stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’ ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார். மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா தனது வான்வெளியையோ, நிலப்பரப்பையோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. எந்த ஒரு நாடாக இருந்தாலும் இவ்விஷயத்தில் சவூதி அரேபியா உறுதியுடன் இருக்கும். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றம் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு முயற்சிகளுக்கும் சவூதி அரேபியா ஆதரவு அளிக்கும்’ என்று இளவரசர், ஈரான் ஆட்சியாளரிடம் உறுதிபட தெரிவித்தார். இதையடுத்து, சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் அதிபர் பாராட்டு தெரிவித்தார். மேலும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான பட்டத்து இளவரசரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீதான-தாக்குதலுக்கு-துணைபோக-மாட்டோம்/50-371716
-
கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
இது, நம்புகின்ற மாதிரி இல்லையே… 😁 “கேட்கிறவன் கேனையன் என்றால்… 🐃—-, ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.” 😂 🤣
-
அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது
அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது adminJanuary 29, 2026 அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரால் பிரஜாசக்திக்கு எதிராக தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டது. அதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் போது , கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் , அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை. அதனால் அவர்களை கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டு , அதனை குழுக்கள் கூடாக கண்காணிக்கின்றோம் என தெரிவித்தார். குறித்த உறுப்பினரால் சபையில் கடுமையான அமளி ஏற்பட்டு , குறித்த உறுப்பினரின் கருத்துக்கு தவிசாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தமது கண்டனங்களை சபையில் பதிவு செய்தனர். பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் 20 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் , பிரஜா சக்திக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்தனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 4 உறுப்பினர்களும் , சுயேச்சை குழுவின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளனர். அதேவேளை சுயேச்சை குழுவை சேர்ந்த ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அந்நிலையில் , பிரஜாசக்திக்கு எதிரான தீர்மானம் சபையில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/227802/
-
அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு கண்டனம்.
அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு கண்டனம். adminJanuary 29, 2026 மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை (29) காலை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குரு சாந்தன் தலைமையில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,, அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் சமூக மாற்றத்திற்கும் ஜனநாயக வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்று கின்றனர். இருப்பினும் இன்றைய சமூக ஊடக தளங்களில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் அவதூறுகள்,இழிவுரைகள் பாலின அடிப்படையிலான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தவறான தகவல் பரப்பல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. இந்த வகையான சமூக ஊடக தொல்லைகள் பெண்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதோடு, அவர்கள் அரசியல்,பொதுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் துணிவையும் தளர்த்துகிறது. பெண்களை மௌன படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் ஜனநாயகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. ஆனால் அவை பெண்களின் பாலினத்தை குறிவைத்து இழிவுபடுத்தும் அவமானப்படுத்தும், மிரட்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்படுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். குறிப்பாக சமூக ஊடகங்களில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உடல், குணாதிசயம் ஆகியவற்றைக் குறி வைக்கும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல் களாகும். பெண்களுக்குப் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் சமத்துவமான சமூக ஊடக சூழல் உருவாக்கப் படுவது அரசின் சமூகத்தின் ஊடக நிறுவனங்களின் மற்றும் சமூக ஊடக நிர்வாகங்களின் பொறுப்பாகும். சமூக ஊடகங்களில் நடைபெறும் பாலின அடிப்படையிலான மேற்கொள்ளப்பட தொல்லைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி பாதுகாப்பும், நீதியும், உளவள ஆதரவும் வழங்கப்பட வேண்டும். அண்மையில் மன்னாரில், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மீது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அனைத்து விதமான அவதூறுகளையும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது. பெண்களின் அரசியல் பங்கேற்பை தடுக்கும் எந்தவொரு செயலையும் பொறுப்புள்ள சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது . பெண்களின் குரல்,உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இங்கு சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெண்கள் அச்சமின்றி தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும்,அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் சம உரிமையுடன் தலைமைப் பொறுப்புகளில் பங்கேற்கவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எங்களின் உறுதியான நிலைப்பாடாகும். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிராக போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு நாங்கள் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊடக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2026/227804/
- Today
-
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை Published By: Digital Desk 3 29 Jan, 2026 | 09:18 AM 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரீசிலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களிடையே சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன எனவும், இலங்கையும் அத்தகைய மாதிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது ஒழுக்க ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் செய்துள்ளது, இதற்கு ஏற்கனவே அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237293
-
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
'ஓடுபாதை தெரியவில்லை' - அஜித் பவார் பயணித்த விமானத்திலிருந்து வந்த செய்தி என்ன? பட மூலாதாரம்,ANI 28 ஜனவரி 2026 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது. புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ''இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.'' என்றார். பிபிசி மராத்தி செய்தியின்படி, அஜித் பவாருடன் இறந்த மற்ற நபர்களின் பெயர்கள் சுமித் கபூர், ஷாம்பவி பதக், விதிப் ஜாதவ் மற்றும் பிங்கி மாலி. 'தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது' என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் எதிர்வரும் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காகப் பிரசாரம் செய்ய அஜித் பவார் பாராமதியில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அதற்காக, அவர் மும்பையிலிருந்து விமானம் மூலம் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்தார். விமானம் பாராமதியில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும் இடையிலான உரையாடலின் விவரங்களையும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர், மகாராஷ்டிரா முதல்வர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் என்ன கூறியது? விபத்து தொடர்பாக, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையை, பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்டுள்ளது. அதில், பாராமதி விமான தளம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC)) கோபுரம் இல்லாத தளம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போக்குவரத்துத் தகவல்கள் பாராமதியில் அமைந்துள்ள விமானி பயிற்சி அமைப்பின் (Flying Training Organisation) பயிற்றுநர்கள் அல்லது விமானிகளால் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "விமான விபத்தில் அஜித் பவார் மரணம் - என்ன நடந்தது?", கால அளவு 0,56 00:56 காணொளிக் குறிப்பு,என்ன நடந்தது? டிஜிசிஏ கூறியுள்ளது என்ன? சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டை (ATC) கையாண்ட நபர் அளித்த தகவல்களின்படி, ஜனவரி 28, 2026 அன்று, விமானம் VI-SSK காலை 8:18 மணிக்கு பாராமதியுடன் முதல் தொடர்பை ஏற்படுத்தியது. அந்த விமானம் பாராமதிக்கு 30 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்து, பாராமதி நோக்கி வருவதாகத் தகவலைத் தெரிவித்தது. அப்போது புனே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் இருந்து விமானம் விடுவிக்கப்பட்டு பாராமதி நோக்கி நோக்கி பறக்க அனுமதிக்கப்பட்டது வானிலையை பொறுத்து அவருடைய சொந்த கணிப்பின்படி தரையிறங்க அதன் விமானி அறிவுறுத்தப்பட்டார். காற்று மற்றும் தெரிவுநிலை (visibility) குறித்து விமான குழுவினர் விசாரித்தனர். காற்று சீராக இருப்பதாகவும், தெரிவுநிலை சுமார் 3,000 மீட்டர் என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images பின்னர் விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குழுவினர் கூறினர். ஆனால், குழுவினரால் ஓடுபாதையைப் பார்க்க முடியாததால், அவர்கள் தங்கள் முதல் முயற்சியில் தரையிறங்கும் முடிவை கைவிட்டு திரும்பிச் சென்றனர். அதன்பின், விமானத்தின் நிலை குறித்து குழுவினரிடம் கேட்கப்பட்டது. பின்னர் விமானக் குழுவினர் ஓடுபாதை 11-ல் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளில் இருப்பதாகத் தெரிவித்தனர். ஓடுபாதை தெரிகிறதா தகவலை தெரிவிக்க அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு, "ஓடுபாதை தற்போது தெரியவில்லை. அது தெரியும்போது அழைப்பதாக" பதிலளித்துள்ளனர். சில வினாடிகளுக்குப் பிறகு, ஓடுபாதை தெரிவதாக குழுவினர் கூறியுள்ளனர். காலை 8:43 மணிக்கு, விமானம் ஓடுபாதை 11-ல் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் தரையிறங்கும் அனுமதி குறித்து விமானக் குழுவினரால் எந்த உறுதியும் வழங்கப்படவில்லை. பின்னர், காலை 8:44 மணிக்கு, ஓடுபாதை 11-க்கு அருகில் தீப்பிழம்புகள் எழுவதை ATC கவனித்தது. பின்னர் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஓடுபாதை 11-க்கு அருகில் இடது பக்கத்தில் காணப்பட்டன. பட மூலாதாரம்,ANI விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணையை மேற்கொண்டுள்ளது. விசாரணையை நடத்த AAIB இயக்குநர் ஜெனரல் விபத்து நடந்த இடத்திற்கு செல்லவுள்ளார். இது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது பகிரப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள்", கால அளவு 1,45 01:45 காணொளிக் குறிப்பு,சௌந்தர்யா முதல் அஜித் பவார் வரை - வான் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் விமானக் குழுவினர் பற்றி தெரியவந்தது என்ன? சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். ஒரு விமானி 15,000 மணிநேர விமானப் பயண அனுபவமுள்ளவர். இரண்டாவது விமானிக்கு 1,500 மணிநேரம் பறக்கும் அனுபவம் இருந்தது. பட மூலாதாரம்,ANI நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? விபத்தை நேரில் கண்ட ஒருவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம், "நான் அதை என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையானது. விமானம் கீழே விழும்போது, அது தரையிறங்க முடியாது என்று தோன்றியது, அதுதான் நடந்தது. அதன் பிறகு, அந்த விமானம் வெடித்தது. அந்த விமான வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதன்பின், நாங்கள் விமானம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டோம்." என்றார். "பின்னர் விமானத்தில் மேலும் நான்கு அல்லது ஐந்து வெடிப்புகள் ஏற்பட்டன. அதன் பிறகு, பொதுமக்கள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தில் இருந்தவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் தீ மிகவும் கடுமையாக இருந்ததால், மக்களால் உதவ முடியவில்லை. அஜித் பவாரும் விமானத்தில் இருந்தார், இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது..." காணொளிக் குறிப்பு,அஜித் பவார் உயிரிழப்பு - விமான விபத்தை நேரில் கண்டவர் கூறியது என்ன? மற்றொரு நபர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "நாங்கள் இங்கே வசிக்கிறோம், எங்களுக்குப் பின்னால் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. ஒரு விமானம் வருவதைக் கண்டோம், ஆனால் அது தரையிறங்கவில்லை. அது முன்னோக்கிச் சென்றது, பின்னர் சிறிது நேரம் கழித்து அது திரும்பி தரையிறங்கத் தொடங்கியது. ஆனால் அது ஓடுபாதைக்கு சற்று முன்பு விபத்துக்குள்ளானது." என்றார். "இதைப் பார்த்தவுடன், ஓடுபாதையைச் சுற்றியுள்ள எங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நாங்கள் தகவல் தெரிவித்தோம், அதன் பிறகு காவல்துறையினரும் மற்றவர்களும் உடனடியாக வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cm24p673px7o
-
புதிய அரசியலமைப்பு வரைவுக்கு பல் தரப்பு செயலணி அவசியம்; முந்தைய முயற்சிகளை கருத்தில் கொள்ள பரிந்துரை
புதிய அரசியலமைப்பு வரைவுக்கு பல் தரப்பு செயலணி அவசியம்; முந்தைய முயற்சிகளை கருத்தில் கொள்ள பரிந்துரை Published By: Vishnu 29 Jan, 2026 | 05:16 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவ வேண்டும். அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும் என புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து சட்டத்தரணிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு 06 முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடலை முன்னிட்டு சட்டத்தரணி லால் விஜேநாயக்க,பேராசிரியர் பிரியங்க துனுசிங்க,கலாநிதி அதுலசிறி சமரகோன், சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, சட்டத்தரணி விரஞ்ஞன ஹேரத், சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம தஸநாயக்க,சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ்,சட்டத்தரணி ஷிரால் லக்திலக, பேராசிரியர் சரித ஹேரத்,சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ,கருணாரத்ன பரணவிதாரன, சட்டத்தரணி சமன் சேனாதீர,சட்டத்தரணி ஜகன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதல் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட வலியுறுத்தலை நாங்கள் வரவேற்கிறோம். அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட ஒரு அரசாங்கம் இருப்பது இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு வரலாற்று ரீதியான வாய்ப்பாகும்.புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்ளல் என்பது இலங்கைக்கு முக்கியமான சவாலாகும். அது அனைத்து மக்கள் பிரிவினரையும் பிரிதிநித்துவப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு ரீதியிலான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இதில் அனைவரையும் உள்ளடக்குவதும் சவால்மிக்கதாகும். தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு இதுவரையில் 21 முறை திருத்தங்களுக்குட்படுத்தப்பட்டுள்ளது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவைச அரசாங்கத்தின் தேவைகளை பிரதிப்பலித்துள்ளதே தவிர மக்களின் நிலைப்பாட்டை பிரதிப்பலிக்கவில்லை.அரசியலமைப்பின் 17,19 மற்றும் 21 ஆம் ஆகிய திருத்தங்கள் மாத்திரமே மக்களை பிரதிபலிக்கின்றன. கடந்தகால அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு இலங்கையின் சமூக- அரசியல் சூழலுக்கு பொருத்தமான அரசியலமைப்பு சீர்த்திருத்த மாதிரியை பின்பற்றுவதற்கான சாத்தியம் குறித்து பரிசீலனை செய்யுமாறு நாம் முன்மொழிகின்றோம். அதன்படி பின்வரும் முன்மொழிவுகளை முன்வைக்கிறோம். இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஏற்புடைய அரச அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல் தரப்பு செயலணியொன்றை நிறுவுதல், அந்த செயலணியானது 1995-2000 மற்றும் 2015 ,2018 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முன்னெடுத்த செயற்பாடுகளை கருத்திற்கொள்ள வேண்டும். எதிர்கால அரசியலமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்ட அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக விரிவான அடிப்படையாகக் கொண்ட எவர் ஒருவரையும் தவிர்க்காத வகையில் அனைவரும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவான மக்கள் சார் ஆலோசனை செயல்முறையை உருவாக்க வேண்டும். அத்துடன் பொதுமக்கள் ஆலோசனை செயல்முறையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பிணக்கற்ற மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் அங்கிகரிப்பதற்காக ஒரு அரசியலமைப்பு கோட்பாடு கட்டமைப்பை வரைதல் அவசியமாகும். மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அரசியலமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு அரசியலமைப்பை வரைவதற்காக அரசியல் கட்சிகள், கல்வியியலாளர்கள்,சிவில் சமூகம், சமூக விஞ்ஞானிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும்.டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்பட வேண்டும்.மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புசார் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு சட்டவரைவை தயாரித்தல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு,இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் தீர்ப்பு மூலம் நிறைவேற்றிக்கொள்வதையும் உள்ளடக்கிய வகையில் ஒரு அரசியலமைப்பு சீர்த்திருத்த செயன்முறையை பின்பற்றுதல் வேண்டும். அரசாங்கத்தின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கைக்கு அமைய புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். https://www.virakesari.lk/article/237283
-
'வைரல்' பென்குயின் போல வேறு எந்த உயிரினங்கள் கூட்டத்தை விட்டு தனியே செல்கின்றன தெரியுமா?
'வைரல்' பென்குயின் போல வேறு எந்த உயிரினங்கள் கூட்டத்தை விட்டு தனியே செல்கின்றன தெரியுமா? பட மூலாதாரம்,Thinkfilm/Werner Herzog கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 28 ஜனவரி 2026 "அந்த கூட்டத்தில் ஒன்று மட்டும் எங்களின் கவனத்தை ஈர்த்தது. நடுவில் இருந்த அந்த பென்குயின், பனியின் எல்லையில் உள்ள அதன் உணவருந்தும் பகுதிக்கும் செல்லவில்லை, அதன் காலனிக்கும் திரும்பிச் செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது." சமூக ஊடகங்களில் வைரலாக உள்ள பென்குயின் காணொளியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இது. அந்தக் காணொளியில், ஒரே ஒரு பென்குயின் மட்டும் தனது கூட்டத்துடன் செல்லாமல் பனி போர்த்திய மலையை நோக்கி நடக்கத் தொடங்கும். அண்டார்டிகாவில் 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "என்கவுன்டர்ஸ் அட் தி என்ட் ஆஃப் தி வேர்ல்ட்" என்கிற ஆவணப்படத்தில் அந்தக் காணொளி இடம்பெற்றது. வெர்னர் ஹெர்ஸோக் இயக்கிய இந்த ஆவணப்படத்திற்கு பீட்டர் ஸெயிட்லிங்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார். பென்குயின் பற்றி நம்மில் பலரும் அறிவியல் புத்தகங்களில் படித்து தெரிந்திருப்போம், ஆவணப்படங்களிலும் பார்த்திருப்போம். தென் துருவ உயிரினமான பென்குயின் பெரும்பாலும் அண்டார்டிகாவிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை ஒட்டிய பகுதிகளிலும் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்த பென்குயின் பற்றிய பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் இருந்த பின்னணிக் குரல் தரும் செய்தியும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி பல அரசியல்வாதிகளும், திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் கூட ஒற்றை பென்குயினுடன் இருப்பது போல புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆவணப்படத்தின் இயக்குநர் வெர்னர் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,Werner Herzog படக்குறிப்பு,இயக்குநர் வெர்னர் ஹெர்ஸோக் காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், "20 ஆண்டுகளுக்கு முன்பு நான் படம்பிடித்த பென்குயின் ஒன்று இன்றும் பலரின் கற்பனைகளைத் தூண்டுவதைப் பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது. இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. அந்த பென்குயின் தனது மரணத்தை நோக்கி கண்டத்தின் உள்பகுதியில் உள்ள மலைகளை நோக்கி நடக்கத் தொடங்கும். பென்குயின் பற்றி ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் அவற்றின் விநோதத்தன்மை பற்றி என்னிடம் பேசியுள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார். ஆவணப்படத்தில் உள்ள தனது பின்னணிக் குரல் பற்றி குறிப்பிடுகையில், "நான் தீர்க்கப்படாத மர்மங்கள் பற்றிய நிறைய கிரைம் திரில்லர்களைப் பார்ப்பேன். அதில் வருகின்ற தொனியில் தான் இந்த ஆவணப்படத்திற்கும் குரல் கொடுத்திருப்பேன்," என்றார். அதன் வசிப்பிடத்திலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் சென்ற இதே போன்றதொரு பென்குயினைப் பார்த்ததாக அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். "அந்த பென்குயின் மரணம் நேரிடும் வரை இன்னும் பல கிலோமீட்டர் அப்படியே நகர்ந்து கொண்டே இருக்கும்," என்று வெர்னர் தனது குரலில் பதிவு செய்திருப்பார். இதே காணொளியில் கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லியிடம் பென்குயின்கள் விநோதமாக நடந்து கொள்ளுமா எனக் கேள்வி முன்வைக்கப்பட்ட போது, "அவை சில நேரங்களில் திசைமாறிப் போய் கடலுக்கு மிகத் தொலைவில் சென்றுவிடும்." என்றார். அந்த பென்குயினை மீட்டு மீண்டும் அதன் காலனிக்கு அழைத்து வந்தாலும் அது மீண்டும் மலையை நோக்கியே செல்லும் என்றும் அந்த ஆவணப்படத்தில் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Thinkfilm/Werner Herzog படக்குறிப்பு,கடல் சூழலியலாளர் டேவிட் ஐன்லி கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்கிறார் உலக காட்டுயிர் நிதியத்தின் இணை இயக்குநரான வினோத் மலயிலேது. "கடல் உயிரினங்களைப் பொருத்தவரை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சேர்ந்து வாழும். முட்டையிடுவதற்கும், இரை தேடியும் தான் அவை வேறு இடங்களுக்கு தனித்துச் செல்கின்றன. சில உயிரினங்கள் அடிப்படையில் சேர்ந்து வாழக்கூடியவை, ஆனால் சில உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் தனித்துச் செல்லும்," என்றார். இதனை உதாரணங்களுடன் விளக்கிப் பேசிய அவர், "டால்பின்கள் பல இணைந்து ஒன்றாக உலவும். ஆனால் திமிங்கலங்கள் நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளக்கூடியவை. நீலத் திமிங்கலங்கள் (blue whales) தனியாக வாழக்கூடியவை. இரைதேடி நீண்ட தூரம் செல்லும் திமிங்கலங்கள் அவை வழக்கமாக உலவும் கடற்பகுதியைத் தாண்டிச் சென்றால் இரை கிடைக்காமல் போகக் கூடும். அதனால் தான் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்களைப் பார்க்கிறோம்." என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கை முறையும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் (கோப்புப் படம்) தனித்து வாழ்வது அல்லது தனித்துச் செல்வது என்பது பல உயிரினங்களிலும் காணப்படுகிறது. உணவு, வாழ்விடம், இனப்பெருக்கம், உடல்நிலை என்று பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளும் பறவைகளும் தனித்துச் செல்கின்றன. இவ்வாறு விலங்குகள் தனித்துச் செல்வது குறுகிய காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையும் இதற்கு விதிவிலக்கல்ல. குழுக்களாக வாழும் 'சமூக விலங்காக' அறியப்படும் யானையும் சில சந்தர்ப்பங்களில் தனித்துச் செல்லும் என்கிறார் ஊட்டி அரசு கல்லூரி வனவிலங்கு உயிரியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ராமகிருஷ்ணன். இவர் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பில் ஆசிய யானைகளுக்கான சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். அவரின் கூற்றுப்படி, தாய்வழிச் சமூகமாக வாழும் யானைகளில், ஆண் யானைகள் 14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும், அவை மற்ற ஆண் யானைகளுடன் இணைந்து வாழ்கின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆண் யானைகள் 14, 15 வயது ஆன உடன் தனித்து விடப்படும், அவை மற்ற ஆண் யானைகளுடன் இணைந்து வாழ்கின்றன. "இந்த ஆண் யானைகள் 25 வயது ஆகிறபோது பிற கூட்டங்களில் தனக்கான இணையைத் தேடும். ஒருவேளை வலுவான ஆண் யானையால் தோற்கடிக்கப்பட்டால் திரும்பிச் சென்றுவிடும். சிறிது காலம் கழித்து மீண்டும் இணை தேடிச் செல்லும். இணை கிடைக்கின்ற வரை ஆண் யானைகள் தனியாகவே வாழும்," என்றார். யானைகளில் தந்தம் இல்லாத ஆண் யானையான 'மக்னா யானை' தான் பெரும்பாலும் தனித்தே வாழ்வதாக அவர் குறிப்பிடுகிறார். "பெண் யானைகள் வலுவான ஆண் யானைகளைத் தான் தேர்வு செய்யும். இதனால் தந்தம் இல்லாத மக்னா யானைகள் தனித்து விடப்படுகின்றன," என்றும் தெரிவித்தார். யானை குழு என்றால் தலைமை தாங்கும் பெண் யானை மற்றும் அதன் வழிவந்த யானைகள் அடங்கும் எனக் கூறும் ராமகிருஷ்ணன் அதில் பெண் யானையின் பங்கு தான் முதன்மையானது என்றும் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images அதனை விளக்கிப் பேசிய அவர், "யானைகள் பெரும்பாலும் முதுமை அல்லது உடல்நலக் குறைவு காரணமாக மட்டுமே தங்களது குழுவை விட்டுச் செல்கின்றன. அதிலும் ஒரு வேறுபாடு உள்ளது, மூத்த பெண் யானை உடல்நலம் முடியாமல் போகும்போது மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்வதில்லை. அவை வசிக்கின்ற பகுதியில் உணவு கிடைக்காமல் போகும் பட்சத்தில் மட்டுமே மற்ற யானைகள் அதனை விட்டுச் செல்லும். "பெண் யானைகள் தனித்து வாழ பழக்கப்பட்டவை அல்ல என்பதோடு ஒரு யானை குழுவிற்கும் பெண் யானைகளின் இருப்பு அவசியமாகிறது. ஒரு பெண் யானை அதன் குட்டிகளை மட்டுமல்லாது, குழுவில் உள்ள மற்ற யானைகளின் குட்டிகளையும் கவனித்துக் கொள்ளும். மாறாக ஆண் யானைகள் குழுவை விட்டுச் சென்றால் மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லாது. அதன் இடத்தை இன்னொரு ஆண் யானை வந்து நிரப்பும். சிறு வயதிலிருந்தே ஆண் யானைகள் அதிக காலம் தனித்து வாழ பழக்கப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்." என்றார். இவ்வாறு குழுவிலிருந்து தனித்துச் செல்லும் தன்மை பறவைகளிடமும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய பறவைகள் ஆய்வாளரும் மெட்ராஸ் நேச்சுரலிஸ்டிக் சோசைடியின் உறுப்பினருமான சாந்தராம். சமூக ஊடகங்களில் வரும் அனுமானங்களை முழுமையாக நம்பிவிடக்கூடாது எனக் கூறும் அவர், "பறவையினங்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவலாகவே இருந்து வருகிறது. ஒரு குறிப்பிடட பறவை மட்டும் இவ்வாறு நடந்து கொள்ளும் எனக் கூறிவிட முடியாது. கூட்டமாக வாழும் பறவைகள் உணவு, கூடு அமைப்பது மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் வழிதவறிச் செல்வது போன்ற காரணங்களால் தனித்துச் செல்கின்றன." என்று தெரிவித்தார். "உணவு கிடைக்கவில்லை என்றாலும் கூடு அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் பறவைகள் தனித்துச் செல்லும். பெரும்பாலும் சிறிய பறவைகள் தான் வழிதவறிச் செல்கின்றன. குழுக்களாகவே வாழும் பறவைகள் கூட இனப்பெருக்க காலத்தில் தனித்துச் செல்கின்றன," என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளது (கோப்புப் படம்) விலங்குகள் தனிமைப்படுத்திக் கொள்வது அவற்றின் பரிணாம வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்துவதாக 2018-ஆம் ஆண்டு புனித ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில் பாறை எறும்புகள் (டெம்னோதோராக்ஸ் யூனிஃபாசியேட்டஸ் - Temnothorax unifasciatus) என அறியப்படும் எறும்புகள் பூச்சிக் கொல்லி மருந்துகளால் தாக்கப்பட்டால் உயிரிழக்கின்ற வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. "தனது கூட்டில் வாழும் மற்ற எறும்புகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் தொற்று பரவுவதில் இருந்து காத்து மற்ற எறும்புகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கிறது," என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் காணப்படும் தேரை இனம் புதிய வாழ்விடத்தை தேடி தனித்துச் செல்லும் வழக்கம் கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆசிய சிங்கங்கள் (கோப்புப் படம்) வன உயிரினங்கள் மத்தியிலும் தனித்துச் செல்லும் வழக்கம் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த விஞ்ஞானியும் வன உயிர் ஆய்வாளருமான ஒய்.வி.ஜாலா. இதற்கு உளவியல் என்பதைவிடவும் பரிணாம வளர்ச்சியே காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார், பூனை குடும்பத்தின் கீழ் வரும் உயிரினங்கள் தனித்து வாழப் பழகி இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப அவை சேர்ந்தும் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் வாழ்விடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதைப் பொருத்தே இவை தீர்மானிக்கப்படுகின்றன என்றார். "சிங்கங்களைப் பொருத்தவரை அவை வாழும் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறும். ஆசிய சிங்கங்கள் மற்றும் ஆப்ரிக்க சிங்கங்கள் இடையே பல வேறுபாடுகள் உள்ளன." சிங்கங்கள் குழுக்களாகவே வாழும் என்கிறார் ஜாலா. "பெண் சிங்கங்கள் எப்போதும் குட்டிகளுடன் குடும்பமாக வாழும் சூழலில் ஆண் சிங்கங்கள் தனித்து விடப்படும். இவை சில சூழல்களில் பிற ஆண் சிங்கங்களுடன் சேர்ந்து குழுக்களாக வாழும் அல்லது வேறு குழுக்களுடன் இணைந்து கொள்ள முயற்சிக்கும். இதில் முதுமையடைந்த, இளம் சிங்கங்களுடன் போட்டி போட முடியாத சிங்கங்கள் தனியாகச் செல்கின்றன." என்றார். பட மூலாதாரம்,Roop Singh Meena புலிகள் சேர்ந்தும் தனித்தும் வாழ்வதாகக் குறிப்பிடும் அவர், "பெரிய இரைகளை வேட்டையாடும்போதும் இனப்பெருக்க காலத்தின் போதும் மட்டுமே புலிகள் சேர்ந்து கொள்ளும். மற்ற நேரங்களில் ஆண் புலி தனித்தே வாழும். ஆண் புலிகள் பெண் புலிகளையும் அதன் குட்டிகளையும் சேர்த்துக் கொள்வதில்லை. இதில் விதிவிலக்காக இரை உபரியாக கிடைக்கும் இடங்களில் புலிகள் சேர்ந்திருக்கக் கூடும். பெண் புலிகள் தங்களின் குட்டிகளுக்கு வயதானாலும் அவர்களுக்கு அருகிலே வாழும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d085v1r55o
-
நோயாளர்கள் பாதிக்கப்பட்டால் அமைச்சரே பொறுப்பு - GMOA குற்றச்சாட்டு
தொழிற்சங்க மிரட்டல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை - சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு 28 Jan, 2026 | 03:10 PM (செ.சுபதர்ஷனி) எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரைய யாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சுகாதார சேவையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே எமது இலக்காகும். வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறப்போவதாக மிரட்டி சம்பள உயர்வுகளைக் கோரும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் பணியப்போவதில்லை. இவ்வாறானவர்களுக்கு எதனை வழங்கினாலும் அவர்கள் நாட்டை விட்டுச் செல்வது உறுதி. ஆனால், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டுக்காகத் தங்கி நின்று சேவையாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். கடந்த ஓராண்டு காலத்தில் சுகாதார அமைச்சுக்கு 10 ஆயிரம் ஊழியர்களை இணைத்துக்கொள்ள அனுமதி பெறப்பட்டு, அதில் 8 ஆயிரம் பேர் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதல் முறையாக 4,141 தாதியர்கள் ஒரே கட்டமாக இணைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த பரீட்சைகள் தாமதமாகி, தற்போது 2025 இல் நடத்தப்பட்டு இந்த 213 உதவியாளர்களும் இன்று நியமனம் பெற்றுள்ளனர். அரசியல் அதிகாரங்களும் அமைச்சர்களும் மாறலாம், ஆனால் அரச சேவை நிலையானதாக இருக்க வேண்டும். பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் வைத்தியர்கள் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பொறிமுறை எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும். புதிய நியமனம் பெற்றவர்கள் இடமாற்றங்கள் குறித்துச் சிந்திக்காது, மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முன்வர வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237243
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'ஈ-கேட்' இன்று திறப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு வாயில்கள் உத்தியோகபூர்வமாக திறப்பு Published By: Vishnu 29 Jan, 2026 | 04:24 AM கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் புதன்கிழமை (28) முதல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக நான்கு மின்னணு வாயில்கள் இவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மின்னணு வாயில்கள் (e-Gate) திட்டமானது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் விமான நிலையத்தின் குடிவரவு நடைமுறைகளை விரைவாகவும், அதிக வினைத்திறனுடனும் முன்னெடுக்க முடியும் என முதன்மை குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த நவீன வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் குறைந்து, விமான நிலையச் சேவைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/237279
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம்
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம் Published By: Vishnu 28 Jan, 2026 | 11:07 PM கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது புதன்கிழமை (28) இடம்பெற்றது. குறித்த விஜயத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி P.பத்திநாதன் அடிகளார், பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் இணைந்துகொண்டனர். பக்தர்களின் உயரிய நலன்கருதி இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டார். https://www.virakesari.lk/article/237276
-
ஈழத் தமிழன் பாலமுருகன் மீது கண் வைத்த அமெரிக்கா!! நடந்தது என்ன?
15 நிமிடம் இசையை கேட்கவந்த செனட்ரர் 2 1/2 மணிநேரமாக மெய்மறந்து ரசித்து பாலமுருகனை வாழ்த்தி கெளரவப்படுத்தியுள்ளார்.
-
📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
Sildenafil பாவித்தால் 4-6 மணித்தியாலத்திற்கு உறுப்பினர்கள் எழுச்சியோடு இருக்கலாம் Tadalafil பாவித்தால் ஒன்றரை நாளுக்கு எழுச்சியோடு இருக்கலாம். துப்பாக்கியை கொடுத்து போதை இறங்கியதை விட இவற்றை இறக்கியிருந்தால் எழுச்சியோடு இருந்திருக்கலாம்
-
ஈழத் தமிழன் பாலமுருகன் மீது கண் வைத்த அமெரிக்கா!! நடந்தது என்ன?
- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
ஆட்களை பொறுக்கியா இல்லையா என்பதை கண்டு பிடிக்கும் உங்கள் அளவீடு பிரமிக்க வைக்கின்றது.- யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
விசேடமான விடயம் எது என நினைவில் இல்லை. சாரை சாரையாக போராளிகள் அங்கும் இங்குமாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு எனும் பாடல் ஒலித்தது இப்போதும் காதுகளில் கேட்கின்றது. அன்றைய பொழுதுகளில் சைக்கிள் திருட்டு அதிகம். நிகழ்ச்சிக்கு வந்த பலரின் சைக்கிள்கள் களவாடப்பட்டது. பெல் மூடிகளும் திருடப்பட்டன. பெல் மூடிகளை மாலையாக அணிவித்து பிடிபட்ட ஓரிருவரை இயக்கம் மணிக்கூட்டு கோபுர சந்தியில் காண்பித்தது நினைவில் உள்ளது. இராணுவம் நிகழ்ச்சிகளை அப்போது குழப்பவில்லை. அது மண்டைதீவில் நிலைகொண்டு காணப்பட்டது. உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு பாடலை தேடல் செய்து பார்த்தேன். கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. https://tamileelamsongs.com/parani-paaduvom/- Yesterday
- யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
The Siege of Jaffna Fort by the LTTE in 1990 | Thuppahi's Blog அந்த நேரம் பலாலியில் நின்ற ஒரு சத்திர சிகிச்சை நிபுணரின் வாக்குமூலம். கொடுத்த விலை அதிகம் ஆனால் அரசு தாக்கு பிடிக்க முடியாமல்தான் பின்வாங்கியது. இது புலிகளின் வெற்றியே. ஒரு சியாமாசெட்டியும் பண்ணைக்குள் வீழ்த்தப்பட்டது.- ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
இது ஒரு வெறும் உளவியல் யுத்தமாகவே கருதுகிறேன் நடைமுறையில் இதன் பயன்பாடு அதன் பெறுபேறும் மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். இந்த காணொளியில் கூறப்படுவது போல மிகைப்படுத்தப்பட்ட விளைவுகளை எந்த ஒரு ஆயுதத்தினாலும் தேர்ந்தெடுத்த இலக்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்படுத்த முடியாது. வெனிசுலா அதிபர் இதனால் பாதிக்கப்படவில்லை எனவே மிக குறுகிய அளவான தனித்தனியான இலக்குககள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறிருக்கையில் ஒட்டுமொத்த தற்காப்பு பொறிமுறைக்கெதிராக பரந்தளவிலான வகையில் இது பாவிக்கப்பட்டது போல கருத்துருவாக்கத்தினை இக்காணொளி ஏற்படுத்துகிறது அது தவறாக இருக்க வாய்ப்பு அதிகம். இந்த ஆயுதம் பரவலாக பாவிக்கப்பட்டதற்கான பாதிப்புக்களை மக்கள் உணர்ந்த மாதிரி எந்த செய்திகளும் வரவில்லை. விமான எதிர்ப்பு பாவிக்கப்படாமல் இருக்கப்படுவதற்காக அமெரிக்க தரப்பு கூறிய விடயம் இலத்திரனியல் போரியல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக ஆரம்பத்திலேயே கூறியிருந்தது, அதுதவிரவும் வேறு வதந்திகளும் அது தொடர்பில் உள்ளது.- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
எனக்கு இப்படியான பொறுக்கி நண்பர்கள் இல்லை என்பதால் வீடியோ ஒன்றும் வரவில்லை! மேலும் பிரித்தானியா age verification ஐ கட்டாயம் என ஆக்கியுள்ளதால் சில பிரபலமான/பிரபலமற்ற பலான தளங்கள் எல்லாம் பார்க்கமுடியாது!🙁 👆🏿- சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
இவர் தான் தூய தமிழன் யார் யார் மற்றவர்கள் வெறுக்கபட வேண்டியவர்கள் என்று தமிழர்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு திரிகின்றார்.- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
கிருபன் பொய்ச் செய்திகளை இணைக்காதீர்கள். அப்படி இணைப்பதானால் காணொளிகளுடன் இணையுங்கள்.- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
இந்த வயசில எங்கய்யா எழுச்சி வரப்போகுது.- சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
சைமன் செபஸ்டியன் மலையாளி.- யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
ஏன், விபுலானந்தன் போல ஒரு மாணவன் இறந்து கிடப்பதாகவும் சீன் காட்டலாம். ஆனால், உல்லாசப் பயணிகளாக வருவோர் உங்களை விட வரலாற்றுக்கு மரியாதை கொடுப்போராக இருப்பர் என நினைக்கிறேன்😎. அதனால் தகவல் பலகைகளே போதும் அவர்களுக்கு!- 📢 ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.
- கொழும்பு பிரபல பாடசாலை மாணவனுடன் 3 ஆசிரியைகள் உல்லாசம்: வீடியோவால் சர்ச்சை
Important Information
By using this site, you agree to our Terms of Use.