Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா பிரேரணைக்கு கண்டனம்

Featured Replies

ஜெனீவா பிரேரணைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கையின் இறைமையை பாதிக்கின்ற விடயம் என்ற வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது

அத்துடன், எதிர்வரும் மார்ச் 16ம் திகதி வெள்ளிக்கிழமை குத்பாக்களை (பிரசங்கங்களை) இது தொடர்பாக அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்வதோடு, நாட்டின் இறைமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் அன்றைய தினம் பிரார்த்திக்குமாறும் இலங்கை மக்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சர்வதேச சமூகத்தின் கவனம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டு கூட்டத் தொடர்கள் மீது திரும்பியுள்ளது. சர்வதேச ரீதியாக இடம்பெற்றுள்ள பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட அல்லது அது பற்றிய எவ்வித அக்கறையும் காட்டாத பல நாடுகள் இன்று இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு சுய இலாபமடைய முற்படுகின்றன.

மேலும் நீண்ட கால உள்நாட்டு இனக் கலவரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய சாமாதான சூழலை அனுபவிக்க ஆரம்பித்துள்ள இந்நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படுவது இந்நாட்டு மக்களையும், போரை முடிவுக்குக் கொண்டு வர உதவி செய்த நாடுகளையும் அவமதிப்பதாகவே நாம் கருதுகிறோம்.

மேலும் இக்குற்றச்சாட்டுக்கள் போரினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் தண்டிப்பதாய் அமையுமே அன்றி, ஒருபோதும் தீர்வாக அமைய மாட்டாது என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மையாகும்.

யுத்தத்தின் பின்னர் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காகவும், தேசிய மேம்பாடுகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளே நாட்டின் தன்னாதிக்கத்தை காத்துக்கொள்ள உதவும் என்ற வகையில் அதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருப்பது நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இலங்கையரதும் கடமையாகும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை செயற்படுத்தப்பட முன்னதாகவே விசாரணைகளையும் தீர்மானங்களையும் எடுப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இவ்வளவு அவசரம் காட்டுவது எமக்கு கவலையளிக்கின்றது.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர்கள் இலங்கை மக்களையும், நிரந்தர சமாதானத்திற்காக உதவி புரிந்த நாடுகளையும் எந்த வகையிலும் பாதிக்க கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37228-2012-03-08-09-03-54.html

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா முன்வைத்துள்ளமை துரதிர்ஷ்டவசமானது: ஹக்கீம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா முன்வைத்துள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த பிரேரணையை தவிர்த்துக்கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆயினும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அமெரிக்காவும் அதன் சில நேச நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்துள்ளன.

ஆனால், இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் காட்டி வரும் ஆர்வம் குறித்து மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் எமது நேச நாடுகள் இந்த பிரேரணையை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் பிரேரணையில், ஏற்கெனவே உள்ள உள்ளடக்கத்தை விடவும் குறைந்த தாக்கம் உள்ளதாக மாற்றுவதற்கு சில நாடுகள் முயற்சித்து வருவதாக நாம் கேள்விப்படுகின்றோம்.

அது எவ்வாறாயினும், தனிப்பட்டதொரு நாட்டை இலக்கு வைத்து இவ்வாறானதொரு பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் துருவப்படுத்தலை ஏற்படுத்தியுள்ள இனப்பிரச்சினையை இன்னும் பாரதூரமானதாக ஆக்குவதற்கும், குழப்புவதற்குமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகின்றது.

எனவே, இவ்வாறான முயற்சியின் பக்க விளைவாக ஏற்படப் போகும் ஆபத்து குறித்து ஒரு சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையில் என்னுடைய பக்க நியாயங்களை ஜெனீவாவில் வைத்து கூறியுள்ளேன்.

சில மேற்கு நாடுகளை பொறுத்த வரை அதனால் எதுவிதமான தாக்கமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அது மிகவும் கவலைக்குரியதாகும். அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை இலங்கை அரசாங்கத்தோடு நேசபூர்வமாக இந்த விவகாரத்தை அணுகி, அதற்கான போதிய கால அவகாசத்தை தருவதற்கு தவறியிருப்பது இராஜதந்திர ரீதியானதொரு தவறாக விளங்க போகின்றது என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37237-2012-03-08-10-05-13.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.