stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
அமெரிக்கா மூழ்கடித்த இரான் கப்பல் இலங்கை அழைத்ததால் வந்ததா?
சும்மா ஒரு சம்பிரதாயத்திற்கு கண்ட இடத்தில் அழைப்பு விடுவது வழமை, அதற்காக அதிகார பூர்வ அழைப்பில்லாமல், நாட்டின் இன்றைய இக்கட்டு நிலையை மனதிற் கொள்ளாமல், யாரும் வந்த வழியில் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று செல்வதற்கு அவர்கள் ஒன்றும் வழிப்போக்கர்கள் அல்ல. இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள் என்று கூறப்பட்டது பின் அவர்கள் இசைக்கலைஞர்கள் என்கிறார்கள். இப்போ அதுவல்ல பிரச்சினை, இரானே இலங்கையின் மனிதாபிமான செயலை பாராட்டியிருக்கிறது. அனுரா எதை செய்தாலும் அதை அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை ஆட்சியிலிருந்து துரத்தியடிப்பதே நாட்டில் இன்றைய பெரும் பிரச்சனை. இல்லையென்றால்; இவர்களது ஊழல்கள் வெளிவரும், மக்களிடம் இவர்களுக்கு இருந்த செல்வாக்கு சரியும், சிறை செல்ல வேண்டி வரும், அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கும், சும்மா இருந்து மக்களை வதைத்து நாட்டை சூறையாடும் கலாச்சாரம் மாறும் என்கிற பயப்பீதியில் என்னென்னவோ தந்திரங்கள், குற்றச்சாட்டுக்கள். இவர்களின் எந்த தந்திரமும் பலிக்காது. எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. இவர்கள் எதையெதை நினைத்து பயப்படுகிறார்களோ அதுவெல்லாம் நடந்தேறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன.
-
வீதியோரம்.
கதையை மிக விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்த்தியுள்ளீர்கள். இறுதிப் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பழிவாங்குதல் சட்டப்படி குற்றம் என்பதை உறுத்தியது. நீங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டத்திற்கப்பாற்பட்ட தீர்வைக் கொடுத்து அதற்கான தண்டனையக் கதையின் நாயகர்களுக்குக் கொடுக்காமல் அது தவறு, தண்டிக்கப்படலாம் என்ற தொனியில் முடித்தது அருமை. இரண்டாம் பாகத்துக்கான வாடை தெரிகிறது.
- Today
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
வாழ்த்துக்கள் மகளே. பிரான்ஸில் இந்த ஊராட்சி தேர்தலில் 120 க்கும் மேற்பட்ட இளையோர்கள் வேட்பாளர்களாக பங்கு பற்றி அதில் அநேகமானவர்கள் வென்றிருக்கிறார்கள். இதற்கான அத்திவாரம் தமிழ் தேசியத்திற்காக மட்டுமே கட்டியெழுப்பப்பட்டது. என்றாவது ஒரு நாள் ஒரே புள்ளியில்......
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
றியாஸ் குரானாவின் விமர்சனங்களில் எந்த வகையான சமரசமும் என்றும் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையும் அப்படியான ஒன்றே. ஓரிரு வருடங்களின் முன்னர் இவருடைய இளையராஜாவின் இசை பற்றிய ஒரு விமர்சனத்தை நான் இங்கு களத்தில் பகிர்ந்தேன் என்று நினைக்கின்றேன். விமர்சனம் எவ்வளவு கறாராக எழுதப்பட்டாலும், றியாஸின் மொழியில் இருக்கும் பண்பாடு கவனிக்கத் தக்கதும், மெச்சத் தக்கதும் ஆகும். இவ்வாறான மொழிநடையில் எழுதப்படும் விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்கள் இல்லாமல், நையாண்டிகள் இல்லாமல், மேம்போக்கான ஒற்றை வரி நிராகரிப்புகள் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனப் போக்கை உருவாக்குகின்றன. ஜெயமோகன் இந்துத்வா அமைப்புகளின் ஒற்றைப்படையான அரசியலுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்தாலும், அவரது ஆக்கங்கள் ஒரு ஒற்றை தன்மையுள்ள சமுதாயத்தை, ஒரே பண்பாட்டையே வலியுறுத்துகின்றன என்பது என் அனுபவமும், விமர்சனமும் ஆகும். இந்தியா, இந்தியர்கள் என்பதை ஒரு அலகாகக் காட்டும் அவரது நிலைப்பாடு அரசியலுக்காகவோ அல்லது ஆன்மீகத்துக்காகவோ அவரை ஒரு முன்னோடியாக கருதும் நோக்கங்களை ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் செய்தது. ஆனாலும், இவரது மொழிவளமும், அழகியலும், ஆக்கங்களில் வெளிப்படும் தனிமனித தவிப்புகளும் இவரை எங்கள் தலைமுறையின் மிகச்சிறந்த தமிழ் படைப்பாளிகளில் ஒருவராக்கியது. விக்கி பக்கங்களுக்கு மாற்றாக தமிழ் விக்கி என்னும் ஒன்றை உருவாக்கியுள்ளார். விக்கியில் எவரும், எதுவும் எழுதலாம் என்னும் போக்கால், திட்டமிடப்பட்டே பல மோசடிகள் செய்யப்படுகின்றன என்பதை எதிர்த்தே தமிழ் விக்கி ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை தமிழ் விக்கி சரியான திசையில் செல்வதாகவே எனக்குப்படுகின்றது. ஞானபீடம் விருது போன்றவற்றை வழங்கும் அமைப்புகள் தமிழ் மொழிக்கு நியாயம் செய்யவில்லை என்பதே என் எண்ணமும் ஆகும். தகுதியற்ற வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்கப்படுவதற்கு முன்னர் பல வருடங்களாக தமிழுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளையும், படைப்புகளையும் தமிழர்களும் கண்டு கொள்ளவில்லை, உலகமும் கண்டு கொள்ளவில்லை. நாமே நமக்கு ஒன்றை உருவாக்கிக் கொள்வது சரியான ஒரு மாற்றுவழியாகவே தோன்றுகின்றது. பணத்துக்காக, இலாபங்களுக்காக சமரசம் செய்து கொள்ளும் படைப்பாளிகள் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். அதே போலவே, எந்த சமரசமும் இன்றி, தங்கள் அழகியலை, தங்கள் அரசியலை முன்வைப்பவர்களும் இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். இன்னொரு புதிய விருதால், அது எவ்வளவு தான் பணப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தாலும், இலட்சியவாதிகள் மாறப் போவதில்லை. ஈழத்து இன்றைய படைப்பாளிகளான சயந்தனையும், அனோஜனையும், அகரமுதல்வனையும் நான் அறிந்து கொண்டது ஜெயமோகனின் கட்டுரைகளில் இருந்தே. பேராசிரிய சிவத்தம்பி, மு. தளையசிங்கம் என்று பல முன்னோர்கள் பற்றிக் கூட இவர் எழுதிய கட்டுரைகளே அவர்கள் மேல் பார்வையை திருப்பியது. அது போலவே இந்த விருதும் அமையும் என்று நம்புகின்றேன். ஜெயமோகன் முன்னிறுத்தும் ஒற்றை பண்பாட்டை, ஒரு தேசத்தை, அவரது ஆன்மீகத்தை என்றும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. விதி என்றும், கர்மா என்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் நாங்கள் ஏற்றுக் கொளவதில்லை.
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
எனக்கு அடக்க முடியாமல் ஒண்டுக்கு அடிக்க வருது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜிப்பை கழற்றி ஒரு ஓரமாக ஒண்டுக்கு அடிக்க நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
20 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் கோயில் ஒன்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாங்கள் கதைக்கும்போது இடையில் பிரெஞ்சில் ஏதோ கதைத்துவிட்டேன். அங்கிருந்த தாய்லாந்துக்காரர் எம்மருகில் வந்து நீங்கள் பிரான்சிலிருந்து வந்துள்ளீர்களா என்று பேசுக் கொடுத்தார். நாமும் பிரெஞ்சு பேசும் ஒருவரைச் சந்தித்த ஆவலில் அவரிடம் பேசினோம். அப் பிரதேசத்தில் பார்த்து ரசிக்கக் கூடிய இடங்களைப் பற்றிய தகவல்களைக் கூறினார். கடைசியாக, இங்கு கல் பதித்த தங்க நகைகளை மிகவும் மலிவாக ஒரு இடத்தில் வாங்கலாம் என்றார். போதாக்குறைக்கு எமது ஆட்டோ ஓட்டுனரிடம் ஏதோ அவர்கள் மொழியில் கூறி அனுப்பி வைத்தார். நாங்களும் சில இடங்களைப் பார்த்துவிட்டு இறுதியாக ஓட்டுனரிடம் நகைக்கடைக்குப் போகலாம் என்றோம். அது ஒரு ஒதுக்குப் புறமாக இருந்தாலும் மிகப் பெரிய கடை. ஏராளமானவர்கள் நகை வாங்குவதைப் பார்க்க முடிந்தது. நாமும் இரண்டு கல் வைத்த நகைகளை வாங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் தங்கியிருந்த விடுதிக்கு வந்தோம். அன்று இரவு அடுத்தநாள் உலாத்தலைத் திட்டமிடுவதற்காக வழிகாட்டிப் புத்தகத்தைப் புரட்டியபோது எமக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சற்றும் பிசகாமல் அப்படியே அதில் எழுதப்பட்டிருந்தது. அன்று முழுவதும் நித்திரையில்லை. அடுத்தநாள் முதல் வேலையாகக் காலையில் நகைகளை மதிப்பிடும் அலுவலகம் ஒன்றைக் கண்டு பிடித்து நகைகளைப் பரிசோதித்தோம். நல்ல வேளை அவை உண்மையான தங்கமும் கற்களும் என்று அத்தாட்சிப் பத்திரம் தந்தார்கள். ஆனாலும் எதிர்பார்த்த இலாபம் இல்லை.
-
நீளீரா - Trailer
'Based on the memories of a War Child' என்ற வாசகத்துடன் நீளிரா திரைப்படம் வருகிறது. ஈழம் சார்ந்த கதைக்களம். இதனை எழுதி இயக்கியிருப்பவர் சோமிதரன். ஊடகவியலாளர் என்பது அவருடைய தொடக்க கால அடையாளம். யாழ் நூலக எதிர்ப்பு தொடர்பாக 'எரியும் நினைவுகள் - Burning memories' சுவடிப் படத்தினை (Ducumentary film) 2006இல் உருவாக்கியவர். அந்தச் சுவடிபடத்திலேயே அவருடைய கலை நுட்பத்தின் சில அம்சங்களைக் காண முடிந்தது. பாலு மகேந்திராவிடமும் மற்றும் சில தமிழக முன்னணி இயக்குனர்களிடம் திரைக்கலை பயின்றவர். ஒரு நல்ல படைப்பை குறிப்பாக திரைப்படத்தை உருவாக்குவது என்பது மேதமை மிக்க கலைப் பார்வையோடு, திரைத் தொழில்நுட்பம், கதை அறிவு (story knowledge), சமூக-உலக பார்வையையும் கோரிநிற்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை, அபிப்பிராயம். சோமிதரன் இத்தகைய ஆளுமைகளை தன்னகத்தே கொண்டவர் என்ற மதிப்பீடும் அவதானிப்பும் எனக்குண்டு. நீளிரா முன்னோட்டமும் அந்த நம்பிக்கையைத் தருகின்றது. திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் திகதியிலிருந்து திரைக்கு வருகிறது. படத்தைப் பார்த்தபின் அதனை விமர்சன பூர்வமாக அணுகலாம். வாழ்த்து சோமிதரன் Somee Tharan & குழுவினர் - ரூபன் சிவராஜா https://www.facebook.com/share/1CParquwWA/
-
நீளீரா - Trailer
- குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை!
குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை Courtesy: Priyangan நவீன இராணுவ வரலாற்றில் தரையிறக்க நடவடிக்கை (Amphibious Operation) என்பது வெற்றியை மட்டுமன்றி மிக ஆபத்தான போரியல் நகர்வையும் நோக்கமாகக் கொண்டதாகும். பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான விடுதலைப் புலிப் போராளிகள் குடாரப்பில் தரையிறங்கி ஆணையிறவில் புலிக்கொடி நாட்டும் வரை இதுவே ஒரு சித்தாந்தமாக இருந்தது. இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2000 ஆம் ஆண்டில் ஈழப்போராளிகள் பற்றிய உலகின் பார்வையை ஒரு கணம் உறைய வைத்த போரியல் அதிசயத்தைப் பிரிகேடியர் பால்ராஜ் நிகழ்த்திக் காட்டினார். அதுவரையிலான ஈழ விடுதலைப் போராட்ட வழித்தடங்களின் போக்கையே மாற்றியமைத்த அந்த மகத்தான போரியல் அதிசயம், இது எப்படிச் சாத்தியமானது ?என்று அமெரிக்கா போன்ற இராணுவ வல்லரசுகளே வியந்து நிற்கும் ஒரு வரலாற்று நிகழ்வாகும். அன்று ஒரு மரபுசாரா படையணியாக விடுதலைப் புலிகள் நிகழ்த்திய உலகத்தரம் வாய்ந்த வியூகம் அதுவென்றால் இன்று பாரசீக வளைகுடா மற்றும் ஈரானிய எல்லைகளில் அமெரிக்கா போன்ற இராணுவ வல்லரசுகளின் படைகள் எதிர்கொள்ளும் தரையிறங்க முடியாத முட்டுக்கட்டை நிலை என்பது நவீன போரியல் வரலாற்றின் ஒரு தந்திரோபாய முரண்நகையாகும். 🛑 குடாரப்பு பால்ராஜின் போரியல் அதிதிறனும் அசாத்திய மனோதிடமும் குடாரப்பு என்பது வெறும் நீண்ட கடற்கரைப் பகுதி அல்ல அது சிறீலங்கா இராணுவத்தின் இதயநாடி போன்ற விநியோக வழித்தடத்தைத் துண்டிப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு மின்னல் வேகப் பின்னணித் தாக்குதல் ஆகும். அதில் வெறும் 1200 போராளிகளை மட்டும் வைத்துக்கொண்டு இன்று அமெரிக்கப் படைகளிடம் இருப்பது போன்ற எவ்வித வான்வழிப் பாதுகாப்பும் இன்றி சர்வதேச இராணுவ நிபுணத்துவத்துடன் கட்டமைக்கப்பட்டிருந்த ஆனையிறவு இராணுவத்தளத்தின் பின்புறத்தில் தரையிறங்கியது அன்றைய காலகட்டத்தில் ஒரு அதிசயமாவே பார்க்கப்பட்டது. இங்குதான் பிரிகேடியர் பால்ராஜின் போரியல் பேராற்றல் வெளிப்பட்டது. வெற்றிபெற்றால் அன்றி அந்த 1200 போராளிகளும் விடுதலைப் புலிகளின் உலக இராணுவ நகர்வாளர்களுக்கெல்லாம் மணிமகுடமாக விளங்கிய பால்ராஜும் உயிரோடு திரும்பவே முடியாது என்ற நிலை இருந்தது. எதிரியால் நான்கு புறமும் சூழப்பட்டு, 34 நாட்கள் உணவு மற்றும் ஆயுதத் தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் அன்று அவர் காட்டிய அசைக்க முடியாத ஓர்மமே அந்த வெற்றியைத் தீர்மானித்தது. தரையிறங்கிய வேகத்தில் முன்னேறுதல் (Deep Penetration) என்ற தத்துவத்தை அவர் கையாண்ட விதமே ஒரு தற்காப்புப் போரை எப்படித் தாக்குதல் போராக மாற்றலாம் என்பதற்கு இன்றும் ஒரு சிறந்த போரியல் பாடத்திட்டமாக உள்ளது. 🛑அமெரிக்காவின் தரையிறங்க முடியாத இயலாமை: நவீன காலச் சிக்கல்கள் மறுபுறத்தில் இன்று உலகின் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் B-1B Lancer மற்றும் F-35 போன்ற போர் விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்கப் படைகள், ஈரான் போன்ற ஒரு பிராந்திய வல்லரசுக்கு எதிராக நேரடித் தரையிறக்கத்தை மேற்கொள்ளத் தயங்குவது ஏன்? இதற்கான முக்கியக் காரணம் ஈரானின் A2/AD (Anti-Access/Area Denial) எனப்படும் தற்காப்பு அரண் ஆகும். ஈரானின் பாரசீக வளைகுடாப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறிய ரக ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கான ஆளில்லா விமானங்கள், அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானந்தாங்கிக் கப்பல்களைத் தமது தளத்திற்கு அருகில் நெருங்க விடாமல் தடுக்கின்றன. அன்று பால்ராஜ் குடாரப்புவில் கையாண்ட அதே மறைந்திருந்து தாக்கும் நுட்பத்தை ஈரான் இன்று தனது நவீன தொழில்நுட்பத்தின் மூலமாகத் தனக்கேயான ஒரு தற்காப்பு வேலியாக மாற்றியுள்ளது. இது அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல், ஈரானுக்குள் ஊடுருவி எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவது மற்றும் அணு உற்பத்தித் தளங்களைச் சிதைப்பது போன்ற டொனால்ட் ட்ரம்ப்பின் கனவுகளைச் சிதைப்பதோடு ஒரு இராணுவ வல்லரசின் நகர்வுகளையே கேள்விக்குறியாக்குகிறது. 🛑 தொழில்நுட்ப பலம் மற்றும் கள யதார்த்தம் விடுதலைப் புலிகளின் குடாரப்பு வெற்றி என்பது தொழில்நுட்பத்தை விட ஒரு தேசத்தின் விடுதலை வேட்கை கொண்ட இளைஞர் கூட்டத்தின் தன்னம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு எத்தகைய மாற்றங்களை உருவாக்கும் என்பதற்குச் சான்றாக அமைந்தது. இன்று அமெரிக்கா போன்ற ஒரு இராணுவ வல்லரசு ஈரானிய எல்லைகளுக்குள் தரையிறங்கத் தவிப்பதற்கு அதன் ஆயுதக் குறைபாடு காரணமல்ல மாறாக எதிரியின் கெரில்லாப் பாணியிலான தற்காப்பு வியூகங்களை முறியடிக்கத் தேவையான துணிச்சலான கள முடிவுகளே இன்றைய தேவையாகும். அதற்கு அமெரிக்காவிற்குப் பால்ராஜைப் போன்ற ஒரு தளபதிதான் தேவைப்படுகிறார். அன்று களத்தில் எதிரியின் மனநிலையைச் சோதித்தது புலிகளின் போராற்றல் மட்டுமல்ல பிரிகேடியர் பால்ராஜ் என்ற பெயரும்தான். பிரபாகரன் வந்திருந்தால் கூட வென்றிருப்போம் ஆனால் வந்தது பால்ராஜ் என்ற சிங்கள இராணுவத் தளபதி ஒருவரின் கூற்றே பால்ராஜ் யார் என்பதை ஆழமாகப் பதிவுசெய்துவிட்டது. வரலாறு கற்பிக்கும் பாடம் ஒன்றுதான், போர்க்களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பது நவீனக் கருவிகள் மட்டுமல்ல அந்தப் போரை முன்னெடுக்கும் வீரர்களின் நெஞ்சுரமும் மற்றும் தளபதியின் தீர்க்கமான முடிவுகளுமே ஆகும். ஒரு சிறிய படையணி எத்தகைய பெரிய இலக்கையும் வீழ்த்த முடியும் என்பதற்கு குடாரப்பைத் தவிர வேறு உதாரணம் தேவையில்லை. https://ibctamil.com/article/brigadier-balraj-kudarappu-vs-iran-war-strategy-1774482259- “நான் அமைதியாக செல்ல விரும்புகிறேன்” : கருணைக்கொலை மூலம் மறைந்தார் ஸ்பெயின் இளம்பெண் நோலியா!
“நான் அமைதியாக செல்ல விரும்புகிறேன்” : கருணைக்கொலை மூலம் மறைந்தார் ஸ்பெயின் இளம்பெண் நோலியா! 27 Mar, 2026 | 02:40 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் பகுதி முழுவதுமாக செயலிழந்துபோயுள்ளது. அதனையடுத்து, நோலியா காஸ்டிலோவின் கோரிக்கைக்கு அமைய, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றம் கருணைக்கொலை மூலம் உயிரிழக்கும் உரிமையை அந்த இளம்பெண்ணுக்கு வழங்கி அனுமதித்தது. நோலியாவின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய அனுமதியின்பேரில், நேற்று மாலை அப்பெண் கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. “நான் அமைதியாக விரும்புகிறேன். எனது துன்பத்தை நிறுத்த விரும்புகிறேன்” என தனது தந்தையிடம் கூறிய நோலியாவின் வார்த்தைகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. தன்னை கருணைக்கொலை செய்யுமாறு நோலியா கோரியபோது, அதை ஏற்க மறுத்த அவரது தந்தைக்கு ஆதரவாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் முன்வந்தன. “துன்பத்துக்கு மரணம் தீர்வாகாது” என்றும் “அரசு பராமரிக்கத் தவறியதாலேயே அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டது” என்றும் தெரிவித்து வந்தன. அந்த அமைப்புகளின் ஆதரவுடன், மகளுக்கான கருணைக்கொலைக்கு எதிராக, தந்தை எழுப்பிய சட்ட ரீதியான மறுப்புரைகளால் கருணைக்கொலை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. தன் மகளுக்கு ஆளுமைக் குறைபாடு இருந்ததாகவும் அது அவரது முடிவெடுக்கும் திறனைப் பாதித்துள்ளதாகவும் தந்தை வாதிட்டார். “மக்களினது, குறிப்பாக, மிகுந்த பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்களை பாதுகாப்பது அரசின் கடமை. மனநலப் பிரச்சினைகள் உள்ள ஓர் இளம்பெண்ணின் விடயத்தில் இது பொருந்தும்” என்றும் அவர் எதிர்வாதத்தை முன்வைத்திருந்தார். அதனையடுத்து, 18 மாதங்களாக பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு நோலியாவும் அவரது தந்தையும் முகங்கொடுத்து வந்த நிலையிலேயே, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நோலியாவுக்கு கருணைக்கொலையை நிறைவேற்ற இணங்கித் தீர்ப்பளித்தது. ஸ்பெயினில் கருணைக்கொலை சட்டம் 2021இல் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், முதல் முறையாக ஒரு நீதிபதி, தீர்ப்பளிப்பதற்காகவே ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றதென்றால், அது இந்த வழக்காகத்தான் இருக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/242083- லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
சர்வதேச அரசியலில் ஒரு தரப்பு செய்யும் கொடூரமான குற்றத்தை, தங்களுக்குப் பிடிக்காத மற்றொரு தரப்பு மீது சுமத்தி, அதன் மூலம் அரசியல் மற்றும் நிதி லாபம் அடைவதே 'False Flag Operation' எனப்படும். இதற்குப் பின்னால் பெரும்பாலும் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளே (CIA, Mossad போன்றவை) இருக்கின்றன என்பது பல வரலாற்றுச் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சதித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன: The Lavon Affair - 1954 எகிப்தில் இருந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நூலகங்கள் மீது இஸ்ரேலிய உளவுப்பிரிவு (மொசாட்-ன் முன்னோடி) ரகசியமாகக் குண்டு வீசியது. இந்தத் தாக்குதலை எகிப்திய தீவிரவாதிகள் செய்ததாகக் காட்டி, மேற்கத்திய நாடுகளுக்கும் எகிப்திற்கும் இடையே பிளவை உண்டாக்குவதே நோக்கம். ஆனால், ஒரு குண்டு முன்கூட்டியே வெடித்ததால், இஸ்ரேலிய உளவாளிகள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். உண்மை அம்பலமானது. Operation Northwoods - 1960 கியூபா மீது போர் தொடுக்கக் காரணத்தைத் தேடிய அமெரிக்க ராணுவம், அமெரிக்காவிற்குள்ளேயே சில தாக்குதல்களைத் தாங்களே நடத்தி, அதை கியூபா மீது சுமத்தத் திட்டமிட்டது. இது ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சதித் திட்டம். Dancing Israelis 2001 இரட்டை கோபுரத் தாக்குதலின் போது, நியூஜெர்சியில் சில இஸ்ரேலிய இளைஞர்கள் கட்டிடங்கள் விழுவதைக் கண்டு கொண்டாடியதாகவும், அவர்கள் முன்பே கேமராக்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் FBI விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் பின்னாள்களில் மொசாட் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் எனச் உறுதிபடுத்த பட்டுள்ளது. தற்சமயம் மார்ச் 23, 2026 அன்று லண்டனின் Golders Green பகுதியில் hatzola யூத அம்புலன்ஸ்கள் தீயிடப்பட்ட சம்பவம் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. காவல்துறையின் தரவுகளும், சம்பவத்தின் வேகமும் இது ஒரு திட்டமிட்ட 'False Flag' என்பதன் அப்பட்டமாக தெரிகிறது. லண்டனில் அதிகாலை 1:45 மணிக்கு அவசர அழைப்பு செல்கிறது. ஆனால், சரியாக 2:00 மணிக்கு (அதாவது 15 நிமிடங்களில்) நியூயார்க்கில் உள்ள ஒரு யூத செய்தி நிறுவனம் இதை வீடியோ ஆதாரத்துடன் ஒளிபரப்புகிறது. இது எப்படி சாத்தியம்? எரிக்கப்பட்ட அந்த ஆம்புலன்ஸ்கள் ஏற்கனவே பழையவை. அவற்றுக்குப் பதிலாகப் புதிய வாகனங்களை வாங்கும் 'Replacement Project' ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. பழைய வாகனங்களை எரிப்பதன் மூலம் காப்பீட்டுப் பணத்தையும், உலகளாவிய அனுதாபத்தின் மூலம் பெரும் நன்கொடைகளையும் பெற இந்தச் சதி தீட்டப்பட்டுள்ளதா? உலகம் முழுவதும் தற்போது நிலவும் அரசியல் சூழலில், யூத சமூகத்திற்கு எதிராகப் பெருகி வரும் வெறுப்பு மற்றும் போராட்டங்களால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தத் தீவைப்புச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு தந்திரமான நோக்கம் உள்ளது தங்களுக்குப் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகக் காட்டி, அரசாங்கத்தையும் காவல்துறையையும் தங்களின் தெருக்களிலும், நிறுவனங்களிலும் நிரந்தரமாகக் காவல் (Babysitting) இருக்கச் செய்வது. தாங்கள் ஒரு "பாதிக்கப்பட்ட இனம்" (Victim Playing) என்ற பிம்பத்தை மீண்டும் மீண்டும் உருவாக்குவதன் மூலம், சர்வதேச அளவில் தங்களுக்கு எதிரான விமர்சனங்களை மௌனிக்கச் செய்வது. ஒரு சம்பவம் நடந்தவுடன் ஊடகங்கள் காட்டும் குற்றவாளியை அப்படியே நம்பிவிடக் கூடாது. யாருக்கு லாபம்? (புதிய ஆம்புலன்ஸ் நிதி, காப்பீட்டுப் பணம்) யார் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்? (காவல்துறையைத் தங்கள் பகுதிக்கு வரவழைத்தல்) யார் பழிவாங்கப்படுகிறார்கள்? (ஈரானிய ஆதரவு அமைப்புகள் மீது பழி) இந்த மூன்று கேள்விகளுக்கான விடையும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் 'False Flag' தந்திரத்தையே நோக்கியே செல்கின்றன. உளவு அமைப்புகளும், சில அமைப்புகளும் இணைந்து மக்களை ஏமாற்றத் தீட்டிய இந்தத் திட்டம் இப்போது ஆதாரங்களுடன் அம்பலமாகத் தொடங்கியுள்ளது. ஆதாரங்கள் இன்றி ஈரானிய அமைப்புகள் மீது பழி சுமத்துவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் எரிக்கப்பட்ட வாகனங்களின் பின்னணியில் இருக்கும் பொருளாதார லாபங்கள் இந்தச் சம்பவத்தை ஒரு அப்பட்டமான 'False Flag' என உறுதிப்படுத்துகின்றன. யூத உளவு அமைப்புகளும், சில தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து மக்களை ஏமாற்றத் தீட்டிய திட்டமே இது என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. 1954-ல் லாவோன் விவகாரத்தில் எப்படித் தந்திரங்கள் அம்பலமானதோ, அதேபோல் 2026-ன் இந்த லண்டன் நாடகமும் காலப்போக்கில் முழுமையாக வெளிப்படும். Mukinthan Thurairajasingham's post https://www.facebook.com/story.php?story_fbid=2795081927500823&id=100009971290894&post_id=100009971290894_2795081927500823&rdid=ftQ5Grvo9axmGfNn#- இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! Mar 27, 2026 - 09:16 PM யாழ்ப்பாணம், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன் அனுமதிக்கப்படாதது மற்றும் அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லாதிருந்தது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இளவாலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அந்த நேரத்தில் வைத்தியசாலையில் வைத்தியர்கள் எவரும் கடமையில் இல்லை எனக் கூறி, மாணவனை அனுமதிக்க வைத்தியசாலை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி வழங்குமாறும், மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி (Ambulance) மூலம் அனுப்பி வைக்குமாறும் மாணவனின் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். எனினும், "நாங்கள் சிகிச்சை அளித்தால் அதற்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டும்" எனக் கூறி ஊழியர்கள் முதலுதவி அளிக்க மறுத்துள்ளனர். அத்துடன், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி வசதி இல்லை எனக் கூறி, தனியார் வாகனம் ஒன்றில் மாணவனை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, மயக்கமடைந்த நிலையில் இருந்த மாணவன் முச்சக்கர வண்டி மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் இது குறித்து தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் முறையான விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn92ox2h0003356p4aineolu- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
நீங்கள் சொல்வது ஒரு வகையில் மிகச் சரியே. சில விருப்பு, வெறுப்புகள் மனிதர்களை விட்டு அகல்வது இல்லை. இதன் அடிப்படை வெறுப்பு என்றே நினைக்கின்றேன். அமெரிக்காவின் மீதும், மேற்கு நாடுகளின் மீதும் இருக்கும் வெறுப்பே அவர்களை நீங்கள் சொல்லியிருக்கும் அடுத்த பக்கம் என்று ஒன்றுக்கு தள்ளிவிடுகின்றது. இஸ்லாமிய மக்களின் மீதான வெறுப்பு, இந்தியர்களின் மீதான வெறுப்பும் இவ்வாறானவையே. இங்கு இன்னொரு பார்வையே சம்பந்தப்பட்டவர்களிடம் கிடையாது. ஆனால் கலாச்சாரம், பண்பாடு, விழுமியங்கள் என்று மனிதர்கள் கருதுவதில் காலப்போக்கில், வாழும் நாட்களிலேயே, நெகிழ்வுகள் உண்டாகின்றன என்றே தெரிகின்றது. நெகிழ்வே இல்லாமல், கல்தூண் போல இருந்து மறைபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் போல............. ஆகக் குறைந்தது பேரப் பிள்ளைகளின் உலகமும், எங்களின் உலகமும் ஒன்றல்ல என்ற புரிதலாவது கிட்டியிருக்கும் என்று நினைக்கின்றேன்.........................- ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : அமைதி பேச்சுவார்த்தைக்கு சீனா முன்வருகிறது!
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் : அமைதி பேச்சுவார்த்தைக்கு சீனா முன்வருகிறது ! 27 Mar, 2026 | 10:36 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் ஈரான் – அமெரிக்க மோதல் நிலையை சமாதானப்படுத்துவதற்காக, இருநாடுகளுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீனா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த மாத இறுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதிலும், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் நிலை காரணமாக வொஷிங்டனில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மோதலில் சீனா எதிர்பார்த்த அளவில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்தினால் அந்த விஜயம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், போர்நிறுத்த முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்வரும் மே மாதம் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் டிரம்ப் பீஜிங் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த பின்னணியில், ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ய சீனா முன்வந்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi ), “ஈரான் மீது நடைபெற்று வரும் மோதலை நிறுத்தும் நோக்கில், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது” என கூறினார். அதேவேளை, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான், “உண்மையான மற்றும் பொருத்தமான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவது தற்போதைய அவசரத் தேவையாகும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து, போரை நிறுத்துவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தினார். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவா என்பது தொடர்பில் தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை தொடர்பான சைகைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது அமைதிக்கான சிறிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என சீனா தெரிவித்துள்ளது. மற்றொரு பக்கம், ஈரான் அரசு அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தகவல்களை மறுத்துள்ளதுடன், அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனைகளை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், உடனடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றும் ஈரான் வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடனான தொலைபேசி உரையாடலிலும், “அமைதிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, விரைவில் பேச்சுவார்த்தை செயல்முறையை தொடங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242051- வைபவ் சூர்யவன்ஷி: இந்த 15 வயது வீரரை கிரிக்கெட் உலகம் ஏன் இனி புறக்கணிக்க முடியாது?
வைபவ் சூர்யவன்ஷி: இந்த 15 வயது வீரரை கிரிக்கெட் உலகம் ஏன் இனி புறக்கணிக்க முடியாது? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கட்டுரை தகவல் ஆனந்த் வாசு கிரிக்கெட் எழுத்தாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் உலகின் பெரும் பணக்கார கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சனிக்கிழமை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மீது அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும். அதே சமயம், பலரது கண்கள் ஒரு இளம் சிறுவன் மீதும் இருக்கும். ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 27 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது நிறைவடைந்தது. இத்துடன் இந்திய கிரிக்கெட்டின் மிகவும் சுவாரஸ்யமான கேள்விகளில் ஒன்றின் மீது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் குவிந்துள்ளது: வைபவ் ஒரு பெரிய மேடைக்குத் தயாராகிவிட்டாரா? மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தனது 12 வயதில் வைபவ் முதன்முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார். ஒரு போட்டியில் அவர் தனது தந்தையின் வயதுடைய பந்துவீச்சாளர்களை மிகக் கடுமையாகத் துவம்சம் செய்து கொண்டிருந்தார். அப்போதிருந்து அவரது பேட்டிங் தரம், குறிப்பாக அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் பெரிய ஸ்கோர்களை எடுப்பதில் அவருக்கும் இருக்கும் பசி ஆகியவை விவாதப் பொருளாக மாறியுள்ளன. களத்தில் உறுதியாக நிற்கும் சூர்யவன்ஷி இயல்பாகவே ஒரு ஆக்ரோஷமான வீரர். அவர் பந்துக்காகக் காத்திருக்காமல், பந்தைத் தாக்குகிறார். அவர் தனது முழு ஃபார்மில் இருக்கும்போது, அவரது பேட்டிங்கை வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாபெரும் வீரரான கேரி சோபர்ஸுடன் பலர் ஒப்பிடுகின்றனர். ஐபிஎல் 2026-ன் முதல் போட்டி மார்ச் 28 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது அமெரிக்கா - இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தரானால் இந்தியாவுக்கு பின்னடைவா? மோதி மீது எழும் கேள்விகள் ஓமனில் தன் உயிரை பணயம் வைத்து 2 இந்தியர்களை காப்பாற்றிய பாகிஸ்தான் இளைஞர் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் விமர்சனம் என்ன? அமெரிக்கா – இரான் இடையே மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானுக்கு என்ன கிடைக்கும்? End of அதிகம் படிக்கப்பட்டது சச்சினின் சாதனையை வைபவ் முறியடிக்கலாம் 2020 ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) "வீரர்களின் பாதுகாப்பு" என்ற பெயரில் குறைந்தபட்ச வயது வரம்பு விதியை அமல்படுத்தி ஒரு தெளிவான எல்லையை நிர்ணயித்தது. அண்டர்-19 மட்டத்திலும் செய்தி தெளிவாக இருந்தது: 15 வயதுக்குட்பட்ட எந்த வீரரும் சர்வதேச அரங்கில் நுழைய முடியாது. ஐசிசி குறைந்தபட்ச வயதுத் தேவையைக் குறிப்பிட்டது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஹசன் ரசா 1996 இல் 14 வயது 227 நாட்களில் அறிமுகமாகி, மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய ஆண் வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். ரசாவின் சாதனை இன்னும் பாதுகாப்பாக இருந்தாலும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சூர்யவன்ஷி இன்னும் முறியடிக்க முடியும். டெண்டுல்கர் தனது 16 வயது 205 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியத் தேர்வாளர்கள் சூர்யவன்ஷியைத் தேர்வு செய்வதில் தாமதம் காட்டினால் அது ஆச்சரியமாக இருக்கும். டெண்டுல்கருக்குப் பிறகு பல இளம் திறமையாளர்கள் வேகமாக முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர், ஆனால் சூர்யவன்ஷியின் விஷயம் தனித்துவமானது. அவர் திறமையானவராகத் தெரிவது மட்டுமல்லாமல், இந்திய அணிக்காகவே உருவாக்கப்பட்டவர் போலத் தோன்றுகிறார். தேர்வாளர்களின் பார்வையில் வைபவ் சூர்யவன்ஷி எப்படி வந்தார்? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,சூர்யவன்ஷி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் 12 வயதிலேயே ஒரு பேட்ஸ்மேனாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சுவாரஸ்யமாக, 2023 ஆம் ஆண்டில் சூர்யவன்ஷி தேசிய அளவில் வேகமாக உயர்ந்ததில் அவரது திறமையுடன் தற்செயலான நிகழ்வும் ஒரு காரணமாக இருந்தது. சண்டிகரில் வினு மங்கட் டிராபி போட்டி ஒன்று நடந்தது. இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உள்நாட்டு அண்டர்-19 போட்டியாகும். இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காகத் தேர்வாளர் திலக் நாயுடு நியமிக்கப்பட்டார், ஆனால் மழையால் அந்தப் போட்டி ரத்தானது. பிகாரைச் சேர்ந்த ஒரு திறமையான சிறுவனைப் பற்றி நாயுடு ஏற்கனவே சில பேச்சுகளைக் கேட்டிருந்தார். எனவே, அவர் அதே தொடரின் மற்றொரு போட்டியைப் பார்க்க முடிவு செய்தார், அதில் சூர்யவன்ஷி விளையாடிக் கொண்டிருந்தார். அதுவே தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. அந்தப் போட்டியில் சூர்யவன்ஷி 76 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அசாம் அணிக்கு எதிராக பிகார் முன்னேற உதவினார். அந்த இன்னிங்ஸ் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால், அதன் பிறகு பிகார் அணி வேகமாக முன்னேற வாய்ப்பு கிடைத்தது. சூர்யவன்ஷியின் திறன் குறித்து நாயுடு உறுதியாக இருந்தார். சூர்யவன்ஷி எடுத்த இன்னும் சில அரைசதங்கள் அதை மேலும் உறுதிப்படுத்தின. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தலைவர் வி.வி.எஸ் லக்ஷ்மனுடன் பேசிய பிறகு, சூர்யவன்ஷியை உடனடியாக அணியில் சேர்த்தார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... வைபவ் தன்னை நிரூபித்தார் சூர்யவன்ஷி வெற்றி ஏணியின் ஒவ்வொரு படியிலும் தனது வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அவர் நவம்பர் 2023 இல் அண்டர்-19 சேலஞ்சர் டிராபியில் ரன்களைக் குவித்தார். பின்னர் அதே மாத இறுதியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான இந்தியாவின் அண்டர்-19 அணியின் சார்பாக சர்வதேச தொடரிலும் அதே ஃபார்மைத் தொடர்ந்தார். உண்மையான வித்தை ஒரு வருடம் கழித்து நிகழ்ந்தது. அக்டோபர் 2024 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சூர்யவன்ஷி, 58 பந்துகளில் சதம் விளாசினார். இந்த இன்னிங்ஸ் அவரது அடையாளமாக மாறியது. அப்போது, இன்னும் காலூன்ற முயற்சிக்கும் ஒரு சிறுவனுக்கு ஐபிஎல் ஒரு பெரிய படியாக இருக்கலாம் என்றும், இவ்வளவு குறைந்த வயதில் உலகின் சிறந்த வீரர்களை எதிர்கொள்வது நன்மையை விடத் தீமையையே அதிகம் விளைவிக்கும் என்றும் வாதிடப்பட்டது. 2025 ஐபிஎல் சீசனில், சூர்யவன்ஷி அந்த கவலைகளைத் தகர்த்தார். அனுபவம் வாய்ந்த ஷர்துல் தாகூரின் முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்தார். அதன்பின் விரைவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அவர் மீது முதலீடு செய்த சுமார் 1.10 கோடி ரூபாயை நியாயப்படுத்தினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் அதிரடி சதம் விளாசி, மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பட மூலாதாரம்,ICC via Getty Images படக்குறிப்பு,சூர்யவன்ஷி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வெறும் 12 வயதிலேயே ஒரு பேட்ஸ்மேனாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், ஐபிஎல் உள்நாட்டு அளவில் தன்னை நிரூபிப்பதற்கான ஒரு தளம் மட்டுமே என்றும், திறமையை அடையாளம் காண இது சரியான தொடர் அல்ல என்றும் விமர்சகர்கள் வாதிட்டனர். இதே பார்வை 2026 தொடக்கத்தில் நடந்த அண்டர்-19 உலகக் கோப்பையிலும் சூர்யவன்ஷி மீது இருந்தது. அதற்குள் இந்தியாவில் கிரிக்கெட் விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட்டன. ஒரு வீரர் எவ்வளவு இளையவராக இருந்தாலும், இந்தத் தொடரில் பங்கேற்க ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. வயது தொடர்பான மோசடிகளை ஒழிப்பது, தரத்தை உயர்த்துவது மற்றும் வீரர்கள் முதிர்ச்சியின்றி அல்லாமல் முழுத் தயாரிப்புடன் களமிறங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாக இருந்தது. சூர்யவன்ஷி தொடரின் லீக் சுற்றுகளில் 72, 40, 52 மற்றும் 30 ரன்கள் எடுத்தார், இதன் மூலம் இந்தியா நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. பின்னர் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 33 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்துகளில் அரைசதத்தையும், 55 பந்துகளில் சதத்தையும் கடந்தார். இந்த இன்னிங்ஸில் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். இதில் 15 சிக்ஸர்கள் மற்றும் அதே எண்ணிக்கையிலான பவுண்டரிகள் அடங்கும். இந்த நேரத்தில், சூர்யவன்ஷியை வயதுப் பிரிவு கிரிக்கெட்டில் விளையாட விடுவதற்குப் பதிலாக, சீனியர் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் ஐசிசி விதிகளால் கட்டுப்பட்டிருந்ததால், சூர்யவன்ஷியை சீனியர் அணியில் தேர்வு செய்ய முடியாமல் போனது. கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு பட மூலாதாரம்,MB Media/Getty Images படக்குறிப்பு,அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சூர்யவன்ஷி 175 ரன்கள் எடுத்தார். சூர்யவன்ஷி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் எதிர்வினைகள் ஆச்சரியத்திற்கும் மலைப்பிற்கும் இடையில் உள்ளன. ரவி சாஸ்திரி கூறுகையில், "அந்த வயதில் சச்சின் டெண்டுல்கர் அல்லது விராட் கோலி எவ்வளவு சிறந்த வீரர்களாக இருந்திருப்பார்கள்? இந்தச் சிறுவன் இவ்வளவு குறைந்த வயதில் இவ்வளவு சிறப்பாக இருந்தால், அவர் நான்கு நாள் கிரிக்கெட்டில் விளையாட முடியாததற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றார். ஏபி டி வில்லியர்ஸ், சூர்யவன்ஷி "தனது வயதிற்கு மிஞ்சிய முதிர்ச்சி கொண்டவர்" என்று கூறினார். மேத்யூ ஹெய்டன் அவரது ஐபிஎல் சதத்தை "அனைத்து விளையாட்டுகளிலும் உள்ள இளம் கனவுகளுக்கான உத்வேகம்" என்று விவரித்தார். டபிள்யூ.வி. ராமன், சூர்யவன்ஷியின் "பரபரப்பை ஏற்படுத்தும் திறமையால்" ஈர்க்கப்பட்டுள்ளார். மேலும் டெண்டுல்கர் அவரது "அச்சமற்ற அணுகுமுறை, பேட் வேகம் மற்றும் பந்தின் லெந்த்தை முன்கூட்டியே கணிக்கும் திறன்" ஆகியவற்றைப் பாராட்டினார். படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் மார்ச் 27 அன்று சூர்யவன்ஷி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, கேள்வி அவர் தயாராக இருக்கிறாரா என்பது அல்ல, உலகம் அவருக்குத் தயாராக இருக்கிறதா என்பதுதான். இந்தத் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்கனவே மிகவும் விசேஷமானது. 1994 ஆம் ஆண்டில், ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, நவஜோத் சிங் சித்துவுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. அதன் பிறகு முகமது அசாருதீன் டெண்டுல்கரை பேட்டிங்கில் முன்னிலைப்படுத்தி தொடக்க வீரராக அனுப்பினார். டெண்டுல்கர் 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார், அதன் பிறகு அவர் பின் திரும்பிப் பார்க்கவே இல்லை. அதன் பிறகு, டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக 48.29 சராசரியுடன் 15,310 ரன்கள் எடுத்தார். அவரது 49 சதங்களில் நான்கு சதங்களைத் தவிர மற்ற அனைத்தும் தொடக்க வீரராக எடுத்தவைதான். 27 மார்ச் 1994 இந்திய கிரிக்கெட்டின் திசையை என்றென்றும் மாற்றியது என்று சொல்வது முற்றிலும் சரியாக இருக்கும். இப்போது, 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் மற்றொரு முக்கியமான திருப்பம் ஏற்படப் போகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce35l770j0qo- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
அண்ணை, பெண்கள் மீதான ஆடைக்கட்டுப்பாடு ஆணின் பயத்தில் இருந்தே வருகிறது என நினைக்கிறேன்.- தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
இங்கு சொன்னால் குத்தமாகிடும் ....இளவயது குடும்பம் ...அய்யர் அழகன் என்றால் ...அம்மாவும் அப்படியே.....கோவ்விலுக்கு வாற அழகான் பெண்களுக்கு...ரோசாப்பூவும் ...பிரசாதமும் அமோகம் ...அப்ப அயல் பொடியள் ..சும்மா இருப்பாங்களா...- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்😂- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
தரமான Tik Tok இணைப்பு. நன்றி- வசந்தம் வருகிறது
அதையேன் கேக்கிறியள்… பெப்ரவரி கடைசியில் ஆரம்பித்தால்… ஏப்ரலில் கடைசி ரெண்டு வாரம் விட்டு..மே மாசம் முழுவதும், யூன் 3ம் கிழமை வரைக்கும் எனக்கு உதுதான் அலுப்பு. மூன்று வகை மரங்களின் மகரந்தம் எனக்கு வைக்கோல் காய்ச்சல் hay fever ஐ தருகிறது. மருந்து எடுத்தால் குறையும்…. ஆனால்…. நாள் பூராவும் நோய் வந்த கோழி அல்லது சொம்பி போல் சோர்வாக திரிய வேண்டும். எல்லாவற்றையும் பாவித்தாயிற்று😂. ஜாமீன் கடலிலேயே இல்லையாம் எண்ட நிலை இப்போது. Non drowsy மருந்தை போட்டாலும்…நித்திரை மட்டும்தான் வராது, ஆனால் சோர்வு அப்படியே உள்ளது என்பது என் அனுபவம்.- புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல் !
புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல் ! 27 Mar, 2026 | 05:12 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படும். க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம், பெற்றோரது தொழில் தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி மற்றும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும். இந்திய உயர் ஸ்தானிகராலயம், ( 36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம், (இல. 42, ஹில்பஹந்துர மாவத்தை, அம்பிட்டிய வீதி, கண்டி), இலங்கை ஆகிய முகவரிகளிலும் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கௌரவ செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET) மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ.இலக்கம்-882, காலி வீதி, கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2026 ஏப்ரல் 28ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும். https://www.virakesari.lk/article/242105- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
3 பகுதி கட்டுரையும் வாசித்து விட்டேன். கட கடவென்று நடந்ததை எழுதி இருக்கிறீர்கள். சிறப்பு!! 👌 உங்களை தங்களோடு கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறேன் என்ற அந்த குடும்பத்துக்கு, நீங்கள் எனக்கு இன்னும் ஒருவர் கூட்டி செல்கிறார் என்று சொல்லி இருக்கலாமே என்று தோன்றுகின்றது. இன்னும் ஒன்று... விமானநிலையத்தில் சந்தித்த பணிப்பெண் வேலைக்கு போகும் அந்த பெண்ணிடம் நிறையவே அவரின் குடும்ப விவகாரங்கள் பேசிவிட்டீர்களோ என்றும் தோன்றியது. ஹோட்டல் கட்டில் விரிப்பில் பொட்டு பொட்டு ரத்தம்... வாசிக்கும் பொது கொஞ்சம் வில்லங்கமான சிந்தனை வந்து தொலைத்துவிட்டது. 🤭 சிக்கலான கால கட்டத்தில் தனி ஆளாக Expired ஆனா கிரெடிட் கார்ட்டுடன் "2 x 23kg அரிசிமாவு, பலகாரம், பாறை கருவாடு" சகிதம் சேதாரம் இல்லாமல் லண்டன் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். அது புலம்பெயர்ந்த தமிழருக்கேயான கெத்து. 😁- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
பெண்களின் உடை-வரலாற்றுக்கு வயது 5000…. 5000 வருடத்தில் மாறாத ஒரே விடயம்…. பெண்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்கள் தீர்மானிக்கும் அவல நிலை…. 35+ வருட புலம்பெயர் வாழ்வை கொண்ட தமிழர்கள் பலரும் இங்கே ஈரான் நல்லம், ஆப்கானிஸ்தான் அப்படி ஒண்டும் மோசமில்லை என எழுதும் போது…. ஜனநாயகத்தை விட இப்படியான நாடுகள் உசத்தி என்றே எழுதும் போது, தள்ளாத வயதில் டெக்சஸ் போன ஜேசுதாஸ் மாறி இருக்க வாய்புகள் குறைவு.- விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
“சுத்தமான இலங்கை” முயற்சிக்கு ஜப்பான் ஆதரவு – 112 மில்லியன் ரூபா திட்டத்தில் 8 தாழ்வான தளம் கொண்ட பேருந்துகளை வழங்கியது ! 27 Mar, 2026 | 05:00 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் பொது போக்குவரத்திற்காக எட்டு (8) தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்களை வழங்குவதற்காக நன்கொடை உடன்படிக்கை ஒன்றில் ஜப்பான் தூதுவர் அகியோ இசொமட்டா இன்று வெள்ளிக்கிழமை (27) கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திக்கான அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேராவுடன் கைச்சாத்திடப்பட்டது. ஜப்பான் அரசு இந்தத் திட்டத்திற்கு 362,476 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 112 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் பெப்ரவரி 2025-ல் இலங்கைக்கு விஜயம் செய்த அப்போதைய ஜப்பானின் வெளிநாட்டு பிரது அமைச்சர் திருமதி. அகிகோ இகுய்னாவுடனான ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் சந்திப்பில், அவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்த சந்திப்பில் ஜனாதிபதி, ஜப்பானில் இருந்து தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “இந்தத் திட்டம் மூலம் வழங்கப்படவுள்ள பேருந்துகள், பயன்பாட்டின் பின் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட வாகனங்களாகும். அவை யூரோ 4 வெளியீட்டுத் தரநிலைகளுக்கு உட்பட்ட, சூழலுக்கு மிகவும் உகந்த வாகனங்களாகும். இந்த திட்டம் தற்போதைய நிர்வாக அமைப்பில் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றான “சுத்தமான இலங்கை” முன்னெடுப்பை நேரடியாக ஆதரிக்கிறது. இந்த உயர் தர வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொருளாதார செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பொருளாதார இழப்பைக் குறைப்பது போன்ற முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தாழ்வான தளம் கொண்ட பெரிய பேருந்துக்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகக்கூடியவையாக இருப்பதால், இந்தத் திட்டம் ஜப்பான் அரசின் ராஜதந்திர கொள்கைகளில் முக்கியமான “மனித பாதுகாப்பு” என்ற கொள்கையின் கீழ் உள்ளடங்கும். இது நலிவுற்ற நபர்கள் மரியாதையுடன் வாழவும் வலிமை பெறவும் உதவும். இந்த பேருந்துகள் பணியாளர்களின் போக்குவரத்தை சீராக்குவதன் மூலம், இலங்கையர்களின் மொத்த வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதாக நான் நம்புகிறேன்.” என்றார். இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்திக்கான அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபில சி. கே. பெரேரா, இவ்வாறு கூறினார். “இந்த மதிப்புமிக்க நன்கொடை, இலங்கையர்களின் வாழ்க்கையில் அத்தியாவசிய பங்காற்றும் பொது போக்குவரத்துக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் திறனை மேம்படுத்துவதிலும் முக்கியமான ஒரு முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. மேலும் அது அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் நேரடி மற்றும் நீண்டகால நன்மைகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கை மக்களின் ‘ஒரு வளமையான நாடு – அழகான வாழ்க்கை என்ற தேசிய கண்ணோட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நீண்டகால நிகழ்ச்சியில் பங்களித்திருக்கும் ஜப்பான் அரசு மற்றும் ஜப்பானிய மக்களுக்கு, நாங்கள் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது இரு நாடுகளுக்கிடையிலான நிலையான மற்றும் நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை தரும் எதிர்காலத்தை உருவாக்கவும் ஊக்குவிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார். 1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/242101- வசந்தம் வருகிறது
ஒவ்வாமையுடனும் ஆஸ்மாவுடனும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். ஓட்டப் பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து ஆஸ்மா முற்றாக மறைந்து விட்டது. ஒவ்வாமை ஓரளவு உள்ளது. பூத்திருக்கும் வயல் ஓரங்களில் தும்மாமல் ஓட முடிகிறது. விஞ்ஞான ரீதியில் ஒவ்வாமைக்கும் ஓட்டத்துக்கும் தொடர்பு இருக்குமோ அல்லது வேறு காரணங்களாலோ தெரியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தடவை ஊசி போட்டிருந்தேன். தொடர்ந்து ஊசி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். நான் பாவிப்பது levocetrizine. 5 கிராம் குளிசையில் பாதியை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எடுப்பதுண்டு. மார்ச் - ஏப்ரல் காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பாதிக் குளிசை எடுப்பேன். - குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.