Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது Apr 3, 2026 - 10:38 AM இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் சீனாவைச் சேர்ந்த 133 பேரும், வியட்நாமை சேர்ந்த ஒருவரும், பங்களாதேஷை சேர்ந்த 13 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். https://adaderanatamil.lk/news/cmnig0grf000a356pssjof6rt
  3. ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் 8 முக்கிய பாலங்கள் தாக்கி அழிக்கப்படும் - பட்டியல் வெளியிட்டது ஈரான் 03 Apr, 2026 | 02:56 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானின் பெரிய பாலம் தாக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாக தெரிவித்துள்ள ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இலக்குவைத்துள்ள பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளதையடுத்து வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முக்கியமாக குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா பாலம் இடம்பெற்றுள்ளது. அதைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம், ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே பாலம், ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம், அப்தூன் பாலம் ஆகிய பாலங்களை ஈரான் இலக்குவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வியாழக்கிழமை (2) இரவு ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் 136 மீட்டர் உயரமுடைய மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழித்தது. அதற்கு முன்னதாக, போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் போடப்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளிவிடுமளவு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கடுத்த நாளே ஈரான் பாலம் தாக்கப்பட்டது. அதன் பின்னர், ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ட்ரம்பின் மிரட்டலுக்கும் ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் 8 பெரிய பாலங்களை அழிக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. https://www.virakesari.lk/article/242643
  4. அததெரண கருத்துப்படம்.
  5. அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம் பட மூலாதாரம்,Reuters அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நீண்டகால கூட்டாளியும், தனது நிர்வாகத்தின் தீவிர ஆதரவாளருமான அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியைப் ( Pam Bondi) பணிநீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் என்பவர் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமலாக்க அதிகாரியாகக் கருதப்படுகிறார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், டிரம்ப் பாம் பாண்டியைப் பாராட்டியதுடன், அவர் இனி தனியார் துறையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாகத் தெரிவித்தார். நீதித்துறையில் பாம் பாண்டி வகித்த பதவிக்காலம், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுதல் மற்றும் அந்தத் தண்டிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி மீதான விசாரணை ஆகியவற்றைச் சூழ்ந்த சர்ச்சைகளாலேயே பெரும்பாலும் சூழ்ந்திருந்தது. சமீபத்திய வாரங்களில், டிரம்ப் நிர்வாகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் இரண்டாவது உயர் அதிகாரி இவராவார். கடந்த மார்ச் மாதம், கிறிஸ்டி நோம் என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். டாட் பிளான்ச், பாம் பாண்டிக்கு பதிலாக அப்பதவியை ஏற்கவுள்ளார். தனது பொறுப்புகளை பிளான்ச்சிடம் ஒப்படைக்கும் பணியில் "சோர்வின்றி உழைப்பேன்" என்று பாண்டி கூறினார்; மேலும், இப்பதவியை வகித்தது தனது வாழ்வின் "பெருமைக்குரிய விஷயம்" என்றும் அவர் குறிப்பிட்டார். தனியார் துறையில் தான் ஏற்கவுள்ள புதிய பொறுப்பிலும், "அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்திற்காகத் தொடர்ந்து போராடுவேன்" என்றும் அவர் தெரிவித்தார். எனினும், தனது புதிய பொறுப்பு என்னவாக இருக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அரசின் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி பதவி நீக்கம்
  6. ஈரானில் மிகப் பெரிய பாலத்தை ஏவுகணை வீசித் தகர்த்தது அமெரிக்கா ; 8 பேர் பலி ; 95 பேர் காயம் 03 Apr, 2026 | 10:32 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரானில் உள்ள மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். நேற்று வியாழக்கிழமை (2) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 95 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஐந்து வாரங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர உடன்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளுமளவுக்கு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்த அடுத்த நாளே இந்தப் பாலம் தாக்கப்பட்டுள்ளது. தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் புதிய கட்டுமானமான இந்தப் பெரிய பாலம் 136 மீட்டர் உயரம் கொண்டது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டொலர். “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும்” என ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/242625
  7. பிள்ளையான் வழக்கு: நீதிமன்ற உத்தரவை சவாலிடுவேன் – கம்மன்பில Published By: Vishnu 03 Apr, 2026 | 04:48 AM (இராஜதுரை ஹஷான்) பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் நேற்று வியாழக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்னையானை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்ட விடயம் பொய் என்பது ஒரு வருடத்துக்கு பின்னர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் வியாழக்கிழமை (2) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மீது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. பிள்ளையான் விடுதலை புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை தவறு. இராணுவத்தில் இணையாமல் அவர் ஆயுதமேந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை சட்டவிரோதமானது என்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தார்கள். அதேபோல் அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான விடயங்களும் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது. காணாமலாக்கப்பட்ட உபவேந்தர் விவகாரத்தில் பிள்ளையானை கைது செய்ய முடியாது. ஆகவே அவரை விடுதலை செய்யுமாறு நாங்கள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தோம். பிள்ளையான் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரும் வரையில் பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன். விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச் சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிக்கிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/242607
  8. அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல் பட மூலாதாரம்,Getty Images பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை அவரது பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜார்ஜ் "41வது ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறார்" என்று கூறியுள்ளார். ராணுவத் தலைமைத் தளபதி பொதுவாக நான்கு ஆண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார். வெஸ்ட் பாயிண்ட் ராணுவ அகாடமியில் பட்டம் பெற்ற, தொழில்முறை ராணுவ அதிகாரியான ஜார்ஜ், 2023-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடனால் இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஜார்ஜ் முதல் வளைகுடாப் போரிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த சமீபத்திய மோதல்களிலும் காலாட்படை அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் ஏன் பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. "அவரது சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஆனால் ராணுவத்தில் ஒரு தலைமை மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது," என்று பெயர் குறிப்பிடப்படாத ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சிபிஎஸ்ஸிடம் கூறினார். பென்டகன் செய்தித் தொடர்பாளர் பார்னெல் கூறியதாவது: "ஜெனரல் ஜார்ஜ் நமது தேசத்திற்கு ஆற்றிய பல தசாப்த கால சேவைக்கு போர் துறை நன்றியுடையதாக உள்ளது. அவரது ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்." அமெரிக்க ஊடகங்களின்படி, அவருக்குப் பதிலாக ராணுவத் துணைத் தலைமைத் தளபதி ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிக ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பார். அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலக அறிவுறுத்தல்
  9. ட்ரம்ப் ஐயும் பதவி நீக்கம் செய்து விட்டால் உலகம் நிம்மதியடையும்.
  10. Today
  11. அமெரிக்காவில் இராணுவ மந்திரியைத்தான் செயளாளர் என்பார்கள். அதிபர் தேரும் இவரின் பதவியை செனேட் ஆளை நேரில் விசாரித்து வாக்கெடுப்பு மூலம் இறுதி செய்யும். அதன் பின் இராணுவ நியமன விடயங்களில் சட்டத்துக்கு உட்பட்டு, இவர் செயல்படலாம். இந்த பதவி நீக்கங்களில் சட்டம் மீறப்பட்டதாக தெரியவில்லை. இருபினும் நட்ட ஈடுதான் கிடைக்கும். மீள பதவி அல்ல.
  12. அதே போல் தனது பிராந்திய நலனுக்கு ஏற்ப, ஈழவிடுதலை/புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டவிதம் சரியானதே என்பது சில அனுபவம்மிக்க யாழ்கள உறுப்பினர்களது நிலைப்பாடு என்பதையும் நான் சுட்டி காட்ட விளைகிறேன்.
  13. ஈரான் மத்திய பகுதியில் IRGC வான்படை பாதுகாப்பு Ame Jet யைசுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகின்றது Al JazeeraWater plant hit in Kuwait as Iran attacks Gulf, Israel af...Water plant hit in Kuwait as Iran warns to expand attacks if Trump follows through on threats to escalate strikes.
  14. மன்னிக்கவும் இதையும் … அதையும்👇 நான் ஒப்பிட்டிருக்க கூடாதுதான்.
  15. ஆம்…ஆனால் அதுதான் அரசியலில் முதற்பாடம் இல்லையா. காலில் தவழ்தை சொல்லவில்லை, சதி செய்வதை சொன்னேன்.
  16. பதவிக்காக இவர் முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்து கும்பிட்டார் இப்போது இப்படி. இவர் மிகப் பெரிய சதிகாரன்.
  17. நா த க தனது தேர்தல் அறிக்கையில் அடித்து விடும் கஞ்சா கப்ஸா வாக்குறுதிகள் போன்றதே…இந்த நீட் தேர்வை ஒழிக்கும் வாக்குறுதியும். இதை மத்திய அரசு தமிழ் நாட்டு கட்சி ஒன்றில் தங்கி இருக்கும் நிலை வரும்போதுதான் சாதிக்க முடியும். அதிமுக கேட்கலாம். ஆனால் மாட்டார்கள்.
  18. வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி ஆண் : தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை ஆண் : தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நாள்பட நாள்படப் புரியும்.......! ...... உள்ளம் என்பது ஆமை .....
  19. இராணுவ தளபதியை நீக்கிற அளவுக்கு ஈரான் பெரியம் சம்பவம் செய்திருக்கு.....😂
  20. என்னை அழைத்தது யாரடி கண்ணே ...........! 😍
  21. கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட மலையார் விரும்பினவராம். ஆனால் நயினார் கோவை வடக்கை தவிர வேறு எந்த தொகுதியையும் திட்டமிட்டே கேட்டு பெறவில்லையாம். இது எடப்பாடி+நயினானார் ஜாயிண்ட் ஆப்பரேசனாம். கோவை வடக்கில் வானதி சிட்டிங் எம் எல் ஏ, அவரை தூக்கி விட்டு தன்னை போடும் படி மலையார் கேட்க, இல்லை என வானதி மறுக்க —-பட்டியல் வெளி வர தாமதம் ஆகியதாம். அண்ணாமலை போன்ற ஒருவரை சட்டசபைக்குள் வராமல், கட்சியில் மாநில பதவியில் இல்லாமல் ஆக்கியதன் மூலம், தேர்தலுக்கு பின்னாக தனக்கு வரக்கூடிய இடைஞ்சலை கணிசமாக குறைத்துள்ளார் எடப்பாடி.
  22. மோடியும் வரணாசி, குஜராத் என இரு தொகுதியில் போட்டி போட்டவர். டான்சி தீர்ப்புக்கு பின் ஜெயலலலிதா 4 தொகுதியில் வேட்புமனு செய்து, 4ம் தள்ளுபடியானது என நினைக்கிறேன். 2க்கு மேல் போட்டியிட முடியாது.
  23. தம்பர் 3ம் தரம் ஜனாதிபதியாக, தேர்தல்களை தள்ளிவைக்க தேவையானது செய்யப்படுகிறதோ?
  24. இளநிலை பிக்குகள்... விகாரையில் பயிற்சி எடுக்க வரும் போதே.. ஆண்மை நீக்கம் செய்து (நலம் எடுத்து) சேர வேண்டும் என்ற சட்டத்தை, அரசு உடனடியாகயாக அமுல் படுத்த வேண்டும். அத்துடன்... இதுவரை, நலம் எடுக்கப் படாத... கிழட்டுப் பிக்குகளுக்கும் நலம் எடுக்க வேண்டி உள்ளது. ஊருக்குள் இவங்கள் தொல்லை தாங்க முடியவில்லை. @Kandiah57

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.