Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியானால் தமிழருக்கு தீர்வுதான் என்ன? யாழ்ப்பாணத்தில் மக்களின் கேள்விக்கு அவர் மழுப்பலான பதில்

Featured Replies

ranil_jaffna_visit_001.jpg

அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழ்ப்பாண மக்கள் முன்வைத்த கேள்வியால் அவர் ஆடிப்போனார். இரண்டு இடங்களில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு ஒரு இடத்தில் பதிலளிக்காமல் தவிர்த்தார். மற்றொரு இடத்தில் மழுப்பலான பதிலை வழங்கினார்.

நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தது.

மாதகலில் இடம் பெற்ற சந்திப்பில், ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு ரணில் வழங்கவுள்ள தீர்வு என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பினர். "நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானால் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவீர்கள்?" என்று அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்த ரணில் விக்கிரமசிங்க "இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைத் தருவோம்" என்றார்.

அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்றலில் பொதுமக்களுடன் ரணில் நடத்திய சந்திப்பின்போதும் தமிழ் மக்கள் இதே கேள்வியை எழுப்பினர். பதிலளித்த ரணில், "2005ம் ஆண்டு நான் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தபோது பிரபாகரனும் அவருடன் இணைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் அதனை எதிர்த்தனர்" என்றார்.

இந்தப் பதிலில் திருப்தி கொள்ளாத மக்கள் "எதிர்காலத்தில் நீங்கள் என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்பதைச் சொல்லுங்கள்" என்று அழுத்தம் கொடுத்தனர். நழுவ முடியாத நிலையில், மழுப்பலான பதிலை வழங்கினார் ரணில். "நான் கொள்கை அடிப்படையில் பணியாற்றுபவன். என் மீது நம்பிக்கை வையுங்கள்" என்றார் அவர்.

2005ம் ஆண்டு தான் முன்வைத்த தீர்வுத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டிருந்தால் அதன் பின்னர் இவ்வளவு பெரிய போர் ஒன்று ஏற்பட்டிருக்கமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் 2005ம் ஆண்டில் ஒஸ்லோ உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான சுயாட்சி வழங்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக எதனையும் சொல்லவில்லை என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"இலங்கையின் இரு பெரும் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்தவே முனைகின்றன. தமிழ் மக்களுக்கு நீதியான நிரந்தரத் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான உளச்சுத்தியை அவை இதுவரை வெளிக்காட்டியதில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தமிழர்கள் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு காய் நகர்த்துவதே ராஜதந்திரத் தேவையாகவும் உள்ளது" என்றார் அந்த அரசியல் விமர்சகர்.

http://184.107.230.1...575909118745319

  • தொடங்கியவர்

... மண்ணெண்ணையை சிங்களம், ஈபிடிபி குத்தியை கொண்டு போட்டவுடன் ..

maheshwaran-5.jpg

... நீதி கேட்டு நவீன கண்ணகியாக கிளந்தெழுந்த ..

vijayakala-6.jpg

.. மண்ணெண்ணையின் வியஜகலா, உந்த ரணிலுக்கு இன்று மாமி வேலை யாழில் செய்கிறார்!!!!!!!!! ... கற்கால கண்ணகி வியஜகலாவிடம் அல்லவா உந்த சனம் உக்கேள்வியை கேட்டிருக்க வேண்டும்!

ஐ.நா.வின் ஜோன் கோம்ஸ் ஆட்சி மாற்றம் நடந்தால் தான் இலங்கையில் நீதிகிடைக்கும் எனக்கடந்தவாரம் கூறியதை தொடர்ந்து இரணிலின் இந்த வரவும் அமைந்துள்ளது. யாழ் மக்கள் கேட்டது போன்று தீர்வில் சிங்களத்திற்கு அக்கறை இல்லை, ஆட்சியை பிடிக்க தமிழர் ஆதரவு தேவை.

இங்கே மனோ கணேசன் நேற்று கூறியது போன்று தமிழர்தரப்பு துணிவாகவும் ஆளுமையுடனும் செயற்பட வேண்டிய காலம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

... மண்ணெண்ணையை சிங்களம், ஈபிடிபி குத்தியை கொண்டு போட்டவுடன் ..

maheshwaran-5.jpg

... நீதி கேட்டு நவீன கண்ணகியாக கிளந்தெழுந்த ..

vijayakala-6.jpg

.. மண்ணெண்ணையின் வியஜகலா, உந்த ரணிலுக்கு இன்று மாமி வேலை யாழில் செய்கிறார்!!!!!!!!! ... கற்கால கண்ணகி வியஜகலாவிடம் அல்லவா உந்த சனம் உக்கேள்வியை கேட்டிருக்க வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.