Jump to content

வானொலி சேவை ஆரம்பத்துடன் ஈழம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ளனர் தமிழக மாணவர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
protest-170213-seithy-150.jpg

ஈழ ஆதரவு மாணவர் போராட்டம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகரவுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்து கொண்டுள்ளோம்.

  

அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காதுகளை திறக்கும் வரையில் இந்த மௌன போராட்டம் தொடரும். ஐ.நா.மன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உணர்கிறோம். எனவே அடுத்தகட்டமாக ஐ.நா.வை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை துவக்கப் போகிறோம். ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியதன் தேவையையும் மனித நேயம் கொண்ட உலக பொதுமக்கள் மற்றும் உலக மாணவர்களிடம் எடுத்துசெல்கிறோம்.

 

அடுத்த வாரம் மாணவ கூட்டமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தலைநகர் டெல்லி சென்று அங்குள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து மௌன போராட்டத்திற்கு அந்த மாணவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம். தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து இதே போன்று அனைத்து மாநில மாணவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை வடிவமைப்போம். தமிழக மாணவர்களின் முறையீட்டு மடல் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்.

 

பல்வேறு கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களின் இந்த அறவழியிலான நூதன போராட்டத்திற்கு சில கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறார்கள். மாணவர்களின் இந்த அறவழி போராட்ட முறையில் சில கல்லூரி நிர்வாகங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயல். இந்த மௌன போராட்டத்திற்கு தடை விதிக்கும் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அந்தக் கல்லூரிகளை அந்த மாவட்டத்திலுள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்.

 

கடந்த 60 ஆண்டு கால ஈழ வரலாற்றை தாங்கி நிற்கும் www.supporttamileelam.org என்ற இணைய முகவரியையும் வாக்கெடுப்பு நடத்துங்கள் (We Want Referendum) என்ற வாசகத்தையும் கொண்ட பேட்ஜ் அணிந்து கல்லூரி செல்வோம். இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே மாதம் 18ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி அந்தந்த மாவட்டங்களில் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 

இதற்கிடையே, தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் 13ம் தேதி சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் தமிழகம் முழுவதிலிருந்தும் அனைத்து மாவட்ட மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

மாணவர்களின் வானொலி

 

இந்த நிலையில் தமிழீழ மாணவர் அமைப்பு வானொலி ஒன்றை தொடக்கியுள்ளது. மக்கள் மத்தியில் மாணவர் போராட்டம் குறித்தும் இலங்கை இனப்படுகொலை குறித்தும் தகவல்களை கொண்டு சேர்க்கும் விதமாக இணையதள வானொலி ஒன்றை தொடஙகியுள்ளனர். இந்த வானொலி தற்போது ஒலிபரப்பை தொடங்கி நடத்தி வருகிறது.

 

இதற்கிடையே தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் போற்குற்றமல்ல இனப்படுகொலையே. இலங்கை அல்ல தனி தமிழீழமே என்ற புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.

 

மேலும் இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக முதற்கட்ட பணியாக தொடங்க உள்ளனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80167&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

படிப்பு என்ன படிப்பு? எப்பவும் படிக்கலாம். போராடா விட்டால் ஈழ கனவு பொய்த்துவிடும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிப்பு என்ன படிப்பு? எப்பவும் படிக்கலாம். போராடா விட்டால் ஈழ கனவு பொய்த்துவிடும்.

 

நீங்க பெரிய படிப்பு படிச்சு என்னத்தை வெட்டிக் கிழிச்சீங்க..! :lol:

 

பொடியள்.. பாடப் படிப்போட.. எதிர்கால அரசியலும் படிக்கிறாங்க. உங்களுக்குப் பொறாமை..! உங்களை விட அவங்கள் அட்வான்ஸா இருக்கிறாங்கள் என்று..! :)

Posted

எல்லோரையும் ஓரணியில் இணைத்துப் போராட வேண்டும் என்ற மாணவர்களின் தூர நோக்கு மகிழ்ச்சியளிக்கிறது, அதற்கான முதல்படியாக ஈழப் பிரச்சினை குறித்த தகவல்களை அறியாமல் இருக்கும்மாணவர்கள் மத்தியில் அது குறித்த அறிவூட்டலைச் செய்வதற்கு இந்த வானொலிச் சேவை அவசியமாகிறது.

 

சிறப்பான திட்டமிடலுடன் மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறி இந்திய அரசியல் அரங்கில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே வேணவா!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகிழ்ச்சியான செய்தி. :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • இந்தியாவுக்கான இலங்கை இராஜதந்திரி மீள அழைப்பு 22 Dec, 2024 | 12:16 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாத்திலிருந்து டெல்லியில் இராஜதந்திர பணிகளை பொறுப்பெடுத்திருந்த ஷேனுகா செனவிரத்ன அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர் கூடிய விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். உலக நாடுகளில் பணிப்புரிகின்ற இலங்கை இராஜதந்திர மையங்களை முழு அளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர உயர் பதவிகளுக்கு கடந்த ஆட்சி காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் மற்றும் உறவு ரீதியான நியமனங்களை இரத்து செய்வதற்குமான அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இதன் பிரகாரம் சுமார் 16 இராஜதந்திரிகளை உடனடியாக நாட்டுக்கு மீள வரவழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் கலாநிதி லலித் சந்திரதாச, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் அனுர பெர்னாண்டோ, இந்தியாவின் சென்னையில் உள்ள பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானா ஆகியோர் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள நிஷான் மாணிக் முத்துகிருஷ்ணா, அங்குள்ள மூன்றாவது செயலாளர், தாரக திசாநாயக்க, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளர்  சஞ்சய் புஞ்சிநிலமே, ரோம் தூதரகத்திலுள்ள மெல்கி சந்திமா பெரேரா ஆகியோருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கான்பரா உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள தினுகா கார்மெலின் பெர்னாண்டோ, பாரிஸ் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் சஹஸ்ர பண்டார, மாஸ்கோ தூதரகத்திலுள்ள பந்துல டி சொய்சா, டில்லி உயர் ஸ்தானிகராலயத்திலுள்ள அன்வர் முகமது ஹம்தானி, பெய்ரூட்டிலுள்ள மூன்றாவது செயலாளர் பிரியங்கிகா திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அங்காராவில் இரண்டாவது செயலாளர் யாஸ்மின் ஹில்மி முகமது, நெதர்லாந்தில் உள்ள ஹேக் தூதரக ஆலோசகர் அஷ்வினி ஹபாங்கம, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமிலுள்ள ஜனக ரணதுங்க உள்ளிட்ட அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலும் பல நபர்களை மீள அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/201850
    • சரி, கேட்டதை அப்பிடியே நெடுந்தீவுக்கும் சேர்த்துப் போடச்சொன்னாப் புண்ணியமாப்போகுமெல்லே...
    • மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அருண் ஹேமச்சந்திர Published By: Digital Desk 2 22 Dec, 2024 | 03:16 PM (துரைநாயகம் சஞ்சீவன்) மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் கேமச்சந்திர தெரிவித்தார்.  ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மிமனவுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சட்ட விரோத குடிவரவாளர்களாக வருகை தந்துள்ள மியன்மார் - ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். அந்த வகையில் அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளை செய்து வருகிறோம். குறித்த அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டனர். உடனடியாக அங்கே நடமாடும் மருத்துவ முகாமினை மேற்கொண்டிருந்தோம். பின்னர் சட்டத்தின் முன் இவர்கள் நிறுத்தப்பட்டார்கள். சட்டத்தின் பிரகாரம், மாலுமிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏனைய 103 பேரும் தற்போது ஜமாலியா பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார துறையினர், நிர்வாகத்துறையினர், பாதுகாப்புத் தரப்பினர், வெளிவிவகார அமைச்சு உட்பட பல துறை சார்ந்தவர்கள் ஒன்றாக இயங்கி வருகிறார்கள். ஆனால் சிலர் இந்த விடயத்தை தங்கள் சுய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஒரு பாரிய விடயத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்த வேளையிலே ஒருசில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். நாட்டைப் பொறுத்தவரையிலும் திருகோணமலையை பொறுத்தவரையிலும் இது புதிய அனுபவம் இந்த விடயத்தை அணுகுவதற்கான ஒட்டுமொத்த அம்சங்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அத்துடன் மிகவும் சிறப்பாக அனைத்து விதத்திலும் அணுகி வருகின்றது. ஆனாலும் தமது அரசியல் இலாபத்தினை கருத்தில் கொண்டு ஒரு சிலர் இதனை வைத்து அரசியல் பிழைப்பு வாதத்தை மேற்கொள்ள விரும்புவார்களாக இருந்தால் அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அத்துடன் நீங்கள் ஏதாவது உதவிகள் செய்ய விரும்பினால் மாவட்ட செயலாளர் ஊடாகவோ அல்லது பிரதேச செயலாளர் ஊடாகவோ செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/201876
    • அந்த வண்டி லண்டனுக்குத்தான் வருகுது சார் . ....... அங்கிருந்து உங்க வீட்டுக்கு வருவதற்கு பத்து மணித்தியாலம் வேணும் . ........ ஹா . .....ஹா . ...... விரும்பினால் கோஷான் சே யை சந்தித்து ஒரு கோப்பி குடித்துவிட்டுத் திரும்பிப் போகலாம் . ..........!  😂
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.