Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்ணை கவ்விய அவுஸ்திரேலிய அணி

Featured Replies

2502_gilchrist_smith_g.jpg

அப்பாடா ஒரு மாதிரி சவுத் ஆபிரிக்கா அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்துவிட்டதே.

விபரம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்

நன்றி

யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யானை விழுந்தா எழும்ப ரோம்ப நேரம் ஆகும் ஆனால் கங்காரு{அவுஸ்ரேலியா} விழுந்தா உடனே துள்ளி எழுந்திடும் அது தான் கங்காருவின் பவர்..........கி......கி.....கி.......கி..........கி

..........கி

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலிய அணியின் உலக சாதனையை 3 மணித்தியாலங்களில் உடைத்து இல்லாமல் கிரிக்கட் வரலாற்றில் பாரிய சாதனையை நிகழ்த்தியது தென் ஆபிரிக்கா...

ஒரு நாள் போட்டிகளில் ஒரு அணியின் ஆககூடுதலான ஓட்டமாக இலங்கை அணி கென்யா அணியை எதிர்த்து 398 ஓட்டங்களை பெற்றதே இதுவரை காலம் இருந்து வந்தது, ஆனால் இன்று நடைபெற்ற தென் ஆபிரிக்கா அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற இறுதி ஒரு நாள் போட்டியில் அவ் சாதனை அவுஸ்ரேலிய அணி முறியடிக்க, அவுஸ்ரேலியாவின் சாதனையை 3 மணித்தியாலத்தில் தென் ஆபிரிக்க அணி முறியடித்தது,

இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி, ஏனெனில் 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற வேண்டுமெண்ட கட்டயம் இருந்தது, தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற படியால் சொந்த நாட்டில் வெல்ல வேண்டும் என்ற கட்டயம் தென் ஆபிரிக்காவுக்கும், உலக சம்பியன் அணி எல்லா தொடர்களையும் வென்று வரும் அணி இந்த தொடரை வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் அவுஸ்ரேலிய அணிக்கும் இருந்தது,

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது, வழக்கம் போல கில்கிறிஸ்ட், கேட்டிச் கூட்டனி ஆரம்பத்தில் இருந்து துள் பறத்த தொடங்கியது ஹில் ஹிறிஸ்ற் 55 ஆட்டங்களுடனும், கேட்டிச் 79 ஓட்டங்களுடனும் ஆதிரடியாக ஆடி ஆட்டமிழந்தனர், அவர்களை தொடந்து வந்த அணித்தலைவர் ரிக்கி பொண்டிங்க் ஹுசே கூட்டனி தூள் பறத்த தொடங்கியது, ரிக்கி பொண்டிங்க் 105 பந்துகளில் 9x6, 13x4 ஓட்டங்கள் அடங்கலாக 164 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, ஹுசே 51 பந்துகளை சந்தித்து 81 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர், இறுதியாக உலக 400 ஓட்டங்களை கடந்த 434 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையை பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்று உலக சாதனையை நிலை நாட்டியது அவுஸ்ரேலிய அணி, கிறிக்கட் ரசிகர்கள் எதிர்பார்த்திராத ஒரு ஓட்ட எண்ணிக்கையை அதுவும் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்கா அணிக்கு எதிராக அவுஸ்ரேலிய பெற்றது எதிர்பார்க்காத ஒன்று,,

எவருமே எதிர்பார்த்திராத அதிசம் இன்று நிகழ்ந்தது, 435 என்ற நினைத்து பார்க்க முடியாத இமாலய ஓட்டத்தை தென் ஆபிரிக்காவால் பெற முடியாது என்று தென் ஆபிரிக்க பயிற்சியாளர் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள்,, ஆனால் ஹிப்ஸ் அனைவரின் கற்பனையையும் உடைத்தெறிந்தார்,, ஆட்டம் தொடங்கி இரண்டாவது ஓவரில் பிறக்கனின் பந்தில் கிளின் போல்டாகி வெளியேறினார் தென் ஆபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரத்தில் ஒருவரான டிப்னர், ஆனால் அணித்தலைவர் ஸ்மித் 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார், நிச்சயமாக எனி வெல்லமுடியாது என அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில் வந்தார் ஹிப்ஸ் 111 பந்துகளில் 7x6, 21x4 அடங்களாக 175 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றீயை 50 வீதம் உறுதிசெய்தார், அனைவரும் ஹிப்ஸ் 195 ஓட்டங்கள் (194 சைட் அனவர் பாகிஸ்த்தான்) குவித்து உலக சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் சைமனின் பந்தில் பிரட் லீயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழ்ந்தார் ஹிப்ஸ், அதனை தொடர்ந்து வந்தவர்கள் பிராக்கனில் பந்தில் சொற்ப ஓட்டங்களுக்குள் வெளியேறிக்கொண்டு இருந்தனர், ஆனால் விக்கட் காப்பாளர் பவுச்சர் இறுதி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்,

602213ul.jpg

ஹிப்ஸின் விலாசல்,,

602230ht.jpg

வெற்றியை உறுதி செய்த களிப்பில் பவுச்சர்,,

இன்றைய போட்டியின் நிலவரம்

AUS 434/5/50 overs

RT Ponting 164

MEK Hussey 81

பந்துவீச்சில்..

Telemachus 10/1/87/2

South africa 438/9 49.9overs

HH Gibbs 175

GC Smith 90

MV Boucher 50 not out

பந்துவீச்சில்..

Bracken 10/0/67/5

Man of the Match: HH Gibbs and RT Ponting

Player of the Series: SM Pollock (SA)

Result: South Africa won by 1 wicket

Series: South Africa wins the 5-ODI series 3-2

602253xv.jpg

வெற்றிகளிப்பில் ஹிப்ஸ் (இடது பக்கம்) நிற்னி(வலது பக்கம்)

602243kd.jpg

தொடரை வெற வெற்றிக்களிப்பில் தென் ஆப்ரிக்க அணி,,

எங்கள் பையங்கள் போட்டுத் தாக்கி இருக்காங்கள்..! உடனுக்குடன் சாதிக்கத் துடிக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் இளைய உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்..!

தகவலை திறம்பட தந்த டன்னுக்கும் பாராட்டுக்கள்..! :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.