Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா விடயத்தில் கனடா தொடர்ந்தும் அதீத கரிசனையுடன் உள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canada-flag-screensaver.jpg

சிறீலங்கா விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையை முன்னிறுத்தி சூடு பிடித்துள்ள இன்றைய நிலையில் மனித உரிமைகள் சபையில் தற்போது வாக்குரிமை இல்லாவிட்டாலும் பல நாடுகள் பின்புலத்தில் தீவிரமாக இயங்கி வருவதாகவே ஜெனிவா செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அதிகம் வதியும் கனடாவும் வாக்குரிமை இல்லாவிட்டாலும் திரைமறைவில் பல செயற்பாடுகளை முனைப்புடன் செய்து வருவதாக கனடிய அரச மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல ராஐதந்திரிகள் சந்திப்புக்களை கனடா செய்து வருவதாகவும்�� பிரேரணைக்கு ஆதரவான நாடுகளின் சேர்ப்பில் காத்திரமான கனடாவின் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்கு குறிப்பாகவும் தமிழர்களுக்கு பொதுவாகவும் கனடிய மிசுசாகா ஸ்ரீட்வில் ஆளும் கன்சவேட்டிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பிராட் பட் பின்வரும் செய்தியை விடுத்துள்ளார்.

"கனடிய அரசானது சிறீலங்கா நடைபெறும் விடயங்களையும்�� ஐ.நாவில் நடைபெறுகின்ற நிகழ்வுகளையும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பல முன்னாள் மற்றும் இந்நாள் இலங்கை மக்களின் தாயகமாக கனடாவா இருக்கிறது அவர்கள் அனைவருடனும் நாம் உறுதியான உறவினைக் கொண்டுள்ளோம்.

இலங்கையின் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லியக்கத்திற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட் அவர்கள் கடந்த தை மாதம் 12ஆம் நாள் கீழ்வரும் அறிக்கையை வெளியிட்டார் "இலங்கையின் கற்றிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையானது பகிரங்கமாக வெளிடப்பட்டதை கனடா தனது கருத்தில் கொண்டுள்ளது. நாம் அவ்வறிக்கையை இன்னும் படித்துக் கொண்டிருந்தாலும். அவ்வாணைக்குழுவானது அறிக்கையில் நல்லிணக்கம் சட்ட ஒழுங்கு மற்றும் படைகளை அப்புறப்படுத்துதல் என்ற கரிசனையுள்ள சில விடயங்களில் பரிந்துரைகளை செய்துள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசானது அமுல்நடத்த வேண்டுமென கனடா உறுதியாக வேண்டுகிறது. மேலும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட தெளிவான காலவரைக்குள் அவற்றை அமுல்நடத்துவதுடன் அறிக்கையில் தவறவிடப்பட்டவையையும் நிறைவேற்ற வேண்டும்.

அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசியல் நல்லிணக்கத்திற்கான முன்னோடியாக அமைவதோடு இன அடிப்படை முரண்பாடுகளுக்கான முல காரணிகள் மற்றும் பிரிவுகளுக்கான தீர்வுகளை அணுக முடியும். ஆனால் சிறீலங்கா அரசானது இதுவரை பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கத்திற்காக எத்தகைய முயற்சிகளையும் உருப்படியாக செய்யவில்லை என்பதையும் நாம் காண்கின்றோம். இப்பொழுது தீர்க்கமான நடவடிக்கை தேவைப்படுகிறது.

போர் முடிவுற்ற போது நடந்ததாக சொல்லப்படும் கொடுமையான மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அறிக்கை முழுமையாக ஆராயாதது குறித்து கனடா தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளது. ஐ.நா செயலாளரின் நிபுணர் குழுவின் சிறீலங்கா பொறுப்புக்கூறுதல் அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்ட பல குற்றச்சாட்டுகளையிட்டு சிறீலங்கா அரசின் அறிக்கையானது போதிய அளவு கவனத்தில் கொள்ளவில்லை.

இரு தரப்பினராலும் புரியப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களையிட்டு ஐ.நா செயலாளரின் நிபுணர்கள் குழுவினால் எழுப்பப்பட்ட நம்பகமான மற்றும் கடுமையான குற்றச்சாட்டுக்களையிட்டு ஒரு சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேணடுமென கனடா தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றது.

சிறீலங்கா அரசானது சுதந்திரம் சனநாயகம் மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி போன்ற சனநாயக விழிமியங்களை வெளிப்படுத்த வேண்டும்." ஏனத் தெரிவிக்கும் கனடிய அறிக்கையை சுட்டிக் காட்டும் பாராளுமன்ற உறுப்பினர் பிராட் பட் தனது தொகுதி மக்களுடன் இணைந்து இவ்விடயங்களில் தொடர்ந்தும் அயராது பாடுபடுவேன் எனவும் உறுதி கூறியுள்ளார்.

Stephen-Harper550309_001.jpg

Brad-Butt-550606-003.jpg

john_baird_550505_002.jpg

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.