Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. At least 34 people have been killed, including six children, as the United States and Israel carried out massive attacks across Iran, targeting a top university as well as residential areas, after US President Donald Trump set a Tuesday deadline for Tehran to fully reopen the Strait of Hormuz or face strikes on its power plants and bridges. The Fars news agency reported on Monday that an air attack killed 23 people, including four girls and two boys aged below 10 years, in Tehran province’s Baharestan County. Al JazeeraIran’s top university bombed as US, Israel intensify atta...Tehran says it will respond 'in kind' to attacks on its infrastructure, accuses Trump of inciting 'war crimes'.ரம் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடங்கிவிட்டாரா?
  3. Today
  4. அரசியலுக்கு அப்பால் இது ஒரு சிறப்பான செய்தி . ........வரலாறு தெரிந்து கொள்வோம் ........! 👍
  5. ensdotoSrph1a78l68m505l891801423a0hf2h42i5hmu08l 67h276i5268 · புதுவையின் கவிவரிகளில்எழுதப்பட்ட கவிவரிகள் {பாடல் }SBP #உந்தனின் வாசலில் வந்து நின்றேனடி ஏனடி பார்க்கவில்லை - என்னை கண்டுகொள்வாய் என காத்திருந்தேனடி புன்னகை பூக்கவில்லை திருநெல்வேலி ஊரில் மழை பொழியும் பத்திரகாளி தினந்தோறும் உந்தன் காலில் அருள் பெருகும் பத்திரகாளி காலையிலே திரை விலகும் வேளையிலே வருகிறேன் கண்மலர்ந்து நீ சிரிக்க நானிருந்து உருகிறேன் ராவினிலே நீ துயிலும் பாயினையும் கழுவுறேன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை ஆதலினால் அழுகிறேன் பத்திரகாளியே நித்திரையோ? - என்னை பார்க்க தடையான உத்தரவோ? இத்தனை சொல்லியும் நீ இரங்காவிடில் என்னிலே என்னடி குற்றமதோ ? பூசை மணி காதில் விழ வாசலிலே பூக்கிறேன் பொங்கல் அன்று உன் பொலிவை கண் குளிர பார்க்கிறேன் தேரில் வரும் நாளினிலே ஊறி உடல் வேர்க்கிறேன் தேவி பதில் ஏதுமன்றி போக உயிர் போக்கிறேன் பத்திர காளியே நித்திரையோ?- இந்த பாவி அழுவது கேட்கலையோ? பித்தனை போலவும் பேயனை போலவும் கத்துவதே எனக்கானதுவோ? Voir la traduction......! புதுவையின் கவி வரிகளில் ..... அம்மனுக்கு அர்ச்சனை ......! 🙏
  6. பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி எப்பொழுது? நிலாந்தன்! கடந்த வியாழக்கிழமை,பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்களில் படையினர் அல்லது போலீசாரின் பிரசன்னத்தைக் காண முடிந்தது. துப்பாக்கிகளோடு ஆலய வாசலில் அல்லது அதன் சூழலில் காணப்பட்டார்கள். ஈஸ்டர் குண்டுகள் வெடித்து கிட்டத்தட்ட 7,ஆண்டுகள் ஆகிவிட்டன.அந்தக் குண்டுகளின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்களும் உண்டு.அதுதொடர்பாக பல்வேறு வகைப்பட்ட வாக்குமூலங்களும் உண்டு.நாடு போரில் இருந்து மீண்டு விட்டதாக கூறிக்கொள்கிறது. நாட்டில் இனவாதம் இல்லை என்று இப்போதுள்ள அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் துப்பாக்கிகள் அற்ற பாதுகாப்பான ஈஸ்டர் எப்பொழுது கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்கும் ? ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னணியில்,உள்நாட்டில் தமது வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்ட சக்திகள் இருந்ததாக சந்தேகங்கள் உண்டு.பேராயர் மல்கம் ரஞ்சித் அதுதொடர்பாக தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். ஆனால் இங்கே ஓர் அடிப்படை உண்மையை மறந்து விடக்கூடாது. யார் பின்னாலிருந்து கையாண்டாலும் கையாள விட்டாலும் தங்கள் உடல்களைக் குண்டுகளாக மாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது, குறிப்பாக அதிகளவு தமிழர்கள் கலந்து கொள்ளும் பிரார்த்தனை நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னுடைய மத அரசியல் நம்பிக்கைகளுக்காக தன்னையே வெடிகுண்டாக்கி வெடித்துச் சிதறுவது என்பது சாதாரணமானது அல்ல.அவ்வாறு செய்வதற்கு ஒரு வைராக்கியம் வேண்டும்.தமது இலட்சியத்தின் மீது ஆழமான பற்றுறுதி இருக்கவேண்டும்.தனது நம்பிக்கைகளை தனது உயிரினும் மேலாக கருதும் ஒருவரால்தான் அவ்வாறு குண்டாக மாறி வெடித்துச் சிதற முடியும். அவ்வாறு தன் உயிரைக் கொடுத்து தன் மத நம்பிக்கையைப் பாதுகாப்பதற்குத் தயாராக கொஞ்சம் பேர் நாட்டில் இருந்தார்கள் என்பது உண்மை.அவர்களை வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து வெவ்வேறு சக்திகள் கையாண்டு இருக்கலாம்.ஆனால் அவ்வாறு கையாண்டவர்கள் மனிதக் குண்டுகளை உற்பத்தி செய்யவில்லை. அவர்களால் அது முடியாது. எனவே மனிதக் குண்டுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மத அரசியல் சூழல் நாட்டில் இருந்தது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதை இன்னும் ஆழமான வார்த்தைகளில் சொன்னால், நாட்டில் மதங்களுக்கு இடையிலும் இனங்களுக்கு இடையிலும் பிரச்சினைகள் ஏற்கனவே இருந்தன என்பதுதான் மூல உண்மை.ஏற்கனவே இருந்த பிரச்சினைகளை ஏனைய சக்திகள் கையாண்டன என்பதுதான் இரண்டாவது உண்மை.எனவே வெளிச் சக்திகள் கையாண்டதால் மனிதர்கள் குண்டுகள் ஆவதில்லை.குண்டுகளை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு மத அரசியல் சூழல் ஏற்கனவே இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஈஸ்டர் குண்டுவெடிப்பில் மட்டுமல்ல இனப்பிரச்சினையிலும் அதுதான் உண்மை.ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான் ஏனைய சக்திகளும் வெளிச் சக்திகளும் கையாளலாம். எனவே ஏற்கனவே ஒரு பிரச்சினை இருந்தது என்பதுதான் அடிப்படை உண்மை. உதாரணமாக,ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை வளர்த்தெடுத்தது அமெரிக்கா.ஆனால் ஏற்கனவே இருந்த சோவியத் எதிர்புணர்வுக்கு,இஸ்லாமிய தீவிர நிலைப்பாடுகளுக்குக் அமெரிக்கா ஆயுதம் கொடுத்து வளர்த்துவிட்டது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டது அமெரிக்காதான் என்று கூறுவார்கள்.அங்கேயும் ஏற்கனவே இருந்த அடிப்படை வாதத்தை,வெறுப்பை, போராட்டத்துக்கான தேவையை அமெரிக்கா கையாண்டது என்பதுதான் சரி. இப்படிப் பார்த்தால் ஈஸ்டர் குண்டு வெடிப்பும் உட்பட உலகில் பெரும்பாலான இனப்பிரச்சினைகள்,மதப் பிரச்சினைகள் போன்றவை வெளிச்சக்திகளால் வளர்த்தெடுக்கப்படுகின்றனவே தவிர வெளிச்சக்திகளால் உற்பத்தி செய்யப்படவில்லை.அவை ஏற்கனவே உள்நாட்டில் இருந்தன.ஏற்கனவே இருந்த ஒரு பிரச்சினையை வெளிச் சக்திகள் தங்கள் தங்கள் நோக்கு நிலைகளில் இருந்து கையாளுகின்றன. ஈஸ்டர் குண்டுவெடிப்பை முன்னெடுத்த மனிதக் குண்டுகளை உள்நாட்டுச் சக்திகள் தங்கள் தேர்தல் நோக்கத்துக்காகக் கையாண்டார்கள் என்ற சந்தேகம் பொதுவாக உண்டு.அதுபோலவே இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய புலனாய்வுத்துறை இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் ஏற்கனவே இருந்த ஒன்றைத்தான் யாரும் கையாண்டிருக்கலாம் என்ற விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால்,வெளிச் சக்திகளால் கையாளப்படத்தக்க இன,மதச் சூழல் ஒன்று நாட்டில் இருந்தது என்பதே மூல காரணம் ஆகும். இந்தியா ஏன் இதில் சம்பந்தப்பட வேண்டும்?இலங்கையில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலையெடுத்து விட்டது என்பதை எடுத்துக்காட்டி அதன்மூலம் இந்திய அரசாங்கம் தனது இந்துத்துவா நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் இந்துக்களின் வாக்குகளைத் திரட்டவும் முடியும் என்பதற்காகவே இந்தியா அதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பது அந்த ஊகம் ஆகும். ஆனால் இத்தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கையை இலங்கைக்கு முதலில் வழங்கிய தரப்புகளுக்குள் இந்தியாவும் அடங்கும்.அத்தாக்குதல்களால் இந்தியாவுக்கு நன்மை கிடைக்கும் என்று சொன்னால்,அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய விதத்தில் இந்தியா இலங்கையை எச்சரித்திருக்காது.ஒரு தாக்குதலில் சம்பந்தப்பட்ட வெளிநாடு அந்தத்தாக்குதலை தடுத்து நிறுத்தக்கூடிய எச்சரிக்கையை குறிப்பிட்ட நாட்டுக்கு முன்கூட்டியே வழங்குமா? இந்தியா எச்சரித்தது மட்டுமல்ல,இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கும் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தன என்று கூறத்தக்க ஆதாரங்கள் நிறைய உண்டு.அப்போதிருந்த ரணில் மைத்திரி அரசாங்கம் ஆனது உட் பூசல்களால் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டது.ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளில் ஒருவர் ஆகிய மைத்திரிபால சிறிசேன யாப்புச்சதி முயற்சி ஒன்றின்மூலம் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை குறைத்து விட்டிருந்தார்.அவர் முன்னெடுத்த 52 நாள் யாப்புச்சதிப் புரட்சியானது அரசாங்கத்தின் செயல் திறனை பெருமளவுக்குப் பாதித்திருந்தது.அப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் தான் குண்டுகள் வெடித்தன. ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு முன்னதாக அந்த ஆண்டு பெப்ரவரி மாதம் மைத்திரிபால சிறிசேன முக்கிய கட்சி தலைவர்களை தன்னுடைய இடத்துக்கு அழைத்து இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பாக முன்கூட்டியே எச்சரித்து இருக்கிறார்.இரவுச் சாப்பாட்டோடு நடந்த அந்தச் சந்திப்பில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் பிரசன்னத்தைக் குறிக்கும் காணொளிகளும் காட்டப்பட்டுள்ளன.அதில் ஒருபகுதி காணொளிகள் தமிழில் காணப்பட்டன என்று அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்புமைய தமிழ் கட்சித் தலைவர் ஒருவர் இக்கட்டுரையாளருக்குத் தெரிவித்தார். எனவே ஒரு பாரதூரமான தாக்குதலை முன்கூட்டியே ஊகித்துத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகள் அரசாங்கத்திற்கு ஏற்கனவே கிடைத்திருந்தனவா?அரசாங்கம் அந்த முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில் தற்காப்பு நடவடிக்கைகளை,பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தது என்பதும் உண்மையா? கடந்தவாரம் இதுதொடர்பான ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய உதய கமன்பில எழுதிய “ஈஸ்டர் குண்டு வெடிப்பும் அதன் சூத்திரதாரிகளும்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்வரிசையில் ராஜபக்சக்கள் மட்டும் காணப்படவில்லை.சஜித் பிரேமதாசவும் காணப்பட்டார்.அது சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு நூல்.அதை வாசிக்க இக்கட்டுரையாளரால் முடியாது.எனினும் கொழும்புமைய அரசியல் பிரமுகர் ஒருவர் மும்மொழிகளிலும் ஆளுமை உடையவர்,அந்த நூலின் உள்ளடக்கம் தொடர்பாக ஒரு சுருக்க விளக்கத்தைத் தந்தார். அந்த விளக்கத்தின்படி ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா இருந்தது என்ற குற்றச்சாட்டை உதய கமன்பில மறுப்பதாகக் கூறப்படுகிறது. அந்தத் தாக்குதல்களின் வேர் இஸ்லாமிய அடிப்படை வாதம்தான் என்ற வாதமும் அங்கே முன்வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அது ஏற்கனவே இக் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான் வெளியில் இருப்பவர்கள் கையாளலாம். இக்கட்டுரையின் மையப்பொருளும் அதுதான்.இஸ்லாமிய அடிப்படை வாதத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஓர் இன,மத சூழல் நாட்டில் ஏற்கனவே இருந்தது என்பதுதான்.இப்பொழுதும் அதுஇல்லை என்று கூறலாமா? இல்லையென்றால் ஏன் ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு தேவாலயங்களுக்கு முன் ஆயுதம் தரித்த படையினரும் போலீசாரும் நிறுத்தப்படுகிறார்கள்? அப்படிப்பட்ட தாக்குதல்களை எதிர்பார்த்துத்தான் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் புதுப்பிக்க முற்படுகிறதா? இக்கட்டுரை ஈஸ்டர் குண்டு வெடிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அக்குண்டு வெடிப்பை திட்டமிட்டவர்களின் மத அடிப்படை வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனைய மதத்தவர்களை கொல்வதன்மூலம் தன்னுடைய மத நம்பிக்கைகளை மகிமைப்படுத்த முடியும் என்று கருதும் புனிதப் போர்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் தனது இறை நம்பிக்கையின் பெயரால் தனது உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருப்பது என்பது சாதாரணமானது அல்ல.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் மேற்காசியப் போரில் அமெரிக்க இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் வெற்றி கொள்ள முடியாமல் இருக்கும் இடம் அதுதான். எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கான மூலகாரணம் ஏற்கனவே நாட்டுக்குள் இருந்தது.கடந்த பல தசாப்த காலமாக குறிப்பாக, 2009க்குப்பின் முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட,திட்டமிட்ட தாக்குதல்களின் விளைவு அது.இது முதலாவது காரணம்.இரண்டாவது காரணம்,உலகம் முழுவதிலுமான இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் எழுச்சி.அது இலங்கைத்தீவிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது.எனவே ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு உள்நாட்டுப் பரிமாணமும் உண்டு;அனைத்துலகப் பரிமாணமும் உண்டு. அந்த உள்நாட்டுப் பரிமாணம் முழுமையாக நீக்கப்பட்டு விட்டதா?அது நீக்கப்படவில்லை என்ற பயத்தால்தான் துப்பாக்கிகள் இல்லாத பெரிய வெள்ளியை இலங்கை கிறிஸ்தவர்களுக்கு உறுதிப்படுத்த முடியவில்லையா ? ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.ஆனால் அதற்கு முன்பிருந்தே வடக்கு கிழக்கில் உள்ள படைத்தளங்களில் உள்ள பௌத்த விகாரர்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.அண்மை ஆண்டுகளாக தையிட்டி விகாரைக்கும் அதுதான் கதி. நான்கு மதங்களும் செழித்தோங்கி காணப்படும் இச்சிறிய தீவில் ஏன் ஒரு பகுதி ஆலயங்களை அல்லது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆலயங்களை ஆயுதம் தாங்கிய போலீசாரும் படையினரும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 7ஆண்டுகளின் பின்னரும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மொழிகளுக்கு இடையிலும் பதட்டம் உண்டு. சந்தேகம் உண்டு.பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் உண்டு. ஏனென்றால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை,பல்சமயச் சூழலை, பல்மொழிச் சூழலை ஏற்றுக்கொண்டு எல்லா இனங்களும்,மதங்களும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதத்தக்க ஒரு தீர்வை இனப்பிரச்சனைக்கான தீர்வைக் கொடுப்பதற்கு கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தவோர் அரசாங்கமும் தயாராக இருக்கவில்லை. மாற்றத்தை வாக்களித்து வந்த தேசிய மக்கள் சக்தியால் அதைச் செய்ய முடியுமா?அரசாங்கம் கூறுகிறது,இப்பொழுது இனவாதம் இல்லை என்று. ஆனால் இனவாதம் இல்லை என்று கூறிக்கொண்டிருப்பதனால் அது இல்லாமல் போய்விடாது.மாறாக இச்சிறிய தீவில் இனவாதம் இல்லை என்பதனை தமிழ் மக்கள் எப்பொழுது ஏற்றுக்கொள்வார்கள் என்றால்,இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வு வழங்கப்படும் போது மட்டும்தான். தமிழ் மக்கள் இந்தச் சிறியதீவு தங்களுக்கு பாதுகாப்பானது என்று நம்ப வேண்டும்.தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால்,இச்சிறிய தீவில் சிங்கள மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை;முஸ்லிம் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் கடந்த மூன்று நாட்களாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு முன்பாக துப்பாக்கிகளோடு உஷார் நிலையில் நிற்கும் போலீசாரும் படைத்தரப்பும் உணர்த்துகின்றன. https://athavannews.com/2026/1471037
  7. காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்! காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (05) பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகள் அனுராதபும், எப்பாவல மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் பதிவானதாக பொலிஸார் தெரிவித்தனர். எப்பாவலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகோலே பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் எப்பாவல 36, 48 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் அமுனுகோலே குளக்கரை அருகே சடலமாக மீட்கப்பட்டார். மற்றைய நபர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் நெல் வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே, மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெவகெதர பகுதியில் பதிவான மற்றொரு சம்பவத்தில் தனது இல்லத்தின் முன்பாக காட்டு யானை தாக்கியதில் 79 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான அவர், படுகாயங்களுடன் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவங்கள் தொடர்பாக எப்பாவல மற்றும் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1471065
  8. நீரிணை மூடப்பட்டால் ஈரானுக்கு நரகம்தான் கதி – ட்ரம்ப் சூளுரை! செவ்வாய்க்கிழமை அன்று தான் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் தெஹ்ரான் ஒரு உடன்பாட்டை எட்டாமலும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காமலும் இருந்தால், ஈரான் மீது கடும் கடும் தாக்குதலை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தினார். அதேவேளையில், ஈரானின் உட்பகுதியில் இருந்து மிகுந்த ஆபத்து நிறைந்த ஒரு மீட்புப் பணியில் விமானப்படை வீரர் ஒருவரை மீட்ட அமெரிக்க சிறப்புப் படைகளையும் அவர் பாராட்டினார். ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டுத் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணைக் கிடங்கு மற்றும் பிராந்திய மறைமுகப் போராளிக் குழுக்களுக்கான ஆதரவு ஆகியவற்றால் ஏற்படும் உடனடி அச்சுறுத்தல் என்று தாங்கள் கருதியதை அழிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐந்து வாரங்களுக்கும் மேலாக ஏவுகணைகள், வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானைத் தாக்கி வருகின்றன. பதிலுக்கு, உலகின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கிற்கான வழித்தடமான ஹார்முஸ் நீர்வழியை தெஹ்ரான் திறம்பட மூடியுள்ளதுடன், வளைகுடாவைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பிற இலக்குகளையும் தாக்கியுள்ளது. இன்று (06) காலை தெஹ்ரானில் வெடிப்புகள் நிகழ்ந்தன. மேலும், நகரின் தெற்கே உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லபபட்டதாக ஒரு அதிகாரி ஈரானிய அரசு ஊடகத்திடம் தெரிவித்தார். இதேவேளை, தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இட்ட பதிவொன்றில், ஈரானிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தினார். இது ஒரு போர்க்குற்றமாக அமையும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆதரவாளர்கள், எதிரிகள் மற்றும் நிதிச் சந்தைகள் என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள முரண்பட்ட செய்திகளுக்கு மத்தியில், ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திங்கட்கிழமைக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார். அதேநேரம், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சாத்தியமான 45 நாள் போர்நிறுத்தத்தின் நிபந்தனைகள் குறித்து அமெரிக்கா, ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக, பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த நான்கு அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டனது. மத்தியஸ்தர்கள் இரண்டு கட்ட ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது. முதல் கட்டமாக 45 நாள் போர் நிறுத்தம்; இரண்டாம் கட்டமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஆகியவை அமையும். எனினும், இது தொடர்பில் வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. https://athavannews.com/2026/1471078
  9. ஆஹா.... ஈஸ்டர் விடுமுறை காலையில் கிடைத்த, இனிப்பான செய்தி. 😂 வெல்டன் ஈரான். இன்ன்ன்னும் நிறையய... எதிர் பார்க்கின்றோம். 🤣 பகிர்விற்கு நன்றி @உடையார் . 👍
  10. விமானிகள் பாதுகாப்பாக மீட்டெடுத்தது மகிழ்ச்சியான செய்தி, இந்த போர் தொடருமாயின் அமெரிக்காவின் வளைகுடா ஆதிக்கம் கேள்விக்குள்ளாகும் நிலை ஏற்படும், அது அமெரிக்காவின் தற்போதய மேலாண்மை நிலையிலிருந்து கீழிறக்கிவிடும், பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இந்த வளைகுடா பகுதியினை பேணுவதற்கு அமெரிக்காவிற்கு போர் எந்த வகையிலும் உதவ போவதில்லை மாறாக பாதிப்பினையே ஏற்படுத்தும். ஈரானை பொறுத்தவரை அவர்கள் பெற்றுள்ள இந்த மேலாதிக்க நிலையினை தக்கவைக்க ஒரு அரசியல் ரீதியான வெற்றிகளை பெறுவதன் மூலம் மீண்டும் உலக அரங்கில் தடைகளை கடந்து வர சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது, தொடர்ந்தும் போரினை தொடர்ந்தால் புதிதாக எந்த இலாபமும் ஏற்படபோவதில்லை. அமெரிக்காவினால் போரினை தொடர முடியாத நிலையில் மேலும் மேலும் ஒரு சூதாடி போல போரினை தொடருவது ஒரு ஆபத்தான முடிவினை நோக்கியே அமெரிக்காவினை தள்ளிவிடும் போரிற்காக செலவழிக்கும் காசு தற்போது உள்ள நிலையில் ஈரானிற்கு ஏற்பட்ட சேததிற்கான நட்ட ஈட்டினை குறைந்த செலவுடனேயே முடித்துக்கொள்ளலாம், ஆனால் போரினை தொடர்ந்து அதிகமாக செலவழித்து விட்டு நட்ட ஈட்டினை கொடுக்கும் நிலை ஏற்படுவது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். ஈரானினது போர் பற்றிய மிகைப்படுத்தல்களை கடந்து பார்த்தாலும் அவர்கள் ஒரு மிக புவியியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலமான நிலையில் உள்ளார்கள், அவர்களினது பலம் இங்கு விடயமே இல்லை ஆனால் அதற்கெதிரான போர் என சுவரில் தலையினை மோதுவது முட்டாள்தனமானது. அமெரிக்காவினை வகையாக கோர்த்துவிட்டு பிபி காணாமல் போய்விட்டார், இந்த நிலையில் அமெரிக்கா தொடர்ந்தும் போரிடுவது அமெரிக்காவினை உலக அரங்கிலேயே பலவீனமாக்கிவிடும் நிலமையே காணப்படுகிறது. இருதரப்பும் விட்டுக்கொடுத்து ஒரு போர் நிறுத்தத்திற்கு வரவேண்டும், அத்துடன் வெல்ல முடியாத போர் என தெரிந்துள்ள நிலையில் இனி ஒரு போர் நடாத்தி ஈரானை வெல்ல முடியாது எனில் அவர்கள் வைக்கும் நிபந்தனையான பாதுகாப்பு உத்தரவாதத்தினை கொடுக்கலாம், அதன் மூலம் அணு ஆயுத தேவையினை ஈரானுக்கு இல்லாமல் செய்வதன் மூலம் ஈரானின் அணுவாயுத உற்பத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
  11. திருடரின் கூட்டத்திற்கு பங்குதாரிகள் போகத்தான் செய்வார்கள். இனிமேல் கம்மன்பில தனித்து விடப்படுவார். சஹ்ரானுடன் சேர்ந்து இயங்கியவர்கள் முந்நூறு பேர் இன்னும் நாட்டில் உள்ளனராம், அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்வு கூறுகிறார் கம்மன்பில, அது எப்படி இவருக்குத் தெரியும்? அவர்களை அடையாளம் காட்ட வேண்டியது கம்மன்பிலவின் பொறுப்பு. இல்லையென்றால் இன்னொரு குண்டுவெடிப்பிற்கு கம்மன்பில தயாராகிறார் என்பது வெள்ளிடைமலை.
  12. நல்ல மகிழ்ச்சியான தகவல், செய்தியினை இணைத்துவிடுங்கள்.
  13. அமெரிக்கா ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் 45 நாள் போர் நிறுத்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு கட்ட ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் 45 நாள் போர் நிறுத்தம் ஹோர்முஸ் கால்வாயை உடனடியாகத் திறப்பதும் அடங்கும். இறுதி ஒப்பந்தம் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தவிர்க்குமாறு ஈரானைக் கட்டாயப்படுத்துவதும் அதற்கு பதிலாக ஈரானின் மீதான தடைகள் தளர்த்தப்பட்டு முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கபடுகின்றது. இருப்பினும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பகுதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கருதபடுகின்றது.
  14. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி உறவுகளே ........! 😂 கணனியில் இது ஒன்றுதான் உருப்படியாய் செய்கிறேன் அதற்கு யாழ் தான் காரணம் , இல்லையென்றால் தமிழ் எழுதுவதும் மறந்து போய்விடும் .......! 😂
  15. ஒருத்தர் மக்களைச் சந்திக்க மாட்டாராம்.மக்கள் தேவைகளைக் காது கொடுத்துக் கேட்கமாட்டராம்.தொண்டனின் சாவுக்கு ஆற அமர இருந்து வீடியோவில் இரங்கல் செய்தி கொடுப்பாராம்.சினிமாக்காரர்களின் நிகழ்வுகளுக்கு சின்னவீட்டோடு போய் கலந்து கொள்வாராம்.ஓட்டு மட்டும் மக்கள் போட்டு தன்னை முதலமைச்சர் ஆக்க வேண்டுமாம்.பனையூரில் படுத்துக்கொண்டே தேர்தலில் நிற்கும் ஒரே அரசியல்வாதி
  16. கொள்கைத் தெளிவுள்ள மக்களையும் தலைவனையும் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது.வளர்ச்சி மெதுவாக இருக்கலாம்.ஆனால் சீரான உறுதியான வளர்ச்சி.வீக்கமும் வளர்ச்சியும் ஒன்றல்ல.விஜைக்கு வந்திருப்பது வீக்கம்.
  17. இப்படியானவர்களை நீங்கள் அறிய தருவது மிகவும் நல்லது தமிழ்நாட்டின் நல்ல காலம் இவர்களும் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டி போட வரவில்லை.ஆசை வரவில்லை
  18. வெடிக்கும் பிராந்திய போர்-ஈரானால் பேரதிர்ச்சி US vs Iran | 45 days ceasefire
  19. கொழுந்துவிட்டு எரியும் இஸ்ரேல் கப்பல்.. சுற்றிவளைத்து அடிக்கும் ஈரான்..! PTD
  20. போர் அமைதியை விட அதிக லாபமா? அமெரிக்கா–இஸ்ரேல் போர் ஈரானை நோக்கி மேலும் ஆழமாகச் செல்லும் நிலையில், மோதல் ஆய்வாளர் டேவிட் கீன் ஏன் சில போர்கள் தெளிவான வெற்றியின்றி நீண்டுகொண்டே செல்கின்றன என்பதை ஆராய்கிறார். அவரின் வாதம் என்னவென்றால் — போர் என்பது அரசியல் கட்டுப்பாடு, பொருளாதார நலன்கள், மற்றும் போர்க்களத்தைத் தாண்டியும் நீடிக்கும் அதிகார அமைப்புகளுக்கு பயன்படும் ஒரு கருவியாக மாறிவிடலாம். தடைச் சட்டங்கள், கடத்தல், இராணுவச் செலவுகள், ‘பயனுள்ள எதிரிகள்’ போன்ற காரணிகள் மூலம், மோதல் எப்படி ஒரு செயல்பாட்டு அமைப்பாக மாறுகிறது என்பதையும், போரை விட அமைதியை அதிகமாகக் கவர்ச்சியாக மாற்றுவது தான் உண்மையான சவால் என்பதையும் கீன் விளக்குகிறார்.
  21. பி.எம்.டி என்றால் ஆங்கிலத்தில் என்ன பொருள் என்பதை கட்டுரையாளர் எங்கும் சொன்னதாக தெரியவில்லை. PMD = Post Micturition Dribble
  22. கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு Apr 6, 2026 - 10:49 AM இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்‌ஷன் தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்தமையினால் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmnmqq2ze000e356p5octdqi0
  23. தேசிய QR ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்! (நேரலை) Apr 6, 2026 - 09:48 AM தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. இன்று (6) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்நிலையில். குறித்த நிகழ்வை நேரலையில் பார்வையிட, https://adaderanatamil.lk/news/cmnmoj0ox000b356phppgbr20
  24. உட்கட்டமைப்புகள் மீது கைவைத்தால் அமெரிக்காவுக்கும் அதே கதிதான்! ; ட்ரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு ஈரான் பதிலடி Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 09:57 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் அச்சுறுத்தல் தற்போது ஒரு மிகப்பெரிய உட்கட்டமைப்புப் போராக உருவெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு, ஈரான் அதே பாணியில் நேரடிப் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், செய்தி அறிவிப்புகள் ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலாக அமெரிக்காவுக்குச் சொந்தமான அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் அதேபோன்ற உட்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் எந்தவொரு சொத்துக்களும் ஈரானியப் படைகளின் இலக்குகளாக மாறும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ஆக்ஸியோஸ்' (Axios) நேர்காணல் மற்றும் 'ட்ரூத் சோஷியல்' பதிவுகளில் மிகத் தீவிரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். "ஈரான் உடன்பாட்டிற்கு வராவிட்டால், அங்குள்ள அனைத்தையும் நான் தகர்த்துவிடுவேன் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். வரும் செவ்வாய்க்கிழமைக்குள் ஈரானின் அனைத்து எரிசக்தி மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளையும் அமெரிக்கா முடக்கும் என அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் மிகப்பெரிய பாலம் ஏற்கனவே தகர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஈரான் ஒரு சிறந்த நாடாக மாறுவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கும்போதே உடன்பாட்டிற்கு வருவது நல்லது; இல்லையேல் அழிவைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது" எனக் கூறியுள்ளார். ஒருபுறம் கடும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், மறுபுறம் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு "நல்ல வாய்ப்பு" இருப்பதாக அவர் நம்புவது, போர் தவிர்க்கப்படுவதற்கான ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242848
  25. அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் Apr 6, 2026 - 07:44 AM அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் இன்று இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் நேற்று அத தெரண செய்திகளுக்கு தெரிவித்தார். இதனையடுத்து தமது சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnmk49yl0006356p5eylv9nt

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.