24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
https://www.reuters.com/business/energy/south-korea-considers-importing-russian-oil-naphtha-industry-ministry-says-2026-03-19/ தென் கொரியா, மீண்டும் இரஸ்சியாவிடம் எண்ணெய் மற்றும் நப்தா வாங்குவது பற்றி சிந்திப்பதாக கூறப்படுகிறது, நியுசவுத்வேல்ஸ் அரசு உள்ளூர் இரு ஆலைகளுக்கு மானியம் வழங்குவதாக பிரிமியர் கூறியதாக செய்தியில் கூறினார்கள் (காரோட்டும் பொது மேலோட்டமாக புரிந்து கொண்டது), சில இடங்களில் பெட்ரோல் விலை 2.47 வரை அதிகரித்துள்ளது (1.30 பவுண்ஸ்). விலை தளம்பல் பெரிதாக ஏற்படாது என கருதுகிறேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அப்படி ஒரு எண்ணமும் இல்லை. முன்பே சொன்னது போல் ஆதாரம் இல்லாமல் எவர் மீதும் பழி சொல்ல நான் தயாரும் இல்லை. ஆனால்… பொதுவில் திரட்டிய பணத்தை ஒருவர் தனிப்பட்ட சுக வாழ்வுக்கு பயன்படுத்துகிறார் என நான் சொன்னால்… பதிலாக நீங்கள் அவருக்கு பணம் கொடுக்கவில்லை, எனவே அதை பற்றி நீங்கள் கவலை படத்தேவையில்லை என எழுதுவதற்கும்…. இயக்கப்பணம் பற்றி நீங்கள் யாரும் கேட்க முடியாது, தலைவர் வரும் போது கணக்கு கொடுப்போம் என சொல்லியதற்கும் ஒரு வேறுபாடும் என்னால் காண முடியவில்லை. பொதுப்பணத்தை முறைகேடாக பாவிக்கிறார் சீமான் என்று நான் சொன்னதற்கு, நீங்கள் கூறிய பதில், நீ அந்த பொதுபணத்தில் பங்காளி இல்லை, எனவே உனக்கு கேள்வி கேட்க அருகைதை இல்லை என்பது. இந்த உங்கள் நிலைப்பாடு 2 வகையில் வெட்கக்கேடானது. பொதுப்பணத்தை நிர்வகிக்கும் போது உள்ள பொறுப்புகூறல் பற்றிய உங்கள் நிலைப்பாடு, ஏனைய சந்தேகங்களுக்கு வழிகோல கூடியது. பணம் இருந்தால்தான் கொடுக்க முடியும். ஆகவே கொடுத்தவனுக்கு மட்டுமே அரசியல் உரிமை கேள்வி கேட்கும் அதிகாரம் உள்ளது எனில். அது பணம் இல்லாதவன் ஊழலை கண்டும் மெளனியாக இருக்க வேண்டும் என சொல்லுவது ஆகும். இரெண்டுமே வெட்கி நிற்க வேண்டிய நிலைப்பாடு.
-
கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!
வாழ்த்துக்கள்
-
இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
அதைக் காக்கத்தான் ..இந்த அய்யா போயிருக்கிறார் ...
-
மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!
இதுக்கெல்லாம் ..ரோட்டுப் போடமுன்னம் ப்லகை நாட்டுற அடியார் கூட்டம் என்ன சொல்லப் போகினம் ...அம்மாச்சி ..திறக்கிறதோடை ..அபிவிருத்தி முடிஞ்சுவிடும்
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- Today
- இராமேஸ்வரத்துடன் வரலாற்றைக்கொண்ட உடப்பு கிராமத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விஜயம் !
உடப்பு கிராமம் 'குட்டி வல்வெட்டித்துறை' என்றும் சொல்லப்படுகின்றது. சில வருடங்களின் முன்னர் நான் அங்கே போயிருந்தேன். என் மனைவி அங்கேயுள்ள கோவிலில் ஏதோ நேர்த்தி வைத்ததாக கூட்டிப் போனார். அந்த மக்கள், அந்தக் கோவில், கோவிலின் அமைப்பு, உள்ளிருக்கும் வர்ண வேலைகள் என்று எல்லாமே எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகவே இருந்தன. ஆனாலும் நான் அதற்கு முன்னர் அங்கு போயிருக்கவில்லை. நான் கவனித்த இன்னொரு விடயம், இரண்டு கோவில்களிலும் பல புதிய உபயங்களை செய்ததாக சிங்கள மக்களின் பெயர்களே இருந்தன. உடப்பைச் சுற்றியிருக்கும் பல கிராமங்கள் சிங்கள மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் இடங்களாக மாறிவிட்டன. அங்கிருந்து திரும்பும் போது உடப்பு எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் என்ற யோசனையும் சேர்ந்திருந்தது.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
புலத்தில் தலைவருக்கு உதவியவர்களுக்கும் தலைவர் சயனற்றை தந்து உடன் கட்டை ஏற கேட்டிருக்க வேண்டும் என்பது தான் உங்கள் நெஞ்சில் இருக்கிறது. எனக்கும் உயிருடன் இருந்து வதை படாமல் ஒரு நொடியில் போய்ச்சேர்ந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது 😡- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ஹொர்மூஸ் நீரிணையை திறக்க தம்பர் கைவசம் உள்ள தெரிவுகள் 👇- மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!
அனுர சேர் ட… ஜெயவேவா !- இரசித்த.... புகைப்படங்கள்.
அலுங்குப்பிடி என்று சொல்வோமே........ அவர்தான் இவர் . ........! 😂- மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாடிக்கை மறந்ததும் ஏனோ ........! 😍- ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
சிஎஸ்கேவில் நேதன் எல்லிஸ் விலகல் சென்னை: ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நேதன் எல்லிஸ், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. https://www.hindutamil.in/news/sports/nathan-ellis-leaves-csk- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன்கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா… பெண் : தூண்டாமணி விளக்கை… தூண்டிவிட்டு எரியவச்சி… உன் முகத்தை பார்க்க போறேன்… நாள் கணக்கா… பெண் : அந்த இந்திரன் சந்திரனும்… மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்… அந்த ரம்பையும் ஊர்வசியும்… மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்… நான் காத்தாகி ஊத்தாகி… மாமன தழுவி கட்டிக்கணும்… ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்… நானே தவமிருந்தேன்… உனக்காகதான்… கண்ணே உனக்காகதான்… பெண்: நான் கூட மனசுக்குள்ள… ஆசை வளத்துகிட்டேன்… உன்னை பார்க்கத்தான்… மாமா உன்னை பார்க்கத்தான்… ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்… தெளிய முறையிடலமோ… பெண் : சுத்துற கண்ணுல சிக்குன… என்னை சிறையிடலாமோ… ஆண் : எத்தனை நாள்… இப்படி நான் ஏங்கிறது… பெண் : பொட்டு வைச்சு… பூ முடிக்கும் நாளிருக்கு… ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்… நான் தூங்க போனதில்லை… உன்னாலதான்… கண்ணே உன்னாலதான்… பெண் : யார் பேச்சு கேட்டாலும்… என் காதில் கேட்பதெல்லாம்… உன் பேருதான்… நித்தம் உன் பேருதான்… ஆண் : இத்தனை நனப்பு என் மேலே… இருந்தும் எட்டி போகலாமோ… பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்… முன்னே முட்டிகொள்ளலாமோ… ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்… பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்… பெண் : தூதுவளை இலை அரைச்சி… தொண்டையிலதான் நனைச்சி… மாமன் கிட்ட பேச போறேன்… மணிக்கணக்கா… ஆண் : தூண்டாமணி விளக்கை… தூண்டிவிட்டு எரியவச்சி… உன் முகத்தை பார்க்க போறேன்… நாள் கணக்கா… பெண் : அந்த இந்திரன் சந்திரனும்… மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்… ஆண் : அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்… பெண் : நான் காத்தாகி ஊத்தாகி… மாமனே தழுவி கட்டிக்கணும்…....! --- தூதுவளை இலை அரைச்சி ---- உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் காலமானார்
உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் காலமானார் Mar 20, 2026 - 08:22 PM உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் சக் நோரிஸ் (Chuck Norris) காலமானார். அவர் காலமான போது அவருக்கு 86 வயது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புகழ்பெற்ற தற்காப்புக் கலை நிபுணரான சக் நோரிஸ், ஒரு சிறந்த நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்கியவர். 1940 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் பிறந்த இவர், 1958 முதல் 1962 வரை அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் விமானப்படையிலிருந்து விலகி நடிப்புத்துறையில் தடம் பதித்தார். குறிப்பாக, 1972 ஆம் ஆண்டு புரூஸ் லீயுடன் இணைந்து "Way of the Dragon" திரைப்படத்தில் அவர் நடித்த சண்டைக் காட்சி, அவர் உலகம் முழுவதும் பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது. https://adaderanatamil.lk/news/cmmz0p8k10009356paeoe68tt- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
2000 என்றார்கள். அதுவும் வராதா? கணக்கெல்லாம் திரும்ப போடணுமா?- பிள்ளைகள் வெளிநாட்டிலா?! மருத்துவர்கள் உரையாடல்
பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்தால் பெற்றவர்கள் என்ன பணக்காரர்களா? தனியார் மருத்துவமனைகள் முதல் கோவில்கள் மற்றும் பல இடங்களில் பணம் பறிக்கும் செயற்பாடுகள். https://www.facebook.com/reel/889326097465245- உங்களுக்கு தெரியாத வட கொரியா
ஒரு விசயம் எழுத நினைத்தேன்😂😂😂. யாழ் என்பதால் சுய தணிக்கை😂.- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
கிரைமியா ரஸ்யாவினது என்பதை உக்ரேன் ஏற்பதும் இதன் அங்கமாக அமையலாம். இப்படி ஒரு டீல் வந்தால் எல்லோருக்கும் நல்லம் என்பது நான் எப்போதும் விரும்பியது. இதற்கு வாய்புண்டு. வருமானம் வந்தால்தானே வருமான வரி😂.- மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை!
மகாவலி தமிழர்களின் காணியை தனியாருக்கு வழங்கியமையால் வன்னியில் அமைதியின்மை! Published By: Vishnu 20 Mar, 2026 | 07:24 PM (இணையத்தள செய்திப் பிரிவு) போரினால் பாதிக்கப்பட்ட வன்னி தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை, உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக, தென்னிலங்கையின் தனியார் நிறுவனத்திற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்படைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் தங்கள் காணிகளை இழந்துள்ள மக்களும், வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதோடு போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில், தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாய காணிகளை, அவர்களின் அனுமதியின்றி, உப்பளம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக சுத்தப்படுத்துவதற்கான அனுமதியை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு, 'மகாவலி அதிகார சபையினால் தனியார் காணிகளை உப்பளம் அமைப்பதற்காக வழங்கியமை தொடர்பான முறைப்பாடு' என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். உப்பளம் அமைக்கப்பட்டு வரும் நிலத்தின் உரிமையை முறையாக விசாரணை செய்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும், எனவே, நிலத்தின் உரிமை திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பொருத்தமானதாக இருக்குமென, அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். கொக்குத்தொடுவாய் பகுதியில் உப்பளத்தை அமைப்பதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அனுமதியின்றி 50 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டுடன் தொடர்பபுடைய , ஆவணங்களையும், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ளார். உப்பளத்திற்காக ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்திற்குள் தனியார் காணிகளும் மேய்ச்சல் தரையும் உள்ளடங்குவதாக நில அளவைத் திணைக்களத்தின் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவிடம், சர்ச்சைக்குரிய வகையில் காணிகள் கைமாற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உப்பளம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அந்தக் காணிகள் தனியார் காணிகள் என்பது தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, அதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை அலுவலகத்திற்கு வந்து முறைப்பாடளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தமது காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, உப்பளம் அமைக்கப்படும் இடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் காணியை இழந்த மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். https://www.virakesari.lk/article/241514- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
ட்ரம்ப் செய்கிற குறுக்காஸ் வேலைகளுக்கெல்லாம் முரட்டு முட்டுக் கொடுக்கும் ஒரு நண்பர்கள் குழு ஒன்று (அமெரிக்க இலங்கையர்கள், தமிழர்கள் தான் எல்லோரும்) இங்கே என் ஊரில் இருக்கிறது. மஸ்க் தாறு மாறாக மத்திய அரசின் வேலையாட்களை வீட்டுக்கனுப்பி குடும்பங்களை வறுமையில் தள்ளிய போது, இப்படி "ஒரு மூவாயிரம் டொலர் செக் எல்லோருக்கும் மஸ்க் அனுப்புவார்" என்று முட்டுக் கொடுத்தார்கள். தற்போது இந்த நண்பர்கள் கொடுக்கும் ஒரு முட்டு இருக்கிறது, என்ன தெரியுமா? "ட்ரம்ப் தான் ஆட்சியில் இருந்து போக முன்னர் சகல அமெரிக்கர்களுக்கும் வருமான வரியை இல்லாமலாக்கி விடுவார்" என்பது தான் அந்த முட்டு! வருமான வரி இல்லாத அமெரிக்கா😂! இதைக் கேட்டால் ட்ரம்பே அதிர்ச்சியில் போய் சேர்ந்து விடுவார்!- ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?
ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெய்லின் டெவ்லின், டாம் எடிங்டன், யி மா பிபிசி வெரிஃபை 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஹோர்மூஸ் நீரிணை அருகே அவ்வப்போது கப்பல்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்திய போதிலும், மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து ஹோர்மூஸ் நீரிணை வழியாக 100க்கும் சற்று குறைவான கப்பல்கள் கடந்து சென்றுள்ளன என்று பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் போர் தொடங்கியதிலிருந்து தினசரி போக்குவரத்து சுமார் 95% குறைந்துள்ளது. கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் கூற்றுப்படி, போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 138 கப்பல்கள் இந்த நீரிணை வழியாகச் சென்றன. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியை சுமந்து சென்றது. கப்பல் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் வழங்கிய தரவுகள், இந்த மாதத்தில் இதுவரை 99 கப்பல்கள் மட்டுமே இந்த குறுகிய நீரிணையைக் கடந்துள்ளதை காட்டுகின்றன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 5 முதல் 6 கப்பல்கள் மட்டுமே ஆகும். இந்த பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது. எந்தெந்த கப்பல்கள் சமீபத்தில் இந்த பாதையைக் கடந்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு இரானுடன் தொடர்புடையவை என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. இதில் இரானில் பதிவு செய்யப்பட்ட14 கப்பல்களும், இரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தடைகளை எதிர்கொள்ளும் பிற கப்பல்களும் அடங்கும். ஒன்பது கப்பல்கள் சீனாவுடன் தொடர்புடைய முகவரிகளைக் கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானவை, அதே சமயம் ஆறு கப்பல்கள் இந்தியாவைத் தாங்கள் சேருமிடமாகக் குறிப்பிட்டுள்ளன. இரானுடன் தொடர்பில்லாத சில கப்பல்கள் அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதையும் இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இதில் கிரேக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்களும் அடங்கும். நீரிணையை வெற்றிகரமாகக் கடக்கும் சில கப்பல்கள் வழக்கத்தை விட நீண்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதாகத் தெரிகிறது. பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஓர் எண்ணெய் கப்பலின் பயணத் தரவுகள், அது மார்ச் 15 அன்று நீரிணை வழியாகச் செல்லும்போது, நடுப்பகுதியில் உள்ள வழக்கமான பாதையைத் தவிர்த்து, இரானியக் கடற்கரைக்கு மிக நெருக்கமாகப் பயணித்ததைக் காட்டுகின்றன. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் திட்டம் என்ன? அமெரிக்க பாதுகாப்பு சிந்தனைக் குழுவான ரேண்ட் கார்ப்பரேஷனின் மூத்த ஆராய்ச்சியாளர் பிராட்லி மார்ட்டின், அந்த கப்பல் "இரானிடமிருந்து வந்த சில அறிவுறுத்தல்களுக்கு இணங்கி" செயல்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார் அந்த கப்பல் பயணித்த பாதையானது, அங்கு கண்ணிவெடிகள் இருப்பதையோ அல்லது இரானிய அதிகாரிகள் அந்த கப்பலை எளிதாக அடையாளம் காண்பதற்கான முயற்சியையோ குறிக்கலாம் என்று அவர் கூறுகிறார். கப்பல்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவதன் மூலம், அவை இரானின் கடல் எல்லைக்குள்ளும் இரானின் கடல்சார் விதிகளுக்குள்ளும் நுழைகின்றன என்று விண்ட்வார்ட் கடல்சார் பகுப்பாய்வை சேர்ந்த மிச்செல் வைஸ் பாக்மேன் கூறுகிறார். "தாக்குதல் மற்றும் கண்ணிவெடிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் இரான் இந்த நீரிணையை மூடி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதே நான் இதிலிருந்து தெரிந்துகொள்வது". "அதனால்தான் அனைவரும் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் செல்வதற்கு பதிலாக, இரானின் கடல் எல்லைப் பகுதியை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது," என்று அவர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையத்தின் மைக்கேல் கோனலும், கப்பல்கள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதை ஒப்புக்கொள்கிறார். ''வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இரானிய அதிகாரிகளுடன் அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கலாம்.'' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணையை கடந்து வந்த இந்திய கப்பல் கப்பல் போக்குவரத்தின் முன்னுள்ள அச்சுறுத்தல்கள் மோதல் தொடங்கியதிலிருந்து, இரானியக் கடற்கரையை ஒட்டி 20 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். இவை அனைத்தும் ஹோர்மூஸ் நீரிணையின் நேரடி அருகாமையில் மட்டும் நடக்கவில்லை. மார்ச் 11 அன்று, தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 'மயூரி நாரி' என்ற சரக்குக் கப்பல் அந்தப் பாதையைக் கடக்க முயன்றபோது, இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,மயூரி நாரி கப்பல் மார்ச் 11 அன்று தாக்கப்பட்டது. அந்த கப்பலின் 23 ஊழியர்களில் மூன்று பேரை இன்னும் காணவில்லை. கப்பல் தாக்கப்பட்டபோது அவர்கள் என்ஜின் அறையில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தப்பிப்பிழைத்த ஊழியர்கள் "கடலில் இரண்டு வெடிப்புகளால் தாக்கப்பட்டபோது மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகினர்" என்று அக்கப்பலின் உரிமையாளர்கள் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். அதே நாளில் கிரேக்கத்துக்குச் சொந்தமான 'ஸ்டார் க்வினெத்' மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எம்டி சேப்சீ விஷ்ணு' ஆகிய இரண்டு கப்பல்களும் தாக்கப்பட்டன. "வணிகக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் போர்க்களங்களாக மாற முடியாது," என்று எம்டி சேப்சீ விஷ்ணுவின் உரிமையாளர் பிபிசி வெரிஃபையிடம் கூறினார். இராக் அருகே கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். எரியும் கப்பலில் இருந்து தப்பிக்க 28 ஊழியர்களும் தண்ணீரில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்வி அஞ்சன் தெரிவித்தார். "அவர்கள் படை வீரர்கள் அல்ல... அவர்கள் உலகளாவிய வர்த்தகத்தை இயங்க வைக்கும் தொழில் வல்லுநர்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,துபை அருகே உள்ள வணிக கப்பல்கள் நிலவியல் அமைப்பை சாதகமாக பயன்படுத்தும் இரான் டிரோன்கள், ஏவுகணைகள், அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் கண்ணிவெடிகள் எனப் பலதரப்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு கடுமையான சவாலை ஏற்படுத்துகின்றன என்று கிங்ஸ் கல்லூரியின் ஃப்ரீமேன் வான் மற்றும் விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த அருண் டாசன் கூறுகிறார். "மெதுவாகவும் கவனமாகவும் செயல்படும் ஒரு பாரம்பரிய கண்ணிவெடி அகற்றும் கப்பல் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அவற்றைச் செயலிழக்கச் செய்வது மிகவும் கடினம்," என்று அவர் கூறினார். நீரிணையின் நிலவியல் அமைப்பையும் இரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நீரிணை குறுகலாகவும் ஆழம் குறைவாகவும் இருப்பது மட்டுமின்றி, அதன் கடற்கரைப் பகுதி மலைப்பாங்கானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹோர்மூஸ் நீரிணை இது இரான் உயரமான இடங்களிலிருந்து தாக்குதல்களை நடத்த அனுமதிக்கிறது. இதனால் கப்பல்கள் எதிர்வினையாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது. கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பல கப்பல்கள் ஏஐஎஸ் (ஏஐஎஸ் - தானியங்கி அடையாள அமைப்பு) எனப்படும் தங்களின் கண்காணிப்பு அமைப்பைத் திட்டமிட்டு அணைத்து வைப்பதாக தெரிகிறது. "இந்தக் கப்பல்களில் பெரும்பாலானவை தங்கள் கண்காணிப்பு சாதனங்களை அணைத்தபடி கடந்து செல்கின்றன" என்கிறார் கெப்லர் நிறுவனத்தைச் சேர்ந்த டிமிட்ரிஸ் அம்பாட்ஸிடிஸ். ஓமன் வளைகுடாவிற்குள் நுழையும்போது தங்களின் கண்காணிப்புக் கருவிகளை அணைப்பதன் மூலம், படகுகள் வரைபடங்களிலிருந்து மறைந்து விடுகின்றன. பின்னர் பல மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு மற்றொரு இடத்தில் மீண்டும் தோன்றுகின்றன. இது கப்பல்கள் தங்கள் இருப்பிடத்தை மறைக்க உதவினாலும், நீரிணையில் கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் கெப்லர் போன்ற நிறுவனங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. "அனைத்துத் தகவல்களும் எங்களது பகுப்பாய்வாளர்களால் நேரடிச் சரிபார்ப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன," என்று அம்பாட்ஸிடிஸ் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார். கூடுதல் தகவல் : டேனியல் பலம்போ மற்றும் ஜோசுவா சீதம் கிராபிக்ஸ் : டாம் ஷீல். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c203r13d2rzo- ‘இரான் மீதான போரில் அமெரிக்காவை நாங்கள் இழுக்கவில்லை’- பெஞ்சமின் நெதன்யாகு
தம்பர் & மக்கர் பிரைவேட் லிமிடெட் 😂 Politics makes strange bedfellows என்பார்கள். உக்ரேன் ஈயூ மெம்பர் ஒரு போதும் நேட்டோவில் இணையாது டொன்பாஸ் இராணுவம் நீக்கப்பட்ட சுயாட்சி அலகு (ரஸ்ய ஆளுகை) அல்லது இரெட்டை இறைமை அலகு (dual sovereignty) - பெயரளவில். மரியுபோல் மீண்டும் உக்ரேனிடம் ரஸ்ய ஏரி வாயு மீண்டும் சந்தைக்கு இப்படி ஒரு டீலுக்கு தம்பரை வெட்டி விட்டு, ஐரோப்பா போகக்கூடும்.- உங்களுக்கு தெரியாத வட கொரியா
என்னுடைய இரத்த உறவினர் (அவருக்கும் எனக்கும் ஒரே "பிளட் குறூப்", அப்ப இரத்த உறவினர் தானே?) ஒருவர் வட கொரியாவின் உழைப்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ரைப் றைற்றர் திருத்துபவராக இருக்கிறார். அவர் மூலம் தான் நான் தலைவன் கிம் பற்றிய சகல தகவல்களையும் பெற்று இங்கே பகிர்கிறேன் . இதை வாய் (oral) மூலம் நான் பெற்றுக் கொண்ட தகவல் என்று சொல்லக் கொஞ்சம் கூச்சமாகத் தான் கிடக்குது, என்றாலும் oral ஐ எண்டு oral தானே சொல்லலாம்😎?
Important Information
By using this site, you agree to our Terms of Use.