Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் – ஐ.நாவின் ஒளிப்பட ஆதாரங்களை அம்பலப்படுத்தும் சனல்-4

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

channel-4.jpg

போர் தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதற்கு சட்டபூர்வமான- நன்கு ஆவணப்படுத்தப்பட்ட- ஐ.நா அதிகாரிகளால் ஒளிப்படங்களுடன் பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்றையும் சனல்-4 வெளிப்படுத்தவுள்ளது.

வரும் புதன்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற ஆவணப்படத்திலேயே இந்தப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக அதன் தயாரிப்பாளர் Callum Macrae பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேட்டில் இன்று எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியுள்ளார்.

“கடைசி உணவுத்தொகுதி அனுப்பப்பட்ட வாகனத் தொடரணியுடன் சென்றிருந்த ஐ.நாவின் இரண்டு அனைத்துலக மனிதாபிமானப் பணியாளர்கள், சிறிலங்கா அரசினால் போர் தவிர்ப்பு வலயமாக முதலில் அறிவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த- உடையார்கட்டில் உள்ள ஆரம்பப் படசாலையில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனை அருகே சிக்கிக் கொண்டனர்.

வந்து கொண்டிருக்கும் எறிகணைகளில் இருந்து பாதுகாப்புத் தேட, ஏனைய பொதுமக்களின் உதவியுடன் அவர்கள் பதுங்குகுழி தோண்டத் தொடங்கினர்.

வழக்கம்போலவே, அவர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பீற்றர் மக்கே, தன்னிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் தமது நிலையை அடையாளப்படுத்தும் ஆள்கூறை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனுப்பினார்.

அடுத்த பல நாட்களாக தொடர்ச்சியாக பாரிய எறிகணை வீச்சுகள் அந்தப் பகுதியில் இடம்பெற்றன.

அவற்றில் பல ஐ.நா பதுங்குகுழியை நேரடியாகவும் தாக்கின. சில அருகிலும் வீழ்ந்தன. டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மோசமாக காயமடைந்தனர்.

இவையெல்லாம் ஐ.நா பணியாளர்களால் ஒளிப்படம் எடுக்கப்பட்டன. போரின்போது இடம்பெற்ற சிறியதொரு சம்பவம் தான் இது.

ஆனால், சிறிலங்கா அரசின் கட்டளைச்சங்கிலி பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதை தெரிந்திருந்தது, போர்க்குற்றங்களில் அவர்களுக்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான முக்கியமான சாட்சியாக இது உள்ளது.

எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

ஐ.நா பணியாளர்கள் தம்மிடம் இருந்த செய்மதித் தொலைபேசி மூலம், கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய தூதரகம் மற்றும் சிறிலங்காவில் உள்ள ஐ.நா அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு சிறிலங்கா அரசபடைகளைக் கோரும்படி கேட்டனர்.

அந்தத் தகவல் நேரடியாகவே சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் பரிமாறப்பட்டதாக தகவல் வழங்கப்பட்டது.

இந்த தொலைபேசித் தகவல் கிடைத்த குறுகிய நேரத்தில் ஐ.நா பதுங்குழியில் இருந்து சற்று தொலைவாக எறிகணைகள் வீசப்பட்டன.

ஆனாலும் போர் தவிர்ப்பு வலயம் மீது தொடர்ச்சியாக மழைபோல எறிகணைகள் வீசப்பட்டன.

எறிகணைத் தாக்குதல்கள் எப்படி மீள் இலக்கு வைக்கபட்டது என்பது தொடர்பாக மக்கே விபரித்திருக்கிறார்.

“தற்போது எம்மில் இருந்து 100 மீற்றர் தொலைவில் எறிகணைகள் விழுந்தன. இது அவர்கள் விரும்பிய போது எறிகணைத் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.“ என்கிறார் அவர்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் சிறிலங்காவின் கட்டளை அமைப்பு மீது மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகளுக்கு இது முக்கியமானதொன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

போர் தவிர்ப்பு வலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பற்றி சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சருக்கும், இராணுவத் தளபதிக்கும் குறைந்தபட்சம் நேரடியாகத் தெரிந்திருந்தது என்பதற்கு இது குறிப்பிடத்தக்க சாட்சியாகும்.

எறிகணைகளை ஐ.நா பதுங்குகுழியில இருந்து சற்று விலக்கி வீசும்படி கட்டளையிடப்பட்டதும், தொடர்ந்து போர் தவிர்ப்பு வலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுமழையும், பொதுமக்கள் அங்கு இலக்கு வைக்கப்பட்டதற்கான சாட்சியங்களாகியுள்ளன.“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinapp...?20120311105757

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை செல்லவேண்டும் ? பிரித்தானிய கிரிகெட் டீம்மை மறித்த சனல் 4 !

கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

http://bcove.me/fxxwurda

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.