாம். அத்துடன் புதிய அவசியமான அரசியல், ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆழமான அடிவருடிப் புத்தியுள்ள சம்பந்தன், சுமந்திரன் தவிர்ந்த, தமிழரின் பிரச்சனைகளை முழுமையாக எடுத்துச் சொல்லும் வல்லமை உடைய ஏனையவர்கள் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழர் சர்வதேச அரசியல் பலம் பெறுவதை விரும்பாத தமிழின விரோத சக்திகளுக்கு துணையாக கூட்டமைப்பின் சம்பந்தனும், எடுபிடிப் பச்சோந்தி சுமந்திரனும் நடந்துள்ளனர். பின்னர் தமது கையாலாகாத தனத்தாலும், இந்திய அபிமான, சுயநல தேவைகளுக்காகவும், சோம்பேறித்தனத்தாலும் வேறு சிலர் இந்த இரு பிற்போக்குச் சக்திகளை ஆதரித்துள்ளனர்.

கூத்தமைப்புக்கு வக்காலத்து வாங்க கனடாவிலிருந்து கோணங்கித்தனமான அறிக்கைகள் விடுவதால் தமிழ் மக்கள் ஏமாறப் போவதில்லை. மாறாக இவர்கள் தமிழின அழிப்புக்கு துணை போகின்றனர். இவர்களுக்கும் சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்படும் டக்லஸ் போன்ற கொலைகாரக் கும்பலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

நேரம் கேட்டு காலத்தைக் கடத்தும் சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளின் திட்டத்துக்கு அமைவாகவே பச்சோந்தி சுமந்திரனின் பேச்சு அமைந்துள்ளது. இந்தாளது சிங்கள BBC நேர்காணலிலிருந்து சிங்கள அரச பயங்கரவாதிகள் தமிழினத்தை மேலும் அழிக்க தேவையான கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதிலேயே இந்த இரு கபட அரசியல்வாதிகளும் முறையே சிங்கள இந்திய அரச பயங்கரவாதிகளுக்கு துணை போகின்றனர் என்பதை இந்தப் பேச்சு நிரூபிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.