24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
வத்திக்கானுடன் முரண்பட்டு பாருங்கள் சுயரூபம் தெரியும்.😎 கீழே இருக்கும் தரவுகளை பார்க்கலாம். எதற்காக அழிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்கள் என்பது புரியும்.அங்கே ஆன்மீகமும் இல்லை அண்டங்காககளும் இல்லை. மாறாக தமது பாதையில் குறுக்கே வருபவர்களை அழிப்பதுதான் அவர்கள் நோக்கம். அது அவர்களுக்கு சரியாக தெரிகின்றது.வல்லமையுள்ளவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியது வல்லமை இல்லாதவர்களின் உலக நிலை. இங்கே ஆன்மீகத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றார்கள்.அவ்வளவுதான். மற்றும் படி அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஜேர்மனியில் கூட ஆன்மீகத்தை அரசியலிருந்து அகற்ற முடியாது. வல்லரசு என்பது அழிப்பதில் முன்னிலை வகிப்பதல்ல. மாறாக மனிதாபிமானங்களும் வல்லரசுகளுக்கு சொந்தமானது. மற்றும் படி...... ரஷ்யாவின் மகிமை ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் நட்பு பேணியிருந்தால் இன்றும் அதாவது ஈரான் யுத்தத்தின் போதும் அதன் பொருளாதாரம் வலிமையுடன் இருந்திருக்கும்.
-
கிவுல் ஓயா திட்டம்
ஆட்சிகளும் காட்சிகளும் மாறினாலும் சிங்களவனின் தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் திட்டங்கள் மட்டும் ஒருபோதும் மாறுவதில்லை. அகம் புலம் என அனைவருமே மண்ணையும் மக்களையும் ஏறக்குறைய மறந்து செயல்படும் இன்னாட்களில் இந்த காணொலியை பதிவு செய்யும் இளைஞர் அசாத்திய துணிச்சலுடன் காணொலி படுத்துகிறார், நிச்சயம் சிங்கள புலனாய்வுதுறையால் குறித்து வைக்கப்படுவார் என்ற அச்சமே முன்னாடி உள்ளது.
-
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
ஓம் முந்தைய ஆட்சிகளில் இப்படி வழக்கே போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் மேற்கில் (டிரம் ஆட்சி அல்ல) இப்படி நடந்தால் குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும் பதவி விலகுவர். இவர் அமைச்சராகவே தொடர்கிறார். https://srilankamirror.com/news/case-filed-against-kumara-jayakody-over-rs-8-8-million-corruption-allegations/?amp=1
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
ஐயோ எனக்கு பேரப்பிள்ளை எல்லாம் இன்னும் இல்லை😂. இன்னும் அரை செஞ்சுரி கூட அடிக்காத பாலகன் ஐயா நான்😂. நான் சொன்னது நான் சிறுவயதில், சொன்ன, செய்த சில சம்பவங்கள் என எனக்கு சொல்லப்பட்டவை பற்றி. எல்லாமும் 5 வயதுக்கு முந்திய நிகழ்வுகள். பிகு அண்மையில் ஒரு கண்டுபிடிப்பு வெளியானது. வழமையாக ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையை விட ஐகியூ கூடியதாய் இருக்குமாம். ஆனால் மிலேனியள்சை விட ஜென் சீ க்கு சராசரி ஐகியூ குறைவாம்.
- Today
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நான் உங்களின் வயதை குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.முன்பு பிறக்கும் குழந்தைகளை விட இப்பொழுது பிறக்கும் குழந்தைகள் வயதுக்கு மீறிய அறிவுத்திறனைக்காட்டுகிறார்கள்.ஆனால் ஆராக்கியத்திலும் சுறுசுறுப்பிலும் பின்தங்கி இருக்கிறார்கள். பேரப்பிள்கைளகள் மீது அதிக பாசத்துடன் பழகவும் தாத்தா பாட்டி மாருக்கு கூடுதல் நெுரம் இருக்கிறது. ஐரோப்பி இயந்திர வாழக்கையில் பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பது அரிதாகிறது.
-
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!
ஜயக்கொடியின் கொடியும் இப்படி விழுந்து போனதே.................. இந்த விடயத்தில் கட்சி பேதமின்றி நடக்கின்றார்கள் போல...........🫣 என் நண்பன் ஒருவன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு மாற்றலாகிப் போனான். எனக்கு தெரிந்த வரையில் அவன் ஒருவனே சுத்தமானவன்............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை மிகச் சிறப்பாக, எப்போதும் போல, நடத்திய கிருபனுக்கு @கிருபன் மிக்க நன்றிகள் பல! போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் நன்றிகள்! முதல் இடங்களைப் பிடித்த @Newbalance , @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கு வாழ்த்துகள்.....................👍. பி.கு: ஆப்கானிஸ்தானில் எனக்கும், வாதாவூரானுக்கும் சிலைகளை திறப்பதாக முடிவெடுத்து இருந்த நேரத்தில் ஒரு உலகப் பிரச்சனை வந்துவிட்டது.................🤣.
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
சீலனும் அவரின் நாலு தோழர்களும்😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வளைகுடா, இலங்கை எண்டால்… ப்..ப..பா…பி….****ச்சல் மட்டும்தான்😂?
-
வசந்தம் வருகிறது
பரிந்துரைக்கு நன்றி Dr.Justin. நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் Fexofenadine யேர்மனியில் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் €32.90. நான் பாவிப்பது Cetirizine ADGC 10mg, விலை அதிகமில்லை €8.00. நீங்கள் குறிப்பிட்ட Centrizine உம் நான் பாவிக்கும் Cetirizineஉம் ஒன்றா எனத்தெரியவில்லை. மேலும் நாளுக்கு ஒரு தடவை MomeAllerg Nasal Spray பாவிக்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்கள்தான் சமாளித்துவிடுவேன். மீண்டும் உங்கள் தகவல்களுக்கு நன்றி!🙏
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடுக்கம், உதறல் எல்லாம் குளிருக்குள் மட்டும்தான் 😄
-
வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நான் ஊரில் வசித்த காலத்தில்.... புண்ணுக்கு கட்டின பண்டேஜ் (Bandage)´ம் பாணுக்குள் இருந்ததாக... செய்தியில் வந்து இருந்ததை படித்தேன். அது... கைப் புண்ணுக்கு கட்டிய பண்டேஜா, கால் புண்ணுக்கு கட்டிய பண்டேஜா என்று தெரியவில்லை. 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும்.
-
வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நான் நினைக்கிறேன் பாணில், பணிசில் சின்ன வண்டு (கோதுமை மாவில் இருக்கும் வண்டு), பீடித் துண்டு போன்றவற்றை கண்டு அவற்றை அலாக்கா தூக்கி எறிந்து விட்டு மிச்ச பாணை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாங்கள் தான் போல...
-
அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
அதிகரிக்கும் வெப்பநிலை: சிறுவர்களுக்கு தோல் பிரச்சினை மற்றும் நீர்சத்து இழப்பு ஏற்படும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 02:40 PM நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடலில் நீர்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல், பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படக்கூடும். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புற சூழலில் அதிக நேரம் செலவிடும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாகக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக வெப்பநிலையினால் சிறுவர்களில் நீர்சத்து இழப்பு அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் உருவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முறையான மேற்பார்வையின் கீழ் நீரில் விளையாடுவதன் மூலம் சிறுவர்களுக்கு குளிர்ச்சியளிக்க முடியும் எனவும், இது வெப்பமான வானிலையில் உடல் வெப்பத்தை குறைக்க உதவும் எனவும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், பல பாடசாலைகளில் ஆண்டு தோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளினால் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும் போது வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விளையாட்டுகளின் போது அதிகமாக வியர்வை வெளியேறுவதால் சோடியம் மற்றும் பொற்றாசியம் போன்ற அத்தியாவசிய உடல் உப்புகள் இழக்கப்படலாம். இது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, சிறுவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்தோடு, விளையாட்டு நடவடிக்கைகளின் போது இடைவேளைகளை எடுக்கவும், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதை தவிர்க்கவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளின் அதிக வெப்பநிலை காணப்படும் நேரங்களில் சிறுவர்களை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், நீரேற்றமாக இருக்க அதிகளவு நீர் மற்றும் இயற்கை குளிர்பானங்களை குடிக்க ஊக்குவிக்கவும் சுகாதார அதிகாரிகள் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/240533
-
அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்?
அமெரிக்கா - இரானின் ஆயுத கையிருப்பு குறைந்தால் போர் எப்படி மாறும்? பட மூலாதாரம்,US Navy via Getty Images கட்டுரை தகவல் ஜோனாதன் பீல் பாதுகாப்பு செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நாட்டிடம் முக்கியமான ஆயுதங்கள் 'கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் உள்ளன' என்று கூறியுள்ளார். மறுபுறம், அமெரிக்கா திட்டமிட்டதை விட நீண்ட காலம் 'எதிரியை எதிர்த்து நிற்கும் திறன்' எங்களிடம் உள்ளது என்று இரானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுத கையிருப்பு மற்றும் விநியோகம் மட்டும் இந்த மோதலின் முடிவை தீர்மானிக்காது. யுக்ரேன் நீண்ட காலமாக ரஷ்யாவைவிட குறைந்த வீரர்கள் மற்றும் குறைந்த ஆயுதங்களுடனும் போராடி வருகிறது. இருப்பினும் ஆயுதங்கள் ஒரு முக்கிய அம்சமாகும். தொடக்கத்திலிருந்தே இந்த ராணுவ நடவடிக்கைகளின் வேகம் மிக அதிகமாக உள்ளது. உற்பத்தி செய்யப்படுவதை விட வேகமான விகிதத்தில் இரு தரப்பினரும் ஏற்கனவே தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். டெல் அவீவை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே 2,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரான் ஏற்கனவே 571 ஏவுகணைகளையும் 1,391 டிரோன்களையும் ஏவியுள்ளதாக அந்த நிறுவனம் கூறியது. அவற்றில் பல இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கலாம். போர் நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில், இரு தரப்பிற்கும் இந்த அளவிலான மோதலை தொடர்ந்து பராமரிப்பது கடினமான ஒன்றாக மாறும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம் இரான் நிலை என்ன? இரான் ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை ஏற்கனவே கவனித்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர். போரின் முதல் நாளில் நூற்றுக்கணக்கில் இருந்த ஏவுகணைகள் தற்போது டஜன் கணக்காக குறைந்துள்ளன. போருக்கு முன்னதாக, இரானிடம் 2,000-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் கையிருப்பில் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. எதிரிகளை குழப்பத்தில் வைத்திருப்பதற்காக இத்தகைய புள்ளிவிவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், எந்தவொரு ராணுவமும் தங்களிடம் உள்ள ஆயுதங்களின் துல்லியமான எண்ணிக்கையை வெளியிடுவதில்லை. இந்த போர் தொடங்கிய முதல் நாளான பிப்ரவரி 28 முதல் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல்கள் 86% குறைந்துள்ளதாக அமெரிக்க மூத்த தளபதி ஜெனரல் டான் கெய்ன் புதன்கிழமையன்று கூறினார். போருக்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான 'ஷாஹெத்' டிரோன்களை இரான் தயாரித்ததாகக் கருதப்படுகிறது. இந்த வடிவமைப்பு ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது ரஷ்யா தனது சொந்த ஷாஹெத் பதிப்பை பயன்படுத்தி யுக்ரேனில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா கூட இந்த வடிவமைப்பை நகலெடுத்துள்ளது. ஆனால் மோதல் தொடங்கிய முதல் நாளில் இருந்து இரானின் டிரோன் ஏவுதல்கள் 73% குறைந்துள்ளதாக கெய்ன் கடந்த வாரம் கூறினார். இரான் தனது செயல்பாடுகளின் வேகத்தை தக்கவைக்க போராடி வருவதாகத் தெரிகிறது. இந்த வியத்தகு சரிவு, கையிருப்புகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும் இருக்கலாம். ஆனால் உற்பத்தியைத் தொடர்வது இனி கடினமாகவே இருக்கும். பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,இரானில் பாதிப்பை காட்டும் படம் வான்வழி தாக்குதல் வரம்புகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இப்போது இரான் மீது வான்வழி ஆதிக்கத்தை பெற்றுள்ளன. இரானின் பெரும்பாலான வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது இரான் விமானப்படையும் வலிமையாக இல்லை. போரின் அடுத்த கட்டம் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஆயுதக் கிடங்குகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அழிப்பதில் கவனம் செலுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. இரானின் போர் புரியும் திறனைக் குறைப்பது இப்போது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதன் அனைத்து ஆயுதக் கிடங்குகளையும் அழிப்பது கடினமாக இருக்கும். இரான் ஒரு பெரிய நாடு. ஆயுதங்களை மறைக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன. சமீபத்திய வரலாறு வான்வழியாக நடத்தப்படும் போர்களின் வரம்புகளையும் காட்டுகிறது. இராண்டு ஆண்டுகள் நடத்திய தீவிர குண்டுவீச்சுக்கு பிறகும் காஸாவில் ஹமாஸை இஸ்ரேல் ராணுவம் இன்னும் அழிக்கவில்லை. ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரு வருட கால அமெரிக்க குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தனர். அவர்களின் சில ஆயுதங்களும் அவ்வாறே தப்பின. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலால் மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்கா அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவமாகத் தொடர்கிறது. அதன் ஆயுத கையிருப்பு மற்ற எந்த நாட்டையும் விட அதிகமானதாக இருக்கும். ஆனால் அமெரிக்க ராணுவம் பெரும்பாலும் விலையுயர்ந்த நவீன ஆயுதங்களையே நம்பியுள்ளது. அவை குறைந்த அளவில் தயாரிக்கப்படுகின்றன. உற்பத்தியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்துவதற்காக பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை டிரம்ப் சந்தித்தார். இந்த போர் அமெரிக்க ஆயுத வளங்களில் அழுத்தத்தை உண்டாக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். அமெரிக்காவிற்கு இப்போது நெருக்கமான தூரத்தில் இருந்து தாக்குதல்களை நடத்துவதற்கு சுதந்திரம் கிடைத்துள்ளதால், அந்த அழுத்தம் ஓரளவு குறைந்திருக்கலாம். டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகள் போன்ற அதிக விலை கொண்ட மற்றும் அதிநவீன நீண்ட தூரம் செல்லும் ஆயுதங்களான "ஸ்டாண்ட்-ஆஃப் ஆயுதங்களை" பயன்படுத்துவதை அமெரிக்கா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கெய்ன் கூறினார். அமெரிக்க விமானப்படை இப்போது குறைந்த விலையிலான "ஸ்டாண்ட்-இன்" ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது. அதாவது, இவை இலக்கின் மீது நேரடியாக வீசக்கூடிய ஜே.டி.ஏ.எம் குண்டுகள் போன்றவை. மார்க் கான்சியன் என்ற முன்னாள் அமெரிக்க கடற்படை கர்னல், உத்தி மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். ''ஆரம்பத்தில் தொலைதூரத்திலிருந்து தாக்குதல் நடத்திய பிறகு, இப்போது அமெரிக்க ராணுவம் அதிக விலை உள்ள நீண்ட தூர ஆயுதங்களுக்கு பதிலாக குறைந்த செலவான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை பயன்படுத்த முடியும்.'' என்றார் மார்க் கான்சியன் அமெரிக்காவால் இந்த அளவிலான போரை "கிட்டத்தட்ட காலவரையின்றி" தொடர முடியும் என்று அவர் தெரிவித்தார். போர் நீண்ட காலம் நீடிக்கும் போது, இலக்குகளின் பட்டியலும் சிறியதாகிறது. அதாவது செயல்பாடுகளின் வேகம் படிப்படியாகக் குறையும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் தாக்குதலால் பஹ்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு வான் பாதுகாப்பு அமெரிக்காவிடம் பல்லாயிரக்கணக்கான ஜே.டி.ஏ.எம் குண்டுகள் இருப்பதாகவும், ஆனால் விலையுயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளின் இருப்பு குறைவாக இருப்பதாகவும் கான்சியன் கூறுகிறார். மோதலின் ஆரம்ப கட்டங்களில், இரானின் பதிலடி தாக்குதல்களின் அச்சுறுத்தலை முறியடிக்க அவை அவசியமாக இருந்தன. பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு அதிக தேவை உள்ளது. அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் யுக்ரேனுக்கும் கூட அதிகமான தேவை உள்ளது. ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையும் 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக செலவாகும். மேலும் அமெரிக்கா தற்போது ஆண்டுக்கு சுமார் 700 ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக நம்பப்படுகிறது. இரானால் இன்னும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடிந்தால், அது இந்த வரையறுக்கப்பட்ட கையிருப்புகளை குறைக்கும். அமெரிக்காவிடம் சுமார் 1,600 பேட்ரியாட் ஏவுகணைகள் கையிருப்பில் இருக்கலாம் என்று கான்சியன் மதிப்பிடுகிறார். ஆனால் சமீப நாட்களில் அவை பயன்படுத்தப்பட்டதால் குறைந்து இருக்கலாம். வானிலிருந்து தரையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலை அமெரிக்கா "நீண்ட காலம்" தொடர்ந்து நடத்த முடியும் என அவர் கூறுகிறார். ஆனால் எதிரியின் தாக்குதலில் இருந்து காக்கும் வான்வழி பாதுகாப்பு என்பது "சற்றே உறுதியற்றதாக" உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் பேட்ரியாட் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த முடிவெடுத்தால், இரானியர்களை விட அமெரிக்காவால் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இதனைச் செய்வதில் ஒர் அபாயம் உள்ளது. அப்படி செய்தால், பசிபிக் பகுதியில் ஏற்படக்கூடிய மற்றொரு சாத்தியமான மோதலை சமாளிக்க அமெரிக்காவிடம் குறைவான பேட்ரியாட் ஏவுகணைகளே இருக்கலாம்'' ஆனால்,"இரானால் எங்களை விட நீண்ட காலம் நீடிக்க முடியாது" என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிபடக் கூறுகிறார். இதுகுறித்து அவர் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். https://www.bbc.com/tamil/articles/cj988kexznjo
-
G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி Mar 9, 2026 - 12:48 PM உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரையும் தாண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலை உயர்வுக்குத் தீர்வாக, அவசரகால எரிபொருள் இருப்புகளை சந்தையில் வெளியிடும் முன்மொழிவு குறித்து அவர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முன்மொழிவுக்கு அமெரிக்கா ஏற்கனவே தமது ஆதரவை தெரிவித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து 104 டொலராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmmiumjwx000h356puipnd3it
-
யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் தடுக்கும் அதிநவீன AI கேமரா
ரயிலில் யானைகள் அடிபடாமல் டிரோன், ஏஐ தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு தடுக்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் கோவை வனக்கோட்டத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆளில்லா டிரோன் கேமரா மற்றும் கண்காணிப்பு டிரோன்களின் உதவியுடன், ரயில் வரும் போது யானைகள் ரயில் பாதை அருகிலேயே வராமல் துரத்தும் புதிய திட்டம் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் 24 மணி நேரமும் 2 ரயில் பாதைகளை டிரோன் மூலமாகக் கண்காணித்து, ரயில் பாதைக்கு அருகில் வரும் யானைகளை சைரன் சத்தம் எழுப்பி துரத்துவதை பிபிசி தமிழ் மேற்கொண்ட களஆய்வில் அறிய முடிந்தது. இந்தியாவில் 14 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் பலி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2010-2024 காலகட்டத்தில் 186 யானைகள் ரயில்கள் மோதி உயிரிழந்துள்ளன. ரயில்வே அமைச்சகம் மற்றும் மாநில வனத்துறைகள் உடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வில், 77 ரயில் பாதைகளில் அதிகமான காட்டுயிர் உயிரிழப்புகள் நடப்பதை அறிந்து பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. அதன்படி, தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதிகளில் காட்டுப்பகுதி மற்றும் பட்டா நிலங்களில் அமைந்துள்ள 2 ரயில் வழித்தடங்களில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பது அதிகமாக நடந்துள்ளது. தமிழக எல்லையிலுள்ள எட்டிமடை ரயில் நிலையம், கேரளா எல்லையிலுள்ள வாளையார் ரயில் நிலையம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏ மற்றும் பி என 2 வழித்தடங்கள் 7 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர், இவ்விரு ரயில் வழித்தடங்களும் மதுக்கரை வனச்சரகம் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியை மூன்று துண்டுகளாக பிரிக்கின்றன. இவற்றில் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு தண்டவாளத்தை கடக்கும்போதுதான் ரயில்கள் மோதி காட்டு யானைகள் இறந்துள்ளன. கடந்த 2008 லிருந்து 2021 வரையிலும் 6 ரயில் மோதல் நிகழ்வுகளில் 11 யானைகள் உயிரிழந்துள்ளதாக பிபிசியிடம் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பின் நீதிமன்ற உத்தரவு காரணமாக, வனத்துறை மற்றும் ரயில்வே துறை இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. தமிழக வனப்பகுதியில் ரயில் பாதைகள் அமைந்துள்ள இடங்களில், கனமான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன. யானைகள் ஒரு புறமிருந்து மறுபுறமுள்ள காட்டுப்பகுதிக்கு பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில், ரயில்வே இருப்புப்பாதைக்கு கீழே 2 சுரங்கப்பாதைகள் ரயில்வே துறையால் கட்டப்பட்டுள்ளன. ரயில் பாதைகளை ஒட்டி யானைகள் வரும்போது, அவற்றை சியர்ச் லைட் மற்றும் பட்டாசுகள் வெடித்து துரத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வழித்தடக் காவலர்கள் (Track Watchers) நியமிக்கப்பட்டனர். இதற்கு ஓரளவுக்குப் பலன் கிடைத்தது. இருப்பினும் 7 கி.மீ. தூரமுள்ள 2 ரயில் வழித்தடங்களிலும் ரயில்கள் வரும்போதெல்லாம் ஆட்களை வைத்து, யானைகளைக் கண்காணித்து துரத்துவதில் பல நடைமுறைச் சிரமங்கள் இருந்தன. ஏஐ கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது? படக்குறிப்பு,ஏஐ கட்டுப்பாட்டு மையம் 2023-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை வைத்து, யானைகளைக் கண்காணிக்க தமிழக வனத்துறை திட்டமிட்டது. அதற்காக வாளையார் அருகேயுள்ள நவக்கரை வனப்பகுதியில் ஏஐ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. ஏ மற்றும் பி வழித்தடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் இரவு நேரங்களிலும், யானையின் உடல் வெப்பத்தை வைத்து, அவற்றைக் கண்டறியும் திறனுள்ளவை. இந்த கேமராக்கள் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தலா 2 பேர் வீதமாக 24 மணி நேரமும் இவற்றைக் கண்காணித்து வருகின்றனர். "யானைகள் ரயில் தடத்துக்கு அருகில் செல்லும்பட்சத்தில் மையத்திலுள்ள அலாரம் அலறுகிறது. உடனடியாக எந்த வழித்தடத்தில் எந்த இடத்தில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பது ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்டு, தானியங்கி முறையில் (Automatic Messages) ரயில்வே துறையினருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது." "உடனடியாக லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநருக்கு, ரயில் நிலைய மேலாளரிடமிருந்து தகவல் தரப்பட்டு, குறிப்பிட்ட பகுதியில் ரயிலை நிறுத்தவோ அல்லது மிகவும் மெதுவாக இயக்கவோ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த தகவல் தமிழக வனத்துறையின் வனவருக்கும் செல்கிறது. இவ்விரு வழித்தடங்களிலும் 25 டிராக் வாச்சர்கள் பணியில் உள்ளனர். அவர்களில் அப்பகுதியில் பணியில் இருப்பவர்களுக்கு வாக்கி டாக்கி அல்லது அலைபேசியில் தகவல் தரப்பட்டு, ரயில் தடத்திற்கு அருகிலுள்ள யானைகளைத் துரத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. படக்குறிப்பு,ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர் சந்தோஷ் இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர் சந்தோஷ், ''2024 பிப்ரவரியிலிருந்து இந்த மையம் செயல்படுகிறது. தமிழக வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து எடுத்துள்ள இந்த கூட்டு முயற்சியால் அப்போதிலிருந்து இப்போது வரையிலும் 8750 முறை, யானைகள் இவ்விரு ரயில் பாதைகளைக் கடந்தும் ரயில் மோதி காட்டுயானை இறக்கும் நிகழ்வு நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.'' என்றார். கட்டுப்பாட்டு மையத்தின் பராமரிப்பு மேலாளரும், வனத்துறை தொழில்நுட்ப உதவியாளருமான நித்தியானந்தம், ''இதில் ரயில்வே துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ஆம் ஆண்டில் ஒரே நாளில் ரயில் மோதி 3 யானைகள் இறப்பதற்கு முன்பு வரையிலும், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இப்பகுதியில் 100–120 கி.மீ. வேகத்திலும், சரக்கு ரயில்கள் 60–70 கி.மீ. வேகத்திலும் சென்று கொண்டிருந்தன. அதன்பின்பு இந்த வேகத்தை முறையே 40–45 கி.மீ. மற்றும் 25–30 கி.மீ. வேகமாகக் குறைத்துவிட்டனர்.'' என்றார். இவ்வாறு வேகத்தைக் குறைத்ததன் காரணமாகவே, ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தகவல் சென்றதும், யானைகள் மீது ரயில் மோதாத வகையில் நிறுத்தவோ அல்லது மெதுவாகக் கடந்து செல்லவோ வழிவகை செய்ய முடிவதாக ஏஐ கட்டுப்பாட்டு மையத்தின் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த மையம் செயல்படத் துவங்கியதிலிருந்து இப்போது வரை ரயில் மோதி காட்டுயானை இறந்ததாக ஒரு நிகழ்வும் பதிவாகவில்லை என்று தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூவும் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் விரிவான தகவல்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தேனீக்கள் ரீங்கார ஒலியால் யானைகளை துரத்தும் டிரோன்கள் படக்குறிப்பு,தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்தின் டிரோன் பொறியாளர் பாலமுருகன் இந்நிலையில், ரயில் பாதைக்கு அருகிலேயே யானைகள் வராத வகையில் தடுத்து துரத்துவதற்கு, அதே ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதியதொரு திட்டத்தை தமிழக வனத்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்துடன் (TNUAVTC-Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation) தமிழக வனத்துறை இணைந்து ரூ.8.3 கோடி மதிப்பில் இத்திட்டத்தைத் துவக்கியுள்ளது. இதற்காக தனியார் நிறுவன உதவியுடன் இத்திட்டத்துக்காக 3 வயர் இணைப்புள்ள (Tethered Drone) டிரோன்களையும், 3 கண்காணிப்பு டிரோன்களையும் (Surveillance Drone) ஆளில்லா வானூர்தி கழகம் உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே நவக்கரையில் செயல்பட்டு வரும் ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு அருகிலேயே இதற்காக கட்டுப்பாட்டு அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இரு ரயில் வழித்தடங்களையும் கண்காணிக்க அவற்றை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இந்த 3 இடங்களிலிருந்தும் கேபிள் உதவியுடன் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட 3 டிரோன்கள் 24 X 7 மணி நேரமும் 100–150 மீட்டர் வரை உயரத்தில் ஒரே இடத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. மின்தடை ஏற்பட்டால் தொடர்ந்து இயங்க 6 மணி நேரம் இயங்கும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் அந்த டிரோன்களில் உள்ள கேமராக்களில் 2 தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளும், அதையொட்டிய காட்டுப்பகுதிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட லேப் டாப்பில் தெரிகின்றன. இந்த லேப் டாப்கள், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தெர்மல் முறையில் இரவிலும் உருவங்கள் துல்லியமாகத் தெரியும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் கேமராக்கள் செயல்படுகின்றன. இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய தமிழ்நாடு ஆளில்லா வானூர்தி கழகத்தின் டிரோன் பொறியாளர் பாலமுருகன், ''இந்த வகை வயர் இணைப்புள்ள டிரோனில் (Tethered Drone) உள்ள மோட்டார் எல்லாமே DC மின்சாரத்தில் இயங்குவதால் சூடாகாது. இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் புவியமைப்பு சார்ந்த அனைத்து தகவல்களையும் துல்லியமாகத் தரும். தூரல் மழையிலும் இந்த டிரோன் இயங்கும். மிகக்கனமான காற்று மற்றும் மழையில் மட்டுமே இது இயங்காது.'' என்றார். ''இதிலுள்ள ஜூம் கேமரா 180 டிகிரியில் கண்காணிக்கும். வீடியோ கண்ட்ரோல் யூனிட்டில் பதிவாகும் காட்சிகள், லேப்டாப் மூலமாக கட்டுப்பாட்டு அறைக்கு வரும். அதனால் அனைத்து டிரோன்களின் தகவல்களும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகிக் கொண்டே இருக்கும். இந்த டிரோன் பரவலாக 2.5 கி.மீ. துாரமுள்ள ரயில் பாதையை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் திறனுடையது. ரயில் பாதை மட்டுமின்றி, மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் யானைகள் செல்வதையும் இதன் மூலமாகக் கண்காணித்து, அவற்றைத் துரத்த முடியும்.'' என்றார் பாலமுருகன். படக்குறிப்பு,டிரோன் பைலட் ஷெர்பின் ரயில் தடத்திற்கு இரு புறமும் 100 மீட்டர் வரையுள்ள தூரத்தை சிவப்புப் பகுதி (Red Zone) என்றும், 200–300 மீட்டர் வரையுள்ள பகுதிகளை ஆரஞ்சு பகுதி (Orange Zone) என்றும் பிரித்துள்ளனர். மதுக்கரை வனச்சரகத்தில் சோளக்கரை காப்புக்காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கோபுரங்களிலும் (Watch Tower) இடங்களிலும் தலா 2 பேர் வீதமாக, 3 ஷிப்ட்களில் மொத்தம் 18 பேர் 24 மணி நேரமும் இந்த டிரோன்களை இயக்கி வருகின்றனர். வயர் டிரோன்கள் தவிர்த்து, பேட்டரியில் இயங்கும் டிரோன்களாலும் கண்காணிக்கின்றனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய டிரோன் பைலட் ஷெர்பின், ''ஏற்கெனவே ரயில் வழித்தடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள ஏஐ கேமராக்கள், யானைகள் மிக அருகில் வரும்போதுதான் அவற்றைக் கண்டறிந்து, ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தரும். ஆனால் இந்த கேபிள் இணைப்பு டிரோன்களால் 24 X 7 நேரமும் ரயில் பாதையைக் கண்காணிக்கும் போது 200 மீட்டர் தூரத்தில் யானை வரும்போதே கண்டறிந்து, அதை டிரோன் கட்டுப்பாட்டு அறைக்கும், ஏஐ கட்டுப்பாட்டு மையத்துக்கும் தகவல் தருகிறோம்.'' என்றார். "யானை இருப்பது தெரிந்துவிட்டால் ஏஐ தொழில்நுட்பத்தை அதில் பயன்படுத்தும்போது, ரயில் தடத்திலிருந்து எந்த திசையில் எவ்வளவு தூரத்தில் யானை இருக்கிறது என்பதைக் காண்பிக்கும். உடனடியாக நாங்கள் கண்காணிப்பு டிரோனை வைத்து, அந்த யானைக்கு மேலாகக் கொண்டு சென்று, சைரன் அல்லது தேனீக்கள் ரீங்காரமிடும் சத்தத்தை ஒலிக்க விட்டு, யானையை காட்டுக்குள் துரத்திவிடுவோம்.'' என்றார் ஷெர்பின். படக்குறிப்பு,யானைகள் செல்வதற்கான சுரங்கப் பாதை 2024-ஆம் ஆண்டிலிருந்து ஏஐ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, ரயில்வே மற்றும் தமிழக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், டிராக் வாச்சர்களால் யானைகளை துரத்தும் பணி நடந்துவந்தது. அதில் பல சிரமங்கள், ஆபத்துகள் இருந்ததை டிராக் வாச்சர்கள் ஒப்புக்கொள்கின்றனர். பிபிசி தமிழிடம் பேசிய டிராக் வாச்சர் மாதேஷ், ''ரயில்களில் யானைகள் அடிபடாமலிருக்க, இந்த 2 தண்டவாளங்களையும் 25 டிராக் வாச்சர்கள் கண்காணித்து வருகிறோம். ஏஐ தொழில்நுட்பம் வந்தபின்பு, எங்களுடைய பணிக்கு பெரிதும் உதவியாகவுள்ளது. இப்போது டிரோன்களை வைத்தே யானைகளைத் துரத்த முடியும் என்பது இந்த பணியை மேலும் எளிதாக்கியுள்ளது. இங்கிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள கேரள வனப்பகுதியில் சமீபத்தில் ஒரு யானை ரயில் மோதி இறந்தது.'' என்றார். தமிழகத்தில் யானை–மனித மோதல் அதிகமாக நடக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் மற்றும் கோவையின் வேறு சில பகுதிகளிலும் இரவு, பகலாக யானைகளைக் கண்காணித்து, அவற்றைத் துரத்துவதற்கு ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு இந்த ஏஐ தொழில்நுட்பத்தையும், டிரோன்களையும் இணைத்து ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்கிறார் கோவை மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு. பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு, ''கூடலூரில் இந்த ஏஐ தொழில்நுட்பம், யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, யானைகளையும், யானைகளிடமிருந்து மக்களையும் காப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ரயில்களில் அடிபடாமல் யானைகளைக் காப்பதற்கு இதே தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கிறது.'' என்றார். ''இரவு நேரங்களில்தான் யானைகள் ரயிலில் அடிபடும் நிகழ்வுகள் அதிகமாக நடந்துள்ளன. இந்த ஏஐ தொழில் நுட்பத்தில் தெர்மல் முறையில் இரவிலும் யானைகள் நடமாட்டம் தெரிவதால், யானைகளை டிராக் வாச்சர்கள் மூலமாக ரயில்வே கீழ்பாலங்கள் வழியாக எளிதாகத் துரத்த முடிகிறது. இப்போது டிரோன்களை வைத்தே சத்தம் எழுப்பி யானைகளைத் துரத்த முடியும் என்பதால் எங்களது பணி இன்னும் முழுமையடைந்துள்ளது,'' என்றார் டிஎஃப்ஓ வெங்கடேஷ் பிரபு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz6e7qg078wo
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
'44 நாட்களுக்கு பிறகு மீண்டும்' - நியூசிலாந்து கேப்டனின் ஒரு முடிவு வரலாற்று தவறானதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிட்செல் சான்ட்னர் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 56 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் நியூசிலாந்து - இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்த அணி. பெரிய போட்டிகள் என்று வரும்போது பொதுவாகவே நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால், மற்ற போட்டிகளில் வருவது போல் அதிகமாக ரன்கள் வராது என்பார்கள். இந்த இறுதிப் போட்டியில் ஆமதாபாத்தில் இந்திய அணி களமிறங்கியபோது 180-190 ரன்களை இந்தியா டார்கெட் செய்ய வேண்டும் என்ற பேச்சுதான் எழுந்தது. ஆனால், இந்திய அணியோ 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. பட மூலாதாரம்,Getty Images ஒருமுறை கூட 4 ஓவர்களைக் கடக்காத இந்திய தொடக்க ஜோடி, இறுதி போட்டியில் நான்கு ஓவர்களின் முடிவிலேயே 50 ரன்களைக் கடந்து கம்பீரமாக விளையாடிக்கொண்டிருந்தது. மேலும், பவர்பிளேவில் மட்டும் 92 ரன்கள் விளாசி சாதனை படைத்தது. சொல்லப்போனால், அந்த பவர்பிளே முடிவிலேயே கோப்பையில் ஒரு கை வைத்துவிட்டது இந்தியா. இப்படி பவர்பிளேவுக்குள்ளாக நியூசிலாந்து பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு அந்த அணி எடுத்து முடிவுகள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக கேப்டன் மிட்செல் சான்ட்னர் இரண்டாவது ஓவருக்குப் பின் எடுத்த முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்ததாகவும் பலர் விமர்சித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், ஜனவரி மாதம் நடந்த ஒரு டி20 போட்டியில் கூட நியூசிலாந்தின் தோல்விக்குப் பிறகு சான்ட்னரின் இதே முடிவுகள் விமர்சிக்கப்பட்டன. நாமும் கூட இதைப் பற்றி விரிவாக அப்போது விவாதித்திருந்தோம். இப்போது, 44 நாள்கள் கழித்து அதே தவறுகளை சான்ட்னர் மறுபடியும் நிகழ்த்தியிருக்கிறாரா? நியூசிலாந்து கேப்டன் தன் முடிவுகளின் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டாரா? பட மூலாதாரம்,Getty Images மெக்கான்கீ எங்கே? இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஆஃப் ஸ்பின்னுக்கு எதிரான இந்தியாவின் தடுமாற்றம் பெரிதாக விவாதிக்கப்பட்டது. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுபடி சூப்பர் 8 சுற்றில் ஆடிய 8 அணிகளில் ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக குறைந்த சராசரி (15.87) வைத்திருந்த அணி இந்தியாதான். 20-கும் கீழ் சராசரி கொண்டிருந்த ஒரே அணி இந்தியா தான். இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா போன்ற பேட்டர்களின் சராசரி ஆஃப் ஸ்பின்னுக்கு எதிராக 13 அல்லது அதற்கும் குறைவு தான். அதனால் நியூசிலாந்து அணியின் கோல் மெக்கான்கீ இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரோடு கிளென் ஃபிலிப்ஸும் ஆஃப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால் இந்தியா பெரும் சிக்கலைச் சந்திக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நியூசிலாந்து வேறு திட்டங்கள் வைத்திருந்தது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சான்ட்னர், பிளேயிங் லெவனில் மெக்கான்கீ நீக்கப்பட்டு ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டதாகக் கூறினார். இந்தியாவின் பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்ட வீரர் அணியிலேயே இல்லாதது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் வேண்டும் என்று நினைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருந்தாலும் பல வல்லுநர்கள் அந்த முடிவு தங்களுக்கு ஆச்சர்யம் அளித்ததாகக் குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் பவர்பிளேவில் வீசிய ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் கோல் மெக்கான்கீ சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், "மெக்கான்கீ இல்லை!! அபிஷேக் ஷர்மாவிற்கு சாதகமான சூழல் அமைகிறதா?அல்லது நியூசிலாந்து அணியினரிடம் ஏதேனும் ரகசியத் திட்டம் உள்ளதா?" என்று டாஸுக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன், "இந்த தொடரில் இந்திய இன்னிங்ஸின் ஆரம்பத்தில் ஆஃப்-ஸ்பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை கவனிக்கும்போது, நியூசிலாந்து கோல் மெக்கான்கீயை சேர்க்காதது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இன்று இரவு கிளென் ஃபிலிப்ஸுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம்" என்று தன் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருந்தார். இப்படி, மெக்கான்கீ சேர்க்கப்படாதது குறித்து பலரும் தங்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். மாறிய ஸ்பெல், மாறிய ஆட்டம் வழக்கம்போல், 'நியூ பால் ஸ்பெஷலிஸ்ட்' மேட் ஹென்றியோடு ஆட்டத்தைத் தொடங்கிய சான்ட்னர், இரண்டாவது ஓவரை கிளென் ஃபிலிப்ஸுக்குக் கொடுத்தார். இந்த இரண்டு ஓவர்களிலுமே இந்திய ஓப்பனர்கள் நிதானமாகத்தான் ஆடினார்கள். ஹென்றியின் வேகப்பந்துவீச்சை சாம்சன் கவனமாக எதிர்கொள்ள, கிளென் ஃபிலிப்ஸின் ஆஃப் ஸ்பின்னை கூடுதல் நிதானத்தோடு ஆடினார் அபிஷேக் ஷர்மா. 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 12 ரன்கள் எடுத்திருந்தது. நன்றாகத் தொடங்கிய அந்த இரு பௌலர்களின் ஸ்பெல் தொடரும் என்று நினைத்திருந்த நிலையில் தான் சான்ட்னர் ஒரு முடிவை எடுத்தார். மூன்றாவது ஓவரை ஜேக்கப் டஃபியிடமும், நான்காவது ஓவரை லாகி ஃபெர்குசனிடமும் கொடுத்தார் அவர். அந்த ஓவர்களில் முறையே 15, 24 ரன்கள் எடுக்கப்பட்டன. இறுதிப் போட்டிக்கு முன்பாக இந்தியா ஆடிய 8 ஆட்டங்களில், இந்தியாவின் தொடக்க ஜோடி அதிகபட்சமாக ஆடியத 3.4 ஓவர்கள் தான். அதேபோல் அந்த எட்டில் 4 முறை ஒரு ஆஃப் ஸ்பின்னர் தான் இந்தியாவின் தொடக்க ஜோடியை வெளியேற்றியிருந்தார். ஒரு போட்டியில் இடது கை ஸ்பின்னராலும், 3 போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளராலும் இந்தியாவின் தொடக்க ஜோடி வெளியேற்றப்பட்டிருந்தது. அரையிறுதியில் ஒரு வலது கை பேட்டர், ஒரு இடது கை பேட்டர் என்ற காம்பினேஷன் இருந்தும்கூட இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஜேக்ஸை வைத்தே இந்த ஜோடியைப் பிரித்தது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் (இறுதிப் போட்டிக்கு முன்பு வரை) ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 5 இன்னிங்ஸ்களில் 3 முறை அதற்கே தன் விக்கெட்டை இழந்திருந்தார். அப்படியிருந்தும், ஃபிலிப்ஸை மீண்டும் பயன்படுத்தாதது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இறுதிப் போட்டியில் கிளென் ஃபிலிப்ஸுக்கு இரண்டாவது ஓவர் கொடுக்காதது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது ஃபிலில்ப்ஸுக்குக் கொடுக்காமல் டஃபிக்கும், ஃபெர்குசனுக்கும் சான்ட்னர் ஓவர் கொடுக்க, அந்த இரு பௌலர்களும் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேல் பந்துவீச, அது யோ மஹேஷ் சொன்னதுபோல் அபிஷேக் ஷர்மாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. வேகமான பந்துகளை விரும்பி ஆடும் அபிஷேக் ஷர்மா, இந்த உலகக் கோப்பையில் நல்ல ஃபார்மிலேயே இல்லாத அபிஷேக் ஷர்மா, தன் வழக்கமான ஆட்டத்தை ஆட அந்த இரண்டு ஓவர்கள் வித்திட்டன. இதன் விளைவாக முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி 4 ஓவர்களைக் கடந்து விளையாடியது. முதல் முறையாக அரைசதமும் அடித்தது. நியூசிலாந்தின் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோ மஹேஷ், "பவர்பிளேவில் முதலிரு ஓவர்களில் மேட் ஹென்றி, கிளென் ஃபிலிப்ஸ் இருவரும் நன்றாகவே தொடங்கியிருந்தார்கள். ஆனால், அதன்பிறகு அவர்களின் ஸ்பெல்லை தொடரவில்லை. அந்த பவர்பிளேவிலேயே வெளியே வெளியே போடத் தொடங்கிவிட்டார்கள். அபிஷேக் ஷர்மா நன்கு செட்டில் ஆகிவிட்டார். மெக்கான்கீ ஆடவில்லை என்றதுமே அவர் சந்தோஷமடைந்திருப்பார். நியூசிலாந்தைப் பொறுத்தவரை அவர்கள் சிறந்த லெவனும் ஆடவில்லை. அவர்கள் திட்டங்களும் சரியாக இருக்கவில்லை." என்று கூறினார். அதேபோல், எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, "மிட்செல் சான்ட்னர் மிக விரைவாக பல விஷயங்களை முயற்சித்தது போல் தோன்றியது. முதல் இரண்டு ஓவர்கள் மிகவும் சிக்கனமாக இருந்தபோதிலும், முதல் நான்கு ஓவர்களிலேயே 4 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார்... ஒரு நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். ஆனால் நாங்கள் (இந்தியா) புகார் கூறப்போவதில்லை" என்று பதிவிட்டார். அதுமட்டுமல்ல, தொடர்ந்து இந்தியாவின் இடது கை பேட்டர்கள் அடுத்தடுத்து வந்தபோதிலும், ஃபிலிப்ஸ் அதன்பிறகு பந்துவீசவே வரவில்லை. சான்ட்னர் அவருக்கு மறுபடியும் ஒரு ஓவர் கூடக் கொடுக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில், ஆஃப் ஸ்பின்னை எதிர்கொண்ட 6 போட்டிகளில் 5 முறை அதற்கே தன் விக்கெட்டை பறிகொடுத்திருந்த இஷான் கிஷன் இந்த இறுதிப் போட்டியில் ஆஃப் ஸ்பின்னரின் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,Getty Images பவர்பிளேவுக்குள்ளேயே முடிந்துவிட்ட ஆட்டம் அந்த மூன்றாவது மட்டும் நான்காவது ஓவரில் மொத்தம் 39 ரன்கள் சென்றுவிட்டதாலும், இரண்டு பேட்டர்களுமே நன்றாக ஆடியதாலும், அடுத்த வந்த நியூசிலாந்து பௌலர்களுமே பெரும் நெருக்கடியை சந்திக்கவேண்டியதாக இருந்தது. ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரைப் பந்துவீச வந்த மேட் ஹென்றி, 'ஸ்லோயர் பால்களாக' தொடர்ந்து வீசினார். அதுவும் வைட் லைனிலேயெ அவர் தொடர்ச்சியாக முயற்சிசெய்தார். அதன் விளைவாக அந்த ஓவரில் 4 வைட்களும் வீசினார். மேலும், அவர் அதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்க, அபிஷேக் ஷர்மா அதை நன்கு கணித்து வெளியே வந்து சிக்ஸர் அடித்தார். நீண்ட நேரம் சென்ற அந்த ஓவரிலும் 21 ரன்கள் எடுக்கப்பட்டன. அப்போது வர்ணனையில் இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டூல், "இங்கு 'ஸ்லோயர் பால்கள்' அதிகம் விக்கெட் எடுக்கின்றன, அதனால் நாம் அதையே வீசுவோம் என்று முடிவு செய்துவிட்டு வந்து அதை மட்டுமே செய்கின்றனர்" என்று குறிப்பிட்டார். மேலும், அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல், ஐந்தாவது ஓவரில் பந்துவீச வைத்த முடிவையும் அவர் விமர்சித்தார். "பந்து ஓரளவு புதிதாக இருக்கும்போது ஹென்றி அதைப் பயன்படுத்தி நன்றாக வீசுவார். அப்படியிருக்கும்போது மூன்றாவது ஓவரை அவருக்குக் கொடுத்திருக்கவேண்டும். அது பெரிய தவறு" என்று வர்ணனையின்போது தெரிவித்தார் சைமன் டூல். இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் மேட் ஹென்றியை முதல் மற்றும் மூன்றாவது ஓவரில் தான் பயன்படுத்தியிருந்தார் சான்ட்னர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றுப் போட்டியில் மட்டும், ஹென்றி முதல் ஓவரில் 13 ரன்கள் கொடுத்துவிட, அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்காமல் நான்காவது ஓவர் கொடுத்து 'பௌலிங் எண்ட்' மாற்றினார். அதைத் தவிர்த்து ஹென்றி மூன்றாவது ஓவர் போடாத போட்டி இந்த ஃபைனல் தான். மேட் ஹென்றி மூன்றாவது ஓவரை வீசாத இரண்டு போட்டிகளுமே நியூசிலாந்து தோற்ற போட்டிகள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மேட் ஹென்றிக்கு மூன்றாவது ஓவரைக் கொடுக்காமல் ஸ்பெல்லை மாற்றியது இந்தியாவை ஆட்டத்துக்குள் எடுத்து வந்தது இப்படி மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்கள் ஏற்படுத்திய நெருக்கடியில் ஹென்றி ரன் கொடுக்க, அதே நெருக்கடியோடு வந்து ஆறாவது ஓவரிலும் 20 ரன்கள் கொடுத்தார் ஜேக்கப் டஃபி. இப்படியாக பவர்பிளேவில் விக்கெட்டே இழக்காமல் 92 ரன்கள் எடுத்தது. அது இந்தியாவை ஆதிக்க நிலையில் கொண்டு சென்று நிறுத்தியது. போட்டிக்குப் பின்பு பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத், "நியூசிலாந்து அணி எப்போதுமே தெளிவான திட்டமிடலோடு களமிறங்கும் அணி. ஆனால், இந்த இறுதிப் போட்டியில் அப்படி இருக்கவில்லை. மிட்செல் சான்ட்னரின் கேப்டன்சியும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். உதாரணமாக, ஏன் மெக்கான்கீ ஆடவில்லை என்ற கேள்விக்குறி எழுந்தது. ஏனெனில், இந்திய பேட்டர்களுக்கு எதிராக, குறிப்பாக அபிஷேக் ஷர்மாவுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்படும்போது அவரை ஆடவைத்திருக்கலாமோ என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும், அவர் நல்ல பேட்டரும் கூட.'' ''அதுமட்டுமல்லாமல், கிளென் ஃபிலிப்ஸ் நன்றாக செயல்பட்டிருக்கும்போது எதற்காக ஸ்பெல்லை மாற்றி வேகத்தைக் கொடுக்கவேண்டும்? இதுபோன்ற ஒரு சில இடங்களில் சான்ட்னரின் கேப்டன்சி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஏனெனில், கோப்பையே ஆறு ஓவர்களில் கைவிட்டுப் போனதுபோல் இருந்தது. ஒரு பௌலராக அவர் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், ஒரு கேப்டனாக அவரது சில முடிவுகள் தவறாக அமைந்துவிட்டன" என்று கூறினார். 44 நாள்களுக்கு முன் நடந்த அதே தவறு பவர்பிளேவில் நல்லதொரு தொடக்கத்துக்குப் பிறகு அந்த ஸ்பெல்லைத் தொடராமல் ஆட்டத்தை சான்ட்னர் கைநழுவவிடுவது இது முதல் முறையல்ல. 44 நாள்களுக்கு முன் - ஜனவரி 23.... இதே இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டியில் இதேபோன்றதொரு நிகழ்வு அரங்கேறியது. 209 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி முதல் 7 பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு ஓவர்கள் முடிந்தபோது ஸ்கோர் போர்டு 8/2 எனக் காட்டியது. 12 பந்துகளில் 9 டாட் பால்கள். சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். இஷான் கிஷன் 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். முதல் ஓவரை வீசிய மேட் ஹென்றி, இரண்டாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி இருவருமே தலா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தோல்வியடைந்திருந்தது விக்கெட் எடுத்து நன்றாகத் தொடங்கியிருந்த பௌலர்கள் தங்கள் ஸ்பெல்லைத் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச ஜேக் ஃபோக்ஸ் கையில் பந்தைக் கொடுத்தார் சான்ட்னர். ஃபோக்ஸ் நோ பாலோடு அந்த ஓவரைத் தொடங்க, இஷான் கிஷன் அதிரடி காட்ட, அந்த ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த 3 ஓவர்களில் முறையே 10, 12, 21 என ரன்கள் வர, 8/2 என்ற நிலையில் இருந்த இந்திய அணி, பவர்பிளே முடிவில் 75/2 என்ற நல்ல நிலைக்குச் சென்றது. இப்போது அபிஷேக் ஷர்மா செய்ததைப் போல், அந்தப் போட்டியின் பவர்பிளேவுக்குள்ளாகவே இஷான் கிஷன் அரைசதம் அடித்திருந்தார். அதன்பிறகு இந்தியாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 15.2 ஓவர்களிலேயே சேஸ் செய்து 200-க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. அந்தப் போட்டியின்போதும் சான்ட்னர் எடுத்த முடிவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக விமர்சித்திருந்தார்கள். அன்று ராய்ப்பூரில் நடந்த தவறு, 44 நாள்களுக்குப் பின் ஆமதாபாத்தில் மீண்டும் நடக்க, நியூசிலாந்துக்கு ஒரு கோப்பை வெல்வதற்கான வாய்ப்பையும் பறித்துவிட்டது. சான்ட்னர் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், "இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் சீம், ஸ்விங் எதுவும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால், பேட்டர்கள் அடிக்கக்கூடிய இடங்களுக்கு வெளியே பந்துவீச முயற்சி செய்தோம். அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் எவ்வளவு சிறப்பாக ஆடக்கூடியவர்கள் என்று நமக்குத் தெரியும். எப்படி பார்த்தாலும், அவர்கள் ஆடிய விதத்துக்கு பெர்ஃபெக்டான திட்டமே எதுவும் கிடையாது. அவர்கள் ஆடிய விதத்துக்கு, அவர்களை நிறுத்துவது எளிதானதல்ல. சில வைட்கள், சில லெக் சைட் பந்துகள் என கிட்டத்தட்ட எல்லாமே முயற்சி செய்துவிட்டோம். அதேசமயம் அவர்கள் பவர்பிளே ஆடிய விதத்தை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். அவர்கள் அப்படி ஆடியபிறகு அங்கிருந்து தொடர்ந்து அதிரடி காட்டி ஒரு பெரிய ஸ்கோரை அடிக்க அது உதவி செய்துவிட்டது" என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/c5ykz6e9nnvo- இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு 09 Mar, 2026 | 12:15 PM ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ஆம் திகதி சவூதி அரேபியாவில் அமெரிக்க இராணுவ வீரர்களை இலக்குவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த வீரர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீரரோடு, உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானில் பலர் உயிரிழந்தவர். ஈரான் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். பொதுமக்களில் பலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் ஈரான் அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள இடங்களுக்கும் அமெரிக்க நட்பு நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளிலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சவூதியிலும் குவைத்திலும் அமெரிக்க இராணுவ வீரர்களை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240521- CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்!
CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்! Mar 9, 2026 - 08:40 PM 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மின் விநியோகப் பணிகளுக்கான பொறுப்பு எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட்டுக்கு (EDL)மாற்றப்பட்டுள்ளது. மின்விநியோகத் துறையினுள் வினைத்திறன், நம்பகத்தன்மை மற்றும் சேவையின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக EDL நிறுவனத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் பதிலளிக்கக்கூடிய மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மின்சார விநியோக சேவை உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்!- சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது - நீதியமைச்சர்
சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது - நீதியமைச்சர் Published By: Vishnu 09 Mar, 2026 | 04:08 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சமாதான நீதவான் நியமனங்கள் இனி அரசியல் ரீதியாக வழங்கப்படாது.கல்வி தகைமையை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்படும். நியமனத்தின் பின்னர் நீதியமைச்சின் ஊடாக போதுமான பயிற்சிகள் வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டில் சமாதான நீதவான்களுக்கான பயிற்சி வழங்குதல், தற்போதுள்ள சமாதான நீதவான்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் புதிதாக நியமிக்கப்படும் சமாதான நீதவான்களின் எண்ணிக்கை மற்றும் சமாதான நீதவான் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வேளையின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நீதியமைச்சர் மேலும் பதிலளித்ததாவது, 2025 ஆம் ஆண்டு வரை சமாதான நீதவான்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான அமைப்பு இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களை நியமிப்பதற்கான முறையான அமைப்பும் இல்லை. இதற்கான முறையான அமைப்பை இப்போது உருவாக்கியுள்ளோம். இருப்பினும் அவர்களை வழிநடத்தும் தொடர்புடைய விஷயங்கள் 'சமாதான நீதிபதிகளின் பங்கு' என்ற கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் சமாதான நீதிபதிகளுக்கு நியமனங்கள் வழங்கும்போது நீதி அமைச்சினால் இந்த கையேடு வழங்கப்பட்டது, மேலும் 2025 ஆம் ஆண்டு முதல், இந்த கையேட்டை நீதி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம், மேலும் சம்பந்தப்பட்ட சமாதான நீதிபதிக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டா குறியீடு மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். 2013 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்படும் தரவு தகவல் அமைப்பின் படி,நாடு முழுவதும் அதிகார வரம்புகளுக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்ட சமாதான நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது. மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் 66,315 சமாதான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பராமரிக்கப்பட்ட தரவுத்தள அமைப்பு முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட்டதால்இ அதை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம். 2025 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவின் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நிலப்பரப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சமாதான நீதிபதிகள் (200:1 என்ற விகிதத்தில்) தீர்மானிக்கப்பட்டது.அதன்படி, சுமார் 40,000 சமாதான நீதிபதிகள் காலியாக உள்ள நியமனங்களை வழங்க முடியும் என்பதால், மாதத்திற்கு 500-750 நியமனங்கள் வழங்குவது ஜூன் 2025 முதல் தொடங்கப்பட்டது. சமாதான நீதிபதி சேவையை நெறிப்படுத்தி தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, விண்ணப்பதாரர்கள் 2025 முதல் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்படி, விண்ணப்பதாரர் க.பொ.த. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 6 பாடங்களில் சாதாரண தரப் பரீட்சை எழுதி, தாய்மொழி (சிங்களம்/ தமிழ்) உட்பட வேறு ஒரு பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஏதேனும் ஒரு வழியில் சான்றளிக்கப்பட்டால், விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்ற 06 பாடங்களுக்குள் மற்றொரு பாடத்திற்கு கூடுதலாக ஆங்கில மொழியைக் கொண்டிருக்க வேண்டும். முழு தீவுக்கும் சமாதான நீதவான் நியமனங்களை வழங்குவதில், நியமனம் வழங்கப்பட்ட பிராந்தியத்தில் சமாதான நீதவான் பதவியில் 5 ஆண்டுகள் சேவையாற்றியிருக்க வேண்டும் மற்றும் கல்வித் தகுதியாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் குறைந்தது ஒரு பாடத்திலேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 30 வயது பூர்த்தி செய்திருத்தலுடன், விண்ணப்பதாரர் 75 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.நியமனத்தின் போது நபர் நல்ல உடல் மற்றும் மன நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் கொண்ட நபராக இருக்கக்கூடாது மற்றும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக்கூடாது. மேலும், அவர்களின் சேவையை பொதுமக்களுக்கு ஏற்றதாக மாற்றும் நோக்கத்துடன், ஒரு சமாதான நீதவானின் எந்தவொரு செயல்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எழும் ஏதேனும் சிக்கல்கள் அல்லது புகார்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க ஒரு வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, நீதி அமைச்சின் சீர்திருத்தப் பிரிவுக்கு கடிதம் மூலம் புகார் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.2025. நவம்பர் முதல் நியமிக்கப்படும் சமாதான நீதவான்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். https://www.virakesari.lk/article/240486- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கறையான் புற்று
இது விவகாரமான கேள்வியாகத் தெரிகிறது😂! "மாமனிதர்" என்பது இறந்த பின்னர் வழங்கப் படும் பட்டம். அர்ச்சுனா திட்டும் சத்தியமூர்த்தி இன்னும் யாழ் போதனாவில் பணிப்பாளராக இருக்கிறார். எனவே, நிச்சயமாக இவர்கள் இரு வேறு நபர்களாகத் தானே இருக்க வேண்டும்? - ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.