Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை பகுதி 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 2

சீனாவின் தலையீடு அதிகரிக்கப் போகிறது என்கிற சிங்கள ஆதிக்க சக்திகளின் மிரட்டலையே நீங்கலளும் வழி மொழிகின்றீர்கள். ஆனால் சிங்கள ஆதிக்க சக்திகளோ இந்தியா பற்றிய அச்சத்தில் இருந்தே தனது வெளிவிவகாரக் கொள்கைகளை வகுக்கிறது. அதற்க்கு இரண்டு முக்கிய காரனங்கள் உள்ளது.

1. என்ன பிரச்சினைகள் இருந்தாலும் தமிழர்களும் இந்தியாவும் இறுதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள்

2. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கைத் தமிழ்ப் பகுதிக் கடல் அடிப்படை அதனால் இந்தியா இலங்கையைப் பிரித்தென்றாலும் வடகிழக்குக் கடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று சிங்கல ஆதிக்க சக்திகள் நம்புகின்றன.

சிங்களா ஆதிக்க சக்திகள் தாம் நம்பும் இந்திய விஸ்தரிப்பு நோக்கங்களுக்கு எகெதிராக ஒரு புதிய சீனப் பெருமதிலை இந்து சமுத்திரத்தில் கட்ட விரும்புகிறது. சீனாவின் நல்லுறவே இந்தியாவில் இருந்து பாதுகாப்பு என்கிற கருத்து இலங்கையில் மட்டுமன்றி நேபாளம் பங்களாதேஸ், பர்மாபோன்ற நாடுகளிலும் நிலவுவது ஒன்றும் பரம இரகசியமல்ல. சீனாவின் இந்தியாவை வளைக்கும் முத்துமாலைத் திட்டமும் இந்த அடிப்படையில் தானே தென்னாசியாவில் சாத்தியமாகி வருகிறது. இந்த நிலை இந்தியாவை சின்ன மனிதர்களால் சுற்றிவழைக்கப் பட்ட தூங்கும் கலிவ்ராக ஆக்கிவிடும்..

அதுவும்ம் தமிழக மீனவர்கலை வகை தொகை இல்லாமல் சுட்டுக் கொன்றுகொண்டு அதை எதிர்த்தால் சீன பூச்சாண்டியைக் காட்டி இந்தியாவின் வாயை அடைத்துவிடலாம் என்று இலங்கைச் சிங்கள அரசும் கடற்படையும் நம்புகிறது. இந்த அளவுக்கு நேரடி ஆபத்து வலர்ந்துள்ள நிலையில் நீங்கள் ஜெனிவாவில் புதிதாக ஒரு ஆபத்தை இந்தியா உருவாக்கி விட்டது என்கிற தொனியில் பேசுவதை புரிந்து கொள்ள முடியவில்லை.

சீனாவுடன் நெருங்கிப் போவதற்க்கான ஆயுத்தமும் தருணமும் வரும் வரைக்கும் சீன பூச்சாண்டி காட்டி இந்தியாவைவின் கண்களையும் கைகளையும் கட்டி வைத்திருப்பதுதானே இலங்கையின் உத்தியாக உள்ளது? சீனப் பூச்சாண்டியைத் தாண்டி நிமிராமல் இலங்கையில் இந்தியா சீரியஸ் பேரம்பேச முடியும் என்றும் இந்து சமுத்திரத்தில் தனது நலன்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா?

இந்திய அரபு வங்கக் கடல்கலையும் கடற்படையையும் இணைக்க சேது திட்டத்தை ம் நிறைவேறினாலும் போதாது என்பது யதார்த்தமாகும். இந்தியப் பாதுகாப்புக்கு ஒரு பகுதி இலங்கைக் கடல் அவசியம் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அரபுக் கடலிலும் வங்கக் கடலிலும் உள்ள கடற்படை வலங்களை இணைக்க இந்தயாவுக்கு அவசியமான கடற்பகுதி நெடுந்தீவு –( காங்கேசந்துறைக்கும், திருகோணமலை)- அம்பாந்தோட்டைக்கும் இடைப் பட்ட கடற்பகுதியே ஆகும். இவை தமிழ் மாநில கடற்பகுதியல்லவா?

இந்தக் கடற்பிராந்தியத்தை இந்தியாவுக்கு மறுக்கும் நோக்கத்துடன் அம்பாந்தோட்டையில் சீன உதவியுடன் துறைமுகத்தை கட்டி வைதிருக்கும் இலங்கை நெடுந்தீவு காங்கேசன் துறை பகுதிகளிலும் சீனாவின் பிரசன்னத்தை அதிகரிகத்து வருவதாகக் குற்றச் சாட்டுக்கள் உள்ளது.

எதிர்காலத்தில் சீனாவையே நம்பும் சிங்கள ஆதிக்க சக்திகளூடாகவா அல்லது இந்தியாவின் இயற்கை நண்பர்களான இலங்கைத் தமிழர் மூலமாகவா இந்தக் கடற்பரப்பைத் இந்தியா அரசியல் இராணுவ ரீதியாக தக்க வைக்கக் கூடியதாக இருக்கும்.? இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?

வங்காளிகளும் தமிழரும் இந்தியாவில் உள்ள பலமான பல்தேசிய இனங்களாவார். உலகமயம்மாதல் உலக வங்காளிகலையும் உலகத் தமிழர்கலையும் ஒருங்கிணைத்து வருகிறது. உலக மயமாதலில் வங்காளிகளின் ஒருங்கிணைப்புக்கு மதம் தடையாக உள்ளதுபோல உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்கு எந்தத் தடைகளும் இல்லை.இந்த நிலமை உலகத் தமிழர்களை பலமான ஒரு சக்தியாக உருவாக்கி வருகிறது.

எதிர்காலத்தில் பங்களாதேஸ்பற்றிய மேற்கு வங்கத்தின் கவலைகளையும் உலகத் தமிழர் பற்றிய தமிழகதின் கவலைகலைகலையும் உள்ளடக்காத இந்திய வெளிவிவகாரக் கொள்கை சாத்தியமில்லை. அத்தகைய போக்கு நடைமுறையில் இந்தியா உள்வாரி வெளிவாரிப் பாதுகாப்புக்கு சாதகமானதுமல்ல.

உலகமயமாதலில் ஒருங்கிணைப்பு பலப்படப் பலப்பட உலகத் தமிழரின் பங்கு இலங்கைத் தமிழரின் அரசியலில் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. அதனையே தமிழகம் டெல்கிக்கு அழுத்தம் கொடுத்து ஜெனீவாவில் அமரிக்க பிரேரணையை ஆதரிக்க வைத்த நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது. அதனையே மலேசி தமிழர்கள் மலேசியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து மலேசியாவைப் பின்வாங்கச் செய்தமையும் உணர்த்துகிறது. அண்மைக் காலங்களில் இலங்கையில் இந்தியா எடுத்துவந்த இலங்கை அரசு சார்பு நிலைபாட்டினால் உலகத் தமிழர் மத்தியில் இந்தியா வுக்குன் எதிரான கருத்துக்கள் பரவலாகி வந்தது ஒன்றும் இரகசியமல்ல. அவர்கள் மத்தியில் அமரிக்கசார்பு வலர்ந்து வந்ததும் இரகசியமல்ல.

இந்தியா ஜெனீவாவில் தனது 25 வருட சிங்கள அரசு சார்பு நிலைபாட்டை மாற்றியமை உலகத் தமிழர் மத்தியில் பாராட்டையும் இந்திய ஆதரவு கருத்தாடல்கலையும் மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

ஜெனிவா வாக்கெடுப்பின்பின் இந்திய இலங்கை உறவில் இனி இந்தியாவுக்கு சீன பூச்சாண்டி காட்டமுடியாது என்கிற புரிதலோடு புதிய ஒரு அத்தியாயம் உருவாகியுள்ளதி. இந்தியாவின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கும் புதிய சூழல் இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்ததல்லவா?.

லெப்டினன்ற் ஜெனறல் கல்கட் அவர்களே ஜெனீவா வாக்கலிப்புடன் இந்தியா இலங்கையுடனான தனது உறவின் சவால்கலை மிகவும் சரியாகன வழியில் கையாள ஆரம்பிதுள்ளது. இந்த வகையில் ஜெனிவா வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கலித்த சூழல் இந்திய பாதுகாப்புக்கு அனுகூலமான சூழலையே உருவாக்கி உள்ளது என்பதே உண்மையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.