24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
ராணுவத் தளபதியை நீக்கியதை விட... பைத்தியக்கார தம்பரை நீக்கி இருந்தால், உலகம் உருப்படியாக இருக்கும்.
-
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம் அடிப்படையற்றது: நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் Published By: Digital Desk 1 04 Apr, 2026 | 01:59 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன முறையை எதிர்த்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நியாயமான காரணங்களுக்காக வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், ஆனால் தற்போதைய போராட்டமானது தேவையற்றது என்றும் குறிப்பிட்டார். அமைச்சருடன் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்காமல் அதனை நீதிமன்றம் ஊடாகத் தீர்த்துக் கொள்ளுமாறு அவர் வைத்திய சங்கத்திற்குத் தெரிவித்தார். இதேவேளை, வைத்தியர்கள் அரச சேவையில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம் இன்று சனிக்கிழமை (04) மதியம்; 12.00 மணியுடன் நிறைவடைந்தது. இக்கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும், குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் வாய்ப்போ அல்லது ஊதியமோ வழங்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242716
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் ஸ்டாலினை சந்தித்த சில நாட்களில் 50 ஏக்கர் நிலம் வாங்கியதை எது காட்டுகிறது ? அதேதான். ஓக்கே நாதக 12% எடுக்காது என நான் உங்களுடன் பெட் கட்டுகிறேன். எனது கணிப்பு கந்தப்புவின் போட்டியில் வெளியாகும். ஆவலோடு காத்திருங்கள் 😂 விஜை இப்படி தடுமாறியதும், பின்னர் மேலதிக பிராமணபத்திரம் கொடுத்து பிழை திருத்தியதும்…. சுத்த தற்குறி விஜை என்பதை காட்டுகிறது என்பதை நான் ஏற்கிறேன். இதையே போன தேர்தலில் சீமான் செய்தார்😂… சீமானும் ஒரு தற்குறி என்பதை நீங்களும், சிரிக்கும் அண்ணாவும் ஏற்பீர்களா?
-
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது Apr 4, 2026 - 06:53 PM வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக 1 கிலோ 970 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற வேளையிலேயே இவ்விரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த கஞ்சாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmnkbpghy000c356p9fqzljb7
-
வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்
வவுனியாவில் புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம் Apr 4, 2026 - 12:17 PM வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார். அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்ட இடத்தை யாரோ மர்ம நபர்கள் மீண்டும் தோண்டி, அதிலிருந்த தலையை மட்டும் அகற்றிச் சென்றுள்ளதாக உயிரிழந்தவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர். அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற வேறொருவரின் இறுதிச் சடங்கின் போது, அப்பகுதியில் இருந்து வீசிய துர்நாற்றம் காரணமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துர்நாற்றம் வீசிய இடத்தை பொதுமக்கள் சென்று பார்வையிட்ட போதே, சடலம் தோண்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -வவுனியா தீபன்- https://adaderanatamil.lk/news/cmnjyynmk0004356p0mjw7ncz
-
தீபச்செல்வனின் நாவல் சுங்கத்தினால் தடுத்து வைப்பு! - படைப்புகளை விடுவிப்பதாக அமைச்சர் அளித்த வாக்குறுதி காற்றில் பறந்தது?
சுங்கம் தடுத்து வைத்துள்ள தமிழ் எழுத்ததாளரின் படைப்புகளை விடுவிப்பதாக அமைச்சர் அளித்த வாக்குறுதி 'காற்றில் பறந்தது?' 04 Apr, 2026 | 02:02 PM சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். நூல்களை விடுவிப்பதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை குறித்து மீண்டும் வினவியபோது, எழுத்தாளரை இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு அமைச்சர் வேண்டிக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஜி.ஜி. சரத் ஆனந்தவினால் 'ஸ்மாரக சிலாவத' என்ற பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட, ‘நடுகல்’ நூலின் ஆசிரியராக வாசகர்கள் மற்றும் விமர்சகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்த பிரதீபன் தீபச்செல்வன், இலங்கையில் கலை மற்றும் இலக்கியத்துக்கான சுதந்திரம் இன்னும் மறுக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயம் எனக் குறிப்பிடுகிறார். “உண்மையில் எனது நூல்கள் இவ்வாறு முடக்கப்பட்டமை குறித்து நான் மிகுந்த கவலையுடனும் மன உளைச்சலுடனும் இருக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு, சுதந்திரமாகச் சிந்திக்கும் ஒரு சிந்தனையாளனுக்கு அரசாங்கம் இவ்வாறான விடயங்களைச் செய்வதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு நல்ல விடயமல்ல. உலகில் எந்தவொரு நாட்டிலும் கலை மற்றும் இலக்கியத்துக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் இன்னும் அந்த ஒடுக்குமுறை, உரிமைகளை மறுத்தல், எழுத்துச் சுதந்திரத்தை மறுத்தல் என்பன இடம்பெறுகின்றன. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.” பிரதீபன் தீபச்செல்வனின் புனைவுகள் இலங்கையின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி அந்தப் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தனது விற்பனை முகவருக்கு கையால் எழுதப்பட்ட கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக எழுத்தாளர் கூறுகிறார். “எனது புத்தகத்தின் விற்பனை முகவர் சுங்கத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட பெப்ரவரி 18 எனத் திகதியிடப்பட்ட கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் எனது புத்தகங்கள் இலங்கையின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் அந்தப் புத்தகங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சு அனுமதியுடனேயே அந்தப் புத்தகங்கள் விடுவிக்கப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.” இது தொடர்பில் தான் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவிக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய அறிவித்தலுக்கு அமைய, அமைச்சர் உடனடிப் பதிலளித்ததாகவும் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 30) இவ்விடயத்தில் தலையிடுவதாக உறுதியளித்ததாகவும் பிரதீபன் தீபச்செல்வன் தெரிவிக்கிறார். “நான் சனிக்கிழமை (மார்ச் 28) பகல் கலாசார அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் எனது புத்தகங்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்தும், அவற்றை விடுவிக்குமாறும் குறிப்பிட்டிருந்தேன். கடந்த காலங்களிலும் எழுத்தாளர்களுக்கு இவ்வாறான பல தடைகள் விதிக்கப்பட்டன, பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வாறு இன்றி நாம் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாக எழுதவும் இடமளிக்க வேண்டுமென அந்த கடிதத்தில் கோரியிருந்தேன். நான் அந்த கடிதத்தை அனுப்பி சில மணித்தியாலங்களில் - ஒரு மணித்தியாலத்திற்குள் என்று நினைக்கிறேன் - அமைச்சர் எனது நண்பர் ஒருவருக்கு செய்தி அனுப்பியிருந்தார். தான் இந்தியாவில் இருப்பதாகவும், இரண்டு நாட்களில் வந்து புத்தகங்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.செய்தி அறிவிப்புகள் அடுத்த நாள் (மார்ச் 29) ஞாயிற்றுக்கிழமை, கலாசார அமைச்சர் எனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி, திங்கட்கிழமை இலங்கை வந்தடைந்தவுடன் அந்த வேலைகளை கவனிப்பதாகக் கூறினார்.” புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஏப்ரல் 2ஆம் திகதியும் பிரதீபன் தீபச்செல்வனுக்கு அவரது படைப்புகள் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் பொறுமையாக இருக்குமாறும் அறிவித்துள்ளார். "அப்போது நான் நினைத்தேன் பழைய அரசாங்கங்களின் கொள்கையினால்தானே இந்தப் புத்தகங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் அதனால் அமைச்சர் தலையிட்டால் இரண்டு நாட்களில் இவை விடுவிக்கப்படும் என்றும் கருதினேன். ஆனால் இன்னும் புத்தகங்கள் விடுவிக்கப்படவில்லை, ஆனாலும் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாக அறியக் கிடைத்துள்ளது. கலாசார அமைச்சர் அந்த வேலைகளைச் செய்துள்ளார், பாதுகாப்பு அமைச்சு ஊடாகவும் அது குறித்து கவனிக்கப்படுவதாக இன்றும் (ஏப்ரல் 02) அமைச்சர் சொன்னார். புத்தகங்கள் விரைவில் விடுவிக்கப்படும், சற்றுப் பொறுமையாக இருக்குமாறு அவர் சொன்னார்.” South Asians & Diaspora சுங்கத் திணைக்களம் படைப்புகளைத் தடுத்து வைப்பதற்கும் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அந்தப் படைப்புகளின் ஆசிரியர் தமிழராக இருப்பதுதான் காரணமா என பிரதீபன் தீபச்செல்வன் கேள்வி எழுப்புகிறார். “ஆனால் உண்மையில் எமது புத்தகங்களை, எமது படைப்புகளை இவ்வாறு சுங்கத் திணைக்களம் தடுத்து வைப்பதையும் விசாரணைகளை முன்னெடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு தமிழ் எழுத்தாளரின் புத்தகம் என்பதால்தான் அல்லது தமிழ் மொழியில் இருப்பதால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.” மக்கள் போராட்டத்தின் ஊடாக பதவியில் இருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் முதல் பிரஜையாக இருந்தபோது, தனது நூலின் தமிழ் பிரதிகளை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்த விதத்தையும் நினைவுகூர்ந்த பிரதீபன் தீபச்செல்வன், அந்த நூல் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட பின்னர் இலங்கையின் சிங்கள வாசகர்கள் எந்தவொரு எதிர்ப்புமுமின்றி அந்த நூலை ஏற்றுக்கொண்ட விதத்தையும் நினைவுகூர்ந்தார். “தடுத்து வைக்கப்பட்ட புத்தகங்கள் - கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எனது ‘நடுகல்’' நாவலின் 60 புத்தகங்களை இலங்கைக்கு கொண்டு வந்தபோது சுங்கத் திணைக்களம் அவற்றை தடுத்து வைத்தது. அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்துக்கு நான் ஒரு ஓவியத்தை மட்டுமே பயன்படுத்தியிருந்தேன். ஆனால் அதே நாவல் சிங்களத்தில் அச்சிடப்பட்டு வந்தபோது, அதன் அட்டைப்படத்தில் எல்.ரி.ரி.ஈ துயிலும் இல்லத்தின் கல்லறை புகைப்படத்தைப் போட்டிருந்தும் சிங்கள மக்கள் எந்தவொரு எதிர்ப்பையும் காட்டவில்லை. எல்லோரும் அந்த நாவலை ஏற்றுக்கொண்டார்கள்.” இவ்வாறானதொரு நிலையில் கலை மற்றும் இலக்கியத்துக்கு இப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளை அரசாங்கமே முன்னெடுக்கிறதா என குறித்த தமிழ் எழுத்தாளர் மேலும் கேள்வி எழுப்புகிறார். “அப்படியானால் சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது இந்தப் படைப்புகளை அரசாங்கம் ஏன் தடை செய்கிறது? அரசாங்கமே இவ்வாறான ஒடுக்குமுறைகளைச் செய்கிறதா? இந்த அரசாங்கமும் அதையே செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு புத்தகம் தமிழில் எழுதப்படும்போது பிரச்சினையாகி, அதுவே சிங்களத்தில் வரும்போது பிரச்சினையாகாமல் இருப்பது எப்படி? தமிழில் எழுதுவது ஒரு தமிழர் என்பதாலா இந்தப் பிரச்சினை வருகிறது? இதுதான் இலங்கையிலுள்ள பாரபட்சமா என்ற கேள்வியும் எழுகிறது.” இலங்கையில் எந்தவொரு படைப்பாளிக்கும் தனக்கு நேர்ந்த கதி ஏற்படக்கூடாது என எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வன் மேலும் தெரிவித்திருந்தார். “எனது புத்தகங்கள் விடுவிக்கப்படுவதோடு மாத்திரம் இது முடிந்துவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அரசாங்கத்தின் கொள்கை ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். இனிமேல் இலங்கையில் எந்தவொரு தமிழ் எழுத்தாளருக்கு மாத்திரமல்ல, எந்தவொரு படைப்பாளிக்கும் தனது புத்தகங்கள் குறித்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடக்கூடாது என, நான் பிரார்த்திக்கிறேன்.” பிரதீபன் தீபச்செல்வனின் புனைவுப் படைப்பின் 360 பிரதிகளை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்ததன் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சித்த தணிக்கையானது, பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியாகும் என சுதந்திர ஊடக இயக்கம் ஏப்ரல் 2ஆம் திகதி கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த அமைப்பின் அழைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் திலீஷா அபேசுந்தர ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையினூடாக, எழுத்தாளர் தீபச்செல்வனின் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளைத் தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திடம் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அவையாவன, • இந்தப் படைப்புகளைத் தடுத்து வைப்பது தொடர்பில் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய தரப்பு எது? • இந்தப் படைப்புகளின் உள்ளடக்கம் சட்டவிரோதமானதாகவோ அல்லது தேசியப் பாதுகாப்புக்கு பாதகமனதாகவோ அமையுமா? அவ்வாறெனில் அது எவ்வாறு? • சுங்க விடுவித்தல் பணிகளின் போது இலக்கியப் படைப்பு தொடர்பான விடயங்களைத் தீர்மானிப்பதற்கு சுங்கத் திணைக்களத்திடம் உள்ள துறைசார் நிபுணத்துவம் என்ன? என்பனவாகும். இலங்கைச் சுங்கத் திணைக்களம் இந்தக் கேள்விகளுக்கு எவ்வாறான பதில்களை வழங்கினாலும், ஒரு படைப்பாளிக்குரிய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அவரது வாசகர்களுக்குரிய அறிந்து கொள்ளும் உரிமையை மீறுவதற்கே அவர்கள் முறையற்ற விதத்தில் தலையிட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சுங்கத் திணைக்களம் என்பது ஒரு அரச நிறுவனம் என்பதால், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பேணப்பட வேண்டிய வகைக்கூறலிலிருந்து அரசாங்கமும் விலகிச் செல்ல முடியாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242715
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விஜை இன்று மீண்டும் திருத்தப்பட்ட வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.ஒரு வேட்பு மனுவை சரியாக நிரப்பத்தெரியாத ஒருவர் நாட்டை எப்படி ஆளப்போகிறார்.2 தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது 2 மனுக்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு வேண்டாமா?தேர்தல் வியூக வேட்பாளர்கள் வேறு இருக்கிறார்கள்.அவர்களுக்கு தலைவரின் வேட்பு மனுவையாவது பரசீலிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?அத்தக்கட்ணியைப் பொறுத்தவரை அந்தக் கட்சியின் தலைவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் கட்சிக்கு எதிர்காலமே இல்லை என்பது தெரியாதா?இதனால்தான் தற்குறிகளின் அரசியல் என்று கூறுகிறார்கள்.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
எந்த வெளிஉதவி என்றாலும், முழுமையாக இரான் கட்டுப்பாட்டில். இரான் அதுவாக தொழில்நுட்ப தந்திரோபாயத்தை வகுக்கிறது. Iran’s Network of Cameras Bolsters Air Defenses, Expert Says https://www.wsj.com/livecoverage/iran-war-news-2026/card/iran-s-network-of-cameras-bolsters-air-defenses-expert-says-IqjSSuOcGNrxzsrp52i8?gaa_at=eafs&gaa_n=AWEtsqdtDIAuWi3nByKGotTMrdpBdFKcv32QwkCV7o0lH6zvzRNOsDUueqZVQrOAsNk%3D&gaa_ts=69d10da6&gaa_sig=djYnodT3u1JhXquFj-lEktr3htYIG7V3y2zc1_GPF60TBP6AG9t5OEYjl8gMyhtzFiEGoiQqF5ScZd_3H8d82A%3D%3D
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://www.facebook.com/reel/1496807975337768
-
போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்?
போரின் நடுவே இரானில் அமெரிக்க விமானப்படை வீரரை தேடும் பணி எவ்வளவு கடினமாக இருக்கும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எதிரிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வீழ்த்தப்பட்ட விமானங்களின் வீரர்களை மீட்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ பிரிவுகள் சிறப்பு பயிற்சி பெறுகின்றன. கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உறுதிப்படுத்தப்பட்டால், பல தசாப்தங்களாகத் தொடரும் அமெரிக்காவின் போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இதுவே மிகவும் சமீபத்தியதாக இருக்கும். பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் (CBS) நியூஸ் தகவல்படி, விமானத்தில் இருந்த இரண்டாவது நபரைத் தேடும் பணி இரானின் உட்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு (Combat Search and Rescue - CSAR) பணிகள், அமெரிக்க மற்றும் நட்பு நாட்டு ராணுவங்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பணிகளிலேயே மிகவும் சிக்கலான மற்றும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பணிகளாகக் கருதப்படுகின்றன. அமெரிக்காவில், விமானப்படையின் எலிட் (Elite) பிரிவுகள் சிஎஸ்ஏஆர் (CSAR) நடவடிக்கைகளுக்காக பிரத்யேகமாகப் பயிற்சி பெற்றுள்ளன. விமானங்கள் இழக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள போர் பகுதிகளுக்கு அருகில் அவர்கள் முன்கூட்டியே பணியமர்த்தப்படுகிறார்கள். போர்க்கால தேடுதல் மற்றும் மீட்பு என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால், சிஎஸ்ஏஆர் பணிகள் என்பது சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் விமானிகள் மற்றும் தனித்துவிடப்பட்ட துருப்புகள் உள்ளிட்ட உதவி தேவைப்படும் நபர்களைக் கண்டறிவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும் அவர்களை மீட்பதற்கும் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் ஆகும். மனிதநேயப் பணிகளின் போதோ அல்லது பேரிடர்களுக்குப் பின்னரோ நடைபெறும் வழக்கமான தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு மாறாக - சிஎஸ்ஏஆர் பணிகள் ஆபத்தான அல்லது மோதல்கள் நிறைந்த சூழலில் நிகழ்கின்றன. சில சந்தர்ப்பங்களில், அதாவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு முயற்சியைப் போல - இந்த நடவடிக்கைகள் எதிரி நாட்டின் எல்லைக்குள் உள்ள தொலைதூர பகுதிகளில் கூட நிகழலாம். சிஎஸ்ஏஆர் பணிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தப்படுகின்றன, அவற்றுக்கு ஆதரவாக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் அந்தப் பகுதியில் தாக்குதல்களை நடத்தவும் ரோந்துப் பணியில் ஈடுபடவும் மற்ற ராணுவ விமானங்கள் தயார் நிலையில் இருக்கும். இரானில் நடந்ததாகக் கூறப்படும் மீட்பு நடவடிக்கை போன்ற ஒன்றில், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் அந்தப் பகுதியில் தேடும் பணியில் குறைந்தது 24 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' (Pararescue Jumpers - வான்வழி மீட்பு வீரர்கள்) ஈடுபடுவார்கள் என்று பாராரெஸ்க்யூ ஸ்குவாட்ரனின் முன்னாள் தளபதி ஒருவர் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார். தேவைப்பட்டால் அவர்கள் விமானங்களில் இருந்து குதிக்கத் தயாராக இருப்பார்கள் என்றும், தரையிறங்கியதும் காணாமல் போன ராணுவ வீரரைத் தொடர்பு கொள்வதே அவர்களின் முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அவர்களைக் கண்டுபிடித்தவுடன், பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ் தேவைப்பட்டால் மருத்துவ உதவி வழங்குவார்கள், எதிரியிடமிருந்து தப்பித்து, தாங்கள் மீட்கப்படக்கூடிய ஒரு இடத்திற்குச் செல்வார்கள் என்று சிபிஎஸ் நியூஸ் கூறுகிறது. "இது மிகவும் திகிலூட்டக்கூடிய மற்றும் அபாயகரமான ஒரு பணி என்று சொல்வது கூட அதை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கும்," என்று அந்த முன்னாள் தளபதி சிபிஎஸ் நியூஸிடம் கூறினார். "உலகம் முழுவதும் இதைச் செய்வதற்காக தான் அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் விமானப்படையின் 'சுவிஸ் ஆர்மி நைஃப்ஸ்' (Swiss Army knives - பன்முகத் திறன் கொண்டவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்." என்கிறார் அவர். வெள்ளிக்கிழமை இரானில் இருந்து வெளிவந்த சரிபார்க்கப்பட்ட வீடியோ ஒன்றில், இரானின் குசெஸ்தான் மாகாணத்திற்கு மேலே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம் இயங்குவதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க ராணுவ வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க விமானப்படையிடமே உள்ளது. (விளக்கப் படம்) சிஎஸ்ஏஆர் குழுக்கள் யாரை மீட்க முயல்கின்றனரோ, அதே அமெரிக்க வீரர்களைக் கண்டறிய எதிரிப் படைகளும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கும் என்பதால், இந்தப் பணிகள் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டவை. முன்னாள் அமெரிக்க கடற்படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் நிபுணர் ஜொனாதன் ஹாக்கெட், பிபிசியின் 'வேர்ல்ட் டுநைட்' (World Tonight) நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு மீட்புக் குழுவின் முன்னுரிமை 'உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைத் தேடுவதாக' இருக்கும் என்று கூறினார். "தேடப்படும் அந்த நபர் கடைசியாக இருந்ததாகத் தெரிந்த இடத்திலிருந்து, அவர்கள் பின்னோக்கிச் சென்று தேடுவார்கள்; ஒரு கடினமான நிலப்பரப்பில் வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ் அந்த நபர் நகரக்கூடிய வேகத்தின் அடிப்படையில் அவர்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்துவார்கள்," என்று ஹாக்கெட் கூறினார். "இந்த வகையான மீட்புப் பணி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், சிறப்பு உதவி தேவைப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்," என்று ஹாக்கெட் கூறினார். "இதில் அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் குழுக்களுடன் முன்னதாகவே தொடர்பு கொள்ளப்பட்டிருக்கலாம், இது ஏதேனும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது." படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகளின் வரலாறு வான்வழிப் போர்க்கால மீட்புப் நடவடிக்கைகளுக்கென நீண்ட வரலாறு உள்ளது. முதலாம் உலகப் போரின்போது, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் சக வீரர்களை மீட்பதற்காக பிரான்சில் விமானிகள் தன்னிச்சையாக விமானங்களைத் தரையிறக்கிய காலத்திலிருந்து இது தொடங்குகிறது. அமெரிக்க ராணுவத்தின் பாராரெஸ்க்யூ பிரிவுகளின் வரலாறு 1943-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. அப்போது, இரண்டு போர்கால மருத்துவர்கள் காயமடைந்த வீரர்களுக்கு உதவ அப்போதைய பர்மாவுக்குள் (தற்போது மியான்மர்) பாராசூட் மூலம் குதித்தனர். உலகின் முதல் ஹெலிகாப்டர் மீட்பு ஒரு வருடம் கழித்து நடந்தது, அப்போது ஒரு அமெரிக்க லெப்டினன்ட் ஜப்பானியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து நான்கு வீரர்களை மீட்டார் என்று ஸ்மித்சோனியனின் ஏர் & ஸ்பேஸ் இதழ் கூறுகிறது. இந்தச் சம்பவம் போரில் முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதையும் குறித்தது. மோதல்கள் முடிந்த உடனேயே அமெரிக்காவில் முறையான தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவுகள் முதன்முதலில் நிறுவப்பட்டன. ஆனால் நவீன சிஎஸ்ஏஆர் வியட்நாம் போரின் போதுதான் தொடங்கியது. பேட் 21 (Bat 21) என்று அழைக்கப்படும் ஒரு நடவடிக்கையில், வட வியட்நாமியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தின் விமானியை மீட்க முயன்றபோது பல விமானங்கள் மற்றும் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அந்தப் போரின் காரணமாக, சிஎஸ்ஏஆர் நடவடிக்கைகள் பெருமளவில் விரிவுப்படுத்தப்பட்டன, அவை மேலும் பெரிய அளவிலும் சிக்கலானதாகவும் மாற்றப்பட்டன. அந்த அனுபவம் ராணுவத்தின் யுக்திகளையும் நடைமுறைகளையும் மேம்படுத்த உதவியது, அவையே பிற்காலத்தில் நவீன மீட்பு நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்தன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தென்கிழக்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மீட்புப் பணிகள், நவீன போர்க்காலத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வடிவமைக்க உதவின. (1975-இல் கம்போடியாவில் ஹெலிகாப்டரை நோக்கி ஓடும் அமெரிக்க பாராரெஸ்க்யூ குழுவினர்) அமெரிக்க விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள் ஒவ்வொரு அமெரிக்க ராணுவப் பிரிவும் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட சிஎஸ்ஏஆர் திறன்களைக் கொண்டிருந்தாலும், ராணுவ வீரர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான முதன்மைப் பொறுப்பு அமெரிக்க விமானப்படையிடமே உள்ளது. முக்கியமாக இந்தப் பணி ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் ஒரு பகுதியான 'பாராரெஸ்க்யூ ஜம்பர்ஸ்' என்று அழைக்கப்படுபவர்களால் நடத்தப்படுகிறது. பாராரெஸ்க்யூவின் அதிகாரப்பூர்வ முழக்கம் 'மற்றவர்கள் வாழ்வதற்காகவே நாம் இவற்றைச் செய்கிறோம்' (These Things We Do, That Others May Live) என்பதாகும்; அவர்களின் பணி, அமெரிக்கப் படை வீரர்களுக்கு அவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்று வழங்கப்பட்ட பரந்துபட்ட வாக்குறுதியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இவர்கள், போர் வீரர்களாகவும் மருத்துவ உதவியாளர்களாகவும் உயர்தர பயிற்சி பெற்றவர்கள், மேலும் அமெரிக்க ராணுவத்திலேயே மிகவும் கடினமானதாகக் கருதப்படும் தேர்வு மற்றும் பயிற்சிப் பாதைகளில் ஒன்றைக் இவர்கள் கடந்து வருகிறார்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை சுமார் இரண்டு ஆண்டுகள் எடுக்கும் இந்தத் தேர்வு மற்றும் பயிற்சி செயல்பாட்டில், பாராசூட் மற்றும் டைவிங் பயிற்சி, அத்துடன் நீருக்கடியில் அழித்தல் (underwater demolition) தொடர்பான அடிப்படை பயிற்சி, கடினமான சூழல்களில் உயிர் பிழைத்தல், எதிர்ப்பு மற்றும் தப்பித்தல் பயிற்சி மற்றும் முழுமையான சிவில் மருத்துவ உதவியாளர் படிப்பு ஆகியவை அடங்கும். போர்க்கள மருத்துவம், சிக்கலான மீட்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுதங்கள் குறித்த சிறப்புக் கல்வி மற்றும் பயிற்சிகளையும் அவர்கள் பெறுகிறார்கள். களத்தில், இந்த அணிகள் சிறப்புப் போர்கால மீட்பு அதிகாரிகளால் வழிநடத்தப்படுகின்றன; மீட்புப் பணிகளைத் திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது மற்றும் செயல்படுத்துவது இவர்களின் பொறுப்பாகும். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form சமீபத்திய அமெரிக்க மீட்பு நடவடிக்கைகள் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் முழுவதும் பாராரெஸ்க்யூ குழுக்கள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டன. காயமடைந்த அல்லது வெளியேற்றப்பட வேண்டிய அமெரிக்க மற்றும் நட்பு நாட்டுத் துருப்புகளை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான நடவடிக்கைகளை இவை மேற்கொண்டன. 2005-ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க நேவி சீல் வீரரை மீட்பதில் விமானப்படையின் பாராரெஸ்க்யூ குழுக்கள் ஈடுபட்டன; தனது குழு திடீரென தாக்கப்பட்டு, குழுவின் பிற மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பிறகு ஆப்கானிய கிராமம் ஒன்றில் அந்த வீரர் தஞ்சம் புகுந்திருந்தார். அவரை மீட்ட இந்தச் சம்பவம் பின்னர் 'லோன் சர்வைவர்' (Lone Survivor) என்ற ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் விமானிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் சமீபத்திய தசாப்தங்களில் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. 1999-ஆம் ஆண்டில், செர்பியாவின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-117 (F-117) ஸ்டெல்த் போர் விமானத்தின் விமானி பாராரெஸ்க்யூ வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். 1995-ஆம் ஆண்டில் போஸ்னியாவில் நடந்த ஒரு புகழ்பெற்ற சம்பவத்தில், அமெரிக்க விமானி ஸ்காட் ஓ'கிராடி, தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகும் ஆறு நாட்கள் பிடிபடாமல் தப்பித்தார். பின்னர் விமானப்படை மற்றும் கடற்படைப் படையின் கூட்டு சிஎஸ்ஏஆர் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxrp13pkk6o
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பிரேமலதா ஒப்பந்தம் கைஎழுத்தான கையோடு புதுக்காருடன் போஸ் கொடுத்தது எதைக்காட்டுகிறது. 12 வீதத்துக்குமேல் நான் தயார் உங்கள் கணிப்பையும் சொல்லிவிடுங்கள்.நாதக எவ்வளவு ,தவெக எவ்வளவு?
- Today
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இதை நான் எழுத நினைத்தேன்… வெறும் வாயை மெல்லும் அங்கிள்களுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட கூடாது என தவிர்த்துவிட்டேன். நீங்கள் எழுதலாம்…குரு…கு…குறட்டை விட்டால் குற்றமில்லை😂
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பிரேமலதா திமுக கூட்டணிக்கு வாக்கு கொண்டு வருவார் எனவே அவருக்கு பெரிய பெட்டி. சீமான் திமுக எதிர்வாக்குகளை பிரிப்பார் எனவே அவருக்கு சிறிய பெட்டி. பிரேமலதா பெட்டி வாங்குவதால் சீமான் பெட்டி வாங்குவதை யாரும் கண்டுகொள்ள கூடாது என்கிறீர்களா? நீங்கள் பிரேமலதா பெட்டி வாங்கியதை பக்கதில் இருந்து பார்தீர்களா? அல்லது இது சீமானின் களவை மறைக்க மட்டும் நீங்கள் பாவிக்கும் பிரத்யேக முட்டா?😂 நாதக 15% எடுக்கும் என்கிறார்கள் பலர். வாத்தியார் அண்ணை பெட் கட்டியுள்ளார். உங்களிடம் பலமுறை கேட்டு விட்டேன். 12% என பெட் கட்டுவீர்களா?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
கருத்துத்திணிப்புகள் இப்பொழுதும் நாதகவை மற்றவர்களுக்குள் அடக்குகிறார்கள். அவர்களின் கருத்துத்திணிப்புகள் படி நாதக 4.5 வீதத்தை தாண்டாதாம். இன்னும் ஒரு மாதத்தில் முடிவுகள் வரும் அப்பொழுது பார்ப்போம்.விஜையின் வருகை திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பதால் திமுகவுக்கு சாதகமான நிலை போன்று இருக்கிறது. ஆனால் கடைசி நேர வாக்காளர்கள் திமுக அகற்ற வேண்டும் என்றால் அதிமுகவையை தமது தெரிவாக எடுத்துக்கொள்வார்கள். விஜை இந்தத் தேர்தலுடன் நடிக்கப் போய்விடுவார். நாதக தனது 8 வீத வாக்கு வங்கியைத் தக்கவைத்தால் அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். பக்கத்தில் நின்று பெட்டியை வாங்கிக் கொடுத்தவர்கள் எழுதுகிறார்கள். இவர்களுக்கும் ஒன்றிரண்டு பெட்டி கிடைத்திருக்காதா?பெட்டியைுயும்வாங்கி தம்பிக்கு ராஜியசபா பதவியையும் வாங்கிலாண்ட்றோவர் காரினையும் வாங்கி முன்னால் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து அம்மா மகனுக்கு சீற் கொடுத்து விட்டு தொண்டர்களுக்கு அல்வா கொடுத்த கட்சிகளை எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இதை முன்பு அருமையாக 1-2 தரம் பாவித்ததாக தகவல் இருக்கிறது. இரானின் சொந்த தயாரிப்பா அல்லது ரசிய / சீன உதவியா? சீனா, ருசியா முதலில் இரானுக்கு இழப்பு என்றாலும் (எவ்வளவு )நின்று பிடிக்கும், அதாவது எவ்வளவு தூரம் us / மேட்ற்கு / இஸ்ரேல் ஐ இரானால் சிக்கவைக்க முடியும் என்பதை பொறுத்தும் / அறிந்தும் உதவிகள்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஒரு கோவில் திருவிழாவின் போது 25 குடும்பங்களு வீடு கட்டி குடுத்துள்ளார் என்று வேறு ஒரு பதிவில் பார்த்தேன்.உபயகாரர்கள் போய் சாதரண ஒரு மாம்பழம்தை 2 லட்சம் 3 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கும் காலத்தில் இவரது செயல் மிகவும் பாராட்டத்தக்கது.உங்கள் பணியும் தொடரட்டும்.நான் சும்மா வேலை தடங்கலின்றி நடக்கட்டும் என்பதற்காக ஏதாவது சொல்வேன்.கண்டு கொள்ள வேணாமே.🖐
-
உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு !
ஆழ்ந்த இரங்கல்!
-
குட்டிக் கதைகள்.
Ssproedtonc989 m9v0iLg6 921r05ii7cf9cgm5f 9g3à geh:5t0laa602 · *அருமையான பதில்!* ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், "உலகிலேயே 'காதலின் சிகரம்' என்று அழைக்கப்படும் இடம் எது?" என்று கேட்டார். 🥰" வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், "தாஜ் மஹால்!" என்று முழங்கியது. ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் *ராமர் சேது* (Ram Setu) என்று பதிலளித்தான். ஆசிரியர் அவனை எழுந்து நிற்குமாறு கூறினார். "நீ என்ன சொல்ல வருகிறாய்...?" 👇" அந்தச் சிறுவன் எழுந்து நின்று பின்வருமாறு கூறினான்: 👉" "ராமர் சேதுவானது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தன் மனைவியின் சடலத்தைப் புதைப்பதற்காக அல்ல; மாறாக, தன் மனைவியை மீட்டு வருவதற்காகவே ஸ்ரீராமரால் கட்டப்பட்டது!!! 👉"ஸ்ரீராமர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனைவிக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து, பெண்களின் கண்ணியத்தைப் போற்றிக் காத்தார்; ஆனால், ஷாஜகானுக்கோ பல மனைவியரும், துணைவியரும், அடிமைப் பெண்களும் இருந்தனர். 👉" ராமர் சேதுவானது, ஸ்ரீராமரின் படையில் இருந்த வீரர்களால் கட்டப்பட்டது; ஆனால் தாஜ் மஹாலோ, ஒரு பெரும் பஞ்ச காலத்தில் முகலாயர்களால் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களால் கட்டப்பட்டது. 👉" மேலும், அந்தச் சேதுப்பாலத்தைக் கட்டியவர்களுக்கு ஸ்ரீராமர் முழுமையான மரியாதையை அளித்தார். 👉"'இனி உலகில் இது போன்றதொரு அதிசயம் வேறெங்கும் நிகழ்ந்துவிடக் கூடாது' என்பதற்காக, ஸ்ரீராமர் அந்தத் தொழிலாளர்களின் கைகளைத் துண்டிக்கவில்லை." 👌" ஆசிரியரும் மற்ற மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்திய வரலாறு ஒரு புதிய கண்ணோட்டத்தில் 'மீண்டும் எழுதப்பட' வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய வரலாற்றை 👉" மீண்டும் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில், தயவுசெய்து இதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.! [[ பகிர்வு பதிவு ]] Voir la traduction......!
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
தேடிய உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் காட்சி. பார்வைக்கு நம்பமாக இருக்கிறது. உறுதிப்படுத்தப்படவிவில்லை.
-
ஆடல் - கிரிசாந்
காமத்தின் அத்தனை விருப்பங்களையும் வார்த்தைகளில் உதிர்த்து விட்டு நுரை முட்டைகளைத் தாவித் தாவி பிடித்து மகிழும் சிறுவர்கள் போல் திரும்புகிறார்கள் ..........! 🙂 சுவையான விவாதங்கள் ...... நன்றி கிருபன் .......!
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஈரான் இன்று அடித்த ஏவுகணையும் சென்ற வாரம் இஸ்ரேலுக்கு அடித்த Khorramshahr-4 (குஹ்யபேர்) உலகில் இதுவரையில் பாவனையில் இல்லாதா தொழில்நுட்பம் சீனா ஈரானுக்கு இதை கொடுத்து இருக்க வேண்டும் புதிய passive - Radar system மும் பாவிக்க தொடக்கி இருக்கிறார்கள் இதும் ரசியா அல்லது சீனா கொடுத்து இருக்கலாம் இன்று அடித்த ஏவுகணை ரேடார்களின் உதவி இன்றி தானியங்கியாக இயங்க்கி இலக்கை அழிக்க கூடியது
-
'அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!' உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக
https://tamil.oneindia.com/news/puducherry/vijay-wrongly-mention-bjp-candidate-name-instedad-of-tvk-candidate-in-puducherry-787081.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cardsதிடீரென பாஜகவுக்கு ஓட்டு கேட்ட விஜய்.. ஷாக்கான தவெக வேட்பாளர்.. பாவம்யா அவரே ‘கன்ஃபியூஸ்' ஆகிட்டாரு! By Nantha Kumar R Published: Saturday, April 4, 2026, 15:09 [IST] Subscribe to Oneindia Tamil புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதல் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விஜய் தனது தவெக வேட்பாளருக்கு பதில் அவரை எதிர்த்து களமிறங்கி உள்ள பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சம்பவம் நடந்தது. புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்து கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தை போலவே புதுச்சேரியில் தனித்து களமிறங்கி உள்ளது. Also Read "இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன்" இதையடுத்து விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை முதல் புதுச்சேரியில் திறந்த வாகனத்தில் நின்று விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். மணவெளி வேட்பாளருக்கு ஆதரவாக.. புதுச்சேரியின் மணவெளி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் ராமு போட்டியிடுகிறார். தவளக்குப்பம் பகுதியில் இன்று விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரண்டு நின்ற தொண்டர்கள் மத்தியில் பிரசார வாகனத்தின் மேல் நின்று விஜய் பேசினார். விஜய் அருகே மணவெளி சட்டசபை தொகுதியின் தவெக வேட்பாளர் ராமு நின்றிருந்தார். பெயரை மாற்றி சொன்ன விஜய் இந்த சமயத்தில் விஜய், ''மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்க'' என்று கூறினார். இதனால் தவெக வேட்பாளர் ராமு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தனது பெயர் செல்வம் இல்லை. ராமு என்று கூறினார். இதையடுத்து சுதாரித்த விஜய், ''ராமுவிற்கு ஆதரவு கொடுங்கள்'' என்று கூறினார். Recommended For You Read more at: https://tamil.oneindia.com/news/puducherry/vijay-wrongly-mention-bjp-candidate-name-instedad-of-tvk-candidate-in-puducherry-787081.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அண்ணன் ஆட்சிக்கு வந்தால் முன்னைய ஆட்சியில் வாங்கிய கடன்களை திருப்பிக் செலுத்தமாடாராம். செலுத்த வேண்டிய எல்லா கடன்களும் தள்ளுபடி செய்யப்படுமாம். 😂