stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழின் 28வது அகவையை முன்னிட்டு உருவாக்கிய பாடல்
கேட்க மிகவும் இனிமையாய் இருக்கின்றது .......... பாராட்டுகள் ........! 👍
- Today
-
72 மணி நேரத்தில் ஈரான் காலி.. இஸ்ரேலுக்கு ஆதரவாக புதிய சக்தி.. எச்சரிக்கை விடுத்த உகாண்டா..
அணுகுண்டுகளை உகண்டாவில்த் தான் ஒழித்து வைத்திருக்கிறார்கள்.
-
யாழின் 28வது அகவையை முன்னிட்டு உருவாக்கிய பாடல்
பாடல் இசை எல்லாமே நன்றாக உள்ளது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.! - வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம்! சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10. 5 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. அசையும் சொத்துக்களின் மதிப்பு 12. 92 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு 7.72 கோடி உள்ளது என்றும் கையில் 50,000 ரொக்கம் இருப்பதாகவும் வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். தவிர 1 கோடி மதிப்பில் உள்ள டிஃபென்டர் கார் ஒன்றும் 23 லட்ச ரூபாய் மதிப்பில் இன்னோவா கார் ஒன்றும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தங்கம், வெள்ளி, நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.!- வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம் | Details of Udhayanidhi’s nomination affidavit released - Vikatan
-
'பிக்பொஸ்' ஜனனியை சந்தித்தார் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரர்
02 Apr, 2026 | 12:21 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த 'பிக்பொஸ்' ஜனனி என அழைக்கப்படும் நடிகை ஜனனியை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் நேற்றைய தினம் (1) காலை தனது அலுவலகத்திலும் இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அமைச்சர், எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிரவேண்டும் என தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர், அதில் குறிப்பிட்டுள்ளதாவது, பிக்பாஸ் ஜனனி, நடிகை ஜனனி, அறிவிப்பாளர் ஜனனி என எவ்வாறான பாதைகளில் இருந்தாலும், அவர் எம்முடைய சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார் என்ற உணர்வை எமது சந்திப்பு மேலும் உறுதிப்படுத்தியது. எங்களின் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அன்று பிக்பொஸ் நிகழ்ச்சியில் அறியப்பட்ட ஜனனியை விட, இன்று தனது திறமைகள், சுயநம்பிக்கை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கலைஞராக அவர் வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. அவ்வாறான ஆளுமைமிக்க ஜனனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக அவர் விளங்கவேண்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 'பிக்பொஸ்' ஜனனியை சந்தித்தார் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரர் | Virakesari.lk
-
யாழில் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது - கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்
யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது. மேலும், ஊர்காவற்துறை, வேலணை, சங்கானை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் புதிய வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறால், நண்டு மற்றும் சிப்பி வகை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அத்துடன், கடல்வளமற்ற வவுனியா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியைப் பிரத்தியேகமாக மேம்படுத்தலாம். குஞ்சு உற்பத்தி நிலையங்களின் பற்றாக்குறை, மன்னார் (மாந்தை மேற்கு, நானாட்டான்) மற்றும் கிளிநொச்சி (பூநகரி) பகுதிகளில் புதிய காணிகளை அடையாளங்காண்பதில் வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களுடனான முரண்பாடுகள், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை மற்றும் காலாவதியான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தலில் ஏற்படும் தாமதங்கள் ஆகியன பிரதான சவால்களாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. இவ்வாறான சவால்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து வருடாந்தம் அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். யாழில் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது - கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் | Virakesari.lk
-
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பிள்ளையான் விளக்கமறியலில்!
02 Apr, 2026 | 05:48 PM கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (2) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட அவர், சுமார் 359 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நான்கு முறை தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டிருந்த நிலையில், இறுதி உத்தரவு நாளை (3) நிறைவடையவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். உபவேந்தர் காணாமல்போன சம்பவம் மட்டுமன்றி, பிரிட்டனின் 'செனல்-4' (Channel 4) தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த ஒரு வருடமாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். பிள்ளையானின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த அசாத் மௌலானா முன்வைத்த வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்த குழுவினருக்கும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையில் சந்திப்புகளை ஒருங்கிணைக்க பிள்ளையான் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன. முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தார். இருப்பினும், 2021ஆம் ஆண்டு சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பிள்ளையான் விளக்கமறியலில்! | Virakesari.lk
-
பண்டிகை கால சுற்றுலா பயணங்களின்போது புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Published By: Digital Desk 3 02 Apr, 2026 | 04:57 PM (செ.கவிஷனா) பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடங்களை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வளைத்தளங்களில் ‘செல்பி’ புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது பல தரப்பினர் பல நாட்களுக்கு தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளிப்பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வதையும், அங்கு எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வாறான பதிவுகள் மூலம் தங்களது வீடுகளில் ஆள் நடமாட்டமின்றி இருப்பதை திருடர்களுக்கு நீங்களே தெரியப்படுத்துவதாக அமைகிறது. மேலும், தங்களது பயணத் திட்டங்கள் அல்லது தற்போதைய இருப்பிடம் குறித்து வெளி நபர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமற்ற விடயமாகும். இவ்வாறான பதிவுகளைக் காண்பதன் மூலம் திருடர்கள் திட்டமிட்டு இருப்பிடங்களுக்குள் புகுந்து பணம், நகை மற்றும் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடிக்கத் தூண்டுவதாக அமைகிறது. அவ்வாறு நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு செல்லும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கோ அல்லது சிவில் பாதுகாப்புக்குழு தலைவருக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அத்துடன் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி கமராக்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புக்களை சரியாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பதிலும் சொத்துக்களை கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். பண்டிகை கால சுற்றுலா பயணங்களின்போது புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk
-
மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்
02 Apr, 2026 | 04:51 PM தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார். மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர் | Virakesari.lk
-
யாழின் 28வது அகவையை முன்னிட்டு உருவாக்கிய பாடல்
யாழின் 28வது அகவையை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய பாடல் song01.mp3.b69e6075a681396cde4d95c3bd303d57.mp3
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஓம் பார்த்தேன்….இன்னும் எதிரணியில் எந்த கட்சி இந்த தொகுதிகளில் நிற்கிறது என்பதை பார்க்கவில்லை. காங்கிரஸ்-அதிமுக கூட்டணியை எதிர்த்து உருவான கட்சி, அதிமுக-பிஜேபி கூட்டணியில் தேர்ந்து எடுக்கபட்ட வெல்ல முடியாத 5 இடங்களில் தாமரையில் போட்டி போடுகிறது. காலம் செய்த கோலம் என்பது இதைத்தான் போலும். இந்த முறை வாசனின் ராஜ்சபா சீட்டை கூட பறித்து அன்புமணிக்கு கொடுத்துவிட்டார்கள். வேறு ஏதாவது மாநிலபட்டியலில் பிஜேபி கோட்டாவில் மீளவும் ராஜ்சபா போகத்தான் இந்த கூத்து என நினைக்கிறேன்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
எடப்பாடி மீது எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எலக்சனில் கொஞ்சம் பிஜேபி கை ஓங்கினாலும் அடுத்த நித்தீஸ்குமார், உத்தவ் தாக்ரே இவர்தான். எனக்கு இப்போ தமிழ் நாட்டில் வோட் இருந்தால் மூக்கை பிடித்து கொண்டு திமுகவுக்கே போடுவேன். ரிஸ்க் எடுப்பதாயின் விஜை. விஜையை விட எடப்பாடி அதிக ரிஸ்க். கூடவே அவர் ஆட்சியில் ஆட்கள்தான் மாறுவார்கள். ஆட்சி முறை திமுக 2.0 தான். எனவே விஜை சொல்வது போல் போட்டி திமுக vs தவெக என்பதே options. ஆனால் மக்கள் இப்படி சிந்திகிறார்களா? தெரியவில்லை.
-
72 மணி நேரத்தில் ஈரான் காலி.. இஸ்ரேலுக்கு ஆதரவாக புதிய சக்தி.. எச்சரிக்கை விடுத்த உகாண்டா..
😂 வல்லரசு னு பீதிகிட்டு இருந்த அமெரிக்கா வெ அளறிட்டு இருக்கான் 🤣 உகாண்டா போண்டா ஆகா போகிறது😂🤣
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
சீமான் தனது தேர்தல் வியாபாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஈழப்போராட்டத்தை. அதனால்தான் நீங்கள் சொல்லும் ‘வக்கிரம்’ என்னுள் இருக்கிறதோ தெரியவில்லை. 😌
-
கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
-
கருத்துப்படம் 02.04.2026
-
கருத்துப்படம் 31.03.2026
-
கருத்துப்படம் 30.03.2026
-
கருத்துப்படம் 28.03.2026
-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
கோசான்ஜியின் கருத்துதான் எனதும். அவர் நான் பேச நினைத்ததெல்லாம் தான் பேசிவிட்டார். நன்றி கோசான்ஜி! ரசோதரன், “ஒரு நல்லவர் ஆட்சிக்கு வர வேண்டும்” இதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த நல்லவர் யார்? எங்கே இருக்கிறார்? நல்லவர், இல்லாவிட்டால் ஓரளவாவது நல்லவர் என்று தேடினாலும் கிடைக்குமா? நல்லவர்களைத்தான் 67இல் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களே. அன்றிலிருந்து அண்ணனின் தம்பிகள் காட்டில்தானே மழை. நீங்கள், “நல்லவர்கள்” என்று சொல்லும் போது எம்ஜிஆரின் படப் பாடல்வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது, “ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் என்றாராம்….” என்று அந்தப் பாடல் இருக்கும். இப்பொழுதெல்லாம் நல்லவர்கள் அரசியலுக்குள் வருவதில்லை. அரசியலை ‘சாக்கடை’ என்று குறிப்பிட்டு பல வருடங்களாயிற்று. எம்ஜிஆர் படங்களில் நல்லவனாக நடித்து நல்லவன் வாழ்வான் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டு, வல்லவன் வாழ்வான் என்று அரசியலில் காட்டியவர். விஜய், சினிமாவில் ஈட்டாத பணம்? புகழா? ஆனால் ஏன் சினிமாவை விட்டு அவர் அரசியலுக்கு வருகிறார்? சினிமாவை விட அரசியலில் அவை இரண்டும் அதிகமாக இருக்கும். திருமா, விஜயோடு ஆரம்பத்திலேயே இணைவதாக இருந்தது. தவெக மேடையிலேயே அவர் பேசுவதாகவும் இருந்தது. ஆனால் அவருக்கு என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டதோ அவர் மேடையிலும் தோன்றவில்லை, விஜயுடன் தேர்தல் கூட்டணியிலும் இல்லை. ஆக, இங்கே ஒரு நல்லவன் என்ன பாடு படுகிறார் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். நாட்டுக்காக உழைப்பதற்கென்றே பிறந்தவர்களல் ஒருவர் படத்தை இணைக்கிறேன். அரச வைத்தியசாலையில், உடுப்பதற்கே உடையின்றி இருப்பதைப் பாருங்கள். கக்கன் போன்ற நேர்மையான தலைவர்களின் நிலையை நினைத்தால் இன்னும் வருத்தமாக தான் இருக்கும். அதிகாரத்தில் இருந்தவர், பிறகு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளின்றி இருந்தார். அவர் யாருக்காக உழைத்தாரோ அந்த மக்களே அவரை மறந்துவிட்டார்கள். ரசோதரன், ‘நல்லவர்களது ஆட்சி’என்பதை உங்களைப் போல் நானும் வரவேற்பேன். அதற்கான சந்தர்ப்பம் எனது காலத்தில் இல்லை. உங்கள் காலத்திலும் வருமா தெரியவில்லை.இங்கே, இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் பந்தயத்தில் எந்தக் குதிரை மீது காசைக் கட்டலாம்? எது முதலாவதாக வரும்? எந்தக் குதிரை இனி ஓட்டத்துக்கு லாயக்கில்லை? என்பதையே கவனிக்கிறேன். சண்டிக் குதிரை, வண்டிக் குதிரை, நொண்டிக் குதிரை,சவாரிக் குதிரை, என்றெல்லாம் நான் பார்க்கவில்லை.
-
கருத்து படங்கள்
- பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால், இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் ளசுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன்படிஇ கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும்இ எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1470694- விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
ட்ரம்ப்பின் ஈரான் தொடர்பான பேச்சால் கச்சா எண்ணெய் விலை உயர்வு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://athavannews.com/2026/1470726- சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
சிறுநீர் கழித்தபின் ஆறுதலாக நின்று 4-5தரம் ஆட்டிவிட்டால் போச்சு😂- உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்
யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்! யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27 ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். நிம்மதியாக இருந்து கல்வி கற்பதற்கே ஒரு சீரான வீடு இல்லாத நிலையிலும் குறித்த மாணவி சாதித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnfvqn920000356pwrdjudu4- 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த ஈழத்துப் பெண்!
777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்! 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (02) இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார். இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னஸில் இடம் பிடித்திருந்தார். குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இன்று பதிவு செய்தார். கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார். தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார். குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை ஈழத்தில் நிகழ்த்தும் நோக்குடன் நேற்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார். முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகழ்வும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnh0azbl0001356p7v76gqav- இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா?
டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmngxywp00000356pohbpbtd6- ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம் 2 ஏப்ரல் 2026, 00:49 GMT Reuters நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது. இந்திய நேரப்படி, வியாழன் அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது. இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது. ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். NASA நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் பத்திரிகையாளர் சந்திப்பை தொடங்கி, திட்டத்தின் செயல்பாட்டு நிலை குறித்து தகவல் வழங்கினார். முன்னதாக ஏற்பட்ட தொடர்பு சிக்கலை அவர் சுருக்கமாக குறிப்பிட்டார். தரையில் இருந்த குழுவினர் விண்கலத்தில் உள்ள குழுவினரை கேட்க முடியவில்லை. இந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என்றும், குழுவினர் "பாதுகாப்பாகவும், நிலையாகவும், உற்சாகமாகவும் உள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் பேசினார். "54 ஆண்டுகளாக இருந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு, நாசா மீண்டும் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது," என்று அவர் கூறினார். "இந்த திட்டம் குழுவினருக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் சொந்தமானது," என்று அவர் நாசா பணியாளர்களிடம் தெரிவித்தார். குழு முன்நிலையில் உள்ள சவால்களை அறிந்துள்ளது என்றும், திட்டம் முடிந்து விண்வெளி வீரர்கள் திரும்பிய பின்னரே கொண்டாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். Reuters அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படும் தருணம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக, பிபிசியின் அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே குறிப்பிட்டார். ராக்கெட்டின் கீழ் தீப்பொறிகள் பீறிட்டு, பெரும் முழக்கத்துடன் அது நீல வானில் உயர்ந்தது. அதன் பின்னால் புகை தடம் தென்பட்டது. இந்த காட்சியை நேரில் கண்ட மக்கள் உற்சாகக் குரலில் ஆரவாரம் செய்தனர். அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே, "இது பார்க்கவும் கேட்கவும் மட்டுமல்ல, அதன் சக்தியை உடலிலேயே உணர முடிகிறது" என்று கூறினார். நாசா இதுவரை உருவாக்கியதிலேயே மிக சக்திவாய்ந்த ராக்கெட் இதுவாகும்; விண்வெளி வீரர்களை சுமார் 400,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சந்திரனை நோக்கி அனுப்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. Getty Images புறப்பட்ட சில நிமிடங்களில், மொத்த உந்து விசையில் சுமார் 80 சதவிகிதத்தை வழங்கும் இரு துணை ராக்கெட்டுகள் தங்களது பணியை நிறைவேற்றி பிரிந்தன. அவை அட்லாண்டிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. புறப்படுவதற்கு முன் லாஞ்ச் அபார்ட் சிஸ்டம் (Launch Abort System) தொடர்பான சிக்கல் ஒன்று எழுந்தது. அவசரநிலையில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் இந்த அமைப்பு முக்கியமானதாகும். எனினும், பொறியாளர்கள் அந்த பிரச்னையை விரைவாக சரிசெய்தனர். இறுதியாக, "ஆர்டெமிஸ் II, நீங்கள் ஏவுதலுக்குத் தயாராக உள்ளீர்கள்" என்று குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன், "நாங்கள் முழு மனிதகுலத்துக்காகவும் செல்கிறோம்" என்று பதிலளித்தார். Reuters 80 சதவிகித உந்துவிசையை வழங்கும் அந்த இரண்டு திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்களும், விண்கலனை மணிக்கு 10,000 மைல்களுக்கும் அதிகமான வேகத்துக்கு எடுத்துச் செல்லும் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தன. கென்னடி மையத்திலிருந்து தகவல்களைத் தரும் அறிவியல் செய்தியாளர் பல்லப் கோஷ், "கென்னடி விண்வெளி மையத்தில் பெரும் உற்சாகம் நிலவியது. பல ஆண்டுகளாக காத்திருந்த இந்த தருணத்தை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்" என்று தெரிவித்தார். இருந்தாலும், பயணம் முழுமையாக நிறைவடையும் வரை இன்னும் பணிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் பூமியின் மேல் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது அரிய காட்சிகளை கண்டனர். அறிவியல் செய்தியாளர் எஸ்மே ஸ்டல்லார்ட், கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன் "அருமையான காட்சி... நமக்கு ஒரு அற்புதமான நிலவு உதயத்தை பார்க்க முடிந்தது." என்று கூறியதாக தெரிவித்தார். விண்கலத்திலிருந்து பூமியின் நீல நிறம் தொலைவில் தென்பட்டது. இந்த பயணம், மனிதர்களுக்கு மிகக் குறைவானோர் மட்டுமே அனுபவித்துள்ள விண்வெளி காட்சிகளை காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில், சந்திரனை நோக்கிய மனித பயணங்களை மீண்டும் தொடங்கும் நாசாவின் முக்கியமான முன்னேற்றமாகவும் இது பார்க்கப்படுகிறது. NASA ஆர்டெமிஸ் 2 விண்கலனிலிருந்து பூமியின் காட்சி ஏவுதலுக்கு முன் நடைபெற்ற சோதனைகளில் termination system எனப்படும் அவசர அழிப்பு அமைப்பு தொடர்பாக ஒரு சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இது ராக்கெட், பாதையிலிருந்து விலகினால், அது பூமியில் யாருக்கும் சேதம் ஏற்படாமல் இருக்க, வானில் இருந்தபடியே அதை அழிக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். சிறிது நேரத்திலேயே மற்றொரு பிரச்னை கண்டறியப்பட்டது. விண்வெளி வீரர்களை அவசரநிலையில் பாதுகாப்பாக ராக்கெட்டிலிருந்து பிரித்தெடுக்கும் Launch Abort System-இல் உள்ள ஒரு பேட்டரியில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கவுண்டவுனுக்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வை கண்டு ரசித்தனர். Reuters ஆர்டெமிஸின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன? ரெபெக்கா மோரெல், அறிவியில் ஆசிரியர் ஆர்டெமிஸ் 1 திட்டம் 2022-இல் நிகழ்ந்தது. அதில் நாசாவின் பிரமாண்ட ராக்கெட்டும் ஓரியன் விண்கலமும் முதல்முறையான நிலவுக்கு அருகே 25 நாள் பயணத்தில் சென்றது. ஆனால் அதில் மனிதர்கள் இடம்பெறவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர். நாசாவின் ஸ்பேஸ் லான்ச் திட்டம் ஓரியன் விண்கலத்தில் பயணிக்கும் முதல் குழுவாக இவர்கள் உள்ளனர். இவர்களின் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். இந்தச் சூழலில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தை நாசா முழுவதும் மாற்றியமைத்துள்ளது. 2028-இல் திட்டமிடப்பட்டிருந்த ஆர்டெமிஸ் 3 திட்டத்தின்படி நிலவின் நிலப்பரப்பில் விண்வெளி வீரர்கள் தரை இறங்குவதாக இருந்தது. தற்போது அந்தக் குழு 2027-இல் தாழ் விண்வெளி பாதைக்குச் சென்று நிலவில் தரையிறங்குவது பரிசோதிக்கப்பட உள்ளது. Getty Images அதனைத் தொடர்ந்து, ஆர்டெமிஸ் 4 மற்றும் 5 நிலவில் தரையிறங்கும் திட்டமாக உள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் 2028-இல் நிகழ்த்த நாசா திட்டமிட்டுள்ளது. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனங்களில் நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர்களை உருவாக்கி வருகின்றன. இதில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தில் தரையிறங்கும் பரிசோதனைக்கும் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கும் எந்த லேண்டர்கள் பயன்படுத்தப்படும் என்பதில் தெளிவில்லை. நிலவில் ஒரு நிலையம் கட்டுவது நாசாவின் தொலைநோக்கு திட்டமாக உள்ளது. ஆனால் நிலவைச் சுற்றி வரும் கேட் வே என்கிற விண்வெளி நிலையத்தை கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவுக்குத் திரும்ப 50 ஆண்டுகளுக்கும் மேலானது ஏன்? Getty Images நிலவில் தரையிறங்கும் நாசாவின் அபோல்லோ திட்டம் 1972-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. செலவினங்கள் அதிகரித்து, முக்கியத்துவம் மாறிவிட்டது. எனவே தான் செலவு குறைவான தாழ் விண்வெளி பாதையின்மீது கவனம் திரும்பியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஸ்கை லாப் தொடங்கி சர்வதேச விண்வெளி நிலைய திட்டம் வரை இதன் மீது தான் நாசாவின் கவனம் உள்ளது. 2005-ஆம் ஆண்டு கான்ஸ்டலேஷன் என்கிற திட்டத்தின் மூலம் நிலவு பற்றிய ஆராய்ச்சியை நாசா மீண்டும் தொடங்கியது. ஆனால், காலதாமதம் மற்றும் அதிகரித்த செலவு போன்ற காரணங்களால் 201-இல் இந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கான்ஸ்டலேஷன் திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமான ஓரியன் விண்கலம் அந்த ராக்கெட்டின் பாகங்கள் ஆர்டெமிஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டன. இந்த திட்டம் 2017-இல் தொடங்கியது. 2024-இல் நிலவில் தரையிறங்குவது திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த தாமதங்களால் 2028-இல் நிலவில் தரையிறங்க திட்டமிடுவதாக நாசா தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9wqg2wx489o - பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.