Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்கள். – செண்பகத்தார்

Featured Replies

இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் ஜநா 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பல ஏற்றத் தாழ்வுகளோடு செயற்படுகிறது. ஜநா அமைப்பில் ஜந்து அடிப்படைப் பிரிவுகள் இருக்கின்றன.

1. ஜநா பொதுச் சபை -General Assembly. உறுப்பு நாடுகளின் விவாத அரங்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றும் களமாகவும் இடம்பெறுகிறது.

2. ஜநா பாதுகாப்பு சபை -Security Council உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பான அமைப்பு. இதில் ஜந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உறுப்புரிமை வகிக்கின்றன.

ecosoc.jpg

3. பொருளாதார மற்றும் சமூக மன்றம் -Social and Economic Council இதை எக்கோசொக் (Ecosoc) என்றும் அழைப்பார்கள். உலகப் பொருளாதார சமூக ஒத்துழைப்பிற்கான மன்றமாகவும் மேம்பாடுகளுக்கான அமைப்பாகவும் இது செயற்படுகிறது.

4. ஜநா செயலகம் -Secretariat, பொதுச் செயலரின் தலைமையில் இந்த அலுவலகம் இயங்குகிறது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் உறுப்பு நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். மேற்கூறிய மூன்று பிரிவுகளின் உத்தரவுகளை இந்த அலுவலகம் நிறைவேற்றுகிறது.

onu-ban-ki-moon.jpg

பொதுச் செயலரின் (Secretary – General) கடமைகள். செயலக அதிகாரிகளைத் தெரிவு செய்யும் பொறுப்பு இவருடையது. சர்வதேசப் பிணக்குகளை நிறுத்த உழைப்பது, அமைதிப் படைகளை நிர்வகிப்பது, சர்வதேசக் கூட்டங்களை நடத்துவது, உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாதுகாப்புச் சபைக்குத் தெரிவிப்பது.

5. அனைத்துலக நீதி மன்றம் – International Court of Justice. ஜநாவின் பிரதான நீதிப் பிரிவாக இது செயற்படுகிறது. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பிணக்குகளைத் தீர்த்து வைப்பது இதனுடைய முக்கிய கடமை. போர் குற்றங்கள், சட்டத்திற்குப் புறம்பான தலையீடுகள், இனச் சுத்தகரிப்பு ஆகிய வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்குதல்.

CIJ-2-8a4cd.jpg

ஒரு நிரந்தர அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் உருவாக்கத்திற்காக அனைத்துலக மன்னிப்புச் சபை 1996ல் போராடியதின் காரணமாக ஜநா பொதுச் சபை அதை ஏற்றுக் கொண்டு யூலை 1998ல் சாதகமான திர்மானம் நிறைவேற்றியது.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை (International Criminal Court) உருவாக்கிய ரோம் உடன்படிக்கையை (Rome statute) அறுபதாவது நாடு 01 யூலை 2002ல் அங்கீகரித்தவுடன் அது செயற்படத் தொடங்கியது. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமையகம் நெதர்லாந்தின் ஹேக் நகரில் இயங்குகிறது.

ஜநாவின் முதல் நான்கு பிரிவுகளும் நியூ யோர்க் நகரின் ஜநா தலைமையகத்தில் செயற்படுகின்றன. ஜந்தாவதான அனைத்துலக நீதி மன்றத்தின் தலைமையகம் ஹேக் நகரில் இயங்குகிறது. 2002 செயற்படத் தொடங்கிய அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கும் ஜநாவுக்கும் இடையில் அவரவர் தொழிற்பாட்டு எல்லை பற்றிய புரிந்துணர்வு இருக்கிறது.

இரண்டு வகை நீதி அமைப்புக்களும் முரண்படாமல் தமது வரையறை எல்லைக்குள் செயற்படுகின்றன. மற்றும்படி அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் தனித்தியங்கும் வலுவுள்ளது. அதனுடைய செயற்பாடுகளில் ஜநா தலையிடுவதில்லை.

ஜசிசி (ICC) என்றும் அழைக்கப்படும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஒரு நிரந்தர நீதி அமைப்பு. அது 01 யூலை 2002ல் செயற்படத் தொடங்கியது. தனி நபர்களை ஜெனோசைற், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் ஆகியவற்றிற்கு விசாரணை செய்து தண்டனை வழங்கும் வலு அதற்கு உண்டு.

ஜசிசி நீதி மன்றத்தின் தலைமையகம் உத்தியோகபூர்வமாக ஹேக் நகரில் இருந்தாலும் அதனால் விரும்பிய இடத்தில் அமர்ந்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இது வரையில் 120 ஜநா உறுப்பு நாடுகள் இந்த நீதி மன்றத்தை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளன.

தென் அமெரிக்கக் கண்டத்தின் எல்லா நாடுகள,; ஜரோப்பாவின் கிட்டத்தட்ட எல்லா நாடுகள், ஆபிரிக்க நாடுகளில் அரைப் பங்கு, ஆசியாவின் மிகச் சிறிய எண்ணிக்கை நாடுகள் என்பன ரோம் உடன்படிக்கையை அங்கீகரித்து ஒப்பமிட்ட நாடுகளில் அடங்கும்.

ருஷ்யா உட்பட 32 நாடுகள் ரோம் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளன. ஆனால் அங்கீகரிக்கவில்லை. சிறிலங்கா ஒப்பமிடவும் இல்லை அங்கீகரிக்கவும் இல்லை. அமெரிக்கா, இஸ்ரேயில், சூடான் ஆகிய நாடுகள் தமது ஒப்பங்களை மீளப்பெற்று வெளியேறியுள்ளன.

எந்தவொரு உடன்படிக்கையாயினும் அதில் ஒப்பமிட்ட நாடுகள் உடன்படிக்கையின் நோக்கங்களுக்கு மாறாகச் செயற்படக் கூடாது என்பது பொது விதி. ரோம் உடன்படிக்கையில் ஒப்பமிட்ட நாடுகளுக்கும் இது பொருந்தும்.

சீனா, இந்தியா உட்பட 42ஜநா உறுப்பு நாடுகள் ரோம் உடன்படிக்கையை அங்கீகரிக்கவோ, ஒப்பமிடவோ, ஆதரிக்கவோ இல்லை. அவை குற்றவியல் நீதி மன்றத்தைக் கடுமையாக விமர்சிக்கின்றன. நாடாக அங்கீகரிக்கப்படாத பாலஸ்தீன அதிகாரசபை(Palestinian Authority) இந்த நீதி மன்றத்தை அங்கீகரித்துள்ளது. அதனால் ரோம் உடன்படிக்கையில் ஒப்பமிட முடியாது.

அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றத்தின் நியாயாதிக்கம் பின்வருமாறு வரையறை செய்யப்படுகிறது.

1) சம்பந்தப்பட்ட குற்றவாளி ரோம் உடன் படிக்கையில் ஒப்பமிட்டு அங்கீகரித்த நாட்டவராக இருத்தல் வேண்டும்.

2) செய்யப்பட்ட குற்றச் செயலை ரோம் உடன்படிக்கையில் ஒப்பிட்டு அங்கீகரித்த நாட்டின் எல்லைக்குள் நின்று அந்தக் குற்றவாளி புரிந்திருக்க வேண்டும்.

3) குற்றச் செயலுக்கான வழக்கை ஜநா பாதுகாப்புச் சபை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.

அப்படிச் சமர்பித்த வழக்கு விசாரணையை மிகப் பரந்தளவில் நடத்தும் அதிகாரம் குற்றவியல் நீதி மன்றத்திற்கு உண்டு.

உறுப்பு நாடுகளிலுள்ள குற்றவியல் நீதி அமைப்புகளுக்கு அனுசரணையாகச் செயற்படும் நோக்கில் அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றம் உருவாக்கப்பட்டது. இனப் படுகொலை (Genocide) மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் போன்றவற்றை விசாரணை செய்து தண்டனை வழங்கும் பொறுப்பற்ற நாடுகள் அல்லது நீதி அமைப்புக்கள் இல்லாத நாடுகளுக்கு அனுசரணையாக அனைத்துலக குற்றவியில் நீதி மன்றம் செயற்படுகிறது.

அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் நீதிபதிகள், வழக்கு நடத்துனர்கள், விசாரணைப் பகுதி, விசாரணைக் கைதிகளை அடைத்து வைக்கும் பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதற்குரிய நிதி ஆதாரங்களை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகள் வழங்குகின்றன.

யூன் 2010ல் உகன்டாத் தலைநகர் கம்பாலாவில் நடந்த ரோம் உடன்படிக்கையை மீளாய்வு செய்யும் மாநாட்டில் இரண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

1) முதலாவது திருத்தம் சர்வதேசப் போரில் பயன்படுத்தக் கூடாதென்று தடை செய்யப்பட்ட சில ரக ஆயுதங்களை சர்வதேசப் போரல்லாத உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்துவது போர் குற்றமாகும். இந்த திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

2) இரண்டாவது திருத்தம் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைப் போர்க் குற்றமாக்குகிறது (Thecrime of Aggression). இந்த திருத்தம் நடைமுறைக்கு வரக் காலம் இருக்கிறது.

ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு அங்கீகரிக்காத நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. குற்றவாளிகளை விசாரணை செய்து தண்டிக்கும் அதிகாரத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு ஜநாவின் பாதுகாப்புச் சபையால்;; தான் வழங்க முடியும்.

ஜநாவின் வழங்கல் (Referral) இல்லாமல் ரோம் உடன்படிக்கையில் ஒப்பமிட்டு அங்கீகாரம் வழங்காத சிறிலங்கா போன்ற நாடுகளுக்கு எதிராக குற்றவியல் நீதி மன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஜநா பல மனிதகுலத்திற்கு எதிரான வழக்குகளை குற்றவியல் நீதி மன்றத்திற்கு வழங்கியுள்ளது.

மிக அண்மையில் சூடான் ஜனாதிபதி ஓமர் அல் – பசீரை (Omar al -Bashir) குற்றவியல் நீதி மன்ற விசாரணைக்கு ஜநா ஒப்படைத்துள்ளது. டாப+ர் படுகொலைகள் தொடர்பாக இவர் மீது இனப் படுகொலை,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள, போர்க் குற்றங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை இந்த நீதி மன்றம் 2008ல் தாக்கல் செய்துள்ளது.

ஜநா பாதுகாப்புச் சபையும்; அதன் பொதுச் செயலரும் தீவிரமாகச் செயற்பட்டால் மாத்திரமே சிறிலங்கா குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறத்த முடியும். ஆப்கானிஸ்தான் தவிர்ந்த சார்க் (Saarc) அமைப்பைச் சேர்ந்த ஒரு நாடாவது ரோம் உடன்படிக்கையை ஒப்பமிட்டு அங்கீகரிக்கவில்லை.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்துவதற்கு ஜநா பாதுகாப்புச் சபையின் தீர்மானமும் அதற்குப் பிறகு குற்றவியல் நிதி மன்றத்திற்குச் சமர்ப்பணமும் தேவைப்படுகிறது. இப்போதிருக்கும் நிலவரத்தில் ருஷ்யா, சீனா ஆகிய இரு பாதுகாப்புச் சபை நாடுகளும் இந்தியா,பாக்கிஸ்தான் பொதுச் சபை நாடுகளும் சிறிலங்காவைக் கைதிக் கூண்டில் இருந்து பாதுகாக்கின்றன.

ஆனால் காலம் செல்லும் போது நாடுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 1994ல் இனப் படுகொலை புரிந்த றுவான்டா நாட்டைச் சேர்ந்த மூன்று குட்டு (Hutu) இன அமைச்சர்கள் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு 2005ல் தண்டிக்கப்பட்டனர்.

ஒரு நாட்டின் தலைவரான சிலோபோதன் மிலோசேவிச் 200,000 சேர்ப் (Serb) இனம் அல்லாதோரைப் படுகொலை செய்த குற்றத்திற்காக நான்கு வருடங்களாக குற்றவியல் நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டார். அவர் தடுப்புக் காவலில் உயிரிழந்தார்.

விசேட தேவைக்காகப் பிரத்தியேக குற்றவியல் விசாரணை நீதி மன்றங்களை நிறுவும் அதிகாரம் ஜநாவுக்கு இருக்கிறது. அட் ஹொக் (ad hoc) எனும் இலத்தின் மொழிச் சொற்கள்இப்படியான நீதி மன்றங்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகின்றன. றுவான்டா, முன்னாள் யூகோசுலோவியா தொடர்பாக இப்படியான மன்றங்கள் நிறுவப்பட்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.