Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. 'வெறும் வேடிக்கைக்காக' தாக்குதல் நடத்தக் கூடிய சூழலில் புதிய உலக ஒழுங்கு - இரான் போர் உணர்த்துவது என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அமீர் அசிமி பிபிசி நியூஸ் பெர்சியன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பல தசாப்தங்களாக சர்வதேச நடத்தையை நிர்வகித்த விதிகள் தங்கள் செல்வாக்கை இழந்து வருவதாகத் தோன்றும், ஒரு வளர்ந்து வரும் உலக ஒழுங்கின் கீழ் நடந்த முதல் பெரிய மோதல்களில் ஒன்றாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் கருதப்படலாம். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து நீண்ட காலத்திற்கு, போரும் ராஜதந்திரமும் முறையாக சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்கள் மற்றும் பிற உடன்படிக்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்புக்குள் செயல்பட்டன. அந்த விதிகள் வளைக்கப்பட்ட போதோ அல்லது அவர்களுக்கு விருப்பமான வகையில் புரிந்துகொள்ளப்பட்டபோதோ கூட, அரசுகள் பொதுவாக தங்கள் செயல்களை அந்த அமைப்புக்கு உட்பட்டு நியாயப்படுத்த முயன்றன. ராணுவ நடவடிக்கைகள் பொதுவாக சட்ட ரீதியான வாதங்கள், ராஜீய ஆலோசனைகள் அல்லது சர்வதேச கூட்டணிகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன் இணைந்தே இருந்தன. தற்போதைய போரில், அந்த பரிசீலனைகள் மிகவும் குறைந்த அளவிலான பங்கையே வகிப்பதாகத் தெரிகிறது. உத்திரீதியான முடிவுகள் சர்வதேச சட்டக் கட்டமைப்புகள் அல்லது பலதரப்பு அங்கீகாரத்துக்கு உட்பட்டு இருப்பதை விட, பெரும்பாலும் உடனடி ராணுவ மற்றும் அரசியல் அல்லது பாதுகாப்பு கணக்கீடுகளால் இயக்கப்படுவதாகத் தெரிகிறது. இரான் நாட்டைப் பொறுத்தவரை, இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் செயல்படுவது முற்றிலும் புதியதல்ல. பல தசாப்தங்களாக, அந்த நாடு விரிவான சர்வதேச தடைகள் மற்றும் அரசியல் தனிமைப்படுத்தலின் கீழ் வாழ்ந்து வருகிறது. காலப்போக்கில், அந்தத் தீர்மானங்களை (பலதரப்பு அல்லது ஒருதலைப்பட்சமானவை) தவிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பின்னல்கள் மற்றும் பொருளாதார வழிமுறைகளை அது உருவாக்கியுள்ளது. உலகில் மிகவும் விரிவான தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தபோதிலும், இரான் தொடர்ந்து எண்ணெயை ஏற்றுமதி செய்து வருவதுடன் பிராந்திய செல்வாக்கைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த மூலோபாய கலாச்சாரத்துக்குள், மோதல் அதிகரிப்பு பெரும்பாலும் அளவிடப்பட்டே இருந்தது. கடந்தகால நெருக்கடிகளில் இரான் அளித்த பதில்கள் பொதுவாக ஒரு பரந்த பிராந்திய போரைத் தூண்டாமல், தனது எதிரிகளுக்கு மோதலுக்கான விலையை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. வெளி சக்திகள் பதற்றத்தைக் குறைக்க அழுத்தம் கொடுக்கும் வரை, எதிரிகள் மீது பொருளாதார அல்லது அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதே இதன் பரந்த நோக்கமாக இருந்து வந்தது. படக்குறிப்பு,ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம். சர்வதேச உடன்படிக்கைகள் உடனடியாகச் செயல்பாட்டு எல்லைகளாக மாற வேண்டிய அவசியமில்லாத ஒரு சூழலில் செயல்பட இஸ்ரேலும் பழகியுள்ளது. ஒரு கடுமையான அச்சுறுத்தல் உருவாவதாகத் தலைவர்கள் நம்பும்போது, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுப்பதையே இஸ்ரேலிய ராணுவக் கோட்பாடு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது மற்றும் அதீத பலத்தைப் பயன்படுத்துவது ஆகியவை அந்த அணுகுமுறையின் மீண்டும் மீண்டும் நிகழும் கூறுகளாக இருந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், காஸா போர் போன்ற மோதல்களில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச சட்டமன்றங்களில் ஆய்வுகளை எதிர்கொண்டுள்ளன. அதே நேரத்தில், குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து வலுவான உத்தி ரீதியான ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், தனது பாதுகாப்பு முன்னுரிமைகள் தீர்க்கமான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவதாக இஸ்ரேல் தொடர்ந்து கணக்கிட்டு வருகிறது. இந்த அமைப்புக்குள் அமெரிக்கா ஒரு வித்தியாசமான நிலையில் உள்ளது. வாஷிங்டன் 1945-க்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கில் மற்றொரு பங்கேற்பாளர் மட்டுமல்ல - அதை வடிவமைப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் அது ஒரு முக்கியப் பங்கை வகித்தது. போருக்குப் பிறகு உருவான கூட்டணிகள், நிறுவனங்கள் மற்றும் சட்ட விதிமுறைகளின் வலைப்பின்னல் பெரும்பாலும் உலகளவில் அமெரிக்க செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்கா அந்த அமைப்பை வெளிப்படையாக தவிர்ப்பதற்கு மிக நெருக்கமாக வந்தது 2003-ஆம் ஆண்டு இராக் படையெடுப்பின் போதுதான். அப்போதும் கூட, வாஷிங்டன் அந்தத் தலையீட்டை ஒரு பரந்த கூட்டணி முயற்சியின் ஒரு பகுதியாகக் காட்ட முயன்றது. "விருப்பமுள்ளவர்களின் கூட்டணி" என்று அழைக்கப்பட்ட இதில், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் போலந்து போன்ற கூட்டாளிகளுடன் பல்வேறு அளவிலான ஆதரவை வழங்கிய டஜன் கணக்கான பிற அரசுகளும் இடம்பெற்றிருந்தன. போருக்கான சட்டபூர்வமான நியாயம் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அமெரிக்கா இன்னும் அந்த நடவடிக்கையைப் பலதரப்பு சூழலில் நிலைநிறுத்த முயன்றது. இருப்பினும், தற்போதைய மோதலில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சர்வதேச சட்டபூர்வமான தன்மைக்கான முக்கியத்துவம் குறைவாகவே காணப்படுகிறது. உயர்மட்ட அதிகாரிகளின் அறிக்கைகள் வேறுபட்ட தொனியைப் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, மார்ச் 14 சனிக்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தொடர்ச்சியான தாக்குதல்கள் இரான் நாட்டின் கார்க் தீவின் பெரும்பகுதியை "முற்றிலும் தரைமட்டமாக்கியுள்ளன" என்று கூறினார், மேலும் என்பிசி நியூஸிடம்: "நாங்கள் அதை இன்னும் சில முறை வெறும் வேடிக்கைக்காக தாக்கலாம்" என்றும் தெரிவித்தார். இத்தகைய கருத்துக்கள், அமெரிக்காவின் பெரிய ராணுவ நடவடிக்கைகளுடன் பாரம்பரியமாகத் தொடரும் ராஜீய ரீதியான கட்டமைப்பை விட நேரடியான அணுகுமுறையை விளக்குகின்றன. இந்த புதிய அணுகுமுறையில், பொருளாதாரக் கருவிகளும் கொள்கையின் கருவிகளாக மிகவும் ஆக்ரோஷமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரிகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் பெருகிய முறையில் எதிரிகளுக்கு மட்டுமல்லாமல், நீண்டகால கூட்டாளிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. பிரிட்டன் மற்றும் இதர நேட்டோ கூட்டாளிகள் உள்ளிட்ட ஐரோப்பிய அரசுகள், பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் புலம்பெயர்வு கொள்கை முதல் வர்த்தக நடைமுறைகள் மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் வரையிலான பிரச்னைகளில் வாஷிங்டனிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. இத்தகைய கொள்கைகள் குறுகிய காலத்தில் பயனுள்ளதாகத் தோன்றலாம், குறிப்பாக மற்ற நாடுகள் நிறுவப்பட்ட சர்வதேச விதிமுறைகளுக்குள் தொடர்ந்து செயல்பட்டால். இருப்பினும், நீண்ட கால விளைவுகள் தெளிவாக இல்லை. விதிகளின் அடிப்படையில் அமைந்த அமைப்பின் முதன்மை வடிவமைப்பாளரே அந்த விதிகளுக்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினால், மற்ற அரசுகளும் அவற்றால் கட்டுப்படுத்தப்படுவதை குறைவாகவே உணரக்கூடும். கடந்தகால மோதல்களில் இரான் நடந்துகொண்ட விதம், இத்தகைய எல்லைகள் ஒரு காலத்தில் அதன் தலைமையால் எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பதை விளக்குகிறது. 2025 கோடையில் நடந்த 12 நாள் போர் உள்ளிட்ட முந்தைய நெருக்கடிகளின் போது, தெஹ்ரான் ராணுவ ரீதியாகப் பதிலளித்தபோதும் பெரும்பாலும் தனது சொந்த உத்தி ரீதியான சிவப்புக் கோடுகளைக் கடைப்பிடித்தது. அந்த மோதலே வழக்கமான சர்வதேச சட்டக் கட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றதாக இருந்தபோதிலும், இரான் நாட்டின் பதிலடி அளவிடப்பட்டதாகவே இருந்தது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதித் (Al Udeid) விமான தளத்தின் மீது இரான் ஏவுகணைகளை ஏவியபோது, அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு முறைசாரா எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாகத் தெரிந்தது. இதேபோன்ற சமிக்கைகள் முன்னதாக இராக்கில் நடந்த இரானிய தாக்குதல்களின் போதும் கவனிக்கப்பட்டன. கணிசமான சேதத்தைச் சந்தித்த பிறகும், தெஹ்ரானின் பதிலடி ஒரு பரந்த மோதலைத் தவிர்க்கும் வகையில் கவனமாக அளவிடப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போதைய மோதலில் அந்த கட்டுப்பாடுகள் பலவீனமடைந்துள்ளதாகத் தெரிகிறது. முதல் அலைத் தாக்குதல்களில் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரான் அரேபிய தீபகற்பம் முழுவதும் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியது, ராணுவத் தளங்கள் மற்றும் சிவிலியன் இலக்குகள் மற்றும் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்தது. அதே நேரத்தில், இரானிய நடவடிக்கைகள் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை சீர்குலைத்தன. இதன் விளைவுகள் உடனடியாகத் தெரிந்தன. எரிசக்தி சந்தைகள் கடுமையாக எதிர்வினையாற்றின மற்றும் குறுகிய நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்து சீர்குலைந்தது உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் முழுவதும் அதிர்வுகளை உருவாக்கியது. சர்வதேச வணிகங்கள் மற்றும் அரசுகளுக்கு ஒரு பிராந்திய மோதலானது, மோதல் அதிகரிப்பு மீதான நீண்டகாலக் கட்டுப்பாடுகள் அரிக்கப்படத் தொடங்கும்போது எவ்வளவு விரைவாக உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளை உருவாக்க முடியும் என்பதை இந்த நிகழ்வு கோடிட்டுக் காட்டியது. மற்ற பெரிய வல்லரசுகள் இந்த முன்னேற்றங்களிலிருந்து தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. ரஷ்யா அதிக எரிசக்தி விலையால் பயனடையக்கூடும், அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பையும் மீறி மாஸ்கோ மீதான தடைகளின் அழுத்தம் குறைகிறது. இதற்கிடையில், சர்வதேச விதிமுறைகள் எவ்வளவு தூரம் மாறக்கூடும் மற்றும் எந்த திசைகளில் மாறக்கூடும் என்பதை சீனா ஒருவேளை உன்னிப்பாகக் கவனிக்கும். நிகழ்வுகளின் போக்கில் ஐரோப்பா தற்போது குறைந்த செல்வாக்கையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ராஜீய ரீதியிலான முயற்சிகள் இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் ஆகியவை பெரும்பாலும் முன்னேற்றங்களை வடிவமைப்பதை விட கவனிப்பவர்களாகவே தங்களை காண்கின்றன. எனவே, மத்திய கிழக்கில் நடக்கும் போரால் எழுப்பப்படும் பரந்த கேள்வி ஓர் ஒற்றை மோதலின் முடிவைத் தாண்டியது. இது 1945 முதல் உலகளாவிய உறவுகள் மற்றும் அரசியலை வடிவமைத்த சர்வதேச அமைப்பின் நீடித்த தன்மையைப் பற்றியது. அந்த அமைப்பு ஒருபோதும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், அது அதிகாரம் செலுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பை வழங்கியது. அந்தக் கட்டமைப்பு தொடர்ந்து பலவீனமடைந்தால், அதன் விளைவு கணிக்க முடியாத ஒரு சர்வதேச சூழலாக இருக்கலாம், அதில் நாடுகள் பகிரப்பட்ட விதிகளை குறைவாகவும், நேரடித் திறனை (raw capability) அதிகமாகவும் நம்பியிருக்கும். அத்தகைய ஒரு நிலப்பரப்பில், முதலில் அந்த அமைப்பை வடிவமைத்த நாடுகள் கூட அதன் அரிப்பு எதிர்பார்க்க முடியாத விளைவுகளைக் கொண்டிருப்பதை உணரக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3v7gq7q1ywo
  3. அடங் கொக்கா மக்கா!! யார்... யார், மேல்... போரைத் தொடுத்தார்கள் என்றே தெரியாமல் தம்பர் குழம்பிப் போயிருக்கிறார்!
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  5. இந்த பைபிள் விநியோகத்தைப் பற்றி…. ஆபிரகாம் சுமந்திரன் தனது திருவாயை திறந்து கருத்து ஒன்றும் கூறவில்லை என்ற படியால்… அவருக்கும் நல்ல விருப்பம் போல் தெரிகிறது. 😂 “மௌனம்… சம்மதத்துக்கு அறிகுறி” 🤣
  6. இரானின் பந்தயம் - அமெரிக்கா படை பல செலவு மாடல் ஐயே ஆயுதமாக்குவது - சரிவருகிறதோ? ஏறத்தாழ, அமெரிக்கா ஓரிரண்டு பாதுகாப்பு பாதீட்டின் 1/5.
  7. இவை இவளவு கொடுமையாக முன்பு இருந்தது. ஆயினும், கிம் சுவிஸில் வாழ்ந்த அனுபவத்தை கொண்டு சிலவற்றை சீரமைத்ததாக. அனால், அரசு என்ற அடிபணியில், ஈராக், லிபிய, தற்போது இரான் .. வடகொரியா எடுத்த போக்கு சரி என்றே பெரும்பாலான அரசியல் / இராணுவ ஆய்வாளர் ... நிபுணர்கள் (அமெரிக்காவில் கூட) ஏற்றுக்கொள்வது. அனால், கிம்மை பொறுத்தவரை வடகொரிய அரசு என்ற அமைப்பை பாதுகாப்பதே முன்னுரிமை ... ஏனெனில் கிம்மின் அரை சகோதரத்தை, மாமனாரை கூட விட்ட வைக்கவில்லை
  8. Today
  9. தமிழ் யூடியூபர்கள் வியூவுக்காகவோ தமது குறை அறிவினாலோ செய்வதாக இருக்கலாம்…. அது கூட ஓக்கே… ஆனால் வெளிநாட்டில் வாழும், ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்க கூடிய இயலுமை இருக்கும், வெளிநாட்டில் எதோ ஒரு தொழிலை செய்யும் அளவுக்கு அடிப்படை திறமையாவது இருக்கும், ஈழத்து அங்கிள்கள், இந்த பைத்தியகார வீடியோக்களை நம்பி பார்ப்பதும்…. அதை உண்மை என நம்பி யாழுக்கு காவி வருவதும்தான் ஏன் என்பதை என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை.
  10. இதெல்லாம் மேற்கின் பொய் பிரச்சாரம். என் தலைவனின் நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறது😂
  11. உப்பு சப்பில்லாத மேட்டரை ஊதி பெரிதாக்கி ஊடக வெளிச்சம் தேடுகிறார் ஜனநாயக விரோத ஆளுனர்.
  12. சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் மேலும் இதன்போது கூறினார். முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1469232
  13. தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு! மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை இன்று (19) ஆரம்பித்து வைத்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலமையில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அன்னை பூபதி அம்மாவின் சமாதியில் நிழல் படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாத்தை ஆரம்பித்து வைத்தனர். இதனை தொடர்ந்து அன்னையில் மகள் மற்றும் உறவினர்கள் சமாதியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலைய முன்றலில் கடந்த 1988 ம் ஆண்டு மார்ச் 19 ம் திகதி இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தை நடாத்துமாறு 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்பிரல் 19 ம் திகதி எயிர்நீத்தார் என்பது குறிப்பிடதக்கது. https://athavannews.com/2026/1469167
  14. வடமாகாணத்திலை சிங்களவனுக்கு... தெருவுக்கு தெரு விகாரை இருக்கு, எல்லா இடமும் இராணுவ முகாம் இருக்கு காவல் துறைகளில் 90 வீதமானவர்கள் சிங்களவர்கள் நினைத்த இடத்தில்... குடியேறி சிங்கள கிராமமாக மாற்ற அரச ஆதரவு இருக்கு. இனி சிங்களவனுக்கு என்ன பிரச்சினை. உழைத்து சாப்பிடுங்க(டா) "சிங்ஹிந்தியா" என்ற பெயரை பார்க்க... இந்தியாவின் வழமையான சகுனி விளையாட்டு நடைபெறுகின்றது போலுள்ளது.
  15. லிங் என மொட்டையாக கேட்டது என் தவறுதான். அரசியல் கருடன், அரசியல் குருடன் என தம்மை தாமே அழைத்து கொள்ளும் அநாமேதய யூடியூபர் அல்லாமல் … நமபகமான லிங் ஏதும் உள்ளதா ஐயா😂
  16. பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்! பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1469178
  17. இந்த இரு பந்திகளும் என்ன நடந்தது என தெளிவாக காட்டுகிறன. எப்போதும் பைபிளை புரெட்டஸ்தாந்து மாணவருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே மத அமைப்பின் வேண்டுகோள். கல்வி அலுவலகத்தின் முதல் கடிதம் இதை தெளிவாக சொல்லவில்லை. இந்த மயக்கத்தை அதே அலுவலகத்தின் இரெண்டாம் கடிதம் விளக்கி சொல்லி விட்டது. அத்தோடு முடிந்திருக்க வேண்டிய உள்ளக விடயம் இது. இரெண்டு சங்கிகள், ஒரு சம்பந்தமே இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர், கடைசியாக ஜனநாயக விரோத ஆளுனர், மூவரும் இதை ஊதி பெரிதாக்கி தமக்கு ஊடக வெளிச்சம் பாய்ச்சி உள்ளார்கள். சும்மா நாங்களும் நேரத்தை வீணடித்துள்ளோம். பிகு மேலே கொடுக்கப்பட இருப்பது கிங் ஜேம்ஸ் பைபிள் என நினைக்கிறேன். இதை கத்தோலிக்க மாணவருக்கே கொடுக்க முடியாது, இப்படி இருக்க இதை சைவ, இஸ்லாமிய அனைத்து மாணவருக்கு கொடுப்பார்கள் என்பது நம்பகூடியதல்ல, ஆரம்பத்தில் இருந்தே.
  18. ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்! ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு மந்தமாக இருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் இந்த நிதிக் கோரிக்கை காங்கிரஸில் ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தப் போர் நிதி வலு சேர்க்கும் என்றும், மோதலின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. இதுவரை அமெரிக்கப் படைகள் 7,800-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 8,000-க்கும் மேற்பட்ட போர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளன, மேலும் 120-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது. போரின் முதல் வாரத்திலேயே, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக 11 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தது. தற்போது மேலதிகமாக செலவிடப்படும் 200 பில்லியன் டொலருடன் சேர்த்து, போருக்கான அமெரிக்காவின் மொத்தச் செலவினம், 2025 ஆம் ஆண்டில் 356.51 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஈரானின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியை விட அதிகமாக இருக்கக்கூடும் என ‘World Meters‘ அமைப்பு தெரிவித்துள்ளது. 2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்காக 838.5 பில்லியன் டொலரை காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1469194
  19. உவரின் மருமோன் யுதர். மற்றது புட்டின்னை போலவே, இஸ்ரேலிடமும் தம்பரின் எப்ஸ்டீன் லீலை வீடியோக்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். வேறு வழியில்லாமல் அவர்களின் டுயூனுக்கு ஆடுகிறாரோ?
  20. நன்றி அண்ணா, பாரதியை பவுடர் டப்பாவுடன் நான் ஒப்பிடவில்லை. அது எத்தகைய அபத்தம் என்பதை நான் அறிவேன். நான் சொல்ல வருவது இரெண்டு விடயங்கள்: Beauty is in the eyes of the beholder என்பார்கள். எது இலக்கியம், அதிலும் எது நல்ல இலக்கியம் என்பதுவும் இப்படியே. மேலே ஹாப்பர் லியின் ஆங்கில நாவலை சுட்டி இருந்தேன். செங்கை ஆழியனின் சில (அனைத்தும் அல்ல) நாவல்கள் அந்த தரத்தை எட்டி பிடிக்க முயல்வன. எனது பார்வையில். ஆனால் பலருக்கு அப்படி இல்லை. மேலே சொன்னதன் அடிப்படையில்தான் விருதுகளும் அமையும். நான் விருது குழுவில் இருந்தால் - செங்கை ஆழியனை பரிந்துரைப்பேன். இத்தோடு பழதட்டு கலாச்சாரமும் சேர்ந்து கொள்ள - இதுதான் விருது வழங்கும் முறை. இதுதான் காலகாலமான நடைமுறை. ஞானபீடம் மட்டும் அல்ல அத்தனை கலை விருதுகளும் இப்படியே. விளையாட்டு விருதுகள் போன்றவை objective ஆக ஓட்ட போட்டியில் யார் முன்னுக்கு வந்தார் என்பதை வைத்து கோல்ட் மெடல் கொடுக்கப்படும். கலை விருதுகள் subjective ஆனவை. அதுதான் அதன் இயற்கை (nature of the beast).
  21. இவ்வளவு வேகமாகத் தொடரை எப்பிடித்தான் எழுதி முடிச்சியளோ அண்ணா. நன்றாக இருக்கிறது. ஆனாலும் பலரையும் காணவில்லை. யாழை விட்டுப் போய்விட்டார்களா என்ன? கருத்திடாவிட்டாலும் மனம் சலிக்காது எழுதியமைக்கு வாழ்த்து அண்ணா.
  22. “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை வியாழன், 19 மார்ச் 2026 06:55 AM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/55670
  23. இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு! 19 Mar, 2026 | 01:06 PM இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர். ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23,192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில் முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் "அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்" (Universal Health Coverage) கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது வசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர். இந்தக் கலந்துரையாடலில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி, சுசந்த குமார நவரத்ன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241350

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.