24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈராக்கால் தாக்கப்பட்ட அமெரிக்காவின் A-10 போர்விமானம் - 20 ஆண்டுகள் வரலாற்றில் ட்ரம்புக்கு ஆட்டம் காட்டிய ஈரான்! அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப்படைகள், ஈரானின் மீது ஒரு மாதத்திற்கும் மேலாகத் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் இராணுவ வலிமை "முற்றிலுமாக சிதைக்கப்பட்டுவிட்டது" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவந்த போதிலும், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்கள் ஈரானின் தற்காப்புத் திறன் இன்னும் அச்சுறுத்தலாகவே இருப்பதைக் காட்டுகின்றன. ஈரானால் அமெரிக்காவின் F-15E Strike Eagle மற்றும் A-10 Warthog ஆகிய இரண்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இது அமெரிக்க இராணுவ வரலாற்றில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வாகும். இதற்கு முன்னதாக, 2003ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பின் போதுதான் ஒரு அமெரிக்கப் போர் விமானம் (A-10) கடைசியாகப் போர்க்களத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. 2003இல் ஈராக் தாக்கிய விமானம் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்கா, பெரும்பாலும் வான் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கிளர்ச்சிக் குழுக்களுடன் போரிட்டு வந்ததே இந்த நீண்டகால இடைவெளிக்குக் காரணம் என்று ஓய்வுபெற்ற வான்படை பிரிகேடியர் ஜெனரல் ஹூஸ்டன் காண்ட்வெல் குறிப்பிடுகிறார். ஈரானின் பிரதான ரேடார் அமைப்புகள் அமெரிக்கத் தாக்குதல்களால் சேதமடைந்திருந்தாலும், அவை இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை. அமெரிக்க விமானங்கள் தற்போது தாழ்வான உயரத்தில் (Lower Altitudes) பறப்பது அவற்றை ஈரானின் ஏவுகணைகளுக்கு இலக்காக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நிபுணர்களின் கருத்துப்படி, இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தோள்பட்டையில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணைகள் (Shoulder-fired missiles/MANPADS) பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவை ரேடார்களில் சிக்காமல் மிக இரகசியமாகச் செயல்படக்கூடியவை. மேலும், ஈரான், அகச்சிவப்பு (Infrared) மற்றும் மின்-ஒளி (Electro-Optical) உணணிகளைப் பயன்படுத்தி விமானங்களின் எஞ்சின் வெப்பத்தை வைத்து அவற்றைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. ஈரானிய போர் வியூகம் வீழ்த்தப்பட்ட F-15E விமானத்திலிருந்து ஒரு வீரர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய ஆபத்தான சூழலில், விமானிகள் தற்காப்பு உத்திகள் மற்றும் அவசரகால வெளியேற்றம் (Ejection) குறித்துப் பயிற்சியளிக்கப்படுகிறார்கள். எனினும், ஈரானியப் படைகள் அமெரிக்க வீரர்களின் இருப்பிடத் தகவல்களை இடைமறிக்கவோ அல்லது தவறான தகவல்களைப் பரப்பவோ முயற்சிப்பதால் மீட்புப் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அமெரிக்கப் பொதுமக்கள், உயிரிழப்புகள் இல்லாத போர்களைக் கண்டு பழகிவிட்ட நிலையில், இத்தகைய இழப்புகள் உள்நாட்டில் போருக்கான ஆதரவைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அமெரிக்கா இதுவரை 13,000க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டு 12,300 இலக்குகளைத் தாக்கியுள்ளது, ஈரானின் இந்த பதில் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. "சிதைக்கப்பட்ட ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு என்பது அழிக்கப்பட்ட அமைப்பு என்று அர்த்தமல்ல" என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஈராக்கால் தாக்கப்பட்ட அமெரிக்காவின் A-10 போர்விமானம்
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இவ்வளவு விமான சேதம் / அழிவு நேற்று நடந்தகாக.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
கேலிச்சித்திரம்..... வேறை லெவல். 😂 படத்தில் Second Aid Box என்று எழுதியுள்ளமை... ஓவியரின் கற்பனையின் மணிமகுடம். 🤣
-
நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
வழக்கம்பரை முகாம் பொறுப்பாளாராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்மேகம் போன்ற விதிவிலக்கான ஓரிரு அதிகாரிகளும் பணியாற்றியிருந்தனர். சுழிபுரம் சந்தி முகாமிற்கு பொறுப்பாக இருந்த ராமையா என்ற அதிகாரி மிகமோசமாக நடந்துகொண்டார். போராளிகளின் தாக்குதலில் விக்ரோறியாக் கல்லூரி அருகில் கொல்லப்பட்டார், அந்த தாக்குதலை மேற்கொண்ட போராளியும் சாவடைய அவருடைய உடலை ஜீப்பில் கட்டி இழுத்து சென்றிருந்தனர். அத்தோடு வீடு வீடாக வந்து வளர்ந்த ஆண்கள் எல்லோருக்கும் மோசமான அடி விழுந்தது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
உங்கள் கருத்துக்கள் எல்லாம் உங்கள் நெஞ்சிலுள்ள வெறும் வஞ்சமும் யாழில் கருத்தெழுதுபவர்களை துரத்தி துரத்தி பழி தீர்ப்பதும் மட்டும் தான் சகோ. கருத்தாடல் என்பது முதலில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு கருத்து எழுதுவதிலிருந்து தான் தொடங்குகிறது. நீங்கள் கேட்கப்போவதில்லை. எனவே டொட்.
-
ஹோர்மூஸ் நீரிணையை 'திறக்க' போர் கப்பல்கள் ஏன் அனுப்பப்படவில்லை?
இன்று இரவு 10 மணிக்கு... HORMUZ திறக்கப் படும். - ட்ரம்பு.-
-
453 வைத்திய பட்டதாரிகளுக்கு நியமனம்: விண்ணப்பங்கள் கோரல்!
சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு Apr 4, 2026 - 07:11 PM சுகாதார அமைச்சினால் திட்டமிடப்பட்டதற்கமைய, பயிற்சி முடித்த வைத்தியர்களுக்கான நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (04) நண்பகலுடன் நிறைவடைந்தன. இந்த ஆண்டு பயிற்சியை முடித்த 453 வைத்தியர்களில் 435 பேர் அல்லது 96 சதவீதமானோர் நியமனங்களுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்திய அதிகாரிகள் நியமனங்களுக்கு அவர்கள் எவ்வாறு விண்ணப்பித்துள்ளனர் மற்றும் அவர்களின் திறமைப் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில், புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கான உள்ளீர்ப்பு நடவடிக்கைகள் இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. வெளிப்படைத்தன்மையுடனும் அறிவியல் பூர்வமான முறைமையின் கீழும் மேற்கொள்ளப்படும் இந்த நியமனங்கள் ஊடாக, நாடு முழுவதும் நிலவும் வைத்தியர்களுக்கான தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள சேவை நிலையங்கள் மற்றும் பணியில் இணைய வேண்டிய திகதி போன்ற விபரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmnkdrhog0000356pd8m4mvz5
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி சுமேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .......! 💐
-
'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது
‘முழு நாடுமே ஒன்றாக’ திட்டம்: நேற்று 1000 இற்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுடன் கைது Published By: Digital Desk 1 04 Apr, 2026 | 11:40 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 1002 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேரும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 1005 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நால்வர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதற்கமைய, சந்தேக நபர்களிடமிருந்து 453 கிராம் ஹெரோயின், 828 கிராம் ஐஸ், 04 கிலோகிராம் 202 கிராம் கஞ்சா, 07 கஞ்சா செடிகள், 672 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 114 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 566 போதை மாத்திரைகள், 216 கிராம் மதனமோதகம் மற்றும் 02 கிலோகிராம் 656 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/242711
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திருமா அறிவித்த மாற்று வேட்பாளர் காங்கிரஸ் உறுப்பினராம், அவர்கள் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளாராம்😂. நல்ல கூத்து
-
'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன?
'போரை விட பசி எங்களை கொன்றுவிடும்' - இரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் நிலை என்ன? பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் ப.சிவசங்கர் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் "குண்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் காக்கை, குருவி போல ஓடி ஒளிந்துகொள்கிறோம்" - இரானில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர் ரவி சொன்ன வார்த்தைகள் இவை. இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் மீன்பிடித் தொழிலுக்காக இரான் சென்ற தமிழக மீனவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. ஆனால் "அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்கிறது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம். ஒரு மாதமாக சிக்கியுள்ள மீனவர்கள் "போரைக் காட்டிலும் பசியின் கொடுமை எங்களைக் கொன்றுவிடும்" என்று மீனவர்கள் வெளியிட்ட வீடியோ அவர்கள் இருக்கும் ஆபத்தான சூழலை உணர்த்தியது. ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் உள்ள இரானின் கிஷ் தீவு பகுதியில் இருந்து கன்னியாகுமரியை சேர்ந்த தாடியோஸ் பேசிய அந்தப் பதிவில் "கையிருப்பில் உள்ள உணவை வைத்து ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உண்ண முடிகிறது. அவை தீர்ந்துவிட்டால் பசியின் கொடுமையால் இறக்க நேரிடும்." என்றார். "போர்ச் சூழல் காரணமாக விமான சேவை தடைபட்டதால் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவேனும் எங்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார். வெடி சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாக கூறுகிறார் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மீனவரான ரவி. அவர் வெளியிட்ட பதிவில், "பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் தொடங்கியது முதல் சொந்த நாடு திரும்ப பலரிடமும் பேசி வருகிறோம். ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை" என்று கூறியுள்ளார். அதோடு, "நாங்கள் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் அடிக்கடி வெடிச் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிப்போய் ஒளிந்துகொள்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார். ''போர் தொடங்கிய முதல் வாரத்தில் பேசும்போது எப்படியும் மீண்டு விடுவோம் என்ற தையரித்தில் இருந்தவர்களின் குரல்களில் அடுத்தடுத்த நாட்களில் நடுக்கத்தை உணரத் தொடங்கினோம்," என்றார் இரானின் சீராஸில் உள்ள மீனவர் ரூபனின் மனைவி மதி. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "8 அக்கா தங்கைகளோடு பிறந்த என் கணவர் 30 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகிறார். ஆடம்பர வாழ்க்கைக்காக வெளிநாடு செல்லவில்லை, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியைச் சமாளிக்கவே உறவுகளை விட்டு தொலைதூரத்தில் பணியாற்றி வருகிறார்" என குடும்பத்தின் நிலையை எடுத்துரைத்தார். மேலும் பேசிய அவர், "இங்கிருந்தபடியே கடன்களை அடைக்கலாம் என்றபோது, இறுதியாக ஒரு முறை சென்று வருகிறேன் என்றவர் திரும்பி வர முடியாமல் சிக்கித் தவிக்கிறார்." என்றார். கிஷ் பகுதியில் உள்ள மற்றொரு மீனவர் ராஜேந்திரனின் மனைவி பிரவீனா பிபிசி தமிழிடம் பேசுகையில், "துறைமுகம் அருகில் இருப்பதால் குண்டு விழுவதை அடிக்கடி நேரில் பார்ப்பதாக என் கணவர் சொல்கிறார்" என்று அவர் கூறினார். "அரசுத் தரப்பில் பலரையும் சந்தித்து முறையிட்டுவிட்டோம், ஆனால் முறையான பதில்கள் ஏதும் இல்லை," என்றார். பட மூலாதாரம்,HANDOUT 'உணவு, மருந்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்' "மீனவர்களை மீட்கும்வரை அவர்களின் உணவு மற்றும் மருந்து தேவைகளை உறுதி செய்ய வேண்டும்," என்றார் தெற்காசிய மீனவர் தோழமையின் பொதுச் செயலாளர் ஃபாதர் சர்ச்சில் பாஸ். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், மீனவர்களை மீட்பது குறித்து மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சரை நேரில் சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம் என்றார். இரானில் சிக்கியுள்ள மீனவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் அவர்களைப் பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். "உடனடியாக அழைத்து வர இயலாவிட்டாலும் முதல் இரண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும்" அவர் கூறினார். "இந்தியா இரானுடன் நல்லுறவை மேம்படுத்தி வரும் நிலையில் அதைப் பயன்படுத்தி அங்குள்ள மக்களை விரைவாக அழைத்து வர வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தினார். உணவின்றித் தவித்து வருவதாகவும், தங்களை மீட்கப் பல வழிகளில் முயன்றும் எந்தப் பலனும் இல்லை எனத் தெரிவிக்கும் புகார்கள் குறித்தும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்திடம் மின்னஞ்சல் மூலம் பிபிசி தமிழ் பதில் பெற முயன்றது. ஆனால் அதற்குப் பலன் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இரானில் கிஷ், சீராஸ், அசலூயே உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், "மீனவர்களை மீட்க அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக" தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறையின் ஆணையர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார். "இரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 3000 அழைப்புகள் வந்துள்ளன, அதில் பெரும்பாலான அழைப்புகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ளன," என்றார் அவர். குறிப்பாக "இரானில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்பு தொடர்பாக பல வேண்டுகோள்கள் வாட்ஸ்ஆப் வாயிலாகவும், மின்னஞ்சல் மூலமாகவுவும் வந்துள்ளன," என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,HANDOUT இது குறித்து மேலும் பேசிய வள்ளலார், "போர் தொடங்கிய நாள் முதல் மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் மீட்பது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது." என்று கூறினார். போர் நடைபெற்று வருவதால் இந்த நேரத்தில் அவர்களை அழைத்து வருவது பாதுகாப்பானது இல்லை என தூதரக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகக் கூறிய அவர், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் அனைவரையும் பத்திரமாக தாயகம் திருப்பி அனுப்புவதாக தூதரம் உறுதி அளித்தது எனக் குறிப்பிட்டார். 'உணவின்றித் தவிப்பதாக' மீனவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்ட போது, "போர் நாடுகளில் உள்ள தமிழர்களுடன் தொடர்பு கொள்ள அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்துள்ளோம், சட்ட உதவிகள் தேவைபடுவோருக்கு அரசு சார்பில் சட்ட ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்." என்று அவர் விளக்கமளித்தார். மேலும், "மீனவர்களின் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகள் செய்வதை உறுதி செய்வோம்." என்றும் தெரிவித்தார். மீனவர்கள் இரான் சென்றது எப்படி? "தமிழ்நாட்டில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு, குறைந்த அளவு ஊதியம் கிடைப்பதால் கூடுதல் ஊதியம் வேண்டி அவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல நேரிடுகிறது," என்றார் ஃபாதர் சர்ச்சில். "ஆரம்பக்காலத்தில் வளைகுடா நாடுகளில் மற்ற வேலைகளுக்கு செல்வோர் மூலமாக அங்கு மீனவர்களின் தேவையை அறிந்து தமிழ்நாட்டில் இருந்து மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள், இரானை பூர்வீகமாகக் கொண்ட படகு உரிமையாளர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyjxnd9ve3o
-
நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
நேற்று அரங்கம் சென்று பார்த்தோம். நாம் கடந்து போன போர் வலி நிறைந்த பல்லாயிரக்கணக்கான இரவுகள் ஒன்றின் கதை. இது எமது கதை. போர் தின்ற எம் மக்களின் சொல்லப்படாத இலட்சக்கணக்கான கதைகளில் ஒன்றை சோமி தரன் மிகச் சிறப்பான திரை மொழியில் சில சமரசங்களுடன் செதுக்கியுள்ளார். படம் முடிந்த பின்னும் நீளா இரவின் நினைவுகள் தொடர்கின்றன.. படத்தின் சில காட்சிகள் தனக்கு ஒரு வித படபடப்பை தந்தது என்றும், தான் சிறு வயதில் அனுபவித்த சில வலிமிகுந்த தருணங்களை மீட்டியது என்றும் என் நண்பர் கூறினார். இந்திய இராணுவத்தில் நல்லவர்களை தான் ஒரு போதும் சந்தித்தது இல்லை என்றும் ஆனால் இப் படத்தில் அப்படியான ஒருவரை காட்டுவது ஒரு விதமான முரண் என்றும் இன்னொரு நண்பர் கூறினார். பெரும் வணிக சினிமாக்களுக்கு விழுந்தடித்து ஆதரவு தரும் எம் சமூகம், தன் வலியை, போராட்டத்தின் நியாயத்தை பேசும் இவ்வாறான சினிமாக்களுக்கும் ஆதரவு கொடுத்தால், இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான எம் கதைகளில் சிலவற்றையாவது சொல்வதற்கு ஊக்கம் கிடைக்கும்.
- Today
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சகோதரி சுமேக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
"மூன்று கவிதைகள் / 36"
"மூன்று கவிதைகள் / 36" 'அழகிற்கு அழகு செய்வார் உண்டோ?' மையிட்ட கண்ணும் மலர்முகக் காட்சியும் கையினில் ஏந்திய கண்ணாடி சொல்லுதோ? பச்சை நிறப் பட்டாடை கோலம் கச்சிதமாய் இணைந்து பேரழகு தருகுதோ? நெற்றிச் சுட்டியும் சூடிய மங்கையே சுற்றும் வளையல்கள் ராகம் பாடுதோ? முத்துச் சரங்கள் சூடிய மேனியே அழகிற்கு அழகு செய்வார் உண்டோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .............................................................. 'மின்னலாய் ஒரு பின்னல்' [சின்னம், பின்னம், ஆலோலம் & அவமானம்] வானில் பறக்கும் அழகிய சின்னம் பாடிடுதே இனிமை ஆலோலம்! இயற்கைக்கு ஏது அவமானம் என்றும் ஏற்படாது வாழ்வில் பின்னம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................................... 'ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்?' இனிய ராகம் இதயம் வருடுதே உயிரின் ஓசை உணர்வாய் மாறுதே அன்பின் பாடல் எங்கும் பெருகுதே தாளம் இணைந்து தவழ்ந்து வருதே மனதின் துயரம் தானே மறையுதே ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2133 ["மூன்று கவிதைகள் / 36" https://www.facebook.com/groups/978753388866632/posts/34711635288485009/?
-
சிறு கதை - 208 / நிழல் வலை (The Shadow Web) - ஒரு விழிப்புணர்வுக் கதை [ஏழு பாகம்]
சிறு கதை - 208 / நிழல் வலை (The Shadow Web) - ஒரு விழிப்புணர்வுக் கதை / அத்தியாயம் 01 யாழ்ப்பாணத்தின் உப்புக் காற்று மரமேசையில் அமர்ந்திருந்த அரவிந்தனின் கவிதைக் குறிப்பேடுகளைப் புரட்டியது. பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி அவனுக்குத் தந்த கௌரவம் ஒருபுறம் இருந்தாலும், முப்பதுகளின் இறுதியில் அவனுக்குள் எஞ்சியிருந்தது பெரும் தனிமை. சுவர்களில் படர்ந்திருந்த புத்தகங்களின் வாசம் அவனுக்கு அந்த தனிமையைப் போக்கப் போதுமானதாக அன்று இருக்கவில்லை. அப்பொழுதுதான் அந்தத் தனிமையைத் துளைக்கும் விதமாக அந்த குறுஞ்செய்தி வந்தது: "புகலிட வாழ்க்கை பற்றிய உங்கள் கவிதை என்னுடைய சொந்தக் கதையைப் போலவே உணர்ந்தேன்." 'Anitha R.' [அனிதா ஆர்] என்ற அந்தப் பெயருடன் இணைந்திருந்த அந்தப் புகைப்படம் அவனது இதயத்தின் உறங்குநிலையைத் தட்டியது. ஒரு வசந்தகாலத்தின் முதல் மலராக அவள் அவனுக்குத் தெரிந்தாள். அவளுடைய கண்கள், ஆயிரமாயிரம் கவிதைகளை மௌனமாகப் பேசி அவனை நிலைகுலையச் செய்தன. அவை வெறும் கண்கள் அல்ல; கடலின் ஆழத்தையும், நிலவின் அமைதியையும் ஒருசேரக் கொண்ட மாயக்கண்ணாடிகள். அவளது முகம், ஒரு தேர்ந்த ஓவியன் பல காலம் தவம் இருந்து வரைந்த ஓவியத்தைப் போலத் திகழ்ந்தது. நீண்ட கறுமையான கூந்தல், அவளது தோள்களில் மேகக் கூட்டங்களைப் போலப் படர்ந்து, ஒரு நவீன அழகியையும் தாண்டி ஏதோ ஒரு காவியப் பெண்ணின் சாயலை அவளுக்குத் தந்திருந்தது. அவள் அணிந்திருந்த அந்த நவீன ஆடை, காலத்தின் மாற்றத்தைச் சொன்னாலும், அவளது உடல்வாகு ஒரு பழங்காலச் சிற்பத்தின் நேர்த்தியை நினைவூட்டியது. அந்தக் கண்ணியம் கலந்த கவர்ச்சி, அரவிந்தனை அவளது வசீகரத்தில் கட்டிப்போட்டது. அந்தப் புகைப்படம் அவனது ரசனையைத் தூண்டி, அவனது அறிவார்ந்த தனிமைக்கு ஒரு வடிகாலாகத் தெரிந்தது. ஒரு விரிவுரையாளராகச் சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் அவன், அன்று உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டு மௌனம் கலைக்கத் துணிந்தான். அவன் பதிலளிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த ஒரு பதில் — அவனது அமைதியான வாழ்க்கையின் திரையை முற்றிலுமாக மாற்றியது. அவன் தட்டச்சு செய்த அந்தச் சிறு சொல், அவனது எதிர்காலத்தை ஒரு புதிய திசையில் பயணிக்கத் தூண்டியது. இலங்கையின் 2022 பொருளாதாரப் பேரிடர், வெறும் எண்களால் ஆன வீழ்ச்சியல்ல; அது நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களின் அடுப்பங்கரைகளில் விழுந்த இடி. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், பசி ஒருபுறம் வாட்ட, மறுபுறம் இணையவழி நிதி மோசடிகள் (Cyber Crimes) 40% வரை அதிகரித்துள்ளதாக ‘இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு’ (SLCERT) அபாயச் சங்கு ஊதியது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ‘Romance Scam’ எனப்படும் காதல் வலை வீசும் கும்பல்கள், ஒரு சிலந்தி வலையைப் போலத் தங்களை விரிவுபடுத்திக் கொண்டிருந்தன. அந்த நச்சுச் சூழலின் ஒரு குறுகிய சந்தில்தான் [தெருவில்] செல்வி வாழ்ந்தாள். இரண்டு குழந்தைகளின் தாய் அவள். காலம் அவளுக்குப் பொறுப்புகளை அள்ளித் தந்திருந்தாலும், அவளது உடல்வாகு இன்னும் பதின்ம வயது (Teenage) மாறாத இளமையைத் தேக்கி வைத்திருந்தது. மென்மையான குரலும், வசீகரமான முகமும் அவளுக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தன. ஆனால், அந்த அழகு அவளுக்குச் சுமையாக மாறியிருந்தது. வீட்டின் நிலைமையோ நரகத்தின் விளிம்பு. குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் பல மாதங்களாக நிலுவையில் இருந்தது. கடன் சுமை கழுத்தை நெரிக்க, மறுபுறம் அவளது கணவன் ‘ஐஸ்’ (Crystal Meth) எனும் கொடிய போதைக்கு அடிமையாகிக் கிடந்தான். இலங்கையில் ‘யுக்திய’ போன்ற பாரிய தேடுதல் வேட்டைகள் நடந்தாலும், போதைப்பொருள் எனும் அரக்கன் அவனது நரம்புகளைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தான். கண்ணீர் விட்டு மன்றாடியும், காலில் விழுந்து கெஞ்சியும் அவன் மாறவில்லை. அப்பொழுதுதான் வறுமையின் பிடியில் இருந்த அவளுக்கு அந்த நச்சுப் பழம் நீட்டப்பட்டது: “Online Chatting. Easy Money.” ["இணையம் வழி அரட்டை. எளிதான பணம்."] விழியோரக் கவர்ச்சியில் வீழ்ந்தது ஒரு நெஞ்சம் வழியோரக் குழியினில் ஒளிந்தது பெரும் வஞ்சம்! சிற்பத்தின் நேர்த்தியில் தெரிந்திட்ட பெண்மை முகமூடி போட்டதொரு மோசடித் தோற்றம்! போதையின் பிடியில் சிதைந்திட்ட இல்லம் பாதையை மாற்றியதே கண்ணீரின் வெள்ளம்! இணையத்தின் அரட்டையோ நச்சுப் பழம் இருளினில் தள்ளியதே எஞ்சிய காலம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம்: 02 தொடரும் துளி/DROP: 2135 [சிறு கதை - 208 / நிழல் வலை (The Shadow Web) - ஒரு விழிப்புணர்வுக் கதை / அத்தியாயம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/34711478355167369/?
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
குவைத்தில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் சினூக் ஹெலிகாப்டர் சேதமடைந்தது சமீபத்திய நாட்களில் குவைத்தின் கேம்ப் பியூரிங் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் ஒருவழி ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தின் CH-47F “சினூக்” இரட்டை சுழலி கொண்ட போக்குவரத்து ஹெலிகாப்டரின் காக்பிட் மற்றும் முன் சுழலி கடுமையாக சேதமடைந்துள்ளது. உயிரிழப்புகள் அல்லது செயல்பாட்டு பாதிப்பு குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. Daily Mirror ################### ##################### ##################### பழைய இரும்பு, ஈயம், பித்தளைக்கு... பேரீச்சம் பழம். 😂
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
😂 இதைத்தானே ஐயா பரம ஏழைகள் ஸ்டாலினும், உதயநிதியிம் கூட செய்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளரின் மனைவியின் சொத்தும் பகிரங்க படுத்த வேண்டும். கேள்வி இதுதான். போன 2021 தேர்தலில் சீமானின் மனைவியின் அடையும் அசையா சொத்துக்கள் பதிவாகின. அப்போதும் அவர் காளிமுத்தின் துணைவியான தெலுங்கு பெண்ணின் மகள்தான். 2021-2026 சீமான், மனைவி இருவரும் தொழில், வியாபாரம் ஏதும் செய்யவில்லை. அப்போ எங்கே இருந்து 25 ஏக்கர் நிலம் வந்தது. 25 ஏக்கர் நிலத்தின் பெறுமதி 50 இலட்சமா! பிகு 50 இலட்சம் என சீமான் விலை குறைத்து காட்டிய 25 ஏக்கர் நிலம்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான்தொடர்ச்சியாகபல தேர்தலில்களில் போட்டியிட்டுவருகிறார்.அண்மையில் ஸ்டாலினிடம் பெட்டி வாங்கி 50ஏக்கர் நிலம் வாங்கியிருந்தால்அது குறிப்பிடப்பட்டிருக்கும். சீமானின்மனைவிகயல்விழி முன்னாள் அமைச்சரின் மகள்.அவரிடத்தில் சொத்துக்கள்இருப்பதில் ஆச்சரியம் இல்லை. சீமான் 50 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறும் நீங்கள்தான் ஆதாரத்தைக் கூற வேண்டும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டி இல்லை! திருமா அறிவித்தார். மாற்று விசிக வேட்பாளர் போட்டி. ஐயோ இங்க இருந்த அந்த 52 ஏக்கர் நிலம் எங்கையா? சீமான் பாவிக்கும் வாகனம்… வசிக்கும் வீடு எல்லாம்?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமானின் சொத்து மதிப்பு "150 கிராம் தங்கம்இ ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் சீமான் சொத்து விவரம் இதற்கிடையே காரைக்குடியில் போட்டியிடும் நாதக தலைவர் சீமானின் சொத்து விவரம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் சீமான் தன்னிடம் ரூ.39 லட்சம் மதிப்புள்ள சொத்துகள்இ 150 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். தனது மனைவி கயல்விழியிடம் ரூ.2.57 கோடி சொத்துஇ 200 பவுன் அதாவது 1600 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.5.11 லட்சம் கடன் மேலும் தன்னிடம் ரொக்கமாக ரூ.50000 ரூ மனைவியிடம் ரூ.35000 உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் உள்ள ரூ.39 லட்சம் சொத்துகள் அசையும் சொத்துகள் எனவும் தன்னிடம் அசையா சொத்துகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு வங்கியில் 511000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். https://tamil.oneindia.com/news/chennai/what-is-seeman-asset-value-as-he-filed-his-nomination-in-karaikudi-for-tamil-nadu-election-2026-785739.html
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை
வீரப்புலி எனும் ஒரு தலைமுறைக்கு முன் தமிழராக இருந்த தற்போதைய சிங்களவர் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பாண்டே சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் வல்லவர் என்பதை மீண்டும் ஒரு தரம் நிருபித்துள்ளார். சீமான் முதலமைச்சர் ஆனால் என்ற ஜோக்குக்கு சிரிக்காமல் விட்டது கூட ஓக்கே… காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திக, திமுக, விசிக, தமிழ் தேசியம், இடையில் அதிமுக என அத்தனை மேடையிலும் வாயை வாடகைக்கு விட்ட… அரசியல் சொப்பன சுந்தரி அண்ணணை …. Ideologically driven என்றார் பாருங்கோ சிரிக்காமல்…அதுதான் ஹைலைட். Seeman is not ideologically driven, he is driven by the desire to drive Pajero and Innova 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பங்குனியில் பிறந்த யாயினி அவர்களுக்குச் சித்திரைக்குப் பாய்ந்துசென்ற பாஞ்சின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🙌