Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. ⚖️ கெஹெலிய பணமோசடி வழக்கு – தொழிலதிபருக்கு விளக்கமறியல்! adminJanuary 30, 2026 இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குத் தொடர்புடைய 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிரடி விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் ஜி.எம். நிஹால் சிசிர குமார எனப்படும் தொழிலதிபர் ஆவாா். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 30 மில்லியன் ரூபாயை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கையாண்டு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாற்றியதாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 (1) (b) இன் கீழ் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக இவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் பெப்ரவரி 10-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஏற்கனவே தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த நிதி மோசடி விவகாரமும் அவர் மீதான பிடியை முறுக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நிஹால் சிசிர குமார ஊடாக முன்னெடுக்கப்பட்ட 30 மில்லியன் ரூபாய் பரிமாற்றம் ஒரு ஆரம்பப்புள்ளி மட்டுமே என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) கருதுகிறது. இது போன்ற இன்னும் பல ‘நிழல்’ பரிமாற்றங்கள் அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளதா என விசாரணை தீவிரமடைந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணம் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து சர்வதேச காவல்துறையினாின் (Interpol) உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிரான ‘சுத்திகரிப்பு’ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த கால அமைச்சர்களின் பல நிதி விவகாரங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. https://globaltamilnews.net/2026/227935/
  3. Today
  4. காலணி உற்பத்தியில் உலகளாவிய மையமாக தமிழகத்தை மாற்ற திட்டம். தமிழகத்தை உலகளாவிய காலணி உற்பத்தியின் மிக முக்கிய மையமாக மாற்றும் நோக்கில், இத்தாலி பல்கலைக்கழகத்துடன் கோத்தாரி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. காலணி உற்பத்தியில் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இத்தாலியின் புகழ்பெற்ற ‘இத்தாலியன் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட் அண்ட் டிசைன்’ பல்கலைக்கழகத்துடன், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் ஜின்னா ரஃபீக் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். இதன்மூலம் தோல் அல்லாத காலணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 17 சதவீத வரி தற்போது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, கடந்த 6 மாதங்களில் அமெரிக்க வரி விதிப்புக்கு பின் இந்தியாவுக்கு வரவேண்டிய ஏராளமான முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தோனேஷியாவுக்கு சென்றுவிட்டன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தால் மீண்டும் பிரபல நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன. தற்போது கோத்தாரி நிறுவனம் பெரம்பலூரில் ‘கிராக்ஸ்’ பிராண்டு காலணிகளை தயாரித்து வரும் நிலையில், கரூரில் ‘அடிடாஸ்’ பிராண்டுக்கான பிரம்மாண்ட உற்பத்தி ஆலையை கட்டி வருகிறது. மேலும், கோவையைச் சேர்ந்த ‘ஜோடிஸ்’ மற்றும் ‘சீட்லோ’ பிராண்டுகளை கையகப்படுத்தியுள்ள கோத்தாரி நிறுவனம், அடுத்தகட்டமாக 70 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள சர்வதேச பிராண்டான ‘கிக்கர்ஸ்’ நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது.ஒரு இந்திய நிறுவனம் சர்வதேச பிராண்டின் உரிமையை மட்டும் பெறாமல், அந்த நிறுவனத்தையே உரிமையாளராக முழுமையாக கையகப்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும், காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை தயாரிப்பதற்காக உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து பெரம்பலூரில் ஒரு பிரத்யேக மூலப்பொருள் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் சில்லறை வர்த்தகத்தில் உள்ள 2,500 விற்பனை நிலையங்களை 6 ஆயிரமாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இப்பணிகளின் மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழகம் உலக அளவில் காலணி உற்பத்திக்கான பெரிய இடமாக மாறியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் கோத்தாரி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.முத்துமோகன் உடனிருந்தார். https://athavannews.com/2026/1462271
  5. கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை! கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (29) அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்படும் நாடுகளுக்கு எதிரான தனது அழுத்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். தேசிய அவசரகால பிரகடனத்தின் கீழ் நிர்வாக உத்தரவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எந்தவொரு கட்டண விகிதங்களையும் குறிப்பிடவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க இராணுவம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஒரு கொடிய தாக்குதலுடன் கைது செய்தது. இந்த துணிச்சலுடன் ட்ரம்ப், கியூபாவிற்கு எதிராக செயல்படுவது மற்றும் அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து பலமுறை பேசியுள்ளார். கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் தீவு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, கியூபா மீது ஒரு ஒப்பந்தத்தை கட்டாயப்படுத்த வொஷிங்டனுக்கு எந்த தார்மீக அதிகாரமும் இல்லை என்று கியூபாவின் ஜனாதிபதி இந்த மாதம் கூறினார். ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் வெளியுறவுக் கொள்கை கருவியாக வரி அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1462256
  6. பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா! இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிரிட்டிஷ் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் விதிகளை தளர்த்த சீனா ஒப்புக்கொண்டது. இது லண்டன் தனது சேவைத் துறையை விரிவுபடுத்த உதவும் என்று நம்பும் ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். பிரிட்டிஷ் குடிமக்கள் 30 நாட்களுக்குள் பயணம் செய்தால் விசா இல்லாமல் சீனாவிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஸ்டார்மர் கூறினார். இது வணிகத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர் வர்ணித்தார். விசா ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும் என்பதற்கான திகதி எதுவும் உறுதியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது விரைவில் நடக்கும் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்புகிறது. தேசிய புள்ளிவிவர அலுவலக தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் சுமார் 620,000 பேர் சீனாவுக்குப் பயணம் செய்துள்ளதால், இலட்சக்கணக்கான பிரிட்டிஷ் மக்கள் இந்த மாற்றத்தால் பயனடையக்கூடும். இதேவேளை, பிரதமர் ஸ்டார்மரின் இந்தப் பயணத்தின் போது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பெய்ஜிங்குடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால், இங்கிலாந்து விஸ்கி மீதான இறக்குமதி வரிகளை 10% இலிருந்து 5% ஆகக் குறைப்பதற்கான ஒப்பந்தமும் ஏற்பட்டது. எவ்வாறெனினும், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் மனித உரிமைகள் பதிவுக்கு ஆபத்து இருப்பதால், சீனாவுடன் இங்கிலாந்து மிகவும் எச்சரிக்கையான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் வாதிட்டனர். https://athavannews.com/2026/1462249
  7. அன்னாருக்கு அஞ்சலிகள் , உறவை பிரிந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  9. இலச்சினை,அடையாளங்கள் ஏதுமில்லாமல் பணிகளை தொடரலாம் என்பது என் கருத்து.விளம்பரங்கள் இப்போதைக்கு தேவையுமில்லை.காலம் இருக்கிறது. அனுபவங்கள் வரும். அதன் பின் அத்திவாரங்களை போடலாம். எனக்கு ஏராளன் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்தான் என் அத்திவாரம். மிகுதியை காலம் போக போக பார்க்கலாம்.
  10. அந்தந்த நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஈ-கேட் பாவிக்கலாம் என நினைக்கின்றேன். அதே போல் ஐரோப்பிய ஒன்றிய நாட்டு வட்டத்திற்குள் உள்ளவர்களும் இதே முறையை தங்கள் ஒன்றிய நாடுகளுக்குள் பாவிக்கலாம்.
  11. இலங்கை தமிழ் பகுதிகளில் சிங்கள கட்சிகளுக்கும் இன்றைய ஜனாதிபதி அனுரவிற்கும் ஏகோபித்த ஆதரவு இருக்கின்றது. எனவே.....? 😎
  12. Yesterday
  13. இன்று உலகில் நடக்கும் மூன்றில் இரண்டு பங்கு போர்களுக்கு இங்கிலாந்தின் அன்றைய நரிக்குணங்களே காரணம்.அந்த போர்,வறுமை காரணங்களால் மூன்றாம் உலக நாட்டு மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதி எனும் பெயரில் படை எடுக்கின்றார்கள்.. "தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்"
  14. அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான்,ஈராக்,லிபியா,சிரியா மீதான அதிரடி இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரான் நல்ல பாடமும் அனுபவமும் பெற்றிருக்கும் என நினைக்கிறேன்.
  15. கம்யூனிசமே தளர்ந்து மேலைத்தேய கொள்கைகளை கடைப்பிடிக்கும் நிலைக்கு வந்து கொண்டிருக்கும் போது....... ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தமது அரசியல் கொள்கைக்காக பல பிரச்சனைகளை நனைச்சு சுமக்கின்றார்கள். உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்கின்றது என கதறினார்கள். வெனிசுலாவை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது மௌனமானார்கள்.கிரீன்லாந்தை அமெரிக்கா அபகரிக்க திட்டமிடும் போது குய்யோ முய்யோ என வெளியே சத்தம் வராத அளவிற்கு முனகுகின்றார்கள்.
  16. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஈழத்தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளை நம்பி வாக்களித்தார்கள். தமிழர் கட்சிகளை நம்பி வாக்களித்தார்கள்.ஒவ்வொரு விடுதலை இயக்கங்களையும் நம்பி அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இன உரிமை விடுதலைக்காக கழுத்தில் இருந்த பொன்னையும் கழட்டி கொடுத்தார்கள்.பலர் சொந்த மண்ணையும் கொடுத்தார்கள். எல்லாம் தாம் தம் சுதந்திர பூமியில்.....சுதந்திரமாக ஏனைய மனித இனங்களைப்போல் வாழ வேண்டும் என்பதற்காக.... இறுதியில் ஒற்றை இயக்கமாக நின்று தனி மண்ணை தம்மால் ஆள முடியும் நிர்வகிக்க முடியும் என சாதித்து காட்டியவர்களுக்காக ஈழ மக்கள் தம்மையும் இழந்தனர். எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான ஈழத்தமிழ் மக்களுக்கு மீண்டும் பதவி எனும் அகோரப்பசி கொண்ட தமிழ் கட்சிகள் இதுவரைக்கும் எதை செய்து கிழித்தார்கள் என்பதை உங்களால் விபரித்து சொல்ல முடியுமா? அனுர கட்சி புதிய கோணத்தில் ஆட்சி செய்யப்போவதாக ஈழத்தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார்க. மக்களும் புதியவர் என்பதால் நம்பினார்கள். இன்றும் நம்புகிறார்கள். நம்ம தம்பி......பெயர் வருகுதில்லை.....அதுதான் சாவச்சேரி டாக்குத்தர் தம்பி. அவரையும் புது ஆள் எண்டு போட்டு கொழும்புக்கு அனுப்பினால்......?😭 இனவாத சிங்களம் மதத்தை வைத்து மட்டுமே தன் இனத்தை வளர்த்தெடுக்கின்றது. அதே போல் ஈழத்தமிழனும்......👈
  17. உண்மையில் இன்னும் நான் அதை நேரடியாக ஆரம்பிக்கவில்லை. வேலையிடத்தில் எதிர்பாராத ஒரு இழப்பு ஏற்பட்டதால் அனேகமான வேலைச்சுமைகள் என் தலையில் வீழ்ந்து விட்டது. மீண்டு வர பல நாட்கள் எடுக்கலாம் என நினைக்கின்றேன். சுடுது மடியை பிடி என அவசரப்படாமல் ஆறுதலாக சென்றால் நினைத்த இலக்கை அடையலாம் என்பது என் கருத்து. இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.
  18. பலாலி முகாம் ஆட்லறி செல்களை இயக்கம் மண்டதீவை தாக்கியபோது மட்டுமே யாழ்நகர் பக்கம் ஏவியது நினைவில் உள்ளது. ஆனால் தென்மாராட்சி பக்கம் அடிக்கடி ஆட்லறி அனுப்பி உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
  19. தெகிவல/கல்கிசை பக்கம் நிலாப்டீன் மீது தற்கொலை தாக்குதல் நடாத்தப்பட்டு அதில் அவர் தப்பித்தார். பத்திரிகை செய்தி பார்த்த ஞாபகம். பல்கலைக்கழகம் என்ன பாடசாலை என்ன தமிழ்-சிங்களம் என்று வந்துவிட்டால் சிங்கள மாணவர்கள் துவேசம்தான்.
  20. சீனாவும் அமெரிக்கா போல பொருளாதாரத்தினை ஆயுதமாக்கும் நாடுதான், அவுஸ்ரேலியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் சீனாவில் தங்கியிருக்கின்ற நிலையில் அவுஸ்ரேலிய முன்னால் பிரதமர் ஸ்கொட் மொரிசன் எனும் பிரதமர் சீனாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார் (அவர் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டவர், நாடே பற்றியெரிந்த போது உல்லாச பயணம் சென்று மாட்டிக்கொண்டவர்) அதற்கு பதிலளிக்க சீனா அவுஸ்ரேலிய பொருள்களின் இறக்குமதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்த்து (எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்).
  21. இந்தியா இரஸ்சிய எரிபொருளை வாங்குவதற்காக இந்த 500% வரி விதிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், இது ஒரு இந்திய பொருளாதாரத்தின் நெகிழ்வு தன்மையினை பரிசோதிக்கும் முயற்சி, அத்தியாவசிய மற்றும் பழக்க வழக்க பொருள்கள் தவிர்ந்த பெரும்பாலான இந்திய ஏற்றுமதி பொருள்களை ஆடம்பர பொருள்கள் எனும் வகைக்குள் அடக்கலாம், அவ்வாறாயின் Price Elasticity of Demand (PED) ஒன்றிற்கு அதிகமானது. Price Elasticity of Demand (PED)=% Change in Quantity Demanded / % Change in Price இந்திய பொருள் உற்பத்தியாளர்களினால் இந்த வரி விதிப்பினை தாங்க முடியாத நிலை ஏற்படும், பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருள்களுக்கு சாதகமான சூழலை எதிர்பார்க்கும் நிலையில் (நான் அறிந்த வரை எந்த நிறுவனமும் இந்தியாவிலிருந்து வெளியேறியதாக தெரியவில்லை) இவ்வாறான முடிவு அமெரிக்காவினால் ஏற்படுத்தப்படும் போது இந்த முதல் காலாண்டு உற்பத்தி பெறுபேறுகள் இந்திய உற்பத்தித்துறையின் நெகிழ்வுத்தன்மையினை வெளியிடும். இந்த சவாலை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என பொருந்திருந்து பார்க்கவேண்டும்.
  22. இந்தியா 500% வரி விதித்தால் என்ன நடக்கும்? இன்றைய ஃபின்ஷாட்ஸில், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 500% வரி விதித்தது பற்றிய நமது முந்தைய கதையின் தொடர்ச்சியை எழுதுகிறோம். ஆனால் இந்த முறை, இந்தியா அதைத் தாங்க முடியுமா என்பது பற்றியது அல்ல. இது மிகவும் சங்கடமான கேள்வி: அமெரிக்கா இதைச் செய்ய முடியுமா? ஆனால் நாங்கள் தொடங்குவதற்கு முன், வணிகம் மற்றும் நிதித்துறையில் பரபரப்பைத் தொடர்ந்து பெற விரும்பினால், 5 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களால் விரும்பப்படும் ஃபின்ஷாட்ஸ் கிளப்பில் குழுசேர்ந்து சேர மறக்காதீர்கள். ஏற்கனவே சந்தாதாரரா அல்லது இதை செயலியில் படித்துக்கொண்டிருக்கிறீர்களா? எல்லாம் தயாராகிவிட்டது. கதையை ரசித்து மகிழுங்கள்! கதை அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்தபோது, ஏற்றுமதியாளர்கள் தங்கள் தொழிலைக் காப்பாற்ற இரண்டு வழிகள் இருந்தன: அவற்றின் விளிம்பைக் குறைத்து தொகுதிகளைப் பாதுகாக்கவும், அல்லது விளிம்பு மற்றும் வெட்டு அளவுகளைப் பாதுகாக்கவும் வரி குறைப்பு என்பது ஏற்றுமதி விலைகளைக் குறைப்பதாகும், இதனால் வரி விதிக்கப்பட்ட பின்னரும் கூட, இந்தியப் பொருட்கள் அமெரிக்காவில் போட்டித்தன்மையுடன் இருக்கும். ஆனால் 50% வரி என்பது நீங்கள் சாதாரணமாக தள்ளுபடி செய்யக்கூடிய ஒன்றல்ல. அதை முழுமையாக ஈடுசெய்ய, ஏற்றுமதியாளர்கள் விலைகளை மூன்றில் ஒரு பங்கு குறைக்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்களுக்கு, குறிப்பாக மருந்துகள், பொறியியல் பொருட்கள் மற்றும் ரசாயனங்களில், அதாவது விலைக்கு அல்லது அதற்குக் கீழே விற்பனை செய்வதாகும். விலைகளை நிலையாக வைத்திருப்பதும், அமெரிக்காவிலிருந்து தேவை குறையும் என்பதை ஏற்றுக்கொள்வதும்தான் மாற்று வழி. அதுதான் நடந்தது. கீல் நிறுவனத்தின் அறிக்கையின்படி , வரி விதிக்கப்பட்ட பிறகு இந்திய ஏற்றுமதியாளர்கள் விலைகளைக் குறைக்கவில்லை. மாறாக, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது 18-24% குறைந்துள்ளது, அதே நேரத்தில் விலைகள் மாறாமல் உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவிற்கு கணிசமாகக் குறைவான பொருட்களை அனுப்ப வேண்டியிருந்தாலும், இந்திய நிறுவனங்கள் லாப வரம்புகளைப் பாதுகாக்கத் தேர்ந்தெடுத்தன. மேலும் அந்தத் தேர்வு நமக்கு முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. இந்த வரி இந்திய ஏற்றுமதியாளர்களை "கட்டணம் செலுத்த" கட்டாயப்படுத்தவில்லை. இதன் பொருள் முந்தைய அதே விலையில் குறைவான இந்திய பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தன. இது வெளிப்படையான கேள்வியை எழுப்புகிறது: ஏற்றுமதியாளர்கள் வரியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், யார் ஏற்றுக்கொண்டார்கள்? அமெரிக்கப் பிரச்சினை உண்மையில் அங்குதான் தொடங்குகிறது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி வகைகளில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் துறையைக் கவனியுங்கள். எங்கும் நிறைந்த ஐபோனை விட சிறந்த உதாரணம் என்ன? ஆப்பிள் இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தியை அதிகரித்து வருகிறது. உண்மையில், கடந்த ஆண்டு தான், இந்தியாவில் 40 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை அசெம்பிள் செய்து, அவற்றை பெருமளவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இந்த ஆண்டு, அதை 80 மில்லியனாக விரிவுபடுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் . இப்போது நீங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அடிப்படை மாடல் ஐபோன் 17 ஐப் பார்க்கும் ஒரு அமெரிக்க நுகர்வோர் என்று கற்பனை செய்து பாருங்கள். ஐபோனின் விலை $800. இறக்குமதி வரி இல்லாமல், சில்லறை விற்பனையில் நீங்கள் தோராயமாக $800 செலுத்துகிறீர்கள். இந்தியாவில் தற்போது 50% இறக்குமதி வரி உள்ளது, அதாவது ஆப்பிள் (அல்லது இறக்குமதியாளர்) அந்த தொலைபேசியில் கூடுதலாக $400 செலுத்த வேண்டும். அந்த விலை உங்களுக்கும் கடத்தப்படலாம், மேலும் $800 மதிப்புள்ள சாதனம் சுமார் $1,200 ஆகலாம். இது குறிப்பிடத்தக்க வகையில் அதிக விலை கொண்டது - சிறந்ததல்ல, ஆனால் சில தீவிர ரசிகர்கள் இன்னும் ஆப்பிளை கடிக்கக்கூடும். இப்போது, 500% வரி விதித்தால், 800 டாலர் மதிப்புள்ள ஐபோன் அமெரிக்க கடைகளில் விற்பனைக்கு வரும்போது, 4,800 டாலர்களுக்கு விற்கப்படும்! ஒரு மடிக்கணினியின் விலைக்கு இணையான ஒரு சாதனம் இப்போது பயன்படுத்தப்பட்ட காரின் விலைக்கு இணையானதாக மாறும். அதே தொலைபேசிக்கு எந்த அமெரிக்கரும் ஆறு மடங்கு விலை கொடுக்கப் போவதில்லை என்று நாம் பாதுகாப்பாகக் கருதலாம். "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட" ஐபோன்களுக்கான தேவை ஒரே இரவில் மறைந்துவிடும். எனவே ஆப்பிள் உற்பத்தியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் இன்னும் 30% அமெரிக்க இறக்குமதி வரியை எதிர்கொண்டாலும், சீனா வெளிப்படையான பின்னடைவாக மாறுகிறது, இது $800 தொலைபேசியை தோராயமாக $1,040 ஆக உயர்த்துகிறது. வியட்நாம் அல்லது மெக்சிகோ போன்ற பிற இடங்களும் உதவக்கூடும், குறைந்த அடிப்படை கட்டணங்கள் விலைகள் $880 ஐ நெருங்குவதால் இது உதவும். ஆனால் இந்த தீர்வு ஒரு விலையைக் கொண்டுள்ளது. அமெரிக்க சந்தைக்காக உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றுவதன் மூலம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே ஆப்பிளின் முழு உத்தியாகும். 500% வரி அந்தத் திட்டத்தை அழிக்கிறது. இது ஆப்பிளை மீண்டும் சீனாவை நோக்கித் தள்ளுகிறது அல்லது அமெரிக்க உற்பத்தியை மிகவும் விலை உயர்ந்ததாக மாற்றுகிறது. இறுதியில், அது ஒரு பொருட்டே அல்ல. இந்தியாவை போட்டியற்றதாக மாற்றுவது உற்பத்தியை வீட்டிற்கு கொண்டு வராது. இது விலைகளை உயர்த்துகிறது, விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கிறது, மேலும் அமெரிக்க நுகர்வோரை மோசமாக்குகிறது. பிறகு, ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையைப் பற்றிப் பேசலாம். சூரத்தில் வைரங்களை தரம் பிரிக்கும் ஒரு கைவினைஞர் உலகின் 10 வைரங்களில் 9 ஐ பதப்படுத்துகிறார். உண்மையில், ரத்தினங்கள் மற்றும் நகைகள் அமெரிக்காவிற்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாகும், இது கடந்த ஆண்டு மொத்தம் $9 பில்லியனுக்கும் அதிகமாகும் . எனவே இந்திய வைரங்களுக்கு 500% வரி விதிக்கப்பட்டால், நிச்சயதார்த்த மோதிரங்களை வாங்கும் அமெரிக்க நகைக்கடைக்காரர்கள் மற்றும் தம்பதிகளுக்கு என்ன நடக்கும்? திடீரென வெட்டப்பட்ட ஒரு இந்திய வைரத்திற்கு அமெரிக்க சுங்கத்தில் 500% வரி விதிக்கப்பட்டால், இறக்குமதியாளருக்கு அதன் விலை ஐபோன் காட்சியைப் போலவே ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு அமெரிக்க வாங்குபவருக்கு $5,000 விலையில் விற்கப்படும் ஒரு மோதிரம் வரிகளுடன் $30,000 வரை உயரக்கூடும். உண்மையில், அத்தகைய ஒரு பொருள் இறக்குமதி செய்யப்படவே மாட்டாது. அமெரிக்காவில் உள்ள நகைக்கடைக்காரர்கள் வேறு இடங்களிலிருந்து பொருட்களை வாங்க வேண்டும் அல்லது மிகக் குறைந்த சரக்குகளை சேமித்து வைக்க வேண்டும். ஆனால் அவர்களால் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முடியுமா? ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இருக்கலாம். பெல்ஜியம் மற்றும் இஸ்ரேல் போன்ற பிற வைர மையங்கள் உள்ளன, ஆனால் அந்த வைரங்களில் பல இன்னும் இறுதியில் இந்தியாவில் பதப்படுத்தப்படுகின்றன அல்லது அதிக விலை கொண்டவை. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்கள் ஒரு மாற்றாக இருக்கலாம். அவற்றில் சில ஏற்கனவே அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் அது ஒரு சிறப்பு அம்சமாகும். அதிக வரி விதிப்பின் உடனடி விளைவு அமெரிக்காவிற்குள் வரும் வைரங்களின் எண்ணிக்கை குறைவாகவும், வரும் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும். நகைகளுடன் சந்தர்ப்பங்களைக் கொண்டாடும் அமெரிக்கர்கள் அதை கணிசமாக அதிக விலை கொண்டதாகக் காணலாம் அல்லது சிறிய கற்களுக்குத் திருப்தி அடையலாம். இதுவரை, நாம் பௌதீகப் பொருட்களைப் பற்றிப் பேசினோம். ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி பௌதீகப் பொருட்கள் அல்ல. அது சேவைகள். சிலிக்கான் வேலி தொழில்நுட்ப ஜாம்பவான்கள் முதல் வால் ஸ்ட்ரீட் வங்கிகள் வரை, அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வணிகங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு இந்திய திறமைகளை பெரிதும் நம்பியுள்ளன. இந்தியாவின் $190 பில்லியனுக்கும் அதிகமான மென்பொருள் மற்றும் ஐடி சேவைகள் ஏற்றுமதியில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவிற்கு செல்கின்றன. நிச்சயமாக, பொருட்கள் போன்ற இறக்குமதி வரிகளுக்கு சேவைகள் நேரடியாக உட்பட்டவை அல்ல. ஒரு ஆலோசனை திட்டத்திற்கு நீங்கள் "500% வரி" விதிக்க முடியாது. ஆனால் அமெரிக்க-இந்திய உறவுகள் வர்த்தகப் போரின் அளவிற்கு மோசமடைந்தால், அது இந்தத் துறையிலும் பரவும் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். உதாரணமாக, அமெரிக்க அரசாங்கம் நிறுவனங்களை வேலைகளில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுக்கலாம் அல்லது அவுட்சோர்சிங் மீது புதிய வரிகள் / விசா கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பொருட்களைத் தாண்டிய பரஸ்பர நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் என்ன நடக்கும்? அமெரிக்க நிறுவனங்கள் மலிவு விலையில், திறமையான தொழிலாளர்களின் பரந்த தொகுப்பை அணுகுவதை இழக்கும், மேலும் இந்திய வல்லுநர்கள் இலாபகரமான வாய்ப்புகளை இழப்பார்கள். உலகளாவிய திறன் மையங்களை (GCCs) கருத்தில் கொள்ளுங்கள் . இவை அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஐடி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பின்-அலுவலகப் பணிகளைக் கையாள அமைக்கும் கேப்டிவ் அலுவலகங்கள் ஆகும். இந்தியாவில் இந்த GCC களில் 1,700 க்கும் மேற்பட்டவை உள்ளன , அவை சுமார் 1.9 மில்லியன் மக்களைப் பணியமர்த்துகின்றன, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க நிறுவனங்களுக்கு. இந்த மையங்கள் அமெரிக்க நிறுவனங்களின் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, பெரும்பாலும் 24 மணி நேர சேவைகளையும் வழங்குவதால் உள்ளன. புவிசார் அரசியல் பதற்றம் அல்லது புதிய வர்த்தக தடைகள் நிறுவனங்கள் இவற்றைக் குறைக்க நிர்பந்தித்தால், அந்த வேலைகள் அனைத்தும் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்ல வழிவகுக்காது. இது பெரும்பாலும் செயல்பாடுகளை அதிக விலை கொண்டதாகவும், நிறுவனங்களுக்கு குறைந்த செயல்திறன் கொண்டதாகவும் மாற்றும். AI உதவியுடன், அவர்கள் அதிகமாக தானியங்கிமயமாக்கலாம் அல்லது சில மையங்களை மற்ற நாடுகளுக்கு மாற்றலாம், ஆனால் அந்த மற்ற இடங்கள் இந்தியாவின் அளவு அல்லது திறமைக்கு பொருந்தாமல் போகலாம், ஏனெனில் நமது திறமைக் குழு மிகப்பெரியது. இது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல. இந்திய தொழிலாளர்களும் இந்த வேலைகளால் கணிசமாக பயனடைகிறார்கள். இந்தியாவில் கூகிள், மைக்ரோசாப்ட் அல்லது சிட்டி வங்கி அலுவலகத்தில் பணிபுரிவது பெரும்பாலும் உள்ளூர் நிறுவனங்களை விட சிறந்த ஊதியம் மற்றும் பணிச்சூழலைக் குறிக்கிறது. ஒரு வகையில், இந்த சேவை ஏற்றுமதிகள் இரு தரப்பினருக்கும் வெற்றியைத் தருகின்றன. அவை அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையை அளிக்கின்றன, மேலும் இந்திய நிபுணர்களுக்கு உலகளாவிய வெளிப்பாட்டை வழங்குகின்றன. இந்த சினெர்ஜியை சீர்குலைப்பது இரு தரப்பினரையும் பாதிக்கிறது. இந்தியாவிற்கு அவுட்சோர்சிங் செய்வது அமெரிக்க அலுவலகங்கள் அதிக மதிப்புள்ள பணிகளில் கவனம் செலுத்தவும் (மேலும் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை அனுபவிக்கவும்) அனுமதித்துள்ளது என்றும் ஒருவர் வாதிடலாம், அதே நேரத்தில் வழக்கமான குறியீட்டு முறை அல்லது ஆதரவு வெளிநாடுகளில் செய்யப்படுகிறது. திடீரென்று இவை அனைத்தும் கடலுக்குள் செய்யப்பட வேண்டியிருந்தால், அமெரிக்க நிறுவனங்கள் போதுமான திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் சிரமப்படலாம் அல்லது அதிக தொழிலாளர் செலவுகளைச் சந்திக்க நேரிடும், இது இறுதியில் விலையுயர்ந்த மென்பொருள் அல்லது சேவைகள் மூலம் அமெரிக்க நுகர்வோருக்குக் குறையக்கூடும். அப்படியானால், அமெரிக்கா இந்தியாவை இழக்க முடியுமா? மேற்கூறியவற்றின் அடிப்படையில், 500% வரி விதிப்பு மூலம் இந்தியாவை பொருளாதார ரீதியாக முடக்கும் எந்தவொரு முயற்சியும் அமெரிக்காவிற்கே கணிசமான வலியை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. அமெரிக்க நுகர்வோர் ஸ்மார்ட்போன்கள் முதல் நகைகள், பொதுவான மருந்துகள் வரை பல அன்றாடப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதைக் காண்பார்கள். அமெரிக்க நிறுவனங்கள் ஒரு முக்கிய விநியோகத் தளத்தையும் திறமையாளர் குழுவையும் இழக்கும், இது அவர்களின் போட்டித்தன்மையைப் பாதிக்கும். மேலும் மூலோபாய ரீதியாக, ஆசியாவில் விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்தலுக்கு அமெரிக்காவிற்கு நம்பகமான கூட்டாளிகள் தேவைப்படும் நேரத்தில் இந்தியாவை ஒதுக்கித் தள்ளுவது பின்வாங்கக்கூடும். இந்தக் குடியரசு தினத்தன்று, இந்தியா தனது இறையாண்மையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் கொண்டாடுகிறது. அந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதி அமெரிக்காவுடனான நல்ல உறவுகளிலிருந்து வருகிறது - அது பொருட்களைப் பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும் சரி அல்லது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதாக இருந்தாலும் சரி. இது பல தசாப்த கால நம்பிக்கை மற்றும் பரஸ்பர நன்மையின் மூலம் கட்டமைக்கப்பட்ட உறவு. 500% வரி விதிப்பு இரு தரப்பினருக்கும் ஆபத்தை விளைவிக்கும். இறுதியில், வர்த்தகம் என்பது வெறும் எண்களைப் பற்றியது அல்லது பொருட்களைப் பற்றியது மட்டுமல்ல, உறவுகள் மற்றும் நம்பகத்தன்மையைப் பற்றியது. இந்த இழப்பு-இழப்பு சுழலுக்குப் பதிலாக, தர்க்கரீதியான பாதை பேச்சுவார்த்தை மற்றும் சமரசம் ஆகும். https://finshots.in/archive/part-2-what-will-happen-if-india-gets-a-500-tariff/
  23. அவுஸ்ரேலிய ஜப்பான் நாணய இரட்டையினை வாங்கி வைத்திருந்தேன், தொடர்ச்சியாக விலை அதிகரித்த வண்ணம் உள்ளது, கடந்த வார இறுதியில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டது ஆனால் கடந்த வாரம் 400 புள்ளிகள் மொத்த அதிகரிப்பு ஏற்பட்டு பின்னர் அதில் 180 புள்ளிகள் வரை இறக்கம் ஏற்பட்டது. அமெரிக்க டொலர் சரிவினை சந்தித்துக்கொண்டுள்ள நிலையில் ட்ரம்பின் அறிவிப்பால் டொலரினை தன்னால் விலை ஏற்றவும் முடியும் இறக்கமுடியும் என கூறிய நிலையில் அமெரிக்க நாணயம் சரிவினை தொடர்ந்தது (தலையீடு) பின்னர் அமெரிக்க கருவூல செயலாளர் டொலர் விலையில் தலையீடு இல்லை என அறிவித்த பின்னர் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. தற்போது அமெரிக்க பங்கு சந்தை பணச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவுஸ்ரேலியாவின் கனிம ஏற்றுமதி அமெரிக்க டொலரில் செய்யப்படுவதால் அவுஸ்ரேலிய பணம் சரிவினை சந்திக்கலாம், ஆனாலும் இந்த அமெரிக்க பங்கு சந்தை சரிவிற்கு என்ன காரணம் என தெரியவில்லை ((தனிய Technical analysis மட்டுமே சரிவிற்கான காரணமாக உள்ள நிலையில்) அதனால் எனது வர்த்தகத்தினை வார இறுதி வரை தொடர முடிவு செய்துள்ளேன் (வெள்ளிக்கிழமை பங்கு சந்தை மீண்டும் உய்ரவ்டையலாம் எனும் அடிப்படையில்).
  24. நீண்ட காலமானதால் மறந்து போயிருக்கலாம், பலாலியில் இருந்து எறிகணைத்தாக்குதல் நடைபெற்றது, ஆனால் ஒரு குறிப்பிட்ட நிகழ்விற்கு பின்னராக என்பதாக நினைவுள்ளது.
  25. ஜேர்மன் அதிபரும், ஐரோப்பிய ஒன்றிய ஆணையரும் கூறும் விடயங்களை பார்க்கும் போது மேலே கூறிய விடயம் உண்மையாகிவிடுமோ என தோன்றுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.