24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலையில் அந்த மக்கள் இப்போது. சுதந்திரம் என்று கூவிக்கொண்டு போனவர்கள், அந்த மக்களை அந்தர வழியில் அம்மோ என்று விட்டு வெளியேறிவிட்டார்கள் தங்கள் வேலை முடிந்தவுடன். ட்ரம்பும் நெதன்யாகுவும் பதவி விலக வேண்டுமென அவர்களது மக்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இதையே எத்தனை நாளைக்கு அறுந்த இசைத்தட்டு போல சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். ஈரானிய மொத்த சனத்தொகை எவ்வளவு? அதில் எத்தனைபேர் வந்து அமெரிக்காவிடமும் இஸ்ரயேலிடமும் தமக்கு சுதந்திரம் பெற்றுத்தர கேட்டார்கள்? எத்தனைபேர் காமெனியின் இறப்பை வீதிக்கு வந்து கொண்டாடினார்கள். ஏன் ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றினால் அமெரிக்காவில் மக்கள் கூடி கொண்டாட மாட்டார்களா? வடகொரியாவிடமும்தான் அணுஆயுதம் இருக்கிறது. தன்னை யாராவது தாக்கினால் தான் அதை பாவிப்பேன் என்கிறது. அதில் பிழை எதுவும் இல்லையே! ஈரானிடம் அணுஆயுதமே இல்லை. பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கத்தான் போர் என்கிறது அமெரிக்கா. ஏன் அது உலகில் வேறு யாரிடமும் இல்லையா! தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு நாடு அதை உருவாக்குவதில் என்ன தவறு கண்டீர்கள்! இதில உக்கிரேனுக்கு ரஷ்யா அடித்ததற்கு கூப்பாடு வேறை!! சுதந்திரம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று கூவிக்கொண்டு போர் தொடுத்த ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேனும் பாலும்தான் ஓடுகிறதா!!
-
கறையான் புற்று
சரியான காசு தான்.... ஆதலால் தான், கை பொருத்தினாக்கள் குறைவோ, என்ன?
- Today
-
கறையான் புற்று
சந்தேகம் சின்னதாக இருந்தாலும் தொகை பெரிது. 35,000 யூரோ
-
கறையான் புற்று
பகிர்வுக்கு நன்றி... சின்ன சந்தேகம்: ஒரு கை செய்ய 30,000-35,000 யூரோ வா இல்ல 35000 ரூபாய் ஆ ஐயனே
-
கறையான் புற்று
நன்னிச்சோழன், இது யாழ் 28 அகவைக்காக எழுதியது. “வெண்புறா’ திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பயண அனுபவங்களை 2015இல் பொங்கு தமிழில் எழுதியிருந்தேன். இப்பொழுது அந்தத் தளம் இல்லை. கிருபன் அவற்றை யாழ் இணையத்தில் பதிந்து வைத்திருக்கின்றார். அதற்கான லிங்கை கீழை இணைத்திருக்கின்கேன்
-
களைத்த மனசு களிப்புற ......!
repSodsntofafclg325il477h 29hh2f4fith621m0umm1f2titihml0fi1l · தோனி என்னடா பண்ணினார் தோனி என்னடா செஞ்சார் என்று எல்லோரும் கேட்கிறார்கள் இன்னிக்கி தோனி இல்லனா இந்தியா உலகத்துல இப்படிப்பட்ட இடத்தில் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் தொடர்ந்து உலக கோப்பை போட்டிகளில் தோல்வியே பெற்று வந்த இந்திய அணி கபில்தேவ் க்கு பிறகு முதன்முதலாக உலக கோப்பையில் முத்தமிட வைத்தவன் அவன் அதன்பின் ரோகித் சர்மாவும் இறுதிவரை சென்று கடைசி கட்டத்தில் தவறவிட்டார் ஆனாலும் அதற்கு இணையான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 என்ற இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்த அவர் இந்தியாவின் தோனிக்கு பிறகு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் இப்படி இரண்டு சாம்ராஜ்யத்தின் கீழ் உருவான இந்த இந்திய அணி இப்போது இன்னொரு கோப்பையை வெல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது தோனி இருந்தால் கண்டிப்பாக அந்த போட்டி ஜெயிக்கும் அதற்கு அவர் களத்தில் இருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் கிடையாது. மைதானத்தில் இருந்தாலே போதும் தோனி என்பது வெறும் பெயரல்ல அது ஒரு மந்திரம் ஆனால் தோனி மற்றும் ரோகித் என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கும் மிகப் பெரிய ஜாம்பவான் என்றால் அது ஹரியானாவின் சூறாவளி கப்பில் தேவ் அவர் விளையாடிய காலத்தில் நாம் கிரிக்கெட் பார்க்கவில்லை நான் பிறக்கவில்லை என்பதால் அவரின் புகழ் எனக்கு அந்த அளவுக்கு தெரியாமல் போய்விட்டது மூன்று ஜாம்பவான்களுக்கும் வெற்றி வணக்கத்தை இந்திய அணி இந்த கோப்பையை வென்று கொடுக்கும் MS Dhoni.....!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும். பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கறையான் புற்று
பகிர்வுக்கு நன்றி கவி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றிபெற்றநியூபலன்சுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் போட்டியை திறம்படநடத்திய கிருபன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.நான் கோசானின் வீட்டை ஆட்டையைப்போடுவன் எண்டு எனக்கு எப்பவோ தெரியும். @goshan_che- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் என்பது எதுவரை ....... ஜெமினி & சந்திரபாபு ......படம் : பாதகாணிக்கை .......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே ஆண் : அடி செவ்வாழையே…. யே……. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் ஆண் : இளம் பூஞ்சோலையே…… உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்......! --- ஆத்தாடி பாவாட காத்தாட ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் நியூபலன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ......! அவரைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் பாராட்டுக்கள் .......! முதலில் இது போன்ற போட்டிகளை திறமையாக நடத்திவரும் கிருபனுக்கு பாராட்டுக்கள் . .....! இப்போட்டியில் அவருக்கு பக்கபலமாய் நின்ற செம்பாட்டானுக்கும் நன்றிகள் ........! பங்குபற்றிய மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் ........! எல்லாவற்றுக்கும் களம் அமைத்துத் தந்த யாழ் இணையத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ......!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றியாளர் நியூபலன்ஸ்சுக்கும் 2வது இடத்தைப்பிடித்த கந்தப்புவுக்கும் வாழ்த்துகள்.போட்டியைத்திறம்பட நடத்திய கிருபன்ஜீக்கும் திரியைத் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தமிழ்நாட்டில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விஷயம் ஒரு குடும்பப் பிரச்சினை. இதைப் பற்றி கருத்து சொல்லும்போது சில சமநிலைப் பார்வைகள் இருக்க வேண்டும். நேரடியாக சட்டம் அல்லது வன்முறை போன்ற பெரிய பிரச்சினையாக இல்லையெனில், ஒரு கணவன்,மனைவி இடையேயான பிரச்சினை பொதுவாக தனிப்பட்ட விஷயம். பொதுமக்கள் முன்னால் அதை வெளிப்படுத்துவது அழகல்ல.. அதனால் பலர்,குடும்ப விஷயம் தனிப்பட்டதாக இருக்க வேண்டும், என்று நினைப்பது இயல்பானது. விஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கலாம். விஜய் தற்போது அரசியலில் இருக்கிறார். அதனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை கூட அரசியல் விவாதமாக மாறுகிறது அல்லது அவரது எதிரிகளால் மாற்றப்படுகிறது. பொதுவாக மக்கள், தலைவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விஷயம் இல்லை. பல தலைவர்களுக்கும் இது நடந்திருக்கிறது. உண்மையில் சங்கீதாவுக்குப் பிரச்சினை இருந்தால் அதை வெளிப்படுத்த அவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தேர்தல் நேரம் போன்ற அரசியல் சூழலில் பொது வெளியில் இதை கொண்டுவருவது அரசியல் தாக்கமா? அல்லது ஒரு பழிவாங்கலா? இன்றைய காலத்தில், சமூக வலைத்தளங்கள் ஒரு விஷயத்தை விரைவாக பெரிதாக்கிவிடும். உண்மை, வதந்தி, ஊகம் எல்லாம் இரண்டரக் கலந்து போய்விடும்.அதனால் வெளியில் வரும் தகவல்களை முழுமையாக உண்மை என்று உடனே நம்பாமல் பார்த்துக் கொள்வது நல்லது.குடும்பப் பிரச்சினைகள் பொதுவாக தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படுவதுதான் சிறந்தது. ஆனால், ஒருவர் பெரிய பொது நபராக இருந்தால் அது பொதுவாக பேசப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இப்படி இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் ஒருவரை மட்டும் குற்றம் சொல்லாமல் இரு தரப்பையும் புரிந்து கொள்ள முயற்சிப்பது தான் சரியான அணுகுமுறை. விஜய் சினிமாவில் இருந்தபோது அவர் ஒரு நட்சத்திரம் மட்டுமே. ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. கமலஹாசனைப் பார்த்தால், அவரது குடும்பப் பிரச்சினை எப்படி என்பது பலருக்குத் தெரியும். அரசியலில் அவர் ஈடுபட்ட போது அவை பேசப்பட்டன. ஆனால் இன்று அது பேசு பொருளாக இல்லை. அவரது அரசியல் ஒரு மையத்துக்குள்ளே அடங்கி விட்டதும் ஒரு காரணம். மற்றது அவர் திமுகவின் கைப்பிள்ளை. விஜய் இன்று அரசியலில் பலமான ஒரு இடத்திலேயே இருக்கிறார். அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இது புதிய விஷயம் இல்லை. பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பேசப்பட்டது. எம்ஜிஆர் பிரபலமான சினிமா நட்சத்திரம். பின்னர் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர். அவரது திருமணம், குடும்ப வாழ்க்கை, மலயாளி போன்றவை பல காலங்களில் அரசியல் விவாதமாக பேசப்பட்டன. அவர் முதலமைச்சர் ஆன பிறகு எல்லாமே காணாமல் போய்விட்டது. இதுவேதான் ஜெயலலிதாவுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, சோபன்பாபுவுடனான உறவு எல்லாம் பேசினார்கள். அவர் ஆட்சிக்கு வந்தபின் அவரை ‘இரும்பு மனுசி’ என்றார்கள். ‘அம்மா’ என்று காலிலும் விழுந்தார்கள். பெண்களுக்கான உரிமை இருக்கிறது. அவர்கள் No என்று சொன்னால் அது Noதான் என்ற நிலை இன்றிருக்கிறது. தனது உரிமைக்காகப் போராடுவது சங்கீதாவின் உரிமை. அவர், தனது மன உளைச்சலுக்கோ, விவாகரத்துக்கோ எப்போதே நீதி மன்றம் போயிருக்கலாம். ஆனால் காத்திருந்து, விஜயை வீழ்த்துவதற்கு எதிரிகளிடம் தேர்தல் நேரத்தில் ஒரு ஆயுதத்தை தூக்கிக் கொடுத்திருக்கின்றார். நிழலி குறிப்பிட்டது போல் 8% வாக்குகள்தான் விஜய்க்கு கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு அதைவிட மேலதிகமாகக் கிடைக்கும் என்பது எனது கணிப்பு.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்க எப்படி ஒரேயடியாக கீழே.- ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இன்று, ஈரான் மக்களின் சுதந்திரத்திற்காக போர் புரியும் இஸ்ரேல், அமெரிக்கா அன்று, எம்மினம் அழியும் போது தடுக்க வேண்டாம் குரலாவது கொடுத்ததா? எங்களை அழிப்பதற்கு ஆயுதம், ஆலோசனை, கடன் அளித்து, இலங்கை புலனாய்வுப்பிரிவினருடன் ஒத்துழைத்து, தகவல்களை அளித்து, நம் விடுதலை இயக்கம் அழிக்கப்படும்வரை உதவியது எவ்வாறு? ஏன் எமது சுதந்திரத்தை தடுத்தார்கள்? அப்போ அவர்களுக்கு தேவையான வளங்கள் நம்மண்ணில் இல்லை, இனிவருங்காலத்தில் இந்துசமுத்திரத்தில் தமது போர்கப்பல்களை நிறுத்த வேண்டுமெனில் அதற்கு இலங்கையரசு அனுமதி மறுத்தால் நமது ஜனநாயகம் பற்றியும் பேசுவார்கள். கடந்த காலங்களில் அரேபிய நாடுகளோடு கூடிக்குலாவும்போது அமெரிக்காவுக்கு இது தெரியவில்லையோ? இப்போ திடீரென்று என்ன கரிசனை வந்தது? அமெரிக்காவின் உண்மை நோக்கம் கண்டு, அவர்கள் விலகிக்கொள்வதால் இல்லாத பொய்களை பரப்புகிறார்கள். லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது? ஒசாமா பின்லேடனை வளர்த்ததே அமெரிக்கா, பின் எப்படி மாறியது? ஏன், அமெரிக்கா, இஸ்ரேலிடம் அணுஆயுதம் இல்லையா? அதையும் அழிக்கவேண்டியதுதானே. வெனிசுலாவை ஏன் இரண்டாக்கியது அமெரிக்கா? அவர்கள் தங்கள் புற்றுக்குள் இருந்தார்கள், அவர்களை வெளியே இழுத்து விட்டதே அமெரிக்காதான். இப்போ ட்ரம்ப் சொல்கிறார், ஈரானில் மத ஆட்சி நடந்தாலென்ன, ஜனநாயக ஆட்சி நடந்தாலென்ன அதுபற்றி கவலையில்லை, ஈரான் எங்களோடு இணைந்து செயற்படவேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார். இங்கே எங்கேயும் அவர் ஜனநாயத்தை பற்றியோ அணு ஆலை பற்றியோ குறிப்பிடவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் ஏற்கனவே என்னை அறிமுகப்படுத்தியிருந்தேன் நான் ஜெர்மன் பிரெமனிலிருந்து நியூபலன்ஸ் .நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, முதல் இடம் பிடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்...............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூபலன்ஸ் மற்றும் கந்தப்பு அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்😍🙏..........................- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப் Mar 9, 2026 - 10:24 AM ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாங்கள் இருவரும் இது குறித்துப் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தமது தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்தால், இஸ்ரேல் மட்டும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர முடியுமா என இதன்போது வினவப்பட்டுள்ளது. அதற்கு பதில் வழங்கிய டிரம்ப், அத்தகைய ஒரு சூழல் உருவாக வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். அதற்கான அவசியம் ஏற்படும் என்று தாம் நினைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, என்ன நடக்கிறது என பார்ப்போம் எனக் கூறி அது குறித்துக் கருத்து தெரிவிக்க டிரம்ப் மறுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், முன்னதாக மொஜ்தபாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்த டிரம்ப், கமேனியின் மகனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். அத்துடன் தமது ஆதரவின்றி தெரிவு செய்யப்படும் தலைவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப் - "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.