Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்காவிடின் இலங்கை சீனா நோக்கி செல்லும்!- கோமின் தயாசிறி

Featured Replies

gomin_dayaasri.jpg

ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்காவிடின் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டால் இலங்கை சீனாவை நோக்கி நகரும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார்.

ஜெனீவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிலேயே கோமின் தயாசிறி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் வெற்றிபெறப்பட்டாலும் இலங்கை தண்டனை பெறும் வரை மேற்கு நாடுகள் தமது முயற்சியிலிருந்து ஓயாது. புலிகளுடன் பேச்சு நடத்தி தீர்வைக் காண வேண்டும் என மேற்கு நாடுகள் கோரின.

ஆனால் யுத்தம் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இடையில் யுத்தத்தை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கு நாடுகள் முயற்சித்தன. ஆனால் முடியவில்லை. இதன் காரணமாக மேற்கு நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு தண்டனை வழங்க முற்படுகின்றன. இதற்கான தயார் நடவடிக்கைகளில் நீண்டகாலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

சீனா ரஷ்யாவைவிட அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடன் தான் எமது நாட்டின் அதிக வர்த்தக விவகாரங்கள் செயற்படுகின்றன. எமது அதிகமான ஏற்றுமதிகள் மேற்கு நாடுகளையே தங்கியுள்ளன. எனவே மிகவும் இராஜதந்திர முறையில் இந்த விடயத்தை நாம் கையாளவேண்டும்.

தான் ஒரு பிரேரணையை கொண்டுவரும்போது தனது வெற்றி தொடர்பில் ஆராய்ந்துவிட்டே அமெரிக்கா கொண்டுவரும். எனினும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் மூன்றாவது அம்சம் அபாயகரமானது.

அதாவது மனித உரிமைப் பேரவையின் ஆலோசனைகளை பெறவேண்டும் என்பதாகும். அப்படியாயின் போர் நிறுத்த காலத்தில் இருந்த ஸ்கன்டிநேவிய கண்காணிப்பு குழுபோன்று ஒன்று வரும். அவர்கள் எம்மை கண்காணிப்பார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.

இந்தியா என்பது மிகப் பெரிய சக்தியாகவுள்ளது. இவ்வாறான முயற்சி ஒன்று ஜெனீவாவில் 2009 ஆம் ஆண்டு நகர்வு முன்னெடுத்த போது இந்தியா எமக்கு ஆதரவளித்தது. ஆனால் இம்முறை அவ்வாறான தீர்மானம் ஒன்றை இந்தியா எடுக்குமா? என்பதனை எதிர்வுகூற முடியாதுள்ளது. .

இந்தியா ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது தன்னைச் சுற்றி எதிரி நாடுகளை வைத்துக்கொண்டுள்ள இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே எவ்வித தொல்லையும் கொடுக்காமல் மிக நெருக்கமõன நட்பு நாடாக இருக்கின்றது.

இதனடிப்படையில் இந்தியா எமக்கு எதிராக செயற்பட்டால் அதாவது ஜெனீவாவில் எமக்கு எதிராக வாக்களித்தால் அல்லது வாக்களிப்பில் கலந்து கொள்ளாவிட்டால் இலங்கை சீனாவை நோக்கி நகரும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். இதனை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்தியா எமக்கு ஆதரவளிக்காவிடின் இந்த ஆபத்து ஏற்படும்.

இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தபோது அது அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு நியமிக்கப்பட்டதாக சர்வதேசம் உள்ளிட்ட பல தரப்புக்கள் தெவித்தன. ஆனால் ஜனாதிபதி சிறந்த புத்திஜீவிகளையே ஆணைக்குழுவுக்கு நியமித்தார். அதில் அங்கம் வகித்த தமிழர்கள் இருவரும் மிகப்பெரிய முக்கியத்துவத்தைக்கொண்ட புத்திஜீவிகளாவர்.

தற்போதைய நிலைமையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பல தரப்புக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது எமது உள்நாட்டு தீர்வு வியூகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த விடயத்திலும் எமது தரப்பிலும் சில குறைபாடுகள் உள்ளன. அதாவது கடந்த மூன்றுமாத காலப் பகுதியில் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான வரைபடத்தை தயாரித்திருக்கலாம்.

எனவே முக்கிய சில விடயங்களை உடனடியாக செய்யவேண்டும் என சிபார்சு செய்கின்றேன்.

அதாவது மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவ மட்டத்தில் விரைவாக விசாரணையை நடத்தி முடிக்கவேண்டும். இது எந்த வகையிலும் தாமதமாகக் கூடாது. அதாவது இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழேயே இந்த விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் அரசாங்கம் மாறியதும் புதிய அரசாங்கம் இவர்களை பணத்துக்காக பிடித்துக்கொடுத்துவிடும்.

நல்லிணக்க ஆøணக்குழுவின் பரிந்துரைகளின்படி நாட்டில் நல்லாட்சியை மேற்கொள்ளவேண்டும். நாட்டில் கீழ் மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுக்கவேண்டும். அதாவது அரசியல்வாதிகளுக்கு அன்றி மக்களுக்கு அதிகாரம் செல்லவேண்டும்.

அடுத்ததாக 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் நீக்கப்படவேண்டும். அரசாங்கத்துக்கு இறுதித் தடவையாக கிடைத்துள்ள இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இதனைச் செய்யவேண்டும். இல்லாவிடின் யாராவது இவை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து நீதிபதிகள் அந்த அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தால் நீதிபதிகளை நாம் குறைகூற முடியாது. காரணம் அவை அரசியலமைப்பில் உள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் அடுத்ததாக ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று அடையாளம் காணப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படவேண்டும்.

மொழி மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு விøரவில் தீர்வு அவசியம். மும்மொழிக் கொள்கையை உரிய முறையில் முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும். முப்படை மற்றும் பொலிஸ் துறையில் தமிழ் பேசுபவர்கள் இணைத்துக் கொள்ளப்படவேண்டும்.

கூட்டமைப்புடன் பேசி பயனில்லை இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களைப் போலவே கூட்டமைப்புடனான பேச்சுக்களும் அமையும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறாது. அத்துடன் அவர்கள் மும்மொழிக் கொள்கையையும் எதிர்ப்பார்கள்.

http://news.lankasri.com/show-RUmqyDSXPdlq7.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா .. ஓய் ..இந்தியா. இது உமக்கான மறைமுக மிரட்டல் ஓய்.

என்ன செய்யுறது சேர்ந்து குற்றம் செய்தால், குட்டி நாடு கூட மிரட்ட தான் செய்யும். :lol:

மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி:

பாகிஸ்தான் தொடந்து இந்தியாவுக்கு மிரட்டல் விடும் வகையில் செயற்பட்டால், நாங்கள் போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் - பிரணாப் முகர்ஜி

:lol: :lol: :icon_idea: (என்ன உலகமப்பா சீ..வெட்கம் )

  • தொடங்கியவர்

இந்தியா .. ஓய் ..இந்தியா. இது உமக்கான மறைமுக மிரட்டல் ஓய்.

என்ன செய்யுறது சேர்ந்து குற்றம் செய்தால், குட்டி நாடு கூட மிரட்ட தான் செய்யும். :lol:

மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி:

பாகிஸ்தான் தொடந்து இந்தியாவுக்கு மிரட்டல் விடும் வகையில் செயற்பட்டால், நாங்கள் போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் - பிரணாப் முகர்ஜி

:lol: :lol: :icon_idea: (என்ன உலகமப்பா சீ..வெட்கம் )

:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் இறாயதந்திரத்தால் தோற்கடிக்கப்பட்ட இந்தியாவிற்கு தோல்வியை வெளியே காட்டமுடியாத கௌரவப்பிரச்சினை இப்போதும் இலங்கைக்கு கைகொடுக்கின்றது!

எதிர்த்து வாக்களித்தாலும் சீனாவின் பக்கம் சிங்கள அரச கொலைகாரர்கள் செல்வர்!

. அப்போது தான் அவ்வப்போது மன்மோகன் உட்பட்ட இந்தியக் காட்டுமிராண்டி ராஜதந்திரிகள் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து எலும்புத்துண்டுகளை அப்புறப்படுத்துவதுடன், அங்குள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்வர்.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.