24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன?
உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையைக் குறைப்பதற்காக, யூட்யூப் சேனலில் கூறிய தகவலை வைத்து, நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் (போராக்ஸ்) வாங்கிச் சாப்பிட்ட மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி உயிரிழந்துள்ளார். ஆனால், வெண்காரம் என்பது நச்சுத்தன்மையுடைய பொருள் என்றும், அது நாட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போராக்ஸ் என்று அழைக்கப்படும் சோடியம் போரேட் என்பது, பூச்சிக் கொல்லியைப் போன்ற நச்சுத்தன்மையைக் கொண்ட ஒரு ரசாயனப் பொருள் என்று வேதியியல் பேராசிரியர் விளக்குகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெண்காரம் என்றழைக்கப்படும் போராக்ஸ் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்) இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை சார்ந்து இத்தகைய தவறான பரிந்துரைகளைத் தெரிவிக்கும் யூட்யூப் சேனல்களை அரசு தடுக்க வேண்டுமென்று அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை இளம்பெண் சாப்பிட்டதாகச் சொல்லப்படும் வெண்காரம், ஆங்கிலத்தில் போராக்ஸ் (Borax) என்று அழைக்கப்படுகிறது. இதன் தன்மை உண்மையில் எத்தகையது? இதை உட்கொள்வதால் உடலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு நிபுணர்களிடம் பேசியது. 'யூட்யூப் பார்த்து வாங்கிச் சாப்பிட்ட இளம்பெண்' மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கலையரசி, ஒரு தனியார் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். 'உடல் சற்று பருமனாக இருந்த கலையரசி, யூட்யூப் சேனல் ஒன்றில், உடல் எடையைக் குறைக்க வெண்காரம் உதவுமென்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு மருந்துக் கடையில் அதை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்' என காவல்துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத் (சித்தரிப்புப் படம்) அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அதிகளவில் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இரவில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறை விசாரணையில், அந்தப் பெண் நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. கலையரசி ஒரு யூட்யூப் சேனலில் இருந்த வீடியோவை பார்த்து வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மகள் யூட்யூப் சேனலை பார்த்து, சுயமாக நாட்டு மருந்து வாங்கி வந்து சாப்பிட்டபோதே, தான் அதைத் தடுத்ததாக கலையரசியின் தந்தை வேல்முருகன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் வெண்காரம் என்பது என்ன? எளிமையாகச் சொல்வதெனில், அது நமது கேரம் போர்டில் பயன்படுத்தும் பவுடர்தான் என்கிறார் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் செல்வராஜ். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது மிகவும் மெல்லிய தன்மையைக் கொண்ட உப்பாகும். பொதுவாக இதை முகத்திற்குப் பூசும் பவுடர்களில் சிறிய அளவில் சேர்ப்பார்கள்'' என்று தெரிவித்த அவர், "'துத்தநாகத்தைக்கூட நமது மருந்துகளில் சிறிய அளவில் கலக்கிறார்கள். ஆனால், அந்த துத்தநாகத்தை நேரடியாகச் சாப்பிட்டால் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமோ அதைத்தான் வெண்காரமும் ஏற்படுத்தும்" எனவும் எச்சரித்தார். அவரது கூற்றுப்படி, சோடியம் போரேட் (sodium borate) என்ற ரசாயனம்தான் இந்த பவுடர், பேச்சுவழக்கில் அதை போராக்ஸ் என்பார்கள். ஆனால் "இது உணவாக உட்கொள்வதற்கான பொருளே இல்லை.'' ''சுத்திகரிப்பு செய்வதற்கான மூலப்பொருளாக மட்டுமே இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதே தவிர, நேரடியாக உணவாகப் பயன்படுத்தும் அளவுக்கு உகந்த பொருளில்லை. சுருங்கக் கூறுவதெனில், அதுவும் பூச்சிக்கொல்லியை போன்றதொரு ரசாயனம்தான்'' என்றார் பேராசிரியர் செல்வராஜ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சித்த மருத்துவத்தில் வெண்காரம் பயன்படுத்தப்படுகிறதா? போராக்ஸ் பவுடரை சித்த மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள் என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். அதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கியபோது, "வாய்ப்புண்ணுக்கு வெளிப்புறமாகப் போடக்கூடிய மருந்தாகவும் அதை பயன்படுத்துவார்கள்" என்று தெரிவித்த அவர், தனக்குத் தெரிந்த சித்த மருத்துவத்தில் எடையைக் குறைப்பதற்கு அதைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார். மாத்திரைகளால் உடல் எடையைக் குறைக்க முடியாது என வலியுறுத்தும் கு.சிவராமன் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவையே உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறை என்கிறார். வெண்காரம் சித்த மருத்துவத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்துப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, "வெண்காரம் சில சித்த மருந்துகளில் மிகச் சிறிய அளவு கலக்கப்படுமே தவிர, நேரடியாக மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுவதில்லை. அதையும் முறையாகச் சுத்திகரிக்காமல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது" என்று எச்சரித்தார். வெண்காரம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சாகவும் இருப்பதாக, சித்த மருத்துவர் வீரபாபு கூறுகிறார். அதுமட்டுமின்றி, ''பொதுவாக வாய்க்குள், பற்களில் இருக்கும் தொற்றுகளுக்கு, வாய்ப்புண்ணுக்கு இவற்றைச் சிறு அளவில் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் வெண்காரம் எந்த வகையிலும் உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்து கிடையாது'' என்றும் சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்தார். படக்குறிப்பு,வி.ஜி. மோகன் பிரசாத் பாதிப்புகள் என்ன? போராக்ஸை மிகச் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் நேராது என கூறுகிறார் குடலியல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத். வயிறு மற்றும் செரிமான மண்டல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத், இந்தியன் சொசைட்டி ஆஃப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி அமைப்பின் தலைவராக உள்ளார். ''சுத்திகரிக்கப்பட்ட போராக்ஸ் பவுடரை மிகவும் நுண்ணிய அளவில் எடுத்திருந்தால் பிரச்னையில்லை. ஆனால் எந்த வயதினராக இருந்தாலும் அதை அதிகமாக உட்கொண்டால் சிறிது நேரத்தில் உடலின் உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மை பரவி, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். நேரமாகிவிட்டால் அதைச் சாப்பிட்டவரைக் காப்பாற்றுவது சிரமம்'' என்றார். ஒருவேளை யாரேனும் தவறுதலாக வெண்காரத்தைச் சாப்பிட்டாலும்கூட "ஒரு மணிநேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், டியூப் போட்டு நஞ்சை வெளியே எடுத்து விடுவதன் மூலம் காப்பாற்ற முடியும்" என்கிறார் குடலியல் நிபுணர் வி.ஜி. மோகன். அதேவேளையில், தாமதம் ஆகும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவரித்த அவர், "போராக்ஸின் நச்சுத்தன்மை காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். சிறிது நேரத்தில் சிறுநீரகம் செயலிழந்துவிடும், ரத்தப்போக்கு ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்லும்பட்சத்தில் நஞ்சை வெளியேற்ற முடியும்" என்று விவரித்தார். சமீபகாலமாக யூட்யூப் சேனல்களை பார்த்து சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதும், மருத்துவ சிகிச்சைகளைச் செய்துகொள்வதும் அதிகரித்து வருவதாக அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபற்றிப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, ''முறையான சித்த வைத்தியம் படிக்காமல், எவ்வித ஆராய்ச்சி அனுபவமும் இல்லாமல் யூட்யூப் சேனல்களில் இயற்கை வைத்தியர் என்ற பெயரில் எதையெல்லாமோ மருந்தாக, உணவாகப் பரிந்துரைக்கிறார்கள். அரசு இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் இத்தகைய பதிவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clynk91q9qlo
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!
ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்! 20 Jan, 2026 | 12:31 PM ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாகவும் இந்த வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் மேலும் அறிவித்துள்ளது. கடந்த 2003இல் சதாம் ஹுசைன் ஆட்சியை வீழ்த்துவதற்காக ஈராக்கை நோக்கி அமெரிக்கா படையெடுத்தது. அப்போது அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தது அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்திலாகும். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படையினர் இருந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிகக படைகள் உபகரணங்களையும் ஈராக் படைத்தளத்திலிருந்து அகற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236512- மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்
மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம் Jan 21, 2026 - 12:37 PM கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும். இதற்கமைய, புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீனவர்கள் தாங்கள் விரும்பிய திட்டத்திற்குப் பங்களிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், 60 வயதுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு வயது எல்லைகளிலும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவதாகும். உதாரணமாக, மாதாந்தம் ரூ. 1,000 ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்திற்கு ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தால், அவருக்கு 64 - 70 வயது வரை ரூ. 1,250 ஓய்வூதியமும், 71 - 77 வயது வரை ரூ. 2,000 ஓய்வூதியமும், 78 வயதுக்குப் பின்னர் ரூ. 5,000 ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைத்தல், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) ஓய்வூதியம் உரித்தாதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தில் இணைய முடிவது போன்றவை இதன் மேலதிக விசேட நன்மைகளாகும். https://adaderanatamil.lk/news/cmknokd44047to29n13m3udf1- "வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?
"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன? பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,தையிட்டி பௌத்த விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி நடந்த போராட்டம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 20 ஜனவரி 2026 இலங்கையின் பௌத்த விகாரைகள் முன்பாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இனவாதம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பொருளில் பேசியுள்ளார், அந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க. ஆனால் இவரது கருத்து தெளிவற்றதாக இருப்பதாக தமிழர்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக போராட்டம் நடத்துவோர் கூறுகின்றனர். மற்ற விகாரைகளைக் கடந்து யாழ்ப்பாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கு மக்கள் செல்வது, "வழிபாடுகளை மேற்கொள்வதற்காக அல்ல" எனவும், மாறாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு எனவும் நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ''அங்காங்கே இனவாத செயற்பாடுகள் சிறு சிறு அளவில் காணப்படுவதை நான் அறிவேன். வணக்க தலத்தை மையமாகக் கொண்டு மோதல்கள் இடம்பெறுகின்றன. '' என்று ஜனாதிபதி பேசியுள்ளார். அத்தோடு ''ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரையை சூழ்ந்து இருக்கின்றார்கள். அது காணிக்காக அல்ல. இனவாதத்திற்காகவே சூழ்கின்றார்கள். மீண்டும் இனவாதத்தை தலைதூக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இனவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.'' என்றும் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக போராட்டங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல வருட காலமாக எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பௌத்தர்களின் புனித தினமாக அனுஷ்டிக்கப்படும் பௌர்ணமி தினங்களில் யாழ்ப்பாணம் தையிட்டி பௌத்த விகாரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தையிட்டி விகாரை வளாகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை கடந்த சில வருடங்களாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இதுவரை இறுதியாக தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியிலும், மத்திய அரசாங்கத்தின் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. படக்குறிப்பு,குருந்தூர்மலை முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பேசுகையில் முன்வைத்த கருத்துக்கள் தமது பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்தார் என யாழ்ப்பாணம் - தையிட்டி காணி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி தையிட்டி விகாரை பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே கருத்து வெளியிட்ட போதிலும், அதில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது என தையிட்டி காணி பிரச்னையை முன்னிறுத்தி வரும் பத்மநாதன் சாருஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். பௌர்ணமி தினங்களில் தாமே போராட்டங்களை நடத்தி வருவதாகவும், அதனை அடிப்படையாக் கொண்டே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''குறிப்பாக அவர் நேற்றைய தினம் பேசிய விடயம் தையிட்டியை பற்றி தான். ஏனென்றால், போயாவிற்கு (பௌர்ணமி தினம்) போராட்டம் செய்யும் இடம் தையிட்டி தான். போயாவிற்கு ஆர்ப்பாட்டம் செய்வதை பிழையாக நினைக்கக்கூடாது. போயாவிற்கு அங்கு வரும் மக்களை தெளிவுப்படுத்தி அனுப்புவதற்காக தான் போயா தினத்தில் போராட்டங்களை செய்கின்றோம். நாங்கள் குழப்பத்திற்கு போகவில்லை. எங்களுடைய உரிமைகளை எங்களுடைய ஆதங்கங்களை வெளியில் கொண்டு வருவதற்காகவே அந்த போராட்டங்கள் தொடங்கப்பட்டது,' என அவர் குறிப்பிடுகின்றார். ''ஜனாதிபதி, தென் பகுதியிலிருந்து பல பௌத்த ஆலயங்களைத் தாண்டி இங்கு வந்து வழிபடுவது இனவாதம் என்று சொல்கின்றாரா?. போயா தினங்களில்; போராடுவது பிழை என்று சொல்கின்றாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை." என்கிறார். "'போராடுபவர்களின் காணிகள் அந்த இடத்தில் இருக்கின்றதா என்று புலனாய்வு துறையிடம் சொல்லி விசாரணை செய்ய வேண்டும்' என்றும் ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில், இது மக்களுடைய காணி என்பதை எங்களுடைய அரச அலுவலகங்களில் உறுதிப்படுத்தியுள்ளோம்." என பத்மநாதன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,குருந்தூர் மலை இந்த காணி பிரச்னை நிலவும் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் காணி காணப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி மக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த விகாரை விஸ்தரிக்கப்பட்டு வருவதாக பத்மநாதன் கூறுகின்றார். ''அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியன தலையீடு செய்திருந்தன. அவர்களின் குழுக்கள் இது பொது மக்களின் காணி என உறுதிப்படுத்தியிருந்தன.'' என அவர் தெரிவிக்கின்றார். இந்த காணி பிரச்னைக்கு இறுதி தீர்மானம் கிடைக்கப் பெறும் வரை பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என காணி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு,வெடுக்குநாறி மலையில் சைவ அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் பௌத்த சின்னங்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது சமூக செயற்பாட்டார்களின் பார்வை? வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுவோரின் பின்னணியில் அரசாங்கத்தின் அனுமதி இருக்கின்றது என சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் தெரிவிக்கின்றார். ''ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட விகாராதிபதியை தான் முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தீர்கள். தமது இடம் பறி போகின்றது. இது நாங்கள் வாழ்ந்த இடம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு குடும்பத்தையாவது ஜனாதிபதி இம்முறை சந்தித்தாரா?" என மாணிக்கம் ஜெகன் கேள்வி எழுப்புகிறார். "நீங்கள் ஆக்கிரமிக்கும் ஆட்கள், நாங்கள் பாதிக்கப்படும் ஆட்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதேவேலையை தான் இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.'' எனவும் ஜெகன் கூறகிறார். ஜனாதிபதியின் பேச்சை பத்திரிகையாளர் எவ்வாறு பார்க்கின்றார்? வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, பௌத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தெரிவிக்கின்றார். ''தமிழ் இந்துக்கள் ஏன் பௌத்த அடையாளங்களை எதிர்க்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி வருகின்றது, போராட்டங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக செய்வது தான். யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை இருக்கின்றது, நாகவிகாரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேறு கோவிலாக கட்டினார்களா?'' என வித்தியாதரன் கேள்வி எழுப்புகிறார். ''இது பௌத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு அல்ல. ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு. பௌத்தத்தை எதிர்க்க போவதில்லை. ஆனால் எங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு குறியீடாக தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,'' என அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,VITHIYADARAN படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தமிழர்கள் இனி ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என்பதை அநுர குமார திஸாநாயக்க நன்கறிந்தமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன், அவ்வாறு பாதுகாப்பு பிரச்னை இல்லை என உறுதியாக தெரிந்த அவருக்கு ஏன் தமிழர்களின் காணிகளை விடுக்கவிக்க முடியாது எனவும் கேள்வி எழுப்புகின்றார். ''வடக்கில் அப்படி நடக்காது என்று அவருக்கு தெரியும். தமிழர் மக்கள் இன்னுமொரு 100 வருடங்களுக்கு ஆயுதம் ஏந்த போவதில்லை என்பதை நூற்றுக்கு இருநூறு விகிதம் அவருக்கு தெரியும். அதை தெரிந்தவர் காணிகளை விடுவிக்க வேண்டும். அதிகாரத்தை வழங்க வேண்டும். சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை,'' என அவர் வினவுகிறார். பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆனால் விகாரை பிரச்னை யாழ்ப்பாணத்துடன் முடிந்துவிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் பெறுமதியாக இடமாக குருந்தூர்மலை காணப்படுகின்றது, இந்த குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்ற போதிலும், இது முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பிரச்னையும் இறுதி தீர்மானம் இன்றி இன்றும் சர்ச்சையை தோற்றுவிக்கும் விடயமாக காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் தொல்லியல் பெறுமதியாக சைவ அடையாளங்கள் காணப்பட்ட இடத்தில், புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ய பௌத்த தேரர்கள் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான பிரச்னைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9rzw210ndo- 📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
அட்றா சக்கை. சுத்துமாத்து சுமந்திரன்... சங்கு கூட்டணியுடன், வட்ட மேசையில் இணைந்து விட்டார்.. சங்கு கூட்டணியை ... தொண்டை கிழிய திட்டித் தீர்த்தவர்களும், கை உழைய, கேலிச் சித்திரம் வரைந்தவர்களும்... தலையை... எங்கே புதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த அரசியல் சுத்துமாத்துக்களுக்கு வெள்ளை அடித்தவர்கள்... எப்படிப் பட்ட, "நய வஞ்சகர்கள்" என்று இப்போ... எல்லோருக்கும் புரிந்து இருக்கும். எல்லா கள்ளரும் வட்ட மேசையில் சுத்தி இருக்க, பெரிய கள்ளன் டக்ளஸ் தேவானந்தாவை ஏன் விட்டு விட்டார்கள். த்தூ... வெட்கம் கெட்ட, அயோக்கியக் கூட்டம். அரசியல் அனாதையான... "வெத்து வேட்டுக்கள்" எல்லாம் ஒன்றாக சேர்ந்த தருணம் இது. சுத்துமாத்து சுமந்திரனுக்கு... இவர்களை வைத்து, மாகாண சபை தேர்தலில் காரியம் ஆக வேண்டி இருக்கு, அதுதான் பம்மிக் கொண்டு இருக்கிறார். தேர்தலில் சுமந்திரன் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. மீண்டும் தோற்ற கையுடன் இவர்களை அடித்து விரட்டி விடுவார். அது தெரியாமல் வட்ட மேசையில்... ஒட்டி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருக்குதுகள் "அலுவோசுகள்".- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ண நெருக்கடி: பங்களாதேஷுக்கு ஆதரவாக ஐசிசிக்கு பாகிஸ்தான் கடிதம் 21 Jan, 2026 | 05:44 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷின் பங்கேற்பு குறித்து இன்றுவரை காலக்கெடு விதித்திருந்த ஐசிசி, அதன் நிலைப்பாட்டை இன்று வெளியிடத் தயாராகி வருகிறது. இந் நிலையில், இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற பங்களாதேஷின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தின் நகல்களை ஐசிசி பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக பங்களாதேஷின் உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. இந் நிலையில், அதன் கோரிக்கை தொடர்ப்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க இன்றைய தினம் பணிப்பாளர் சபை கூட்டத்திற்கு ஐசிசி அழைப்பு விடுத்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பிவைத்துள்ள இந்தக் கடிதம் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடும். ஆனால், ஐசிசியின் தீர்மானத்திற்கு அந்தக் கடிதம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரியவருகிறது. இந்தியாவுடன் ரி20 உலகக் கிண்ண இணை ஏற்பாட்டாளரான இலங்கையில் பங்களாதேஷின் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக போட்டி அட்டவணையை மாற்ற முடியாது என்பதில் ஐசிசி உறுதியாக இருக்கிறது. இவ்விடயத்தில் உறுதியாக இருக்கும் ஐசிசி, தனது நிலைப்பாட்டை பங்களாதேஷுக்கு கடந்த வார கலந்துரையாடலின்போது அறிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/236629- Today
- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
இலங்கையில் இப்படி நடப்பது அரிது. ஆனால் சிலர் நூதனமாக களவு செய்வார்கள். உதாரணமாக ஏ எல் பாஸ்பண்ணி பல்கலை வெட்டுபுள்ளி எடுத்து மருத்துவம், சட்டம், பொறியியல் போவது மிக கஸ்டம். ஜனாதிபதி, அமைச்சர்களின் பிள்ளைகள் கூட களவு செய்து யூனி உள்ளே போனதாக இல்லை. ஆனால் அதி உயர் அதிகாரிகள் மிக அரிதாக இப்படி களவு செய்து அனுப்பியதாக பரவலாக நம்பபடுகிறது. ஒன்றில் பேப்பரை அவுட் ஆக்கி, அல்லது வேறு ஆளை சோதனை செய்ய வைத்து (குதிரை ஓடல்), அல்லது திருத்தும் இடத்தில் பேப்பரை மாற்றி இப்படி செய்வாகளாம். முன்னர் சிறி ரங்கா என ஒரு தறுதலை எம்பியாக இருந்தது. அதுவும், சைக்கிள் கஜன்ஸ்சில் ஒருவரான குதிரை கஜனும் இப்படித்தான் உள்ளே போனதாக சொல்லப்படும். குதிரை கஜன் காரணப்பெயர்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வங்காளதேசம் இந்தியாவுக்கு சென்று விளையாட மறுத்தால் சிலவேளை நாளை ஐசிசியில் உள்ள அங்கத்தவர்களுக்கு இடையே வாக்களிப்பு நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதில் வங்காளதேசத்துக்கு எதிராக அதிக வாக்குகள் விழுந்தால் வங்களாதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி இந்த உலக கோப்பையில் விளையாட சந்தர்ப்பம் இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு அங்கத்தவர்கள் வங்காள அணிக்கு பெரும்பாலும் சாதகமாக வாக்களிப்பார்கள்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உண்மையில் 10 வருடங்களுக்கு முன்வரை ஓரளவு நியாயமான சம்பளம் தான் வாங்கினார்கள். இந்த அரச ஒப்பந்த விலைக்கணிப்புகளை(Estimate) எப்போது அறிந்து கொண்டார்களோ அன்றிலிருந்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சம்பளம் கேட்கிறார்கள்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்ல விடையம் அவர் தனது கூலியை ஒரு மட்டுப்படுத்திய, இரு தரப்பிற்கும் பாதிக்காத வகையில், ஏற்றுக் கொள்ளும் நிலையில் நாங்கள் தொடர்ச்சியாக அவருக்கே எங்கள் திட்டம் சார்பான வேலைகளை வழங்கலாம் .என்று நினைக்கின்றேன்- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் பெற்ற தகவல்களின்படி புதிய கொமட் பொருத்த 5500 - 7500 ரூபா வரை வாங்குவதாக கூறினார்கள். சிலர் புதிய கொமட் பொருத்த 12000 ரூபா வரை வாங்குவதாக தெரிவித்தனர். சீலனுக்கு நன்றாக விளங்கப்படுத்தினேன், அவரும் புரிந்து கொண்டதாகக் கூறினார். லாப நோக்கு மட்டும் இருந்தால் பலருடைய அடிப்படைச் சுகாதார வசதி செயற்திட்டத்தைப் பாதிக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
தண்ணீர் கொள்கலன் வைப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுக்கலாம் என்பதே எனது கருத்தும் ஆரம்பித்த வேலையை முழுமையாக முடித்த திருப்தி எல்லோருக்கும் வரும் அராலி வேலையையும் தொடரலாம் அதற்கான நிதியை நீங்கள் விடுவிப்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்- சர்வதேச சட்டங்களுக்கு இணங்க லண்டனில் புதிய தூதரகம் அமைக்கப்படும் – சீனா உறுதி!
சர்வதேச சட்டங்களுக்கு இணங்க லண்டனில் புதிய தூதரகம் அமைக்கப்படும் – சீனா உறுதி! சர்வதேச இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க பிரித்தானியாவில் தனது புதிய தூதரகக் கட்டிடத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தத் திட்டங்களுக்கான ஒப்புதல் செயல்முறை சர்வதேச இராஜதந்திர விதிமுறைகள் மற்றும் பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இன்று (21) நடைபெற்ற வழக்கமான ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார். உளவு பார்ப்பதற்கான தளமாக சீனா பயன்படுத்தப்படலாம் என்ற பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகளின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பெய்ஜிங்குடனான உறவை மேம்படுத்தும் நம்பிக்கையில், ஐரோப்பாவில் அதன் மிகப்பெரிய தூதரகத்தை லண்டனில் நிர்மாணிப்பதற்கு செவ்வாயன்று (20) பிரித்தானியா ஒப்புதல் அளித்தது. இரண்டு நூற்றாண்டு பழமையான ரோயல் மின்ட் கோர்ட் இருந்த இடத்தில் புதிய தூதரகத்தைக் கட்டும் பெய்ஜிங்கின் திட்டங்கள், உள்ளூர்வாசிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிரித்தானியாவில் உள்ள ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு பிரச்சாரகர்களின் எதிர்ப்பால் மூன்று ஆண்டுகளாக முடங்கின. எவ்வாறெனினும் தூதரகத்தை அமைப்பதற்காக ஜனவரி 20 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள அனுமதி அடுத்த வாரம் இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு பிரிட்டிஷ் தலைவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460837- ‘பொற்காலம்’ வணிக உரையாடலை மீண்டும் உயிர்பிக்கும் பிரித்தானியா – சீனா
‘பொற்காலம்’ வணிக உரையாடலை மீண்டும் உயிர்பிக்கும் பிரித்தானியா – சீனா அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பெய்ஜிங் விஜயத்தின் போது பிரித்தானியாவும் சீனாவும் ”பொற்காலம்” என்ற வணிக உரையாடலை மீண்டும் உயிர்பிக்க இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கலந்ரையாடலில் இரு தரப்பிலிருந்தும் பல உயர் நிர்வாகிகள் பங்கெடுப்பார்கள் என்று இந்த விடயத்தை நன்று அறிந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட “பிரித்தானியா-சீனா தலைமை நிர்வாக அதிகாரி கவுன்சிலில்” புதிதாக இணையவுள்ள பிரிட்டிஷ் நிறுவனங்களில் அஸ்ட்ராஜெனெகா, பிபி, எச்எஸ்பிசி, இன்டர்காண்டினென்டல் ஹோட்டல்ஸ் குரூப், ஜாகுவார் லேண்ட் ரோவர், ரோல்ஸ் ராய்ஸ், ஷ்ரோடர்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகியவை அடங்கும். சீனத் தரப்பை பேங்க் ஆஃப் சீனா, சீனா கட்டுமான வங்கி, சீனா மொபைல், தொழில்துறை மற்றும் வணிக வங்கி, சீனா ரயில் மற்றும் ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன், சீனா தேசிய மருந்துக் குழுமம் மற்றும் BYD உள்ளிட்ட நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பொற்காலக் கலந்துரையாடல் தொடர்பில் இரு தரப்பினரிடையிலும் சிறிது காலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும், ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தூதரகத்தை லண்டனில் கட்ட சீனாவுக்கு ஜனவரி 20 அன்று இங்கிலாந்து ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இப்போதுதான் தீவிரமாகத் தொடங்கியுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளின் பொற்காலத்தில் இந்த கவுன்சில் முதலில் 2018 ஆம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்துப் பிரதமர் தெரசா மே மற்றும் அப்போதைய சீனப் பிரதமர் லி கெக்கியாங்கால் ஆரம்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளின் பெரிய நிறுவனங்களின் தலைமை இயக்குனர்கள் மற்றும் தொழில் தலைவர்களை ஒன்றாகக் கூட்டி, பிரித்தானியா மற்றும் சீனா இடையேயான வணிக மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுப்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது. https://athavannews.com/2026/1460834- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
குடும்பியை கண்டுபிடித்து விடுகிறீர்கள் 😂 அதிலும் இந்தியாவில் ஆதர்காட் என்று மக்களுக்கான ஒரு அடையாள அட்டையை இப்போது தான் வந்துள்ளதாம் ஆனால் இலங்கை அடையாள அட்டை முறையை மக்களுக்கு ஐரோப்பா போன்று எப்போதே அறிமுகபடுத்தி விட்டதாம் அப்படிபட்ட ஒரு நாட்டில் இந்த மோசடி எப்படி நடைபெற்றது 🙄- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கவிதை பூங்காடு பகுதியில், "பிடித்த பாடல் வரிகள்" என்னும் பகுதி மேல் பதிவிடுவதற்க்கு உறைய செய்யப்பட்டதற்கான காரணம் அறியத் தர கிடைக்குமா...- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
சீலனிடமும் ஏனைய வேலை ஒப்பந்தகாரர்களிடமும் இரு விடயங்களை தெளிவுபடுத்தலாம் என எண்ணுகிறேன். ஏலவே நீங்கள் செய்திருக்கவும் கூடும். வேலைக்கு உரிய கூலி வழங்கபட வேண்டும். ஆனால் இது ஒரு கொடை உதவி (charity) என்பதை அவர்களும் கருத்தில் எடுக்க வேண்டும். தனியாரிடம் அறவிடுவதில் இருந்து 5% -3% கழிவை அவர்கள் தரமுடிந்தால் நல்லம். யாழ் உறவுகள் பணத்தால் உதவும் போது நாட்டில் இதில் ஈடுபடுவோர் கொஞ்சம் உழைப்பை தானமாக கொடுத்தால் அவர்களும் நல்லது செய்வதாக அமையும். அவர்களே கஸ்டஜீவனமாக இருக்கும். நாம் கேட்டு பார்க்கலாம். முடியாது என்றால் காரியம் இல்லை. அனுகூலமான விலை, நேர்த்தியான வேலை - நாம் மேலும் திட்டங்களை செய்ய உதவும். அது அவர்களுக்கு மேலும் தொழில் வாய்ப்பை உருவாக்கும். ஆகவே இதை அவர்களின் நீண்டகால நோக்கில் அணுக வேண்டும்.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வழங்கலாம் என்பது என் கருத்து. ஏனையோர் இருவரும் தம் கருத்தை சொல்லவும். 👍- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
தட் குடுமியை மறைக்க மறந்த தருணம்😂. நாதமுனியை நான் மிஸ் பண்ணுகிறேன். நீங்களுமா?😂 ஓ எல், ஏ எல் என எந்த பொது பரிட்சையும் இல்லாத நாடு கனடா என்பதை அறிந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இது இன்னமும் அதிர்சியாக உள்ளது. இங்கே மாணவர் ஐடி கார்ட் இல்லாமல் பல்கலை கழக கட்டிடத்துக்குள், சில வளாகங்களுக்குள் கூட நுழைய முடியாது.- குடிநீரில் மலக்கழிவு !!
குடிநீரில் மலக்கழிவு !! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 18, 2026 1 Minute அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன் என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli பக்டீரியா இருந்தமையே ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும் ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும். நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி கிருமி பிரச்சினை அல்ல; அது முழு சுகாதார அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படுத்துகிறது. தண்ணீர் E. coli மூலம் மாசடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலக்குழி கசிவு , திறந்த வெளியில் மலம் கழித்தல், கால்நடை கழிவுகள், வெள்ளத்தின் போது கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய்களின் உடைப்பு மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக கிராமப்புற பகுதிகள், வெள்ளத்திற்குப் பிந்தைய சூழ்நிலைகள் அதிக ஆபத்தானவையாகும். யாழ் குடாநாட்டில் உள்ள மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்பு காரணமாக மலத்தினால் மாசடைந்த நீர் இலகுவாக கிணற்றினை சென்றடைகின்றது. மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இதனை அதிகரித்து இருந்தது. முந்திய காலத்தில் கீழ்ப்பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்ட மலக்குழிகள் இந்த ஆபத்தினை அதிகரித்து ஆனால் தற்பொழுது எல்லா பக்கமும் சீமெந்தினால் சீல் செய்யப்பட்ட குழிகளே அமைக்கப்டுகின்றன. E. coli என்பது இயல்பாக மனித குடலில் வாழும் கிருமியாகும். பெரும்பாலான E. coli இனங்கள் தீங்கற்றவையாக இருந்தாலும், குடிநீரில் அதன் இருப்பு சமீபத்திய மலம் சார்ந்த மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் Salmonella, Shigella, Vibrio போன்ற ஆபத்தான கிருமிகளும், வைரஸ்கள் மற்றும் பராசைட்களும் குடிநீரில் இருக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்படுகிறது. எனவே, குடிநீரில் E. coli இருப்பது பொதுச் சுகாதார அவசர நிலையாகக் கருதப்படுகிறது. நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையின் பொழுது E. coli இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதே பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் அதன் எண்ணிக்கையும் பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் முக்கியமாக E. coli இல் என்ன இனம் இருக்கின்றது என்பது குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. ஏனெனில் E. coli இல் குறித்த சில இனங்களே மனிதருக்கு நோய்களை ஏற்படுத்துகின்றது. அவற்றின் விபரம் வருமாறு வகை நோய் முக்கியத்துவம் ETEC நீர் வயிற்றுப்போக்கு நீரிழப்பு மரணம் EPEC குழந்தைகளில் வயிற்றுப்போக்கு குழந்தை மரணம் EHEC (O157:H7) இரத்த வயிற்றுப்போக்கு, Hemolytic Uremic Syndrome (HUS) திடீர் மரணம் EAEC நீடித்த வயிற்றுப்போக்கு ஊட்டச்சத்து குறைபாடு மாசுபட்ட தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் E. coli பலவகை நோய்களை ஏற்படுத்தக்கூடும். சில வகை E. coli கிருமிகள் நீர்வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, கடுமையான நீரிழப்பையும் மினரல் சமநிலையிழப்பையும் உண்டாக்குகின்றன. குழந்தைகளில் இந்த நிலை உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம். EHEC (O157:H7) போன்ற வகைகள் இரத்த வயிற்றுப்போக்கையும், Hemolytic Uremic Syndrome (HUS) எனப்படும் கடுமையான நிலையும் உருவாக்குகின்றன. இதில் சிறுநீரக செயலிழப்பு, மூளை வீக்கம் ஏற்பட்டு திடீர் மரணம் நிகழலாம். E. coli பக்டீரியாக்களில் பல இனங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவை அத்துடன் இவை மனிதனின் குடலிலும் இயற்கையான சூழலிலும் இருப்பவை. இதன் காரணமாக மனிதனுக்கு குறித்த நீரினை அருந்தும் பொழுது எவ்விதமான மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் E. coli பக்டீரியா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் குறித்த நீரினை அருந்த கூடாது. E. coli மாசுபாட்டைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானதாகும். குடிநீரை காய்ச்சி அல்லது குளோரினேஷன் செய்து பயன்படுத்துதல், கிணறுகளை பாதுகாப்பாக அமைத்தல், கழிப்பறைகளையும் குடிநீர் ஆதாரங்களையும் போதிய இடைவெளியில் அமைத்தல், வெள்ளத்திற்குப் பின் உடனடி நீர் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும் முந்தைய காலத்தில் நாம் இவ்வாறு கிணற்று நீரினை பரிசோதனைக்கு உட்படுத்தி குடிப்பதில்லை என்ற பழமைவாதிகள் குற்றச்சாட்டுக்கான பதில் முன்பு சனத்தொகை குறைவாக இருந்த காரணத்தினால் கிணறு – மலக்குழி ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தூரம் இருந்தது ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறு அல்ல என்பதே ஆகும். நன்றி Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) https://tamilforensic.com/about/- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, புதிய மலசலகூடத்திற்கு காரைநகரில் ஏற்கனவே 5 பேருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள், நேற்று மேலும் 3 பேருக்கு அவசரமாக தேவை என்று கேட்டவர்கள். முதலில் ஒன்றைத் செய்து நடைமுறைச் செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு பின்னர் தொடருவோம் எனக்கூறி இருக்கிறேன். உண்மையில் வீட்டில் இருந்தபடி பொருத்தமானவர்களிடம் வேலைகளை ஒப்படைத்து செய்வித்த நான் ஒரு கருவி மட்டுமே. இந்தப்பணிகளைச் செய்ய தூண்டியது மட்டுமல்லாமல் நிதி உதவி அளித்த நல்லுள்ளங்களுக்குத் தான் மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவிக்கிறேன். @குமாரசாமி அண்ணை, @வாத்தியார்அண்ணை , @goshan_cheஅண்ணை வட்டு.தெற்கு திரு நா.பரராஜசிங்கம் ஐயாவிற்கு மேலும் ஒரு 50000 ரூபாவை வழங்கட்டுமா? மலசலகூட குழிக்கு கல்லு கட்டவேணும்.(குழிக்குள் தண்ணீர் இருக்குதே என்று கேட்டதற்கு இறைத்து இறைத்துக் கட்டுவதாக கூறினார் T/O) கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபாவையும் வழங்குகிறேன். கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கிறேன். 35000 ரூபா கேட்டவர், எல்லாவற்றையும் விபரமாக எழுதி தரச்சொல்லி உள்ளேன். வேலைக்காசு கூட என்று ரT/O தம்பி கூறினார், செய்து தந்த சீலனிடம் கேட்டதற்கு பாவனையில் உள்ள மலசலகூடப்பணிகளை(துர்நாற்றம்) செய்வதற்கு பலரும் வரமாட்டினம் என்று கூறினார். புதிதாக செய்வதற்கு உள்ள சம்பளம் வாங்குவினமாம். காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் கிடைத்துள்ளது. அதன்படி 279,408 ரூபா எனக்குறிப்பிட்டுள்ளார். இது முன்னர் வேறொரு T/O கூறியதை விட 80000 ரூபா அதிகமாக உள்ளது. இதனை மாதிரியாக கொண்டு வேறு சிலரிடம் பட்ஜட் எவ்வளவு வரும் என விசாரித்து பின்னர் தொடங்குவோம். பொன்னாலை வேலை செய்த சீலனிடம் கேட்டபோது பொருட்களை வாங்கித்தரட்டாம் சம்பளத்திற்கு(லேபர் கொன்றாக்ற்) செய்து தருகிறேன் என்று சொன்னவர். இன்று காரைநகர் சென்று பார்த்துவிட்டு கணக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.- இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது? — வீரகத்தி தனபாலசிங்கம் —
இலங்கையில் புதிய அரசியலமைப்பு முயற்சிகள் துரிதப்படுத்தப்படுவதாக ஸ்ராலினுக்கு யார் சொன்னது? January 20, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசியப் பேரவை தூதுக் குழுவினர் தன்னைச் சந்தித்த ஒரு மாத காலத்திற்குள், தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் “இலங்கை தமிழர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தன்னை சந்தித்த இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது தங்களது நாட்டில் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தமிழர்களுக்கு தோற்றுவிக்கப்போகும் ‘பாரதூரமான ஆபத்துக்களை’ சுட்டிக் காட்டியதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், சிறுபான்மை இனத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவ கோட்பாடுகளை பேணிப்பாதுகாக்கவும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கும் கூட்டாட்சி ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அத்தகையதொரு அணுகுமுறையை புதுடில்லி கடைப்பிடித்தால் அது பிராந்திய அமைதியை உத்தரவாதம் செய்யும் நாடு என்ற இந்தியாவின் வகிபாகத்தை கௌரவிப்பதாக மாத்திரமல்ல, கூட்டாட்சியையும் மொழி மற்றும் இனத்துவ சிறுபான்மையினங்களையும் பாதுகாக்கும் இந்தியாவின் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு இசைவானதாகவும் அமையும் என்று கூறியிருக்கும் ஸ்ராலின், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பது என்ற போர்வையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை துரிதப்படுத்தியிருக்கின்றது என்றும் உத்தேச கட்டமைப்பு அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் அபிலாசைகளை அலட்சியம் செய்வதன் மூலம் அவர்கள் மேலும் ஓரங்கட்டப்பட்டக்கூடிய அச்சுறுத்தலை தோற்றுவிக்கும் ஒற்றையாட்சி முறையை (ஏக்கியராஜ்ய) வலுப்படுத்துவதாக தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவின் அனுசரணையுடன் 1985 ஓகஸ்டில் பூட்டானில் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்ப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட ‘திம்புக் கோட்பாடுகள்’ தற்போதைய பின்புலத்தில் தொடர்ந்தும் பொருத்தமானவையாக இருப்பதாக தன்னைச் சந்தித்த தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியதை பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர் அந்த கோட்பாடுகளில் அடங்கியிருக்கும் அம்சங்களை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசியலமைப்பும் அநீதி மற்றும் உறுதிப்பாடின்மையை தொடரச் செய்யும் என்பதுடன் மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். 1987 இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதிக்கும் நீதிக்குமாக நீண்டகால அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டிருக்கிறது என்றும் ஸ்டாலின் எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் இந்த கடிதத்தை இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் முயற்சிகளில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தமிழ்நாடு மூலமாக நெருக்குதலை பிரயோகிப்பதற்கு தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு கிடைத்த முக்கியமான ஆரம்பக்கட்ட வெற்றியாக தமிழ் தேசிய பேரவை கருதுகிறது. கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த அரசியல் கருத்தரங்கில் கஜேந்திரகுமார் நிகழ்த்திய உரை இதை தெளிவாக உணர்த்துகிறது. தங்களது தமிழ் தேசியவாத நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு அலையொன்று ஏற்படும் என்பதில் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார், இலங்கை தமிழரசு கட்சியையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியையும் இணைத்துக்கொண்டு இந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரைக்கும் அந்த இரு கட்சிகளும் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறுவதில் தவிர்க்க முடியாத சக்திகள் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. தனியொரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலமாக இத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது என்றால், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்ட ஏனைய தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டாக செயற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஆதரவு அலையை உருவாக்குவதில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு சென்று அரசியல் கட்சிகளை சந்தித்த பிறகு இதைக் கூறுகின்ற கஜேந்திரகுமார், முன்கூட்டியே தமிழரசு கட்சியுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் கலந்தாலோசித்து ஒரு கூட்டு நிலைப்பாட்டை எடுப்பதற்கு ஏன் முயற்சிக்கவில்லை என்று தெரியவில்லை. தமிழ் தேசியவாத அணிகளைப் பொறுத்தவரை, அவர்கள் தாங்களாக ஒரு நிலைப்பாட்டை எடுத்த பிறகு மற்றைய அணியினர் தங்களுடன் இணைந்துசெயற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற வழமையான நடைமுறையின் தொடர்ச்சியாகவே இதை நோக்க வேண்டியிருக்கிறது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியவாத கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றென்றைக்குமே கானல் நீராகவே இருக்கும் போன்று தெரிகிறது. தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது கடிதத்தில் ‘ஏக்கியராஜ்ய’ என்ற பதத்தைப் பயன்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. 2015 – 2019 காலப்பகுதியில் அன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் இலங்கை அரசின் தன்மை ‘ஏக்கியராஜ்ய’ வாக அமையும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கைவிடப்பட்ட இடத்தில் இருந்து அந்த அரசியலமைப்புச் செயன்முறை முன்னெடுக்கப்பட்டு தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கஜேந்திரகுமார் ‘ஏக்கியராஜ்ய’ அரசியலமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவந்துவிடும் என்று நம்புகிறார் போலும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி திசநாயக்க பிறகு கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக பதிய அரசியலமைப்பு குறித்து எதையும் பேசவில்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பதவிக்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது அதைப் பற்றி பெருமளவுக்கு மௌனத்தைச் சாதிக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதிய அரசியலைமைப்பின் மூலமாக மாத்திரமே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனாலும், அவர் காலவரையறை எதையும் கூறவில்லை. இலங்கையில் நிலைவரம் இவ்வாறு இருக்கும்போது தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் செயன்முறைகள் துரிதப்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். அதனால், இலங்கை அரசியல் நிலைவரம் தொடர்பான ஸ்ராலினின் புரிதல் குறித்து சந்தேகம் எழுகிறது. எது எவ்வாறிருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து மீண்டும் அவர் அக்கறை காண்பிக்க தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளை, தமிழ்நாடு சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தனது மாநிலத்தின் மற்றைய அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கு முன்னதாக பிரதமருக்கு கடிதம் எழுதியதன் மூலம் ஸ்ராலின் முந்திக் கொண்டார் என்ற விமர்சனமும் உண்டு. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மைப் பலம் இருக்கின்ற போதிலும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரயம் செய்கிறது என்ற அபிப்பிராயம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக குரல்கொடுத்து வந்த ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பு சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதே பரந்தளவில் சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாக இருக்கிறது. புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் பதவிக் காலத்தின் முதல் வருடங்களே பாதுகாப்பான காலப் பகுதியாகும். அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உற்சாகமான பிரதிபலிப்பு வெளிப்படாமல் இருப்பது அரசியலமைப்பு ரீதியான அல்லது ஒரு கட்சி சர்வாதிகாரத்தை நிறுவும் திசையில் அது நகரத் தொடங்கியிருக்கிறது என்ற விமர்சனம் ஏற்கெனவே எதிரணியினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் முன்னணி அரசறிவியல் நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சி குறித்து அண்மையில் எழுதிய ஆய்வு ஒன்றில் இந்த அரசியலமைப்பு மாற்ற விவகாரம் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் ; ” இலங்கையின் அரசியல் புதிய வருடத்திலும் அதற்கு பின்னரும் பெரும்பாலும் மிகவும் சர்ச்சைக்குரியதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் இருக்கப்போகிறது என்பதற்கான சகல அறிகுறிகளும் தெரிகிறது. முக்கியமான எந்தவொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் இது உண்மையில் நல்ல செய்தி அல்ல. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை தாமதிப்பது தேசிய மக்கள் சக்தியின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு குறிப்பாக, அதன் நம்பகத்தன்மைக்கு பாதகமானது. ” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதுடன் பாராளுமன்ற — அமைச்சரவை எதேச்சாதிகாரத்தை தடுப்பதற்கு அவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய பாராளுமன்ற ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி தவறுமானால், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு இன்னொரு மக்கள் கிளர்ச்சி தேவையாக இருக்கலாம்.” https://arangamnews.com/?p=12614- வெள்ளை மாளிகையில் ஓராண்டு நிறைவு : சர்ச்சைகளும் சாதனைகளும் - அதிரடி காட்டிய டொனால்ட் ட்ரம்ப்!
வெள்ளை மாளிகையில் ஓராண்டு நிறைவு : சர்ச்சைகளும் சாதனைகளும் - அதிரடி காட்டிய டொனால்ட் ட்ரம்ப்! Published By: Digital Desk 3 21 Jan, 2026 | 10:17 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை (ஜன 20) வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பை நடத்தினார். அதில், தனது ஓராண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு பெரிய கோப்பை (Binder) ட்ரம்ப் காண்பித்தார். அத்துமீறிய குடியேற்றத்தைக் குறைத்தது முதல் கழிப்பறைகள் மற்றும் ஷவர் ஹெட்களின் (shower heads) தரத்தை மேம்படுத்தியது வரை பல்வேறு சாதனைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த கோப்பின் க்ளிப் (binder clip) தனது விரலை காயப்படுத்தியிருக்கலாம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், "நான் வலியை வெளிப்படுத்தமாட்டேன்" என்றார். குடியேற்றம் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் தனது உரையின் பெரும்பகுதியை குடியேற்றக் கொள்கைகள் குறித்துப் பேச ஒதுக்கினார்: மினசோட்டாவில் (Minnesota) ஐஸ் (ICE) அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிடிபட்டவர்களின் புகைப்படங்களைக் காண்பித்து, அவர்களை "குற்றவாளிகள்" என சாடினார். சோமாலிய குடியேற்ற வாசிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அவர், அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மினசோட்டா மற்றும் பிற ஜனநாயகக் கட்சி ஆளும் நகரங்களில் இராணுவத்தை நிலைநிறுத்துவதை ஆதரித்துப் பேசினார். "இராணுவ வீரர்கள் இருக்கும்போது நகரம் அழகாகத் தெரியும்" என அவர் குறிப்பிட்டார். ஊடக சந்திப்பில் வழக்கமான பாணியில் ட்ரம்ப் பல ஆச்சரியமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். 'Gulf of Mexico' என்ற பெயரை 'Gulf of Trump' என மாற்றப்போவதாக கிண்டலாகத் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hells Angels) மோட்டார் சைக்கிள் குழுவான இவர்களைப் பாராட்டிய ட்ரம்ப், "அவர்கள் எனக்கு வாக்களித்தனர்" என்றார். தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், அதற்கு ஈடாக கிரீன்லாந்தை (Greenland) வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்காவில் பணவீக்கம் இல்லை என அவர் வாதிட்டார் (இருப்பினும் புள்ளிவிவரங்கள் விலைவாசி உயர்வையே காட்டுகின்றன). கடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தான் தோற்கவில்லை எனவும், அந்தத் தேர்தல் திருடப்பட்டது எனவும் மீண்டும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த ஊடகச் சந்திப்பைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் (Davos) நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்க ட்ரம்ப் புறப்பட்டுச் சென்றார். https://www.virakesari.lk/article/236572 - ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.