24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு
முடிசூட்டப்படாத ஆட்சியாளர் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் தாயைப் பிரிந்து தந்தையிடம் வந்து நான்கு வருடங்களே ஆகியிருந்தன. இருபது வயதியிலேயே ஒரு அரசனுக்கு தேவையான தகுதிகள் அனைத்தையும் பெற்றிருந்தான். ஆயுத பயிற்சியை சத்ரியர்களின் காலன் எனப் பெயர் பெற்றிருந்த பரசுராமிடம் பயின்றான். வேத வேதாந்தங்களை வஸிஷ்டரிடமும் சுக்ரரிடமும் கற்றான். தந்தையிடம் வந்தவுடன் இளவரசனாக அடுத்த அரசனாக அறியப்பட்டான். இருந்தும், அவனது தந்தை சத்யவதியை திருமணம் செய்துகொள்ள வேண்டி அரியணையும் திருமணமும் தேவையில்லை என சபதம் பூண்டு “பீஷ்மர்” என பெயர் பெற்றான். அவனது தந்தை சந்தனு இறந்தபொழுது, அவனது தம்பிகளான சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் இருவரும் வயதில் மிக சிறியவர்களாக இருந்ததால் பல வருடங்கள் அவர்களுக்கு பதில் பீஷ்மரே அரசாண்டார். சித்ராங்கதனுக்கு உரிய வயது வந்தவுடன் அவனை அரசனாக்கினார். ஆனால் , கந்தர்வர்களுடனான போரில் அவன் இறக்க, விசித்திரவீர்யன் மன்னன் ஆனான். ஆனால், அவனும் விரைவில் இறந்துவிட வாரிசு இல்லாமல் தவித்தது இராஜ்ஜியம். எதிரிகளிடம் இருந்து அரசை காப்பாற்ற, பீஷ்மர் மீண்டும் அரசாங்கத்தை வழி நடத்தினார். அவர் யோசனைப்படியே, குழந்தை இல்லா இரு விதவைகளும் வியாசர் மூலம் பாண்டு மற்றும் திருதராஷ்டிரனை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் பட்டம் கட்டும் வயது வரும்வரை பீஷ்மரே ஆட்சியை வழிநடத்தினார். அரியணையில் அமராமலே பல வருடம் ஆட்சி அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. திருதராஷ்டிரன் பார்வையற்றவனாய் இருந்ததால், இளையவனான பாண்டு அரியணை ஏறினான். இருந்தும், அவன் பெற்ற சாபத்தினால், அரச பதவியை துறந்து, தனது மனைவியர் குந்தி மற்றும் மாத்ரியுடன் கானகத்தில் குடியேறினான். இந்த நேரத்தில், அரசை வழி நடத்தும் பொறுப்பு மீண்டும் பீஷ்மரின் தோள் மேலே. அவரது வாழ்நாளிலே அவர் நிம்மதியாக இருந்த காலம் குறைவே. தந்தையிடம் வந்து சேர்ந்ததில் துவங்கி, இரத்த சொந்தங்களிடையே நடைபெற்ற கோர குருஷேத்திர யுத்தம் வரை அவர் பார்த்தது துரோகங்களும், பகையுமே. இருந்தும், அவை எதுவும் அவரை பாதிக்கவில்லை. எப்படி தன்னில் எந்த அசுத்தம் வந்து சேர்ந்தாலும் அவற்றால் களங்கமடையாமல் புனிதமாய் தூய்மையாய் அவரது அன்னை கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாளோ அது போன்றே வாழ்ந்தார் பீஷ்மர். சமாதான தூது துருபதன், பாண்டவர்களின் சார்பாய் பேச தூதுவனாக ஒரு பிராமணனை அனுப்பினார். நன்கு கற்று தேர்ந்த அந்த பிராமணன், கௌரவர்களின் சபைக்கு வந்தபொழுது பீஷ்மர், விதுரர் மற்றும் திருதராஷ்டிரனால் வரவேற்க பட்டு கௌரவிக்கப்பட்டார். “இந்த அவை அறிவாளிகளாலும், சிறந்த மனிதர்களாலும் நிரம்பியுள்ளது. இந்த இராஜ்ஜியமானது கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருவருக்கும் சொந்தமானது. பாண்டவர்கள் ஆட்சி செய்த சமயத்தில், தங்களது பிரதேசத்தை முன்னேற்ற கடுமையாக உழைத்தனர். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். சூதாட்டத்தின் மூலம் அநியாயமாக அவர்களது இராஜ்யம் பறிக்கப்பட்டது. இருந்தபொழுதும், நிபந்தனையை ஏற்று பதிமூன்று ஆண்டுகள் வனத்தில் கழித்தனர். இப்பொழுது, அந்த பதிமூன்று ஆண்டுகாலம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு சேர வேண்டிய அவர்களது இராஜ்யத்தை உடனடியாக திருப்பித் தருமாறு அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு போரில் விருப்பமில்லை என்றாலும் நீங்கள் யுத்தம்தான் வேண்டும் என்றால் அவர்கள் பக்கத்தில் பல பலசாலி அரசர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அர்ஜுனனுக்கு உதவியாய் பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் அவர்கள் பக்கத்தில் உள்ளார். எனவே , இங்கே உள்ள சிந்திக்கத் தெரிந்த பெரியவர்கள் துரியோதனனுக்கு நல்லவற்றை எடுத்துக் கூறி பாண்டவர்களின் இராஜ்ஜியத்தை திருப்பித் தர செய்வீர்களாக!” என தான் வந்த காரியத்தை எடுத்துக் கூறினார் அந்த பிராமணர். “பாண்டவர்கள் நலமாக இருப்பதும், அவர்கள் பக்கத்தில் பலம் அதிகம் இருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இருப்பது அவர்களுக்கு நன்மையே. நீங்கள் தூதுவராக இங்கு வந்தாலும், உங்கள் பேச்சில் அது எதிரொலிக்கவில்லை. நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தைகள் நேரடியாக, மிகக் கூர்மையாக இருந்தன. அதிகப்படியான கஷ்டத்திற்கு உள்ளானலும் தர்மத்தை பாண்டவர்கள் எந்த நாளும் கைவிடவில்லை. அவர்களுக்கு அவர்கள் இராஜ்யத்தை மீண்டும் அளிப்பதே…” என பீஷ்மர் பேசிக் கொண்டு இருக்கையிலேயே கர்ணன் இடைமறித்தான். “இதற்கு ஒரு முடிவே இல்லையா? துரியோதனனை மிரட்ட முயற்சிக்க வேண்டாம். அவர்கள் பக்கத்தில் மத்ஸ்ய மற்றும் பாஞ்சால அரசர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், அவர்கள் வனவாச நிபந்தனையை மீறினார்கள். அவர்கள் தலைமறைவு காலம் முடியும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் மீண்டும் வனவாசம் சென்று அதன்பின் சாதாரண பிரஜைகளாக வாழ வேண்டும்.” இதைக் கேட்ட பீஷ்மர் கோபத்துடன் “ராதேயா! உன் முட்டாள்தனமான பேச்சை நிறுத்து. இந்த பிராமணரின் பேச்சை கேக்காவிடில், துரியோதனனுக்கு அழிவு நிச்சயம்!” என்றார். இதைத் தொடர்ந்து அவையில் பெரும் குழப்பமும், கூச்சலும் ஏற்பட, திருதராஷ்டிரன் குறுக்கிட்டான். “ராதேயா! தூதுவரிடம் இப்படி பேசுவது முறையாகாது” என்று கர்ணனை பார்த்துக் கூறியவர், அந்த தூதூதுவரிடம் “ஓ தூதுவரே! அரசவையில் நாங்கள் கூடி பேசிய பிறகு எங்கள் முடிவை என் தூதுவனான சஞ்சயன் மூலம் சொல்லி அனுப்புகிறேன் என பாண்டவர்களிடம் தெரிவிப்பாயாக!” என கூறினான். மத்ஸ்ய தேசத்துக்கு திரும்பிய அந்த பிராமணர் நடந்ததை உள்ளபடி பாண்டவர்களுக்கு எடுத்துக் கூற, அவர்களும் சஞ்சயனுக்காக காத்திருக்கத் துவங்கினர். https://solvanam.com/2025/10/12/முடிசூட்டப்படாத-ஆட்சியா/- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பய பக்தியோடு சாமி கும்பிட்டு (மன்னிப்பு கேட்டு கொண்டு) கோயில் உண்டியலில் கடமையை செய்யும் திருடர்கள்..- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு இன்று புள்ளிகள் கிட்டவில்லை. அமெரிக்காவின் தயவில் 2 கிட்டும் 😃- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்கு (ம்) 3 முட்டை. வீட்டை மீட்டு கொண்டேன் 😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது நடந்து விட்டது. மிகப் பெரிய வெற்றி சிம்பாப்வேக்கு.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
உங்கள் ஊரில் இப்படி செய்த இயக்கம் எது? உங்கள் வாழ்ந்த அனுபவத்தினை ந்நாஅன் மறுக்க முடியாது கூடாது, ஆனால் எனது அனுபவத்தில், அறிந்த மட்டில் புலிகளோ, 1987 க்கு முந்திய ஈபியோ சின்ன களவுகளுக்கு மரண தண்டனை வழங்கியதாக அறியவில்லை. இப்படியானவர்களை பொது இடங்களில் கட்டி வைத்து அடித்தார்கள், நான் கள்ளன் என அறிவிப்பு கழுத்தில் கட்டினார்கள். இவை பல உதயன், முரசொலியில் செய்தியாக வந்தன. ஆனால் மரண தண்டனை, இராணுவ, அரசியல் காரணங்களுக்காகவே அரங்கேறின என்பது என் அனுபவம். நான் அறியவில்லை என்பதால் நடக்கவில்லை என்றாகாது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நெதர்லாந்து (அமெரிக்கா) ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.- Today
- அகில இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
இந்த அணிக்கு பாராட்டுக்கள். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியும் முன்னர் உதைபந்தாட்டத்திற்கு பெயர் போனதாக இருந்தது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@நிலாமதி அக்கா இந்த ஒரு வெற்றி போதும். இது சாதாரண வெற்றி அல்ல. இந்த தொடரையே நீங்க வென்றதற்கு சமம். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ஆனையிறவு களத்தை புலிகள் கைப்பற்றியது போல உள்ளது.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இவையெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டதே எவருக்கும் தெரியாது எமது ஊரில் வீடு உடைத்து களவு செய்பவர் என ற குற்றச்சாட்டுகள் எழுதி அவர் மீது ஒட்டி கொலை செய்யப்பட்டார். சுட்டவரை கண்டவர்களும் உள்ளார்கள். சுட்டவரும் ஊராருக்கு அறிமுகம் ஆனவர்தான். ஆனால் அந்த நேரம் இவையெல்லாம் தவறோ சரியோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. 1983 -1985 ல் இவாறான கொலைகள் பல நடந்தன. இன்று பெயர் விபரங்கள் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. அவரவர் அந்தந்த ஊராருக்கு மட்டும் ஞாபகம் இருக்கும். 1986 என்று நினைக்கிறேன் ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்று ஒரு விவரணத்தில் இந்த செயற்பாட்டை ஆவணப்படமாக வெளியிட்டு கண்டித்திருந்தது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தோற்க இருந்த ஐக்கிய அமீரகம் வெற்றி பெற்று விட்டது. நிலாமதி அவர்களின் இன்றைய நல்ல காலத்தினால் எனக்கு 2 புள்ளிகள்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்கு இரண்டாவது முட்டை!!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று எல்லாப் போட்டிகளிலிலும் எனக்கு முட்டைகளோ 😳- நீதிபதியாகும் கேரளாவின் முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்
பாராட்டுக்கள் நீதி தேவதைக்கு- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- அகில இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
விளையாட்டு வீராங்கனைகளுக்கும் பயிற்றுனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் ........! இணைப்புக்கு நன்றி கந்தப்பு ......!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாப்வே தாதாக்களை இறக்கியது போல், யூ ஏ ஈ, நெதர்லாந்து சண்டியரை இறக்க வேண்டி வரும்.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
உதாரண வழக்குகள் எல்லாம் சிங்களவர் மீது பொலிஸ் சுட்ட நிகழ்வுகள். தமிழர் என்பதால் ஏதாவது நாயை சுட்ட வழக்கு இருந்தால் - அதுதான் செல்லுபடியாகும்😂. நான் அறிய காட்டி கொடுத்தோர், அரசியல் எதிரிகள்தான் இப்படி கொலை செய்யப்பட்டனர். கோழி, நகை கள்ளர் இப்படி சுட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏதேனும் ஆவணப்படுத்த பட்டுள்ளதா? உண்மை. சாவில் கூட அரசியல் பார்த்துத்தான் இந்த உலகம் நிலை எடுக்கும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்த வீட்டை விடமுடியாது- அகில இலங்கையில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
தெற்கில் ஜேவிபி ஆட்சிக்கு வந்த பின் போதை பொருள் மாபியா என பலரை போட்டு தள்ளிய போது, களை எடுப்பு என்று ஆதரித்தோர்…இது அனைவருக்கும் நடக்க அதிக காலம் செல்லாது என நான் எச்சரித்ததை கண்டு கொள்ளவே இல்லை. இனி மாடு பிடிக்கிறான், கண்டு பிடிக்கிறான் என கண்ட மேனிக்கு சுடுவார்கள் போல் உள்ளது. இந்த கொலைக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் ஜனாதிபதியால் ஒரு நேரடி விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை? இப்போது புரிகிறதா ஏன் அத்தனை அடியையும் வாங்கி கொண்டு யாழ்களத்தில் ஜஸ்டின் அண்ணா போன்றோர் fact checking செய்கிறார்கள் என்பது. தமது அரசியல் எதிரிகள் என்பதால் யாழில் மீண்டும், மீண்டும் சுமந்திரன், கருணாநிதி மீது பொய் தகவலைகளை (உண்மையான தகவல்களை சொல்ல இல்லை) தெரிந்து கொண்டே பரப்புவதும் இந்த வகையே. மொத்தத்தில் ஒட்டு மொத்தன் இனத்தையும் பொய்யை நம்பும் மூடர் கூட்டம் ஆக்கி விடுவோம். - சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.