24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
கருத்து படங்கள்
- யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது https://athavannews.com/2026/1460463- வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்!
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? அனுர மீட்டர் அப்டேட்! கொள்கை உறுதிமொழி கண்காணிப்பு முயற்சியான வெரிட்டே ரிசர்ச்சின் “அனுர மீட்டர்” இன் அண்மைய புதுப்பிப்பானது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் கலவையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது. புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, 2025 நவம்பர் நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வாக்குறுதிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. அதே நேரத்தில் ஒன்பது வாக்குறுதிகளில் எந்த முன்னேற்றமும் பதிவு செய்யப்படவில்லை. ஒரு வாக்குறுதி தோல்வியுற்றதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. “அனுர மீட்டர்”, ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் இருந்து பெறப்பட்ட 30 முக்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது. இந்த மதிப்பீட்டில் 2026 தேசிய பட்ஜெட் வரையிலான முன்னேற்றங்கள் அடங்கும். டித்வா சூறாவளியின் தாக்கத்திற்கு முன்பே இந்தப் பகுப்பாய்வு முடிக்கப்பட்டது. கண்காணிக்கப்பட்ட வாக்குறுதிகள், அவற்றின் உயர் மட்ட பொது நலன் மற்றும் தேசிய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவை பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கியது. தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சியை Manthri.lk பராமரிக்கிறது. முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கண்காணித்த “மைத்ரி மீட்டர்” மற்றும் “கோட்டா மீட்டர்” போன்ற முந்தைய உறுதிமொழி கண்காணிப்பு திட்டங்களை அனுர மீட்டர் பின்பற்றுகிறது. தற்போது கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில், ஏழு வாக்குறுதிகள் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நம்பும் மேலதிக வாக்குறுதிகளை பரிந்துரைக்குமாறு பொதுமக்களுக்கும் இந்த தளம் அழைப்பு விடுத்துள்ளது. Manthri.lk என்பது இலங்கையின் ஒரே நாடாளுமன்ற கண்காணிப்பு தளமாகும், மேலும் இது நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1460479- ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து. 21 பேர் உயிரிழப்பு.
ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து. 21 பேர் உயிரிழப்பு. தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ் என்ற இடத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. அதிவேக ரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி, பக்கத்து தண்டவாளத்தில் மோதியதாக ஸ்பெயினின் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சமயத்தில் ஹுயெல்வா நோக்கி எதிர்த் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது. குறித்த விபத்தில் சுமார் 73 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez), நாடு பாரிய துக்கத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் அந்த ரயில்களில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் ஸ்பெயினின் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1460418- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .- Today
- அறிமுகம்
வணக்கம் கல்யாணசுந்தரம். வருக. 🙏 உங்களை அன்புடன் வரவேற்பதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். 🙂- அறிமுகம்
அனைவருக்கும் இனிய வணக்கம் , யாழ் அரிச்சுவடி பகுதியில் அறிமுகம் ஆகிறேன் . தமிழ்நாடு சென்னையிலிருந்து இனி பயனுள்ள கவிதைகளை படைப்பதில் மகிழ்கிறேன் .- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
உண்மைதான். பைத்தியர், ஒத்தை ரோசா, பார்சிறி, 3xஅனுரகாவடிகள் என எம்மக்கள் தெரிவு அபாராம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாக்கு வங்கியை குறிவைத்துல்ளனர். பைத்தியர் - protest vote அனுரகாவடிகள் - அனுர சின்ன காவடிகள் +protest vote ஒத்தை ரோசா - இன்னும் தமிழீழ கனவில் இருக்கும் ஒத்தை ரோட்டு வாக்குவங்கி சிறி - இவர் கிட்டதட்ட தமிழ்நாட்டு பாணி. எந்த கொள்கையும் இவருக்கு வாக்கு போட காரணம் அல்ல. மாறாக கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் யாழ் எதிர்ப்புவாதம், ஊழல் கசிவு, அரசவேலை என தனக்கான இடத்தை தக்க வைக்கிறார். கட்சியில் ஏனையவை இவர் அளவுக்கு ஊழல் இல்லை எனிலும் - அவர்களின் சுத்து மாத்து வெளிச்ச அளவு இவருக்கு வெளிக்கவில்லை😂. ஆனால் ஒற்றுமைக்காக என்ன விலையும் கொடுக்க முடியுமா? சுமன், சிறி, கஜன், பைத்தியர்… இந்த தலைமுறையின் அத்தனை அழுக்குகளும் அரசியலில் இருந்து கழுவபடவேண்டியவர்கள். அப்போதுதான் ஒற்றுமை சாத்தியமாகும்.- மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா!
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா! பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை! written by admin January 18, 2026 மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா – பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அமைச்சர், பிரதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு ஆண்டுதோறும் நடத்தும் வடமாகாண தைப்பொங்கல் விழா- 2026 இவ் வருடம் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கேதீஸ்வரம் திருக்கோயில் மூன்றலில் இன்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை காலை நடை பெற்றது. வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் அழைக்கப் பட்டதோடு, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர்,கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எச். உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியளவில் வடக்கு மாகாண கல்வி. அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்த தோடு அழைக்கப்பட்ட ஏனைய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சம்பிரதாய பூர்வமாக புதிர் எடுக்கும் நிகழ்வுகள் திருக்கேதீஸ்வரம் மாளிகைத் திடலில் இடம்பெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் சம்பிரதாய பூர்வமாக திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு ஆழைத்து வரப்படுவதுடன் அங்கு விசேட நிகழ்வு தொடர்ந்து இடம் பெற்றது. மேலும் பொங்கலைச் சிறப்பிக்கும் வகையில் மன்னார் மாவட்ட கலை மன்றங்களுக்கான ஆற்றுகை பொருட்களும், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணப் பொருட்களும் வழங்கப்படமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/226770/- தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
நண்பருடன்(இலங்கை) தொலைபேசியில் உரையாடினேன். நான்:- என்னப்பா அனுராவுடன் செல்பி எடுக்க போட்டியாமே? நண்பர்:-ஒம் ஓம் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் அடிபட்டு செல்பி எடுக்கினம். நான்:-சனம் செல்பி எடுக்க அனுரா காணிகளை எடுக்க போகிறாரே நண்பர்:- இப்ப சனம் அனரா வந்து தோளில் கையைப் போட்டவுடன் காணி போனாலும் பரவாயில்லை எப்படியும் செல்பி எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.- 🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு
🍔 TGI Fridays இன் 16 கிளைகள் மூடப்படுகின்றன – 456 ஊழியர்கள் வேலை இழப்பு written by admin January 18, 2026 ஐக்கிய இராச்சியத்தில் (UK) உள்ள பிரபல அமெரிக்க உணவகச் சங்கிலியான TGI Fridays, தனது 16 கிளைகளை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இது பிரித்தானியாவின் வர்த்தகத் துறைக்கு (High Street) மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. நிர்வாக சிக்கல்கள் காரணமாக எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவினால், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். எஞ்சியுள்ள 33 கிளைகள் ஒரு புதிய மீட்பு ஒப்பந்தத்தின் (Rescue deal) மூலம் தொடர்ந்து இயங்கும். இதன் மூலம் சுமார் 1,384 பணியாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது. TGI Fridays-ன் பிரித்தானிய கிளைகளை நிர்வகித்து வந்த ‘லிபர்ட்டி பார் அண்ட் ரெஸ்டாரன்ட்’ (Liberty Bar and Restaurant) குழுமம் நிதி நெருக்கடியால் நிர்வாகிகளிடம் (Administrators) ஒப்படைக்கப்பட்டது. வாடிக்கையாளர் வருகை குறைவு, அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இம்முடிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மூடப்பட்டவற்றில் மின்னார், எடின்பர்க், ரீடிங், ஸ்டீவனேஜ் மற்றும் காவென்ட்ரி உள்ளிட்ட 16 நகரங்களில் உள்ள கிளைகள் இதில் அடங்கும். Tag Words: #TGIFridaysUK #RestaurantClosures #UKHighStreet #HospitalityNews #JobLosses #Administration #RetailCrisis #UKNews2026 https://globaltamilnews.net/2026/226780/- கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
கிறீன்லாந்து ரம்லான்டாக மாறணும்.- தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
யாழ்பாண தமிழ் வெகுசனங்களிடம் எங்கள் தெய்வம் அநுரகுமார திசாநாயக்க சாதரணமாக வீதியில் நடந்து போகின்றதே என்று வாக்கிங் போவதை சொல்லி பெருமைபடுகின்ற மாற்றம் தான் வந்திருக்கின்றது அய்யா- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
என்ன வாத்தியார் திருப்பதிக்கே லட்டா? போன தேர்தலிலேயே அவரை தூக்கி எறிய ஆயத்தம். ஆனால் மனிசன் 25000-30000 வாக்குகளை இறுக அணைத்தபடி உள்ளாரே?- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
சரி பிழைக்கு அப்பால்…. புலம்பெயர் புஸ்வாணங்கள் என்ன குத்தி முறிந்தாலும்…. தமிழரசு கட்சியின் அதிகாரம் மிக்க குழுக்கள் எல்லாமும் சுமனிடமே என்பதுதான் உண்மை. கட்சியில் ஆதரவு இல்லை எனில் எப்போதோ சுமனை தூக்கி கடாசி இருப்பார்கள். சும்மா புலம்பாமல் - முடிந்தால் சுமனை கட்சியால் வெளியேற்ற பாருங்கள். பார் விவகாரம் வெளிவரக்கூடாது என்பதால் பார் சிறி அனுரவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்த விவகாரத்தில் அவரே கட்சியை விட்டு தூக்கி அடிக்கப்படக்கூடும். இதுதான் கட்சி தலைவர் என சொல்லி கொள்ளும் “செயலற்ற தலைவர்” பார் சிறியின் தலைமைதுவ இலட்சணம்😂. ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திறமையும் இல்லாத ஈழத்து மிக்சர் மாமா தான் பார் சிறி.- கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
எந்த ஆதாரமோ, முகாந்திரமோ இல்லாத கூற்று. தம்பரின் கருத்து அப்படியே ஒப்புவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்து நேட்டோவின் அங்கம். அதை சீனா தொட்டால் அமேரிக்கா உட்பட முழு நேட்டோவையும் தொட்டதுக்கு சமன். அப்படியும் சீனா கிரீன்லாந்த்தை தொடுமாயின் - அது அமெரிக்காவிடம் இருந்தாலும் தொடும். தம்பர் முதல் டேர்மில் நேட்டோவை உடைக்க பார்த்தார். நேட்டோ தலைவர்கள் சரி நாமும் 3% ஜிடிபியை பாதுகாப்புக்கு செலவழிக்கிறோம் என்றதும் - அவரால் அதை சாட்டி நேட்டோவை உடைக்க முடியவில்லை. இப்போ கிரீன்லாந்தை ஆக்கிரமித்து அதன் மூலம் நேட்டோவை உடைக்க முயல்கிறார். பாதுகாப்பு கனிம வளம் டிரம்பின் குடும்பத்துக்கு பணம் இவை எவையும் அல்ல கிரீன்லாந்தை கேட்க காரணம். ஒரே காரணம் நேட்டோவில் இருந்தும் பயனில்லை எனும் நிலைக்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி, அதன் மூலம் நேட்டோவை உடைப்பது மட்டுமே. கனடாவை மாநிலம் ஆக்குவோம் என்ற கதையும் இந்த நோக்கிலேயே. இதன் பின்னால் இருப்பது முழுக்க, முழுக்க புட்டின் தம்பருக்கு கொடுத்துள்ள ஏவல். இதுவரை ரஸ்யா எதிர்ப்பு, உக்ரேன் பாதுகாப்பு என இருந்த நேட்டோ, ஈயூ நாடுகளை - கிரீன்லாந்தின் பாதுகாப்பு, நேட்டோவின் எதிர்காலம் என யோசிக்க வைத்துள்ளார் புட்டின், தம்பர் வாயிலாக. கார்னி ஒரு படி மேலே போய் சீனாவை கட்டியணைத்தே விட்டார்.- Yesterday
- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
புரிந்து கொண்டேன் அண்ணா. எனது பதில் ஓம்.- கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
அடிடா புடிடா எண்டு போன ஜேர்மன் வீரர்கள்.....போன அதே வேகத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கினமாம்... அமெரிக்கா இல்லை என்றால் ஜேர்மனிக்கு முதுகெலும்பு இல்லாத பீலிங் எப்பவும் இருக்கும்.- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வெனிசுலாவின் ஆட்சி முறையை எதிர்த்து பொருளாதார தடைகளை விதித்தவர்களில் ஐரோப்பியர்களும் அடங்குவர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தல டொனால்ட் ரம்ப் அவர்கள்.- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
அன்று தலைவர் போட்டு வாறன் பிள்ளையள் என்று சொன்னதும்..... இன்று. அனுர போட்டு வாறன் என்று சொல்வதும் நம்மவர்களின் ஒற்றுமையின் சிகர சொப்பனம். https://youtu.be/f8unFNmNYzw?si=yeTSgHnult2bSgMR- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா? நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கோஷன் அராலியிலும் பொன்னாலையிலும் நடக்கும் வேலைகளின் அடுத்த கட்டம் என்பதைக் கூறினேன் அராலியில் குழி வெட்டப்பட்டுள்ளது அதைக் கட்டி முடிக்க வேண்டும் பொன்னாலையில் பிளாற் மட்டுமே போட்டப்பட்டுள்ளது . கொமட் பொருத்த வேண்டும் ......அவர்கள் பிடித்துச் செல்வதற்காக வெள்ளிரும்பு குழாய்கள் இணைக்க வேண்டும்...... இதைத்தான் அடுத்த கட்டம் என்று நான் கூறியது- கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
அமெரிக்க இராஜாங்கத்தின் உள் மனதிற்குள் இருந்த திட்டங்களை டொனால்ட் ரம்ப் அவர்கள் வெளியே கொண்டு வருகின்றார் என நான் நினைகின்றேன். பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் வளர்ச்சி என்பது அமெரிக்காவின் சர்வதேச அதிகாரத்திற்கு பெரிய இடையூறாக இருக்கின்றது. உதாரணத்திற்கு எண்ணை உற்பத்தி நாடுகளின் ஈரோ நாணய நாட்டங்கள். பிரச்சனைகள் எங்கேயோ இருக்க..... தேவையில்லாத இடங்களில் நின்று சண்டை பிடிக்கும் நிகழ்வுகள் இன்று நேற்றல்ல. அன்று தொடக்கம் நடக்கும் நிகழ்வுதான்.... இதை எம்மவர்களின் குடும்ப சண்டைகளிலும் நன்கு அவதானிக்கலாம். நிற்க.... அமெரிக்க ஆதிக்கத்தையும் ரஷ்ய ஆதிக்கத்தையும் மாறி மாறி கடிந்து கொள்பவர்கள்.....கறையான் போல் உலகையே அரித்துக்கொண்டுவரும் சீன ஆதிக்கத்தை கண்டு கொள்வதில்லை. சொல்ல வருவது சீனாவின் பட்டுச்சாலை திட்டம். இன்றைய காலத்தில் சீனாவின் பொருளாதார ஆதிக்க விளைவுகளை உலகின் சகல நாடுகளும் அனுபவிக்கின்றன.சீனாவின் ஒரு சில மூலப்பொருட்கள் இல்லையெனின் ஐரோப்பாவின் பல தொழிற்சாலைகள் முடங்கு நிலைக்கு வருவது நல்ல உதாரணம். கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதை எதிர்த்தால் நாளை சீனா வந்து கையகப்படுத்தும். அதை யாரிடமும் எங்கேயும் எதிர்ப்புகளை காட்ட முடியாது.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இன்னும் ஒரு மலசல கூடத்தை கட்டும் காசு இருப்பில் உள்ளதா? குறைந்த பட்சம் ஒவ்வொரு கூடத்துக்கான காசை சேர்த்த பின் ஆரம்பிப்போமா? இல்லாட்டில் வேலை அரைகுறையில் நிற்க வேண்டி வரலாம் - அல்லது ஏலவே பங்களித்தோர் மீள அளிக்க வேண்டி வரும், ஏராளன், ஏனையோரும் கருத்தை பகிரவும்.- அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
அரியநேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க, ஜோசவ் பரராஜசிங்கத்தின் நினைவு கூரல் கூட்டத்திற்கு அரியநேந்திரனை அழைத்தமைக்காக நீங்களும் சுமந்திரனால் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக கூறுகிறார்களே, அதெப்படி? முதலில் உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது, பின்தான் காரணம் தேடிக் கண்டுபிடிப்பதா? அரசியல் அறிவு, ஒழுக்கம் இல்லாதவர்களின் செயற்பாடு இப்படித்தான் இருக்கும். கட்சிக்காகவே மக்கள் என்பது இவர்களின் முட்டாள்த்தனமான வாதம். கட்சி உறுப்பினர் யாவரும் சேர்ந்து, சுமந்திரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சி கூடுவோமென போராடுங்கள், இல்லையேல் எல்லோரும் கட்சியை விட்டு வெளியேறுங்கள். எப்படியிருந்தாலும் சுமந்திரன் உங்கள் எல்லோரையும் வெளியேற்றி வீட்டைப்பூட்டி திறப்பை எடுப்பார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பதே கேள்வி. அவருக்கு இந்தப்பணியை பூர்த்தி செய்யச்சொல்லி அமர்த்தியவர்கள் இப்போ அரசியலில் கேள்விக்குறியாக உள்ளார்கள். இப்போ அறிவற்ற சுமந்திரனின் நிலைதான் தொங்குபொறி! - யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.