24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பச்சை கிளி பாடுது .......படம் : அமரதீபம் ......சிவாஜி & பத்மினி ......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது மயில் அல்லவோ சாயல் தந்தது தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ஹும் பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது ஆண் : இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது நடையழகு ஆண் : நடையழகு நடனம் ஆனது நாலழகும் என்னை வென்றது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன் .......! ..... மானல்லவோ கண்கள் தந்தது .....
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
இந்தச்செய்தியில் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாக இருக்கிறது. இது ட்ரம்பின் போர்த்தந்திரம்.- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
ஒளவை சொன்னவற்றை அறிய தந்தமைக்கு நன்றி எண்கணிதத்தில் இலட்சம் என்று வந்து குழப்பாமல் இருப்பது 👍- Today
- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
கற்பனையும் புனைவும்: இது பலாச்சுளையை தேனில் தோய்த்து சுவைப்பது போன்ற இனிமை உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியதால் எழுந்த கேள்வியா? 🤔 தத்தக்கப் பித்தக்க நாலு கால், தானே நடந்தால் இரண்டுகால், முத்திப் பழுத்தால் மூன்றுகால், பழுத்து விழுந்தால் எட்டுக்கால். இவைகளில் ஒரு பருவம்தான் அவர் உறவே!🤪 28வது யாழ்களத்தின் பிறந்ததினத்தை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்வதை விட்டு தமிழ் வழியில் பல பழங்கள்கொண்ட பஞ்சாமுறுத பிரசாதத்தை உறவுகளுக்கும் ஊட்டிக் கொண்டாடி மகிழ்விக்க விரும்பினேன் சுவியர் அவர்களே! 😁- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்காட் முடிந்தால் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னேயே புதியதாய் அனுப்பிவிடுவார்கள். என பெயரில் வரும் எல்லாக் கடிதத்தையும் எனக்குப் படம்எடுத்து வற்சப்புக்குப் போட்டவருக்கு இது மறந்துபோச்சு. தெரிந்திருந்தால் நானே காட்டைக் குடுத்திருக்கமாட்டேனே. 😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்அதுக்குக் காரணம் இருக்கு அண்ணா. நான் சொல்லி அவர்கள் வேறு ஆளைத் தம்முடன் சேர்த்துக்கொண்டால் அதுகும் இல்லை இதுகும் இல்லை என்றாகிவிடும். அத்தோடு அவர் சிங்களவர். முன்னபின்ன தெரியாது. அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போகும் வரையிலும் நான் உள்ளே போவேனோ மாட்டேனோ என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. சிலவேளைகளில் உப்பிடி இருந்தால்த்தான் பிழைக்கமுடியும். ஆனாலும் அந்தப் பெண்கள் பக்கமே திரும்பாமல் ஓடி வராமல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் வந்தேன். அத்தோடு அன்றுதான் சிங்களவர்கள் மேல் இருந்த ஏதோவொன்று இல்லாமற்போனது. அவர்களுக்குக் கொடுக்காமல் எப்படி?? இம்முறை சிறிய பல விடையங்களைப் பஞ்சியில் எழுதாமல் கடந்திருக்கிறேன் அண்ணருக்கு என்னே ஒரு அன்பு 😂😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கு நன்றி அக்கா நெடுங்காலமா ................. கடந்த ஆண்டும் வந்திருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை.😂- என் பெயர் பூனா (Buna)!
நான் பயணங்களின் போது ரெஸ்டொராண்டுகளில் கஃபே கூர் (கொஞ்சமாய் இருக்கும் , நல்ல கசப்பு ) மற்றும் ஒரு குரோசன் பனிஸ் மட்டும் எடுப்பது வழக்கம் .......இப்ப கோப்பி குடித்துக் கொண்டுதான் இதையும் எழுதுகின்றேன் ......காலையில் மட்டும்தான் கோப்பி மற்றும்படி தேநீர்தான் ......! 😂 நன்றி ஏராளன் .......!- வீதியோரம்.
பரவாயில்லை . ..... கொஞ்சமாவது கிறுக்கல்கள் கிறுக்கி விடுங்கோ ........ வாசிக்க ஆவலுடன் உங்கள் ரசிகர்கள் ......! 😂- மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
நோ . ......அதைக் காட்டில் விடலாம் . ....... அதுவாவது சுதந்திரமாய் திரியட்டும் . .......! 😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
இதென்ன அநியாயமாய் கிடக்கு . ....... உங்கட கார்ட் முடிந்ததற்கு அந்த அப்பாவி மனுஷனை ஏன் ஏசுவான்,கோபப்படுவான் ........ ! 😂- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
வழக்கறிஞர் எப்படி திட்டலாம்? அடுத்து என்ன செய்யலாம் என்றல்லவா யோசிக்க வேண்டும். வரும் நாள் செல்லும்.- ரோஜர் ஓட்டிய விமானம்
ஆஹா . ....அன்று ரேடியோ செய்யப் பட்ட பாடுகளையும் அதன் நுணுக்கங்களையும் விபரமாக விபரித்திருக்கிறீர்கள் ...... நன்றி ஜஸ்ரின் .......! 👍- மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
மலைப் பாம்பைத் தூக்கி உள்ளே போட வேண்டும். ஒராள் இல்லாவிட்டால் ஒராள் மீண்டும் மலைப் பாம்பை ஆட வைக்கலாம்.- ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா
ஓய்வு பெற்றார் யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா 25 Mar, 2026 | 11:19 AM யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து செவ்வாய்க்கிழமையுடன் (24) விடைபெற்றுச் சென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஆகஸ்ட் முதல் இன்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா புதன்கிழமை தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது அகவைக்குள் காலடி பதிக்கிறார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தி, புதிய துணைவேந்தரிடம் பதவியை கையளித்தார். எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி, அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் - எதிர்வரும் செப்ரெம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241878- யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு
யாழில் யானைகள் திட்டமிட்டே கொண்டுவந்து விடப்பட்டுள்ளன - பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவிப்பு 25 Mar, 2026 | 12:35 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார். உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - கேவில் கடற்கரைக்கு வருகை தந்த ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் அங்கு காணப்பட்ட 36 இற்கும் அதிகமான தென்னைகளை நாசம் செய்தன. சம்பவம் தொடர்பாக உரியவர்களுக்கு தெரிவித்தோம். இதுவரை உரியவர்கள் வந்து பார்வையிடவோ, நஷ்ட ஈடு வழங்கவோ இல்லை.. யானைகள் சேதம் ஏற்படுத்திய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இராணுவ முகாம் இருக்கிறது. அவர்களுக்கு யானைகள் வந்தது தெரியவில்லை என்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கின் பெரும் பகுதி அதாவது கட்டைக்காட்டில் இருந்து சுண்டிக்குளம் வரையான பெரும் நிலப்பரப்பு தேசிய பூங்கா என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக வனஜீவராசிகள் திணைக்களகத்தினர் வேண்டுமென்றே இந்த யானைகளை வடமராட்சி கிழக்கு காட்டு பகுதிக்கு கொண்டு வந்து விட்டதாக சந்தேகமாக உள்ளது. யானைகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு முன்னாயத்தம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட குடும்பஸ்தர் யானைகளால் அழிக்கப்பட்ட 36 தென்னைகளுக்கும் இழப்பீடு கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/241887- ரோஜா முள்.
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்காது மணி கட்டிய மாடு சொன்னா தான் கேட்பியோ? என்று காதில பிடித்து தொரதொரவென்று இழுத்து வந்திருப்பா.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
புதுச்சேரி த.வெ.க வேட்பாளர்கள் அறிவிப்பு! தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- வருகின்ற 09.04.2026 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் தோழர்கள், குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். 1. லாஸ்பேட்டை – V.சாமிநாதன் 2. காரைக்கால் தெற்கு – K.A.U.அசனா 3. நெட்டப்பாக்கம் (தனி) – L.பெரியசாமி 4. திருபுவனை (தனி) – AK. சாய் J. சரவணன் குமார் 5. முத்தியால்பேட்டை – J.பிரகாஷ் குமார் 6. பாகூர் – N.தனவேலு 7. ராஜ் பவன் – V.J.சந்திரன் 8. உப்பளம் – S.சிவா 9. உழவர்கரை – S.சசிபாலன் 10. அரியாங்குப்பம் – S.குமரவேலு 11. மணவெளி – B.ராமு 12. வில்லியனூர் – R.ரமேஷ் 13. முதலியார்பேட்டை – N.மணிபாலன் 14. மண்ணாடிப்பட்டு – K.பாரதிதாசன் 15. உருளையன்பேட்டை – S.மரிய பிரான்சிஸ் 16. மங்கலம் – M.K.சத்யா 17. காமராஜ் நகர் – Dr.R.சுமன் 18. நெல்லித்தோப்பு – S.விக்னேஷ்வரன் 19. காலாப்பட்டு – D.சசிக்குமார் 20. இந்திரா நகர் – S.முருகன் 21. கதிர்காமம் – R.ஜெயந்தி 22. ஊசுடு (தனி) – S.சரகணபவா 23. தட்டாஞ்சாவடி – M.பன்னீர்செல்வம் 24. ஏம்பலம் (தனி) – V.தமிழ்ச்செல்வன் 25. நெடுங்காடு (தனி) – U.காமராஜ் 26. திருநள்ளாறு – A.ராஜா முஹம்மது 27. காரைக்கால் வடக்கு – A.வெங்கடேஷ் 28. நிரவி -T.R. பட்டினம் – G.கணேஷ் 29. மாகே – M.பிரிஜேஷ் 30. ஏனாம் – A.தோட்டா ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கழக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1469701- கருத்து படங்கள்
- மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!
மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை! மலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார். மார்ச் 20 அன்று கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு தின அழகிப் போட்டியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் போட்டியாளர் ஒருவர் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான மலைப்பாம்பை பயன்படுத்தியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். விசாரணையில் சந்தேக நபர் புத்தளத்தில் ஒருவரிடம் இருந்து 25,000 ரூபாவுக்கு குறித்த மலைப்பாம்பை வாடகைக்கு எடுத்து, சம்பவம் நடந்த உடனேயே அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இத்தகைய முறையில் மலைப்பாம்பைப் பயன்படுத்துவது, கட்டளைச் சட்டத்தின் பிரிவு 30 (1)(a)-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் நீதிமன்ற எண் 05-இல் முன்னிலைப்படுத்தப்பாட்டார். அங்கு மேலதிக நீதிவான் அவருக்குப் பிணை வழங்கினார். அதேநேரம் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. https://athavannews.com/2026/1469926- ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!
யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று மூன்று நாளில் தெரியும்?- 06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!
06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு! ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் காலத்தில் காணாமல் போன தம்பதியரின் உடல்கள், கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள வெல்லம்பிட்டிய, கம்பிகொட்டுவ பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் இருந்து நேற்று (24) மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமந்த சில்வா ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர். 2020-ஆம் ஆண்டில் அவர்களது உறவினர்களால் குறித்த தம்பதியர் காணாமல் போனதாகப் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணைகளில் எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி செயலகத்திடம் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து, செயலகம் இவ்வழக்கை கொழும்பு குற்றப் பிரிவிடம் ஒப்படைத்தது. சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் இந்திகா லோகுஹெட்டியின் மேற்பார்வையில், பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கு அருகில் வசித்து வந்த ஒரு தம்பதியினரிடம் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தினர். அதையடுத்து, பொலிஸார் சந்தேகத்திற்குரிய தம்பதியினரையும், அவர்களுடன் தொடர்பிலிருந்து மற்றொரு நபரையும் கைது செய்தனர். அவர்களில் இருவர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியிருந்தனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகவும், பெண்ணின் தங்க நகைகள் திருடப்பட்டதாகவும், உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மறைக்கப்பட்டதாகவும் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டபோது, பிரதான சந்தேக நபர் அவற்றை மீண்டும் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2026/1469930- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இன்று (25) வெளியிட்டது. முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில் ஒருவரான, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்தப் பட்டியலை அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, எடப்பாடி கே. பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் கட்சியானது, தனது ஆரம்பகட்ட பட்டியலில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் நத்தம் ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களைத் தக்கவைத்துக் கொண்டது. மேலும், தொண்டமுத்தூர் மற்றும் குமாரபாளையம் தொகுதிகளில் முறையே எஸ்.பி.வேலுமணி மற்றும் பி.தங்கமணி போன்ற முக்கிய மேற்குப் பகுதித் தலைவர்களையும் அது களமிறக்கியது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் அறிவிப்பு இதுவாகும். மேலும் அதிமுகாவின் பல வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்தடுத்த பட்டியல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1469933 - போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.