Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்! 20 Mar, 2026 | 03:16 PM எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழு எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்பாணம் வருகை தருவதாகவும் யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சி களின் தலைவர் களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/241470
  3. அமெரிக்கா 7000 இலக்குகளை தாக்கிய பிறகும் இரான் தொடர்ந்து பதிலடி கொடுப்பது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ,கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பிபிசி 20 மார்ச் 2026, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இரான் உடனான போரில் அமெரிக்கா "திட்டமிட்டபடியும்", "இலக்கின் மீதும்" சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான கால வரம்பை வழங்கவில்லை. நேற்று செய்தியாளர்கள் வலியுறுத்திக் கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்க நாங்கள் விரும்பவில்லை." எனத் தெரிவித்தார். அமெரிக்கா தற்போது 7,000 இரானிய இலக்குகளைத் தாக்கியதாகக் கூறும் அவர், "படைகளுக்கு தாங்கள் எதை தாக்குகிறோம், ஏன் தாக்குகிறோம் என்பது பற்றிய தெளிவான உணர்வு இருக்கிறது." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எரிந்த கட்டடம் பூமிக்கு அடியில் இரானின் ஆயுதங்கள் பீட் ஹெக்செத் கூற்றுப்படி அமெரிக்கப் படைகளால் மட்டுமே 7,000 இரானிய இலக்குகள் தாக்கப்பட்ட போதிலும், இரானிய ஏவுகணைகளும் டிரோன்களும் இன்னும் அண்டை நாடுகளைத் தாக்கி வருகின்றன. குறிப்பிடத்தக்க விமானப்படை மற்றும் கடற்படை இல்லாத நிலையில், இந்த ஏவுகணைகளையும் டிரோன்களையும்தான் இரான் தன்னால் இயன்ற வழிகளில் பாதுகாக்க முயல்கிறது. இரானின் நிலப்பரப்பு மற்றும் பல தசாப்த கால திட்டமிடல் காரணமாக, இந்த ஆயுதங்களின் இருப்பு பூமிக்கு அடியில் ஆழமாக அல்லது உண்மையில் மலைகளின் பக்கவாட்டில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வது கடினம், எனவேதான் இந்த வாரம் பயன்படுத்தப்பட்ட 5,000 பவுண்ட் (2,270 கிலோ) எடை கொண்ட ஜிபியு-72 மேம்பட்ட ஆழமாக ஊடுருவி செல்லும் குண்டு உட்பட பல்வேறு வகையான பங்கர்-பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும் உற்பத்தி அழிக்கப்பட்டாலும் தொடரும் தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், "இரானின் முழு பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தித் திறன், அந்த ஏவுகணைகளின் ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கும் ஒவ்வொரு நிறுவனமும், செயல்பாட்டு ரீதியாக வீழ்த்தப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. இரான் முழுவதும் உள்ள கட்டடங்கள், வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திக் கூடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன," என்றார். இந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் நிறுத்தப்பட்டாலும், எஞ்சியிருப்பவை இன்னும் ஏவப்படுவது தெளிவாகத் தெரிகிறது. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,பங்கர்-பஸ்டர் குண்டு எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் உளவுத் தகவல்கள் மற்றும் விமானங்கள் மூலம், நடமாடும் ஏவுகணை ஏவுதளங்களை "தேடிக் கண்டுபிடித்து அழிப்பதிலும் கவனம் செலுத்தும். 1991-ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில், இஸ்ரேலை அச்சுறுத்திக் கொண்டிருந்த சதாம் உசைனின் ஸ்கட் ஏவுகணைகளை அழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையின் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் மற்றும் எஃப்-16 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தப் பணிகள் 'ஸ்கட் ஹண்டிங்' என்று அழைக்கப்பட்டன. அதே உத்திகள் இன்றும் இரானில் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்ட தாக்குதல் 2021-இல் பரிசோதிக்கப்பட்ட குண்டு 2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட ஜிபியு-72 குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது. ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp86n3l35e1o
  4. ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமைக்கான காரணம் - ஜனாதிபதி Mar 20, 2026 - 11:46 AM UPDATE - ஏப்ரலில் 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட கேள்விக் கோரலின் அடிப்படையில், ஏப்ரல் 6 அல்லது 7ஆம் திகதிகளில் டீசல் கப்பலும், ஏப்ரல் 16 அல்லது 17ஆம் திகதிகளில் பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையும் என ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் ஏப்ரல் 12 அல்லது 13ஆம் திகதிகளில் மசகு எண்ணெய் கப்பலும், ஏப்ரல் 10 அல்லது 11ஆம் திகதிகளில் விமானங்களுக்கான ஜெட் ஏ-1 (Jet A-1) எரிபொருள் கப்பலும் நாட்டை வந்தடையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரேரணையை முன்வைத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதிக்கான கேள்வி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைமையைப் பேணுவதன் மூலமே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, எவ்வித அழுத்தங்கள் மத்தியிலும் இந்த நடுநிலைமை நழுவிப்போக இடமளிக்க மாட்டோம். ஆனால், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை நான் அறிவேன். நாம் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்றும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்பது போன்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஈரானிய கப்பல்கள் குறித்த பிரச்சினை. குறிப்பாக, 2026 பிப்ரவரி 26 ஆம் திகதி எம்மிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக இலங்கைக்கு வர விரும்புவதாகவும் எம்மிடம் கோரப்பட்டது. மார்ச் மாதத்தின் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் அந்த அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே நாள் மாலை ஐக்கிய அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன்வைத்தது. தமது நாட்டிற்கு அருகில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரினார்கள். எமது மேசை மீது இரண்டு ஆவணங்கள் இருந்தன. ஒன்று ஈரான் விடுத்த கோரிக்கை - மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தமது கடற்படைக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. மறுபுறம் ஐக்கிய அமெரிக்கா விடுத்த கோரிக்கை - தமது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் எமது மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தது. நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? நாம் மிகத் தெளிவான ஒரு முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் குறித்த சமிக்ஞைகள் ஏற்கனவே தோன்றியிருந்தன. நாம் அந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை. நான் இங்கே கேட்கிறேன், ஏன் ஈரானிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கவில்லை என வினவப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? எமது ஒட்டுமொத்த நடுநிலைமையும் நழுவிப்போயிருக்கும். நாம் ஒரு தரப்பிற்குச் சார்பாகச் செயற்பட்டிருப்போம். இல்லையெனில் நாம் மற்றைய தரப்பிற்கும் இடமளிக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் உள்ள அந்தப் போர் மோதலானது மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை. அத்தகைய அழுத்தங்கள் மத்தியிலும் அந்த நடுநிலைமை கொள்கையை பாதுகாத்துள்ளோம். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தற்சமயம் பாராளுமன்றத்திற்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தி வருகின்றார். சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு வருகைத் தந்த அவர், ஈரான் கப்பல் நாட்டிற்குள் உடனடியாக அனுமதிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் இதன்போது தௌிவுப்படுத்தியுள்ளார். அத்துடன் தற்போது நிலவி வரும் போர்ச்சூழலில் இலங்கை நடுநிலை வகிப்பது குறித்தும் அவர் தமது உரையில் குறிப்பிடுகின்றார். https://adaderanatamil.lk/news/cmmyi714o000c356pe2qqi7ed
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  6. இலங்கையில் புதிப்பிக்கத்தக்க சக்திவள மேம்பாட்டுக்கு நோர்வே ஆதரவு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 12:23 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கையில் புதிப்பிக்கத்தக்க சக்திவளங்களை மேம்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. கடந்த புதன்கிழமை (18) விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நோர்வே தூதவர் ஸ்டர்ல் ஹரால்ட் பெடர்சன் இவ்வாறு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலின் போது காற்று, கடல் மற்றும் சூரியசக்தி உள்ளிட்ட புதிப்பிக்கத்தக்க சக்திவளங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு திட்ட முன்மொழிவு நீர்பாசனத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. மேலும், விவசாயத் துறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, விவசாய கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்யும் வாய்ப்புகள் குறித்து நோர்வே ஆர்வம் காட்டியுள்ளது. அத்துடன், அத்தகைய வளங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு எரிவாயு உற்பத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட விருப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பகல் நேரங்களில் உற்பத்தியாகும் கூடுதல் சூரிய ஆற்றலை மின்பகுப்பாய்வு முறையின் மூலம் ஹைட்ரஜனாக மாற்றி, அதை எதிர்கால எரிபொருளாக பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புதிப்பிக்கத்தக்க சக்திவளங்கள் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிவதில் நோர்வே அரசாங்கம் அதீத ஈடுபாடு கொண்டுள்ளதாக பெடர்சன் தெரிவித்துள்ளதோடு புதிப்பிக்கத்தக்க சக்திவள மேம்படுத்தலுக்கான பல்தரப்பட்ட ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/241452
  7. குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் Mar 20, 2026 - 12:50 PM தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றனர். அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன. ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் வளைகுடா நாடுகள் ஈரானின் கோபத்திற்கு இலக்குகளாக மாறியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதான தமது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார். எனினும் தமது இழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmyki9ck000d356p5viigs0g
  8. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை - நேரலை Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 12:14 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகிறன்றார். https://www.virakesari.lk/article/241451
  9. சென்னையில் சீர்திருத்த திருமணத்தை பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு - பதிவுத்துறை கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சென்னையில் சீர்திருத்த திருமணம் ஒன்றை சார்பதிவாளர் பதிவு செய்ய மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "இந்த மாதிரி திருமணம் செய்வதை என்னால் ஊக்குவிக்க முடியாது, இதை நான் பதிவு செய்யமாட்டேன்," என திருமணத்தை பதிவு செய்ய சென்றபோது விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத் கூறியதாக தெரிவிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன். சீர்திருத்தத் திருமணங்களுக்கு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கும் நிலையில், அதன் பதிவு நிராகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவாதப் பொருளாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி, "ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை" எனக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? பதிவு மறுக்க சொல்லப்பட்ட காரணம் என்ன? செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த உஷா ஆகிய இருவருக்கும் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னை வடபழனியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அதனை பதிவு செய்ய அந்த பகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து 23-ஆம் தேதி நேரில் சென்றனர். உரிய ஆவணங்களோடு அணுகிய போதும் அவர்களது திருமணத்தை ஏற்க சார்பதிவாளர் மறுத்ததாக வேல்முருகன் குற்றம் சாட்டுகிறார். திருமணம் மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டபோது இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டி 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம் என எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். "அதில் திருமணம் நடைபெற்ற இடத்தின் முகவரியில் குழப்பம் மற்றும் திருமணத்தை தலைமையேற்றவரின் கையொப்பம் இல்லை என்று குறிப்பிடப்பட்டது," என்கிறார் வேல்முருகன். இந்தப் பதிவு மறுக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. 'ஆவணங்களைக் காட்டிய பிறகு ஏற்கவில்லை' படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல்முருகன். "ஒவ்வொரு முறையும் சீர்திருத்தத் திருமணங்களைப் பதிவு செய்யும்போது போராட வேண்டியுள்ளது" என்கிறார் திருமணத்தை முன்னின்று நடத்திய வேல்முருகன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட சீர்திருத்தத் திருமணத்தின் பதிவு முறைகளை மட்டுப்படுத்தும் வகையில் சார் பதிவாளரின் அணுகுமுறை உள்ளது." என குற்றம் சாட்டினார். "திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்தது குறித்து கேள்வி எழுப்பிய போது 'இது போன்ற திருமணங்களை நான் ஊக்குவிப்பது இல்லை' எனப் பதிலளித்தார். மறுப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கேட்ட போது 'திருமணம் நடந்த இடம் எங்கள் எல்லைக்குள் இல்லை' என்று கூறினார்" என வேல் முருகன் தெரிவித்தார். 2025-ஆம் ஆண்டில் தங்களது கட்சி அலுவலகத்தில் 6 சீர்திருத்த திருமணங்கள் நடத்தப்பட்டு இதே சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது எனக் குறிப்பிடுகிறார் வேல்முருகன். மேலும், "விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஆவணங்களையும், எங்கள் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலிகிராமம் பகுதி விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்டது என்பதற்கான ஆவணங்களையும் காட்டிய பிறகும் அதனை அவர் ஏற்கவில்லை" என்றார். திருமணத்தை பதிய மறுத்தது தொடர்பாக மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்து 20 நாட்கள் ஆனதாக குறிப்பிடும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கிறார். மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சீர்திருத்த திருமணம் நிராகரிக்கப்பட்டதற்கு "கட்சி அலுவலக முகவரி முக்கிய காரணம்" என்று கூறியது குறித்து விளக்கம் பெற விருகம்பாக்கம் சார் பதிவாளர் ரவீந்திரநாத்-ஐ பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. "இந்த விவகாரம் பற்றி எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் அந்த திருமணத்தை பதிவு செய்ய மாவட்ட பதிவாளர் அனுமதி கொடுத்துவிட்டார்" என்று அவர் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான தகவல் தங்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்கிறார் வேல்முருகன். இருப்பினும், தொடக்க நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரவீந்திரநாத் பதிலளிக்கவில்லை. "திருமண பதிவில் தவறு ஏற்பட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது நாங்கள் தான்" என்கிறார் பதிவுத்துறை தென்சென்னை மாவட்ட பதிவாளர் சுடரொளி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த புகாரில் களத்திற்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டு நிலையை தெரிந்துகொண்டோம். அதில் கோடம்பாக்கம், விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகங்கள் அருகருகே இருப்பதும், மார்க்சிஸ்ட் அலுவலகத்தின் அமைவிடம் 'சாலிகிராமம்' என்று குறிப்பிடப்படாமல் இருப்பதும் தான் பிரச்னைக்கு காரணம் என்பதை தெரிந்துகொண்டோம்." என்றார். "இனி வரும் காலங்களில் அந்த அலுவலகத்தில் இருந்து வரும் அனைத்து திருமணங்களையும் பரிசீலித்து பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார் அவர். மேலும், "இந்த திருமண பதிவில் சம்மந்தப்பட்ட இணையர் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் திருமணம் நடத்தப்பட்ட இடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற இறுதி வாய்ப்பில் அவர்கள் இருந்தனர், ஆனால் அதற்குரிய ஆவணங்களை சரி பார்க்க வேண்டியது எங்கள் கடமை, அதில் தவறு ஏற்பட்டால் அந்தப் பதிவை மேற்கொண்ட சார் பதிவாளர் பின்னாளில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்" என்று அவர் கூறினார். சார் பதிவாளரின் அணுகுமுறை குறித்த வேல்முருகனின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பதிவாளர் சுடரொளி, "பெற்றோர் இல்லாமல் நடத்தப்படும் திருமணங்களில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் சிறிய அளவிலும் பிரச்னை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சார் பதிவாளர் சொன்னதை தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டிருப்பார்கள்" எனத் தெரிவித்தார். ஆவணங்கள் சரியாக இருந்தால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அவர் விளக்கமளித்தார். சீர்திருத்த திருமணத்தை சார் பதிவாளரால் நிராகரிக்க முடியுமா? படக்குறிப்பு,முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார். "நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சீர்திருத்த திருமணங்களை பதிவு செய்வதை எவராலும் தடுக்க முடியாது" என்கிறார் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சீர்திருத்தத் திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலகத்தை நாடுவோர், இந்து திருமணச்சட்டப்படி உள்ள படிவத்தில் பிரிவு 7 (அ) எனக் குறிப்பிட்டு உரிய ஆவணங்களை மட்டும் வழங்கினால் போதுமானது" என்றார். மேலும், "கட்டாய திருமணம், கடத்தல் திருமணம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் திருமணங்களின் போது ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்கள் யாரேனும் ஒருவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் வழங்கும் அறிவுரைகளைக் காரணம் காட்டி சில சார் பதிவாளர்கள் திருமணங்களைப் பதிவு செய்ய தடை விதிக்கிறார்கள், இது தவறான அணுகுமுறை." என்று தெரிவித்தார். ஆனால் குறிப்பிட்ட வழக்கில் மணமக்களின் பெற்றோர் குறித்து சார்பதிவாளர் எதுவும் குறிப்பிட்டதாக புகார் இல்லை. "ஒரு சீர்திருத்த திருமணம் பதிவு செய்வது மறுக்கப்பட்டால், அந்த சார் பதிவாளர் மீது மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். அதிலும் தீர்வு கிடைக்காத பட்சத்தில் பதிவுத்துறை துணை தலைவர் அல்லது தலைவரை அணுகலாம், அவர் செய்தது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார். சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? சீர்திருத்த திருமணம் அல்லது சுயமரியாதை திருமணம் என்பது மதம் மற்றும் சாதி சடங்குகளைக் கடந்து மணமக்கள் மற்றும் சாட்சியங்களை மட்டும் வைத்து எளிய முறையில் நடத்தப்படுகிறது. 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து திருமணச்சட்டம், 1967-இல் தமிழ்நாடு அரசால் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதில் பிரிவு 7 (அ) சேர்க்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி தம்பதிகள் மாலை மாற்றிக்கொள்வது, உறுதி மொழி ஏற்பது, தாலி கட்டிக்கொள்வது என மூன்று வழிமுறைகளில் ஒன்றோ அல்லது மூன்றையும் பின்பற்றி சீர்திருத்த திருமணம் செய்துக்கொள்ளலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுயமரியாதை திருமணம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? "சுயமரியாதை திருமணத்தைப் பதிவு செய்ய பதிவுத்துறையை நாடும்போது சிலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு சாதி மறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இரமேசு பெரியார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "கொள்கையால் ஈர்க்கப்படுபவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் மட்டுமே சீர்திருத்த திருமணத்தை நோக்கிச் செல்கின்றனர், ஆனால் பெற்றோர் வரவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி பல இடங்களில் பதிவு மறுக்கப்படுகிறது" என்றார். "தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் விதி 7-இல் சார் பதிவாளர் மனநிறைவு அடையாவிட்டால் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போலி திருமணங்களை தடுப்பதற்காக வழங்கப்பட்ட அதிகாரங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்" என்கிறார் வழக்கறிஞர் இரமேசு பெரியார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cje42kk8y2no
  10. நாங்கள் நம்பீட்டம். 😁 இஸ்ரேலின் கதையை நம்பாதவன்… இரத்தம் கக்கி சாவான். 😂
  11. முவாய் தாய் உலக சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு 3 தங்கம்: நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! 20 Mar, 2026 | 04:04 PM தாய்லாந்தில் நடைபெற்ற 7ஆவது 'முவாய் தாய்' உலக சம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 5 வெற்றிக் கிண்ணங்களைச் (சம்பியன் பட்டிகள்) சுவீகரித்த இலங்கை வீரர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை நாடு திரும்பினர்.Geographic Reference தாய்லாந்து முவாய் தாய் விளையாட்டுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, அந்நாட்டின் பட்டாயா நகரில் கடந்த 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 11 வயதுடைய செஹாஸ் அகிசா, 10-11 வயதுப் பிரிவில் உலகச் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இந்தப் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகச் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையின் தேசியச் சம்பியனாகவும், கடந்த ஆண்டின் சிறந்த வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், 14-15 வயதுப் பிரிவில் போட்டியிட்ட டில்லன் ஜூலியன் தனது பிரிவில் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்தார். மேலும், தினெல் ஷமிக்க, இயன் அனுஹாஸ் மற்றும் இசுரு அமில ஆகியோரும் தமது திறமைகளை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றிப் பதக்கங்களுடன் இன்று காலை நாடு திரும்பிய இந்த ஐவரையும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை முவாய் தாய் சங்க அதிகாரிகள், பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். https://www.virakesari.lk/article/241464
  12. ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளார் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Mar, 2026 | 02:59 PM ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட துல்லியமான வான்வழித் தாக்குதலின் போதே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241466
  13. மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது Mar 20, 2026 - 06:40 AM ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவித்துள்ளதாவது, சில சந்தர்ப்பங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முடியாது. மின்சார வரி விகிதங்களைக் குறைக்கவும், எரிபொருட்களை விட மின்சாரத்திற்கு குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் முன்மொழிவோம். நிறுவனங்கள் நிலக்கீழ் எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழி முறைகளை நோக்கி நகர்வதற்கு உதவும் முதலீடுகள் மூலம், தொழில்துறைக்கு நிதி உதவியை வழங்குமாறும் அவர் ஐரோப்பிய தலைவர்களிடம் முன்மொழிந்துள்ளதாகக் கூறினார். ஈரானில் மோதல் தொடங்குவதற்கு முன்னிருந்த நிலையை விட, தற்போது ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையானது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmy7a7ei0001356p6zcrngn1
  14. உண்மையில் இது எனக்கு கொஞ்சமும் விளங்கி கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கின்றது. பொய்கள் போலிகளை கேட்டு சந்தோசபடுவது ஏன் என்பது விளங்கி கொள்ள முடியாதது தான். இது பற்றி நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டது இவர்கள் இராமன் பெரியவனா இராவணன் பெரியவனா சீதையா இப்படியான கற்பனைகளை கேட்பதில் அலாதியான விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர். இப்போது இவர்களுக்கு ரஷ்யா ஈரான் வட கொரியா. மேற்குலக நாடுகளில் இவர்கள் மிகவும் வசதியான சுதந்திரமான பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொண்டு இப்படியான யுரியுப்புகளை கேட்டு சந்தேசபடுகின்றார்கள். இப்படியான தமிழ்யுரியுப்பர்கள் காட்டில் பண மழை. கவனித்தீர்களா தமிழ் அடியான் யுரியுப்பர் இவர்களை சந்தோசபடுத்துவதற்காக பொய் செய்தி தயாரிக்கின்றார் அதை ரஞ்சித் அண்ணா சுட்டிகாட்டி எழுதிய கருத்தையே தமிழ் அடியான் நீக்கிவிட்டார்.
  15. Today
  16. மொக்கு அமெரிவுக்கு தெரியவில்லை, இஸ்ரேலின் உள் திட்டம், அமெரிக்காவும் அழியவேண்டும், மதிக்கிழக்கில் அமேரிக்கா எந்த செல்வாக்கும் செலுத்த முடியாத அளவுக்கு என்பது அறப்படித்த அமெரிக்கா. உலகத்தில் மூலை முடுக்கில் நடப்பதை அறிய திறன்களும் , வசதிகளும் இருந்தும், இஸ்ரயேலின் உல் திட்டத்தை உணராமல், இஸ்ரேல் ஆக்கிய கூல் பானைக்குள் விழுந்து விட்டது.
  17. @goshan_che நான் வடகொரியாவுக்கு ஒன்று ரஷ்யாவுக்கு ஒன்று விண்ணப்பம் அனுப்பி வைக்கட்டுமா
  18. இது அதிர்ஷ்ட வசத்தால் உருவாக்கிய வாய்ப்பு அல்ல என்ற தோற்றத்தையே வீடியோ இல் பார்க்க கூடியதாக உள்ளது. முதலில் , இரான் , விமான தாக்குதலுக்கு தேவையான பின் கட்டுமானங்கள், எரிபொருள் நிரப்பும் விமானம் ,நிலத்தில் உள்ள ரேடார், இலத்திரனியல் யத கட்டுமானங்களை, மற்றும் growlers (இது வெளியிடப்பாவில்லை ), இவையே எதிரி ரேடார், இலத்திரனியல் யுத்த முனைவுகளை முடக்குவது, விமான தாக்குதலில் போது. GROWLERS சவூதியில் தாக்கப்பட்டதை வெளிவிடவில்லை. அதனால், இது புதிய ஆயுதம் தொழிநுட்பத்தால் ஏற்பட்டதா, அல்லது பின்கட்டுமான பற்றாக்குறை / இல்லாமையால் இரான் செய்யக்கூடியதாக இருந்ததா என்பதும். அல்லது 2 ம் காரணமாக இருக்கலாம்.
  19. கிறிஸ்தவ மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது என்பது, பிழையாக விளங்கப்படுள்ளது, இல்லை வேண்டுமென்றே திரிபு படுத்தப்பட்டுள்ளது என்றுதான் நான் நினைக்கிறன். கல்வி சம்பந்தப்பட்ட துறை இருக்கும்போது போலீசார் தீர்த்து வைத்தனர் எனக்கூறி பொலிஸாருக்கு பொன்னாடை போர்த்துவதிலிருந்தே தெரிகிறது. பொலிஸாருக்கு அந்தப்பிரச்சனையில் தலையிடவோ அல்லது போலீசாரிடம் இதைப்பற்றி முறையிடவோ தேவையில்லை, அப்படி போலீசார் தீர்த்து வைத்திருந்தாற்கூட பொன்னாடை போர்த்துவதன் அவசியமென்ன? அவர்களுக்கு அரசாங்கம் எதற்கு சம்பளம் வழங்குகிறது? மாறி மாறி கொழுத்துவோமென சவால் விடுகிறார்கள். அன்பையும் கருணையையும் சமத்துவத்தையும் பொறுமையையும் போதிக்க வேண்டியவர்கள் எடுத்ததற்கெல்லாம் கொளுத்துவோம் என்று எச்சரிக்கிறார்கள்.
  20. அமெரிக்காவுக்கு நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை, தன் அதிகாரமே பெரிது. நாளைக்கே இஸ்ரேலுக்கு எதிரான அறிக்கையும் வரலாம், அதே போலவே நெத்தன்யாகுவும், ஈரான் தனது சொந்த தாக்குதலாலேயே வீழ்ந்தது என்று உரிமை கொண்டாட நினைக்கிறார். இவர்களில் யாருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையானவர்களுமில்லை. சிலர் நெத்தன்யாகுவை வாலாட்டும் நாய் என்று விமர்ச்சிக்கிறார்கள். ட்ரம்புக்கு பெருத்த அவமானம், நட்பு நாடுகள் அவருக்கு கை கொடுக்க மறுத்தது. அவர் போய் சீண்டுவார் மற்றைய நாடுகள் அவரை காப்பாற்ற தங்கள் வீரரை பலி கொடுக்க வேண்டும். இப்படி இவரை தனித்து விட்டாற்த்தான் பாடம் படிப்பார். இது எங்கள் போரல்ல, எங்களை கேட்டு போர் தொடங்கப்படவில்லையென முகத்தில் அறைந்தாற்போல் கூறிவிட்டன.
  21. சீனாவின் ஆயுத உதவி ஈரானுக்கு மறைமுகமாக கிடைத்து விட்டது போலும்?
  22. நாடு முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்குது ........! 👍
  23. ஈரானில் உயிரிழப்பு 3100 ஐ கடந்தது Mar 20, 2026 - 09:09 AM அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் இந்த புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானது முதல் இதுவரையில் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 1,394 பேர் பொதுமக்கள் என்றும், அவர்களில் குறைந்தது 210 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,153 பேர் இராணுவத்தினர் என்றும், ஏனைய 639 பேரின் மரணங்கள் எவ்வகையைச் சேர்ந்தவை என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmyco1vf0007356pwkjbmyi8
  24. இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? - டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு பட மூலாதாரம்,Ronen Zvulun/POOL/AFP via Getty Images படக்குறிப்பு,வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இரானின் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை 'கட்டாயப்படுத்தியது' என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், "அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா?" என்றார். பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. இதில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உட்பட பல உயர்மட்ட இரானிய தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'இஸ்ரேல் தன்னை போரில் ஈடுபட கட்டாயப்படுத்தியது' என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொடர்ந்து மறுத்து வருகிறார். 'நாங்கள் இரானுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தோம், அவர்கள் முதலில் தாக்குவார்கள் என்று நான் நம்பினேன்' என்று இந்த மாதத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறினார். இருப்பினும், இரான் போர் குறித்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, புதன்கிழமையன்று இரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலை டிரம்ப் மறைமுகமாக விமர்சித்தார். அது குறித்துத் தனக்கு "எதுவும் தெரியாது" என்றும் அவர் கூறினார். இரானின் எரிவாயு வயல்கள் மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல், டிரம்புக்குத் தகவல் தெரிவித்ததா என்று நெதன்யாகுவிடம் கேட்டபோது, "இஸ்ரேல் தனித்தே செயல்பட்டது" என்று அவர் கூறினார். மேலும்,"மேற்கொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் எங்களைக் கேட்டுக்கொண்டார், நாங்கள் அவ்வாறே செய்கிறோம்," என்றும் கூறினார். "இரானின் உயர்மட்டத் தலைமையில் பிளவு" பட மூலாதாரம்,ATTA KENARE/AFP via Getty Images படக்குறிப்பு,இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் (கோப்புப் படம்) லெபனானில் உள்ள ஹெஸ்பொலா குறித்த தனது திட்டங்கள் பற்றி கேட்கப்பட்டபோது, இஸ்ரேல் தற்போது ஒரு "பாதுகாப்பு அமைப்பை " உருவாக்கியுள்ளதாகவும், இது அதன் போராளிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் என்றும் நெதன்யாகு கூறினார். "எங்களிடம் எதிர்காலத்திற்கான திட்டங்களும் உள்ளன," என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், "எங்களது மிகப்பெரிய முன்னுரிமை இரான் தான். அங்கிருக்கும் அரசாங்கம் வீழ்ந்தால், ஹெஸ்பொலாவும் முடிவுக்கு வரும்," என்றார். இரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே பிளவுகளும் உள்நாட்டு பதற்றங்களும் இருப்பதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, முன்னாள் அதி உயர் தலைவரைப் போன்ற "பிடிமானமும் அதிகாரமும்" இனி எவருக்கும் இருக்கப்போவதில்லை என்று கூறினார். இரானிய ஆட்சியில் விரிசல்கள் தோன்றி வருவதாகவும், "இந்த விரிசல்கள் அதிகரித்தால், ஆட்சி மாறக்கூடும்" என்றும் அவர் கூறினார். மேலும், "இரானிய ஆட்சி பலவீனமடைந்து வருவதற்கான பல அறிகுறிகள் உள்ளன," என்று அவர் தெரிவித்தார். "இந்த ஆட்சி வீழும் வகையிலான சூழலை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அது நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம்" என்றார். இந்த ஆட்சி நீடித்தாலும், "அது மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கும்" என்றும், இறுதியாக, "இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வது இனி இரானிய மக்களின் கைகளில்தான் உள்ளது," என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றனவா? பட மூலாதாரம்,Joe Raedle/Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா ஏன் போரில் நுழைந்தது என்பது குறித்து அந்நாட்டில் உள்நாட்டு விவாதம் நடைபெற்றுள்ளது. பிபிசி செய்தியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியரின் கூற்றுப்படி, இரானுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடங்கிய 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைக் காட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு முயன்று வருகிறார். அமெரிக்கா ஏன் இந்தப் போரில் இறங்கியது மற்றும் அதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பது குறித்து அமெரிக்காவிற்குள் கணிசமான உள்நாட்டு விவாதங்கள் எழுந்துள்ளன. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் இந்த வாரம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது. ஜோ கென்ட் டிரம்பின் நீண்டகால கூட்டாளியாகவும், அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் பிரிவுடனும் தொடர்புடையவராக இருந்தார். தனது ராஜினாமா கடிதத்தில், "இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் எழுதியுள்ளார். பின்னர் கன்சர்வேட்டிவ் வர்ணனையாளர் டக்கர் கார்ல்சனுடனான சுமார் இரண்டு மணி நேர நேர்காணலில் தனது கருத்துகளை அவர் விரிவாக விளக்கினார். "இந்த முடிவு இஸ்ரேலால் உந்தப்பட்டது" என்றும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை போருக்குச் சம்மதிக்க வைக்க இஸ்ரேலிய அதிகாரிகள் வழக்கமான நடைமுறைகளை மீறிச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் புதன்கிழமையன்று, இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அமெரிக்காவிற்கு முன் கூட்டியே தெரியாது என்று ட்ரூத் சோசியல் சமூக ஊடகத் தளத்தில் டிரம்ப் எழுதியிருந்தார். சிலர் இதனை அமெரிக்க அதிபரின் கோபத்தின் அறிகுறியாகப் பார்த்தனர். தனது அறிக்கைகளின் மூலம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நோக்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்ற கருத்தை நிராகரிக்க நெதன்யாகு தெளிவாக முயற்சி செய்து வருகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0le8kn6k2zo
  25. தேச விரோத செயல்களுக்காக மரண தண்டனையினை தமிழ் போராளிகளும் வழங்கியிருந்தார்கள், அந்த சூழ்நிலையில் இருந்த போது அதன் தீவிரம் பற்றி கருதாது வழமையான விடயமாக நாமும் கடந்து விட்டிருந்தோம். இங்கு ஒரு பேராசிரியர் இந்த தவறுகளை நியாயப்படுத்துகிறார். இலங்கையில் ஒரு போராளி குழுத்தலைவரை வெளிநாட்டு ஊடகங்கள் சில கம்போடிய பொல் பொட் போல கொடூரமானவர் என குற்றம் சாட்டிய கருத்துக்களை அங்கிருந்த போது பார்த்த போது, எந்த சம்பந்தமும் இல்லாத பிரச்சாரம் போல இருந்தது. ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் நிலையில் வரும் புரிதல்களுக்கும் அதற்கப்பால் இருக்கும் புரிதல்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும், ஆனாலும் ஈரானில் நடக்கும் இந்த படுகொலைகளை ஏற்க மறுக்கும் மனது இலங்கையில் நடந்த விடயங்களை ஏனோ இப்போதும் மேம்போக்காக கடந்துவிடுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.