Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 இன் விவரணம் குறித்து இலங்கை அரசு கருத்து வெளியிடுவதைத் தவிர்த்தது

Featured Replies

சனல் 4 இன் விவரணம் குறித்து இலங்கை அரசு கருத்து வெளியிடுவதைத் தவிர்த்தது.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற விவரணம் குறித்து இல்ஙகை அரசு இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து எதனையும் வெளியிடவில்லை.

அது தொடர்பாக இன்று கொழும்பில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் தொலைபேசியில் இலங்கை அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு கருத்து அறிவதற்கு முற்பட்டபோதிலும், அமைச்சர்கள் எவரும் பதிலளிக்க விரும்பவில்லை.

இறுதி யுத்தத்தின்போது வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் காண்;பிக்கப்பட்ட விவரணம் போலியானதென இலங்கை அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால், நேற்றிரவு வெளியிடப்பட்ட புதிய விவரணம் குறித்து அரசு மௌனமாக இருக்கின்றது.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவரென இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். இலங்கையின் கொலைக்களங்கள்: தன்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற விவரணத்தைப் பார்த்து வேதனையடைந்ததாக அவர் கூறினார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11387

  • தொடங்கியவர்

விவரணம் சிறப்பாக அமைந்துள்ளதென பிரித்தானிய ஏடுகள் தெரிவிப்பு.

நேற்றிரவு ஒளிபரப்பான இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் விவரணம் சிறப்பாக அமைந்துள்ளதென பிரித்தானியாவின் ரெலிகிறாஃப் நாளேடு குறிப்பிடுகிறது.

அந்த விவரணம் குறித்த விமர்சனம் இன்று வெளியாகியது.

கடந்த ஆண்டு வெளியான இலங்கையின் கொலைக்களங்கள் விமர்சனம் தரமற்ற வகையிலான ஊடக முயற்சியென இலங்கை அரசு குறை கூறிய நிலையில்;, அத்தகைய விமர்சனம் வெளியாவதைத் தடுப்பதற்கான முயற்சியில் மிகவும் கவனமாக இந்த விவரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரெலிகிறாஃப் குறிப்பிடுகிறது.

இலங்கை அரசு பொதுமக்களுக்கென தாக்குதல் தவிர்ப்பு வலயங்களை அமைத்து, பின்னர் அவற்றின் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதென்பது விமர்சனத்தின் இறுதியில் ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாகியதென ரெலிகிறாஃப் குறிப்பிடுகிறது.

இதேவேளை, போர்க் குற்ற விசாரணையின்போது எழுப்பப்படவேண்டிய கேள்விகளை நேற்றைய விவரணம் எழுப்பியதெனவும், அது முறையான ஒரு ஊடக முயற்சியெனவும் கார்டியன் ஏடு குறிப்பிடுகிறது. அந்த விவரணம் முடிவடைந்த பின்னரும், நீண்ட நேரம் மன அழுத்தமும், உணர்ச்சியற்ற நிலையும் நீடித்ததென கார்டியன் ஏடு மேலும் குறிப்பிடுகிறது.

அந்த விவரணம், புதிய தகவல்களைக் கொண்டிருந்ததெனவும், நடவடிககை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததெனவும் இன்டிபென்டன்ட் ஏடு குறிப்பிடுகிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11389

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தா? பொய்யா? 

  • தொடங்கியவர்

அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை இராஜாங்கத் திணைக்களம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது! - கொழும்பு ஊடகம்

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவோடு இடம்பெற்று வரும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. அத்துடன், அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்குமாறு சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச விடுத்துள்ள கோரிக்கை தொடர்பான செய்திகளுக்கு அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஏற்கெனவே அமெரிக்க எதிர்ப்பு அணியில் உள்ள சீனா, ரஸ்யா, கியூபா, வெலிசுவேலா, லிபியா, ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகளுடன் கடந்த பல ஆண்டுகளாக கொண்டுள்ள உறவுகள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருந்ததாகவும் இந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=cf393fe1-c603-4ab8-999a-baf2a62b64a3

Sri Lanka denies new war crimes claims - AFP

http://news.yahoo.com/sri-lanka-denies-war-crimes-claims-003252459.html

photo_1331814613626-1-0.jpg

The leader of Sri Lanka's Liberation Tigers of Tamil Eelam (LTTE), Velupillai Prabhakaran, stands in front of an 'eternal flame' at an undisclosed location in northern Sri Lanka, in a photo released in 2005. Sri Lanka Thursday rejected as "baseless and unacceptable" a new documentary by Britain's Channel 4 suggesting the army executed Prabhakaran's 12-year-old son after he surrendered

இதுவரை தலைவரின் இப்படியொரு படத்தை AFP வெளியிட்டதைப் பார்த்ததில்லை.

  • தொடங்கியவர்

கருத்தா? பொய்யா?

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தா தான் எதையும் மீறி தன்னிச்சையாக நடப்பவர். அந்த ரீதியில் பாதுகாப்பு அமைச்சு சனல் நாலை மறுத்துள்ளது, பொய் என வர்ணித்துள்ளது.

ஆனால், ஜெனீவாவில் நிற்கும் வெளிவிவகார அமைச்சின் ஆட்கள் மௌனம் சாதித்தே வருகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.