Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா சென்ற அரசாங்க குழுவினரால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் முறுகல்

Featured Replies

ஜெனீவா சென்ற அரசாங்க குழுவினரால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் முறுகல்

ஜெனீவா சென்ற அரச இராஜதந்திரக் குழுவின் நடவடிக்கைகளினால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசல் நிலை உருவாகியுள்ளது. இதனை சீர்செய்துகொள்ள அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று ஜே.வி.பி. தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் பாரியளவில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்குள் சிறைப்பட்டுள்ளது. மேலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள் நாட்டில் முழு அளவில் நடைமுறைப்படுத்தும் நிலை ஏற்படும் போது பெரும் பிரச்சினைகள் தோன்றுவது மட்டுமன்றி பல சந்தர்ப்பங்களில் அரசாங்கமே விசாரணைகளுக்குட்படும் நிலையும் உருவாகும் என்றும் அந்தக்கட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து தெளிவுப்படுத்திய ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகையில் :

ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா.மனித உரிமை பேரவையில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க நல்லிணக்க ஆணைக்குழுவின் புரிந்துரைகளை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புதல் அளித்தார். அது மட்டுமன்றி உரையின் பின்னர் ஜெனீவாவில் ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கைக்கு எதிரான பிரேரனைக்கு இந்தியா ஆதரவளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்திய மத்தியரசு உள்நாட்டு அரசியலில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதுடன் தமிழகம், டில்லிக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தது. இந்தியாவின் ஆதரவை இலங்கை ஜெனீவாவில் வெளிப்படுத்தியமையால் மத்தியரசு இலங்கையுடன் முறுகல் நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளும் முயற்சியில் அரசாங்கம் டில்லியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்கம் தற்போது சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்குள் விடுபடாத நிலையில் சிறைப்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போது இராணுவத்திற்கு எதிரான விசாரணைகள் அமைச்சர்களான கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுக்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உள்நாட்டில் பல பிரச்சினைகள் தோன்றி நெருக்கடி நிலைகள் உருவாகும் என்றார்.

  • தொடங்கியவர்

இதனால் இந்திய மத்தியரசு உள்நாட்டு அரசியலில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதுடன் தமிழகம், டில்லிக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தது. இந்தியாவின் ஆதரவை இலங்கை ஜெனீவாவில் வெளிப்படுத்தியமையால் மத்தியரசு இலங்கையுடன் முறுகல் நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளும் முயற்சியில் அரசாங்கம் டில்லியுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகத் தலைவர்கள் அழுத்தம் தலையிடியில் மன்மோகன் சிங்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக, முடிவு எடுக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.தமிழகத் தலைவர்களின் அழுத்தம் இவ்வாறு கடுமையாக அதிகரித்துள்ளதால் என்ன செய்வது என்று தெரியாத திரிசங்கு நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாட்டில் இருந்து தொடர்ச்சியான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாகத் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இரண்டு கடிதங்களை மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி, உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதனால், தமிழ்நாட்டில் மீண்டும் ஈழத்தமிழர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், இலங்கைக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்ற ஒருமித்த கருத்து தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோரும், குமரி அனந்தன் போன்ற காங்கிரஸ் தலைவர்களும் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தர வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளது.

நாடுகளின் மீதான தனிப்பட்ட தீர்மானங்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கான வாய்ப்பை அருகச் செய்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இந்தியா கருத்து வெளியிட்டது இலங்கைக்குச் சாதகமானது என்று கருதப்பட்ட போதும், இலங்கைக்குச் சாதகமான முடிவை மத்திய அரசு எடுப்பது சிக்கலானது என்றே புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.காங்கிஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டு அரசியல்கட்சிகள் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.இதனால் தமிழ்நாட்டின் கருத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கருத்தைப் புறக்கணிப்பதன் விளைவுகள் குறித்து மன்மோகன்சிங் அரசு தீவிரமாக ஆலோசித்தே முடிவுகளை எடுக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால் ஜெனிவாத் தீர்மானம் விடயத்தில் இந்தியா எடுக்கும் முடிவு இலங்கைக்கு அதிர்ச்சியானதொன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் புதுடில்லி தகவல் ஒன்று கூறுகிறது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=69877887008329963

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.