Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பானில் மகிந்த சமரசிங்க, தென்னாபிரிக்காவில் பீரிஸ் – ஜெனிவா தொடர்பில் முக்கிய பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gl-samara1-100x100.jpg

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தென்னாபிரிக்காவில் முக்கிய பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனித உரிமைகளுக்கான விஷேட தூதுவர் மகிந்த சமரசிங்க ஜப்பானுக்கான அவசரப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதில் அமெரிக்கா முனைப்பாகச் செயற்படும் நிலையில் அதற்கு எதிரான வியூகங்களை வகுக்கும் நோக்கத்துடனேயே இவ்விருவரும் வெளிநாட்டுப் பணயங்களை மேற்கொண்டிருப்பதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெனிவா கூட்டத் தொடரில் பங்குகொள்வதற்காகச் சென்றிருந்த அமைச்சர் பீரிஸ், அங்கிருந்து நேரடியாகவே ஆபிரிக்காவுக்குச் சென்றார். ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்குச் சென்ற அவர், இறுதியாக பொஸ்வானா சென்று பின்னர் அங்கிருந்து தற்போது தென்னாபிரிக்கா சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்காவில் அந்நாட்டு சர்வதேச உறவுகளுக்கான அமைச்சர் திருமதி மைய்டி கோனாவுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவின் அரசியல் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாகவும் மற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண்ண ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் பீரிஸ் விளக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டமையை வரவேற்ற தென்னாபிரிக்கா, மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் அமைச்சரும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஷேட தூதுவருமான மகிந்த சமரசிங்க ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஜெனிவாவிலிருந்து கொழும்பு திரும்பிய அவர், அங்கு காணப்படும் நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் ஆலோசனைகளை நடத்திய பின்னர் ஜப்பான் விரைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்படுமாயின் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகவே ஜப்பானில் அவர் ஆலோசனைகளை நடத்திவருவதாகத் தெரிகின்றது. ஜப்பானிலிருந்து அடுத்த ஒரு இரு தினங்களில் கொழும்பு திரும்பும் அவர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஆலோசனைகளை நடத்திய பின்னர் உடனடியாகவே ஜெனிவா திரும்பவார் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.saritham.com/?p=52965

கூத்தமைப்பினர் பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை நேரடியாக சந்திக்காமல் அறிக்கைகள், கடிதங்கள் எழுதுவதன் மூலம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கடுமையான முயற்சிகளை முறியடிக்க முடியாது.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது எக்காலத்துக்கும் பொதுவான ஒரு பழமொழி.

ஜெனீவா சென்று ஒன்றும் செய்ய முடியாது என்பவர்கள் - அரசியல், அரசியல் நகர்வுகள் தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாநாடுகளில் பங்குபெற்றுவதும், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதும் தான் படுகொலைகளை, இன அழிப்பை தினமும் ஏதோ ஒரு வடிவத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் பிரதிநிதிகள் செய்யும் வேலையல்ல. அழைப்புக் கிடைத்தால் தான் செல்லமுடியும் என்று சொல்வது சோம்பேறிகளின் குணம்.

ஜெனிவா செல்வது ஐ. நா. சபை நிகழ்வுகளில் கலந்து பேசவல்ல. அங்கு சென்றிருந்தால் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், சிங்கள பயங்கரவாத அரசின் நீண்டகால இழுத்தடிப்புக்களையும் எடுத்துக் கூறியிருக்கலாம். அத்துடன் புதிய அவசியமான அரசியல், ராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் தமிழர் சர்வதேச அரசியல் பலம் பெறுவதை விரும்பாத தமிழின விரோத சக்திகளுக்கு துணையாக கூட்டமைப்பின் சம்பந்தனும், எடுபிடிப் பச்சோந்தி சுமந்திரனும் நடந்துள்ளனர். பின்னர் தமது கையாலாகாத தனத்தாலும், இந்திய அபிமான, சுயநல தேவைகளுக்காகவும், சோம்பேறித்தனத்தாலும் வேறு சிலர் இந்த இரு பிற்போக்குச் சக்திகளை ஆதரித்துள்ளனர்.

கூத்தமைப்புக்கு வக்காலத்து வாங்க கனடாவிலிருந்து கோணங்கித்தனமான அறிக்கைகள் விடுவதால் தமிழ் மக்கள் ஏமாறப் போவதில்லை. மாறாக இவர்கள் தமிழின அழிப்புக்கு துணை போகின்றனர். இவர்களுக்கும் சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்படும் டக்லஸ் போன்ற கொலைகாரக் கும்பலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ஆகக்குறைந்தது நாம் எம்மால் முடிந்த பங்களிப்புக்களை செய்வோம்:

1. http://www.yarl.com/forum3/index.php?showtopic=98920

2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=98925

ஆகக்குறைந்தது நாம் எம்மால் முடிந்த பங்களிப்புக்களை செய்வோம்:

1. http://www.yarl.com/...showtopic=98920

2. http://www.yarl.com/...showtopic=98925

அகூதா, குவீன் இருவரின் தொடர் முயற்சிகளுக்கு நன்றிகள். இவற்றிலும் எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.